MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.53 திருவாரூர் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    508 குழல்வலங் கொண்ட சொல்லாள்
    கோலவேற் கண்ணி தன்னைக்
    கழல்வலங் கொண்டு நீங்காக்
    கணங்களக் கணங்க ளார
    அழல்வலங் கொண்ட கையான்
    அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
    தொழல்வலங் கொண்டல் செய்வான்
    தோன்றினார் தோன்றி னாரே. 4.53.1
    509 நாகத்தை நங்கை அஞ்ச
    நங்கையை மஞ்ஞை யென்று
    வேகத்தைத் தவிர நாகம்
    வேழத்தின் உரிவை போர்த்துப்
    பாகத்தின் நிமிர்தல் செய்யாத்
    திங்களை மின்னென் றஞ்சி
    ஆகத்திற் கிடந்த நாகம்
    அடங்கும்ஆ ரூர னார்க்கே. 4.53.2
    510 தொழுதகங் குழைய மேவித்
    தோட்டிமை யுடைய தொண்டர்
    அழுதகம் புகுந்து நின்றார்
    அவரவர் போலும் ஆரூர்
    எழிலக நடுவெண் முத்த
    மன்றியும் ஏர்கொள் வேலிப்
    பொழிலகம் விளங்கு திங்கட்
    புதுமுகிழ் சூடி னாரே. 4.53.3
    511 நஞ்சிருள் மணிகொள் கண்டர்
    நகையிருள் ஈமக் கங்குல்
    வெஞ்சுடர் விளக்கத் தாடி
    விளங்கினார் போலும் மூவா
    வெஞ்சுடர் முகடு தீண்டி
    வெள்ளிநா ராச மன்ன
    அஞ்சுடர் அணிவெண் டிங்கள்
    அணியும்ஆ ரூர னாரே. 4.53.4
    512 எந்தளிர் நீர்மை கோல
    மேனியென் றிமையோ ரேத்தப்
    பைந்தளிர்க் கொம்ப ரன்ன
    படர்கொடி பயிலப் பட்டுத்
    தஞ்சடைத் தொத்தி னாலுந்
    தம்மதோர் நீர்மை யாலும்
    அந்தளிர் ஆகம் போலும்
    வடிவர்ஆ ரூர னாரே. 4.53.5
    513 வானகம் விளங்க மல்கும்
    வளங்கெழு மதியஞ் சூடித்
    தானக மழிய வந்து
    தாம்பலி தேர்வர் போலும்
    ஊனகங் கழிந்த ஓட்டில்
    உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
    ஆனகம் அஞ்சும் ஆடும்
    அடிகள்ஆ ரூர னாரே. 4.53.6
    514 அஞ்சணை கணையி னானை
    அழலுற அன்று நோக்கி
    அஞ்சணை குழலி னாளை
    அமுதமா அணைந்து நக்கு
    அஞ்சணை அஞ்சும் ஆடி
    ஆடர வாட்டு வார்தாம்
    அஞ்சணை வேலி ஆரூர்
    ஆதரித் திடங்கொண் டாரே. 4.53.7
    515 வணங்கிமுன் அமரர் ஏத்த
    வல்வினை யான தீரப்
    பிணங்குடைச் சடையில் வைத்த
    பிறையுடைப் பெருமை யண்ணல்
    மணங்கம ழோதி பாகர்
    மதிநிலா வட்டத் தாடி
    அணங்கொடி மாட வீதி
    ஆரூரெம் அடிக ளாரே. 4.53.8
    516 நகலிடம் பிறர்கட் காக
    நான்மறை யோர்கள் தங்கள்
    புகலிட மாகி வாழும்
    புகலிலி இருவர் கூடி
    இகலிட மாக நீண்டங்
    கீண்டெழில் அழல தாகி
    அகலிடம் பரவி யேத்த
    அடிகள்ஆ ரூர னாரே. 4.53.9
    517 ஆயிரந் திங்கள் மொய்த்த
    அலைகடல் அமுதம் வாங்கி
    ஆயிரம் அசுரர் வாழும்
    அணிமதில் மூன்றும் வேவ
    ஆயிரந் தோளும் மட்டித்
    தாடிய அசைவு தீர
    ஆயிரம் அடியும் வைத்த
    அடிகள்ஆ ரூர னாரே. 4.53.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book