MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.59 திருஅவளிவணல்லூர் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    568 தோற்றினான் எயிறு கவ்வித்
    தொழிலுடை யரக்கன் றன்னைத்
    தேற்றுவான் சென்று சொல்லச்
    சிக்கெனத் தவிரு மென்று
    வீற்றினை யுடைய னாகி
    வெடுவெடுத் தெழுந்த வன்றன்
    ஆற்றலை அழிக்க வல்லார்
    அவளிவ ணல்லூ ராரே. 4.59.1
    569 வெம்பினா ரரக்க ரெல்லாம்
    மிகச்சழக் காயிற் றென்று
    செம்பினா லெடுத்த கோயில்
    சிக்கெனச் சிதையு மென்ன
    நம்பினா ரென்று சொல்லி
    நன்மையான் மிக்கு நோக்கி
    அம்பினால் அழிய வெய்தார்
    அவளிவ ணல்லூ ராரே. 4.59.2
    570 கீழ்ப்படக் கருத லாமோ
    கீர்த்திமை யுள்ள தாகிற்
    தோட்பெரு வலியி னாலே
    தொலைப்பன்யான் மலையை யென்று
    வேட்பட வைத்த வாறே
    விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து
    ஆட்படக் கருதிப் புக்கார்
    அவளிவ ணல்லூ ராரே. 4.59.3
    571 நிலைவலம் வல்ல னல்லன்
    நேர்மையை நினைய மாட்டான்
    சிலைவலங் கொண்ட செல்வன்
    சீரிய கயிலை தன்னைத்
    தலைவலங் கருதிப் புக்குத்
    தாக்கினான் தன்னை யன்று
    அலைகுலை யாக்கு வித்தார்
    அவளிவ ணல்லூ ராரே. 4.59.4
    572 தவ்வலி யொன்ற னாகித்
    தனதொரு பெருமை யாலே
    மெய்வ்வலி யுடைய னென்று
    மிகப்பெருந் தேரை யூர்ந்து
    செவ்வலி கூர்வி ழியாற்
    சிரமத்தான் எடுக்குற் றானை
    அவ்வலி தீர்க்க வல்லார்
    அவளிவ ணல்லூ ராரே. 4.59.5
    573 நன்மைதான் அறிய மாட்டான்
    நடுவிலா அரக்கர் கோமான்
    வன்மையே கருதிச் சென்று
    வலிதனைச் செலுத்த லுற்றுக்
    கன்மையான் மலையை யோடிக்
    கருதித்தான் எடுத்து வாயால்
    அம்மையோ வென்ன வைத்தார்
    அவளிவ ணல்லூ ராரே. 4.59.6
    574 கதம்படப் போது வார்கள்
    போதுமக் கருத்தி னாலே
    சிதம்பட நின்ற நீர்கள்
    சிக்கெனத் தவிரு மென்று
    மதம்படு மனத்த னாகி
    வன்மையான் மிக்கு நோக்க
    அதம்பழத் துருவு செய்தார்
    அவளிவ ணல்லூ ராரே. 4.59.7
    575 நாடுமிக் குழிதர் கின்ற
    நடுவிலா அரக்கர் கோனை
    ஓடுமிக் கென்று சொல்லி
    ஊன்றினான் உகிரி னாலே
    பாடுமிக் குய்வ னென்று
    பணியநற் றிறங்கள் காட்டி
    ஆடுமிக் கரவம் பூண்டார்
    அவளிவ ணல்லூ ராரே. 4.59.8
    576 ஏனமா யிடந்த மாலும்
    எழில்தரு முளரி யானும்
    ஞானந்தா னுடைய ராகி
    நன்மையை அறிய மாட்டார்
    சேனந்தான் இலாவ ரக்கன்
    செழுவரை எடுக்க வூன்றி
    ஆனந்த அருள்கள் செய்தார்
    அவளிவ ணல்லூ ராரே. 4.59.9
    577 ஊக்கினான் மலையை யோடி
    உணர்விலா அரக்கன் றன்னைத்
    தாக்கினான் விரலி னாலே
    தலைபத்துந் தகர வூன்றி
    நோக்கினான் அஞ்சத் தன்னை
    நோன்பிற வூன்று சொல்லி
    ஆக்கினார் அமுத மாக
    அவளிவ ணல்லூ ராரே. 4.59.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சாட்சிநாயகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book