MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.49 திருக்குறுக்கை - திருநேரிசை
    476 ஆதியிற் பிரம னார்தாம்
    அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
    ஓதிய வேத நாவர்
    உணருமா றுணர லுற்றார்
    சோதியுட் சுடராய்த் தோன்றிச்
    சொல்லினை யிறந்தார் பல்பூக்
    கோதிவண் டறையுஞ் சோலைக்
    குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.1
    477 நீற்றினை நிறையப் பூசி
    நித்தலும் நியமஞ் செய்து
    ஆற்றுநீர் பூரித் தாட்டும்
    அந்தண னாரைக் கொல்வான்
    சாற்றுநாள் அற்ற தென்று
    தருமரா சற்காய் வந்த
    கூற்றினைக் குமைப்பர் போலுங்
    குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.2
    478 தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
    தாபர மணலாற் கூப்பி
    அழைத்தங்கே ஆவின் பாலைக்
    கறந்துகொண் டாட்டக் கண்டு
    பிழைத்ததன் றாதை தாளைப்
    பெருங்கொடு மழுவால் வீசக்
    குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
    குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.3
    479 சிலந்தியும் ஆனைக் காவிற்
    திருநிழற் பந்தர் செய்து
    உலந்தவண் இறந்த போதே
    கோச்செங்க ணானு மாகக்
    கலந்தநீர்க் காவி ரிசூழ்
    சோணாட்டுச் சோழர் தங்கள்
    குலந்தனிற் பிறப்பித் திட்டார்
    குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.4
    480 ஏறுடன் ஏழ டர்த்தான்
    எண்ணியா யிரம்பூக் கொண்டு
    ஆறுடைச் சடையி னானை
    அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்
    வேறுமோர் பூக்கு றைய
    மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
    கூறுமோர் ஆழி ஈந்தார்
    குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.5
    481 கல்லினால் எறிந்து கஞ்சி
    தாமுணுஞ் சாக்கி யனார்
    நெல்லினார் சோறு ணாமே
    நீள்விசும் பாள வைத்தார்
    எல்லியாங் கெரிகை ஏந்தி
    எழில்திகழ் நட்ட மாடிக்
    கொல்லியாம் பண்ணு கந்தார்
    குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.6
    482 காப்பதோர் வில்லும் அம்புங்
    கையதோர் இறைச்சிப் பாரந்
    தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத்
    தூயவாய்க் கலசம் ஆட்டித்
    தீப்பெருங் கண்கள் செய்யக்
    குருதிநீர் ஒழுகத் தன்கண்
    கோப்பதும் பற்றிக் கொண்டார்
    குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.7
    483 நிறைமறைக் காடு தன்னில்
    நீண்டெரி தீபந் தன்னைக்
    கறைநிறத் தெலிதன் மூக்குச்
    சுட்டிடக் கனன்று தூண்ட
    நிறைகடல் மண்ணும் விண்ணும்
    நீண்டவா னுலக மெல்லாங்
    குறைவறக் கொடுப்பர் போலுங்
    குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.8
    484 அணங்குமை பாக மாக
    அடக்கிய ஆதி மூர்த்தி
    வணங்குவார் இடர்கள் தீர்க்கும்
    மருந்துநல் அருந்த வத்த
    கணம்புல்லர்க் கருள்கள் செய்து
    காதலாம் அடியார்க் கென்றுங்
    குணங்களைக் கொடுப்பர் போலுங்
    குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.9
    485 எடுத்தனன் எழிற் கயிலை
    இலங்கையர் மன்னன் தன்னை
    அடுத்தொரு விரலால் ஊன்ற
    அலறிப்போய் அவனும் வீழ்ந்து
    விடுத்தனன் கைந ரம்பால்
    வேதகீ தங்கள் பாடக்
    கொடுத்தனர் கொற்ற வாணாள்
    குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - ஞானாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book