MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


  4.14 தசபுராணம்
  பண் - பழம்பஞ்சுரம்
  திருச்சிற்றம்பலம்

  134 பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட
  இமையோர் இரிந்து பயமாய்த்
  திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு
  சுடுவா னெழுந்த விசைபோய்ப்
  பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை
  அருளாய் பிரானே எனலும்
  அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட
  அவனண்டர் அண்ட ரரசே. 4.14.1
  135 நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட
  நிலநின்று தம்ப மதுவப்
  பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை
  யிருபாலு நின்று பணியப்
  பிரமனு மாலுமேலை முடியோடு பாதம்
  அறியாமை நின்ற பெரியோன்
  பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி
  யவனா நமக்கோர் சரணே. 4.14.2
  136 காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக
  உருவாகி மூவர் உருவில்
  சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின்
  உருவாகி நின்ற தழலோன்
  ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு
  குறளாயோ ராலின் இலைமேல்
  பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி
  யவனா நமக்கோர் சரணே. 4.14.3
  137 நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ
  டுலகேழு மெங்கு நலியச்
  சூடிய கையராகி இமையோர் கணங்கள்
  துதியோதி நின்று தொழலும்
  ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்து
  ஒழியாத கோபம் ஒழிய
  ஆடிய மாநடத்தெ மனலாடி பாதம்
  அவையா நமக்கோர் சரணே. 4.14.4
  138 நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும்
  நிதனஞ்செய் தோடு புரமூன்
  றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர்
  அரணம் புகத்தன் அருளாற்
  கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும்
  அனல்பாய நீறு புரமா
  மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள
  லவனா நமக்கோர் சரணே. 4.14.5
  139 நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற
  னெரிகேசன் நேடி வருநாள்
  காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும்
  அளவின்கண் வந்து குறுகிப்
  பாலனை ஓடவோடப் பயமெய்து வித்த
  உயிர்வவ்வு பாசம் விடுமக்
  காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர்
  தொழுதோது சூடு கழலே. 4.14.6
  140 உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில்
  அவியுண்ண வந்த இமையோர்
  பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற
  படிகண்டு நின்று பயமாய்
  அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி
  கமியென் றிறைஞ்சி யகலச்
  சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை
  கழல்கண்டு கொள்கை சரணே. 4.14.7
  141 நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி
  நயனத் தலங்கள் கரமா
  உலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட
  இருளோட நெற்றி ஒருகண்
  அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு
  மடவாள் இறைஞ்ச மதிபோல்
  அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண்
  அவனா நமக்கோர் சரணே. 4.14.8
  142 கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு
  கணையோன் அணைந்து புகலும்
  மழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட
  மலரான தொட்ட மதனன்
  எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள்
  எரியென் றிறைஞ்சி யகலத்
  தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த
  தழல்வண்ணன் எந்தை சரணே. 4.14.9
  143 தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக
  நிறைவென்று தன்க ணதனால்
  உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை
  பெருமான் உகந்து மிகவும்
  சுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன்
  இதயம் பிளந்த கொடுமை
  அடல்வலி ஆழியாழி யவனுக் களித்த
  அவனா நமக்கோர் சரணே. 4.14.10
  144 கடுகிய தேர்செலாது கயிலாய மீது
  கருதேலுன் வீரம் ஒழிநீ
  முடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன்
  மொழிவானை நன்று முனியா
  விடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன்
  வரையுற் றெடுக்க முடிதோள்
  நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்
  நினைவுற்ற தென்றன் மனனே. 4.14.11

  திருச்சிற்றம்பலம்

  Goto Main book