MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.27 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்
    269 மடக்கினார் புலியின் தோலை
    மாமணி நாகங் கச்சா
    முடக்கினார் முகிழ்வெண் டிங்கள்
    மொய்சடைக் கற்றை தன்மேல்
    தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த்
    துடியிடைப் பரவை யல்குல்
    அடக்கினார் கெடில வேலி
    அதிகைவீ ரட்ட னாரே. 4.27.1
    270 சூடினார் கங்கை யாளைச்
    சூடிய துழனி கேட்டங்
    கூடினாள் நங்கை யாளும்
    ஊடலை ஒழிக்க வேண்டிப்
    பாடினார் சாம வேதம்
    பாடிய பாணி யாலே
    ஆடினார் கெடில வேலி
    அதிகைவீ ரட்ட னாரே. 4.27.2
    271 கொம்பினார் குழைத்த வேனற்
    கோமகன் கோல நீர்மை
    நம்பினார் காண லாகா
    வகையதோர் நடலை செய்தார்
    வெம்பினார் மதில்கள் மூன்றும்
    வில்லிடை எரித்து வீழ்த்த
    அம்பினார் கெடில வேலி
    அதிகைவீ ரட்ட னாரே. 4.27.3
    272 மறிபடக் கிடந்த கையர்
    வளரிள மங்கை பாகஞ்
    செறிபடக் கிடந்த செக்கர்ச்
    செழுமதிக் கொழுந்து சூடி
    பொறிபடக் கிடந்த நாகம்
    புகையுமிழ்ந் தழல வீக்கிக்
    கிறிபட நடப்பர் போலுங்
    கெடிலவீ ரட்ட னாரே. 4.27.4
    273 நரிவரால் கவ்வச் சென்று
    நற்றசை இழந்த தொத்த
    தெரிவரால் மால்கொள் சிந்தை
    தீர்ப்பதோர் சிந்தை செய்வார்
    வரிவரால் உகளுந் தெண்ணீணர்க்
    கழனிசூழ் பழன வேலி
    அரிவரால் வயல்கள் சூழ்ந்த
    அதிகைவீ ரட்ட னாரே. 4.27.5
    274 புள்ளலைத் துண்ட ஓட்டில்
    உண்டுபோய் பலாசங் கொம்பின்
    சுள்ளலைச் சுடலை வெண்ணீ
    றணிந்தவர் மணிவெள் ளேற்றுத்
    துள்ளலைப் பாகன் றன்னைத்
    தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை
    அள்ளலைக் கடப்பித் தாளும்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.27.6
    275 நீறிட்ட நுதலர் வேலை
    நீலஞ்சேர் கண்டர் மாதர்
    கூறிட்ட மெய்ய ராகிக்
    கூறினார் ஆறும் நான்குங்
    கீறிட்ட திங்கள் சூடிக்
    கிளர்தரு சடையி னுள்ளால்
    ஆறிட்டு முடிப்பர் போலும்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.27.7
    276 காணிலார் கருத்தில் வாரார்
    திருத்தலார் பொருத்த லாகார்
    ஏணிலார் இறப்பும் இல்லார்
    பிறப்பிலார் துறக்க லாகார்
    நாணிலார் ஐவ ரோடும்
    இட்டெனை விரவி வைத்தார்
    ஆணலார் பெண்ணும் அல்லார்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.27.8
    இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 4.27.9
    277 தீர்த்தமா மலையை நோக்கிச்
    செருவலி அரக்கன் சென்று
    பேர்த்தலும் பேதை அஞ்சப்
    பெருவிர லதனை யூன்றிச்
    சீர்த்தமா முடிகள் பத்துஞ்
    சிதறுவித் தவனை யன்று
    ஆர்த்தவாய் அலற வைத்தார்
    அதிகைவீ ரட்ட னாரே. 4.27.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book