MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.61 திருஇராமேச்சுரம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    588 பாசமுங் கழிக்க கில்லா
    அரக்கரைப் படுத்துத் தக்க
    வாசமிக் கலர்கள் கொண்டு
    மதியினால் மால்செய் கோயில்
    நேசமிக் கன்பி னாலே
    நினைமின்நீர் நின்று நாளுந்
    தேசமிக் கான் இருந்த
    திருஇரா மேச்சு ரமே. 4.61.1
    589 முற்றின நாள்கள் என்று
    முடிப்பதே கார ணமாய்
    உற்றவன் போர்க ளாலே
    உணர்விலா அரக்கர் தம்மைச்
    செற்றமால் செய்த கோயில்
    திருஇரா மேச்சு ரத்தைப்
    பற்றிநீ பரவு நெஞ்சே
    படர்சடை ஈசன் பாலே. 4.61.2
    590 கடலிடை மலைகள் தம்மால்
    அடைத்துமால் கருமம் முற்றித்
    திடலிடைச் செய்த கோயில்
    திருஇரா மேச்சு ரத்தைத்
    தொடலிடை வைத்து நாவிற்
    சுழல்கின்றேன் தூய்மை யின்றி
    உடலிடை நின்றும் பேரா
    ஐவர்ஆட் டுண்டு நானே. 4.61.3
    591 குன்றுபோல் தோளு டைய
    குணமிலா அரக்கர் தம்மைக்
    கொன்றுபோ ராழி யம்மால்
    வேட்கையாற் செய்த கோயில்
    நன்றுபோல் நெஞ்ச மேநீ
    நன்மையை அறிதி யாயிற்
    சென்றுநீ தொழுதுய் கண்டாய்
    திருஇரா மேச்சு ரமே. 4.61.4
    592 வீரமிக் கெயிறு காட்டி
    விண்ணுற நீண்ட ரக்கன்
    கூரமிக் கவனைச் சென்று
    கொன்றுடன் கடற் படுத்துத்
    தீரமிக் கானி ருந்த
    திருஇரா மேச்சு ரத்தைக்
    கோரமிக் கார்த வத்தாற்
    கூடுவார் குறிப்பு ளாரே. 4.61.5
    593 ஆர்வலம் நம்மின் மிக்கார்
    என்றஅவ் வரக்கர் கூடிப்
    போர்வலஞ் செய்து மிக்குப்
    பொருதவர் தம்மை வீட்டித்
    தேர்வலஞ் செற்ற மால்செய்
    திருஇரா மேச்சு ரத்தைச்
    சேர்மட நெஞ்ச மேநீ
    செஞ்சடை எந்தை பாலே. 4.61.6
    594 வாக்கினால் இன்பு ரைத்து
    வாழ்கிலார் தம்மை யெல்லாம்
    போக்கினாற் புடைத்த வர்கள்
    உயிர்தனை யுண்டு மால்தான்
    தேக்குநீர் செய்த கோயில்
    திருஇரா மேச்சு ரத்தை
    நோக்கினால் வணங்கு வார்க்கு
    நோய்வினை நுணுகு மன்றே. 4.61.7
    595 பலவுநாள் தீமை செய்து
    பார்தன்மேற் குழுமி வந்து
    கொலைவிலார் கொடிய ராய
    அரக்கரைக் கொன்று வீழ்த்தச்
    சிலையினான் செய்த கோயில்
    திருஇரா மேச்சு ரத்தைத்
    தலையினால் வணங்கு வார்கள்
    தாழ்வராந் தவம தாமே. 4.618
    596 கோடிமா தவங்கள் செய்து
    குன்றினார் தம்மை யெல்லாம்
    வீடவே சக்க ரத்தால்
    எறிந்துபின் அன்பு கொண்டு
    தேடிமால் செய்த கோயில்
    திருஇரா மேச்சு ரத்தை
    நாடிவாழ் நெஞ்ச மேநீ
    நன்னெறி யாகு மன்றே. 4.61.9
    597 வன்கண்ணர் வாள ரக்கர்
    வாழ்வினை யொன்ற றியார்
    புன்கண்ண ராகி நின்று
    போர்கள்செய் தாரை மாட்டிச்
    செங்கண்மால் செய்த கோயில்
    திருஇரா மேச்சு ரத்தைத்
    தங்கணால் எய்த வல்லார்
    தாழ்வராந் தலைவன் பாலே. 4.61.10
    598 வரைகளொத் தேயு யர்ந்த
    மணிமுடி அரக்கர் கோனை
    விரையமுற் றறவொ டுக்கி
    மீண்டுமால் செய்த கோயில்
    திரைகள்முத் தால்வ ணங்குந்
    திருஇரா மேச்சு ரத்தை
    உரைகள்பத் தாலு ரைப்பார்
    உள்குவார் அன்பி னாலே. 4.61.11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - இராமலிங்கேசுவரர்; தேவியார் - பருவதவர்த்தனியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book