MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.114 தனி - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1060 பவளத் தடவரை போலுந்திண்
    டோ ள்களத் தோள்மிசையே
    பவளக் குழைதழைத் தாலொக்கும்
    பல்சடை அச்சடைமேற்
    பவளக் கொழுந்தன்ன பைம்முக
    நாகமந் நாகத்தொடும்
    பவளக்கண் வால மதியெந்தை
    சூடும் பனிமலரே. 4.114.1
    1061 முருகார் நறுமலர் இண்டை
    தழுவிவண் டேமுரலும்
    பெருகா றடைசடைக் கற்றையி
    னாய்பிணி மேய்ந்திருந்த
    இருகாற் குரம்பை யிதுநா
    னுடைய திதுபிரிந்தாற்
    தருவாய் எனக்குன் திருவடிக்
    கீழோர் தலைமறைவே. 4.114.2
    1062 மூவா உருவத்து முக்கண்
    முதல்வமீக் கூரிடும்பை
    காவா யெனக்கடை தூங்கு
    மணியைக்கை யாலமரர்
    நாவா யசைத்த வொலியொலி
    மாறிய தில்லையப்பாற்
    தீயாய் எரிந்து பொடியாய்க்
    கழிந்த திரிபுரமே. 4.114.3
    1063 பந்தித்த பாவங்கள் அம்மையிற்
    செய்தன இம்மைவந்து
    சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென்
    னேவந் தமரர்முன்னாள்
    முந்திச் செழுமல ரிட்டு
    முடிதாழ்த் தடிவணங்கும்
    நந்திக்கு முந்துற ஆட்செய்கி
    லாவிட்ட நன்னெஞ்சமே. 4.114.4
    1064 அந்திவட் டத்திளங் கண்ணிய
    னாறமர் செஞ்சடையான்
    புந்திவட் டத்திடைப் புக்குநின்
    றானையும் பொய்யென்பனோ
    சந்திவட் டச்சடைக் கற்றை
    யலம்பச் சிறிதலர்ந்த
    நந்திவட் டத்தொடு கொன்றை
    வளாவிய நம்பனையே. 4.114.5
    1065 உன்மத் தகமலர் சூடி
    உலகந் தொழச்சுடலைப்
    பன்மத் தகங்கொண்டு பல்கடை
    தோறும் பலிதிரிவான்
    என்மத் தகத்தே இரவும்
    பகலும் பிரிவரியான்
    தன்மத் தகத்தோர் இளம்பிறை
    சூடிய சங்கரனே. 4.114.6
    1066 அரைப்பா லுடுப்பன கோவணச்
    சின்னங்கள் ஐயமுணல்
    வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி
    வாழ்க்கைக்கு வானிரைக்கும்
    இரைப்பா படுதலை யேந்துகை
    யாமறை தேடுமெந்தாய்
    உரைப்பார் உரைப்பன வேசெய்தி
    யாலெங்கள் உத்தமனே. 4.114.7
    1067 துறக்கப் படாத உடலைத்
    துறந்துவெந் தூதுவரோ
    டிறப்பன் இறந்தால் இருவிசும்
    பேறுவன் ஏறிவந்து
    பிறப்பன் பிறந்தாற் பிறையணி
    வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
    மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங்
    கிடந்து மறுகிடுமே. 4.114.8
    1068 வேரி வளாய விரைமலர்க்
    கொன்றை புனைந்தனகன்
    சேரி வளாயவென் சிந்தை
    புகுந்தான் திருமுடிமேல்
    வாரி வளாய வருபுனற்
    கங்கை சடைமறிவாய்
    ஏரி வளாவிக் கிடந்தது
    போலும் இளம்பிறையே. 4.114.9
    1069 கன்னெடுங் காலம் வெதும்பிக்
    கருங்கடல் நீர்சுருங்கிப்
    பன்னெடுங் காலம் மழைதான்
    மறுக்கினும் பஞ்சமுண்டென்
    றென்னொடுஞ் சூளறும் அஞ்சல்நெஞ்
    சேயிமை யாதமுக்கண்
    பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண்
    டீரிப் புகலிடத்தே. 4.114.10
    1070 மேலு மறிந்திலன் நான்முகன்
    மேற்சென்று கீழிடந்து
    மாலு மறிந்திலன் மாலுற்ற
    தேவழி பாடுசெய்யும்
    பாலன் மிசைச்சென்று பாசம்
    விசிறி மறிந்தசிந்தைக்
    கால னறிந்தான் அறிதற்
    கரியான் கழலடியே. 4.114.11

    திருச்சிற்றம்பலம்

    திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
    நான்காம் திருமுறை முற்றும்.

    Goto Main book