MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    4.91 திருவையாறு - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    873 குறுவித்த வாகுற்ற நோய்வினை
    காட்டிக் குறுவித்தநோய்
    உறுவித்த வாவுற்ற நோய்வினை
    தீர்ப்பான் உகந்தருளி
    அறிவித்த வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
    செறிவித்த வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே. 4.91.1
    874 கூர்வித்த வாகுற்ற நோய்வினை
    காட்டியுங் கூர்வித்தநோய்
    ஊர்வித்த வாவுற்ற நோய்வினை
    தீர்ப்பான் உகந்தருளி
    ஆர்வித்த வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
    சேர்வித்த வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே. 4.91.2
    875 தாக்கின வாசல மேவினை
    காட்டியுந் தண்டித்தநோய்
    நீக்கின வாநெடு நீரினின்
    றேற நினைந்தருளி
    ஆக்கின வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
    நோக்கின வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே. 4.91.3
    876 தருக்கின நான்றக வின்றியு
    மோடச் சலமதனால்
    நெருக்கின வாநெடு நீரினின்
    றேற நினைந்தருளி
    உருக்கின வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
    பெருக்கின வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே. 4.91.4
    877 இழிவித்த வாறிட்ட நோய்வினை
    காட்டி இடர்ப்படுத்துக்
    கழிவித்த வாகட்ட நோய்வினை
    தீர்ப்பான் கலந்தருளி
    அழிவித்த வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
    தொழுவித்த வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே. 4.91.5
    878 இடைவித்த வாறிட்ட நோய்வினை
    காட்டி இடர்ப்படுத்து
    உடைவித்த வாறுற்ற நோய்வினை
    தீர்ப்பான் உகந்தருளி
    அடைவித்த வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
    தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே. 4.91.6
    879 படக்கின வாபட நின்றுபன்
    னாளும் படக்கினநோய்
    அடக்கின வாறது வன்றியுந்
    தீவினை பாவமெல்லாம்
    அடக்கின வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
    தொடக்கின வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே. 4.91.7
    880 மறப்பித்த வாவல்லை நோய்வினை
    காட்டி மறப்பித்தநோய்
    துறப்பித்த வாதுக்க நோய்வினை
    தீர்ப்பான் உகந்தருளி
    இறப்பித்த வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
    சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே. 4.91.8
    881 துயக்கின வாதுக்க நோய்வினை
    காட்டித் துயக்கினநோய்
    இயக்கின வாறிட்ட நோய்வினை
    தீர்ப்பான் இசைந்தருளி
    அயக்கின வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
    மயக்கின வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே. 4.91.9
    882 கறுத்துமிட் டார்கண்டங் கங்கை
    சடைமேற் கரந்தருளி
    இறுத்துமிட் டார்இலங் கைக்கிறை
    தன்னை இருபதுதோள்
    அறுத்துமிட் டாரடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
    பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே. 4.91.10

    திருச்சிற்றம்பலம்

    Goto Main book