MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.70 திருநனிபள்ளி - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    679 முற்றுணை யாயி னானை
    மூவர்க்கு முதல்வன் றன்னைச்
    சொற்றுணை ஆயி னானைச்
    சோதியை ஆத ரித்து
    உற்றுணர்ந் துருகி யூறி
    உள்கசி வுடைய வர்க்கு
    நற்றுணை யாவர் போலும்
    நனிபள்ளி அடிக ளாரே. 4.70.1
    680 புலர்ந்தகால் பூவும் நீருங்
    கொண்டடி போற்ற மாட்டா
    வலஞ்செய்து வாயின் நூலால்
    வட்டணைப் பந்தர் செய்த
    சிலந்தியை அரைய னாக்கிச்
    சீர்மைகள் அருள வல்லார்
    நலந்திகழ் சோலை சூழ்ந்த
    நனிபள்ளி அடிக ளாரே. 4.70.2
    681 எண்பதும் பத்தும் ஆறு
    மென்னுளே இருந்து மன்னிக்
    கண்பழக் கொன்று மின்றிக்
    கலக்கநான் அலக்க ழிந்தேன்
    செண்பகந் திகழும் புன்னை
    செழுந்திரட் குரவம் வேங்கை
    நண்புசெய் சோலை சூழ்ந்த
    நனிபள்ளி அடிக ளாரே. 4.70.3
    682 பண்ணினார் பாட லாகிப்
    பழத்தினில் இரத மாகிக்
    கண்ணினார் பார்வை யாகிக்
    கருத்தொடு கற்ப மாகி
    எண்ணினார் எண்ண மாகி
    ஏழுல கனைத்து மாகி
    நண்ணினார் வினைகள் தீர்ப்பார்
    நனிபள்ளி அடிக ளாரே. 4.70.4
    683 துஞ்சிருள் காலை மாலை
    தொடர்ச்சியை மறந் திராதே
    அஞ்செழுத் தோதின் நாளும்
    அரனடிக் கன்ப தாகும்
    வஞ்சனைப் பால்சோ றாக்கி
    வழக்கிலா அமணர் தந்த
    நஞ்சமு தாக்கு வித்தார்
    நனிபள்ளி அடிக ளாரே. 4.70.5
    684 செம்மலர்க் கமலத் தோனுந்
    திருமுடி காண மாட்டான்
    அம்மலர்ப் பாதங் காண்பான்
    ஆழியான் அகழ்ந்துங் காணான்
    நின்மலன் என்றங் கேத்தும்
    நினைப்பினை அருளி நாளும்
    நம்மலம் அறுப்பர் போலும்
    நனிபள்ளி அடிக ளாரே. 4.70.6
    685 அரவத்தால் வரையைச் சுற்றி
    அமரரோ டசுரர் கூடி
    அரவித்துக் கடையத் தோன்றும்
    ஆலநஞ் சமுதா வுண்டார்
    விரவித்தம் அடிய ராகி
    வீடிலாத் தொண்டர் தம்மை
    நரகத்தில் வீழ வொட்டார்
    நனிபள்ளி அடிக ளாரே. 4.70.7
    686 மண்ணுளே திரியும் போது
    வருவன பலவுங் குற்றம்
    புண்ணுளே புரைபு ரையன்
    புழுப்பொதி பொள்ள லாக்கை
    ----- ----- ----- -----
    இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின்
    பின்னிரண்டடிகளும் 9-ம்செய்யுளும்
    மறைந்து போயின. 4.70.8-9
    687 பத்துமோர் இரட்டி தோளான்
    பாரித்து மலையெ டுக்கப்
    பத்துமோர் இரட்டி தோள்கள்
    படருடம் படர வூன்றிப்
    பத்துவாய் கீதம் பாடப்
    பரிந்தவற் கருள்கொ டுத்தார்
    பத்தர்தாம் பரவி யேத்தும்
    நனிபள்ளிப் பரம னாரே. 4.70.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நற்றுணையப்பர், தேவியார் - பர்வதராசபுத்திரி.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book