MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.38 திருவையாறு - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    374 கங்கையைச் சடையுள் வைத்தார்
    கதிர்பொறி அரவும் வைத்தார்
    திங்களைத் திகழ வைத்தார்
    திசைதிசை தொழவும் வைத்தார்
    மங்கையைப் பாகம் வைத்தார்
    மான்மறி மழுவும் வைத்தார்
    அங்கையுள் அனலும் வைத்தார்
    ஐயனை யாற னாரே. 4.38.1
    375 பொடிதனைப் பூச வைத்தார்
    பொங்குவெண் ணூலும் வைத்தார்
    கடியதோர் நாகம் வைத்தார்
    காலனைக் காலில் வைத்தார்
    வடிவுடை மங்கை தன்னை
    மார்பிலோர் பாகம் வைத்தார்
    அடியிணை தொழவும் வைத்தார்
    ஐயனை யாற னாரே. 4.38.2
    376 உடைதரு கீளும் வைத்தார்
    உலகங்க ளனைத்தும் வைத்தார்
    படைதரு மழுவும் வைத்தார்
    பாய்புலித் தோலும் வைத்தார்
    விடைதரு கொடியும் வைத்தார்
    வெண்புரி நூலும் வைத்தார்
    அடைதர அருளும் வைத்தார்
    ஐயனை யாற னாரே. 4.38.3
    377 தொண்டர்கள் தொழவும் வைத்தார்
    தூமதி சடையில் வைத்தார்
    இண்டையைத் திகழ வைத்தார்
    எமக்கென்று மின்பம் வைத்தார்
    வண்டுசேர் குழலி னாளை
    மருவியோர் பாகம் வைத்தார்
    அண்டவா னவர்கள் ஏத்தும்
    ஐயனை யாற னாரே. 4.38.4
    378 வானவர் வணங்க வைத்தார்
    வல்வினை மாய வைத்தார்
    கானிடை நடமும் வைத்தார்
    காமனைக் கனலா வைத்தார்
    ஆனிடை ஐந்தும் வைத்தார்
    ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
    ஆனையின் உரிவை வைத்தார்
    ஐயனை யாற னாரே. 4.38.5
    379 சங்கணி குழையும் வைத்தார்
    சாம்பல்மெய்ப் பூச வைத்தார்
    வெங்கதிர் எரிய வைத்தார்
    விரிபொழி லனைத்தும் வைத்தார்
    கங்குலும் பகலும் வைத்தார்
    கடுவினை களைய வைத்தார்
    அங்கம தோத வைத்தார்
    ஐயனை யாற னாரே. 4.38.6
    380 பத்தர்கட் கருளும் வைத்தார்
    பாய்விடை யேற வைத்தார்
    சித்தத்தை ஒன்ற வைத்தார்
    சிவமதே நினைய வைத்தார்
    முத்தியை முற்ற வைத்தார்
    முறைமுறை நெறிகள் வைத்தார்
    அத்தியின் உரிவை வைத்தார்
    ஐயனை யாற னாரே. 4.38.7
    381 ஏறுகந் தேற வைத்தார்
    இடைமரு திடமும் வைத்தார்
    நாறுபூங் கொன்றை வைத்தார்
    நாகமும் அரையில் வைத்தார்
    கூறுமை யாகம் வைத்தார்
    கொல்புலித் தோலும் வைத்தார்
    ஆறுமோர் சடையில் வைத்தார்
    ஐயனை யாற னாரே. 4.38.8
    382 பூதங்கள் பலவும் வைத்தார்
    பொங்குவெண் ணீறும் வைத்தார்
    கீதங்கள் பாட வைத்தார்
    கின்னரந் தன்னை வைத்தார்
    பாதங்கள் பரவ வைத்தார்
    பத்தர்கள் பணிய வைத்தார்
    ஆதியும் அந்தம் வைத்தார்
    ஐயனை யாற னாரே. 4.38.9
    383 இரப்பவர்க் கீய வைத்தார்
    ஈபவர்க் கருளும் வைத்தார்
    கரப்பவர் தங்கட் கெல்லாங்
    கடுநர கங்கள் வைத்தார்
    பரப்புநீர்க் கங்கை தன்னைப்
    படர்சடைப் பாகம் வைத்தார்
    அரக்கனுக் கருளும் வைத்தார்
    ஐயனை யாற னாரே. 4.38.10

    திருச்சிற்றம்பலம்