MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.82 திருக்கழுமலம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    790 பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட
    ஞான்றுநின் பாதமெல்லாம்
    நாலஞ்சு புள்ளினம் ஏந்தின
    என்பர் நளிர்மதியங்
    கால்கொண்ட வண்கைச் சடைவிரித்
    தாடுங் கழுமலவர்க்
    காளன்றி மற்றுமுண் டோ அந்த
    ணாழி அகலிடமே. 4.82.1
    791 கடையார் கொடிநெடு மாடங்க
    ளெங்குங் கலந்திலங்க
    உடையா னுடைதலை மாலையுஞ்
    சூடி உகந்தருளி
    விடைதா னுடையவவ் வேதியன்
    வாழுங் கழுமலத்துள்
    அடைவார் வினைக ளவையெள்க
    நாடொறும் ஆடுவரே. 4.82.2
    792 திரைவாய்ப் பெருங்கடல் முத்தங்
    குவிப்ப முகந்துகொண்டு
    நுரைவாய் நுளைச்சிய ரோடிக்
    கழுமலத் துள்ளழுந்தும்
    விரைவாய் நறுமலர் சூடிய
    விண்ணவன் றன்னடிக்கே
    வரையாப் பரிசிவை நாடொறும்
    நந்தமை யாள்வனவே. 4.82.3
    793 விரிக்கும் அரும்பதம் வேதங்க
    ளோதும் விழுமியநூல்
    உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்
    கேட்கில் உலகமுற்றும்
    இரிக்கும் பறையொடு பூதங்கள்
    பாடக் கழுமலவன்
    நிருத்தம் பழம்படி யாடுங்
    கழல்நம்மை ஆள்வனவே. 4.82.4
    794 சிந்தித் தெழுமன மேநினை
    யாமுன் கழுமலத்தைப்
    பந்தித்த வல்வினை தீர்க்க
    வல்லானைப் பசுபதியைச்
    சந்தித்த கால மறுத்துமென்
    றெண்ணி யிருந்தவர்க்கு
    முந்தித் தொழுகழல் நாடொறும்
    நந்தம்மை ஆள்வனவே. 4.82.5
    795 நிலையும் பெருமையும் நீதியுஞ்
    சால அழகுடைத்தாய்
    அலையும் பெருவெள்ளத் தன்று
    மிதந்தவித் தோணிபுரஞ்
    சிலையில் திரிபுரம் மூன்றெரித்
    தார்தங் கழுமலவர்
    அலருங் கழலடி நாடொறும்
    நந்தமை ஆள்வனவே. 4.82.6
    796 முற்றிக் கிடந்துமுந் நீரின்
    மிதந்துடன் மொய்த்தமரர்
    சுற்றிக் கிடந்து தொழப்படு
    கின்றது சூழரவந்
    தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந்
    துன்றிவெண் திங்கள்சூடுங்
    கற்றைச் சடைமுடி யார்க்கிட
    மாய கழுமலமே. 4.82.7
    797 உடலும் உயிரும் ஒருவழிச்
    செல்லும் உலகத்துள்ளே
    அடையும் உனைவந் தடைந்தார்
    அமரர் அடியிணைக்கீழ்
    நடையும் விழவொடு நாடொறும்
    மல்கும் கழுமலத்துள்
    விடையன் தனிப்பதம் நாடொறும்
    நந்தமை ஆள்வனவே. 4.82.8
    798 பரவைக் கடல்நஞ்ச முண்டது
    மில்லையிப் பார்முழுதும்
    நிரவிக் கிடந்து தொழப்படு
    கின்றது நீண்டிருவர்
    சிரமப் படவந்து சார்ந்தார்
    கழலடி காண்பதற்கே
    அரவக் கழலடி நாடொறும்
    நந்தமை ஆள்வனவே. 4.82.9
    799 கரையார் கடல்சூழ் இலங்கையர்
    கோன்றன் முடிசிதறத்
    தொலையா மலரடி ஊன்றலும்
    உள்ளம் விதிர்விதிர்த்துத்
    தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன்
    கழுமலங் காண்பதற்கே
    அலையாப் பரிசிவை நாடொறும்
    நந்தமை ஆள்வனவே. 4.82.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பிரமபுரீசர், தேவியார் - திருநிலைநாயகி.
    திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book