MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.103 திருவாரூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    986 வேம்பினைப் பேசி விடக்கினை
    யோம்பி வினைபெருக்கித்
    தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந்
    துணையென் றிருத்திர்தொண்டீர்
    ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர்
    அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
    சாம்பலைப் பூசிச் சலமின்றித்
    தொண்டுபட் டுய்ம்மின்களே. 4.103.1
    987 ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன்
    ஆரூர் அகத்தடக்கிப்
    பாரூர் பரிப்பத்தம் பங்குனி
    உத்திரம் பாற்படுத்தா
    னாரூர் நறுமலர் நாதன்
    அடித்தொண்டன் நம்பிநந்தி
    நீரால் திருவிளக் கிட்டமை
    நீணா டறியுமன்றே. 4.103.2
    988 பூம்படி மக்கலம் பொற்படி
    மக்கலம் என்றிவற்றால்
    ஆம்படி மக்கல மாகிலும்
    ஆரூர் இனிதமர்ந்தார்
    தாம்படி மக்கலம் வேண்டுவ
    ரேல்தமிழ் மாலைகளால்
    நாம்படி மக்கலஞ் செய்து
    தொழுதுய் மடநெஞ்சமே. 4.103.3
    989 துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத்
    துளங்கா மதியணிந்து
    முடித்தொண்ட ராகி முனிவர்
    பணிசெய்வ தேயுமன்றிப்
    பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர்
    பாதம் பொறுத்தபொற்பால்
    அடித்தொண்டன் நந்தியென் பானுளன்
    ஆரூர் அமுதினுக்கே. 4.103.4
    990 கரும்பு பிடித்தவர் காயப்பட்
    டாரங்கோர் கோடலியால்
    இரும்பு பிடித்தவர் இன்புறப்
    பட்டார் இவர்கள்நிற்க
    அரும்பவிழ் தண்பொழில் சூழணி
    ஆரூர் அமர்ந்தபெம்மான்
    விரும்பு மனத்தினை யாதொன்று
    நானுன்னை வேண்டுவனே. 4.103.5
    991 கொடிகொள் விதானங் கவரி
    பறைசங்கங் கைவிளக்கோ
    டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர்
    எய்தியும் ஊனமில்லா
    அடிகளும் ஆரூர் அகத்தின
    ராயினும் அந்தவளப்
    பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு
    நந்தி புறப்படிலே. 4.103.6
    இப்பதிகத்தில் 7,8,9-ம்செய்யுட்கள் சிதைந்து போயின. 4.103.7-8
    992 சங்கொலிப் பித்திடு மின்சிறு
    காலைத் தடவழலில்
    குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங்
    காட்டி இருபதுதோள்
    அங்குலம் வைத்தவன் செங்குரு
    திப்புன லோடஅஞ்ஞான்
    றங்குலி வைத்தான் அடித்தா
    மரையென்னை ஆண்டனவே. 4.103.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book