MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.42 திருத்துருத்தி - திருநேரிசை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    414 பொருத்திய குரம்பை தன்னைப்
    பொருளெனக் கருத வேண்டா
    இருத்தியெப் போதும் நெஞ்சுள்
    இறைவனை ஏத்து மின்கள்
    ஒருத்தியைப் பாகம் வைத்தங்
    கொருத்தியைச் சடையில் வைத்த
    துருத்தியஞ் சுடரி னானைத்
    தொண்டனேன் கண்ட வாறே. 4.42.1
    415 சவைதனைச் செய்து வாழ்வான்
    சலத்துளே யழுந்து கின்ற
    இவையொரு பொருளு மல்ல
    இறைவனை ஏத்து மின்னோ
    அவைபுர மூன்றும் எய்தும்
    அடியவர்க் கருளிச் செய்த
    சுவையினைத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே. 4.42.2
    416 உன்னியெப் போதும் நெஞ்சுள்
    ஒருவனை ஏத்து மின்னோ
    கன்னியை ஒருபால் வைத்துக்
    கங்கையைச் சடையுள் வைத்துப்
    பொன்னியின் நடுவு தன்னுள்
    பூம்புனல் பொலிந்து தோன்றுந்
    துன்னிய துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே. 4.42.3
    417 ஊன்றலை வலிய னாகி
    உலகத்துள் உயிர்கட் கெல்லாந்
    தான்றலைப் பட்டு நின்று
    சார்கன லகத்து வீழ
    வான்றலைத் தேவர் கூடி
    வானவர்க் கிறைவா வென்னுந்
    தோன்றலைத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே. 4.42.4
    418 உடல்தனைக் கழிக்க லுற்ற
    உலகத்துள் உயிர்கட் கெல்லாம்
    இடர்தனைக் கழிக்க வேண்டில்
    இறைவனை ஏத்து மின்னோ
    கடல்தனில் நஞ்ச முண்டு
    காண்பரி தாகி நின்ற
    சுடர்தனைத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே. 4.42.5
    419 அள்ளலைக் கடக்க வேண்டில்
    அரனையே நினைமி னீணர்கள்
    பொள்ளலிக் காயந் தன்னுட்
    புண்டரீ கத்தி ருந்த
    வள்ளலை வான வர்க்குங்
    காண்பரி தாகி நின்ற
    துள்ளலைத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே. 4.42.6
    420 பாதியில் உமையாள் தன்னைப்
    பாகமா வைத்த பண்பன்
    வேதியன் என்று சொல்லி
    விண்ணவர் விரும்பி ஏத்தச்
    சாதியாஞ் சதுர்மு கனுஞ்
    சக்கரத் தானுங் காணாச்
    சோதியைத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே. 4.42.7
    421 சாமனை வாழ்க்கை யான
    சலத்துளே யழுந்த வேண்டா
    தூமநல் லகிலுங் காட்டித்
    தொழுதடி வணங்கு மின்னோ
    சோமனைச் சடையுள் வைத்துத்
    தொன்னெறி பலவுங் காட்டுந்
    தூமனத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்டா வாறே. 4.42.8
    422 குண்டரே சமணர் புத்தர்
    குறியறி யாது நின்று
    கண்டதே கருது வார்கள்
    கருத்தெண்ணா தொழிமி னீணர்கள்
    விண்டவர் புரங்கள் எய்து
    விண்ணவர்க் கருள்கள் செய்த
    தொண்டர்கள் துணையி னானைத்
    துருத்திநான் கண்ட வாறே. 4.42.9
    423 பிண்டத்தைக் கழிக்க வேண்டிற்
    பிரானையே பிதற்று மின்கள்
    அண்டத்தைக் கழிய நீண்ட
    அடலரக் கன்றன் ஆண்மை
    கண்டொத்துக் கால்வி ரலால்
    ஊன்றிமீண் டருளிச் செய்த
    துண்டத்துத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே. 4.42.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதேசுவரர்,
    தேவியார் - முகிழாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book