MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.69 திருக்கோவலூர்வீரட்டம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    669 செத்தையேன் சிதம்ப நாயேன்
    செடியனேன் அழுக்குப் பாயும்
    பொத்தையே போற்றி நாளும்
    புகலிடம் அறிய மாட்டேன்
    எத்தைநான் பற்றி நிற்கேன்
    இருளற நோக்க மாட்டாக்
    கொத்தையேன் செய்வ தென்னே
    கோவல்வீ ரட்ட னீரே. 4.69.1
    670 தலைசுமந் திருகை நாற்றித்
    தரணிக்கே பொறைய தாகி
    நிலையிலா நெஞ்சந் தன்னுள்
    நித்தலும் ஐவர் வேண்டும்
    விலைகொடுத் தறுக்க மாட்டேன்
    வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
    குலைகொள்மாங் கனிகள் சிந்தும்
    கோவல்வீ ரட்ட னீரே. 4.69.2
    671 வழித்தலைப் படவு மாட்டேன்
    வைகலுந் தூய்மை செய்து
    பழித்திலேன் பாச மற்றுப்
    பரமநான் பரவ மாட்டேன்
    இழித்திலேன் பிறவி தன்னை
    என்னினைந் திருக்க மாட்டேன்
    கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க்
    கோவல்வீ ரட்ட னீரே. 4.69.3
    672 சாற்றுவர் ஐவர் வந்து
    சந்தித்த குடிமை வேண்டிக்
    காற்றுவர் கனலப் பேசிக்
    கண்செவி மூக்கு வாயுள்
    ஆற்றுவர் அலந்து போனேன்
    ஆதியை அறிவொன் றின்றிக்
    கூற்றுவர் வாயிற் பட்டேன்
    கோவல்வீ ரட்ட னீரே. 4.69.4
    673 தடுத்திலேன் ஐவர் தம்மைத்
    தத்துவத் துயர்வு நீர்மைப்
    படுத்திலேன் பரப்பு நோக்கிப்
    பன்மலர்ப் பாத முற்ற
    அடுத்திலேன் சிந்தை யார
    ஆர்வலித் தன்பு திண்ணங்
    கொடுத்திலேன் கொடிய வாநான்
    கோவல்வீ ரட்ட னீரே. 4.69.5
    674 மாச்செய்த குரம்பை தன்னை
    மண்ணிடை மயக்க மெய்து
    நாச்செய்து நாலு மைந்தும்
    நல்லன வாய்தல் வைத்துக்
    காச்செய்த காயந் தன்னுள்
    நித்தலும் ஐவர் வந்து
    கோச்செய்து குமைக்க வாற்றேன்
    கோவல்வீ ரட்ட னீரே. 4.69.6
    675 படைகள்போல் வினைகள் வந்து
    பற்றியென் பக்கல் நின்றும்
    விடகிலா வாத லாலே
    விகிர்தனை விரும்பி யேத்தும்
    இடையிலேன் என்செய் கேன்நான்
    இரப்பவர் தங்கட் கென்றுங்
    கொடையிலேன் கொள்வ தேநான்
    கோவல்வீ ரட்ட னீரே. 4.69.7
    676 பிச்சிலேன் பிறவி தன்னைப்
    பேதையேன் பிணக்க மென்னுந்
    துச்சுளே அழுந்தி வீழ்ந்து
    துயரமே இடும்பை தன்னுள்
    அச்சனாய் ஆதி மூர்த்திக்
    கன்பனாய் வாழ மாட்டாக்
    கொச்சையேன் செய்வ தென்னே
    கோவல்வீ ரட்ட னீரே. 4.69.8
    677 நிணத்திடை யாக்கை பேணி
    நியமஞ்செய் திருக்க மாட்டேன்
    மணத்திடை ஆட்டம் பேசி
    மக்களே சுற்ற மென்னுங்
    கணத்திடை ஆட்டப் பட்டுக்
    காதலால் உன்னைப் பேணுங்
    குணத்திடை வாழ மாட்டேன்
    கோவல்வீ ரட்ட னீரே. 4.69.9
    678 விரிகடல் இலங்கைக் கோனை
    வியன்கயி லாயத் தின்கீழ்
    இருபது தோளும் பத்துச்
    சிரங்களும் நெறிய வூன்றிப்
    பரவிய பாடல் கேட்டுப்
    படைகொடுத் தருளிச் செய்தார்
    குரவொடு கோங்கு சூழ்ந்த
    கோவல்வீ ரட்ட னாரே. 4.69.10

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீரட்டேசநாதர், தேவியார் - சிவாநந்தவல்லி.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book