MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.24 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
    239 இரும்புகொப் பளித்த யானை
    ஈருரி போர்த்த ஈசன்
    கரும்புகொப் பளித்த இன்சொற்
    காரிகை பாக மாகச்
    சுரும்புகொப் பளித்த கங்கைத்
    துவலைநீர் சடையி லேற்ற
    அரும்புகொப் பளித்த சென்னி
    அதிகைவீ ரட்ட னாரே. 4.24.1
    240 கொம்புகொப் பளித்த திங்கட்
    கோணல்வெண் பிறையுஞ் சூடி
    வம்புகொப் பளித்த கொன்றை
    வளர்சடை மேலும் வைத்துச்
    செம்புகொப் பளித்த மூன்று
    மதிலுடன் சுருங்க வாங்கி
    அம்புகொப் பளிக்க எய்தார்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.24.2
    241 விடையுங்கொப் பளித்த பாதம்
    விண்ணவர் பரவி யேத்தச்
    சடையுங்கொப் பளித்த திங்கட்
    சாந்தவெண் ணீறு பூசி
    உடையுங்கொப் பளித்த நாகம்
    உள்குவார் உள்ளத் தென்றும்
    அடையுங்கொப் பளித்த சீரார்
    அதிகைவீ ரட்ட னாறே. 4.24.3
    242 கறையுங்கொப் பளித்த கண்டர்
    காமவேள் உருவம் மங்க
    இறையுங்கொப் பளித்த கண்ணார்
    ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
    மறையுங்கொப் பளித்த நாவர்
    வண்டுண்டு பாடுங் கொன்றை
    அறையுங்கொப் பளித்த சென்னி
    அதிகைவீ ரட்ட னாரே. 4.24.4
    243 நீறுகொப் பளித்த மார்பர்
    நிழல்திகழ் மழுவொன் றேந்திக்
    கூறுகொப் பளித்த கோதை
    கோல்வளை மாதோர் பாகம்
    ஏறுகொப் பளித்த பாதம்
    இமையவர் பரவி யேத்த
    ஆறுகொப் பளித்த சென்னி
    அதிகைவீ ரட்ட னாரே. 4.24.5
    244 வணங்குகொப் பளித்த பாதம்
    வானவர் பரவி யேத்தப்
    பிணங்குகொப் பளித்த சென்னிச்
    சடையுடைப் பெருமை யண்ணல்
    சுணங்குகொப் பளித்த கொங்கைச்
    சுரிகுழல் பாக மாக
    அணங்குகொப் பளித்த மேனி
    அதிகைவீ ரட்ட னாரே. 4.24.6
    245 சூலங்கொப் பளித்த கையர்
    சுடர்விடு மழுவாள் வீசி
    நூலுங்கொப் பளித்த மார்பில்
    நுண்பொறி யரவஞ் சேர்த்தி
    மாலுங்கொப் பளித்த பாகர்
    வண்டுபண் பாடுங் கொன்றை
    ஆலங்கொப் பளித்த கண்டத்
    ததிகைவீ ரட்ட னாறே. 4.24.7
    246 நாகங்கொப் பளித்த கையர்
    நான்மறை யாய பாடி
    மேகங்கொப் பளித்த திங்கள்
    விரிசடை மேலும் வைத்துப்
    பாகங்கொப் பளித்த மாதர்
    பண்ணுடன் பாடி யாட
    ஆகங்கொப் பளித்த தோளார்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.24.8
    247 பரவுகொப் பளித்த பாடல்
    பண்ணுடன் பத்தர் ஏத்த
    விரவுகொப் பளித்த கங்கை
    விரிசடை மேவ வைத்து
    இரவுகொப் பளித்த கண்டர்
    ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார்
    அரவுகொப் பளித்த கையர்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.24.9
    248 தொண்டைகொப் பளித்த செவ்வாய்த்
    துடியிடைப் பரவை யல்குற்
    கொண்டைகொப் பளித்த கோதைக்
    கோல்வளை பாக மாக
    வண்டுகொப் பளித்த தீந்தேன்
    வரிக்கயல் பருகி மாந்தக்
    கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க்
    கெடிலவீ ரட்ட னாரே. 4.24.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book