MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.44 திருஏகம்பம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    434 நம்பனை நகர மூன்றும்
    எரியுண வெருவ நோக்கும்
    அம்பனை அமுதை யாற்றை
    அணிபொழிற் கச்சி யுள்ளே
    கம்பனைக் கதிர்வெண் திங்கட்
    செஞ்சடைக் கடவுள் தன்னைச்
    செம்பொனைப் பவளத் தூணைச்
    சிந்தியா எழுகின் றேனே. 4.44.1
    435 ஒருமுழம் உள்ள குட்டம்
    ஒன்பது துளையு டைத்தாய்
    அரைமுழம் அதன் அகலம்
    அதனில்வாழ் முதலை ஐந்து
    பெருமுழை வாய்தல் பற்றிக்
    கிடந்துநான் பிதற்று கின்றேன்
    கருமுகில் தவழும் மாடக்
    கச்சியே கம்ப னீரே. 4.44.2
    436 மலையினார் மகளோர் பாக
    மைந்தனார் மழுவொன் றேந்திச்
    சிலையினால் மதில்கள் மூன்றுந்
    தீயெழச் செற்ற செல்வர்
    இலையினார் சூலம் ஏந்தி
    ஏகம்பம் மேவி னாரைத்
    தலையினால் வணங்க வல்லார்
    தலைவர்க்குந் தலைவர் தாமே. 4.44.3
    437 பூத்தபொற் கொன்றை மாலை
    புரிசடைக் கணிந்த செல்வர்
    தீர்த்தமாங் கங்கை யாளைத்
    திருமுடி திகழ வைத்து
    ஏத்துவார் ஏத்த நின்ற
    ஏகம்பம் மேவி னாரை
    வாழ்த்துமா றறிய மாட்டேன்
    மால்கொடு மயங்கி னேனே. 4.44.4
    438 மையினார் மலர்நெ டுங்கண்
    மங்கையோர் பங்க ராகிக்
    கையிலோர் கபாலம் ஏந்திக்
    கடைதொறும் பலிகொள் வார்தாம்
    எய்வதோர் ஏனம் ஓட்டி
    ஏகம்பம் மேவி னாரைக்
    கையினாற் றொழவல் லார்க்குக்
    கடுவினை களைய லாமே. 4.44.5
    439 தருவினை மருவுங் கங்கை
    தங்கிய சடையன் எங்கள்
    அருவினை அகல நல்கும்
    அண்ணலை அமரர் போற்றுந்
    திருவினைத் திருவே கம்பஞ்
    செப்பிட உறைய வல்ல
    உருவினை உருகி ஆங்கே
    உள்ளத்தால் உகக்கின் றேனே. 4.44.6
    440 கொண்டதோர் கோல மாகிக்
    கோலக்கா வுடைய கூத்தன்
    உண்டதோர் நஞ்ச மாகில்
    உலகெலாம் உய்ய உண்டான்
    எண்டிசை யோரும் ஏத்த
    நின்றஏ கம்பன் றன்னைக்
    கண்டுநான் அடிமை செய்வான்
    கருதியே திரிகின் றேனே. 4.44.7
    441 படமுடை அரவி னோடு
    பனிமதி யதனைச் சூடிக்
    கடமுடை யுரிவை மூடிக்
    கண்டவர் அஞ்ச அம்ம
    இடமுடைக் கச்சி தன்னுள்
    ஏகம்பம் மேவி னான்றன்
    நடமுடை யாடல் காண
    ஞாலந்தான் உய்ந்த வாறே. 4.44.8
    442 பொன்றிகழ் கொன்றை மாலை
    பொருந்திய நெடுந்தண் மார்பர்
    நன்றியிற் புகுந்தெ னுள்ளம்
    மெள்ளவே நவில நின்று
    குன்றியில் அடுத்த மேனிக்
    குவளையங் கண்டர் எம்மை
    இன்றுயில் போது கண்டார்
    இனியர்ஏ கம்ப னாரே. 4.44.9
    443 துருத்தியார் பழனத் துள்ளார்
    தொண்டர்கள் பலரும் ஏத்த
    அருத்தியால் அன்பு செய்வார்
    அவரவர்க் கருள்கள் செய்தே
    எருத்தினை இசைய ஏறி
    ஏகம்பம் மேவி னார்க்கு
    வருத்திநின் றடிமை செய்வார்
    வல்வினை மாயு மன்றே. 4.44.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book