MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.80 கோயில் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    770 பாளையு டைக்கமு கோங்கிப்பன்
    மாடம்நெ ருங்கியெங்கும்
    வாளையு டைப்புனல் வந்தெறி
    வாழ்வயல் தில்லைதன்னுள்
    ஆளவு டைக்கழற் சிற்றம்ப
    லத்தரன் ஆடல்கண்டாற்
    பீளையு டைக்கண்க ளாற்பின்னைப்
    பேய்த்தொண்டர் காண்பதென்னே. 4.80.1
    771 பொருவிடை யொன்றுடைப் புண்ணிய
    மூர்த்தி புலியதளன்
    உருவுடை யம்மலை மங்கைம
    ணாளன் உலகுக்கெல்லாந்
    திருவுடை அந்தணர் வாழ்கின்ற
    தில்லைச்சிற் றம்பலவன்
    திருவடி யைக்கண்ட கண்கொண்டு
    மற்றினிக் காண்பதென்னே. 4.80.2
    772 தொடுத்த மலரொடு தூபமுஞ்
    சாந்துங்கொண் டெப்பொழுதும்
    அடுத்து வணங்கும் அயனொடு
    மாலுக்குங் காண்பரியான்
    பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய
    தில்லைச்சிற் றம்பலவன்
    உடுத்த துகில்கண்ட கண்கொண்டு
    மற்றினிக் காண்பதென்னே. 4.80.3
    773 வைச்ச பொருள்நமக் காகுமென்
    றெண்ணி நமச்சிவாய
    அச்ச மொழிந்தேன் அணிதில்லை
    யம்பலத் தாடுகின்ற
    பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி
    உந்தியின் மேலசைத்த
    கச்சின் அழகுகண் டாற்பின்னைக்
    கண்கொண்டு காண்பதென்னே. 4.80.4
    774 செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற
    தில்லைச்சிற் றம்பலவன்
    மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்
    கண்டு மகிழ்ந்துநிற்க
    நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த
    நீல மணிமிடற்றான்
    கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக்
    கண்கொண்டு காண்பதென்னே. 4.80.5
    775 ஊனத்தை நீக்கி உலகறிய
    என்னை யாட்கொண்டவன்
    தேனொத் தெனக்கினி யான்தில்லைச்
    சிற்றம் பலவனெங்கோன்
    வானத் தவருய்ய வன்னஞ்சை
    யுண்டகண் டத்திலங்கும்
    ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக்
    கண்கொண்டு காண்பதென்னே. 4.80.6
    776 தெரித்த கணையாற் திரிபுர
    மூன்றுஞ்செந் தீயின்மூழ்க
    எரித்த இறைவன் இமையவர்
    கோமான் இணையடிகள்
    தரித்த மனத்தவர் வாழ்கின்ற
    தில்லைச்சிற் றம்பலவன்
    சிரித்த முகங்கண்ட கண்கொண்டு
    மற்றினிக் காண்பதென்னே. 4.80.7
    777 சுற்று மமரர் சுரபதி
    நின்திருப் பாதமல்லால்
    பற்றொன் றிலோமென் றழைப்பப்
    பரவையுள் நஞ்சையுண்டான்
    செற்றங் கனங்கனைத் தீவிழித்
    தான்றில்லை யம்பலவன்
    நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு
    மற்றினிக் காண்பதென்னே. 4.80.8
    778 சித்தத் தெழுந்த செழுங்கம
    லத்தன்ன சேவடிகள்
    வைத்த மனத்தவர் வாழ்கின்ற
    தில்லைச்சிற் றம்பலவன்
    முத்தும் வயிரமும் மாணிக்கந்
    தன்னுள் விளங்கியதூ
    மத்த மலர்கண்ட கண்கொண்டு
    மற்றினிக் காண்பதென்னே. 4.80.9
    779 தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி
    யுன்னித் தடவரையை
    வரைக்கை களாலெடுத் தார்ப்ப
    மலைமகள் கோன்சிரித்து
    அரக்கன் மணிமுடி பத்தும்
    அணிதில்லை யம்பலவன்
    நெருக்கி மிதித்த விரல்கண்ட
    கண்கொண்டு காண்பதென்னே. 4.80.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர்,
    தேவியார் - சிவகாமியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book