MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.63 திருவண்ணாமலை - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    609 ஓதிமா மலர்கள் தூவி
    உமையவள் பங்கா மிக்க
    சோதியே துளங்கும் எண்டோ ள்
    சுடர்மழுப் படையி னானே
    ஆதியே அமரர் கோவே
    அணியணா மலையு ளானே
    நீதியால் நின்னை யல்லால்
    நினையுமா நினைவி லேனே. 4.63.1
    610 பண்டனை வென்ற இன்சொற்
    பாவையோர் பங்க நீல
    கண்டனே கார்கொள் கொன்றைக்
    கடவுளே கமல பாதா
    அண்டனே அமரர் கோவே
    அணியணா மலையு ளானே
    தொண்டனேன் உன்னை அல்லாற்
    சொல்லுமா சொல்லி லேனே. 4.63.2
    611 உருவமும் உயிரு மாகி
    ஓதிய உலகுக் கெல்லாம்
    பெருவினை பிறப்பு வீடாய்
    நின்றவெம் பெருமான் மிக்க
    அருவிபொன் சொரியும் அண்ணா
    மலையுளாய் அண்டர் கோவே
    மருவிநின் பாத மல்லான்
    மற்றொரு மாடி லேனே. 4.63.3
    612 பைம்பொனே பவளக் குன்றே
    பரமனே பால்வெண் ணீற்றாய்
    செம்பொனே மலர்செய் பாதா
    சீர்தரு மணியே மிக்க
    அம்பொனே கொழித்து வீழும்
    அணியணா மலையு ளானே
    என்பொனே உன்னை யல்லால்
    யாதும்நான் நினைவி லேனே. 4.63.4
    613 பிறையணி முடியி னானே
    பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
    மறைவலா இறைவா வண்டார்
    கொன்றையாய் வாம தேவா
    அறைகழல் அமர ரேத்தும்
    அணியணா மலையு ளானே
    இறைவனே உன்னை யல்லா
    லியாதுநான் நினைவி லேனே. 4.63.5
    614 புரிசடை முடியின் மேலோர்
    பொருபுனற் கங்கை வைத்துக்
    கரியுரி போர்வை யாகக்
    கருதிய கால காலா
    அரிகுலம் மலிந்த அண்ணா
    மலையுளாய் அலரின் மிக்க
    வரிமிகு வண்டு பண்செய்
    பாதநான் மறப்பி லேனே. 4.63.6
    615 இரவியும் மதியும் விண்ணும்
    இருநிலம் புனலுங் காற்றும்
    உரகமார் பவனம் எட்டுந்
    திசையொளி உருவ மானாய்
    அரவுமிழ் மணிகொள் சோதி
    அணியணா மலையு ளானே
    பரவுநின் பாத மல்லாற்
    பரமநான் பற்றி லேனே. 4.63.7
    616 பார்த்தனுக் கன்று நல்கிப்
    பாசுப தத்தை ஈந்தாய்
    நீர்த்ததும் புலாவு கங்கை
    நெடுமுடி நிலாவ வைத்தாய்
    ஆர்த்துவந் தீண்டு கொண்டல்
    அணியணா மலையு ளானே
    தீர்த்தனே நின்றன் பாதத்
    திறமலாற் றிறமி லேனே. 4.63.8
    617 பாலுநெய் முதலா மிக்க
    பசுவில்ஐந் தாடு வானே
    மாலுநான் முகனுங் கூடிக்
    காண்கிலா வகையுள் நின்றாய்
    ஆலுநீர் கொண்டல் பூகம்
    அணியணா மலையு ளானே
    வாலுடை விடையாய் உன்றன்
    மலரடி மறப்பி லேனே. 4.63.9
    618 இரக்கமொன் றியாது மில்லாக்
    காலனைக் கடிந்த எம்மான்
    உரத்தினால் வரையை ஊக்க
    ஒருவிரல் நுதியி னாலே
    அரக்கனை நெரித்த அண்ணா
    மலையுளாய் அமர ரேறே
    சிரத்தினால் வணங்கி யேத்தித்
    திருவடி மறப்பி லேனே. 4.63.10

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அருணாசலேசுவரர், தேவியார் - உண்ணாமுலையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book