MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.20 திருவாரூர்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    198 காண்டலேகருத் தாய்நினைந்திருந்
    தேன்மனம்புகுந் தாய்கழலடி
    பூண்டுகொண் டொழிந்தேன்
    புறம்போயி னாலறையோ
    ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை
    மேலெழுகொடி வானிளம்மதி
    தீண்டிவந் துலவுந்
    திருவாரூ ரம்மானே. 4.20.1
    199 கடம்படந்நட மாடினாய்களை
    கண்ணெனக்கொரு காதல்செய்தடி
    ஒடுங்கி வந்தடைந்
    தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம்
    முடங்கிறால்முது நீர்மலங்கிள
    வாளைசெங்கயல் சேல்வரால்களி
    றடைந்த தண்கழனி
    அணியாரூ ரம்மானே. 4.20.2
    200 அருமணித்தடம் பூண்முலை
    அரம்பையரொ டருளிப்பாடியர்
    உரிமையிற் றொழுவார்
    உத்திர பல்கணத்தார்
    விரிசடைவிர திகளந்தணர்
    சைவர்பாசுப தர்கபாலிகள்
    தெருவினிற் பொலியுந்
    திருவாரூ ரம்மானே. 4.20.3
    201 பூங்கழல்தொழு தும்பரவியும்
    புண்ணியாபுனி தாவுன்பொற்கழல்
    ஈங்கிருக்கப் பெற்றேன்
    என்னகுறை யுடையேன்
    ஓங்குதெங்கிலை யார்கமுகிப
    வாழைமாவொடு மாதுளம்பல
    தீங்கனி சிதறுந்
    திருவாரூ ரம்மானே. 4.20.4
    202 நீறுசேர்செழு மார்பினாய்நிரம்
    பாமதியொடு நீள்சடையிடை
    ஆறுபாய வைத்தாய்
    அடியே அடைந்தொழிந்தேன்
    ஏறிவண்டொடு தும்பியஞ்சிற
    கூன்றவிண்ட மலரிதழ்வழி
    தேறல்பாய்ந் தொழுகுந்
    திருவாரூ ரம்மானே. 4.20.5
    203 அளித்துவந்தடி கைதொழுமவர்
    மேல்வினைகெடு மென்றிவையகங்
    களித்துவந் துடனே
    கலந்தாடக் காதலராய்க்
    குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந்
    தாடுகோதையர் குஞ்சியுள்புகத்
    தெளிக்குந் தீர்த்தமறாத்
    திருவாரூ ரம்மானே. 4.20.6
    204 திரியுமூவெயில் தீயெழச்சிலை
    வாங்கிநின்றவ னேயென்சிந்தையுட்
    பிரியுமா றெங்ஙனே
    பிழைத்தேயும் போகலொட்டேன்
    பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த
    சாலிதிப்பிய மென்றிவையகத்
    தரியுந் தண்கழனி
    யணியாரூ ரம்மானே. 4.20.7
    205 பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட
    வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின்
    றிறக்குமா றுளதே
    இழித்தேன் பிறப்பினைநான்
    அறத்தையேபுரிந் தமனத்தனாய்
    ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன்
    திறத்தனாய் ஒழிந்தேன்
    திருவாரூ ரம்மானே. 4.20.8
    206 முளைத்தவெண்பிறை மொய்சடையுடை
    யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள
    வளைத்துக் கொண்டிருந்தேன்
    வலிசெய்து போகலொட்டேன்
    அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு
    தந்தகாலமுங் கண்டுதன்பெடை
    திளைக்குந் தண்கழனித்
    திருவாரூ ரம்மானே. 4.20.9
    207 நாடினார்கம லம்மலரய
    னோடிரணியன் ஆகங்கீண்டவன்
    நாடிக் காணமாட்டாத்
    தழலாய நம்பானைப்
    பாடுவார்பணி வார்பல்லாண்டிசை
    கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத்
    தேடிக் கண்டுகொண்டேன்
    திருவாரூ ரம்மானே. 4.20.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book