MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.81 கோயில் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    780 கருநட்ட கண்டனை அண்டத்
    தலைவனைக் கற்பகத்தைச்
    செருநட்ட மும்மதி லெய்யவல்
    லானைச்செந் தீமுழங்கத்
    திருநட்ட மாடியைத் தில்லைக்
    கிறையைச்சிற் றம்பலத்துப்
    பெருநட்ட மாடியை வானவர்
    கோனென்று வாழ்த்துவனே. 4.81.1
    781 ஒன்றி யிருந்து நினைமின்கள்
    உந்தமக் கூனமில்லை
    கன்றிய காலனைக் காலாற்
    கடிந்தான் அடியவற்காச்
    சென்று தொழுமின்கள் தில்லையுட்
    சிற்றம் பலத்துநட்டம்
    என்றுவந் தாயெனும் எம்பெரு
    மான்றன் திருக்குறிப்பே. 4.81.2
    782 கன்மன வீர்கழி யுங்கருத்
    தேசொல்லிக் காண்பதென்னே
    நன்மன வர்நவில் தில்லையுட்
    சிற்றம் பலத்துநட்டம்
    பொன்மலை யில்வெள்ளிக் குன்றது
    போலப் பொலிந்திலங்கி
    என்மன மேயொன்றிப் புக்கனன்
    போந்த சுவடில்லையே. 4.81.3
    783 குனித்த புருவமுங் கொவ்வைச்செவ்
    வாயிற் குமிண்சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம்போல்
    மேனியிற் பால்வெண்ணீறும்
    இனித்த முடைய எடுத்தபொற்
    பாதமுங் காணப்பெற்றால்
    மனித்தப் பிறவியும் வேண்டுவதே
    இந்த மாநிலத்தே. 4.81.4
    784 வாய்த்தது நந்தமக் கீதோர்
    பிறவி மதித்திடுமின்
    பார்த்தற்குப் பாசு பதமருள்
    செய்தவன் பத்தருள்ளீர்
    கோத்தன்று முப்புரந் தீவளைத்
    தான்றில்லை யம்பலத்துக்
    கூத்தனுக் காட்பட் டிருப்பதன்
    றோநந்தங் கூழைமையே. 4.81.5
    785 பூத்தன பொற்சடை பொன்போல்
    மிளிரப் புரிகணங்கள்
    ஆர்த்தன கொட்டி யரித்தன
    பல்குறட் பூதகணந்
    தேத்தென வென்றிசை வண்டுகள்
    பாடுசிற் றம்பலத்துக்
    கூத்தனிற் கூத்துவல் லாருள
    ரோவென்றன் கோல்வளைக்கே. 4.81.6
    786 முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்
    நோக்கும் முறுவலிப்புந்
    துடிகொண்ட கையுந் துதைந்தவெண்
    ணீறுஞ் சுரிகுழலாள்
    படிகொண்ட பாகமும் பாய்புலித்
    தோலுமென் பாவிநெஞ்சிற்
    குடிகொண்ட வாதில்லை யம்பலக்
    கூத்தன் குரைகழலே. 4.81.7
    787 படைக்கல மாகவுன் னாமத்
    தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
    இடைக்கல மல்லேன் எழுபிறப்
    பும்முனக் காட்செய்கின்றேன்
    துடைக்கினும் போகேன் தொழுது
    வணங்கித்தூ நீறணிந்துன்
    அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச்
    சிற்றம் பலத்தரனே. 4.81.8
    788 பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ
    றணிந்து புரிசடைகள்
    மின்னொத் திலங்கப் பலிதேர்ந்
    துழலும் விடங்கவேடச்
    சின்னத்தி னான்மலி தில்லையுட்
    சிற்றம் பலத்துநட்டம்
    என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற
    தாலிவ் விருநிலமே. 4.81.9
    789 சாட எடுத்தது தக்கன்றன்
    வேள்வியிற் சந்திரனை
    வீட எடுத்தது காலனை
    நாரணன் நான்முகனுந்
    தேட எடுத்தது தில்லையுட்
    சிற்றம் பலத்துநட்டம்
    ஆட எடுத்திட்ட பாதமன்
    றோநம்மை யாட்கொண்டதே. 4.81.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book