MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4. 11 நமச்சிவாயப்பதிகம்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    104 சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே. 4.11.1
    105 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
    ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
    கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
    நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. 4.11.2
    106 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
    பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
    நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 4.11.3
    107 இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
    விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
    அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
    நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. 4.11.4
    108 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
    அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
    திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
    நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே. 4.11.5
    109 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
    குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. 4.11.6
    110 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
    கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
    ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
    நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. 4.11.7
    111 இல்லக விளக்கது இருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே. 4.11.8
    112 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
    தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
    அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
    நன்னெறி யாவது நமச்சி வாயவே. 4.11.9
    113 மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
    தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே. 4.11.10

    இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book