MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.32 திருப்பயற்றூர் - திரு நேரிசை

    திருச்சிற்றம்பலம்

    314 உரித்திட்டார் ஆனை யின்றோள்
    உதிரவா றொழுகி யோட
    விரித்திட்டார் உமையா ளஞ்சி
    விரல்விதிர்த் தலக்கண் நோக்கித்
    தரித்திட்டார் சிறிது போது
    தரிக்கில ராகித் தாமுஞ்
    சிரித்திட்டார் எயிறு தோன்றத்
    திருப்பயற் றூர னாரே. 4.32.1
    315 உவந்திட்டங் குமையோர் பாகம்
    வைத்தவர் ஊழி யூழி
    பவந்திட்ட பரம னார் தாம்
    மலைச்சிலை நாகம் ஏற்றிக்
    கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங்
    கனலெரி யாகச் சீறிச்
    சிவந்திட்ட கண்ணர் போலுந்
    திருப்பயற் றூர னாரே. 4.32.2
    316 நங்களுக் கருள தென்று
    நான்மறை யோது வார்கள்
    தங்களுக் கருளும் எங்கள்
    தத்துவன் றழலன் றன்னை
    எங்களுக் கருள்செய் யென்ன
    நின்றவன் நாகம் அஞ்சுந்
    திங்களுக் கருளிச் செய்தார்
    திருப்பயற் றூர னாரே. 4.32.3
    317 பார்த்தனுக் கருளும் வைத்தார்
    பாம்பரை யாட வைத்தார்
    சாத்தனை மகனா வைத்தார்
    சாமுண்டி சாம வேதங்
    கூத்தொடும் பாட வைத்தார்
    கோளரா மதியம் நல்ல
    தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார்
    திருப்பயற் றூர னாரே. 4.32.4
    318 மூவகை மூவர் போலும்
    முற்றுமா நெற்றிக் கண்ணர்
    நாவகை நாவர் போலும்
    நான்மறை ஞான மெல்லாம்
    ஆவகை யாவர் போலும்
    ஆதிரை நாளர் போலுந்
    தேவர்கள் தேவர் போலுந்
    திருப்பயற் றூர னாரே. 4.32.5
    319 ஞாயிறாய் நமனு மாகி
    வருணனாய்ச் சோம னாகித்
    தீயறா நிருதி வாயுத்
    திப்பிய சாந்த னாகிப்
    பேயறாக் காட்டி லாடும்
    பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
    தீயறாக் கையர் போலுந்
    திருப்பயற் றூர னாரே. 4.32.6
    320 ஆவியாய் அவியு மாகி
    அருக்கமாய்ப் பெருக்க மாகிப்
    பாவியர் பாவந் தீர்க்கும்
    பரமனாய்ப் பிரம னாகிக்
    காவியங் கண்ண ளாகிக்
    கடல்வண்ண மாகி நின்ற
    தேவியைப் பாகம் வைத்தார்
    திருப்பயற் றூர னாரே. 4.32.7
    321 தந்தையாய்த் தாயு மாகித்
    தரணியாய்த் தரணி யுள்ளார்க்
    கெந்தையு மென்ன நின்ற
    ஏழுல குடனு மாகி
    எந்தையெம் பிரானே என்றென்
    றுள்குவா ருள்ளத் தென்றுஞ்
    சிந்தையுஞ் சிவமு மாவார்
    திருப்பயற் றூர னாரே. 4.32.8
    322 புலன்களைப் போக நீக்கிப்
    புந்தியை யொருங்க வைத்து
    இலங்களைப் போக நின்று
    இரண்டையும் நீக்கி யொன்றாய்
    மலங்களை மாற்ற வள்ளார்
    மனத்தினுட் போக மாகிச்
    சினங்களைக் களைவர் போலுந்
    திருப்பயற் றூர னாரே. 4.32.9
    323 மூர்த்திதன் மலையின் மீது
    போகாதா முனிந்து நோக்கிப்
    பார்த்துத்தான் பூமி மேலாற்
    பாய்ந்துடன் மலையைப் பற்றி
    ஆர்த்திட்டான் முடிகள் பத்தும்
    அடர்த்துநல் லரிவை யஞ்சத்
    தேத்தெத்தா என்னக் கேட்டார்
    திருப்பயற் றூர னாரே. 4.32.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - திருப்பயத்தீசுவரர்,
    தேவியார் - காவியங்கண்ணியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book