MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.77 தனித் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    746 கடும்பகல் நட்ட மாடிக்
    கையிலோர் கபால மேந்தி
    இடும்பலிக் கில்லந் தோறு
    முழிதரும் இறைவ னீரே
    நெடும்பொறை மலையர் பாவை
    நேரிழை நெறிமென் கூந்தற்
    கொடுங்குழை புகுந்த வன்றுங்
    கோவண மரைய தேயோ. 4.77.1
    747 கோவண முடுத்த வாறுங்
    கோளர வசைத்த வாறுந்
    தீவணச் சாம்பர் பூசித்
    திருவுரு இருந்த வாறும்
    பூவணக் கிழவ னாரைப்
    புலியுரி அரைய னாரை
    ஏவணச் சிலையி னாரை
    யாவரே எழுது வாரே. 4.77.2
    748 விளக்கினாற் பெற்ற இன்பம்
    மெழுக்கினாற் பதிற்றி யாகுந்
    துளக்கில்நன் மலர்தொ டுத்தால்
    தூயவிண் ணேற லாகும்
    விளக்கிட்டார் பேறு சொல்லின்
    மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
    அளப்பில கீதஞ் சொன்னார்க்
    கடிகள்தாம் அருளு மாறே. 4.77.3
    749 சந்திரற் சடையில் வைத்த
    சங்கரன் சாம வேதி
    அந்தரத் தமரர் பெம்மான்
    ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்
    மந்திரம் நமச்சி வாய
    ஆகநீ றணியப் பெற்றால்
    வெந்தறும் வினையும் நோயும்
    வெவ்வழல் விறகிட் டன்றே. 4.77.4
    750 புள்ளுவர் ஐவர் கள்வர்
    புனத்திடைப் புகுந்து நின்று
    துள்ளுவர் சூறை கொள்வர்
    தூநெறி விளைய வொட்டார்
    முள்ளுடை யவர்கள் தம்மை
    முக்கணான் பாத நீழல்
    உள்ளிடை மறைந்து நின்றங்
    குணர்வினா லெய்ய லாமே. 4.77.5
    751 தொண்டனேன் பிறந்து வாளா
    தொல்வினைக் குழியில் வீழ்ந்து
    பிண்டமே சுமந்து நாளும்
    பெரியதோர் அவாவிற் பட்டேன்
    அண்டனே அமரர் கோவே
    அறிவனே அஞ்ச லென்னாய்
    தெண்டிரைக் கங்கை சூடுந்
    திகழ்தரு சடையி னானே. 4.77.6
    752 பாறினாய் பாவி நெஞ்சே
    பன்றிபோல் அளற்றிற் பட்டுத்
    தேறிநீ நினைதி யாயின்
    சிவகதி திண்ண மாகும்
    ஊறலே உவர்ப்பு நாறி
    உதிரமே யொழுகும் வாசல்
    கூறையால் மூடக் கண்டு
    கோலமாக் கருதி னாயே. 4.77.7
    இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள்
    சிதைந்து போயின. 4.77.8-9
    753 உய்த்தகால் உதயத் தும்பர்
    உமையவள் நடுக்கந் தீர
    வைத்தகா லரக்க னோதன்
    வான்முடி தனக்கு நேர்ந்தான்
    மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள்
    மூர்த்தியெ னுச்சி தன்மேல்
    வைத்தகால் வருந்து மென்று
    வாடிநான் ஒடுங்கி னேனே. 4.77.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book