MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    கோயிற்புராண மூலமும் உரையும்.

    காப்பு.

    பொற்பதப்பொதுவார்புலியூர்புகழ்..
    ரற்பகற்றொழவாழணிகோபுரக் .. ..
    கற்பகத்தனியானைகழல்களே .. .. ..

    இதன் பொருள்.
    சுத்தாத்மாக்கள் வாதனையால் மயக்க விகற்பமேலிடாமல் இரவும்பகலும் வணங்க விளங்கும்
    மேலைக்கோபுரமுன்புறத்து வாழ்ந்தருளும் ஒப்பற்றயானைமுகமுள்ள கற்பகவிநாயகருடைய
    திருவடிகள் கனகமயமாக அழகுள்ள ஞானசபைபொருந்திய பெரும் பற்றப்புலியூரின்மான்மியத்தைப்
    புகழுஞ் செய்யுட்பதங்கடோறும்பொருளாய் விளங்குவன--என்றவாறு.

    சிதம்பரமான்மியம்
    கூறுஞ்செய்யுட்பதங்களுக்குப் பொருளாய் நிகழ்வது
    அருளென்பதுதேற்றம்.

    பொற்பதப் பொருளென்பதற்கு நடேசமூர்த்தியின் செங்கமலப் பொற்பாதங்களுக்கு இடமாகிய
    ஞானசபையெனப் பொருள்கூறினும் அமையும். தேவர்கள் வேண்டும் பொருள்களைக்
    கொடுக்குங் கற்பக விருக்ஷம்போல் ஈண்டு அடியார்கள் வேண்டும் பொருள்களைப்
    பாலித்தருள்வதினால் கற்பக விநாயகரெனக் காரணப் பெயராய் நின்றது.

    சிவமயம்.
    திருச்சிற்றம்பலம்.

    கோயிற்புராணம் மூலமுமுரையும்
    பாயிரம். (1-28)

    நடேசர்துதி.

    பூங்கமலத்தயனுமலர்ப் புண்டரிகக்கண்ணானுந்
    தாங்குபலபுவனமுமேற் சகலமுமாயகலாத
    வோங்குமொளிவெளியேநின் றுலகுதொழநடமாடுந்
    தேங்கமழும்பொழிற்றில்லைத் திருச்சிற்றம்பலம்போற்றி.

    இதன்பொருள்.
    பொலிவினையுடைத்தாகிய தாமரை மலர்மீதிலிருக்கும் பிரமனும் தாமரை மலர் போன்ற
    கண்ணினையுடைய மாயனும் (இவர்களாலே) சிருட்டித்துத் தாங்கப்படுகிற புவனங்களும்
    இதற்குமேலான புவனங்களும் (மந்திரபதவனன தத்துவ கலாரூபங்களுமாகிய இவைகளை)
    நீங்காம னிறைந்திருக்கிற மிக்க பிரகாசமான சிவம் திரோதான நீங்கிநின்று
    சர்வாத்துமாக்களுங்கண்டு தொழும்படிக்கு நிருத்தஞ் செய்யும் மணங்கமழாநின்ற சோலைகளாற்
    சூழப்பட்ட தில்லைத் திருச்சிற்றம்பலத்தைப் போற்றுகின்றேன்--என்றவாறு. (1-1)
    -----------
    திரோதானம் - மறைப்பு.

    ஆரணங்கண் முடிந்தபதத் தானந்த வொளியுலகிற்
    காரணங்கற் பனைகடந்த கருணைதிரு வுருவாகிப்
    பேரணங்கி னுடனாடும் பெரும்பற்றப் புலியூர்சேர்
    சீரணங்கு மணிமாடத் திருச்சிற்றம் பலம்போற்றி

    இ-ள். பாசசால முடிந்த சிவபூமியில் ஒழியாத சுகப்பிரகாசமான சிவம் உலகத்திற்றனக்கு
    வோறொரு பிரதான காரணமும் நிமித்த காரணமுங் கடந்திருக்கிற காருண்ணியமே
    திருமேனியாகக் கொண்டு பரையினுடனே நிருத்தஞ் செய்யும் பெரும்பற்றப்
    புலியூரென்றுபொருந்தின அழகிய திவ்விய இரத்தினங்களினாலே குயிற்றிய
    மாடங்கள் சூழ்ந்த திருச்சிற்றம்பலத்தைப் போற்றுகின்றேன்-எ-று

    சுகப்பிரகாசமான சிவங் காருண்யரூபியாய் பூரண ஞானத்தை யதிட்டித்து நிருத்தஞ்
    செய்யும் புலியூர்ச் சிற்றம்பலமெனக் கூட்டுக- பேரணங்கென்று மிகுத்துக் கூறியவதனாற்
    சத்தியினுடைய விருத்திமேலே யருளிச் செய்கிறார். (1-2)

    தற்பரமாய்ப் பரபதமாய்த் தாவிலனு பூதியதா
    யற்புதமா யாரமுதா யானந்த நிலயவொளிப்
    பொற்பினதாய்ப் பிறிவிலதாய்ப் பொருளாகி யருளாகுஞ்
    சிற்பரமா மம்பரமாந் திருச்சிற்றம் பலம்போற்றி.

    இ-ள் அதிசூக்குமமாய் மேலான பதங்களுக்கு மேலானதாய் குற்றமில்லாத
    அனுபவசித்தமாதலால் க்ஷுமமாய் ஆச்சரிய விருத்தியினாலே பூரணமாய் நிறைந்தவமுதமாய்
    (திரோதானநீங்கின) ஆநந்த ருத்தப் பிரகாசமாய் நேயத்தைநீக்க மில்லாமையாற்
    சாந்தியாய் வஸ்துமாத்திரமாதலால் பொருளாகி ஆலசியமற்று ஆதியந்தமு மில்லாமையால்)
    அருளாகும் ஞானச் சொல்லுக்குமேலா மம்பரமாகி இப்படியே சொல்லுஞ் சத்திரூபமாகிய
    திருச்சிற்றம்பலத்தைப் போற்றுகின்றேன்-எ-று.

    சிற்பரமா மம்பரமாமென்பது-சிதம்பரமென்றுகண்டுகொள்க, இதற்கு- ஆகம பிரமாணமுண்டு
    வருகிறபடிகேட்டறிக. (1-3)

    வையகமின் புறநின்ற மருமலிபொற் பதம்போற்றி
    கையமரு நிலைபோற்றி கருணைமுக மலர்போற்றி
    மெய்யிலகு மொளிபோற்றி விரவியெனை யெடுத்தாண்ட
    செய்யதிரு வடிபோற்றி திருச்சிற்றம் பலம்போற்றி

    இ-ள் வையகத்தோர்க்கு மலபாக சுகப்பிராப்தியுண்டாக நின்றருளிய மணங்கமழ்ந்து
    பொலிவினையுடைத்தாகிய திருவடிகளைப் போற்றுகிறேன் (இதுசிருட்டி) ஆன்மாக்கள்
    கன்ம சீவனத்தில் மிகுதி குறைவறவமைத்தருளிய திருக்கரத்தைப் போற்றுகிறேன்,
    (இது திதி) தரிசித்த மாத்திரத்திலே கரண சூனியம் பிறப்பிக்குங் காருண்ணியத்தையுடைய
    திருமுகமண்டலப் பிரசன்னத்தைப் போற்றுகிறேன், (இது சங்காரம்) அருளாகிய திருமேனியில்
    விளங்குகின்ற ஒளியைப் போற்றுகிறேன், (இது திரோபவம்) கேவல சகலத்திலும் பொருந்தி
    அவைகளிலாழாமல் என்னையெடுத்தாண்டு கொண்டருளிய சிவந்த திருவடிகளைப்போற்றுகிறேன்,
    (இது அனுக்கிரகம்) ஸ்ரீபரமாதாயமான ஞானசபையைப் போற்றுகின்றேன்.- எ-று. (1-4)

    சிவகாமியம்மை துதி.

    மன்றின்மணி விளக்கெனலா மருவுமுகங் கைபோற்றி
    யொன்றியமங் கலநாணி னொளிபோற்றி யுலகும்பர்
    சென்றுதொழ வருள்சுரக்குஞ் சிவகாம சுந்தரித
    னின்றதிரு நிலைபோற்றி நிலவுதிரு வடிபோற்றி.

    இ-ள் சிவகாமசுந்தரியின் கனகசபையிலிட்ட இரத்தின தீபம் போலப் பொருந்தின திருமுக
    மண்டலப் பிரசன்னத்தைப்போற்றியும் நித்தியமான திருமங்கலநாணின் பிரகாசத்தைப்
    போற்றியும் நரசுராதிகள் வந்து நமஸ்கரிக்க அவர்களிடத்துள்ள திரோபவத்தை நீக்கும்
    நின்றருளிய திருநிலையைப் போற்றியும் சடசித்துக்களிற் பூரணமாயிருக்கிற ஸ்ரீபாதங்களைப்
    போற்றுகின்றேன்- எ-று. (1-5)

    கற்பகவிநாயகர் துதி.

    தன்னோங்கு மலரடியுந் தளிரோங்கு சாகைகளு
    மின்னோங்கு முகக்கொம்பும் விரவியகண் மலர்களுமாய்
    மன்னோங்க நடமாடு மன்றோங்கு மதிற்குடபாற்
    பொன்னோங்கன் முன்னோங்கும் பொற்பமர்கற் பகம்போற்றி.

    இ-ள் தனது மேலான செந்தாமரைமலர்போன்ற ஸ்ரீபாதமும் பல்லவங்களிலுஞ் சிறந்த செய்ய
    வொளிமிக்க ஸ்ரீயஸ்தங்களும் ஒளிசிறந்த முகத்திற் கொம்பும் பொருந்திய மூன்று திருக்கண்
    மலர்களுமாய் (பாசத்தைக் கீழ்ப்படுத்தி) பதியானது நிருத்தஞ் செய்யும் கனகசபையைச்
    சூழ்ந்துயர்ந்த மேலைக் கோபுரத்தின் முன்னே வாழ்ந்தருளும் அழகுவிளங்கின
    கற்பகப்பிள்ளையாரைப் போற்றுகின்றேன்-எ-று.

    தன்னோங்கு மலரடியும் கற்பகம்போற்றி - தனது பெருக்க வகன்றவடிவையும்
    துளிர்நிறைந்த பக்கக்கிளைகளையுந் தடித்திலு மொளிமிகும்படி பணைகளையுந்
    தேன்பொருந்தின மலர்களையுமுடையதாகிய கற்பக விருட்சமென வேறு
    மொருபொரு டோன்றியவாறு கண்டுகொள்க. (1-6)

    சுப்பிரமண்ணிய சுவாமி துதி.

    தேராட்டிக் கயங்காட்டுந் திரண்மாக்கட் டயமூட்டிப்
    போராட்டிப் புறங்காட்டிப் போங்காட்டிற் புலால்கமழு
    நீராட்டிச் சூர்மாட்டி நிகழ்நாட்டிற் புகழ்நாட்டும்
    பேராட்டி சீராட்டும் பிள்ளையார் கழல்போற்றி

    இ-ள். தேர்-தேர்களும், ஆள்-காலாள்களும், திக்கயம்-அஷ்டதிக்குகளிலும் பொருந்திய
    யானைகளைப்போல-மேனிப்பொலிவுகாட்டும்-திரள்மா-யானைத் திரள்களும்,
    கட்டுஅயம்-பாகரைப்பொறுத்த குதிரைகளும், மூட்டி-கூட்டி, போராட்டி -போர்செய்து,
    புறங்காட்டி-முதுகுகாட்டி, போங்காட்டில்-பகைவர் ஓடும்படியான யுத்தகளத்தில்,
    புலால்கமழும்-புலால்நாற்றம் நாறுகின்ற நீராட்டி-உதிரப் பிரவாகத்தையுண்டாக்கி,
    சூர்மாட்டி-சூரபன்மனைக்கொன்று, நிகழ்நாட்டில்-பதினான்கு லோகங்களிலும்,
    புகழ்நாட்டும்-தனது கீர்த்தியை நிலைநிறுத்திய, பேராட்டி சீராட்டும் பிள்ளையார்
    கழல்போற்றி- பார்வதியார் சீராட்டுதலுடன் வளர்த்த சுப்பிரமணியக் கடவுளின்
    திருவடிகளைப் போற்றுகின்றேன் -எ-று

    மூள்வித்தற்கண் மூட்டியென்றாற்போல
    மாள்வித்தற்கண் மாட்டியெனநின்றது,
    மாட்டியென்றேயெம்மை யென்றார்பிறரும். (1-7)

    மூவர்முதலிய அடியார்கள் துதி.

    திருஞான சம்பந்தர் செய்யதிரு வடிபோற்றி
    யருணாவுக் கரசர்பிரா னலர்கமல பதம்போற்றி
    கருமாள வெமையாளுங் கண்ணுதலோன் வலிந்தாண்ட
    பெருமாள்பூங் கழல்போற்றி பிறங்கியவன் பர்கள்போற்றி.

    இ-ள். திருஞானசம்பந்த சுவாமிகளுடைய சிவந்த திருவடிகளைப் போற்றியும்,
    சிவத்தினருள்பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகளுடைய அலர்ந்த செந்தாமரை மலர்போன்ற
    திருவடிகளைப்போற்றியும், சனனமரணதுக்கம் நீங்கும்படி ஓரறிவுமில்லாதவெம்மை
    யாண்டருளின நெற்றிக்கண்ணுள்ள பரமசிவம் மணம்விலக்கி வலியஅடிமைகொண்ட
    வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி சுவாமிகளினுடைய பொலிவுள்ள
    திருவடிகளைப்போற்றியும், மற்றுமுள்ள அடியார்களையும்போற்றுகின்றேன்-எ-று (1-8)

    மாணிக்கவாசக சுவாமிகள் துதி.

    பேசுபுகழ் வாதவூர்ப் பிறந்துபெருந் துறைக்கடலுண்
    டாசிலெழி றடித்துயர வஞ்செழுத்தா லதிர்த்தெழுந்து
    தேசமலி தரப்பொதுவார் சிவபோக மிகவிளைவான்
    வாசகமா மாணிக்க மழைபொழிமா முகில்போற்றி.

    இ-ள். பெரியோர்களாற் சொல்லப்பட்ட புகழையுடைய திருவாதவூரிலே பிறந்தருளித்
    திருப்பெருந்துறையி லானந்த சமுத்திரத்தைப் பருகிப் பாச நீங்கின ஆன்மப் பிரகாசம்
    அருளைக்கூடி மிக்குச்செல்லப் பஞ்சாக்ஷரவுச் சரிப்பினால் ஆணவமல வாதனையைத்தள்ளி
    மேலிட்டு (அக்கனகசபையில் நிறைந்திருக்கிறசிவானந்தமானது) தேசமெங்கும் நிறையும்படி
    திருவாசகமாகிய மாணிக்க மழையைப் பொழியும் பெரியமுகில் போன்ற திருவாதவூரடிகளைப்
    போற்றுகின்றேன்-- எ-று.

    பேசுமழை பொழிமாமுகில்போற்றி சர்வாத்துமாக்களுஞ்சொல்லுதலாற் புகழுடைய
    வாயுமண்டலத்திலேதோன்றி பெரியபட்டினங்கள் சூழ்ந்த துறையினையுடைய
    கடலைப்பருகிக் குற்றமிலாத வொளிசிறந்த மின்னைப் பிறங்கிச் சலத்தினுடைய
    வளமையாகிய வதனாலே முழக்கமேலிட்டு இவ்வுலகத்தோர் சர்வ சம்பன்னராக
    யாவர்க்கும் பொதுவாகி நிறைந்துநிற்கிற சுத்தபோகம் விளையும் வண்ணம்
    மழைபெய்யு மேகமென வேறுமொரு பொருடொனறியவாறுமறிக. இதுவுங்
    கடவுள் வணக்கமெனக்கொள்க, எங்ஙனமென்னில் வீழ்க தண்புனலென்கின்ற-
    பிரமாணத்தாலெனக்கொள்க. (1-9)

    தில்லை மூவாயிரவர் துதி.

    நாவிரவுமறையினராய் நாமிவரிலொருவரெனுந்
    தேவர்கடேவன்செல்வச் செல்வர்களாய்த்திகழ்வேள்வி
    பரவுநெறிபலசெய்யும் பான்மையராய் மேன்மையரா
    மூவுலகுந்தொழுமூவா யிரமுனிவரடிபோற்றி.

    இ-ள். நாவிலேயனவரதமும் பொருந்தின வேதத்தையுடையவர்களாயும் இவர்களில்
    நாமுமொருவரென்றருளிச் செய்யுந் தேவர்கள் தேவனையே தங்கள் செல்வமாகப்பெற்ற
    ஐசுவரியத்தையுடையவர்களாயும் விளங்கிய யாகாதிகன் மங்கள் பொருந்திய நெறிகளை
    வெகுவிதமாகச் செய்யும் பகுதியுடையவர்களாகியும் (பத்திஞான வயிராக்கியங்களினாலே
    யாவர்க்கும்) மேலானவர்களாயுமிருக்கிற பூமியந்தர சுவர்க்கத்தோர் நமஸ்கரிக்குந்
    தில்லையில் மூவாயிர முனிவர்களுடைய திருவடிகளைப்போற்றுகின்றேன்--எ.று. (1-10)
    சண்டேசர்முதலிய திருக்கூட்டத்தார்துதி.

    தந்தையெனாதிகழ்ந்தபுகழ்ச் சண்டேசர்விறற்குமெய்ச்
    சிந்தையராயெல்லையிலாத் திருவேடத்தினராகி
    யெந்தைபிரானருள்வளர்க்கு மியல்பினராய்முயறவங்க
    ளந்தமிலாவடியவர்க டிருக்கூட்டமவைபோற்றி.

    இ-ள். பிதாவென்று அங்கிகரியாமல் சிவத்துரோகங்கண்டு கால் தடிந்த கீர்த்தியையுடைய
    சண்டேசுர நாயனாரையும், ஞானவீரம் பொருந்திய உண்மையான சித்தத்தை
    யுடையவர்களும் எண்ணிறந்த திருவேடங்களை-யுடையவர்களும் எந்தை பிரானுடைய
    அருளினைவளர்க்கும் இயல்புள்ளவர்களும் செய்கிறதவங்களிலே
    முடிவில்லாதவர்களுமாயிருக்கிற அடியாரது திருக்கூட்டத்தையும் போற்றுகின்றேன்-- எ-று. (11)

    புகழொன்றுமிகுத்துக் கூறியவதனாற் பிரமகத்தியாதிதோடமும் பிதாவைக் கொன்றதோடமுங்
    குருத்துரோகமுமாகிய பசுபாவஞ் சிவசந்நிதியில் நில்லாமல் அதுவுஞ் சிவபுண்ணியமாய்ச்
    சாருப்பிய பதமும் சிவாக்கினையும் அதிகாரமு முதலானவை கொடுத்தவை கண்டுகொள்க,
    எல்லையில்லாத் திருவேடமென்பதனாற் சடை முண்டிதம் சிகை முதலான பலவேடங்களில்
    முடிவில்லாமை கண்டுகொள்க. (1-11)

    அநபாயச்சோழச்சக்கரவர்த்திதுதி

    ஒன்றியசீரிரவிகுல முவந்தருளியுலகுய்யத்..
    துன்றுபுகழ்த்திருநீற்றுச் சோழனெனமுடிசூடி
    மன்றினடந்தொழுதெல்லை வளர்கனகமயமாக்கி
    வென்றிபுனையநபாயன் விளங்கியபூங்கழல்போற்றி.

    இ - ள். சீர்பொருந்தியசூரியவம்சத்திலே விரும்பித்தோன்றி யருளிச் சர்வாத்மாக்களுமுய்யும்
    வண்ணம் மிகுந்த சிவகீர்த்தியையுடைய திருநீற்றுச் சோழனென் றபிஷேக நாமமும் பெற்றுக்
    கனகசபையில் நிருத்தத்தை வணங்கித் திருவம்பலமுந் திருக்கோபுரமுந் திருமண்டபங்களு
    மற்றுஞ் சூழ்ந்த வெல்லையை- மாற்றுமிக்க கனகசொரூபமாகப் பண்ணித்திக்கு
    விசயம்பொருந்தின அநபாயச் சக்கரவர்த்தியின் பிரகாசப் பொற்பை யுடைத்தான
    ஸ்ரீபாதங்களைப் போற்றுகின்றேன்-- எ-று (1-12)

    அகம்படிமைப்பதி னாராயிரவர்துதி.

    மல்குபுகழ்நடராசன் வளர்கோயிலகலாது
    பல்கிளைஞருடனுரிமைப் பணிசெய்யும்பரிவினராய்க்
    கல்விகளின்மிகுமெல்லைக் கருத்தினரைநிருத்தனருட்
    செல்வமலியகம்படிமைத் திரலினர்தம்பதம்போற்றி

    இ-ள். மிகுத்துச்சொல்லுஞ் சிவகீர்த்தியையுடைய நடேசமூர்த்தியின் சிவதர்மம் வளருந்
    திருக்கோயிலை நீங்காமல் பலகிளைஞருடைய தங்களுக்கமைத்த ஊழியன்களைப்
    பரிவுடனே செய்யும் பத்திமான்களும் கல்விகளினாலே மிகுந்த நிலையான கருத்தை
    யுடையவர்களும் தம்பிரானாருடைய அருளாகிய சம்பத்துமிகுந்த ஞானவீரத்தை
    யுடையவர்களுமாகிய திருவகம்படியரான பதினாறாயிரவர் திருவடிகளைப்
    போற்றுகின்றேன்-- எ-று. (1-13)

    பிறவியைவியந்தது

    மண்ணிலிருவினைக்குடலாய் வானிரயத்துயர்க்குடலா
    யெண்ணிலுடலொழியமுய லிருந்தவத்தாலெழிற்றில்லைப்
    புண்ணியமன்றினிலாடும் போதுசெயாநடங்காண
    நண்ணுமுடலிதுவன்றோ நமக்குடலாய்நயந்தவுடல்.

    இ-ள். பூமியிற்பொருந்தின புண்ணியபாவத்துக்குட்பட்ட பிரார்த்த சரீரமாய்ச்
    சுவர்கத்திலும் நரகத்திலும்போய் மீண்டு துக்கப்படும் யாதனா சரீரமாயிருக்கிற
    எண்ணிறந்த சரீரமொழியப் பண்ணப்பட்ட பெரிய நல்லினையால் அழகுபொருந்திய
    தில்லைவனஞ் சூழ்ந்த அனுக்கிரகமன்றினில் ஆடுகிகின்ற ஒருதன்மையான
    ஆனந்த நிருத்தத்தைத் தரிசிக்கப் பொருந்தின இந்தச் சரீரமன்றோ நமக்குச்
    சரீரமாகி நம்மளவில்விரும்பியசரீரம்-- எ-று. நமக்குடலென்பதற்கு நமக்குடைமையெனினு
    மமையும். (1-14)

    தலவிசேடத்தையுரைத்தது.

    மறந்தாலுமினியிங்கு வாரோமென்றகல்பவர்போற்
    சிறந்தாரநடமாடுந் திருவாளன்றிருவடிகண்
    டிறந்தார்கள்பிறவாத விதிலென்னபயன்வந்து
    பிறந்தாலுமிறவாத பேரின்பம்பெறலாமால்.

    இ-ள். இவ்விடத்து எப்போதும் மறந்தேயாயினும் வரக்கடவ மல்லோமென்று சலித்து
    அவ்விடத் தகன்று போனவரைப்போல அருள்சிறந்து நிறைவுதக நிருத்தஞ் செய்யுந்
    திருவாளனது ஸ்ரீபாதந தரிசித்துச் சிவபூமியிற் சென்றவர்கள் பிறவாநெறியிருககு
    மிதில் மிகுந்தபிரயோசனமேது சிதம்பரத்திலே வந்துபிறநதாலு மொழியாத
    பேரின்பம்பெறுவது நிச்சயமாதலால்.

    இது சிதம்பரத்திற்சநித்த வான்மாக்களுக்கு முத்தியுறுதியென்றமை கண்டுகொள்க. (1-15)

    காதமருங்கொடுங்குழையான் கரத்தமருங்கொடுங்குழையான்
    பாதமுறவளைந்திரவும் பகலுமுறவளைந்திரவும்
    பேதமறவுடன்றீரும் பிணிபிறவியுடன்றீரு
    மோதலுறுமருந்தில்லை யொழியவொருமருந்தில்லை.

    இ-ள். திருச்செவியிறபொருநதின- கொடுங்குழையான்-வளைநத சங்கக்குழையை
    யுடையவனும், கரத்திலே மருங்கொடுங்கின- உழையான்-மான கன்றையுடையவனும்,
    ஸ்ரீபாதத்திலே- உறவளைநது- சென்னியுறவணங்கி, இருபோதும், உறவுஅளைநது -
    அனபிலேமூழ்கி, வேண்டினவரம் - இரவும் - இரவுங்கள், இரண்டற நின்று வெகுண்டு
    குணங்களை - ஈரும - அரியும், பிணியும் பிறவியும் உடனே - தீரும்-தீரும், வேதாகம
    சாத்திரங்களும் நிச்சயித்தற்கரிதாகும் இந்தத் தில்லையெனனும் ஸ்தலம் நீங்கலாக
    வேறொருமருநதுமில்லை - எ-று. (1-16)

    பொன்றிகழ்பங்கயமூள்கிப் புனிதனபங்கயமூள்கிச்
    சென்றுதொழக்கருததுடையார்சிலரொழியக்கருத்துடையா
    ரொன்றுமுளத்திருக்கூத்தை யுருவொழிகுந்திருக்கூத்தை
    மன்றமரப்பணியீரேன் மருவுமரப்பணியீரே.

    இ-ள். பொலிவு விளங்கும் அழகிய பொற்றாமரையில் மூழ்கி நிர்மலனாகிய
    நடேசமூர்த்தி திருவடித்தாமரையை - ஊள்கி - தியானம்பண்ணி, (விகற்ப மறச்சென்று)
    ஸ்ரீபாதந்தரிசிக்கக் கருத்துடையாராகிய சித்தபாகமுடைய சிலரொழிய மற்றொருவரும் -
    கருத்துடையார் - கருவைத்துடைக்க மாட்டார்கள் ஆன்மாக்களுக்குச் சகசமாய்ப் பொய்யை
    மெய்யாகத் திருப்பும் மலமும் ஊத்தையாகிய கன்மமும் உருவாகிய மாயையும் இல்லையாகச்
    செய்யும் ஆநந்தத் திருக்கூத்தைச் சிதம்பரத்திலே தரிசித்தும் வணங்கீராகில் பொருந்தின
    மரப்பாவைக்கொப்பீர்--எ-று.

    மூழ்கியென்றது ழகாரம் ளகாரமாய் மருவியது, உள்கி யெனற்பாலது
    ஊள்கியென நீட்டல் விகாரமாயிற்று. (1-17)

    பொருவிலரு ணெறிவாழ்க புரைநெறிகண் மிகவாழ்க
    வரைவிறிருத் தொண்டரணி வளர்கதிருத் தொண்டரணி
    யருள்விரவக் கற்றோர்க்கு மடர்புலன்போக் கற்றோர்க்கு
    மருவுபுக லம்புலியூர் மாடமலி யம்புலியூர்.

    இ-ள். ஒப்பில்லாத கிருபையினையுடைய சைவமார்க்கம் வாழ்வதாக, குற்றமிகுந்த
    லோகாயதன் புத்தன் சமணன் மீமாங்கிசன் மாயாவாதி பாஞ்சராத்திரி முதலான
    கபடமார்க்கம் மிக ஆழ்க - மிகவும் கீழ்ப்படுவதாக, வரைவில், நவகண்டமாக வரைந்து
    வில்வடிவாக-திருத்து-திருத்தப்பட்ட ஒள்தரணி நல்லபூமியில் திருத்தொண்டர்
    வர்க்கந்தழைப்பதாக, திருவருள் பொருந்தும்படி கற்றோர்க்கும் குருமுன்னிலையில்
    கற்றுணர்ந்தவர்களில்- போக்கு அற்றோர்க்கும்-குற்றமில்லாத பக்குவாத்துமாக்களுக்கும்
    பொருந்திய புகலிடமாவது-சந்திரன் தவழ்கிற மாடகூடங்கள் நிறைந்த அழகிய புலியூர். (1-18)

    இரும்பொத்துச் சிறிதிடமு மின்றெனக்கின் றருளாலே
    கரும்புற்ற நறையிதழித் தொடைமுடியோ னமரர்தொழக்
    கரும்புற்ற வரவாடக் காரிகையி னுடனாடும்
    பெரும்பற்றப் புலியூரா யிருந்ததுளம் பெரிதாயே.

    இ-ள். எனக்கு இதற்குமுன் என்மனமானது இரும்பையொத்துச் சிறிது புரையுமற்று இருக்கும்
    இப்போது அருளினாலே வண்டமர்ந்த தேன் நிறைந்த கொன்றைமாலையணிந்த சடாமகுடமுள்ள
    நடேசமூர்த்தி அமரர் வணங்கப் பெரியபுற்றின் அரவாடக் காளியினுடனே நிருத்தஞ்செய்யும்
    பெரிய பெரும்பற்றப் புலியூராயிருந்ததுமிக --எ-று.

    பெரும்பற்றப் புலியூர் என்றது ஆன்மாக்களுடைய உட்பற்றுப் புறப்பற்றாயிருக்கின்ற காணங்கள்
    சூனியம் பிறந்தவிடத்திலும் ஞானப்பற்றாய் நிற்றலால் ஞானசபையாகிய புலியூரை அந்தப்
    பெரும்பற்றப் புலியூரென்றார், பெரும்பற்றென நிறுத்தி அ-என்கிற சுட்டை இடையிட்டு
    ஒற்றுவருவித்துப் புலியூரென வருமொழிசெய்து பெரும்பற்றப் புலியூரென்றமை கண்டுகொள்க. (1-19)

    தேசமலிபொதுஞானச் செவ்வொளியுந்திகழ்பதியா
    மீசனதுநடத்தொழிலு மிலங்குபலவுயிர்த்தொகையும்
    பாசமுமங்கதுகழியப் பண்ணுதிருவெண்ணீறு
    மாசிறிருவெழுத்தஞ்சு மாநாதியிவையாறாக.

    இ-ள்: சிவபூமியிலேதழைத்த சுத்தஞானத்தினுடைய செம்மை பொருந்தின வொளியும்,
    விளங்குகின்ற பதியாகிய பரமேசுரனுடைய பஞ்ச கிருத்தியமும், விளங்கிய சாவான்மாக்களும்,
    ஆணவமுதலான பஞ்சபாசமும், அவ்விடத்தான்மாக்களை மேலிட்டுத் தன்வசமாக்கி நின்ற பாசத்தை
    நீங்கப் பண்ணுகிற திருவெண்ணீறும், திரோதானங் கடந்த அரிளஞ் செழுத்தும், இவையாறும்
    அநாதியாம்.-- எ-று. (1-20)

    கற்பங்கடொறுநடஞ்செய கழலடைந்தோர்கணிப்பிலர்தஞ்
    சிற்பங்கடரும்புகழுஞ் சென்றனவிச்செலகாலத்
    தற்பங்கொடுதிக்குமிறை யருடருமென்றனரென்றார்
    சொற்பந்தமுறுமனமே துணையாகத்தொடங்குதலும்.

    இ-ள்: கற்பங்கடோறும் (அநுக்கிரக கிருத்தியத்திலேபொருந்தி) ஆநந்த நிருத்தஞ்செய்யும்
    திருவடிகளிற் பொருந்தினவர்கள் அளவிலா, தமது எண்ணிக்கைக்குப் பிரமாணமாகக் கற்பங்கடோ
    றும் வகுத்துவகுத்துச் சொல்லப்பட்ட ஆகமப் பிரமாணமாகிய புராணங்களு மிறந்துபோயின,

    இந்தக் கலியுகவர்த்தமான காலத்தில் அற்பார்த்தமான துதிக்கும் பரமேசுவரன்
    அநுக்கிரகித்தருளுவனென்று வேதாகமம் போன்றவர்களருளினார்கள், என்று பொருந்திய
    சொல்லை அருளாற் பொருந்தின எனது மனமானதே யெனக்குத் துணையாகச் சிதம்பர
    மான்மியத்தைத் துதிசெய்யத் தொடங்குதலும்-எ-று (1-21)

    ஆராதமனமினிய வாநந்தநடத்தளவுஞ்
    சாராததன்மையினாற் றகுமொழிக்குச்சொற்படுத்த
    வாராதென்றறிந்தாலு மற்றதுகட்புலப்படளலா
    லோராதபேராசை யொருக்காலுமுலவாதால்.

    இ-ள்: பூரணஞானத்தைப் பொருந்தாததாகியமனமானது ஆநந்தநிருத்த மளவாகச்செல்ல
    வியாத்தியில்லாத தன்மையினாலே அந்த ஆநந்த நிருத்தமான அருத்தத்துக்குத் தக்க
    சுலோகத்துக்குச் சொற்செய்யவரா தென்பதுஆகம சாஸ்திர சம்பிரதாய வனுபவங்களினாலே
    யறிந்தாலும் அந்த ஆநந்த நிருத்தமானது பதஞ்சலி மாகாருஷிக்கு அருளின வரப்
    பிரசாதத்தினாலே திஷ்ட்டி கோசரமாதலால் விசார ஈனமான மிகுந்த ஆசை ஒருக்காலு
    மொழியாதாதலா னென செய்வோம்- எ-று. (1-22)

    காதரமார்தருமனமே கமலமலரயனல்லை
    சீதரமாயனுமல்லை சிவனுமனற்றிரளல்லன்
    நீதரமாவருளுடையை நிலைகலங்கேலினிமன்றி
    லாதரமாதுடனாடு மண்டனடங்கண்டனையால்.

    இ-ள். அச்சமிகுந்த மனமே நீ கமலமீதினிலிருக்கிற அயனுமல்லை, பூமகளை மார்பிற்றரிக்கும்
    அரியுமல்லை, சிதம்பர மூர்த்தியோ அவர்களாற் பறந்தும் இடந்துங் காண்பரிய சோதிசொரூபி
    யல்லன் நீஅவரகளிருவரினு மேலான அருளுடையை யாதலால் நிலை கலங்காதே,
    அதெங்ஙனமென்றுகேள் கனக சபையில் விரும்பின அருட்சத்தியைப் பொருத்தி ஆநந்த
    நிருத்தஞ் செய்யுஞ் சிவனுடைய நிருத்தங் கண்டனையாதலால்---- எ-று. (1-23)

    இது சித்தசமாதானம்.

    மேல்புராணவரலாறு கூறுகின்றது.

    நாதனருள்பிரியாத நந்திதரச்சனற்குமரன்
    வேதவியாதனுக்களிக்க மேன்மையெல்லாமவன்விளங்கிச்
    சூதமுனிதனக்குதவச் சோபானவகைதொகுத்த
    மூதறிவாலவன்மொழிந்த புராணமவைமூவாறில்.

    இ-ள். ஸ்ரீநீலகண்ட பரமேசுவரனருளிச்செய்த பதினெண்புராண அர்த்தங்களை அவருடைய
    பிரதானசீஷரான நந்தீசுவரர் சனறகுமார பகவானுக் கருளிச்செய்ய அவர் தம்முடைய பிரதான
    சீஷரான வேதவியாசருக்கருளிச் செய்ய அவர் நன்றாக விசாரணை செய்து தம்முடைய பிரதான
    சீஷரான சூதமுனிவருக்கு அநுக்கிரகிக்க இப்படிக்குச் சோபானபாரம் பரியமாகவந்த சுருக்கமான
    அருத்தத்தைத் தம்முடைய முதிர்ந்தவறிவினாலே விரிந்துரைத்த பதினெண்புராணத்தில்.
    சோபான பாரம்பரியமென்பது ஒருபடிவிட்டு ஒருபடியேறுதல். (1-24)

    நலமலியுந்திருத்தில்லை நடராசன்புகழ்நவிலும்
    பலகதியில்யானறிந்த படிபடியிற்பயிறாரிச்
    செலவினர்போலெவ்வழியுஞ் செவ்வழியாச்சிறிதியங்கித்
    தொலைவில்பெரும்பதியணையத் துணிந்தருளே துணையாக.

    இ-ள். நன்மை மிகுந்திருக்குந் தில்லைவனத்து நிருத்தராசனது சிதம்பர மான்மியத்தைச்
    சொல்லும் வெகுவித மார்க்கத்தில் யானறிந்து கொண்டபடி எப்படியென்னில், பூமியில்
    முன்னடந்திருக்கும் வழியே நடக்குமவரைப்போல் சுற்று வழியெல்லாஞ் செவ்வை வழியாகத்
    துணிந்து அருளைக்கூடிச் சிறிது தள்ளி எடுத்துக்கொண்ட விசாரணையில் போக்குவரத்துப்
    பண்ணிச் சிவபூமியைக் கண்டுகொண்டேன்---- எ-று. (1-25)

    மங்களமார்திருமன்றின் மன்னனடம்வளர்புலிக்காற்
    பங்கமில்சீரருண்முனிக்கும் பதஞ்சலிக்கும்பணித்தருளிச்
    சிங்கவருமன்றனக்குந் தெரிவித்துத்திருவருளா
    லங்கவரைப்பணிகொண்ட வடைவறிந்தபடிபுகல்வாம்.

    பாயிரம்.

    இ-ள். மங்களநிறைந்த கனகசபாபதி ஆநந்தநிருத்தத்தை அருள்வளரா நின்ற குற்றமில்லாத சீர்சிறந்த
    வியாக்கிரபாதமுனிக்கும் பதஞ்சலிமுனிக்குந் தரிசிப்பித்தருளி இரணியவன்மனுக்கும் புலப்படுத்திக்
    காருண்ணியத்தினாலே யிந்த மூவரையுஞ் சேர்வை கொண்ட அடைவறிந்தபடி சொல்லுகிறேன். (1-26)

    சொல்லோடும்பொருளோடுந் துணிவுடையோர்சொற்றெனரென்
    றெல்லோருங்கொள்வெட்டு மிரண்டுமறியாதோமும்
    வல்லோர்போலொருபனுவன் மதித்தோமானவைபொறுக்க
    நல்லோரையிரந்தோமே னகையாமென்றுரையாமால்.

    இ-ள். சொல்லுடனும் பொருளுடனு முறுதியுமுடைய புலவர் சொன்னார்கள் என்று கேட்ட
    ஞாதாககளெல்லோருங் கைககொள்ளும்படிக்கு எட்டும் இரண்டும் பத்தென்பதற்கு விபரமில்லாத
    யாமும் கவிவல்லவர்களைப்போலே யொருபனுவல் சொன்னதாகப் பண்ணிச் செய்யுட் குற்றம்
    பொறுக்கப் பெரியோரை வேண்டிக் கொண்டோமாகில் கேட்டவர்களுக்கு நகையை யுண்டாக்குமென்று
    உரைத்தோமில்லை - - எ-று.

    இதிலெல்லோருங் கொள எட்டு மிரண்டுமென்பதற்கு எட்டான சொல்லு மிரண்டான பொருளுமென்று
    பொருந்துஞ்-சொற்பொருளாமென்றும் அகார உகாரமென்றுந் தசகாரிய தசாவத்தையென்றும்
    சொல்லுவாருமுளர், இதிற் சொற்பொருளிலக்கண மோராதோர்க்குங் கவிவருதலானும், அகார
    உகார முதலானவை சிறுபான்மையான சம்பிரதாயவர்த்த மாகலினும், அவையடக்கத்துக்குப்
    பொருந்தாமையால் மறுக்கப்பட்டது, எட்டான சொல்லென்பது-நேமிநாதத்தில்-ஏற்ற திணையிரண்டும்
    பாலைந்து மேழ்வழுவும், வேற்றுமை யெட்டுந் தொகையாறும், மாற்றரிய, மூன்றிட முங்காலங்கண்
    மூன்றுமிரண்டிடத்தாற, றோன்றவுரைப்பதாஞ் சொல், இரண்டாகியபொருள் அகப்பொருள் புறப்பொருள். (1-27)

    என்றுமருந்தவமுயல வினிவேண்டாயாவர்க்கும்
    பொன்றுமுடல்கன்றுமுனிப் பொற்கோயில் புகழ்மாலை
    சென்றுசெவிப்புலன்புகுமேற் றீவினைகளவைதீர்க்கு
    மன்றினருள்புரிவிககுந் தெரிவிக்குமலர்ப்பாதம்.

    இ-ள். இன்றுமுதல் பெரியதவசுகளை யாவர்க்கும் பண்ண வேண்டுவதில்லை நீர்க்குமிழிபோல
    இறக்குஞ் சரீரம் பார்த்தகண் மாறுதற்குமுன்னே இந்தச் சிதம்பரமான்மியஞ் செவிகளுக்கு
    விடயமாகுமாகில் அக்குற்றமுள்ள புண்ணிய பாவங்கள் தராசுமுள்ளுப்போல் சமப்படுத்தும்
    மலபாகத்தைப் பண்ணி
    அருளைப் பிரகாசிப்பது வியாபகமாயிருக்கிற ஞேயத்திலே யழுத்துவிக்கும். (1-28)

    இதனுள் கடவுள் வணக்கம்.
    திருவிருத்தம்-20-பாயிரம்-8
    ஆக திருவிருத்தம்-28