MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.36 திருப்பழனம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    354 ஆடினா ரொருவர் போலு
    மலர்கமழ் குழலி னாலைக்
    கூடினா ரொருவர் போலுங்
    குளிர்புனல் வளைந்த திங்கள்
    சூடினா ரொருவர் போலுந்
    தூயநன் மறைகள் நான்கும்
    பாடினா ரொருவர் போலும்
    பழனத்தெம் பரம னாரே. 4.35.1
    355 போவதோர் நெறியு மானார்
    புரிசடைப் புனித னார்நான்
    வேவதோர் வினையிற் பட்டு
    வெம்மைதான் விடவுங் கில்லேன்
    கூவல்தான் அவர்கள் கேளார்
    குணமிலா ஐவர் செய்யும்
    பாவமே தீர நின்றார்
    பழனத்தெம் பரம னாரே. 4.35.2
    356 கண்டராய் முண்ட ராகிக்
    கையிலோர் கபால மேந்தித்
    தொண்டர்கள் பாடி யாடித்
    தொழுகழற் பரம னார்தாம்
    விண்டவர் புரங்க ளெய்த
    வேதியர் வேத நாவர்
    பண்டையென் வினைகள் தீர்ப்பார்
    பழனத்தெம் பரம னாரே. 4.35.3
    357 நீரவன் தீயி னோடு
    நிழலவன் எழில தாய
    பாரவன் விண்ணின் மிக்க
    பரமவன் பரம யோகி
    யாரவ னண்ட மிக்க
    திசையினோ டொளிக ளாகிப்
    பாரகத் தமுத மானார்
    பழனத்தெம் பரம னாரே. 4.35.4
    358 ஊழியா ரூழி தோறும்
    உலகினுக் கொருவ ராகிப்
    பாழியார் பாவந் தீர்க்கும்
    பராபரர் பரம தாய
    ஆழியான் அன்னத் தானும்
    அன்றவர்க் களப் பரிய
    பாழியார் பரவி யேத்தும்
    பழனத்தெம் பரம னாரே. 4.35.5
    359 ஆலின்கீழ் அறங்க ளெல்லாம்
    அன்றவர்க் கருளிச் செய்து
    நூலின்கீ ழவர்கட் கெல்லா
    நுண்பொரு ளாகி நின்று
    காலின்கீழ்க் காலன் றன்னைக்
    கடுகத்தான் பாய்ந்து பின்னும்
    பாலின்கீழ் நெய்யு மானார்
    பழனத்தெம் பரம னாரே. 4.35.6
    360 ஆதித்தன் அங்கி சோமன்
    அயனொடு மால்பு தனும்
    போதித்து நின்று லகிற்
    போற்றிசைத் தாரி வர்கள்
    சோதித்தா ரேழு லகுஞ்
    சோதியுட் சோதி யாகிப்
    பாதிப்பெண் ணுருவ மானார்
    பழனத்தெம் பரம னாரே. 4.35.7
    361 காற்றனாற் காலற் காய்ந்து
    காருரி போர்த்த ஈசர்
    தோற்றனார் கடலுள் நஞ்சைத்
    தோடுடைக் காதர் சோதி
    ஏற்றினார் இளவெண் டிங்கள்
    இரும்பொழில் சூழ்ந்த காயம்
    பாற்றினார் வினைக ளெல்லாம்
    பழனத்தெம் பரம னாரே. 4.35.8
    362 கண்ணனும் பிரம னோடு
    காண்கில ராகி வந்தே
    எண்ணியுந் துதித்து மேத்த
    எரியுரு வாகி நின்று
    வண்ணநன் மலர்கள் தூவி
    வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
    பண்ணுலாம் பாடல் கேட்டார்
    பழனத்தெம் பரம னாரே. 4.35.9
    363 குடையுடை அரக்கன் சென்று
    குளிர்கயி லாய வெற்பின்
    இடைமட வரலை அஞ்ச
    எடுத்தலும் இறைவன் நோக்கி
    விடையுடை விகிர்தன் றானும்
    விரலினா லூன்றி மீண்டும்
    படைகொடை அடிகள் போலும்
    பழனத்தெம் பரம னாரே. 4.35.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book