MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.111 பசுபதி - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1031 சாம்பலைப் பூசித் தரையிற்
    புரண்டுநின் றாள்பரவி
    ஏம்பலிப் பார்கட் கிரங்குகண்
    டாயிருங் கங்கையென்னுங்
    காம்பலைக் கும்பணைத் தோளி
    கதிர்ப்பூண் வனமுலைமேற்
    பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை
    யாளும் பசுபதியே. 4.111.1
    1032 உடம்பைத் தொலைவித்துன் பாதந்
    தலைவைத்த உத்தமர்கள்
    இடும்பைப் படாமல் இரங்குகண்
    டாயிரு ளோடச்செந்தீ
    அடும்பொத் தனைய அழன்மழு
    வாவழ லேயுமிழும்
    படம்பொத் தரவரை யாயெம்மை
    யாளும் பசுபதியே. 4.111.2
    1033 தாரித் திரந்தவி ராவடி
    யார்தடு மாற்றமென்னும்
    மூரித் திரைப்பௌவ நீக்குகண்
    டாய்முன்னை நாளொருகால்
    வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை
    வேள்வெந்து வீழச்செந்தீப்
    பாரித்த கண்ணுடை யாயெம்மை
    யாளும் பசுபதியே. 4.111.3
    1034 ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன்
    பாத மிறைஞ்சுகின்றார்
    அருவினைச் சுற்றம் அகல்விகண்
    டாயண்ட மேயணவும்
    பெருவரைக் குன்றம் பிளிறப்
    பிளந்துவேய்த் தோளியஞ்சப்
    பருவரைத் தோலுரித் தாயெம்மை
    யாளும் பசுபதியே. 4.111.4
    1035 இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன்
    பாத மிறைஞ்சுகின்றார்க்
    கடர்க்கின்ற நோயை விலக்குகண்
    டாயண்டம் எண்டிசையுஞ்
    சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை
    யோடுஞ் சுரும்புதுன்றிப்
    படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை
    யாளும் பசுபதியே. 4.1115
    1036 அடலைக் கடல்கழி வான்நின்
    னடியிணை யேயடைந்தார்
    நடலைப் படாமை விலக்குகண்
    டாய்நறுங் கொன்றை திங்கள்
    சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ்
    சூளா மணிகிடந்து
    படரச் சுடர்மகு டாயெம்மை
    யாளும் பசுபதியே. 4.111.6
    1037 துறவித் தொழிலே புரிந்துன்
    சுரும்படி யேதொழுவார்
    மறவித் தொழிலது மாற்றுகண்
    டாய்மதின் மூன்றுடைய
    அறவைத் தொழில்புரிந் தந்தரத்
    தேசெல்லு மந்திரத்தேர்ப்
    பறவைப் புரமெரித் தாயெம்மை
    யாளும் பசுபதியே. 4.111.7
    இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 4.111.8-9
    1038 சித்தத் துருகிச் சிவனெம்
    பிரானென்று சிந்தையுள்ளே
    பித்துப் பெருகப் பிதற்றுகின்
    றார்பிணி தீர்த்தருளாய்
    மத்தத் தரக்கன் இருபது
    தோளு முடியுமெல்லாம்
    பத்துற் றுறநெரித் தாயெம்மை
    யாளும் பசுபதியே. 4.111.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book