MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.75 தனித் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    726 தொண்டனேன் பட்ட தென்னே
    தூயகா விரியின் நன்னீர்
    கொண்டிருக் கோதி யாட்டிக்
    குங்குமக் குழம்பு சாத்தி
    இண்டைகொண் டேற நோக்கி
    ஈசனை எம்பி ரானைக்
    கண்டனைக் கண்டி ராதே
    காலத்தைக் கழித்த வாறே. 4.75.1
    727 பின்னிலேன் முன்னி லேன்நான்
    பிறப்பறுத் தருள்செய் வானே
    என்னிலேன் நாயி னேன்நான்
    இளங்கதிர்ப் பயலைத் திங்கட்
    சின்னிலா எறிக்குஞ் சென்னிச்
    சிவபுரத் தமர ரேறே
    நின்னலால் களைகண் ஆரே
    நீறுசே ரகலத் தானே. 4.75.2
    728 கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க்
    காலத்தைக் கழித்துப் போக்கித்
    தெள்ளியே னாகி நின்று
    தேடினேன் நாடிக் கண்டேன்
    உள்குவார் உள்கிற் றெல்லாம்
    உடனிருந் தறிதி யென்று
    வெள்கினேன் வெள்கி நானும்
    விலாவிறச் சிரித்திட் டேனே. 4.75.3
    729 உடம்பெனு மனைய கத்துள்
    உள்ளமே தகளி யாக
    மடம்படும் உணர்நெய் யட்டி
    உயிரெனுந் திரிம யக்கி
    இடம்படு ஞானத் தீயால்
    எரிகொள இருந்து நோக்கில்
    கடம்பமர் காளை தாதை
    கழலடி காண லாமே. 4.75.4
    730 வஞ்சப்பெண் ணரங்கு கோயில்
    வாளெயிற் றரவந் துஞ்சா
    வஞ்சப்பெண் இருந்த சூழல்
    வான்றவழ் மதியந் தோயும்
    வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன்
    வாழ்வினை வாழ லுற்று
    வஞ்சப்பெண் ணுறக்க மானேன்
    வஞ்சனேன் என்செய் கேனே. 4.75.5
    731 உள்குவார் உள்ளத் தானை
    உணர்வெனும் பெருமை யானை
    உள்கினேன் நானுங் காண்பான்
    உருகினேன் ஊறி யூறி
    எள்கினேன் எந்தை பெம்மான்
    இருதலை மின்னு கின்ற
    கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம்
    எங்ஙனங் கூடு மாறே. 4.75.6
    732 மோத்தையைக் கண்ட காக்கை
    போலவல் வினைகள் மொய்த்துன்
    வார்த்தையைப் பேச வொட்டா
    மயக்கநான் மயங்கு கின்றேன்
    சீத்தையைச் சிதம்பு தன்னைச்
    செடிகொள்நோய் வடிவொன் றில்லா
    ஊத்தையைக் கழிக்கும் வண்ணம்
    உணர்வுதா உலக மூர்த்தீ. 4.75.7
    733 அங்கத்தை மண்ணுக் காக்கி
    ஆர்வத்தை உனக்கே தந்து
    பங்கத்தைப் போக மாற்றிப்
    பாவித்தேன் பரமா நின்னைs
    சங்கொத்த மேனிச் செல்வா
    சாதல்நாள் நாயேன் உன்னை
    எங்குற்றாய் என்ற போதா
    இங்குற்றேன் என்கண் டாயே. 4.75.8
    734 வெள்ளநீர்ச் சடைய னார்தாம்
    வினவுவார் போல வந்தென்
    உள்ளமே புகுந்து நின்றார்க்
    குறங்குநான் புடைகள் போந்து
    கள்ளரோ புகுந்தீ ரென்னக்
    கலந்துதான் நோக்கி நக்கு
    வெள்ளரோ மென்று நின்றார்
    விளங்கிளம் பிறைய னாரே. 4.75.9
    735 பெருவிரல் இறைதா னூன்ற
    பிறையெயி றிலங்க அங்காந்
    தருவரை அனைய தோளான்
    அரக்கனன் றலறி வீழ்ந்தான்
    இருவரும் ஒருவ னாய
    உருவமங் குடைய வள்ளல்
    திருவடி சுமந்து கொண்டு
    காண்கநான் திரியு மாறே. 4.75.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book