4.110 திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1028 பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்
டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென்
மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை
மாடச் சுடர்க்கொழுந்தே. 4.110.1
1029 ஆவா சிறுதொண்ட னென்நினைந்
தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன்
மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப்
பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை
மாடத்தெம் புண்ணியனே. 4.110.2
இப்பதிகத்தில் 3,4,5,6,7,8,9-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின. 4.110.3-9
1030 கடவுந் திகிரி கடவா
தொழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிர லொன்றுவைத்
தாய்பனி மால்வரைபோல்
இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள்
ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங் கடந்தையுள் தூங்கானை
மாடத்தெந் தத்துவனே. 4.110.10
திருச்சிற்றம்பலம்
Goto Main book