MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.88 திருப்பூந்துருத்தி - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    843 மாலினை மாலுற நின்றான்
    மலைமகள் தன்னுடைய
    பாலனைப் பான்மதி சூடியைப்
    பண்புண ரார்மதின்மேற்
    போலனைப் போர்விடை யேறியைப்
    பூந்துருத் திமகிழும்
    ஆலனை ஆதிபு ராணனை
    நானடி போற்றுவதே. 4.88.1
    844 மறியுடை யான்மழு வாளினன்
    மாமலை மங்கையோர்பால்
    குறியுடை யான்குண மொன்றறிந்
    தாரில்லை கூறிலவன்
    பொறியுடை வாளர வத்தவன்
    பூந்துருத் தியுறையும்
    அறிவுடை ஆதி புராணனை
    நானடி போற்றுவதே. 4.88.2
    845 மறுத்தவர் மும்மதில் மாயவோர்
    வெஞ்சிலை கோத்தோரம்பால்
    அறுத்தனை ஆலதன் கீழனை
    ஆல்விட முண்டதனைப்
    பொறுத்தனைப் பூதப் படையனைப்
    பூந்துருத் தியுறையும்
    நிறத்தனை நீல மிடற்றனை
    யானடி போற்றுவதே. 4.88.3
    846 உருவினை ஊழி முதல்வனை
    ஓதி நிறைந்துநின்ற
    திருவினைத் தேசம் படைத்தனைச்
    சென்றடைந் தேனுடைய
    பொருவினை யெல்லாந் துரந்தனைப்
    பூந்துருத் தியுறையுங்
    கருவினைக் கண்மூன் றுடையனை
    யானடி போற்றுவதே. 4.88.4
    847 தக்கன்றன் வேள்வி தகர்த்தவன்
    சார மதுவன்றுகோள்
    மிக்கன மும்மதில் வீயவோர்
    வெஞ்சிலை கோத்தோரம்பால்
    புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர்
    பூந்துருத் தியுறையும்
    நக்கனை நங்கள் பிரான்றனை
    நானடி போற்றுவதே. 4.88.5
    848 அருகடை மாலையுந் தானுடை
    யான்அழ காலமைந்த
    உருவுடை மங்கையுந் தன்னொரு
    பாலுல காயுநின்றான்
    பொருபடை வேலினன் வில்லினன்
    பூந்துருத் தியுறையுந்
    திருவுடைத் தேச மதியனை
    யானடி போற்றுவதே. 4.88.6
    849 மன்றியுந் நின்ற மதிலரை
    மாய வகைகெடுக்கக்
    கன்றியுந் நின்று கடுஞ்சிலை
    வாங்கிக் கனலம்பினாற்
    பொன்றியும் போகப் புரட்டினன்
    பூந்துருத் தியுறையும்
    அன்றியுஞ் செய்த பிரான்றனை
    யானடி போற்றுவதே. 4.88.7
    850 மின்னிறம் மிக்க இடையுமை
    நங்கையோர் பான்மகிழ்ந்தான்
    என்னிற மென்றம ரர்பெரி
    யாரின்னந் தாமறியார்
    பொன்னிற மிக்க சடையவன்
    பூந்துருத் தியுறையும்
    என்னிற வெந்தை பிரான்றனை
    யானடி போற்றுவதே. 4.88.8
    851 அந்தியை நல்ல மதியினை
    யார்க்கும் அறிவரிய
    செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை
    சென்றடைந் தேனுடைய
    புந்தியைப் புக்க அறிவினை
    பூந்துருத் தியுறையும்
    நந்தியை நங்கள் பிரான்றனை
    நானடி போற்றுவதே. 4.88.9
    852 பைக்கையும் பாந்தி விழிக்கையும்
    பாம்பு சடையிடையே
    வைக்கையும் வானிழி கங்கையும்
    மங்கை நடுக்குறவே
    மொய்க்கை அரக்கனை யூன்றினன்
    பூந்துருத் தியுறையும்
    மிக்கநல் வேத விகிர்தனை
    நானடி போற்றுவதே. 4.88.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book