MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.22 கோயில் - திருநேரிசை
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    218 செஞ்சடைக் கற்றை முற்றத்
    திளநிலா எறிக்குஞ் சென்னி
    நஞ்சடைக் கண்ட னாரைக்
    காணலா நறவ நாறும்
    மஞ்சடைச் சோலைத் தில்லை
    மல்குசிற் றம்ப லத்தே
    துஞ்சடை இருள் கிழியத்
    துளங்கெரி யாடு மாறே. 4.22.1
    219 ஏறனார் ஏறு தம்பால்
    இளநிலா எறிக்குஞ் சென்னி
    ஆறனார் ஆறு சூடி
    ஆயிழை யாளோர் பாகம்
    நாறுபூஞ் சோலைத் தில்லை
    நவின்றசிற் றம்ப லத்தே
    நீறுமெய் பூசி நின்று
    நீண்டெரி யாடு மாறே. 4.22.2
    220 சடையனார் சாந்த நீற்றர்
    தனிநிலா எறிக்குஞ் சென்னி
    உடையனா ருடைத லையில்
    உண்பதும் பிச்சை யேற்றுக்
    கடிகொள்பூந் தில்லை தன்னுட்
    கருதுசிற் றம்ப லத்தே
    அடிகழ லார்க்க நின்று
    வனலெரி யாடு மாறே. 4.22.3
    221 பையர வசைத்த அல்குற்
    பனிநிலா எறிக்குஞ் சென்னி
    மையரிக் கண்ணி யாளும்
    மாலுமோர் பாக மாகிச்
    செய்யெரி தில்லை தன்னுட்
    டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
    கையெரி வீசி நின்று
    கனலெரி யாடு மாறே. 4.22.4
    222 ஓதினார் வேதம் வாயால்
    ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
    பூதனார் பூதஞ் சூழப்
    புலியுரி யதள னார்தாம்
    நாதனார் தில்லை தன்னுள்
    நவின்றசிற் றம்ப லத்தே
    காதில்வெண் குழைகள் தாழக்
    கனலெரி யாடு மாறே. 4.22.5
    223 ஓருடம் பிருவ ராகி
    ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
    பாரிடம் பாணி செய்யப்
    பயின்றஎம் பரம மூர்த்தி
    காரிடந் தில்லை தன்னுட்
    கருதுசிற் றம்ப லத்தே
    பேரிடம் பெருக நின்று
    பிறங்கெரி யாடு மாறே. 4.22.6
    224 முதற்றனிச் சடையை மூழ்க
    முகிழ்நிலா எறிக்குஞ் சென்னி
    மதக்களிற் றுரிவை போர்த்த
    மைந்தரைக் காண லாகும்
    மதத்துவண் டறையுஞ் சோலை
    மல்குசிற் றம்ப லத்தே
    கதத்ததோ ரரவ மாடக்
    கனலெரி யாடு மாறே. 4.22.7
    225 மறையனார் மழுவொன் றேந்தி
    மணிநிலா எறிக்குஞ் சென்னி
    இறைவனார் எம்பி ரானார்
    ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
    சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட்
    டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
    அறைகழ லார்க்க நின்று
    வனலெரி யாடு மாறே. 4.22.8
    226 விருத்தனாய்ப் பால னாகி
    விரிநிலா எறிக்குஞ் சென்னி
    நிருத்தனார் நிருத்தஞ் செய்ய
    நீண்டபுன் சடைகள் தாழக்
    கருத்தனார் தில்லை தன்னுட்
    கருதுசிற் றம்ப லத்தே
    அருத்தமா மேனி தன்னோ
    டனலெரி யாடு மாறே. 4.22.9
    227 பாலனாய் விருத்த னாகிப்
    பனிநிலா எறிக்குஞ் சென்னி
    காலனைக் காலாற் காய்ந்த
    கடவுளார் விடையொன் றேறி
    ஞாலமாந் தில்லை தன்னுள்
    நவின்றசிற் றம்ப லத்தே
    நீலஞ்சேர் கண்ட னார்தாம்
    நீண்டெரி யாடு மாறே. 4.22.10
    228 மதியிலா அரக்க னோடி
    மாமலை யெடுக்க நோக்கி
    நெதியன்றோள் நெரிய வூன்றி
    நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
    மதியந்தோய் தில்லை தன்னுள்
    மல்குசிற் றம்ப லத்தே
    அதிசயம் போல நின்று
    வனலெரி யாடு மாறே. 4.22.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மூலத்தானநாயகர், சபாநாதர். தேவியார் - சிவகாமியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book