MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4. 12 திருப்பழனம்
    பண் - பழந்தக்கராகம்
    திருச்சிற்றம்பலம்

    114 சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
    பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
    முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
    பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ. 4.12.1
    115 கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
    பண்டரங்க வேடத்தான் பாட்டோ வாப் பழனத்தான்
    வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங்
    கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ. 4.12.2
    116 மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த
    பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
    நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே
    சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ.
    மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம். 4.12.3
    117 புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு
    பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்
    மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
    விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ. 4.12.4
    118 மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
    விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
    பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென்
    கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ. 4.12.5
    119 பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ்
    செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான்
    அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்
    தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ. 4.12.6
    120 துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்
    பணையார வாரத்தான் பாட்டோ வாப் பழனத்தான்
    கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த
    இணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ. 4.12.7
    121 கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் காவிரிப்பூம்
    பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
    கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்
    பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.

    கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில்
    பொருந்திய முத்துக்கள் - அவையாவன -
    யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, நாகம், பசுவின்பல்,
    மூங்கிற்கணு, கொக்கின்கழுத்து, கற்புள்ள
    மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு
    முத்துக்களாம்.
    காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து
    எனக்கொள்க. அவை - சங்கு, இப்பி, மீன், தாமரைமலர்
    என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள். இதனை
    சிறைகொள் நீர்த்தரளத் திரல்கொணித்திலத்த எனத்
    திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா,
    2-வது பதிகம் 5-வது திருப்பாடலானுமுணர்க. 4.12.8
    122 புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்
    பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்
    உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங்
    கள்ளியேன் நான்இவற்கென் கனவளையுங் கடவேனோ. 4.12.9
    123 வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
    பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
    அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
    குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே. 4.12.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book