MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.60 திருப்பெருவேளூர் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    578 மறையணி நாவி னானை
    மறப்பிலார் மனத்து ளானைக்
    கறையணி கண்டன் றன்னைக்
    கனலெரி யாடி னானைப்
    பிறையணி சடையி னானைப்
    பெருவேளூர் பேணி னானை
    நறையணி மலர்கள் தூவி
    நாடொறும் வணங்கு வேனே. 4.60.1
    579 நாதனாய் உலக மெல்லாம்
    நம்பிரான் எனவும் நின்ற
    பாதனாம் பரம யோகி
    பலபல திறத்தி னாலும்
    பேதனாய்த் தோன்றி னானைப்
    பெருவேளூர் பேணி னானை
    ஓதநா வுடைய னாகி
    உரைக்குமா றுரைக்கின் றேனே. 4.60.2
    580 குறவிதோள் மணந்த செல்வக்
    குமரவேள் தாதை யென்று
    நறவிள நறுமென் கூந்தல்
    நங்கையோர் பாகத் தானைப்
    பிறவியை மாற்று வானைப்
    பெருவேளூர் பேணி னானை
    உறவினால் வல்ல னாகி
    உணருமா றுணர்த்து வேனே. 4.60.3
    581 மைஞ்ஞவில் கண்டன் றன்னை
    வலங்கையின் மழுவொன் றேந்திக்
    கைஞ்ஞவில் மானி னோடுங்
    கனலெரி யாடி னானைப்
    பிஞ்ஞகன் றன்னை அந்தண்
    பெருவேளூர் பேணி னானைப்
    பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப்
    பொறியிலா அறிவி லேனே. 4.60.4
    582 ஓடைசேர் நெற்றி யானை
    உரிவையை மூடி னானை
    வீடதே காட்டு வானை
    வேதநான் காயி னானைப்
    பேடைசேர் புறவ நீங்காப்
    பெருவேளூர் பேணி னானைக்
    கூடநான் வல்ல மாற்றங்
    குறுகுமா றறிகி லேனே. 4.60.5
    583 கச்சைசேர் நாகத் தானைக்
    கடல்விடங் கண்டத் தானைக்
    கச்சியே கம்பன் றன்னைக்
    கனலெரி யாடு வானைப்
    பிச்சைசேர்ந் துழல்வி னானைப்
    பெருவேளூர் பேணி னானை
    இச்சைசேர்ந் தமர நானும்
    இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே. 4.60.6
    584 சித்தராய் வந்து தன்னைத்
    திருவடி வணங்கு வார்கள்
    முத்தனை மூர்த்தி யாய
    முதல்வனை முழுது மாய
    பித்தனைப் பிறரு மேத்தப்
    பெருவேளூர் பேணி னானை
    மெத்தனே யவனை நாளும்
    விரும்புமா றறிகி லேனே. 4.60.7
    585 முண்டமே தாங்கி னானை
    முற்றிய ஞானத் தானை
    வண்டுலாங் கொன்றை மாலை
    வளர்மதிக் கண்ணி யானைப்
    பிண்டமே ஆயி னானைப்
    பெருவேளூர் பேணி னானை
    அண்டமாம் ஆதி யானை
    அறியுமா றறிகி லேனே. 4.60.8
    586 விரிவிலா அறிவி னார்கள்
    வேறொரு சமயஞ் செய்து
    எரிவினாற் சொன்னா ரேனும்
    எம்பிராற் கேற்ற தாகும்
    பரிவினாற் பெரியோ ரேத்தும்
    பெருவேளூர் பற்றி னானை
    மருவிநான் வாழ்த்தி உய்யும்
    வகையது நினைக்கின் றேனே. 4.60.9
    587 பொருகடல் இலங்கை மன்னன்
    உடல்கெடப் பொருத்தி நல்ல
    கருகிய கண்டத் தானைக்
    கதிரிளங் கொழுந்து சூடும்
    பெருகிய சடையி னானைப்
    பெருவேளூர் பேணி னானை
    உருகிய அடிய ரேத்தும்
    உள்ளத்தால் உள்கு வேனே. 4.60.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பிரியாதநாதர், தேவியார் - மின்னனையாளம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book