MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.98 திருநல்லூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    943 அட்டுமின் இல்பலி யென்றென்
    றகங்கடை தோறும்வந்து
    மட்டவி ழுங்குழ லார்வளை
    கொள்ளும் வகையென்கொலோ
    கொட்டிய பாணி யெடுத்திட்ட
    பாதமுங் கோளரவும்
    நட்டநின் றாடிய நாதர்நல்
    லூரிடங் கொண்டவரே. 4.98.1
    944 பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை
    பெய்பலிக் கென்றுழல்வார்
    நண்ணிட்டு வந்து மனைபுகுந்
    தாரும்நல் லூரகத்தே
    பண்ணிட்ட பாடலர் ஆடல
    ராய்ப்பற்றி நோக்கிநின்று
    கண்ணிட்டுப் போயிற்றுக் காரண
    முண்டு கறைக்கண்டரே. 4.98.2
    945 படவேர் அரவல்ன்ற் பாவைநல்
    லீர்பக லேயொருவர்
    இடுவார் இடைப்பலி கொள்பவர்
    போலவந் தில்புகுந்து
    நடவார் அடிகள் நடம்பயின்
    றாடிய கூத்தர்கொலோ
    வடபாற் கயிலையுந் தென்பால்நல்
    லூருந்தம் வாழ்பதியே. 4.98.3
    946 செஞ்சுடர்ச் சோதிப் பவளத்
    திரள்திகழ் முத்தனைய
    நஞ்சணி கண்டன்நல் லூருறை
    நம்பனை நானொருகாற்
    துஞ்சிடைக் கண்டு கனவின்
    றலைத்தொழு தேற்கவன்றான்
    நெஞ்சிடை நின்றக லான்பல
    காலமும் நின்றனனே. 4.98.4
    947 வெண்மதி சூடி விளங்கநின்
    றானைவிண் ணோர்கள்தொழ
    நண்ணில யத்தொடு பாட
    லறாதநல் லூரகத்தே
    திண்ணிலை யங்கொடு நின்றான்
    திரிபுர மூன்றெரித்தான்
    கண்ணுளும் நெஞ்சத் தகத்தும்
    உளகழற் சேவடியே. 4.98.5
    948 தேற்றப் படத்திரு நல்லூ
    ரகத்தே சிவனிருந்தாற்
    தோற்றப் படச்சென்று கண்டுகொள்
    ளார்தொண்டர் துன்மதியால்
    ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற்
    றேடிய ஆதரைப்போற்
    காற்றிற் கெடுத்துல கெல்லாந்
    திரிதர்வர் காண்பதற்கே. 4.98.6
    949 நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ்
    சூழ்ந்த நல்லூரகத்தே
    கீட்கொண்ட கோவணங் காவென்று
    சொல்லிக் கிறிபடத்தான்
    வாட்கொண்ட நோக்கி மனைவியொ
    டுமங்கோர் வாணிகனை
    ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன்
    றோவிவ் வகலிடமே. 4.98.7
    950 அறைமல்கு பைங்கழ லார்ப்பநின்
    றானணி யார்சடைமேல்
    நறைமல்கு கொன்றையந் தாருடை
    யானும்நல் லூரகத்தே
    பறைமல்கு பாடலன் ஆடல
    னாகிப் பரிசழித்தான்
    பிறைமல்கு செஞ்சடை தாழநின்
    றாடிய பிஞ்ஞகனே. 4.98.8
    951 மன்னிய மாமறை யோர்மகிழ்ந்
    தேத்த மருவியெங்குந்
    துன்னிய தொண்டர்கள் இன்னிசை
    பாடித் தொழுதுநல்லூர்க்
    கன்னியர் தாமுங் கனவிடை
    யுன்னிய காதலரை
    அன்னியர் அற்றவர் அங்கண
    னேயருள் நல்கென்பரே. 4.98.9
    952 திருவமர் தாமரை சீர்வளர்
    செங்கழு நீர்கொள்நெய்தல்
    குருவமர் கோங்கங் குராமகிழ்
    சண்பகங் கொன்றைவன்னி
    மருவமர் நீள்கொடி மாட
    மலிமறை யோர்கள்நல்லூர்
    உருவமர் பாகத் துமையவள்
    பாகனை உள்குதுமே. 4.98.10
    953 செல்லேர் கொடியன் சிவன்பெருங்
    கோயில் சிவபுரமும்
    வல்லேன் புகவும் மதில்சூழ்
    இலங்கையர் காவலனைக்
    கல்லார் முடியொடு தோளிறச்
    செற்ற கழலடியான்
    நல்லூ ரிருந்த பிரான்அல்ல
    னோநம்மை ஆள்பவனே. 4.98.11

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book