4.109 திருமாற்பேறு - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
முதலிரு செய்யுட்கள் சிதைந்து போயின 4.109.1-2
1026 மாணிக் குயிர்பெறக் கூற்றை
யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற்
கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப்
படுவன பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே
றுடையான் மலரடியே. 4.109.3
1027 கருடத் தனிப்பாகன் காண்டற்
கரியன காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண்
டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன்
செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே
றுடையான் மலரடியே. 4.109.4
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின. 4.109.5-10
திருச்சிற்றம்பலம்
Goto Main book