MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.54 திருப்புகலூர் - திருநேரிசை
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    518 பகைத்திட்டார் புரங்கள் மூன்றும்
    பாறிநீ றாகி வீழப்
    புகைத்திட்ட தேவர் கோவே
    பொறியிலேன் உடலந் தன்னுள்
    அகைத்திட்டங் கதனை நாளும்
    ஐவர்கொண் டாட்ட வாடித்
    திகைத்திட்டேன் செய்வ தென்னே
    திருப்புக லூர னீரே. 4.54.1
    519 மையரி மதர்த்த ஒண்கண்
    மாதரார் வலையிற் பட்டுக்
    கையெரி சூல மேந்துங்
    கடவுளை நினைய மாட்டேன்
    ஐநெரிந் தகமி டற்றே
    அடைக்கும்போ தாவி யார்தாஞ்
    செய்வதொன் றறிய மாட்டேன்
    திருப்புக லூர னீரே. 4.54.2
    520 முப்பதும் முப்பத் தாறும்
    முப்பதும் இடுகு ரம்பை
    அப்பர்போல் ஐவர் வந்து
    அதுதரு கிதுவி டென்று
    ஒப்பவே நலிய லுற்றால்
    உய்யுமா றறிய மாட்டேன்
    செப்பமே திகழு மேனித்
    திருப்புக லூர னீரே. 4.54.3
    521 பொறியிலா அழுக்கை யோம்பிப்
    பொய்யினை மெய்யென் றெண்ணி
    நெறியலா நெறிகள் சென்றேன்
    நீதனேன் நீதி யேதும்
    அறிவிலேன் அமரர் கோவே
    அமுதினை மண்ணில் வைக்குஞ்
    செறிவிலேன் செய்வ தென்னே
    திருப்புக லூர னீரே. 4.54.4
    522 அளியினார் குழலி னார்கள்
    அவர்களுக் கன்ப தாகிக்
    களியினார் பாடல் ஓவாக்
    கடவூர்வீ ரட்ட மென்னுந்
    தளியினார் பாத நாளும்
    நினைவிலாத் தகவில் நெஞ்சந்
    தெளிவிலேன் செய்வ தென்னே
    திருப்புக லூர னீரே. 4.54.5
    523 இலவினார் மாதர் பாலே
    இசைந்துநான் இருந்து பின்னும்
    நிலவுநாள் பலவென் றெண்ணி
    நீதனேன் ஆதி உன்னை
    உலவிநான் உள்க மாட்டேன்
    உன்னடி பரவு ஞானஞ்
    செலவிலேன் செய்வ தென்னே
    திருப்புக லூர னீரே. 4.54.6
    524 காத்திலேன் இரண்டும் மூன்றுங்
    கல்வியேல் இல்லை என்பால்
    வாய்த்திலேன் அடிமை தன்னுள்
    வாய்மையால் தூயே னல்லேன்
    பார்த்தனுக் கருள்கள் செய்த
    பரமனே பரவு வார்கள்
    தீர்த்தமே திகழும் பொய்கைத்
    திருப்புக லூர னீரே. 4.54.7
    525 நீருமாய்த் தீயு மாகி
    நிலனுமாய் விசும்பு மாகி
    ஏருடைக் கதிர்க ளாகி
    இமையவர் இறைஞ்ச நின்று
    ஆய்வதற் கரிய ராகி
    அங்கங்கே யாடு கின்ற
    தேவர்க்குந் தேவ ராவார்
    திருப்புக லூர னாரே. 4.54.8
    526 மெய்யுளே விளக்கை ஏற்றி
    வேண்டள வுயரத் தூண்டி
    உய்வதோர் உபாயம் பற்றி
    உகக்கின்றேன் உகவா வண்ணம்
    ஐவரை அகத்தே வைத்தீர்
    அவர்களே வலியர் சாலச்
    செய்வதொன் றறிய மாட்டேன்
    திருப்புக லூர னீரே. 4.54.9
    527 அருவரை தாங்கி னானும்
    அருமறை யாதி யானும்
    இருவரும் அறிய மாட்டா
    ஈசனார் இலங்கை வேந்தன்
    கருவரை எடுத்த ஞான்று
    கண்வழி குருதி சோரத்
    திருவிரல் சிறிது வைத்தார்
    திருப்புக லூர னாரே. 4.54.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அக்கினீசுவரர்,
    தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book