MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.62 திருவாலவாய் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    599 வேதியா வேத கீதா
    விண்ணவர் அண்ணா என்றென்
    றோதியே மலர்கள் தூவி
    ஒடுங்கிநின் கழல்கள் காணப்
    பாதியோர் பெண்ணை வைத்தாய்
    படர்சடை மதியஞ் சூடும்
    ஆதியே ஆல வாயில்
    அப்பனே அருள்செ யாயே. 4.62.1
    600 நம்பனே நான்மு கத்தாய்
    நாதனே ஞான மூர்த்தி
    என்பொனே ஈசா என்றென்
    றேத்திநான் ஏசற் றென்றும்
    பின்பினே திரிந்து நாயேன்
    பேர்த்தினிப் பிறவா வண்ணம்
    அன்பனே ஆலவாயில் அப்பனே
    அருள் செயாயே. 4.62.2
    601 ஒருமருந் தாகி யுள்ளாய்
    உம்பரோ டுலகுக் கெல்லாம்
    பெருமருந் தாகி நின்றாய்
    பேரமு தின்சு வையாய்க்
    கருமருந் தாகி யுள்ளாய்
    ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
    அருமருந் தால வாயில்
    அப்பனே அருள்செ யாயே. 4.62.3
    602 செய்யநின் கமல பாதஞ்
    சேருமா தேவர் தேவே
    மையணி கண்டத் தானே
    மான்மறி மழுவொன் றேந்துஞ்
    சைவனே சால ஞானங்
    கற்றறி விலாத நாயேன்
    ஐயனே ஆல வாயில்
    அப்பனே அருள்செ யாயே. 4.62.4
    603 வெண்டலை கையி லேந்தி
    மிகவுமூர் பலிகொண் டென்றும்
    உண்டது மில்லை சொல்லில்
    உண்டது நஞ்சு தன்னைப்
    பண்டுனை நினைய மாட்டாப்
    பளகனேன் உளம தார
    அண்டனே ஆல வாயில்
    அப்பனே அருள்செ யாயே. 4.62.5
    604 எஞ்சலில் புகலி தென்றென்
    றேத்திநான் ஏசற் றென்றும்
    வஞ்சக மொன்று மின்றி
    மலரடி காணும் வண்ணம்
    நஞ்சினை மிடற்றில் வைத்த
    நற்பொருட் பதமே நாயேற்
    கஞ்சலென் றால வாயில்
    அப்பனே அருள்செ யாயே. 4.62.6
    605 வழுவிலா துன்னை வாழ்த்தி
    வழிபடுந் தொண்ட னேன்உன்
    செழுமலர்ப் பாதங் காணத்
    தெண்டிரை நஞ்ச முண்ட
    குழகனே கோல வில்லீ
    கூத்தனே மாத்தா யுள்ள
    அழகனே ஆல வாயில்
    அப்பனே அருள்செ யாயே. 4.62.7
    606 நறுமலர் நீருங் கொண்டு
    நாடொறு மேத்தி வாழ்த்திச்
    செறிவன சித்தம் வைத்துத்
    திருவடி சேரும் வண்ணம்
    மறிகடல் வண்ணன் பாகா
    மாமறை யங்க மாறும்
    அறிவனே ஆல வாயில்
    அப்பனே அருள்செ யாயே. 4.62.8
    607 நலந்திகழ் வாயின் நூலாற்
    சருகிலைப் பந்தர் செய்த
    சிலந்தியை அரச தாள
    அருளினாய் என்று திண்ணங்
    கலந்துடன் வந்து நின்றாள்
    கருதிநான் காண்ப தாக
    அலந்தனன் ஆல வாயில்
    அப்பனே அருள்செ யாயே. 4.62.9
    608 பொடிக்கொடு பூசிப் பொல்லாக்
    குரம்பையிற் புந்தி யொன்றிப்
    பிடித்துநின் றாள்க ளென்றும்
    பிதற்றிநா னிருக்க மாட்டேன்
    எடுப்பனென் றிலங்கைக் கோன்வந்
    தெடுத்தலும் இருப துதோள்
    அடர்த்தனே ஆல வாயில்
    அப்பனே அருள்செ யாயே. 4.62.10

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சொக்கநாதேசுவரர், தேவியார் - மீனாட்சியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book