MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  desika prabandam
  வேதாந்த தேசிகர் அருளிய தேசிக பிரபந்தம்

  பாயிரம்

  ஸ்ரீ
  ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகாய நம:

  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த
  தேசிக ப்ரபந்தம்

  1.அமிருதரஞ்சனி
  2. அதிகாரசங்கிரகம்
  3. அமிருதசுவாதினி
  4. பரமபதசோபானம்
  5. பரமதபங்கம்
  6. மெய்விரதமான்மியம்
  7. அடைக்கலப் பத்து
  8. அருத்தபஞ்சகம்
  9. ஸ்ரீ வைணவதினசரி
  10. திருச்சின்ன மாலை
  11.பன்னிரு நாமம்
  12. திருமந்திரச்சுருக்கு
  13. துவயச்சுருக்கு
  14. சரமசுலோகச்சுருக்கு
  15. கீதார்த்தசங்கிரகம்
  16.மும்மணிக்கோவை
  17. நவமணிமாலை
  18. பிரபந்தசாரம்


  சீரொன்று தூப்புல் திருவேங் கடமுடையான்
  பாரொன்றச் சொன்ன பழமொழியுள் ஓரொன்று
  தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
  வானேறப் போமளவும் வாழ்வு

  அமிருதரஞ்சனி  1.1:
  தம்பரமென்றிரங்கித் தளராமனந்தருளால்
  உம்பர்த்தொழுந்திருமால் உகந்தேற்குமுபாயமொன்றால்
  நம்பிறவித்துயர் மாற்றிய ஞானப்பெருந்தகவோர்
  சம்பிரதாயமொன்றிச் சதிர்க்கும்நிலை சார்ந்தனமே.

  1.2
  கடலமுதத்தைக் கடைந்து சேர்த்த
  திருமாலடிகாட்டிய, நம்
  தேசிகர்த்தம்நிலைபற்றிச்சேர்ந்தோமே.

  1.3:
  முத்திக்கருள்சூட மூன்றைத்தெளிமுன்னம்
  இத்திக்காலேற்கும் இதம்.

  1.4:
  மூன்றிலொருமூன்றும் மூவிரண்டும்முந்நான்கும்
  தோன்றத்தொலையுந்துயர்.

  1.5:
  உயிருமுடலும் உடலாகவோங்கித்
  தயிர்வெண்ணை தாரணியோடுண்டான் பயிரிற்
  களைபோல் அசுரரைக் காய்ந்தான் தன்கையில்
  வளைபோலெம்மாசிரியர் வாக்கு.

  1.6: அலையற்ற ஆரமுதக்கடல் அக்கடலுண்டமுகில்
  விலையற்ற நன்மணிவெற்பு வெயில்நிலவோங்குபகல்
  துலையுற்றனவென்பர் தூமறைசூடுந்துழாய்முடியார்க்கு
  இலையொத்தன அவன்பாதம் பணிந்தவர்க்கெண்ணுதற்கே.

  1.7:
  உத்திதிகழும் உரைமூன்றின்மும்மூன்றுஞ்
  சித்தமுணரத்தெளிவித்தார் முத்திதரு
  மூலமறையின்முடிசேர் முகில்வண்ணன்
  சீலமறிவார்சிலர்.

  1.8:
  எனக்குரிய னெனதுபரமென்றென்னாது
  இவையனைத்தும் இறையில்லா இறைக்கடைத்தோம்
  தனக்கிணையொன்றில்லாத திருமால்பாதஞ்
  சாதனமும்பயனுமெனச் சலங்கள் தீர்ந்தோம்
  உனக்கு இதமென்று ஒரு பாகனுரைத்ததுற்றோம்
  உத்தமனாமவ னுதவியெல்லாங்கண்டோ ம்
  இனிக்கவருமவை கவர இகந்தோம் சோகம்
  இமையவரோ டென்று இனிநாமிருக்குநாளே.

  1.9:
  தத்துவங்களெல்லாம் தகவாலறிவித்து
  முத்திவழிதந்தார் மொய்கழலே யத்திவத்தில்
  ஆரமுதம் ஆறாமிருநிலத்திலென்றுரைத்தார்
  தாரமுதலோதுவித்தார்தாம்.

  1.10:
  திருநாரணனெனுந்தெய்வமும் சித்தும் அசித்துமென்று
  பெருநான்மறைமுடிபேசிய தத்துவம் மூன்றிவைகேட்டு
  ஒருநாளுணர்ந்தவர் உய்யும் வகையன்றி யொன்றுகவார்
  இருநாலெழுத்தின் இதயங்களோதிய வெண்குணரே.

  1.11:
  காரணமாயுயிராகி அனைத் துங்காக்குங்
  கருணைமுகில் கமலை யுடனிலங்குமாறு
  நாரணனார் வடிவான வுயிர்களெல்லா
  நாமென்று நல்லடிமைக் கேற்குமாறுந்
  தாரணிநீர் முதலான மாயைக்காலந்
  தனிவானென்றிவை உருவாந்தன்மைதானுங்
  கூரணி சீர்மதியுடைய குருக்கள் காட்டக்
  குறிப்புடன் நாம்கண்டவகை கூறினோமே

  1.12:
  அப்படிநின்ற அமலன்படியெல்லம்
  எப்படி எம்முள்ளத் தெழுதினார் - எப்படியும்
  எரார் சுருதியொளியால் இருணீக்குந்
  தாரபதி யனையார் தாம்.

  1.13:
  செம்பொற்கழலிணைச் செய்யாள மருந்திருவரங்கர்
  அன்பர்க்கடியவராய் அடிசூடியநாமுரைத்தோம்
  இன்பத் தொகையென எண்ணிய மூன்றிலெழுத்தடைவே
  ஐம்பத்தொரு பொருள் ஆருயிர் காகுமமுதெனவே.

  1.14:
  யான் அறியுஞ்சுடராகி நின்றேன் மற்றும் யாதுமலேன்
  வானமருந்திருமாலடியேன் மற்றொர் பற்றுமிலேன்
  றானமுதா மவன்தன் சரணே சரணென்றடைந்தேன்
  மானமிலா வடிமைப் பணி பூண்டமனத்தினனே.

  1.15:
  சீலங்கவர்ந்திடும் தேசிகர்தேசின் பெருமையினால்
  தூலங்களன்ன துரிதங்கண் மாய்ந்தன, துஞ்சறருங்,
  கோலங்கழிந்திடக் கூறியகாலங்குறித்துநின்றோம்
  மேலிங்குநாம் பிறவோம் வேலைவண்ணனை மேவுதுமே.

  1.16:
  வண்மையுகந்த அருளால் வரந்தரு மாதவனார்
  உண்மை யுணர்ந்தவர் ஓதுவிக்கின்ற உரைவழியே
  திண்மைதருந்தெளிவொன்றாற் றிணியிருள் ணீங்கியநாந்
  தண்மைகழிந்தனந் தத்துவங்காணுந்தரத்தினமே.

  1.17:
  நாராயணன்பரன் நாம் அவனுக்குநிலையடியோஞ்
  சோராதனைத்தும் அவனுடம் பென்னுஞ்சுருதிகளாற்
  சீரார் பெருந்தகைத்தேசிகர் எம்மைத் திருத்துதலாற்
  தீராமயலகற்றும் திறம்பாத் தெளிவுற்றனமே.

  1.18:
  ஒன்றேபுகலென்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
  அன்றேயடைக் கலங்கொண்ட நம்மத்திகிரித் திருமால்
  என்றேஇசையின் இனையடிசேர்ப்பர் இனிப்பிறவோம்
  நன்றேவருவதெல்லாம் நமக்குப் பரமொன்றிலதே

  1.19:
  சிறுபயனிற் படியாத தகவோரெம்மைச்
  சேர்க்க அடைக்கலங்கொண்ட திருமால், றானே
  மறுபிறவியறுத்து அழியாவானில் வைக்கு
  மனமே நீ மகிழா தேயிருப்பதென்கொல்
  உறுவதுனக்குரைக்கேன் இங்கிருக்குங்காலம்
  ஒருபிழையும் புகுதாத வுணர்த்திவேண்டிப்
  பெருவதெலாமிங்கே நாம் பெற்றுவாழப்
  பேரடிமையாலே தென்றிகழே னீயே.

  1.20:
  சாக்கியர்சைனர்கள் சார்வாகர் சாங்கியர்சைவர், மற்றுந்
  தாக்கியர்நூல்கள் சிதையத் தனிமறையின் கருத்தை
  வாகியம்முப்பதினால் வகைசெய்து வியாகரித்தோந்
  தேக்கி மனத்துள் இதனைத் திணியிருள் நீங்குமினே.

  1.21:
  தள்ளத்துணியினும் தாய்போலிரங்குந்தனிதகவால்
  உள்ளத்துறைகின்ற உத்தமன் றன்மை யுனர்ந்துரைத்தோ
  முள்ளொத்தவாதியர் முன்னேவரினெங்கண் முக்கியர்பால்
  வெள்ளத்திடையில் னரிபோல் விழிக்கின்றவீணர்க்களே.

  1.22:
  செய்யேன்மறமென்ற தேசிகன் தாதையவனுரைத்த
  மெய்யேயருள் பொருள் சூடிய வெண்மதிகாதலியாம்
  பொய்யேபகைப்புலன் யிரண்டொன்று பொருங்கருவி
  கையேறுசக்கரக் காவலன் காவலடைந்தவர்க்கே

  1.23:
  அந்தமிலாதி தேவனழி செய்தடைத்த
  அலைவேலை யோத மடையச்
  செந்தமிழ் _ல்வகுத்த சிறுமனிச்சர்
  சிறுகைச் சிறாங்கையது போற்
  சந்தமெலா முரைப்ப இவையென்று தங்கள்
  இதயத் தடக்கி, அடியோம்
  பந்தமெலாமறுக்க அருள் தந்துகந்து
  பரவும் பொருள்கள் இவையே

  1.24:
  முக்குணமாயையின் மூவெட்டின் கீழ்வருமூவகையும்
  இக்குணமின்றியிலங்கிய காலச்சுழியினமும்
  நற்குணமொன்றுடை நாகமும்நாராயணனுடம்பாய்ச்
  சிற்குணமற்றவையென்று உரைத்தா ரெங்கள்தேசிகரே.

  1.25:
  எனதென்பதும் யானென்பதுமின்றித்
  தனதென்றுதன்னையுங்காணாது உனதென்று
  மாதவத்தான் மாதவற்கே வன்பரமாய் மாய்ப்பதனிற்
  கைத்தான் கைவளரான்காண்.

  1.26:
  பல்வினைவன்கயிற்றால் பந்த முற்றுழல்கின்றனரு
  நல்வினைமூட்டியநாரணனார்ப்பதம் பெற்றவருந்
  தொல்வினையென்றுமில்லாச் சோதிவானவ ருஞ்சுருதி
  செல்வினையோர்ந்தவர் சீவரென்றோதச் சிறந்தனமே.

  1.27:
  ஆரணங்களெல்லாம் அடிசூடமேனின்ற
  காரணமாய் ஒன்றால் கலங்காதான் னாரணனே
  நம்மேல்வினைகடியும் நல்வழியிற் றானின்று
  தன்மேனி தந்தருளும் தான்.

  1.28:
  குடன்மிசையொன்றியும் கூடியும் நின்ற கொடுந்துயரும்
  உடல்மிசைத் தோன்றுமுயிரும் உயிர்க்குயிருமிறையுங்
  கடல்மிசைக் கண்டதரளத்திரள் அவைகோத்த பொன்னூன்
  மடல் மிசைவார்த்தையதன் பொருளென்ன வகுத்தனமே

  1.29:
  தத்துவந்தன்னில் விரித்திடத்தோறுமிரண்டுதனிற்
  பத்திவிலக்கிய பாசண்டர் வீசுறும் பாசமுறார்
  எத்திசையுந்தொழுதேத்திய கீர்த்தியர், எண்டிசையார்
  சுருத்தருரைத்த சுளகமருந்திய தூயவரே

  1.30:
  வினைத்திரண் மாற்றிய வேதியர்தந்த நல்வாசகத்தால்
  அனைத்துமறிந்தபின் ஆறும்பயனுமெனவடைந்தோ
  மனத்திலிருந்து மருத்தமுதாகியமாதவனார்
  நினைத்தன் மறத்தல் அரிதாய நன்னிழனீள் கழலே

  1.31:
  ஓதுமறை நான்கதனி லோங்குமொரு மூன்றினுள்ளே
  நீதி நெறிவழுவா நிற்கின்றோம்- போதமரும்
  பேரா யிரமுந் திருவும் பிரியாத
  நாரா யணனருளா னாம்.

  1.32:
  ஊன்றந்து நிலைநின்ற வுயிருந் தந்தோ
  ருயிராகி யுள்ளொளியோ டுறைந்த நாதன்
  றான்றந்த வின்னுயிரை யனதென் னாம
  னல்லறிவுந் தந்தகலா நலமுந் தந்து
  தான்றந்த நல்வழியாற் றாழ்ந்த வென்னைத்
  தன்றனக்கே பாரமாகத் தானே யெண்ணி
  வான்றந்து மலரடியுந் தந்து வானோர்
  வாழ்ச்சிதர மன்னருளால் வரித்திட் டானே.

  1.33:
  திருமாலடையிணையே திண்சரணாக் கொண்டு
  திருமாலடியிணையே சேர்வார்-- ஒருமால்
  அருளால் அருளாத வானோர்கள் வாழ்ச்சி
  அருளா னமக்களித் தாராய்ந்து.

  1.34:
  சேர்க்குந்திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப்பெரியோர்க்கு
  ஏற்குங்குணங்கள் இலக்காம் வடிவி லிணையடிகள்
  பார்க்குஞ்சரணதிற் பற்றுதனந்நிலைநாம்பெறும் பேறு
  ஏற்கின்ற வெல்லைகள் எல்லாக்களையற வெண்ணினமே

  1.35:
  திருமாலடியிணை சேர்ந்து திகழ்ந்த அடிமைபெறத்
  திருநாரணன் சரண் திண்சரணாகத் துணிந்தடைவோர்
  ஒருநாளுரைக்க உயிர் தருமிந்திர மோதியநாம்
  வருநாள் பழுதற்று வாழும் வகையதில் மன்னுவமே

  1.36:
  மற்றொரு பற்றின்றி வந்தடைந்தார்க் கெல்லம்
  குற்ற மறியாத கோவலனார்- முற்றும்
  வினை விடுத்து விண்ணவரோடொன்ற விரைகின்றார்
  நினைவுடைத் தாய்நீமனமேநில்லு

  1.37:
  எல்லத் தருமமும் என்னையிகழ்ந்திடத் தான் இகழாது
  எல்லாந்தனதென எல்லாமுகந்தரு டந்த பிரான்
  மல்லார் மதக்களிறொத்த வினைத்திரண் மாய்ப்பனென்ற
  சொல்லால் இனியயொருகாற் சோகியாத் துணிவுற்றனமே.

  1.38:
  வினைத்திரண் மாற்றிய வேதியர் தந்தருள் வாசகத்தால்
  அனைத்துமறிந்த பின் ஆறும் பயனுமென வடைந்தோ
  மனத்திலிருந்து மருத்த முதாகிய மாதவனார்
  நினைத்தன் மனத்தில் அரிதாகினின்றனநீள்கழலே.

  1.39:
  எட்டிலாறிரண்டிலொன்றில் எங்கும் ஆறியும்புவார்
  விட்ட ஆறுபற்றும் ஆறு வீடுகண்டுமேவுவார்
  சிட்டாரானதே சுயர்ந்த தேசிகர்க்குயர்ந்து மேல்
  எட்டுமூறும் ஊடறுத்தது எந்தைமால் இரக்கமே

  ****அடிவரவு : தம்பரம், கடலமுத, முத்திக்கு
  மூன்றில், உயிரும், அலையற்ற, உத்தி, எனக்கு,
  தத்துவங்கள், திருநாரணன், காரணமாயுயிர்,
  அப்படி, செம்பொன், யானறி, சீலம், வண்மை,
  நாராயணன், ஒன்றே, சிறுபயன், சாக்கியர்,
  தள்ள, செய்யேன், அந்தமிலாதி, முக்குணமாயை,
  எனது, பல்வினை, ஆரணங்களெல்லாம், குடல்,
  தத்துவந்தன்னில், வினைத்திரள், ஓதுமறை,
  ஊன்றந்து, திருமாலடியிணையே, சேர்க்குந்திருமகள்,
  திருமாலடையிணைசேர்ந்து, மற்றொரு, எல்லாத்தரும,
  வினைத்திறள், எட்டிலாறு
  ---------

  2. அதிகாரசங்கிரகம்  2.1:
  பொய்கைமுனிபூதத்தார் பேயாழ்வார் தண்
  பொருநல்வருங்குருகேசன் விட்டுசித்தன்
  றுய்யகுலசேகரனம் பாணநாதன்
  தொண்டரடிப்பொடிமழிசைவந்த சோதி
  வையமெல்லாம் மறைவிளங்க வாள்வேலேந்தும்
  மங்கையர்க்கோனென்றிவர்கள் மகிழ்ந்து பாடும்
  செய்ய தமிழ் மாலைகணாந் தெளிய வோதித்
  தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே.

  2.2:
  இன்பத்திலிறைஞ்சுதலிலிசையும்பேற்றில்
  இகழாத பல்லுறவிலிராக மாற்றில்தன்பற்றில் வினைவிலக்கில்தகவோக்கத்திற்
  றத்துவத்தையுணர்த்துதலிற் றன்மையாகில்
  அன்பர்க்கேயவதரிக்குமாயன்னிற்க
  அருமறைகள் தமிழ் செய்தான் தாளேகொண்டு
  துன்பற்ற மதுரகவிதோன்றக்காட்டுந்
  தொல்வழியேநல்வழி கடுணிவார் கட்கே.

  2.3:
  என்னுயிர்தந்தளித்தவரைச் சரணம்புக்கி
  யானடைவே அவர்குருக்கள்ணிரைவணங்கிப்
  பின்னரளாற்பெரும்பூதூர்வந்த வள்ளல்
  பெரியநம்பி ஆளவந்தார் மணக்கா னம்பி
  நன்னெறியை யவர்க்குரைத்த வுய்யக்கொண்டார்
  நாதமுனி சடகோபன்சேனைநாத
  னின்னமுதத்திருமகளென்றிவரை முன்னிட்டு
  எம்பெருமான் திருவடிகளடைகின்றேனே.

  2.4:
  ஆரணநூல்வழிச் செவ்வை யழித்திடுமைதுகர்க்கு, ஓர்
  வாரணமாய் அவர்வாதக்கதலிகள் மாய்த்தபிரான்
  ஏரணிகீர்த்தி இராமானுசமுனி இன்னுரைசேர்
  சீரணிசிந்தையினோம் சிந்தியோமினித்தீவினையே.

  2.5:
  நீளவந்து இன்றுவிதிவகையால்நினைவொன்றியநா
  மீள வந்து இன்னும்வினையுடம் பொன்றிவிழுந்துழலாது
  ஆளவந்தாரென வென்றருள் தந்து விளங்கிய சீர்
  ஆளவந்தாரடியோம் படியோமினி யல்வழக்கே.

  2.6:
  காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத்
  தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளன்
  மூளுந்தவநெறி மூடிய நாதமுனிகழலே
  நாளுந்தொழுதொழுவோம் நமக்கார்நிகர்நானிலத்தே.

  2.7:
  ஆளுமடைக் கலமென்றெமை அம்புயத்தாள்கணவன்
  றாளினிசேர்ந்து எமக்குமவைதந்த தகவுடையார்
  மூளுமிருட்கள்விளமுயன்று ஓதியமூன்றினுள்ள
  நாளுமுகக்கவிங்கே நமக்கோர் விதிவாய்க்கின்றதே.

  2.8:
  திருவுடன் வந்த செழுமனிபோல் திருமாலிதய
  மருவிடமென்ன மலரடிசூடும்வகைபெருநாங்
  கருவுடன் வந்தகடுவினையாற்றில் விழுந்தொழுகா
  தருவுடன் ஐந்தறிவார் அருள்செய்ய அமைந்தனரே.

  2.9:
  அமை யாவிவையெனுமாசையினால் அறுமூன்று உலகிற்
  சுமையான கல்விகள் சூழவந்தாலும் தொகை இவை என்று
  இமையா விமையவரேத்திய எட்டிரண்டெண்ணிய நஞ்
  சமயாசிரியர் சதிர்க்குந்தனினிலை தந்தனரே.

  2.10:
  நிலைதந்த தாரகனாய் நியமிக்குமிறைவனுமாய்
  இலதொன்றனாவகை எல்லாந்தனதெனுமெந்தையுமாய்த்
  துலையொன்றிலையெனநின்ற துழாய்முடியானுடம்பாய்
  விலையின்றிநாமடியோமெனும் வேதியர்மெய்ப்பொருளே.

  2.11:
  பொருளொன்றென நின்ற பூமகள் ணாதன், அவனடி சேர்ந்து
  அருளொன்றுமன்பன் அவங்கொளுபாயமைந்தபயன்
  மருளொன்றியவினை வல்விலங்கென்று இவையைந்தறிவார்
  இருளொன்றிலாவகை எம்மனந்தேற வியம்பினரே.

  2.12:
  தேறவியம்பினர் சித்துமசித்துமிறையுமென
  வேறுபடும் வியன் றத்துவ மூன்றும், வினையுடம்பிற்
  கூறுபடுங்கொடுமோகமுந்f தானிறையாங்குறிப்பு
  மாறநினைந்தருளால் மறைநூறந்தவாதியரே.

  2.13:
  வாதியர்மன்னுந்தருக்கச் செருக்கின் மறைகுலையச்
  சாதுசனங்களடங்க நடுங்கத் தனித்தனியே
  யாதியெனாவகை யாரணதேசிகர்சாற்றினர், நம்
  போதமருந்திருமாதுடன் நின்றபுராணனையே.

  2.14:
  நின்றபுராணனடியிணையேந்தும் நெடும்பயனும்
  பொன்றுதலேநிலையென்றிடப் பொங்கும்பவக்கடலும்
  நன்றிதுதீயதிதென்று நவின்றவர்நல்லருளால்
  வென்றுபுலங்களை வீடினைவேண்டும் பெரும்பயனே.

  2.15:
  வேண்டும்பெரும்பயன் வீடென்றறிந்து வீதிவகையா
  னீண்டூங் குறிகியு நிற்கும் நிலைகளுக்கேற்குமன்பர்
  மூண்டொன்றில் மூலவினைமாற்றுதலில் முகுந்தனடி
  பூண்டன்றி மற்றோர்புகலொன்றிலையெனநின்றனரே.

  2.16:
  நின்றநிலைக்குற நிற்குங்கருமமும் நேர்மதியா
  னன்றெனநாடியஞானமும் நல்குமுட்கண்ணுடையர்
  ஒன்றியபத்தியும் ஒன்றுமிலாவிரைவார்க்கு, அருளால்
  அன்றுபயந்தருமாறும் அறிந்தவரந்தணரே.

  2.17:
  அந்தணரந்தியரெல்லையில்நின்ற அனைத்துலகு
  நொந்தவரேமுதலாக நுடங்கியனன்னியராய்
  வந்தடையும்வகை வன்தகவேந்திவருந்தியநம்
  மந்தமிலாதியை அன்பரறிந்தறிவித்தனரே.

  2.18:
  அறிவித்தனரன்பர் ஐயம்பறையுமுபாயமில்லாத்
  துறவித்துனியிற் துணையாம்பரனைவரிக்கும்வகை
  யுறவித்தனையின்றி யொத்தாரெனநின்றவும்பரைநாம்
  பிறவித்துயர்செகுப்பீரென்று இரக்கும்பிழையறவே.

  2.19:
  அறவேபரமென்று அடைக்கலம்வைத்தனர், அன்றுநம்மைப்
  பெறவேகருதிப் பெருந்தகவுற்றபிரானடிக் கீழ்
  உறவேயிவனுயிர்காக்கின்ற ஓருயிருண்மையை, நீ
  மறவேலென நம்மறைமுடிசூடியமன்னவரே.

  2.20:
  மன்னவர்விண்ணவர் வானோரிறையொன்றும் வான்கருத்தோர்
  அன்னவர்வேள்வியனைத்துமுடித்தனர், அன்புடையார்க்கு
  அன்னவரந்தரவென்ற நாமத்திகிரித்திருமான்
  முன்னம்வருந்தி அடைக்கலங்கொண்டநம்முக்கியரே.

  2.21:

  முக்கியமந்திரங்காட்டிய மூன்றில்நிலையுடையார்
  தக்கவையன்றித் தகாதவையொன்றுந்தமக்கிசையார்
  இக்கருமங்கள் எமக்குளவென்னுமிலக்கணத்தான்
  மிக்கவுணர்த்தியர் மேதினிமேவியவிண்ணவரே.

  2.22:
  விண்ணவர்வேண்டிவிலக்கின்றிமேவும் அடிமையெலா
  மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர், வண்துவரைக்
  கண்ணனடைக்கலங்கொள்ளக் கடன்கள் கழற்றியநம்
  பண்ணமருந்தமிழ் வேதமறிந்தபகவர்களே

  2.23:
  வேதமறிந்த பகவர்வியக்க விளங்கியசீர்
  நாதன் வகுத்தவகைபெறுநாம் அவன் நல்லடியார்க்கு
  ஆதாரமிக்க அடிமையிசைந்து அழியாமறைநூல்
  நீதிநிறுத்த நிலைகுலையாவகைநின்றனமே.

  2.24:
  நின்றன மன்புடைவானோர்நிலையில் நிலமளந்தா
  னன்றிதுதீயதிதென்று நடத்தியநான்மறையா
  லின்றுநமக்கிரவாதலின் இம்மதியின் நிலவே
  யன்றி, அடிக்கடி ஆரிருள் தீர்க்க அடியுளதே.

  2.25:
  உளதானவல்வினைக்கு உள்ளம்வெருவி, உலகளந்த
  வளர்தாமரியிணை வஞ்சரணாகவரித்தவர்தாங்
  களைதானெனவெழுங் கன்மந்துறப்பர், துறந்திடிலு
  மிளைதாநிலைசெக எங்கள்பிரானருள்தேனெழுமே.

  2.26:
  தேனார் கமலத்திருமகள்நாதன் திகழ்ந்துறையும்
  வானாடுகந்தவர் வையத்திருப்பிடம், வன்றருமக்
  கானாரிமயமுங்கங்கையும் காவிரியுங்கடலு
  நானாநகரமு நகரமுங் கூடிய நன்னிலமே.

  2.27:
  நன்னிலமாமது நற்பகலாமது, நன்னிமித்த
  மென்னலுமாமது யாதானுமாமங்கடியவர்க்கு
  மின்னிலைமேனி விடும்பயணத்து, விலக்கிலதோர்
  நன்னிலையாநடுநாடிவழிக்கு நடைபெறவே.

  2.28:
  நடைபெற அங்கிபகலொளிநாள் உத்தராயணமாண்டு
  இடைவருகாற்றிரவை இரவின்பதிமின்வருணன்
  குடையுடைவானவர்கோன் பிரசாபதியென்றிவரால்
  இடையிடைபோகங்களெய்தி எழிற்பதமேறுவரே.

  2.29:
  ஏறியெழிற்பதம் எல்லாவுயிர்க்குமிதமுகக்கும்
  நாறுதுழாய் முடிநாதனை நண்ணி, யடிமையினங்
  கூறுகவர்ந்த குருக்கள்குழாங்கள்குரைகழற்கீழ்
  மாறுதலின்றி மகிழ்ந்தெழும்போகத்துமன்னுவமே.

  2.30:
  மன்னும் மனைத்துறவாய் மருண் மாற்றருளாழியுமாய்த்
  தனனினைவாலனைத்தும் தரித்தோங்குந்தனியிறையாய்
  இன்னமுதத்தமுதால் இரங்குந்திருநாரணனே
  மன்னியவன் சரண் மற்றொர்பற்றின்றிவரிப்பவர்க்கே.

  2.31
  வரிக்கின்றனன் பரன்யாவரையென்று மறையதனில்
  விரிக்கின்றதுங் குறியொன்றால் வினையரையாதலின் நாம்
  உரைக்கின்றநன்னெறி ஓரும்படிகளிலோர்ந்து, உலகந்
  தரிக்கின்றதாரகனார் தகவாற் றரிக்கின்றனமே.

  2.32:
  தகவால்தரிக்கின்ற தன்னடியார்களைத் தன்திறத்தின்
  மிகவாதரஞ்செயும் மெய்யருள்வித்தகன் மெய்யுரையின்
  அகவாயறிந்தவர் ஆரணநீதிநெறிகுலைதல்
  உகவாரென, எங்கள்தேசிகருண்மையுரைத்தனரே.

  2.33:
  உண்மையுரைக்குமறைகளில் ஓங்கியவுத்தமனார்
  வண்மையளப்பரிதாதலின் வந்துகழல்பணிவார்
  தண்மைகிடக்கத் தரமளவென்றவியப்பிலதாம்
  உண்மையுரைத்தனர் ஓரந்தவிரவுயர்ந்தனரே.

  2.34:
  உயர்ந்தனன் காவலனல்லார்க்கு, உரிமைதுறந்துயிராய்
  மயர்ந்தமைதீர்ந்து மற்றோர்வழியின்றியடைக்கலமாய்ப்
  பயந்தவன் நாரணன் பாதங்கள்சேர்ந்து, பழவடியார்
  நயந்தகுற்றேவலெல்லாம் நாடும் நன்மனுவோதினமே.

  2.35:
  ஓதுமிரண்டையிசைத்து அருளாலுதவுந்திருமால்
  பாதமிரண்டும் சரணெனப்பற்றி, நம்பங்கயத்தா
  ணாதனைநண்ணி நலந்திகழ்நாட்டிலடைமையெல்லாங்
  கோதிலுணர்த்தியுடன் கொள்ளுமாறுகுறித்தனமே.

  2.36:
  குறிப்புடன்மேவந் தருமங்களின்றி, அக்கோவலனார்
  வெறித்துளவக்கழல் மெய்யரணென்றுவிரைந்தடைந்து
  பிரித்தவினைத்திரள் பின்தொடராவகை அப்பெரியோர்
  மறிப்புடைமன்னருள்வாசகத்தால் மருளற்றனமே.

  2.37:
  மருளற்றதேசிகர் வானுகப்பாலிந்தவையமெலாம்
  இருளற்று இறைவனிணையடிபூண்டுயவெண்ணுதலாற்
  றெருளுற்றசெந்தொழிற்செல்வம்பெருகிச் சிறந்தவர்பால்
  அருளுற்றசிந்தையினால் அழியாவிளக்கேற்றினரே.

  2.38:
  ஏற்றிமனத்தெழில்ஞானவிளக்கை இருளனைத்து
  மாற்றினவர்க்கு ஒருகைம்மாறு மாயனுங்காணகில்லான்
  போற்றியுகப்பதும் புந்தியிற்கொள்வதும் பொங்குபுகழ்
  சாற்றிவளர்ப்பதுஞ் சற்றல்லவோமுன்னம் பெற்றதற்கே.

  2.39:
  முன்பெற்றஞானமும் மோகந்துறக்கலும் மூன்றுரையிற்
  றன்பற்றதன்மையந் தாழ்ந்தவர்க்கீயுந்தனிதகவு
  மன்பற்றிநின்றவகை உரைக்கின்றமறையவர்பாற்
  சின்பற்றியென்பயன் சீரறிவோர்க்கிவைசெப்பினரே.

  2.40:
  செப்பச்செவிக்கமுதென்னத்திகழும் செழுங்குணத்துத்
  தப்பற்றவருக்குத் தாமேயுகந்துதருந்தகவால்
  ஓப்பற்றநான்மறையுள்ளக்கருத்தில் உறைத்துரைத்த
  முப்பத்திரண்டிவை முத்தமிழ்சேர்ந்த மொழித்திருவே.

  2.41:
  புருடன்மணிவரமாகப் பொன்றாமூலப்
  பிரகிருதிமறுவாக மான்றண்டாகத்
  தெருள்மருள்வாளுறையாக ஆங்காரங்கள்
  சார்ங்கஞ்சங்காக மனந்திகிரியாக
  விருடிகங்களீரைந்துஞ்சரங்களாக
  விருபூத மாலை வன மாலையாகக்
  கருடனுறுவா மறையின் பொருளாங்கண்ணன்
  கரிகிரிமேல் நின்று அனைத்துங்காக்கின்றானே.

  2.42:
  ஆராதவருளமுதம் பொதிந்தகோயில்
  அம்புயத்தோனயோத்தி மன்னற்களித்த கோயி
  றோலாததனிவீரன் தொழுத கோயி
  றுணையான வீடணற்க்குத்துணையாங்கோயில்
  சேராதபயனெல்லாஞ்சேர்க்குங்கோயில்
  செழுமறையின் முதலெழுத்துச்சேர்ந்தகோயி
  றீராதவினையனைத்துந்தீர்க்குங்கோயி
  றிருவரங்க மெனத் திகழுங்கோயில் றானே

  2.43:
  கண்ணனடியிணையெமக்குக்காட்டும்வெற்பு
  கடுவினையரிருவினையுங்கடியும்வெற்பு
  திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்பு
  தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
  ண்ணியத்தின் புகலிதெனப் பகழும் வெற்பு
  பொன்னுலகிற் போக மெலாம் புணர்க்கும் வெற்பு
  விண்ணவரு மண்ணவரும் விரும்பும் வெற்பு
  வேங்கடவெற்பென விளங்கும் வேதவெற்பே.

  2.44:
  உத்தமவ மர்த்தல மமைத்த தொரெ
  ழிற்ற _தவினுய்த்த தகணையால்
  அத்திவரக் கன்முடி பத்துமொரு
  கொத்தென வுதிர்த்த திறலோன்
  மத்துறு மிகுத்த தயிர் மொய்த்தவெண்ணைய்
  வைத்த துணுமத்தனிடமாம்
  அத்திகிரி பத்தர்வினை தொத்தறவ
  றுக்குமணி யத்தகிரியே.

  2.45:
  எட்டுமாமூர்த்தியெண் கணன் எண்டிக
  கெட்டிறையெண்பிரகிருதி
  எட்டுமாவரைகளீன்ற வெண்குணத்தோன்
  எட்டெணுமெண்குணமதியோர்க்கு
  எட்டுமாமலரெண் சித்தியெண்பத்தி
  எட்டியோகாங்கமெண்செல்வம்
  எட்டுமாகுணமெட்டெட்டெணுங்கலை
  எட்டிரதமேலதுவுமெட்டினவே.

  2.46:
  ஓண்டொடியாள் திருமகளுந்தானுமாகி
  ஒருநினைவாலீன்ற வுயிரெல்லாமுய்ய
  வண்டுவரைநகர் வாழவசுதேவற்க்காய்
  மன்னவற்குத் தேர்ப்பாகனாய்நின்ற
  தண்டுளவமலர்மார்பன் தானேசொன்ன
  தனித்தருமந்தானெமக்காய்த் தன்னையென்றுங்
  கண்டுகளித்தடி சூடவிலக்காய்நின்ற
  கண்புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே.

  2.47:
  மூண்டாலுமரியதலின் முயலவேண்டா
  முன்னமதிலாசை தனைவிடுகைதிண்மை
  வேண்டாது சரணநெறி வேறோர்கூட்டு
  வேண்டிலயனத்திரம் போல்வெள்கிநிற்கும்
  நீண்டாகுநிறைமதியோர்நெறியிற்கூடா
  நின்றனிமைதுணையாக வென்றன்பாதம்
  பூண்டால் உன்பிழைகளெலாம் பொறுப்பனென்று
  புண்ணியனார் புகழனைத்தும் புகழுவோமே.

  2.48:
  சாதனமுநற்பயனுநானேயாவன்
  சாதகனுமென்வயமாயென்னைப்பற்றுஞ்
  சாதனமுஞ்சரண நெறியன்றுனக்குச்
  சாதனங்களிந்நிலைக்கோரிடையினில்லா
  வேதனைசேர்வேறங்கமிதனில் வேண்டா
  வெறெல்லாநிற்குநிலைநானேநிற்பன்
  றூதனுமாநாதனுமாமென்னைப்பற்றிச்
  சோகந்தீரென வுரைத்தான் சூழ்கின்றானே.

  2.49:
  தன்னினைவில் விலக்கின்றித் தன்னைநண்ணார்
  நினைவனைத்துந்தான் விளைத்தும் விலக்குநாதன்
  என்னினைவையிப்பவத்திலின்று மாற்றி
  இணையடிக் கீழடைக்கலமென்றெம்மைவைத்து
  முன்னினைவால் முயன்ற வினையால்வந்த
  முனிவயர்ந்து முத்திதர முன்னேதோன்றி
  நன்னினை வால் நாமிசையுங்காலம் இன்றோ
  நாளையோ ஓ வென்றுநகைசெய்கின்றானே

  2.50:
  பாட்டுக்குரிய பழையவர் மூவரைப் பண்டொருகான்
  மாட்டுக்கருள் தருமாயன் மலிந்துவருத்துதலா
  னாட்டுகிருள்செக நான்மறையந்திநடைவிளங்க
  வீட்டுக்கிடைகழிக்கே வெளிக்காட்டுமம் மெய்விளக்கே.

  2.51:
  உறுசகட முடையவொரு காலுற்றுணர்ந்தன
  உடன் மருத மொடியவொரு போதிற்றவழ்ந்தன
  உறிதடவுமளவிலுரலோடுற்றுநின்றன
  உறுநெறியோர் தருமன் விடுதூதுக்குகுகந்தன
  மறநெறியர் முறிய பிருதானத்து வந்தன
  மலர்மகள் கைவருட மலற்போதிற் சிவந்தன
  மறுபிறவி யறுமுனிவர் மாலுக்கிசைந்தன
  மனுமுறையில் வருவதோர் விமானத்துறைந்தன
  வறமுடைய விசயனமர் தேரிற்றிகழ்ந்தன
  வடலுரக படமடிய வாடிக்கடிந்தன
  வறுசமய மறிவரியதானத்தமர்ந்தன
  வணிகுருகை நகர் முனிவர்நாவுக்கமைந்தன
  வெறியுடையதுள வமலர் வீறுக்கணிந்தன
  விழுகறியோர் குமரனென மேவிச் சிறந்தன
  விறலசுரர் படையடைய வீயத்துரந்தன
  விடலரிய பெரிய பெருமாள் மென்பதங்களே

  2.52:
  மறையுரைக்கும் பொருளெல்லா மெய்யன்றோர் வார்
  மன்னியகூர் மதியுடையார் வண்குணத்திற்
  குரையுறைக்க நினைவில்லார் குருக்க டம்பாற்
  கோதற்ற மனம் பெற்றார் கொள்வார் நன்மை
  சிறைவளர்க் குஞ்சிலமாந்தர் சங்கேதத்தாற்
  சிதையாத திண் மதியோர் தெரிந்த தோரார்
  பொறை நிலத்தின் மிகும்புனிதர் காட்டும் எங்கள்
  பொன்றாத நன்னெறியிற் புகுதுவாரே.

  2.53:
  இது வழியின்ன முதென்றவர் இன்புலன்வேறிடுவார்
  இதுவழியாமல் வென்றறிவார் எங்கள் டேசிகரே
  இதுவழி எய்துக வென்று உகப்பாலெம் பிழை பொறுப்பார்
  இது வழியா மறையோரருளால் யாமிசைந்தனமே .

  2.54:
  எட்டுமிரண்டுமறியாத வெம்மை இவையறிவித்து
  எட்டவொண்ணா தவிடந்தரும் எங்களம்மாதவனார்
  முட்டவினைத்திரண்மாள முயன்றிடுமஞ்சலென்றார்
  கட்டெழில் வாசகத்தால் கலங்காநிலை பெற்றனமே.

  2.55:
  வானுளமர்ந்தவருக்கும் வருந்தவருநிலைக
  டானுளனாயுகக்குந்தரம் இங்குநமக்குளதே
  கூனுளநெஞ்சுகளாற் குற்றமெண்ணி யிகழ்ந்திடினுந்
  தேனுள பாதமலர்த் திருமாலுக்குத் தித்திக்குமே.

  2.56:
  வெள்ளைப் பரிமுகர்தேசிகராய் விரகாலடியோ
  முள்ளத்தெழுதியது ஓலையிலிட்டனம் யாமிதற்கென்
  கொள்ளத்துனியினும் கோதென்றிகழினுங்கூர்மதியீர்
  எள்ளத்தனையுகவாது இகழாதெம்மெழின் மதியே.

  அடிவரவு : பொய்கை, இன்பத்தில், என்னுயிர், ஆரணனூல்
  நீளவந்து, காளம்வலம், ஆளுமடை, திருவுடன்திருவுடன்,
  புருடன், ஆராதவருள், கண்ணனடி, உத்தம
  எட்டுமா, ஓண்டொடி, மூண்டாலும், சாதனமும், தன்னிலைவில்
  தன்னிலைவில், பாட்டுக்கு, உறுசகடம், மறையுரை, இதுவழி
  எட்டுமிரண்டு, வானுள், வெள்ளை,
  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
  ----

  3. அமிருதசுவாதினி  3.1:
  மூலங்கிளையென ஒன்றிரண்டானமொழியிரண்டு
  மேலொன்றிலையென நின்ற அவ்வித்தகன்றன்னுரையும்
  காலங்கழிவதன் முன்னம் கருத்துறக் கண்டிடவே
  ஞாலம் புகழுநந்தேசிகர் தாம் நமைவைத்தனரே.

  3.2:
  காரணமுங்காவலனுமாகி என்றுங்
  கமலையுடன் பிரியாத நாதனான
  நாரணனுக்கடியேனா னடிமை பூண்ட
  நல்லடியார்க் கல்லான் மற்றொருவர்க் கல்லேன்
  ஆரணங்கள் கொண்டகமும் புறமுங்கண்டால்
  அறிவாகியறிவது மாயறு நான் கன்றிச்
  சீரணிந்த சுடர் போலத் திகழ்ந்து நின்றேன்
  சிலைவி சயன்றேரனைய சிருவேதத்தே.

  3.3:
  யானெனதென்பதொன்றில்லை என்செய்வதவனையல்லால்
  ஆனதறிந்திடுந்தன் னடியார்க்கு எனையாட்படுத்தித்
  தானெனை நல்கி நடத்துகின்றான் தன்னருள் வழியே
  நானுனை வீடு செய்வேனென்ற நந்திரு நாரணனே.

  3.4:
  யாதாமிவை யனைத்தும் படைத்தேந்துமிறைவனுமாய்க்
  கோதாங்குணங்களுடன் குறுகாத குணத்தனுமாய்
  மாதா பிதாவென மன்னுறவாய்க் கதியென்ன நின்றான்
  போதார் திருவுடன் பொன்னருள் பூத்த நம் புண்ணியனே

  3.5:
  இருவிலங்கு கழித்திடரா முடலந்தன்னில்
  இலங்கு நடு நாடியினாலெம்மை வாங்கி
  ஒருவிலங்குநெறியல்லா வழியால் மன்னு
  முயர் வானிலேற்றியுயிர் நிலையுந்தந்து
  பெருவிலங்காமருடன்னால் தன்னடிக்கீழ்ப்
  பிரியாத வமரருடன் பிணைத்துத், தன்னா
  ருருவிலங்குமிசைவிக்கு மும்பர்போகம்
  உகந்து தருந்திரு மாலையுகந்தோநாமே.

  3.6:
  உறவை யிசைந்திறை யில்லா வொருவற்கென்றும்
  ஒண்சுடராயோரெழுத்திலோங்கி நின்றேந்
  துறவறமுந்தூ மதியுந்துயரன் தீர்வுந்
  தூயவர்கட் கானமையு மிரண்டிலுற்றோம்
  அறமுயலுமனைத் துறவாயனைத்து மேந்தும்
  அம்புயத்தாள் கணவனை நாமணுகப் பெற்றோம்
  பிறவியறுத் தடிசூடி யடிமையெல்லாம்
  பிரியாதவமரருடன் பெற்றோ நாமே.

  3.7
  கருமமென ஞானமென வதனாற் கண்ட
  உயிர்கவருங்காதலெனக் கானிலோங்கும்
  அருமறையாற்றரு நிலையிலிந்நாளெல்லாம்
  அடியேனையலையாத வண்ணமெண்ணித்
  தருமமுடையாருரைக் கயானறிந்து
  தனெக்கென்னா வடிமைக்காம் வாழ்ச்சி வேண்டித்
  திருமகளோ டொருகாலும் பிரியா நாதன்
  றிண்கழலே சேதுவெனச் சேர்க்கின்றேனே.

  3.8:
  வினைவிடுத்து வியன் குணத்தா லெம்மையாக்கி
  வெருவுரைகேட்டு அவைகேட்க விளம்பி, நாளுந்
  தனையனைத்து மடைந்திடத் தானடைந்து நின்ற
  தன்றிரு மாதுடனிறையுன் தனியா நாதன்
  நினைவழிக்கும் வினைவழிக்கு விலக்காய் நிற்கு
  நிகரில்லா நெடுங்குணங்கள் நிலைபெறத், தன
  கனை கழற் கீழடைக்கல மாக்காட்சிதந்து
  காரணனாந்தன் காவல் கவர்கின்றானே.

  3.9:
  என்னதியான் செய்கின்றேனென்னா தாருக்கு
  இன்னடிமை தந்தளிப்பான், இமையோர் வாழும்
  பொன்னுலகிற்f றிருவுடனேயமர்ந்த நாதன்
  புனலாரும் பொழிலரங்கந் திகழ மன்னித்
  தன்னகல மகலாத தகவாலோங்குந்
  தகவுடனே தங்கருமந்தானேயெண்ணி
  அன்னையென வடைக்கலங்கொண் டஞ்ச றந்து என்
  னழலாற நிழலார வளிக்கின்றானே.

  3.10:
  ஒண்டொடியாள் திருமகளுந் தானுமாகி
  ஒருநினைவா லீன்ற வுயிரெல்லா முய்ய
  வண்டுவரை நகர்வாழ வாசுதேவற்காய்
  மன்னவற்குத் தேர்ப்பாகனாகி நின்ற
  தண்டுள வமலர் மார்பன் தானே சொன்ன
  தனித்தருமன் தானெமக்காய்த், தன்னையென்றுங்
  கண்டுகளித் தடிசூட விலக்காய் நின்ற
  கண்புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே.

  3.11:
  துய்யமனத்தர் துறையணுகாத துணையிலியேன்
  ஐயமறுத்து உனதாணை கடத்தலகற்றினை நீ
  கையமர் சக்கரக் காவல் காக்குந் திருவருளால்
  வையமளந்த வடிக்கீழ் அடைக்கலம் வைத்தருளே.

  3.12:
  அறியாத விடைச்சி யருமறியும் வண்ணம்
  அம்புயத்தாளுட னந்நா ளவதரித்த
  குறையாதுமில்லாத கோவிந்தா நின்
  குரைகழற் கீழடைக் கலமாங்குறிப்புத் தந்தாய்
  வெறியாரு மலர்மகளு நீயும் விண்ணில்
  விண்ணவர் களடி சூடவிருக்கு மேன்மை
  குறையாத வினையகற்றி யடிமை கொள்ளக்
  குறுகவொரு நன்னாணீ குறித்திடாயே.

  3.13:
  தத்துவமுஞ் சாதனமும் பயனுங்காட்டுந்
  தாராமுதலிரு நான்கும், தன்கருத்தான்
  முத்திவழி நாமுயலும் வகையேகாண
  முகுந்தனிசைத் தருள் செய்தவைந் நாலைந்தும்
  பத்தி தனிற்படிவில்லார் பரஞ்சுமத்தப்
  பார்த்தன்றேர் முன்னே தாந்தாழ நின்ற
  உத்தமனார்த் தமநல்லுரை நாலெட்டும்
  உணர்ந்தவர் தாமுகந்தெம்மை யுணர்வித்தாரே.

  3.14:
  பரக்கும் புகழ்வரும் பைம்பொருள் வாய்த்திடும், பத்தர்களாய்
  இரக்கின்றவர்க்கிவையீந்தால் அறமுளதென்றியம்பார்
  கரக்குங்கருதுடை தேசிகர் கன்றென நமையெண்ணிச்
  சுரக்குஞ்சுரவிகள்போல் சொரிகின்றனர் சொல்லமுதே.

  3.15:
  சோகந்தவிர்க்கும் சுருதிப் பொருளொன்று சொல்லுகின்றோம்
  நாகந்தனக் குமிராக்கதற்கும் நமக்குஞ்சரணாம்
  ஆகண்டலன் மகனாகிய ஆவலிப்பேறிய, ஓர்
  காகம்பிழைத்திடக் கண்ணழிவே செய்த காகுத்தனே.

  3.16:
  ஒருக்காலே சரணாக வடைகின்றாற்கும்
  உனக்கடிமை யாகின்றேனென் கின்றாற்கும்
  அருக்காதே யனைவர்க்கு மனைவராலும்
  அஞ்சேலென்றருள் கொடுப்பன், இதுதானோதும்
  இருக்காலு மெழின் முனிவர் நினைவினாலும்
  இவையறிவார் செயலுட நென்னிசை வினாலும்
  நெருக்காத நீள்விரதமெனக் கொன்றென்னும்
  நெறியுரைத்தார் நிலையுணர்ந்து நிலை பெற்றோமே.

  3.17:
  பொன்னை யிகழ்ந்து விருகங்கள் புல்லிய புல்லுகந்தான்
  மன்னரெடுப்பது அப்பொன்னலதே, மன்னுலகனைத்துந்
  தன்னையடைந்திடத் தானருள் செய்யுந்தனிச்சிலையோன்
  பொன்னடி நாமடைந்தோம் புறமாரென்கொல்செய்திடினே.

  3.18:
  வேதத்திரளின் விதியுணர்ந்தோர்கள் விரித்துரைத்த
  காதற்கதியையும் ஞானத்தையுங் கருமங்களையஞ்
  சாதிக்கவல்ல சரணாகதி தனிநின்ற நிலை
  யோதத்தொடங்கும் எழுத்தின் றிறத்திலுணர்மின்களே.

  3.19:
  மூவுலகுந்தன் பிழையைத் தானே சாற்ற
  முனிவர்களுந்தேவர்களு முனிந்தவந்நாட்
  டாவரி தாயெங்கும் போய்த்தளர்ந்து வீழ்ந்த
  தனிக்காகன் தானிரந்த வுயிர்வழங்கிக்
  காவலினியெமக் கெங்குங்கடனென்றெண்ணிக்
  காணநிலையிலச் சினையன்றிட்ட வள்ளல்
  ஏவல் பயனிரக்கமிதற் காறென்றோதும்
  எழிலுடையாரிணையடிக் கீழிருப்போ நாமே.

  3.20:
  திருத்தம் பெரியவர் சேருந்த்துறையில் செறிவிலர்க்கு
  வருத்தங்கழிந்த வழியருளென்ற நம்மண்மகளார்
  கருத்தொன்ற வாதிவராக முரைத்த கதியறிவார்
  பொருத்தந தெளிந்துரைக்கப் பொய்யிலா மதிபெற்றனமே.

  3.21:
  இடம்பெற்றா ரெல்லாமென் னுடலாய் நிற்ப
  விடர்ப்பிறப்பென் றிவையில்லா வென்னை யன்பா
  லடம்பற்றா மவனென்று நினைந்தான் யாவ
  னவனாவி சரியும்போ தறிவு மாறி
  யுடம்பிற்றா ரூபலம்போற் கிடக்க நானே
  யுய்யும்வகை நினைந்துயர்ந்த கதியாம் லென்ற
  னிடம்பெற்றேன் னுடன்வாழ வெடுப்ப னென்ற
  வெம்பெருமா னருள்பெற்று மருள்செற் றோமே.

  3.22:
  இரண்டுரை யாதநம் மேன முரைத்த வுரையிரண்டின்
  றிரண்ட பொருள்க டெளிந்தடி சூடினந் திண்ணருளாற்
  சுருண்டநஞ் ஞானச் சுடரொளி சுற்றும் பரப்பதன்முன்
  புரண்டது நம்வினை போமிடம் பார்த்தினிப் போமளவே.

  3.23:
  மலையுங்குலையு மென்றெண்ணியும் வன்பெரும்புண்டிதிரங்கித்
  தலையும் வெளுத்தபின் றானேயழிய விசைகின்றிலீர்
  அலையுங்கடல் கொண்ட வையமளித்தவன் மெய்யருளே
  நிலையென்று நாடி நிலைநின்ற பொய்ம்மதி நீக்குமினே.

  3.24:
  கண்ணன் கழல் தொழக் கூப்பியகையின் பெருமைதனை
  எண்ணங்கடக்க வெமுனைத் துறைவரியும் புதலாற்
  றிண்ணமிது வென்று தேறிதெளிந்தபின், சின்மதியோர்
  பண்ணும்பணிதிகள் பாற்றிப் பழந்தொழில் பற்றினமே.

  3.25:
  பொங்குபுனலாறு களிர்புவனமெல்லாம்
  பொற்கழலாளந்தவன்றன் தாளால் வந்த
  கங்கையெனு நதிபோலக் கடல்களேழிற்
  கமலைபிறந்த வனுகந்த கடலேபோலச்
  சங்குகளிலே வனேந்துஞ்சங்கேபோலத்
  தாரிலவன் தண்டுளவத்தாரே போல
  எங்கள்குலபதிகளிவை மேலாமென்றே
  எண்ணிய நல்வார்த்தைகணா மிசைக்கின்றோமே.

  3.26:
  சீர்க்கடலின் திரையென்னத் தகவால்மிக்க
  தேசிகராய்த் திண்ணருளாங்கடலை நீக்கிப்
  பாற்கடலோன் திருவணையாய் நின்று பாரங்
  காணாத பவக்கடலைக் கடத்துகின்றான்
  ஈர்க்குமரக் கலமென்ன விறைவரின்பம்
  எழுந்தழி யுங்குமிழியென விகந்தொழிந்தோ
  மார்க்கினி நாமென் கடவோ நமக்குமாரென்
  கடவாரென்று அடைந்தவர் கட்கறிவித் தோமே.

  3.27:
  காசினியின் மணியனைத்துங்காயா வண்ணன்
  கடைந்தெடுத் தகவுத்துவத்தின் சீர்மைக்கொவ்வா
  காசிமுதலாகிய நன்னகரியெல்லாங்
  கார்மேனியருளாளர் கச்சிக் கொவ்வா
  மாசின் மனந்தெளி முனிவர் வகுத்த வெல்லா
  மாலுகந்த வாசிரியர் வார்த்தைக் கொவ்வாவா
  சியறிந்திவை யுரைத்தோம் வையத்துள்ளீர்
  வைப்பாக விவைகொண்டு மகிழ்மினீரே.

  3.28:
  அந்தமிலாப்பேரின்ப மருந்தவேற்கும்
  அடியோமை யறிவுடனேயென்றுங்காத்து
  முந்தை வினை நிரைவழியி லொழுகாதெம்மை
  முன்னிலையாந்தேசிகர் தம்முன்னே சேர்த்து
  மந்திரமுமந்திரத்தின் வழியுங்காட்டி
  வழிப்படுத்தி வானேற்றியடிமை கொள்ளத்
  தந்தையென நின்றதனித் திருமால் தாளிற்
  றலைவைத் தோஞ்சடகோபனருளினாலே.

  3.29:
  தான் தனக்குத் தன்னாலே தோன்றித் தன்னோர்
  ஒளியணைக்குங்கு ணதாலுந்த ன்னைக்கண்டு
  தான் தனக்கென்றறியாத தன்குணத்தைத்
  தன் குணத்தால் தானிறையில் தானே கூட்டி
  யூன்மருத்துப் புலன் மனமானாங்காரங்கள்
  ஒருமூலப் பிரகிருதி யன்றி நின்ற
  நான் தனக்குத் தான் தனக்கென் றிசைவுதந்த
  நாரணனை நான் மறையால் நான் கண்டேனே.

  3.30:
  கழியாத கருவினையிற் படிந்த நம்மைக்
  காலமிது வென்றொரு காற்காவல் செய்து
  பழியாத நல்வினையிற் படிந்தார் தாளிற்
  பணிவித்துப் பாசங்களடைய நீக்கிச்
  சுழியாத செவ்வழியில் துணைவரோடே
  தொலையாத பேரின்பந்தர மேலேற்றி
  யழியாத வருளாழிப் பெருமான் செய்யும்
  அந்தமிலா வுதவியெலா மளப்பாராரே.

  3.31:
  நின்னருளாங்கதியன்றி மற்றொன்றில்லேன்
  நெடுங்காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்
  உன்னருளுக் கினிதான நிலையுகந்தேன்
  உன் சரணே சரணென்னுந் துணிவு பூண்டேன்
  மன்னிருளாய் நின்ற நிலையெனக்குத் தீர்த்து
  வானவர்த்தம் வாழ்ச்சிதர வரித்தேனுன்னை
  யின்னருளாலினியெனக் கோர்பரமேற்றாமல்
  என்திரு மாலடைக் கலங்கொளென்னை நீயே.

  3.32:
  பரவு மறைகளெலாம் பதஞ்சேர்ந்தொன்ற நின்ற பிரான்
  இரவன்றிரவியின் கலத் தழைத்த வெழிற்படையோன்
  அரவுங்கருடனுமன் புடனேந்தும் அடியிரண்டுந்
  தரவெந்த மக்கரு ளாற்றள ராமனந்தந்தனனே

  3.33:
  அலர்ந்த வம்புயத்திருந்து தேனருந்தி இன்னகல்
  அல்குலாரசைந்தடைந்த நடைகொளாத தனமெனோ
  நலந்தவிர்ந்ததால் அதென்கொன் னாவின் வீறிழந்ததால்
  னாவணங்கு நாதர் தந்த நாவின் வீறிழந்ததென்
  சலந்தவிர்ந்து வாதுசெய்து சாடிமூண்டமிண்டரைச்
  சரிவிலேனெனக்கனைத்துறைத்த வேதிராசர்தம்
  வலந்தருங்கை நாயனார் வளைக்கிசைந்த கீர்த்தியால்
  வாரிபால தாமதமென்று மாசில்வாழிவாழியே.

  3.34:
  சடையன் றிறலவர்கள் பெருஞானக்கடலதனை
  யிடையமிழாது கடக்கினும் ஈதளவென்றறியார்
  விடையுடனேழன்றடர்த்தவன் மெய்யருள் பெற்றநல்லோர்
  அடையவறிந்துரைக்க அடியோமுமறிந்தனமே.

  3.35:
  பாவளருந் தமிழ்மறையின் பயனே கொண்ட
  பாண்பெருமாள் பாடியதோர் பாடல்பத்திற்
  காவலனுங்கணவனுமாய்க் கலந்துநின்ற
  காரணனைக் கறுத்துறநாங்கண்டபின்பு
  கோவலனுங்கோமானுமானவந்நாள்
  குரவைபிணை கோவியர்தங்குறி பேகொண்டு
  சேவலுடன் பிரியாத பெடைபோற்சேர்ந்து
  தீவினையோர் தனிமையெலாந் தீர்ந்தோநாமே.

  3.36:
  ஆதிமறையென வோங்கு மரங்கத்துள்ளே
  அருளாருங்கடலைக் கண்டவன் நம்பாணன்
  ஓதியதோரிரு நான்குமிரண்டுமான
  ஒருபத்தும் பற்றாகவுணர்ந்துரைத்தோ
  நீதியறியாத நிலையறிவார்க்கெல்லா
  நிலையிதுவேயென்று நிலைநாடிநின்றோம்
  வேதியர்தாம் விரித்துரைக்கும் விளைவுக்கெல்லாம்
  விதையாகுமிது வென்றுவிளம்பினோமே.

  3.37:
  காண்பன வுமுரைப்பனவு மற்றொன்றிக்
  கண்ணனையே கண்டுரைத்த கடியகாதற்
  பாண்பெருமாளருள் செய்த பாடல்பத்தும்
  பழமறையின் பொருளென்று பரவுகின்றோம்
  வேண்பெரிய விரிதிரை நீர் வையத்துள்ளே
  வேதாந்த வாரியெனன்றியம்பநின்றோ
  நாண்பெரியோமல்லோம் நாம் நன்றுந்தீது
  நமக்குரைப் பாருளரென்று நாடுவோமே.

  சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு : மூலம், காரணமும், யானெனது,
  யாதாமிவை, இருவிலங்கு கழித்து, உறவை,
  கருமமென, வினைவிடுத்து, என்னதியான்,
  ஒண்டொடியாள், துய்ய மனத்தர், அறியாத,
  தத்துவமும், பரக்கும், சோகம், ஒருக்காலே,
  பொன்னை, வேதத்திரள், மூவுலகும், திருத்தம்,
  இடம்பெற்றார், இரண்டு, மலையும், கண்ணன்கழல்,
  பொங்கு, சீர்க்கடல், காசினி, அந்தமிலாபேர்,
  தான்தனக்கு, கழியாத, நின்னருள், பரவு,
  அலர்ந்த, சடையன், பாவளரும், ஆதிமறை,
  காண்பனவும், அடற்புள்.
  ---

  4. பரமபதசோபானம்  சிறப்புத்தனியன்
  தேனேறு தாமரையா டிருமார் பன்றன்
  றிண்ணருளா லவனடியில் விவேகம் பெற்றிங்
  கூனேறு பவக்குழியை வெறுத்த தற்பி
  னூர்விரத்தி யுடன்வினையின் றிரளுக் கஞ்சிக்
  கூனேறு பிறையிறையோன் சாபந் தீர்த்தான்
  குரைகழலே சரணடைந்து குரம்பை விட்டு
  வானேறும் வழிப்படிக ளடைவே கண்ட
  வண்புகழ்த்தூப் புல்வள்ள லருள்பெற் றோமே.

  4.1:
  அடற்புள் ளரசினு மந்தணர் மாட்டினு மின்னமுதக்
  கடற்பள்ளி தன்னினுங் காவிரி யுள்ள முகந்தபிரா
  னிடைப்பிள்ளை யாகி யுரைத்த துரைக்கு மெதிவரனார்
  மடைப்பள்ளி வந்த மணமெங்கள் வார்த்தையுண் மன்னியதே.

  4.2:
  கள்ள மனத்துடன் கண்டு முயன்ற கடுவினையா
  னள்ளிரு ளாழியி னற்சுவை யைந்தென நாடியவோ
  ரள்ளலி னாளும் விழுந்தழி யாவகை யாரணநூல்
  வள்ளல் வழங்கிய வான்படி யான வழியிதுவே.

  4.3:
  அருவுருவானவையனைத் துமறிவாரேனும்
  அருங்கலைகள் கற்றுரைக்க வல்லாரேனுந்
  தரும வழியழியாமற் காப்பாரேனுந்
  தனிமறையின் தாற்பரியந்தருவாரேனும்
  இருவினையினொழுக்கத் தாலேவலோராது
  இங்கேநாஞ்சிறையிருந்த வீனந்தீர்க்குந்
  திருமகளார் பிரியாத தேவன் றிண்ணந்
  தேறாதார் திண்படியிலேறதாரே.

  4.4:
  மறுத்தார் திருவுடன் மார்பிற்றதரித்வன் வாசகத்தை
  மறுத்தார் மயக்கமும் மற்றதனால் வந்தமாநரகு
  நிறுத்தார் பவத்தில் நெடுநாளுழன்றமை கண்டதனால்
  வெறுத்து, ஆரண நெறியே வெள்கியோடவிரைவர்களே.

  4.5:
  வான்பட்ட மன்னிருளில் மயங்குமாறு
  மறித்தொரு காலெனை யூழி சென்றால் அன்றோர்
  ஊன்பட்ட வுடலாழி வினை யொழுக்கில்
  ஒருகரையுங் காணாதே யொழுகு மாறுந்
  தேன்பட்ட விடம்போலத்தித்திக்கின்ற
  சிறுபயனே யுறுபயனென்ற ருந்துமாறுந்
  தான்பட்ட படியிந் நேர்தானே கண்டு
  தளர்ந்திடு மேல்வளர்ந்திடுமே தக்கவாறே.

  4.6:
  உலகத்துயர்ந்தவர் ஒன்றும்பயனிலு றுந்துயரும்
  அலகிற்படாத அப்போகங்கவர்ந்தெழுமம் புயத்தோன்
  கலகத் தொழில் மதுகைடபராற் படுங்கட்ட மெண்ணிற்
  பலகற்ற மெய்யடியார் படியாரிக்கடும்பவத்தே.

  4.7:
  தந்திரங்கள ளவிலராய்த் தனத்தால் மிக்கதார்
  வேந்தர் தொழவைய மாண்டார் மாண்டார்
  சந்திரனுஞ்சூரியனும் வீயுங்காலந்
  தாரகையின் வடமுற்றுத், தனிவானாளும்
  இந்திரனுமேறுயர்த்த வீசன்றானும்
  ஈரிரண்டு முகத்தானுமில்லா வந்நா
  ணந்திருமால் நிலைகண்டார் நாகமெல்லா
  நரகென்று நற்பதமே நாடுவாரே.

  4.8:
  துறவறமே துணிவார் துணுக்கற்ற விளந்துணிவோர்
  உறவிலராதலின் நாமுயர்ந்தாரு டனொன்றி நின்றோ
  மறவழி மாற்றி எம்மையலைத் தீர்த்தவர் மன்னருளாற்
  கறவையுகந்த பிரான் கழல் சூடுங்கருத்தினமே.

  4.9:
  வந்தனபோல் வருவனவு மனந்தமாகி
  மாளாத துயர்தருவல் வினை நெருப்புக்கு
  இந்தனமாயெண்ணிறந்த காலமெல்லாம்
  இன்னமும் மிப்பவக்குழிக்கே யிழியா வண்ணம்
  வெந்ததொரு குழவியை நற்குமரனாக்கும்
  வெறித்துள வவித்தகனார் விதியே கொண்டார்
  பந்தனமா மவையனைத்தும் பாறுகைக்குப்
  பழ மறையின் பரம நெறி பயிலுவாரே.

  4.10:
  கருமாலையில் வருங் கட்டங்கழிக் குங்கருத் துடையார்
  ஒருமால்பெருகும் யோகின் முயன்றும் அதன்றியு நந்
  திருமாலடியிணை திண் சரணாகுமெனவரித்துந்
  தருமாலினியவை தானேயெனத் தக வெண்ணுவரே.

  4.11:
  முஞ்செய்த வினைத்திரளின் முளைத்த தன்றி
  முற்றுள்ள முதலரிந்து முளைத்த கூற்றிற்றன்
  செய்ய திருவருளா லிசைவு பார்த்துத்
  தழல்சேர்ந்த தூலமெனத் தானே தீர்த்துப்
  பின்செய்த வினையினினை வொன்றா தொன்றும்
  பிழைபொறுத்து வேறுளது விரகான் மாற்று
  மெஞ்செய்ய தாமரைக்கட் பெருமா னெண்ண
  மெண்ணாதா ரெட்டிரண்டு மெண்ணா தாரே.

  4.12:
  உறையிட்ட வாளென வூனு ளுறையு முயோகியரை
  நறைமட் டொழிவற்ற நற்றுள வேந்திய நாயகன்றா
  னிறைமட் டிலாத நெடும்பயன் காட்ட நினைந்துடலச்
  சிறைவெட்டி விட்டு வழிப்படுத் தும்வகை செய்திடுமே.

  4.13:
  முங்கருவியீரைந்தும் மனத்திற்கூட்டி
  முக்கியமாமருத்திலவை சேர்த்து, அதெல்லாம்
  நன்குணருமுயிரினிற்சேர்த்து ஐம்பூத்ததை
  நண்ணுவித்துத் தான் றன் பால்வைக்கு நாதன்
  ஒன்பதுடன் வாசலி ரண்டுடைத் தாயுள்ளே
  ஒரு கோடிதுயர் விளைக்கு முடம்பா யொன்றும்
  வன் சிறையின் றலைவாசல் திறந்து நம்மை
  வானேற வழிபடுத்த மனமுற்றானே.

  4.14:
  தெருளார் பிரமபுரத் திறைசேர்ந்து இடந்தீர்ந்தவர் தா
  மருளார் பிரமபுரச் சிறைதீர்ந்தபின் வந்தெதிர்கொண்டு
  அருளாலமரர் நடத்த இம்மாயயை கடந்த தற்பின்
  சுருளார் பவநரகச் சுழலாற்றின் சுழ்ற்சியிலே.

  4.15:
  விழியல்லால் வேலில்லை விண்ணின் மாதர்
  மேனியல்லால் வில்லில்லை மீனவற்கு
  மொழியல்லால முதில்லையென்றுமுன்னாண்
  முத்திவழி முனிந்தடைந்த மோகந்தீர்ந்தோங்
  கழியல்லாற் கடலில்லை யென்பார்போலக்
  காரியமே காரணமென்றுரைப்பார் காட்டும்
  வழியல்லா வழியெல்லங்கடந்தோம் மற்றும்
  வானேறும் வழிகண்டோ மகிழ்ந்திட்டோ மே.

  4.16:
  வன்பற்றுடன் மயல் பூண்டு மற்றோர்கதியால், இனநாள்
  என்பற்றது பெறுந்தானமுமெத்தனை போதுளதாந்
  துன்பற்ற தன்றுணிவாற் றுயர்தீர்க்குந்துழாய் முடியான்
  இன்புற்ற நல்வழியால் ஏற்றுநற்பதமெண்ணுவமே.

  4.17:
  பண்டையிருவினையாற்றிற் படிந்து பாரங்
  காணாதே யொழுகிய நாம் பாக்கியத்தால்
  வண்டமருமலர் மாதர் மின்னாய் மன்ன
  வைசயந்தி மணிவில்லாய் விளங்க, வான்சேர்
  கொண்டலருண் மழை பொழியவந்த தொப்பாங்
  குளிர்ந்து தெளிந்தமுதாய விரசை யாற்றைக்
  கண்டணுகிக் கருத்தாலே கடந்து மீளாக்
  கரைகண்டோ ர் கதியெல்லாங்கதித் திட்டோ மே.

  4.18:
  பூவளருந்தி ருமாது புணர்ந்த நம்புண்ணியனார்
  தாவளமான தனித்திவஞ்சேர்ந்து தமருடனே
  நாவளரும் பெருநான் மறையோதிய கீதமெல்லாம்
  பாவளருந் தமிழ்ப் பல்லாண்டிசையுடன்பாடுவமே.

  4.19:
  அடலுரகமுண்டு மிழ்ந்தவருக்கன் போல
  வழுக்கடைந்து கழுவிய நற்றரளம் போலக்
  கடலொழுகிக் கரைசேர்ந்த கலமே போலக்
  காட்டுதீக் கலந்தொழிந்த களிறேபோல
  மடல்கவரு மயல்கழிந்த மாந்தர்போல
  வஞ்சிறைபோய் மன்னர்பதம் பெற்றார்போல
  உடன்முதலா வுயிர்மறைக்கு மாயைநீங்கி
  யுயர்ந்த பதமே றியுணர்ந்தொன்றினோமே.

  4.20:
  மண்ணுலகில் மயல்தீர்ந்து மனந்ததும்பி
  மன்னாத பயனிகந்து, மாலேயன்றிக்
  கண்ணிலதென்றஞ்சியவன் கழலே பூண்டு
  கடுஞ்சிறை போய்க்கரையே றுங்கதியேசென்று
  விண்ணுலகில் வியப்பெல்லாம் விளங்கக் கண்டு
  விண்ணவர்தங்குழாங்களுடன் வேதம்பாடிப்
  பண்ணுலகிற் படியாத விசையாற்பாடும்
  பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே

  4.21:
  மாளாத வினையனைத்தும் மாளநாம் போய்
  வானேறி மலர்மகளாரன்பூணுந்
  தோளாத மாமணிக்குத் தொண்டுபூண்டு
  தொழுதுகந்து தோத்திரங்கள் பாடியாடிக்
  கேளாத பழமறையின் கீதங்கேட்டுக்
  கிடையாத பேரின்பம் பெருகநாளு
  மீளாத பேரடிமைக்கன்பு பெற்றோ
  மேதினியிலி ருக்கின்றோம் விதியினாலே.

  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு : அடற்புள், கள்ளமன, அருவுரு-அனைத்தும்,
  மறுத்தார், வான்பட்ட, உலகத்து, தந்திரங்களளவிலர்,
  துறவறமே, வந்தன, கருமாலை, முஞ்செய்த,
  உறையிட்ட, முன்கருவி, தெருளார், விழியல்லால்
  வன்பற்றுடன், பண்டையிரு, பூவளரும், அடலுரகம்,
  மண்ணுலகின், மாளாத, எண்டள.
  ---

  5. பரமதபங்கம்  5.1:
  எண்டள வம்புயத்துள் இலங்கும்மறுகோணமிசை
  வண்பணிலந்திகிரி வளைவில்வளைவாய்முசலந்
  திண்கையிலகுசம் சீர்திகழுங்கதை செங்கமலம்
  எண்படையேந்திநின்றான் எழிலாழியிறையவனே.

  5.2:
  விடுநெறியஞ்சி விடத் தொடக்கிய
  விதியரடைந்து தொழத்த ழைத்ததெழு
  விழியருள் தந்து விலக்கடிக்களை
  விரகிலியம்பி விலக்கி வைத்தனர்
  கொடுவினையென் பதனைத் தினைத்தனை
  கொணர்த லிகந்த குணத்தனத்தினர்
  குருகையில் வந்து கொழுப்படக்கிய
  குலபதி தந்த குறிப்பில் வைத்தனர்
  கடுநரகன் புகழற்றி மற்றொரு
  கதி பெறுமன்பிலெமைப் பொருத்தினர்
  கமலையுகந்த கடற் கிடைக்கடல்
  கருணை யுயர்ந்ததிடர்க் கொருக்கினர்
  படுமுதலின்றி வளர்த்த நற்கலை
  பலபலவொன்ற வெமக்குரைத்தனர்
  பழ மறையந்தி நடைக் கிடைச்சுவர்
  பரமதமென்றதிடித்த பத்தரே.

  5.3:
  போமுரைக்கும் பொருள் யாமறியோம் பொருளார் மறையிற்
  றாமுரைக்கின்றன தாமேயறியுந் தரமுடையார்
  ஆமுரைக்கென்றி வையாய்ந்தெடுத்து ஆரண நூல் வழியே
  நாமுரைக்கும் வகை நல்லருளேந்திநவின்றனரே.

  5.4:
  சித்துமசித்து மிறையுமெனத் தெளிவுற்றுநின்ற
  தத்துவ மூன்றும் தனித்தனிகாட்டுந்தனி மறையான்
  முத்திவழிக்கிது மூலமெனத் துணிவார்களையுங்
  கத்தி மயக்குங்கத கரை நாங்கடிகின்றனமே.

  5.5:
  முத்தின் வடங்களென முகுந்தன் புனைமூவகையாஞ்
  சித்திலருசுருதிச் செவ்வைமாறிய சிந்தைகளாற்
  பத்திலிரண்டு மெய்க்கப் பகட்டும் பரவாதியர்தங்
  கத்தில் விழுந்தடைந்த அழுக்கின்று கழற்றினமே.

  5.6:
  நாக்கியலும் வகை நம்மையளித்த வர்நல்லருளாற்
  பாக்கியமேந்திப் பரனடியார் திறம்பார்த்ததற்பின்
  றாக்கியர் தங்கள் டலைமிசை தாக்கித் தனிமறைதான்
  போக்கிய மென்றதனில் பொய்ம்மதங்களைப் போக்குவமே.

  5.7:
  தீவகை மாற்றி அன்றோர்தேரிலா ரணம்பாடிய நந்
  தேவகிசீர் மகனார் திறம்பாவருள் சூடியநா
  மூவகைய மறியாத்தத்துவத்தின் முகமறிவார்
  நாவகையே நடத்தும் நடைபார்த்து நடந்தனமே.

  5.8:
  வேலைப்புறமகங்காண்பது போல் வேதநன்னெறிசேர்
  நூலைப்புற மகங்காண்டலில் னுண்ணறிவின்றி நின்றீர்
  மாலைப் பெற வழிகாட்டிய தேசிகர் வாசகமே
  யோலைப்புறத் திலெழுதுகின்றோம் உள்ளெழுதுமினே.

  5.9:
  சிறைநிலையாம் பவத்தில் சிறுதேனின்பமுண்டுழல்வார்
  மறைநிலைகண்டறியா மயன் மாற்றிய மன்னருளாற்
  றுறைநிலை பாரமெனத் துளங்காவமுதக்கடலாம்
  இறைநிலையாமுரைத்தோம் எங்குருக் களியம்பினவே.

  5.10:
  வெறியார் துளவுடை வித்தகன்றன்மையின் மெய்யறிவார்
  குறியார் நெடியவரென்று ஒருகுற்றம் பிறர்க்குரையார்
  அறியார் திறத்திலருள்புரிந்து ஆரண நன்னெறியாற்
  சிறியார் வழிகளழிப்பதுங் தீங்குகழிப்பதற்கே.

  5.11:
  மிண்டுரைக்க விரகு தருந்தருக்கங்கொண்டே
  வேண்டுங்கால் வேண்டுவதே விளம்புகின்றார்
  கண்டதற்கு விபரீதங்கத்து கின்றார்
  காணாத குறைமறையிற் காட்ட நிற்பார்
  பண்டொருத்தன் கண்டுரைத்தேன் நானேயென்னப்
  பலவகையிலு பாதிகளாற் படிந்து வீழ்வார்
  கொண்டலொக்குந் திருமேனிமாயக் கூத்தன்
  குரைகழல் சேர்விதிவகையிற் கூடாதாரே.

  5.12:
  கண்டது மெய்யெனில் காணுமறையிலறிவு கண்டோ ம்
  கண்டதலாத திலதெனில் கண்டிலங்குற்றமிதிற்
  கண்டதுபோல் மறைகாட்டுவதும் கண்டதொத்ததனால்
  உண்டதுகேட்கும் உலோகாயதரென்றுமீறுவதே.

  5.13:
  கண்டதனாற் கானாத தனுமிக்கின்றார்
  கண்டொருத்தனுரைத்ததனைக் கவருகின்றார்
  உண்டுபசிகெ டுமென்றே யுனர்ந்துண் கின்றார்
  ஒன்றாலேயொன்றைத் தாஞ்சதிக்கின்றார்
  பண்டுமுலையுண்டதனால் முலையுண்கின்றார்
  பார்க்கின்றார் பலவல்லாத் தம்மை மற்றும்
  கண்டு மதி கெட்ட நிலை காணகில்லார்
  காணாத திலதென்று கலங்குவரே.

  5.14:
  காணாதில தெனுங்கல்வி யினாரைக் கடிந்ததற்பின்
  கோணார்குதர்க்கங்கள் கொண்டே குழப்பும் பவுத்தர்களி
  னாணாதனைத்துமில தென்றும் நால்வகையன்றிதென்றும்
  வாணாளறுக்கின்ற மத்திமத்தான் வழிமாற்றுவமே.

  5.15:
  மானமிலைமேயமிலை யென்றும் மற்றோர்
  வாதநெறியிலையென்றும் வாதுபூண்ட
  தானுமிலை தன்னுரையும் பொருளுமில்லை
  தத்துவத்தினுணர்த்தி சயமில்லையென்றும்
  வானவருமான வருமனமும் வெள்க
  வளம்பேசுமதி கேடன்மத்திமத்தான்
  றேனநெறிகொண்டனைத்துந்தி ருடாவண்ணஞ்
  செழுமதிபோலெழு மதியாற் சேமித்தோமே.

  5.16:
  முற்றுஞ்சகத்திலதென்றே பகட்டியமுட்டரை, நாஞ்
  சுற்றுந்துறந்து துறையில்நின்றே துகளாக்கியபின்
  மற்றொன்றிலது மதிபலவுண்டென்று வஞ்சனையாற்
  சற்றுந்துறந்த யோகாசரனைச் சதிக்கின்றனமே.

  5.17:
  உளக்கதியை நாமுள்ளியுள்ளந்தேறி
  உலகத்தாருகந்திசைய வுலகுண்டென்றோம்
  இளக்கவாரிதாகிய நற்றருக்கஞ்சேர்ந்த
  வெழின்மறையிலீ சனுடனெம்மைக் கண்டோ ம்
  விளக்குநிரைபோல் மதிகள் வேறாய் வேறொன்
  றறியாதே விளங்குமென விளம்புகின்ற
  களக்கருத்தன் கண்ணிரன்டு மழித்தோம் நாணாக்
  காகம்போற் றிரிந்தவனென் கதறுமாறே.

  5.18:
  பொருளொன்றிலதென்று போதமொன்றுகொண்ட பொய்யரை, நாந்
  தெருள்கொண்டு தீர்த்த பின் காணவொண்ணாப் பொருள்தேடுகின்ற
  மருள்கொண்ட சூதுரைக்கும் சௌத்திராந்திகன்வண்ணிக்கை நாம்
  இருள்கொண்ட பாழ்ங்கிணரென்று இகழ்ந்தோடவியும்புவமே.

  5.19:
  நிலையில்லாப் பொருள்மதியை விளைத்துத் தான்
  சேர்நிறங்கொடுத்துத் தானழியுந், தன்னால்வந்த
  நிலையில்லாமதி தன்னில்நிறத்தைக் காணும்
  இதுகாணும் பொருள் காண்கையென்ற நீசன்
  முலையில்லாத் தாய்கொடுத்த முலைப்பாலுண்ணும்
  முகமில்லாமொழியெனவே மொழிந்த வார்த்தை
  தலையில்லாத் தாளூருங்கணக்காய் நின்ற
  கட்டளை நாங்கண்டின்று காடினோமே.

  5.20:
  காண்கின்றவனிலை காட்சியுங்கண்டதுமுண்டு, அவைதாம்
  எண்கொண்டனவன்று இவற்றிற்குணமு நிலையுமிலை
  சேண்கொண்டசந்ததியால் சேர்ந்துமொன்றென நிற்க்குமென்ற
  கோண்கொண்டகோளுரை வைபாடிகன் குறைகூறுவமே.

  5.21:
  கும்பிடுவாராரென்று தேடுகின்றார்
  குணங்களையுந்தங்க ளுக்குக் கூறுகின்றார்
  தம்படியைத்தமர்க்குரைத்துப் படிவிக்கின்றார்
  தமக்கினிமேல் வீடென்று சாதிக்கின்றார்
  தம்புடவையுணல் குறித்து நெடிதெண்கின்றார்
  சந்ததிக்குத் தவம்பலிக்கத் தாம் போகின்றார்
  செம்படவர் செய்கின்ற சிற்றினிப்பைச்
  சேவகப் பற்றுடனே நாஞ்செகுத்திட்டோ மே.

  5.22:
  வேதங்கண் மௌலிவிளங்க வியாசன் விரித்த நன்னூற்
  பாதங்களான பதினாறில் ஈசன்படிமறைத்துப்
  பேதங்களில்லையென்று ஓர்பிரமப்பிச்சியம்புகின்ற
  போதங்கழிந்தவனைப் புத்தர்மாட்டுடன் பூட்டுவமே.

  5.23:
  பிரிவில்லா விருளொன்று பிணக்கொன்றில்லப்
  பெருவெயிலை மறைத்துலகங்காட்டுமென்ன
  வறிவில்லா வறிவொன்றையவித்தைமூடி
  யகம்புறமென்றி வையனைத்துமைக்குமென்பார்
  செறிவில்லாப் புத்தருடன் சேர்ந்துகெட்டார்
  சீவனையுமீசனையுஞ்சிதைக்கப்பார்த்தார்
  நெறியில்லா நேர்வழியுந்தானேயானா
  னெடுமாலை நாமடைந்து நிலைபெற்றோமே.

  5.24:
  சோதனைவிட்டொருத்தஞ்சொல மெய்யெனச் சோகதரைச்
  சேதனையற்றவரென்று சிதைத்தபின், சீவர்கட்கோர்
  வேதனைசெய்கை வெறுமறமென்று விளம்பிவைத்தே
  மாதவமென்று மயிர் பறிப்பார்மயல் மாற்றுவமே.

  5.25:
  சொன்னார் தாஞ்சொன்ன தெலாந்துறவோ மென்றுஞ்
  சொன்னதுவே சொன்னதலதாகுமென்றுந்
  தின்னாதுந்தின்னுமது மேகமென்றுஞ்
  சிறியனுமாம் பெரியனுமாஞ்சீவனென்றும்
  மன்னாதுமன்னுமதுமொன்றேயென்றும்
  வையமெலாம் விழுகின்ற தென்றுமென்றுந்
  தென்னாடும் வடநாடுஞ்சிரிக்கப் பேசுஞ்
  சினநெறியார் சினமெல்லாஞ்சிதைத்திட்டோ மே.

  5.26:
  ஏகாந்திகமொன்றுமில்லையென்று ஆசையைத்தாமுடுப்பார்
  சோகாந்தமாகத் துறப்புண்டபின் றொழில்வைதிகமென்று
  ஏகாந்திகள்சொன்ன வீசன்படியில் விகற்பமெண்ணும்
  லோகாந்தவீணர்தம் வேதாந்த வார்த்தை விலக்குவமே.

  5.27:
  ஒன்றெனவும் பலவெனவுந்தோற்றுகின்ற
  உலகெல்லாமொரு பிரமந்தானேயாக்கி
  நன்றெனவுந்தீதெனவும் பிரிந்தவெல்லா
  நன்றன்றுதீதன்றேயென நவின்றார்
  கன்றுமலர்பசுவு மலராகி நின்றே
  கன்றாகிப் பசுவாகி நின்றவண்ணம்
  இன்றுமறைமாட்டுக்கோரிடையனான
  ஏகாந்தியிசைந்திட நாமியம்பினோமே.

  5.28:
  சாயா மறைகளிற் சத்தந்தெளிந்திடச் சாற்றுதலாற்
  றூயாரிவரென்று தோன்றநின்றே பலசூதுகளான்
  மாயாமதமும் மறுசினவாதும் பவுத்தமுஞ்சேர்
  வையாகரணர்சொல்லும் மறுமாற்றங்கள் மாற்றுவமே.

  5.29:
  கலத்திற் கலங்கி வருங்காணிக்கெல்லாங்
  கண்ணாறுசதிர வழிகட்டுவார் போல்
  உலகத்தில் மறைசேர்ந்தவுரைக டம்மால்
  ஒருபிழியுஞ்சேராமலு பகரித்தார்
  பலகத்தும் பவுத்தர்முதலான பண்டைப்
  பகற்கள்ளர் பகட்டழிக்கப் பரவும் பொய்யாஞ்
  சிலகற்றுச் சித்தாந்தமறியகில்லாச்
  சிறுவரினி மயங்காமற் சேமித்தோமே.

  5.30:
  கண்டதலாதன கட்டுதலாற்f கண்டவிட்டதனாற்
  பண்டுள தானமறைக்குப் பழமையை மாற்றுதலாற்
  கொண்டதுமீசனைக் கொள்ளாவகையென்று கூறுதலால்
  கண்டகராய் நின்ற காணாதர் வாதங்கழற்றுவமே.

  5.31:
  ஆகமத்தை யனுமான மென்கையாலும்
  அழியாத மறையழிக்க நினைத்தலாலும்
  போகமற்றொரு பலம் போற்கிடக்கை தானே
  புண்ணியர்க்கு வீடென்று புணர்த்தலாலு
  மாகமொத்த மணிவண்ணன் படியை மாற்றி
  மற்றவனுக்கொரு படியை வகுத்தலாலுங்
  காகமொத்த காணாத தன் கண்ணை வாங்கிக்
  காக்கைக்காரென்றலற்றக் காட்டினோமே.

  5.32:
  கோதம நூல்களைக் குற்றமிலாவகை கூட்டலுமாங்
  கோதுகழித்து ஒருகூற்றிற்குணங்களைக் கொள்ளவுமாம்
  யாது மிகந்து ஒருநீதியையாமேவகுக்கவுமாம்
  வேதியர் நன்னயவித்தரமென்பது மெய்யுளதே.

  5.33:
  நான் மறைக்குத்துணையாக நல்லோரெண்ணு
  நாலிரண்டிலொன்றான நயநூல்தன்னிற்
  கூன்மறைத்தல் கோதுளது கழித்தன் மற்றோர்
  கோணாத கோதில் வழிவகுத்தலன்றி
  யூன்மறைத்த வுயிரொளிபோலொத்த தொவ்வாது
  உயிரில்லாக்காணாத முரைத்தவெல்லாம்
  வான்மறைக்கமடிகோலும் வண்ணமென்றொ
  மற்றிதற்கார் மறுமாற்றம் பேசுவாரே.

  5.34:
  ஈசனுமற்றணங்குமிலதென்று எழில்நான்மறையிற்
  பேசியநல்வினையால் பெரும்பாழுக்கு நீரிறைக்கு
  நீசரைநீதிகளானிக மாந்தத்தினூல் வழியே
  மாசின்மனங்கொடுத்தும் மறுமாற்றங்கண்f மாற்றுவமே.

  5.35:
  கனைகடல்போலொரு நீராஞ்சூத்திரத்தைக்
  கவந்தனையு மிராகுவையும் போலக்கண்டு
  நினைவுடனே நிலைத்தரும மிகந்து நிற்கு
  நீசர்நிலை நிலைநாட வண்ணமெண்ணி
  வினைபரவுசைமினியார் வேதநூலை
  வேதாந்த நூலுடனே விரகாற்கோத்த
  முனையுடைய முழுமதி நம்முனிவர்சொன்ன
  மொழிவழியே வழியென்று முயன்றிட்டோ மே.

  5.36:
  முக்குணமாய்நின்ற மூலப்பிரகிருதிக்கு, அழியா
  வக்குணமற்ற அருத்துணை மற்றதற் கீசனிலை
  இக்கணனைப்படியை யைந்துமெண்ணில் முன்முத்தியென்னும்
  பக்கணவீணர் பழம்பகட்டைப் பழுதாக்குவமே.

  5.37:
  ஈசனிலனென் பதனா லென்றுஞ்சீவர்
  எங்குமுளரிலருணர்வை யென்றவத்தாற்
  பாசமெனும் பிரகிருதிதன்னால் என்றும்
  பலமுமிலை வீடுமிலை யென்னும் பண்பாற்
  காசினி நீர் முதலான காரியங்கள்
  கச்சபத்தின் கால்கை போலென்னுங்கத்தால்
  நாசமலதிலை காணும் ஞாலத்துள்ளீர்
  நாமிசையாச் சாங்கியத்தை நாடுவார்க்கே.

  5.38:
  தாவிப்புவனங்கள் தாளினை சூட்டிய, தந்தையுந்திப்
  பூவிற்பிறக்கினும் பூதங்களெல்லாம் புணர்த்திடினு
  நாவிற்பிரிவின்றி நாமங்கை வாழினும் நான்மறையிற்
  பாவித்ததன்றியுரைப்பது பாறும் பதர்த்திரளே.

  5.39:
  காரணனாயுலக ளிக்குங்கண்ணன் றேசைக்
  கண்ணாடி நிழல் போலக் காண்கையாலுந்
  தாரணையின் முடிவான சமாதிதன்னைத்
  தனக்கேறும் விளக்கென்று தனிக்கையாலுங்
  காரணமாமது தனக்குப்பயனாஞ்
  சீவன்கைவலிய நிலையென்று கணிக்கையாலுங்
  கோரணியின் கோலமெனக்குக் குறிக்கலாகுங்
  கோகனகத்தயன் கூறுஞ்சமயக் கூற்றே.

  5.40:
  சாதுசனங்களெலாஞ்சச்சை யென்னும் சலம்புணர்த்தார்
  கோதம சாபமொன்றால் கொடுங்கோலங்கள் கொண்டுலகிற்
  பூதபதிக்கடியா ரெனநின்று அவன் பொய்யுரையால்
  வேதமகற்ற நிற்பார் விகற்பங்கள் விலக்குவமே.

  5.41:
  மாதவனே பரனென்று வையங்காண
  மழுவேந்திமயல் றீர்க்க வல்லதேவன்
  கைதவமொன்று கந்தவரைக் கடியசாபங்
  கதிவியதாலதன் பலத்தைக்கருதிப் பண்டை
  வேதநெறியணுகாது விலங்குதாவி
  வேறாகவிரித் துரைத்த விகற்பமெல்லாம்
  ஓதுவதுகுத்திரத்துக் கென்றுரைத்தான்
  ஓதாதே யோதுவிக்கு மொருவன்றானே.

  5.42:
  கந்தமலர்மகள் மின்னுங்காரார் மேனிக்
  கருணைமுகில் கண்ட கண்கள் மயிலாயாலும்
  அந்தமில்பேரின்பத் திலடியரோடே
  அடிமையெனும் பேரமுத மருந்திவாழத்
  தந்தமதி யிழந்தரனார் சமயம்புக்குத்
  தழல்வழிபோய்த் தடுமாறித் தளர்ந்து வீழ்ந்தீர்
  சந்தநெறி நேரறிவார் சரணஞ்சேர்ந்து
  சங்கேதத்தவ முனிவீர் தவிர்மினீரே.

  5.43:
  யாதுமிலாதவன்றும் யவர்க்குந்நன்றியெண்ணிய, நம்
  மாதவனார் வதனத்தமுதுண்ணும் வலம்புரிபோல்
  வாதுகளாலழியா மறைமௌலியின் வான்பொருளே
  யோதியபஞ்சாத்திரமுகவாரை யொழுக்குவமே.

  5.44:
  பூவலருந்தி ருவுந்திப்புனிதன் வையம்
  பொன்னடியாலளந்திருவர் போற்றிநின்ற
  நாவலருங்கலைகளெலாந் தன்னை நாட
  நாடாத நன்னதியா நணுகு நாதன்
  கோவலனாய் நிரையளித்த நிறைபோல் வேதங்
  கோவாகக் கோமானாயதன் பால்சேர்த்துக்
  காவலிது நல்லுயிருக்கென்று காட்டுங்
  கார்த்தயுகக் கதிகண்டோ ங்கரை கண்டோ மே.

  5.45:
  நமக்கார்துணையென நாமென்றருள் தருநாரணனார்
  உமக்காறிவையென்ற டியிணைகாட்ட உணர்ந்தடையும்
  எமக்கோர்பரமினியில்லாது இருவினைமாற்றுதலிற்
  றமக்கேபரமென்று தாமுயலுந்த ரஞ்சாற்றுவமே.

  5.46:
  பலத்திலொருதுவக்கற்ற பதவிகாட்டிப்
  பல்லுயிருந்தடுமாறப் பண்ணுகின்ற
  கலித்திரளின் கடுங்கழுதைக்கத் துமாற்றிக்
  கண்ணுடையார் கண்டுரைத்த கதியைச் சொன்னோம்
  வலத்தில குமறு வொன்றாமல் மறுவொன்றில்லா
  மாமணியாய் மலர் மாதரொளியாம், மந்நன்
  னலத்திலொரு நிகரில்லா நாதன் பாத
  நல்வழியாமல் வழக்கார் நடத்துவாரே.

  5.47:
  எல்லார்க்குமெளிதான வேற்றத்தாலும்
  இனியுரைக்கை மிகையான விரக்கத்தாலுஞ்
  சொல்லார்க்கு மளவாலும மைதலாலுந்
  துணிவரிதாய்த் துணைதுறக்குஞ்சுகரத்தாலுங்
  கல்லார்க்குங்கற்றார் சொற்கவர்தலாலுங்
  கண்ணனுரை முடிசூடி முடித்தலாலு
  நல்லார்க்குந்தீயார்க்கு மிதுவே நன்றா
  நாரணற்கேயடைக்கலமாய் நணுகுவீரே.

  5.48:
  பண்டைமறைக்குப் பகையெனநின்ற பரமதங்கள்
  கொண்டவர்கொள்ளும் பயனொன்றிலதெனுங்கூர் மதியால்
  வண்டுவரைக் கரசான நம்மாயனை, வானுலகிற்
  கண்டுகளிப்பதெனும் காதலொன்றைக் கருதுவமே.

  5.49:
  கலந்திகழும் போகங்கள் கண்டுவெள்கிக்
  காரியமுங்காரணமுங்கடந்து நாம் போய்க்
  குலந்திகழுங்குருக்களடி சூடி மன்னுங்
  குற்றவேலடியவர் தங்குழாங்கள் கூடி
  வலந்திக ழுந்திருமகளும் மற்றிடத்தே
  மன்னிய மண்மகளா ருநீளையாரு
  நலந்திகழ வீற்றிருந்த நாதன் பாத
  நமக்கிதுவே முடியென்ன நண்ணினோமே.

  5.50:
  மானங்களின்றி வகுத்துறைக்கின்ற மதங்களெலாந்
  தானங்களன்று தரும நெறிக்கென்று சாற்றியபின்
  வானங்கவர்ந்து மறைமுடி சூடிய மாதவத்தோர்
  ஞானங்களொன்ற நடக்கின்ற நல்வழி நாடுவமே.

  5.51:
  தன்னடிக்கீழுலகேழையும்வைத்த தனிதிருமால்
  பொன்னடிக்கேற்கின்ற புண்ணியர்கேண்மின், புகலறிவார்
  முன்னடிபார்த்து முயலுதலால் அவர்சாயையெனப்
  பின்னடிபார்த்து நடந்து பெரும்பதமேறுவமே.

  5.52:
  வையமெலாமிருள் நீக்கு மணிவிளக்காய்
  மன்னிய நான் மறைமௌலி மதியே கொண்டு
  மெய்யலது விளம்பா தவியாசன் காட்டும்
  விலக்கில்லா நல்வழியே விரைந்து செல்வீர்
  ஐயமறவறு சமயக்குறும்பறுத்தோம்
  அணியரங்க ரடியவர்க்கேயடிமை செய்தோ
  மையகடல்வட்டத்துண்f மற்றுந்தோற்றும்
  வாதியர்தம் வாய்ப்பகட்டை மாற்றினோமே.

  5.53:
  கோதவமொன்றில்லாத தகவேகொண்ட
  கொண்டலென வந்துலகிலைவர்க்கன்று, ஓர்
  தூதுவனாயொரு கோடிமறைகளெல்லாந்
  தொடர்ந்தோடத் தனியோடித்துயரந்தீர்த்த
  மாதவனார்வட கொங்கில் வானியாற்றின்
  வண்ணிகை நன்னடங்கண்டு மகிழ்ந்து வாழும்
  போது, இவை நாம் பொன்னயிந்தை நகரில் முன்னாட்
  புணராத பரமதப்போர் பூரித்தோமே.

  5.54:
  திகிரி மழுவுயர்குந்தந்தண்டங்குசம் பொறி
  சிதறுசதமுக வங்கிவாள் வேலமர்ந்ததுந்
  தெழிபணில சிலைகண்ணி சீரங்க செவ்வடி
  செழியகதை முசலந்தி சூலந்தி கழ்ந்ததும்
  அகிலவுலகுகள் கண்டையாயோரலங்கலில்
  அடையவடைவிலிங்க வாசின்றி நின்றதும்
  அடியுமருகணையு மரவாமென்ன நின்று அடி
  யடையு மடியரையன் பினலஞ்சலென்பது
  மகிழுமமரர் கணங்கள் வானங்கவர்ந்திட
  மலியுமசுரர் புணர்த்த மாயந்துரந்ததும்
  வளருமணிமணிமின்ன வானந்திகொண்டிட
  மறைமுறை முறைவணங்க மாறின்றிவென்றதுஞ்
  சிகியிரவிமதியமு மிழ்தேசுந்த வெண்டிசைத்
  திணிமருள்செகவுகந்து சேமங்கள் செய்ததுந்
  திகழரவணை யரங்கர்தே சென்னமன்னிய
  திரிசுதரிசனர் செய்யவீரெண் புயங்களே.

  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு : எண்டள, விடுநெறி, போமுரை, சித்தும்
  முத்தின், நாக்கியல், தீவகை, வேலை, சிறைநிலை,
  வெறியார், மிண்டு, கண்டதுமெய், கண்டதனால், கணாது,
  மானமிலை, முற்றும், உளக்கதி, பொருளொன்றிலது,
  நிலையில்லா, காண்கின்ற, கும்பிடு, வேதங்கள்,
  பிரிவில்லா, சோதனை, சொன்னார், ஏகாந்திகம், ஒன்றென,
  சாயா, கலகத்தில், கண்டதலாதன, ஆகமத்தை,
  கோதம, நான்மறைக்கு, ஈசனும், கனைகடல்,
  முக்குணமாய், ஈசனிலன், தாவி, காரணமாய்,
  சாது, மாதவனே, கந்த, யாதும், பூவலரும்,
  நமக்கார், பலத்தில், எல்லார்க்கும், பண்டைமறை,
  கலந்திகழும், மானங்கள், தன்னடி, வையமெலாம்,
  கோதவம், திகரி, வாழி.-
  --------

  6. மெய்விரதமான்மியம்  6.1:
  வாழியருளாளர் வாழியணியத்திகிரி
  வாழியெதிராசன் வாசகத்தோர் வாழி
  சரணாகதியெனுஞ்சார்வுடன் மற்றொன்றை
  அரணாகக் கொள்ளாதாரன்பு.

  6.2:
  எண்டிசையுங்கடலேழு மலைகளேழும்
  ஈரேழு வையகமும் படைத்திலங்கும்
  புண்டரிகத்தயன் புணர்த்த பெரிய வேள்விப்
  புனித நறும் போக்கியத்தையுவந்து வந்துதொண்டையெனுமண்டலத்தினடுவிற்பாரிற்
  றூநிலமெய்விரதத்துத் தோன்றிநின்ற
  கொண்டலருட்குணமேநாங்கூறுகின்றோங்
  கூர்மதியீர் குறியாகக் கொண்மீனீரே.

  6.3:
  வம்மின்புலவீர் அருளாளப் பெருமாளென்று மருளாழி
  யம்மானென்றும் திருமகளைப் பெற்றுமெனெஞ்சங்கோயில் கொண்ட
  பேரருளாளரென்றும் வியப்ப விருதூதும் படிகரை புரண்ட
  கருணைக்கடலை இவ்வண்ணம் பேசுவீர் ஈதென்னபாங்கே.

  6.4:
  ஒன்றே புகலென்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
  அன்றே அடைக்கலங்கொண்ட நம்மத்திகிரித் திருமால்
  இன்றேயிசையினிணையடி சேர்ப்பர் இனிப்பிறவோ
  நன்றே வருவதெலாம் நமக்கு பரமொன்றிலதே.

  6.5:
  வம்பவிழ் போதமர் மாதருகந்த அம்மானிதியைத்
  தன்பலமே கொண்டு காணக்கருதிய தாமரையோன்
  முன்பல குற்றத்து வல்வினைமொய்க்க முகழ் மதியாய்
  அம்புலி வேண்டிய பாலனைப் போல வழுதனனே.

  6.6:
  அடங்காக் கரணங்கள் ஐந்துடனாறு மடக்கி முன
  நெடுங்காலமின்னிலமே நிலையாப் பூண்டு நீடுறைவான்
  சடங்காற்பெரிய தவங்கள் செய்தேன் என்னதன்மையிதென்று
  இடங்காத்திருந்த திசைமுகன் தன்னையிகழ்ந்தனனே.

  6.7:
  விண்ணூலகில் வீற்றிருந்த மேன்மையாலும்
  வேதங்களீரிரண்டும் விரித்தலாலுங்
  கண்ணனை நான் கருத்துறவே காண்பனென்னக்
  காணாமல் விலக்கியதன் வினையைக்காணா
  எண்ணியனற்புவனங்களேழுமாறும்
  இருமூன்று தீவமுமெட்டிடமும்விட்டுப்
  பண்ணிய நல்விரதமெலாம் பலிக்குமென்று
  பாரதத்திற் பங்கயத் தோன்படிந்திட்டானே.

  6.8:
  எத்திசைநிலனுமெய்தி அருந்தவஞ்செய்தவந்நாள்
  சத்தியவிரதஞ்செல் வாயென்ற ஓருரையின் சார்வால்
  அத்திசை சென்றழைத்து அங்கமரரில்லெடுப்பான்றன்னை
  உத்திரவேதிசெய்யென்று உரையணங்கிறையுரைத்தான்.

  6.9:
  உத்தமவமர்த் தலமமைத்த தோரெழிற்றனுவினுய்த் தகணையால்
  அத்திவரக்கன் முடிபத்துமொருகொத்தென வுதிர்த்த திறலோன்
  மத்துறு மிகுத்த தயிர்மொய்த்த வெண்ணெய் வைத்ததுணு மத்தனிடமாம்
  அத்திகிரி பத்தர்வினை தொத்தறவறுக்கு மணியத்திகிரியே.

  6.10:
  திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலுஞ்
  சிதையாத நூல் வழியிற் சேர்த்தியாலும்
  வண்மையெழு மீரிரண்டு வருணத்தாலும்
  வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும்
  ஒண்மையுடை வாசிவிளி யோசையாலும்
  ஒருகாலு மழியாத வழகினாலு
  மண்மகளார்க் கலங்காரமென்ன மன்னு
  மதிட் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே.

  6.11:
  காமங்கள் பல கொண்டவேதங்கொண்டு
  கைதவமே செய்வார்க்குக் காணகில்லாப்
  பூமங்கை கேள்வனை நான் கண்டு போற்றப்
  புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன்
  சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப்போய்த்
  தன்னாற்றில் தனியிருந்து தவஞ்செய்கின்ற
  நாமங்கை வந்திட நீயழைப் பாயென்று
  நன்மகனை நான்முகன்றான் நவின்றிட்டானே.

  6.12:
  அன்னவடி வாளசையு மன்ன நடையாளுயரு மன்னவரசேறி வருவாள்
  அத்தனயனத் தனயனுத்தி தனையத்தி தெனவுத்தி புரியா
  ணன்னடைவிடா நடமிதென்ன நடவா நடுவு நண்ணுகுவடேறியிழிவா
  ணற்பதிகளற்பதிகள் கற்புரளவற்புமதருற்கதியினாற்
  கன்னடை விடா விடமிலுன்னதிசிறா விகட மன்னுகிரி கூடமிடியக்
  கட்டவிடையிற்று விழ முற்றும் விழியுற்றடைய விட்டருகுற
  வன்னனய சீரயனிதென்னென விழாவமரர் மன்னுபதியேறி மகிழ
  வச்சுதனணைத் தனுவிலத்திசை வரத்தகைய வற்றணுகினாள்.

  6.13:
  அன்றுநயந்த அயமேதமாவேள்வி
  பொன்ற உரையணங்கு பூம்புனலாய்க் கன்றிவர
  ஆதியயனுக்கு அருள்செய்தணை யானான்
  தாதை யரவணையான் தான்.

  6.14:
  தரணியில் மன்னி அயனார்தனித்த வங்காத்தபிரான்
  கருணையெனுங்கடலாடித் திருவணை கண்டதற்பின்
  றிரணரகெண்ணிய சித்திரகுத்தன் றெரித்து வைத்த
  சுருணையிலேறிய சூழ்வினை முற்றுந்துறந்தனமே.

  6.15:
  சுகலேசமெண்ணிய சூழ்வினை தீர்க்கத்துணிந்து அயனார்
  அகலாதவன்புடங்கொண்ட அயமேதவேதியின்மேற்
  புகலோங்கு பொன்மலையன்ன ஓர் புண்ணியகோடியுடன்
  பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர்தோன்றியதே.

  6.16:
  பெருமையுடையத்திகிரிப் பெருமாள்வந்தார்
  பேராத அருள் பொழியும் பெருமாள் வந்தார்
  அருமறையினுச்சி தனில் நின்றார் வந்தார்
  அங்கமுடன வையாகுமரியோர் வந்தார்
  திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
  திருவருளாற் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
  மருவலர்க்குமயக்குரைக்கு மாயோர் வந்தார்
  வானேற வழிதந்தார் வந்தார் தாமே.

  6.17:
  அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
  ஆனைபரி தேரின்மேலழகர் வந்தார்
  கச்சிதனிற் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
  கருதவரந்தரு தெய்வப்பெருமாள் வந்தார்
  முத்திமழை பொழியு முகில் வண்ணர் வந்தார்
  மூலமென வோலமிட வல்லார் வந்தார்
  உத்திரவேதிக்குள்ளேயுதித்தார் வந்தார்
  உம்பர்தொழுங்கழலுடையார் வந்தார்தாமே.

  6.18:
  இருபரிதியேய்ந்த மகுடமும்
  எழின்மதி திகழ்ந்த வதனமும்
  இருவகையிலங்கு குழிகளில்
  எதிர் பொரவுகந்த மகரமும்
  ஒருதக வுயர்ந்த திருமகள்
  ஒளிமறுவி மன்னுமகலமும்
  உருவருவு மிழ்ந்தவுதரமும்
  உலகடைய நின்ற கழல்களு
  மருவினிடை பொங்குபுனலென
  மலைகுனியநின்றமலையென
  மருளறவிளங்குமொளியென
  மலரயனுகந்த பயனென
  வருவிலுறைகின்றவுயிரென
  வடியவருகந்தவமுதென
  வருமறைகளொன்றியடிதொழ
  வருள்வரதர் நின்ற பெருமையே.

  6.19:
  சித்தசித்தென விரித்துரைத்தன
  அனைத்தமைத் துறையுமிறைவனார்
  சிறிய பெரிய வுருவுடைய வுடலமென
  நடலமிலதிலகுநிலையினார்
  சித்திரத் தெழிலை யொத்த பத்தரொடு
  முத்தர் பித்தியெனுமுணர்வினார்
  சிதைவில் மறைநெறியிலெறியவுருமுறைகண்
  முறியசிறையரிய நிறைவினார்
  கத்துவிக்கவலகத்து வித்தைவழி
  கற்றவர்க் காசைவில்மறையினார்
  கபிலர்கணசரணர்சுகதர்சமணரர்
  வழிகளழியமருள் மொழியினார்
  கத்திலக்கிலு மருக்குலத்திலும்
  சித்திலொக்குமொரு முதல்வனார்
  கரணமிடுகடிய பதினோரிருடிகமும்
  அடைய முடியுமடியிருடியார்
  ஒத்தனைத் துலகுமொற்றி யொற்றிவரும்
  இப்பவத்திசையினிசைவினார்
  உருவமருவமெனு முலகின் மூடுகிலதில்
  உவமை யிலதிலகு தலைவனார்
  உத்தமப் படிவகுத்த வித்தைகளில்
  உத்தரிக்கவுணர் குணவனார்
  உரியகிரிசைகளி லரிய தொரு விரகு
  தெரிய விரையுமவர் பரிவினார்
  சத்தசத்தெனுமனைத் தணைத்தவினை
  தொத்தறுக்க வலதுணிவினார்
  சரியுமளவிலுரிய வரையறிவரிய
  தமனி நெறி செருகுவிரகினார்
  தத்துவத்திர ளுதத்துதைத் தடைவு
  தத்துவுக்குமவர் தலைவனார்
  தருகையுணருமவர் சரணமணுகவிட
  லரியவருள் வரதரடியமே.

  6.20:
  திருமகள் மண்மகள் நீளை முதலாவெல்லாத்
  தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத்
  தருமமிரு மூன்று முதலனைத்துன் தோன்றத்
  தன்னனைய சூரியர் தன்னடிக்கீழ் வாழ
  அருமறை சேரள வில்லாவ வனியின் கண்
  அரவணை மேல் வீற்றிருப்பானைத் துங்காக்குங்
  கருமணியைக் கரிகிரி மேற்கண்டேன் என்றன்
  கடுவினைகளனைத்தும் நான் கண்டிலேனே.

  6.21:
  பெடையிரண்டையொரன மடைந்து
  பிரிந்திடா வகை பேசலாம்
  பெருகு மருவிகளரு குமருவிய
  பெரிய மணிவரை பயிலலாம்
  பிடியிரண்டொடுகளவ மொன்று
  பிணைந்த பேரழகோதலாம்
  பிரிவிலொளியொடு நிழலுமருகுறும்
  இரவியிலகுதல் பரவலாங்
  கொடியிரண்டொடுவிட வியொன்று
  குலிர்ந்த வாறு குலாவலாங்
  குறைவில் சுருதியு நினைவுமிலகிய
  தருமவரு நிலையென்னலாம்
  அடியிரண்டையு மடையுமன்பர்
  அறிந்த பேரருளாளனார்
  அணுகுமலர் மகளவனிமகளொடு
  கரடிகிரியினிலவிர்தலே.

  6.22:
  வேரொப்பார் விண்முதலாங்காவுக் கெல்லாம்
  விழியொப்பார் வேதமெனுங்கண்டனக்குக்
  காரொப்பார் கருணைமழை பொழியு நீராற்
  கடலொப்பார் கண்டிடினுங்காணாக் கூத்தா
  னீரொப்பார் நிலமளிக்குந் தன்மைதன்னா
  னிலமொப்பார் நெடும்பிழைகள் பொறுக்குநேரால்
  ஆரொப்பாரிவர் குணங்களனைத் துங்கண்டால்
  அருளாளர் தாமெனினுந்தமக்கொவ்வாரே.

  6.23:
  எந்நிலமுங்குரத்தால் குறிசெய்த எழிற் பரிகொண்டு
  அன்னமுயர்த்த செய்யோன் அன்று வேள்விசெய்வேதியின்மேன்
  முன்னிலையாகிய மூர்த்தியன் நான்முக மற்று முனக்கு
  என்ன வரன் தருவோமென்று நாதனியம்பினனே.

  6.24:
  சென்று மலர்பறித்து எந்நாதன் சேவடிப் போதுகந்து
  நன்றெனு நீர்சுடர் நன்முகவாசமிலை கொடுத்துக்
  கன்னலிலட்டுவத்தோடு அன்னஞ்சீடைகறிபடைத்துப்
  பின்னுஞ்செவித்து அவன்பாதம் பணிமின்களென்றனனே.

  6.25:
  ஆழிநிலை வினைகடிவான் அயமேதமுடித்த தற்பின்
  வேழமலை நாயகனார் விடைகொடுக்க விண்ணேறி
  நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்மகன்றான்
  ஊழியொலாமழியாத வுயோகமடைந்திருந்தானே.

  6.26:
  ஆதியுகத்தயன் கண்டிட நின்ற அருள்வரதர்
  காதலுயர்ந்தகளிற்றைத் திரேதையிற் காத்தளித்து
  வாதுயர் தேவகுருவுக்கிரங்கித் துவாபரத்திற்
  சோதியனந்தன் கலியிற்f றொழுதெழநின்றனரே.

  6.27:
  புண்டரீக முயிர்த்த புராணனார்
  பொய்யில் மாமகவுத்தர வேதியிற்
  கொண்டலாரருள் மாரி பொழிந்திடக்
  கொண்ட தோருயர் கூர் மதியன்பினாற்
  பண்டை நான் மறைமௌலி படிந்தயான்
  பாரின் மெய்விர ரக்கவி பாடினேணன்
  றொண்டை மண்டல வேதியர் வாழவே
  தூய தென்மறை வல்லவர் வாழவே.

  6.28
  யய்விரத மொன்றின்றி யடைந்தா ருய்ய
  வொருவிரதந் தான்கொண்ட வுயர்நத மாலைச்
  செய்விரத மொன்றாலுந் தெளிய கில்லாச்
  சிந்தையினாற் றிசைபடைத்த திசைமு கன்றான்
  பெய்விரத நிலமெல்லாம் போயே மீண்டு
  புகலிதுவே புண்ணியத்துக் கென்று சேர்ந்த
  மெய்விரத நன்னிலத்து மேன்மை யேத்தி
  வேதாந்த வாசிரியன் விளங்கி னானே.

  6.29
  சீராருந் தூப்புற் றிருவேங் கடமுடையான்
  றாரா ரருளாளர் தாணயந்து-சீராக
  மெய்விரத நன்னிலத்து மேன்மை யிதுமொழிந்தான்
  கையிற் கனிபோலக் கண்டு.
  ------

  7. அடைக்கலப் பத்து  7.1:
  பத்தி முதலாமவறறிற் பதி எனக்கு கூடாமல்
  எத்திசையும் ஒழன்றோடி இளைத்துவிழுங் காகம்போன்
  முத்தி தரும் நகரேழின் முக்கியமாங் கச்சிதன்னில்
  அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே.

  7.2:
  சடைமுடியன் சதுமுகனென் றிவர்முதலாந் தரமெல்லா
  மடையவினைப் பயனாகி யழிந்துவிடும் படிகண்டு
  கடிமலராள் பிரியாத கச்சிநக ரத்திகிரி
  யிடமுடைய வருளாள ரிணையடிக ளடைந்தேனே.

  7.3:
  தந்திரங்கள் வேறின்றித் தமதுவழி யழியாது
  மந்திரங்க டம்மாலு மற்றுமுள வுரையாலு
  மந்தரங்கண் டடிபணிவா ரனைவர்க்கு மருள்புரியுஞ்
  சிந்துரவெற் பிறையவனார் சீலமல தறியேனே.

  7.4:
  காகமிரக் கதன்மன்னர் காதலிகத் திரபந்து
  நாகமர னயன்முதலா நாகநக ரார்த்தமக்கும்
  போகமுயர் வீடுபெறப் பொன்னருள்செய் தமைகண்டு
  நாகமலை நாயகனார் நல்லடிப்போது அடைந்தேனே.

  7.5:
  உகக்குமவை யுகந்துகவா வனைத்துமொழிந் துறவுகுண
  மிகத்துணிவு பெறவுணர்ந்து வியன்காவ லெனவரித்துச்
  சகத்திலொரு புகலிலாத் தவமறியேன் மதிட்கச்சி
  நகர்கருணை நாதனைநல் லடைக்கலமா யடைந்டேனே.

  7.6:
  அளவுடையா ரடைந்தார்க்கு மதனுரையே கொண்டவர்க்கும்
  வளவுரைதந் தவனருளே மன்னியமா தவத்தோர்க்குங்
  களவொழிவா ரெமரென்ன விசைந்தவர்க்குங் காவலராந்
  துளவமுடி யருள்வரதர் துவக்கிலெனை வைத்தேனே.

  7.7:
  உமதடிக ளடைகின்றே னென்றொருகா லுரைத்தவரை
  யமையுமினி யென்பவர்போ லஞ்சலெனக் கரம்வைத்துந்
  தமதனைத்து மவர்த்தமக்கு வழங்கியுந்தா மிகவிளங்கு
  மமைவுடைய வருளாள ரடியிணையை யடைந்தேனே.

  7.8:
  திண்மைகுறை யாமைக்கு நிறைகைக்குந் தீவினையா
  லுண்மைமற வாமைக்கு முளமதியி லுகக்கைக்குந்
  தண்மைகழி யாமைக்குந் தரிக்கைக்குந் தணிகைக்கும்
  வண்மையுடை யருளாளர் வாசகங்கள் மறவேனே.

  7.9:
  சுரிதிநினை விவையறியுந் துணிவுடையார் தூமொழிகள்
  பரிதிமதி யாசிரியர் பாசுரஞ்சேர்ந் தருக்கணங்கள்
  கருதியொரு தெளிவாளாற் கலக்கமறுத் தத்திகிரிப்
  பரிதிமதி நயனமுடை பரமனடி பணிந்தேனே.

  7.10:
  திருமகளுந் திருவடிவுந் திருவருளுந் தெள்ளறிவு
  மருமையிலா மையுமுறவு மளப்பரிய வடியரசுங்
  கருமமழிப் பளிப்பமைப்புங் கலக்கமிலா வகைநின்ற
  வருள் வரதர் நிலையிலக்கி லம்பெனநா னமிழ்ந்தேனே.

  7.11:
  ஆறுபயன் வேறில்லா வடியவர்க ளனைவர்க்கு
  மாறுமதன் பயனுமிவை யொருகாலும் பலகாலு
  மாறுபய னெனவேகண் டருளாள ரடியிணைமேற்
  கூறியநற் குணவுரைக ளிவைபத்துங் கோதிலவே.

  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு: பத்தி, சடைமுடியன், தந்திரங்கள்,
  காகம், உகக்கும், அளவுடையார், உமதடிகள், சுருதி,
  திருமகள், ஆறுபயன், அமலன்.
  ----

  8. அருத்தபஞ்சகம்  8.1:
  அமலனவியாதசுடர் அளவில்லா வாரமுதம்
  அமலவுருக்குணங்களணி ஆயுதங்களடியவர்கள்
  அமலவழியாத நகர் அழிந்தெழுங்காவுடனெல்லாங்
  கமலையுடனரசாளும் கரிகிரிமேற்காவலனே.

  8.2:
  உள்ளபொருளனைத்துக்கும் உருவநிலை கருமங்கள்
  தெள்ளிசைவின்வசமாக்கித் திகழ்ந்துயிராயுறைகின்றா
  னள்ளிருள்தீர்த்தடியவர்க்கு நலங்கொடுக்குந்திருவுருடனே
  வள்ளலருளாளரெனும் வாரணவெற்பிறையவனே.

  8.3:
  பூதவுடல்புலன்கள்மனம் புல்லாவிபுந்தியெனும்
  யாதுமலனாயிலகி யானெனுமின்னுண்ணறிவாய்ச்
  சேதனனாயடிமையுமாம் உயிர்க்கெல்லாந்திண்ணுயிராய்த்
  தீதலின்றித்திகழும் சீரத்திகிரித் திருமாலே.

  8.4:
  தானடைத்த குணங்கருவி தங்கிரிசைவழியொழுக்கி
  யூனெடுத்துண்டுமிழ்ந்துழலும் உயிர்க்கெல்லாமுயிராகிக்
  கானடத்திக்கமலையுடன் கண்டுகந்துவிளையாடுந்
  தேனெடுத்தசோலைகள்சூழ் திருவத்தியூரானே.

  8.5:
  உய்யமுற விசையாதே ஒத்தவர்க்கே யடிமையுமாய்ப்
  பொய்யுருவைத்தமக்கேற்றிப் புலன்கொண்டபயனேகொண்டு
  ஐயுறவுமாரிருளும் அல்வழியுமடைந்தவர்க்கு
  மெய்யருள்செய்திடும் திருமால்வேழமலைமேயவனே.

  8.6:
  விதைமுளையின்னியாயத்தால் அடியில்லாவினையடைவே
  சதையுடல நால்வகைக்கும் சரணளிப்பானெனத்திகழ்ந்து
  பதவியறியாது பழம்பாழிலுழல் கின்றார்க்குஞ்
  சிதைவிலரு டருந்திருமா றிருவத்திநகரானே.

  8.7:
  எமநியம வாசனங்கள் இயலாவிபுலனடக்கந்
  தமதறியுந்தாரணைகள் தாரையறாநினைவொழுக்கஞ்
  சமமுடையசமாதிநலஞ் சாதிப்பார்க்கிலக்காகும்
  அமரர்தொழுமத்திகிரி அம்புயத்தாளாரமுதே.

  8.8:
  புகலுலகில்லாது பொன்னருள் கண்டுற்றவர்க்கும்
  அகிலகிலாவன்பர்க்கும் அன்றேதன்னருள் கொடுத்துப்
  பகலதனாற் பழங்கங்குல்விடிவிக்கும், பங்கயத்தாள்
  அகலகிலேனென்றுறையும் அத்திகிரியருள்முகிலே.

  8.9:
  இருவிலங்குவிடுத்து இருந்தசிறைவிடுத்து ஓர்நாடீயினாற்
  கருநிலங்கள் கடக்கும்வழி காவலராற்கடத்துவித்துப்
  பெருநிலங்கண்டுயிருணர்ந்து பிரியாமலருள்செய்யும்
  உருநலங்கொண்டுறுந்திருவோடு உயரத்திகிரியானே.

  8.10:
  தந்திருமாதுடனே தாம் தனியரசாயுறைகின்ற
  வந்தமில்பேரின்பத்தில் அடியவரோடெமைச் சேர்த்து
  முந்தியிழந்தனவெல்லாம் முகிழ்க்கத்தந்தாட்கொள்ளு
  மந்தமிலாவருளாழி அத்திகிரித் திருமாலே.

  8.11:
  அயன்பணியும்மத்திகிரி அருளாளரடியிணைமே
  னயங்கள்செறிகச்சிநகர் நான்மறையோர் நல்லருளாற்
  பயன்களிவையனைத்துமெனப் பண்டுரைத்தார்படியுரைத்த
  வியன்கலைகளீரைந்தும் வேதியர்கட்கினியனவே.

  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு : அமலன், உள்ளபொருள், பூதவுடல், தானடைத்த,
  உய்யுமுறவு, விதைமுளை, எமநியம, புகலுலகில், இருவிலங்கு,
  விடுத்து, தந்திரு, அயன்பணியும்,வரியிருள்
  --------

  9. ஸ்ரீ வைணவதினசரி  9.1:
  வருயிருளழிவழிமனம்வருமுணர்வொடு
  கரிகிரிமருவியகரிய வனடியிணை
  பரிவொடுபரவுநலடியவர்பழவுரை
  யரியரி யரியரி யரியரி யரியே.

  9.2:
  வினைவகையொழுகியவெறிநிலையடையவு
  நினைவுடைநிகழ்வெதிர்நிலைநலமணுகிட
  மனமுரை கிரிசைகள் மகிழ்மறைநெறிகொடு
  தனிமுதலடியிணையடிபவர் தமரே.

  9.3:
  மலர்மகண் மருவிய மறுவுடையிறையவன்
  மலரடிகருதிய மனமுடையடியவர்
  மலர்புனலமுதுடன் வகையனவடையவு
  மலர் மதியெ மதல வெனவறி பவரே.

  9.4:
  நறையுடை மலர்மகள் நலமுற மருவிய
  விறையவனினிதுறவினியவை யெணுமவர்
  அறநெறியிலனெ வனணுகிலு மணுகிலர்
  துறையலதெனுமொரு துறைபடுகிலரே.

  9.5:
  ஒளிமதியென வொருதிருவுட னுயர்ப்பவ
  னளிமதி முகநகை நலநிலவுகவுக
  டெளிபுனல முதன செழுமதியடியவர்
  குளிமுதல்கிரிசைகள் குறைகிலர்வலவே.

  9.6:
  வருவதொருறவெனவளரிளவரசென
  மருவுநன் மகனெனன வனமதகரியென
  வருவிலை மணியென வடியவ ரடைபவ
  ரருகணை யிறைவனை யரு கணை யுடனே.

  9.7:
  விரைகமழ் மலர்கள் மிகவுறு மிறையவன்
  குரைகழல் குறுகிய குளிர்மதி மதியொடு
  வரைநிலை யடியவர் மறைகளின் மறையெணு
  முரைநிரை பரவுவருளமமு துணவே.

  9.8:
  துதிகளு மறிவரு சுருதியி னிறுதியி
  னிதயமிதென முனியிறையவருரைகளு
  மதுரமனுதவிய மறைகளு மடியவர்
  விதிவகை பரவுவர் மிகவுள மெழவே.

  9.9:
  அறிவிலர் தலைமிசை யயனடி யெழிதிய
  பொறிவகை யெழுவதோர் பொறிநல முகவல
  ருறுவது முடையது மிதுவென வருவது
  நறுமலர் மகள்பதி நலமுறு நினைவே.

  9.10:
  பெருகியநல நிலை பெருமையின் மிகுமயல்
  உருகிய நிலைமனமுயர் முகிழெழுமுடல்
  சொருகிய விழிதிகழ் சுடர்மதி புகுமிறை
  கருகிய வுருதிகழ் கரிகிரி யரியே.

  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு : வரியிருள், வினைவகை, மலர்மகள்,
  நறையுடை, ஒளிமதி, வருவது, விரைகமழ்,
  துதிகளும், அறிவிலர், பெருகிய, ஈருலகை.
  ------

  10. திருச்சின்ன மாலை  தனியன்
  மன்னுதிரு மந்திரத்தின் வாழ்துவயத் தின்பொருளுந்
  துன்னுபுகழ்க் கீதைதனிற் சொன்னவெண்ணான் கின்பொருளு
  மன்னவயற் கச்சியரு ளாளர்திருச் சின்னவொலி
  யின்னபடி யென்றுரைத்தா னெழில்வேதாந் தாரியனே.

  ஏகாந்த மூன்று மொழிலா லுரைசெய்து
  மகாந்தஞ் செய்தருளும் வள்ளலாய் - சாகாந்த
  தேசிகனாந் தூப்புற் றிருவேங்க டேசகுரு
  வாசகமே யெங்களுக்கு வாழ்வு.

  பரிச்சின்ன மான விருநா லெழுத்தின்பல் வண்மையெலாம்
  விரிச்சு நலம்பெற வோதவல் லோர்க்கிந்த மேதினிக்கே
  மரிச்சின்ன மீளப் பிறவாமல் வாழ்விக்கு மால்வரதர்
  திருச்சின்ன வோசை யினிமையுண் டோ மற்றைத் தேவருக்கே.

  10.1:
  ஈருலகைப் படைக்கவெண்ணி யிருந்தார் வந்தா
  ரெழின்மலரோன் றன்னையன்றே யீன்றார் வந்தார்
  மாருதமண் ணீராகு மாயோர் வந்தார்
  வானோடெரி தாமாகு மறையோர் வந்தார்
  சூரியர்தம் முடன்றுலங்கு தூயோர் வந்தார்
  சுரர்களுக்கன் றமுதருள்சுந் தரனார் வந்தார்
  வாரிதிசூழ் வையகம்வாழ் வித்தார் வந்தார்
  வண்மையுடன் வரந்தருவார் வந்தார் தாமே.

  10.2:
  அருமறையை யூழிதனிற் காத்தார் வந்தா
  ரதுதன்னை யன்றயனுக் களித்தார் வந்தார்
  தருமவழி யழியாமற் காப்பார் வந்தார்
  தாமரையா ளுடனிலங்குந் தாதை வந்தார்
  திருவுரையாய்த் தாம்பொருளாய் நிற்பார் வந்தார்
  திருவருளாற் செழுங்கலைக டந்தார் வந்தார்
  மருவலர்க்கு மயக்குரைக்கு மாயோர் வந்தார்
  வானேற வழிதந்தார் வந்தார் தாமே.

  10.3: அனைத்துலகுங் காக்குமரு ளாளர் வந்தா
  ரனைத்துக்கு மதிபதியாய் நிற்பார் வந்தார்
  தினைத்தனையுந் திருமகளை விடாதார் வந்தார்
  தேசொத்தார் மிக்காரு மில்லார் வந்தார்
  நினைக்கநமக் கின்னறிவு தந்தார் வந்தார்
  நிலைநின்ற வுயிர்தோன்ற நினைந்தார் வந்தா
  ரெனக்கிவர்நா னிவர்க்கென்ன வினியார் வந்தா
  ரெழுத்தொன்றிற் றிகழநின்றார் வந்தார் தாமே.

  10.4:
  நாம்வணங்கத் தாமிணங்கா நிற்பார் வந்தார்
  நம்மையடைக் கலங்கொள்ளு நாதர் வந்தார்
  நாமெமக்காம் வழக்கெல்லா மறுத்தார் வந்தார்
  நமக்கிதுவென் றுரையாமல் வைத்தார் வந்தார்
  சேமமெண்ணி யெம்மையன்பர்க் கடைந்தார் வந்தார்
  செழுந்தகவாற் றிண்சரணா மீசர் வந்தார்
  தாமனைத்துந் தீவினையைத் தவிர்ப்பார் வந்தார்
  தமக்கேயா யெமைக்கொள்வார் வந்தார் தாமே.

  10.5:
  உலகெல்லா முள்ளேவைத் துமிழ்ந்தார் வந்தா
  ருலகுடம்பாய்த் தாமுயிராய் நின்றார் வந்தா
  ரலைகடலா யானந்த மடைந்தார் வந்தா
  ரளவில்லா வருளாழிப் பெருமாள் வந்தார்
  திலகமெனுந் திருமேனிச் செல்வர் வந்தார்
  செழுங்குணங்க ளிருமூன்று முடையார் வந்தா
  ரிலகுசுடர் முழுநலமா மினியார் வந்தா
  ரெல்லார்க்குங் கதியானார் வந்தார் தாமே.

  10.6:
  அருளாலே விலங்கிரண்டு மழிப்பார் வந்தா
  ரஞ்சிறையைக் கழித்தருளு மன்பர் வந்தார்
  மருள்வாரா வகைநம்மைக் காப்பார் வந்தார்
  வானேற வழிநடத்தி வைப்பார் வந்தார்
  தெருளாருந் தெளிவிசும்பு தருவார் வந்தார்
  திண்கழற்கீழ் வாழநமக் கருள்வார் வந்தார்
  பொருவானி லடிமைநம்மைக் கொள்வார் வந்தார்
  பிரியாமற் காத்தளிப்பார் வந்தார் தாமே.

  10.7:
  அகலகிலாத் திருமகளா ரன்பர் வந்தா
  ரடியிரண்டு மாறாகத் தந்தார் வந்தார்
  புகலில்லார் புகலாகும் புனிதர் வந்தார்
  பொன்னுலகிற் றிருவுடனே திகழ்வார் வந்தா
  ரகிலமெலா மானந்த மானார் வந்தா
  ரடியிணைக்கீழ் வைத்தடிமை கொள்வார் வந்தார்
  பகனடுவே யிரவழைக்க வல்லார் வந்தார்
  பகலொன்றா யிரவழித்தார் வந்தார் தாமே.

  10.8:
  தருமன்விடத் தாந்தூது போனார் வந்தார்
  தரணிபொறாத் திண்பாரந் தவிர்த்தார் வந்தா
  ரருமறையின் பொருளனைத்தும் விரித்தார் வந்தா
  ரஞ்சினநீ யென்னையடை யென்றார் வந்தார்
  தருமமெலாந் தாமாகி நிற்பார் வந்தார்
  தாமேநம் வினையனைத்துந் தவிர்ப்பார் வந்தார்
  பரமெனது நீபுலம்ப லென்றார் வந்தார்
  பார்த்தனுக்குத் தேரூர்ந்தார் வந்தார் தாமே.

  10.9:
  வஞ்சனைசெய் பூதனையை மாய்த்தார் வந்தார்
  மல்லர்மத கரிமாள மலைந்தார் வந்தார்
  கஞ்சனைப்போர் கடுஞ்சினத்தாற் கடிந்தார் வந்தார்
  கண்ணுதன்முன் வாணன்றோள் கழித்தார் வந்தார்
  வெஞ்சொறர வீடுகொடுத் துகந்தார் வந்தார்
  விலக்கில்லா வழிநடத்த விரைந்தார் வந்தார்
  பஞ்சவரைப் பலவகையுங் காத்தார் வந்தார்
  பாஞ்சாலி குழன்முடித்தார் வந்தார் தாமே.

  10.10:
  அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தா
  ரானைபரி தேரின்மே லழகர் வந்தார்
  கச்சிதனிற் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
  கருதவரந் தருதெய்வப் பெருமாள் வந்தார்
  முத்திமழை பொழியுமுகில் வண்ணர் வந்தார்
  மூலமென வோலமிட வல்லார் வந்தா
  ருத்தரவே திக்குள்ளே யுதித்தார் வந்தா
  ரும்பர்தொழுங் கழலுடையார் வந்தார் தாமே.

  10.11:
  மறைத்தலையி லிசையெழுத்தில் வணங்கும் வாக்கின்
  மந்திரத்தி னாலெழுத்தாந் திருநா மத்தி
  னிறைத்திலகு வேற்றுமையி லிரண்டா மொன்றி
  னெடுமாறன் கீதையெலா நிறைந்த சொல்லி
  லுறைத்தவர்கண் டுரைத்தபொரு ளான வெல்லா
  முயர்விரத வருளாளப் பெருமா டேசின்
  றிறத்திலியை திருச்சின்ன மாலை பத்துஞ்
  செவிக்கினிதாஞ் சிற்றின்ப மிசையா தார்க்கே.

  ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேசிகாய நம:
  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு: ஈருலகு, அருமறை, அனைத்துலகு,
  நாம்வணங்க, உலகெல்லாம், அருளாலே, அகலகில்லா,
  தருமன், வஞ்சனை, அத்திகிரி, மறை, கேசவனாய்.
  -----

  11.பன்னிரு நாமம்  தனியன்
  பன்னிரு நாமந் திருவத்தி யூர்ப்பரன் பாதமென்று
  நன்னிற நாமம் படைதிக்கி யாவையு நாமறியத்
  தென்னந் தமிழ்த்தொடைச் சீரார் கலித்துறை யோதியீந்தான்
  மின்னுறு நூமலர் வேங்கட நாதனந் தேசிகனே.

  கார்கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி
  ஏர்கொண்ட கீர்த்தி யிராமா னுசன்ற னிணையடிசேர்
  சீர்கொண்ட தூப்புற்f திருவேங்க டாரியன் சீர்மொழியை
  யார்கொண்டு போற்றினு மம்மால் பதத்தை யடைவிக்குமே.

  11.1:
  கேசவனாய்நின்று கீழைத் திசையிலு நெற்றியிலுந்
  தேசுடையாழிகள் ணான்குடன் செம்பசும்பொன் மலைபோல்
  வாசிமிகுத்தெனை மங்காமற் காக்கு மறையதனால்
  ஆசைமிகுத்த அயன்மகவேதியிலற்புதனே.

  11.2:
  நாரணானாய் நல்வலம்புரி நாலுமுகந்தெ டுத்தும்
  ஊரணிமேகமெனவே யுதரமுமேற்குநின்றும்
  ஆரணநூறந் தருளால் அடைகலங்கொண்டருளும்
  வாரணவெற்பின்f மழைமுகில்போல் நின்ற மாயவனே.

  11.3:
  மாதவநாமமும் வான்கதை நான்குமணிநிறமும்
  ஓதுமுறைப்படியேந்தி யுரத்திலுமேலுமல்கிப்
  போதலர் மாதுடன் புந்தியி லன்பாற் புகுந்தளிக்குந்
  தூதனு நாதனு மாய தொல் லத்தி கிரிச்சுடரே.

  11.4:
  கோவிந்த னென்றுங் குளிர்மதி யாகிக் கொடியவரை
  யேவுந் தனுக்க ளுடன்றெற்கிலுமுட் கழுத்து நின்று
  மேவுந்திருவருளால் வினைதீர்த்தெனை யாண்டருளும்
  பூவன் றொழவத்தி மாமலை மேனின்iன்ற புண்ணியனே.

  11.5:
  விட்டுவல வயிற்றிங்கண் வடக்கும் விடாது நின்று
  மட்டவிழ் தாமரைத் தாது நிறங்கொண்ட மேனியனாய்த்
  தொட்ட கலப்பைக ளீரிரண்டாலுந்து யரறுக்குங்
  கட்டெழிற்சோலைக் கரிகிரி மேனின்ற கற்பகமே.

  11.6:
  மதுசூதன னென்வலப்புயந்f தெங்கிழக்கென்றிவற்றிற்
  பதியாயிருந்து பொன்மாதுறை பங்கய வண்ணனுமாய்
  முதுமாவினைகளறுக்கு முயலங்களீரிரண்டான்
  மதுவாரிளம் பொழில் வாரணவெற்பின் மழைமுகிலே.

  11.7:
  திருவிக்கிரமந்றிகழ் தீநிறத்தன் தெளிவுடைவா
  ளுருவிக்கரங்களிலீரிரண்டேந்தி வலக்கழுத்துஞ்
  செருவிக்கிரமத் தரக்கர்திக்குஞ் சிறந்தாளுமிறை
  மருவிகரிகிரிமேல் வரந்தந்திடு மன்னவனே.

  11.8:
  வாமனனென்றன் வாமோதரமும் வாயுவிந்திசையுந்
  தாமமடைந்து தருண வருக்கனிறத்தனுமாய்ச்
  சேமமரக்கலஞ்f செம்பவி யீரிரண்டாற் றிகழு
  நாமங்கைமேவிய நான்முகன்வேதியில் நம்பரனே.

  11.9:
  சீரார்சிரீதரனாய்ச் சிவன்திக்குமிடப்புயமும்
  ஏராரிடங்கொண்டு இலங்குவெண்டாமரை மேனியனாய்ப்
  பாராய பட்டய மீரிரண் டாலும் பயமறுக்கும்
  ஆராவமுது அத்திமாலைமேல் நின்றவச்சுதனே.

  11.10:
  என்னடிகேசனிறை கீழிடக்கழுத் தென்றிவற்றி
  னநன்னிலைமின்னுருவாய் நாலுமுற்கரங்கொண்டளிக்கும்
  பொன்னகில் சேர்ந்தலைக்கும் புனல்வேகை வடகரையிற்
  றென்னுகந்து தொழும் தேனவேதியர் தெய்வமொன்றே.

  11.11:
  எம்பற்ப நாபனும் என்பின்மனம்பற்றி மன்னி
  நின்றுவெம்பொற் கதிரவனாயிர மேவியமெய்யுருவா
  யம்பொற்கரங்களில் ஐம்படைகொண்டஞ்ச லென்றளிக்குஞ்
  செம்பொற்றி ருமதிள்சூழ் சிந்துராசலச் சேவகனே.

  11.12:
  தாமோதரனென்றன் தாமங்கள் ணாலுகரங்களிற்f கொண்டு
  ஆமோதரமென வாக்த்தினுட் புறம்பிற் கழுத்துந்
  தாமோரிளங்க திரோனென வென்னுளிருளறுக்கு
  மாமோக மாற்றும் மதிளத்தியூரின் மரகதமே.

  11.13:
  கத்திதிரியுங்கலை களைவெல்லுங்f கருத்தில்வைத்துப்
  பத்திக்குறுதுணை பன்னிருநாமம் பயில்பவர்க்கு
  முத்திக்கு மூலமெனவே மொழிந்த விம்மூன்றுநான்குந்
  தித்திக்குமெங்க டிருவத்தியூரைச் சேர்பவர்க்கே.

  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு : கேசவன், நாரணன், மாதவநாமம்,
  கோவிந்தன், விட்டு, மதுசூதனன், திரிவிக்கிரமன்,
  வாமனன், சீரார், என்னிடிகேசன், எம்பற்பநாபன்,
  தாமோதரன், கத்தி, நாவலர்.
  -----

  12. திருமந்திரச்சுருக்கு  12.1:
  நாவலர் மறைநா லொன்று நலந்திகழ் மறையொன் றோரா
  தாவலிப் பலைக்கு மோகத் தழுந்திநின் றலமர் கின்றீர்
  தூவலம் புரியா மொன்றிற் றுவக்கமாம் வண்ண மொன்றாற்
  காவலென் றகரத் தவ்வாய்க் கருத்துறக் காண்மி னீரே.

  12.2:
  இளக்கமின் மயக்கந் தன்னா லெனக்கியா னுரிய னென்னுங்
  களக்கருத் தொன்றே கொண்டு கடுநர கடைந்து நின்றீர்
  விளக்குமவ் வெழுத்தி னாலாம் வேற்றுமை யேற்றி வாங்கித்
  துளக்கமி லடிமை பூண்டு தூயராய் வாழ்மி னீரே.

  12.3:
  அப்பொரு ளிகந்து மற்று மழித்தழிந் தெழுவார் தாளி
  லிப்பொரு ளிகந்த வன்பா லிரங்கினீர் வணங்கி வீழ்ந்தீ
  ருப்பொரு ளுள்ளி மற்றோ ருயிர்தனக் குரிமை மாற்றி
  யெப்பொருட் பயனு மீதென் றெண்ணினி ரெழுமி னீரே.

  12.4:
  என்றுமோ ரேத மின்றி யிரவியு மொளியும் போல
  வொன்றிநின் றுலக ளிக்கு முகமிகந் தடிமை வைத்தீ
  ரொன்றுமூன் றெழுத்தா யொன்று மொன்றிலொன் றுடைய முன்னே
  யொன்றிய விரண்டை யுள்ளி யுளரென வுய்ம்மி னீரே.

  12.5:
  தத்துவ மறுநான் கோடு தனியிறை யன்றி நின்ற
  சித்தினை யுணரா தென்றுந் திரடொகை யாகி நின்றீர்
  மத்தனைத் தனிவி டாதே மையிலா விளக்க மாக்கி
  யுத்தம னடிமை யான வுயிர்நிலை யுணர்மி னீரே.

  12.6:
  தனதிவை யனைத்து மாகத் தானிறை யாகு மாய
  னுனதென முணர்த்தி தாரா துமக்குநீ ருரிமை யுற்றீ
  ரெனதிவை யனைத்தும் யானே யிறையெனு மிரண்டுந் தீர
  மநவெனு மிரண்டின் மாறா வல்வினை மாற்று வீரே.

  12.7:
  அழிவிலா வுயிர்கட் கெல்லா மருக்கனா யழியா வீசன்
  வழியலா வழிவி லக்கு மதியெழ மாய மூர்த்தி
  வழுவிலா திவைய னைத்தும் வயிற்றில் வைத் துமிழ்ந்த மாலை
  நழுவிலா நார வாக்கி னாடிநீர் நணுகு வீரே.

  12.8:
  வயனமொன் றறிந்து ரைப்பார் வங்கழல் வணங்கி வெள்கி
  நயனமுள் ளின்றி நாளு நள்ளிரு ணண்ணி நின்றீ
  ரயனமிவ் வனைத்துக் குந்தா னவைதனக் கயன மென்னப்
  பயனுமாய்ப் பதியு மான பரமனைப் பணிமி னீரே.

  12.9:
  உயர்ந்தவ ருணர்ந்த வாற்றா லுவந்தகுற் றேவ லெல்லா
  மயர்ந்துநீ ரைம்பு லன்கட் கடிமைபூண் டலமர் கின்றீர்
  பயந்திவை யனைத்து மேந்தும் பரமனார் நாம மொன்றில்
  வியந்தபே ரடிமை தோற்றும் வேற்றுமை மேவு வீரே.

  12.10:
  எண்டிசை பரவுஞ் சீரோ ரெங்களுக் கீந்த வெட்டி
  லுண்டவா றுரைப்பார் போல வொன்பது பொருளு ரைத்தோ
  மண்டுநான் மறையோர் காக்கு மாநிதி யிவைய னைத்துங்
  கண்டவர் விள்ளார் விள்ளக் கருதுவார் காண்கி லாரே.

  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு: நாவலர், இளக்கமின், அப்பொருள், என்றும்,
  தத்துவம், தனதிவை, அழிவிலா, வயனம், உயர்ந்தவர்,
  எண்டிசை, இன்னமுது.-
  --

  13. துவயச்சுருக்கு  13.1:
  இன்னமுத திற்பிறந் தாளிதங் கேட்க வுரைத்தபிரான்
  பொன்னரு ளான்மறை மௌலியிற் பூண்ட விரண்டிசைத்துத்
  தன்னுரை மிக்க தனமி தெனத்தந்த வேதகத்திற்
  றுன்னு பொருள்கள்பத் துந்தொலை யாநிதி யாகின்றவே.

  13.2:
  அருவுரு வானவை தன்னை யடைந்திடத் தானடைந்து
  வெருவுரை கேட்டவை கேட்பித் தகற்றும் வினைவிலக்கி
  யிருதலை யன்புத னாலெமை யின்னடி சேர்த்தருளுந்
  திருவுட னேதிகழ் வார்செறிந் தாரெங்கள் சிந்தையுளே.

  13.3:
  ஓருயி ராய்நின்ற வொண்சுட ரின்ப வுருத்தனிலும்
  பேருரு வத்திலும் பின்னதிற் றோற்று முருக்களிலு
  மோருரு வான வுலகிலு மேற்கு முருக்களினாற்
  சேருதன் மன்னுசெய் யாளன்பர் நம்மனஞ் சேர்ந்தனரே.

  13.4:
  காரண மாயிறை யாய்க்கதி யாயம ரும்பதியா
  யாரண மோது மனைத்துற வாயக லாவுயிராய்ச்
  சீரணி யுஞ்சுட ராய்ச்செறிந் தெங்குந் திகழ்ந்துநின்ற
  நாரண னார்நமக் காய்நல்கி நாந்தொழ நின்றனரே.

  13.5:
  வானமர் மன்னுரு வாய்வகை யாலதி னாலுருவாய்
  மீனம தாமைகே ழன்முத லாம்விப வங்களுமா
  யூனம ருள்ளுரு வாயொளி யாத வருச்சையுமாந்
  தேனமர் செங்கழ லாஞ்சேர்த்த னங்கழ லெம்மனத்தே.

  13.6:
  வேறொ ரணங்கு தொழும்வினை தீர்த்தெமை யாண்டிடுவா
  னாறு மதன்பய னுந்தந் தளிக்கு மருளுடையான்
  மாறில தாயில கும்மது மெல்லடிப் போதிரண்டா
  னாறு துழாய்முடி யானமக் குச்சர ணாயினனே.

  13.7:
  பெறுவது நாம்பெரி யோர்பெறும்பேறென நின்றவெமை
  வெறுமை யுணர்த்தி விலக்காத நன்னிலை யாதரிப்பித்
  துறுமதி யாற்றனை யொண்சர ணென்ற வுணர்வுதந்த
  மறுவுடை மார்பனுக் கேமன் னடைக்கல மாயினமே.

  13.8:
  அருமறை யாதுந் துறவோ மெனவறிந் தார்கவருங்
  கருமமு ஞானமுங் காதலுங் கண்டு முயலகிலோம்
  வருவது மிந்நிலை யாய்மய லுற்ற வெமக்குளதோ
  திருமக ளார்ப்பிரி யாத்திரு மாலன்றி நற்சரணே.

  13.9:
  சுருங்கா வகில மெலாந்துளங் காவமு தக்கடலாய்
  நெருங்கா தணைந்துட னேநின்ற நந்திரு நாரணனா
  ரிரங்காத காலங்க ளெல்லா மிழந்த பயன்பெறவோர்
  பெருங்காத லுற்றினி மேற்பிரி யாமை யுகந்தனமே.

  13.10:
  கடிசூடு மூன்றுங் கழல்பணிந் தார்க்குக் கடிந்திடவே
  முடுசூடி நின்ற முகில்வண்ண னார்முன் னுலகளந்த
  வடிசூடு நாமவ ராதரத் தாலுடுத் துக்களையும்
  படிசூடி யன்புட னேபணி செய்யப் பணிந்தனமே.

  13.11:
  தனதன் றிவையெனத் தானன் றெனமறை சொன்னவெலா
  மெனதென்றும் யானென்றும் மெண்ணுத லால்வரு மீனமெலா
  மனதொன்றி யின்று நமவென்ற தேகொண்டு மாற்றுதலாற்
  றனதன்றி யொன்று மிலாத்தனித் தாதை சதிர்த்தனனே.

  13.12:
  சேர்க்குந் திருமகள் சேர்த்தியின் மன்னுதல் சீர்ப்பெரியோற்
  கேற்குங் குணங்க ளிலக்காம் வடிவி லிணையடிகள்
  பார்க்குஞ் சரணதிற் பற்றுத னந்நிலை நாம்பெறும்பே
  றேற்கின்ற வெல்லைக ளெல்லாக் களையற வெண்ணினமே.

  ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேசிகாய நம:
  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு: இன்னமுது, அருவுரு, ஓருயிராய், காரணமாய்,
  வானமர், வேறோர், பெறுவது, அருமறை, சுருங்காவகிலம்,
  கடிசூடு, தனதன்றிவை, சேர்க்கும், கல்லார்.
  -----

  14. சரமசுலோகச்சுருக்கு


  14.1:
  கல்லா ரகலுங் கருமமு ஞானமுங் காதலுமற்
  றெல்ல நிலைகளுக் கேற்ப விதித்த கிரிசைகளும்
  வல்லார் முயல்க வலியிழந் தாரென் றனைத்தொழுகென்
  றெல்லாத் தரும முரைத்தவ னின்னடி சேர்ந்தனமே.

  14.2:
  வெறுமை யுணர்ந்தது முன்னிட்டு வேறங்க மில்லையெனக்
  குறியவ னின்னற வெட்டக் குறித்திடுங் கோணைதுறந்
  துறுமய னத்திர மென்னப் பொறாநிலை யோர்ந்திடவோ
  ரறநெறி யன்றுரைத் தானழி யாவற மாயினனே.

  14.3:
  வாரிதி விட்டு மலர்மக ளோடு மதுரைவந்து
  பாரத வெஞ்சமர் பார்மகள் பாரஞ் செகவுகந்து
  சாரதி யாய்முன்பு தூதனு மாய்த்தள ரும்விசயன்
  றேரதி னின்றவ னைத்தேற்றி னான்றிற மாயினமே.

  14.4:
  தன்னரு ளாற்பெறுஞ் சாதனஞ் சாதக னென்றிவற்றைத்
  தன்னுட னெண்ணுத னீங்கத் தனித்தொரு சாதனமாய்ப்
  பொன்னரு ளோடுமப் பூமக ளோடும் புகழ்நின்ற
  வின்னுரை யீசனை யேயேக மெண்ண விசைந்தனமே.

  14.5:
  ஊனி லிணைத்துழல் விக்கும் வினைக்கட லுள்விழுந்த
  யானென தான குணங்க ளெனக்கிசை நல்வழியுந்
  தானுத வித்தனைத் தந்திட நின்ற தனித்தரும
  நானினி வேறோர் பரநணு காவகை நல்கியதே.

  14.6:
  கடுவினை நாம்பெறும் பேற்றைத் தகைந்தமை கண்டுநம்
  மேற்றொடைவில காம லிசைந்தொரு காலந் துணிவுடனே
  யுடைமை யடைக்கல மாக வடைக்கு முகப்பதனா
  லடையென வன்றுரைத் தானடை வித்தனன் றன்னடியே.

  14.7:
  கானென்ற வேதங்கள் காக்கும் பரனென்று காட்டநின்றோன்
  றானென் றறிய கிலார்க்கறி விக்குந் தனித்திறலோன்
  வானொன்றி னாரொடு மானிட னெனன வவதரிப்பா
  னானென்ற நந்திரு மானமை நற்பதஞ் சேர்த்திடுமே.

  14.8:
  தன்னிலை காட்டித் தனிமை யுகந்து தனித்தகவா
  லன்னிலை தீர வடைக்கலங் கொண்டாடி சேர்த்திடவே
  பன்னிலை மூல வெழுத்திலும் பாண்டவன் றேர்தனிலு
  முன்னிலை கொண்ட பிரானெமை முன்னிலை கொண்டனனே.

  14.9:
  காடுக ளோநர கோகடி தாங்கர ளத்திரளோ
  சூடு வெடாவன லோதொலை யாநிலை நள்ளிருளோ
  சாடு படச்சர ணாலன்று சாடிய சாரதியார்
  வீடுசெய் வித்து நமைவிடு விக்கின்ற பாவங்களே.

  14.10:
  சென்றுயர் வானமர்ந் தவ்வடி யாருடன் சேர்ந்திடவே
  யின்றெனி லின்றுநா ளையெனி னாளை யினிச்செறிந்து
  நின்ற நிலைநின் னனைத்து வினையுநின் விட்டகலக்
  கன்றி விடுப்பனென் றாங்கருத் தானமைக் காத்திடுமே.

  14.11:
  அறிவு மனைத்து மிலாவடி யோமை யடைக்கலங்கொண்
  டுறவென நின்ற வெலாமுற வேநின்ற தானெமக்காய்
  மறுபிற வித்துயர் வாரா வகைமனங் கொண்டகலா
  விறையவ னின்னரு ளாலெங்கள் சோகந் தவிர்த்தனனே.

  ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேசிகாய நம:
  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு: கல்லால், வெறுமை, வாரிதி, தன்னருளால்
  ஊனில், கடுவினை, கானென்ற, தன்னிலை, காடுகளோ,
  சென்று, அறிவு, கருமமும்.
  -----

  15. கீதார்த்தசங்கிரகம்  தனியன்
  கட்டப் பொருள்விரித்த காசினியி னான்மறையி
  னிட்டப் பொருளியம்பு மின்பொருளைச் - சிட்டர்தொழும்
  வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கடிருப்
  பாதம் புயமடியேன் பற்று.

  கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார்
  பாதார விந்தமலர் பற்று.

  15.1:
  கருமமு ஞானமுங் கொண்டெழுங் காதலுக் கோரிலக்கென்
  றருமறை யுச்சியு ளாதரித் தோது மரும்பிரமந்
  திருமக ளோடு வருந்திரு மாலென்று தானுரைத்தான்
  றரும முகந்த தனஞ்சய னுக்கவன் சாரதியே.

  15.2:
  உகவை யடைந்த வுறவுடை யார்பொர லுற்றவந்நாட்
  டகவுட னன்பு கரைபுர ளத்தரு மத்தளவின்
  மிகவுள மஞ்சி விழுந்தடி சேர்ந்த விசயனுக்கோர்
  நகையுட னுண்மை யுரைக்க வமைந்தன னாரணனே.

  15.3:
  உடல மழிந்திடு முள்ளுயி ரொன்றழி யாதெனைப்போல்
  விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
  கடுக வுனக்குயிர் காட்டு நினைவத னாலுளதாம்
  விடுமய லென்று விசயனைத் தேற்றினன் வித்தகனே.

  15.4:
  சங்கந் தவிர்ந்து சகஞ்சதிர் பெற்ற தனஞ்சயனே
  பொங்குங் குணங்கள் புணர்ப்பனைத் தும்புக விட்டவற்று
  ணங்கண் ணுரைத்த கிரிசை யெலாமென வுந்நவின்றா
  ரெங்கும் மறிவர்க ளேயென்று நாத னியம்பினனே.

  15.5:
  பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளுந்
  துறவாக் கிரிசைக டூமதி தன்னாற் றுலங்குகையு
  மிறவா வுயிர்நன் னிலைகண் டிடுமுல கின்னிலையு
  மறைவாழு மாயவ னேயனுக் கன்றறி வித்தனனே.

  15.6:
  கண்டெளி தாங்கரு மம்முயிர் காட்டக் கடுகுதலு
  மண்டி யதன்படி யின்மனங் கொள்ளும் வரிசைகளுங்
  கண்டறி யாவுயி ரைக்காண லுற்ற நினைவுகளும்
  வண்டுவ ரேச னியம்பினன் வாசவன் மைந்தனுக்கே.

  15.7:
  யோக முயற்சியும் யோகிற் சமநிலை நால்வகையும்
  யோகி னுபாயமும் யோகுத னால்வரும் பேருகளும்
  யோகு தனிற்றன் றிறமுடை யோகுதன் முக்கியமு
  நாகணை யோகி நவின்றன னன்முடி வீரனுக்கே.

  15.8:
  தானின்ற வுண்மையைத் தன்றனி மாயை மறைத்தமையுந்
  தானன்றி மாயை தனைத்தவிர்ப் பான்விர கற்றமையு
  மேனின்ற பத்தர்க ணால்வரின் ஞானிதன் மேன்மைகளுந்
  தேனின்ற செங்கழ லான்றெளி வித்தனன் பார்த்தனுக்கே.

  15.9:
  அராத செல்வமு மாருயிர் காணு மரும்பயனும்
  பேராது தங்கழற் கீழம ரும்பெரு வாழ்ச்சிகளுஞ்
  சோரா துகந்தவர் தூமதி கொள்வதுஞ் செய்வனவுந்
  தேரா விசயனுக் குத்திரு நாரணன் செப்பினனே.

  15.10:
  தன்மேன்மை யுந்தன் பிறப்பிற் றளராத் தனிநிலையும்
  பன்மேனி நண்ணினன் பாற்பிரி யாவன்ப ராசைகளும்
  புன்மேனி விண்ணவர் பாற்புரி யாததன் பத்திமையு
  நன்மேனி நாரணன் றானர னுக்கு நவின்றனனே.

  15.11:
  எல்லை யிலாததன் சீலமா மின்னமு தக்கடலு
  மெல்லை யிலாத விபூதி யெலாந்தன தானமையு
  மெல்லையில் பத்தி தனையெழு விக்கத் திருவருளா
  லெல்லையி லீச னியம்பின னிந்திரன் மைந்தனுக்கே.

  15.12:
  எல்லந் தனக்குரு வாயிலங் கும்வகை தானுரைத்துச்
  சொல்லா லறிந்தது சோராமற் கண்டடி வேண்டுமென்ற
  வில்லாள னுக்கன்று மெய்க்கண் கொடுத்திது வேறுமுண்டோ
  நல்லவர்கண் காண்பாரென் றுநவின் றானங்க ணாயகனே.

  15.13:
  தன்கழ லிற்பத்தி தாழா ததுமதன் காரணமா
  மிங்குண சிந்தையு மீதறி யார்க்கவ் வடிமைகளுந்
  தங்கரு மங்க ளறியா தவர்க்கி லகுநிலையுந்
  தங்கழ லன்பர்க்கு நல்லவன் சாற்றினன் பார்த்தனுக்கே.

  15.14:
  ஊனின் படியு முயிரின் பிரிவு முயிர்பெறுவார்
  ஞானம் பெறுவகை யுஞ்ஞான மீன்ற வுயிர்ப்பயனு
  மூனின் றதற்கடி யும்முயிர் வேறிடு முளவிரகுந்
  தேனின்ற பாதன் றெளிவித் தனஞ்சிலைப் பார்த்தனுக்கே.

  15.15:
  முக்குண மேயுயிர் முற்றவுங் கட்டிட மூண்டமையு
  முக்குண மேயனைத் தும்வினை கொள்ள முயன்றமையு
  முக்குண மாயை கடத்தலு முக்கதி தந்தளிப்பு
  முக்குண மற்ற பிரான்மொழிந் தான்முடி யோன்றனக்கே.

  15.16:
  மூவெட் டினுமதின் மோக மடைந்த வுயிர்களினு
  நாவெட் டெழுத்தொடு நல்வீடு நண்ணின நம்பரினு
  மேவெட்டு வன்குண விண்ணோர் களினும் விசயனுக்குத்
  தாவிட் டுலகளந் தான்றனை வேறென்று சற்றினனே.

  15.17:
  ஆணை மறாதவர் தேவரல் லாவழக் கோரசுரர்
  கோணை மராத குணச்செல்வ நீகுறிக் கொண்மறையைப்
  பேணிய தத்துவ மும்பிணி யற்ற கிரிசைகளுங்
  காணித னால்விச யாவென்று கண்ண னியம்பினனே.

  15.18:
  மறைபொருந் தாதவை வல்லசு ரர்க்கு வகுத்தமையு
  மறைபொருந் துந்நிலை யின்வன் குணப்படி மூவகையு
  மறைநிலை தன்னை வகுக்குங் குறிமூன்றின் மேன்மையுமம்
  மறையுமிழ்ந் தானுரைத் தான்வாச வன்றன் சிறுவனுக்கே.

  15.19:
  சத்துவ வீடுடை நற்கரு மந்தா னுகந்தமையுஞ்
  சத்துவ முள்ளது தான்குறிக் கொள்வகை செய்ததுவுஞ்
  சத்துவ நற்கிரி சைப்பய னுஞ்சர ணாகதியுஞ்
  சத்துவ மேதரு வானுரைத் தான்றனிப் பார்த்தனுக்கே.

  15.20:
  வன்பற் றறுக்கு மருந்தென்று மாயவன் றானுரைத்த
  வின்பக் கடலமு தாமென நின்றவிக் கீதைதனை
  யன்பர்க் குரைப்பவர் கேட்பவ ராதரித் தோதுமவர்
  துன்பக் கடலுட் டுளங்குகை நீங்கித் துலங்குவரே.

  15.21:
  தீதற்ற நற்குணப் பாற்கடற் றாமரைச் செம்மலர்மேன்
  மாதுற்ற மார்வன் மருவவின் கீதையின் வண்பொருளைக்
  கோதற்ற நான்மறை மௌலியி னாசிரி யன்குறித்தான்
  காதற் றுணிவுடை யார்கற்கும் வண்ணங் கருத்துடனே.

  ஸ்ரீ நிகமாந்தமஹாதேசிகாய நம:
  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு: கருமமும், உகவை, உடலம், சங்கம்,
  பிறவாமை, கண்டெளி, யோக, தானின்ற,
  ஆராத, தன்மேன்மை, எல்லையில்லாத,
  எல்லாந், தன்கழல், ஊனின், முக்குணமே,
  மூவெட்டினும், ஆணை, மறை, சத்துவ, வன்பற்று,
  தீதற்ற, அருதரும்.-
  ----

  மும்மணிக்கோவை  16.1:
  அருடரு மடியர்பான் மெய்யை வைத்துத்
  தேருடர நின்ற தெய்வநா யகநின்
  னருளெனுஞ் சீரோ ரரிவையா னதென
  விருள்செக வெமக்கோ ரின்னொளி விளக்காய்
  மணிவரை யன்ன நின்றிரு வுருவி
  லணியம ராகத் தலங்கலா யிலங்கி
  நின்படிக் கெல்லாந் தன்படி யேற்க
  வன்புட னின்னோ டவதரித் தருளி
  வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்
  தீண்டிய வினைகண் மாண்டிட முயன்று
  தன்னடி சேர்ந்த தமருனை யணுக
  நின்னுடன் சேர்ந்து நிற்குநின் றிருவே.

  16.2:
  திருமாலடியவர்க்கு மெய்யனார், செய்ய
  திருமாமகளென்றுஞ்சேரும் திருமார்பில்
  இன்மணிக்கோவையுடன் ஏற்கின்றார், என்றனின்
  மும்மணிக்கோவை மொழி.

  16.3:
  மொழிவார் மொழிவன மும்மறையாகும் அயிந்தையில்வந்து
  இழிவாரிழிகவென்று இன்னமுதக் கடலாகிநின்ற
  விழிவாரருள் மெய்யர் மெல்லடிவேண்டிய மெல்லியல்மேற்
  பொழிவாரனங்கர் தம்பூங்கரும்புந்தியபூமழையே.

  16.4:
  மழையி லெழுந்த மொக்குள்போல் வைய
  மழியவொன் றழியா வடியவர் மெய்ய
  வருமறை யின்பொரு ளாய்ந்தெடுக் குங்காற்
  றிருவுட னமர்ந்த தெய்வ நாயக
  நின்றிருத் தனக்கு நீதிரு வாகி
  யிந்துதன் னிலவுட னிலங்குதன் மையினை
  நந்துத லில்லா நல்விளக் காகி
  யந்தமி லமுத வாழியாய் நிற்றி
  பாற்கட றன்னிற் பன்மணி யன்ன
  சீர்க்கணஞ் சேர்ந்த சீலமெல் லை
  யிலையடியவர் பிழைக ணின்கருத்
  தடையாதடையவாண் டருளு மரசனு நீயே
  யுயர்ந்தநீ யுன்னை யெம்முடன் கலந்தனை
  யயிந்தைமா நகரி லமர்ந்தனை யெமக்காய்ச்
  சித்திர மணியெனத் திகழுமன் னுருவி
  லத்திர மணியென வனைத்துநீ யணிதி
  விண்ணு ளமர்ந்த வியனுரு வதனா
  லெண்ணிய வீரிரண் டுருக்களு மடைதி
  பன்னிரு நாமம் பலபல வுருவா
  யின்னுரு வெங்கு மெய்திநீ நிற்றி
  மீனோ டாமை கேழல்கோ ளரியாய்
  வானோர் குறளாய் மழுப்படை முனியாய்ப்
  பின்னு மிராம ரிருவராய்ப் பாரிற்
  றுன்னிய பரந்தீர் துவரைமன் னனுமாய்க்
  கலிதவிர்த் தருளுங் கற்கியாய் மற்று
  மலிவதற் கெண்ணும் வல்வினை மாற்ற
  நானா வுருவங் கொண்டுநல் லடியோர்
  வானா ரின்ப மிங்குற வருதி
  யோருயி ருலகுக் கென்னுநீ திருவோ
  டேருயி ரெல்லா மெந்தியின் புறுதி
  யாவரு மறியா தெங்குநீ கரந்து
  மேவுருச் சூழ்ந்து வியப்பினான் மிகுதி
  கொண்டிட வெம்மை யடைக்கல முலகிற்
  கண்டிலங் கதியுனை யன்றிமற் றொன்றும்
  பல்வகை நின்ற நின்படி யனைத்தினுந்
  தொல்வகை காட்டுந் துணிந்துதூ மறையே.

  16.5:
  தூமறையினுள்ளம் துளங்காத்துணிவு தரும்
  ஆமறிவாலார்ந்தடிமை யாகின்றோம் பூமறையோன்
  பாராயணத்திற்பணியும் அயிந்தைநகர்
  நராயணனார்க்கே நாம்.

  16.6:
  ஆர்குங்கருணை பொழிவான் அயிந்தையில் வந்தமர்ந்த
  கார்க்கொண்டலைக்கண்ட காதற்புனமயில் கண்பனியா
  வேர்க்குமுகிழ்விக்கும் விதிர்விதிர்க்கும் வெள்கிவெவ்வுயிர்க்கும்
  பார்க்கின்றவர்க்கிது நாமென்கொலென்று பயிலுவமே.

  16.7:
  பயின்மதிநீயே பயின்மதிதருதலின்
  வெளியுநீயே வெளியுறநிற்றலின்
  றாயுநீயே சாயைதந்துகத்தலின்
  றந்தையு நீயே முந்திநின்றளித்தலின்
  உறவுநீயே துறவாதொழிதலின்
  உற்றதுநீயே சிற்றின்பமின்மையி
  னாறுநீயே யாற்றுக்கருள்தலி
  னறமுநீயே மறநிலைமாய்த்தலின்
  றுணைவனு நீயே யிணையிலை யாதலின்
  றுய்யனுநீயே செய்யாளுறைதலின்
  காரணநீயே நாரணானாதலின்
  கற்பகநீயே நற்பதந்தருதலின்
  இறைவனுநீயே குறையொன்றிலாமையின்
  இன்பமுநீயே துன்பந்துடைத்தலின்
  யானுநீயே யென்னுளுறைதலி
  னெனதுநீயே யுனதன்றி யின்மையி
  னல்லாய்நீயே பொல்லாங்கிலாமையின்
  வல்லாய்நீயே வையமுண்டுமிழ்தலின்
  எஞ்ஞமாகு மெய்யநின்வியல்பே
  யங்ஙனேயொக்க வறிவதாரணமே.

  16.8:
  ஆரணங்கள்தேட அயிந்தைநகர்வந்துதித்த
  காரணராய்நின்ற கடல்வண்ணர் நாரணனார்
  இப்படிக்குமிக்கு அன்றெடுத்த பாதங்கழுவ
  மெய்ப்படிக்கமானது பொன்வெற்பு.

  16.9:
  வெற்புடனொன்றி அயிந்தையில் வெவ்வினை தீர்மருந்தொன்று
  அற்புதமாக வமர்ந்தமைகேட்டு அருள்வேண்டிநிற்கப்
  பற்பிலமர்ந்தசெய்யாள் படிகாடியபண்புடையெம்
  விற்புருவக்கொடிக் கோர்விலங் காமயல் பெற்றனமே.

  16.10:
  பெற்றனைநீயே மற்றுளவெல்லாம்
  பெறுவதுநின்னையுறுவதுகொள்வார்
  நின்னாலன்றி மன்னாரின்ப
  நின்னபொருட்டுநீயென்ன பொருட்டிலை
  நின்னரு நின்றுமின்னுருத்தோன்று
  நின்றனக் குநிகர் நின்னடி யடைவார்
  நின்பாலன்றியன் பாலுய்யார்
  வாரண மழைக்க வந்த காரணனே.

  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
  அடிவரவு: அருள்தரும், திருமால், மொழிவார்,
  மழை, தூமறை, ஆர்க்கும், பயின்மதி,
  ஆரணங்க, வெற்புடன், பெற்றனை, ஒருமதி.
  ------

  17. நவமணிமாலை  17.1:
  ஒருமதியன்பருளங்க வர்ந்தன
  வுலகமடங்க வளர்ந்தளந்தன
  வொருசடையொன்றியகங்கைதந்தன
  வுரகபடங்களரங்குகொண்டன
  தருமமுயர்ந்ததிதென்னநின்றன
  தருமனிரந்த திசைந்து சென்றன
  சகடமுடைந்து கலங்க வென்றன
  தமர்க ளுருந்து மருந்தி தென்பன
  திருமகள் செய்ய கரங்களொன்றின
  திகழ்து ளவுந்து மனங்க மழ்ந்தன
  செழுமணி கொண்ட சிலம்பிலங்கின
  சிலைதனிலன் றோரணங்கு மிழ்ந்தன
  வருமறையந்த மமர்ந்த பண்பின
  வயன்முடி தன்னிலமர்ந்து யர்ந்தன
  வருள்தர வெண்ணிய யிந்தைவந்தன
  வடியவர் மெய்யர் மலர்ப்பதங்களே.

  17.2:
  மகரம்வளரு மளவில்பௌவமடைய வுற்றலைத்தனை
  வடிவுக மடமென வமர்ந்து கிரிதனைத் தரித்தனை
  மலியுமசுரனு மைடந்து வசுதையைப்பெ யர்த்தனை
  வலிகொளவுணனுடல் பிளந்து மதலை மெய்க்கு தித்தனை
  பகருமுலக மடியளந்து தமர்மளுக் களித்தனை
  பரசுமுனிவன் வடிவுகொண்டு பகைவரைத் துணித்தனை
  பணியவிசைவில் றசமுகன்றன் முடுகள் பத்துதிர்த்தனை
  படியுமுருவில் வருபிலம்ப வசுரனைத் தகர்த்தனை
  நகரிதுவரையென வுகந்துவரை கரத்தெடுத்தனை
  நடமொடிய லுபரியில் வந்துநலிவ றுக்கவுற்றனை
  நலியுன் வினைகள் செகுமருந்தின் நலமுறைந்த வெற்பினை
  நணுகு கருடநதி கிளர்ந்த புனலுகப் பில்வைத்தனை
  யகரமுதலவுரை கொள்மங்கை கணவனுக்களித்தனை
  யடையும் வினதை சிறுவனுய்ய வருள்கொடுத்து யர்த்தினை
  யடியு மணையு மெனு மனந்தனடி தொழக்க ளித்தனை
  யவனிமருவு திருவயிந்தை யடியவர்க்கு மெய்யனே.

  17.3:
  புரமுயர்த்த வசுரர்கட்கு ஓர்புறமுரைத்த பொய்யினான்
  வரையெடுத்து மழைதடுத்த மழையொடொத்த மெய்யினான்
  றிரைநிரைத்த கடலெரித்த சிலைவளைத்த கையினான்
  அருள்கொடுத்து வினைதவிர்க்கும் அடியவர்க்கு மெய்யனே.

  17.4:
  தேசொத்தாரில்லையெனும் தெய்வநாயகனார்
  வாசக்குழல் மாமலராள் மணவாளர்
  வாசித்தெழுமன்மதனார் மணற்றோப்பின்
  மாசிக்கடலாடி மகிழ்ந்து வருவாரே.

  17.5: உருளுஞ்சகடமொன்றுதைத்தாய்
  உலகமேழு முண்டுமிழ்ந்த ளந்தாய்
  பொருளுமழலு மிறையாகப்
  பூண்டேன் அடிமையினின் மீண்டேன்
  இருளும் மருளுன் தருமந்நாள்
  எழிலாராழிசங்கேந்தி
  யருளுந்தெருளுன் தரவென்பா
  லடியோர் மெய்ய வந்தருளே.

  17.6:
  வஞ்சனை செய்த பூதனையை மலியுஞ்சாட்டை
  மல்லரையோர் மதகளிற்றை வானோரஞ்சுங்
  கஞ்சனை முன்கடிந்தவனி பாரந்தீர்ந்த
  காவலனே கோவலனாய் நின்றகோவே
  யஞ்சன முங்காயா வுமனையமேனி
  யடியவர்க்கு மெய்யனே அயிந்தைவாழு
  மஞ்செனவே யருள்பொழியும் வள்ளலே நின்
  வடிவழகு மறவாதார் பிறவாதாரே.

  17.7:
  மையுமாகட லுமயிலுமா மழையு
  மணிகளுங்கு வளையுங்கொண்ட
  மெய்யனே அடியோர் மெய்யனே விண்ணோ
  ரீசனே நீசனேனடைந்தேன்
  கையு மாழியுமாய்க் களிறு காத்தவனே
  காலனார் தமரெனைக் கவராது
  இயனே வந்தன் றஞ்சலென் றருடென்
  னயிந்தைமா நகர மர்ந்தானே.

  17.8:
  மஞ்சுலாவு சோலை சூழ யிந்தை மன்னுசீர்
  வரையெடுத்து நிரையளித்த மாசில் வாசுதேவனே
  செஞ்சொலன்பர் சிந்தை கொண்டு தீதிலாத தூதனாய்த்
  தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வம் தெய்வ நாயக
  வெஞ்சொலாளர் காலதூதர் வீசு பாசம் வந்தென்மேல்
  விழுந்தழுந்தி யானயர்ந்து வீழ்வதற்குமுன்ன நீ
  யஞ்ச லஞ்ச லஞ்ச லென்றளிக்க வேண்டுமச்சுதா
  யடியவர்க்கு மருளியக்கு மடியவர்க்கு மெய்யனே.

  17.9:
  பொருத்தம் பொருந்தலும் போகுந்தவற்றுடன் பொய்ம்மதிமேல்
  விருத்தங்கலிதுறை மேவுமழன்மதம் வேறினியென்
  றிருத்தமனத்தினிற் சேராவெமைத் தெய்வநாயகநின்
  வருத்தம் பொறாவருளால் மன்னடைக் கலங்கொண்டருளே.

  17.10:
  அந்தமில் சீரயிந்தை நகரமர்ந்த நாத
  னடியிணைமேல் அடியுரையாலைம்பதேத்திச்
  சிந்தைகவர் பிராகிருத நூறு கூறிச்
  செழுந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்துப்
  பந்து கழலம்மானை யூசலேசல்
  பரவு நவமணி மாலையிவையுஞ்சொன்னேன்
  முந்தைமறை மொழிய வழிமொழி நீயென்று
  முகுந்தனருள் தந்த பயன் பெற்றேன் நானே.

  சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  அடிவரவு : ஒருமதி, மகரம், புரமுயர்ந்த,
  தேசொத்தார், உருளம், வஞ்சனை மலியும், மையும்,
  மஞ்சு, பொருத்தம், அந்தமில்சீர்,
  ------

  18. பிரபந்தசாரம்  சிறப்புத்தனியன்: எண்சீராசிரியவிருத்தம்
  ஆரணநான் கின்பொருளை யாழ்வார்க ளாய்ந்தடைவே
  யன்புடனே யம்புவியோ ரனைவருமீ டேறவென்று
  நாரணனார் தாள்களிலே நாலாயி ரந்தமிழா
  னண்ணியுரை செய்தவற்றை நாடிவகை தொகைசெய்தாய்
  பூரணமா ஞானியர்சேர் பொங்குபுகழ்த் தூப்புல்வரும்
  புனிதனென்றும் பிள்ளையென்றும் புவியர்புகழ் வேங்கடவா
  தாரணியோ ரிங்குகக்கச் சாற்றியநற் ப்ரபந்தசாரந்
  தனையுரைத்து வாழுமனந் தந்தருளா யென்றனக்கே.

  ஆதிமறை யோதிமகி ழயக்கிரிவர் தம்மருளா
  லன்புடனே தூப்புனக ரவதரித்தே யிங்குவந்த
  வாதியரை வென்றுவந்து வன்புவிமே லெதிராசர்
  வாழ்வுறுனற் றெரிசனத்தை வண்மையுட னேவளர்த்து
  நீதினெறி தவறாம னிருத்தியிடும் வேங்கடவா
  நேசமுட னாழ்வார்க ணிலைகளையெல் லாமுணர்ந்து
  சாதுசனம் வாழவென்று சாற்றியநற் ப்ரபந்தசாரந்
  தனையுரைத்து வாழுமனந் தந்தருளா யென்றனக்கே.

  ஆசார்யவந்தனம்

  18.1:
  ஆழ்வார்க ளவதரித்த நாளூர் திங்க
  ளடைவுதிரு நாமங்க ளவர்த்தாஞ் செய்த
  வாழ்வான திருமொழிக ளவற்றுட் பாட்டின்
  வகையான தொகையிலக்க மற்று மெல்லாம்
  வீழ்வாக மேதினிமேல் விளங்க நாளும்
  விரித்துரைக்குங் கருத்துடனே மிக்கோர் தங்க
  ணீள்பாத நிரந்தரமுந் தொழுது வாழ்த்து
  நேசமுட னடியேன்றன் னெஞ்சு தானே.

  பொய்கையாழ்வார்
  18-2
  அருண்மிகுத்த தொருவடிவாய்க் கச்சி தன்னி
  லைப்பசிமா தத்திருவோ ணத்து நாளிற்
  பொருண்மிகுந்த மறைவிளங்கப் புவியோ ருய்யப்
  பொய்கைதனில் வந்துதித்த புனிதா முன்னா
  ளிருளதனிற் றண்கோவ லிடைக ழிச்சென்றி
  ருவருட னிற்கவுமா லிடைநெ ருக்கத்
  திருவிளக்கா மெனும்வையந் தகளி நூறுஞ்
  செழும்பொருளா வெனக்கருள்செய் திருந்த நீயே.

  பூதத்தாழ்வார்
  18-3
  கடன்மல்லைக் காவலனே பூத வேந்தே
  காசினிமே லைப்பசியி லவிட்ட நாள்வந்
  திடர்கடியுந் தண்கோவ லிடைக ழிச்சென்
  றிணையில்லா மூவருமா யிசைந்தே நிற்க
  நடுவிலிவ ரொருவருமென் றறியா வண்ண
  நள்ளிருளின் மானெருக்க நந்தா ஞானச்
  சுர்விளக்கேற் றியவன்பே தகளி யான
  தொடைநுaறு மெனக்கருளசெய் துலங்க நீயே.

  பேயாழ்வார்
  18-4
  மாமயிலைப் பதியதனிற் றுலாமா தத்தில்
  வருஞ்சதயத் தவரித்துக் கோவ லூரிற்
  றூமுனிவ ரிருவருடன் றுலங்க நின்று
  துன்னியபே ரிருணீங்கச் சோதி தோன்றச்
  சேமமுட னெடுமாலைக் காணப் புக்குத்
  திருக்கண்டே னெனவுரைத்த தேவே யுன்றன்
  பாமருவு தமிழ்மாலை நூறு பாட்டும்
  பழவடியே னுக்கருள்செய் பரம நீயே.

  திருமழிசையாழ்வார்
  18-5
  தைம்மகத்தில் வருமழிசைப் பரனே மற்றைச்
  சமயங்கள் பலதெரிந்து மாயோ னல்லாற்
  றெய்வம்மற் றில்லையென வுரைத்த வேதச்
  செழும்பொருணான் முகன்றெண்ணூற் றாறு பாட்டு
  மெய்ம்மிகுத்த திருச்சந்த விருத்தப் பாடல்
  விளங்கியநுaற் றிருபதுந்தப் பாமன் மெய்யே
  வையகத்து மறவாம லுரைத்து வாழும்
  வகையடியே னுக்கருள்செய் மகிழ்ந்து நீயே.

  நம்மாழ்வார்
  18-6
  முன்னுரைத்த திருவிருத்த நூறு பாட்டு
  முறையின்வரு மாசிரிய மேழு பாட்டு
  மன்னியநற் பொருட்பெரிய திருவந் தாதி
  மறவாத படியெண்பத் தேழு பாட்டும்
  பின்னுரைத்த தோர்திருவாய் மொழியெப் போதும்
  பிறையறவா யிரத்தோருநூற் றிரண்டு பாட்டு
  மிந்நிலத்தில் வைகாசி விசாகந் தன்னி
  லெழிற்குருகை வருமாறா விரங்கு நீயே.

  மதுரகவிகள்

  18-7
  தேறியமா ஞானமுடன் றிக்கோ ளூரிற்
  சத்திரையிற் சத்திரைநாள் வந்து தோன்றி
  யாறியநல் லன்புடனே குருகூர் நம்பிக்
  கனவரத மந்தரங்க வடிமை செய்து
  மாறனையல் லாலென்று மறந்துந் தேவு
  மற்றறியேனெனுமதுர கவியே நீமுன்
  கூறியகண் ணிநுண்சிறுத்தாம் பதனிற் பாட்டுக்
  குலவுபதி னோன்றுமெனக் குதவு நீயே.

  குலசேகராழ்வார்
  18-8
  பொன்புரையும்வேற்குலசே கரனே மாசிப்
  புனர்பூசத் தெழில்வஞ்சிக் களத்துத் தோன்றி
  யன்புடனே நம்பெருமாள் செம்பொற் கோயி
  லனைத்துலகின் பெருவாழ்வு மடியார் தங்க
  ளின்பமிகு பெருங்குழுவுங் காண மண்மே
  லிருளிரிய வென்றெடுத்த விசையிற் சொன்ன
  நன்பொருள்சேர் திருமொழிநுaற் றைந்து பாட்டு
  நன்றாக வெனக்கருள்செய் நல்கி நீயே

  பெரியாழ்வார்
  18-9
  பேரணிந்த வில்லிபுத்தூ ரானி தன்னிற்
  பெருஞ்சோதி தனித்றோன்றும் பெருமா னேமுன்
  சீரணிந்த பாண்டியன்றன் னெஞ்சு தன்னிற்
  றியக்கறமால் பரத்துவத்தைத் திறமாச் செப்பி
  வாரணமேன் மதுரைவலம் வரவே வானின்
  மால்கருட வாகனனாய்த் தோன்ற வாழ்த்து
  மேரணிபல் லாண்டுமுதற் பாட்டு நானூற்
  றெழுபத்தொன் றிரண்டுமெனக் குதவு நீயே.

  கோதைப்பிராட்டி
  18-10
  வேயர்புகழ் வில்லிபுத்தூ ராடிப் பூர
  மேன்மேலு மிகவிளங்க விட்டு சித்தன்
  றூயதிரு மகளாய்வந் தரங்க னார்க்குத்
  துழாய்மாலை முடிசூக் கொடுத்த மாதே
  நேயமுடன் றிருப்பாவைப் பாட்டா றைந்து
  நீயுரைத்த தையொருதிங் கட்பா மாலை
  யாயபுகழ் நுaறுடனாற் பத்து மூன்று
  மன்புடனே யடியேனுக் கருள்செய் நீயே.

  தொண்டரடிபெடியாழ்வார்
  18-11
  மன்னுமதிட் டிருமண்டங் குடிதான் வாழ
  மார்கழிமா தக்கேட்டை நாளில் வந்து
  துன்னுபுகழ்த் தொண்டரடிப் பொடியே நீமுன்
  றுழாய்மாலைப் பணியடிமை செய்து நாளுந்
  தென்னரங்க மணவாளற் கன்பு மிக்குச்
  செப்பியநற் றிருமாலை நாற்பத் தைந்தும்
  பன்னியநற் றிருப்பள்ளி யெழுச்சி பத்தும்
  பழவடியே னுக்கருள்செய் பரிந்து நீயே.

  திருப்பாணாழ்வார்
  18-12
  உலகரிய மலிபுழ்க்கார்த் திகைமா தத்தி
  லுரோகணிநா ளுறந்தைவளம் பதியிற் றோன்றித்
  தலமளந்த தென்னரங்கர் பாலு லோக
  சாரங்க மாமுனிதோ டனிலே வந்து
  பலமறையின் பொருளாற்பாண் பெருமா ளேநீ
  பாதாதி கேசமதாய்த் பாடித் தந்த
  சொலவமல னாதிபிரான் பத்துப் பாட்டுஞ்
  சோராம லெனக்கருள்செய் துலங்க நீயே.

  திருமங்கையாழ்வார்
  18-13
  அறிவுதரும் பெரியதிரு மொழிதப் பாம
  லாயிரத்தோ டெண்பத்து நாலு பாட்டுங்
  குறியதொரு தாண்டகநா லைந்தா றைந்துங்
  குலாநெடுந்தாண் டகமெழுகூற் றிருக்கை யொன்றுஞ்
  சிறியமடற் பாட்டுமுப்பத் தெட்டி ரண்டுஞங
  சீர்பெரிய மடறனிற்பாட் டெழுபத் தெட்டு
  மிறையவனே கார்த்திகையிற் கார்த்தி கைந்நா
  ளெழிற்குரையல் வருகலியா விரங்கு நீயே.

  ஸ்ரீபாஷ்யகாரர்
  18-14
  தேசமெலா முகந்திடவே பெரும்பூ தூரிற்
  சித்திரையி லாதிரைநாள் வந்து தோன்றிக்
  காசினிமேல் வாதியரை வெஇற ரங்கர்
  கதியாக வாழ்ந்தருளு மெதிரா சாமுன்
  பூசுரர்கோன் றிருவரங்கத் தமுத னாருன்
  பொன்னடிமே லந்தாதி யாகப் போற்றிப்
  பேசியநற் கலித்துறைநூற் றெட்டுப் பாட்டும்
  பிழையரவே யெனக்கருள்செய் பேணி நீயே.

  ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்களின் எண்-விளக்கம்

  18-15
  எண்ணின்முத லாழ்வார்கண் மூன்று நூறு
  மெழின்மழிசைப் பிரானிருநூற் றொருபத் தாறு
  முண்மைமிகு மாறன்மறை யாயி ரத்தோ
  டுற்றவிரு நூற்றுத்தொண் ணூறு மாறும்
  வண்மையுaட மதுரகவி பத்து மொன்றும்
  வஞ்சியர்கோ னூற்றைந்தும் பட்ட நாதன்
  பண்ணியனா னூற்றேழு பத்த மூன்றும்
  பார்கோதை நூற்றேழு பத்து மூன்றே.

  18-16
  பத்தரடிப் பொடிபாட லைம்பத் தைந்தும்
  பாணர்புகல் பத்துடனே பரகா லன்சொ
  லத்தனுயர் வேங்கடமாற் காயி ரத்தோ
  டானவிரு நுaற்றோரைம் பத்து மூன்று
  முத்திதரு மெதிராசர் பொன்ன டிக்கே
  மொழிந்தவமு தர்பாட னூறு மெட்டு
  மெத்திசையும் வாழவிவர் பாடி வைத்த
  விவைநாலா யிரமுமடி யோங்கள் வாழ்வே

  ஆழ்வார்களின் கோஷ்டி
  18-17
  வையகமெண் பொய்கைபூ தம்பே யாழ்வார்
  மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுர கவிகள்
  பொய்யில்புகழ்க் கோழியர்கோன் விட்டு சித்தன்
  பூந்கோதை தொண்தரடிப் பொடிபா ணாழ்வா
  ரையனருட் கலியனெதி ராசர் தம்மோ
  டாறிருவ ரோரொருவ ரவர்தாஞ் செய்த
  துய்யதமி ழிருபத்து நான்கிற் பாட்டின்
  றொகைநாலா யிரமுமடி யோஹங்கள் வாழ்வே.

  பலச்ருதி கூறல்

  அந்தமிலா வாரணநா லாகி நின்ற
  வதன்கருத்தை யாழ்வார்க ளாய்ந்தெ டுத்துச்
  செந்தமிழா லருள்செய்த வகைதொ கையுஞ்
  சிந்தாம லுலகங்கள் வாழ வென்று
  சந்த மிகு தமிழ்மறையோன் றூப்புற் றோன்றும்
  வேதாந்த குருமொழிந்த ப்ரபந்த சாரஞ்
  சிந்தையினா லனுதினமுஞ் சிந்திப் போர்க்குச்
  சேமமதாந் திருமாறன் கருணை யாலே.

  ஆகாரநியமம்
  சிறப்புத்தனியன்

  சீராரும் வேதாந்த தேசி கர்கோன்
  செழுமறையி னுட்பொருளைச் சந்தை செய்தே
  யாராய்ந்து வாழ்வுறவிப் புவியோர் தங்கட்
  கன்புடனே யாகார நியதி சொன்னா
  னேரார மெதிராச ரருளி னாலே
  யெதிர்த்தவர்கள் சிங்கமென விங்கு வந்தோன்
  சீராரும் வேங்கடவன் றூப்புற் பிள்ளை
  செழுந்திருத்தாளிணைமலரென் சென்ன மேலே.

  இந்த ப்ரபந்தவரலாறு

  19-1
  ஆகாரத் திருவகையா நன்றுந் தீது
  மருமறைகொண் டெதிராச ரிவைமொ ழிந்தா
  ராகாத வழிவிலக்கி யாக்கங் கண்ண
  னணைத்துலகும் வாழவிது சாற்றி வைத்தான்
  போகாது போக்குவிக்கு முனிவர் சொன்ன
  பொய்யாத மொழிகளையும் பொருந்தக் கேண்மி
  னாகாதென் றவைதவிர்ந்தா மதுவே கொண்ட
  வசகரனு மாகங்காத் தருள்பெற் றானே.

  பாசுரம் 2 முதல் 10 வரை-விலக்கவேண்டிய அம்சங்கள்

  19-2
  வாயிலல்லா வாயிலினால் வந்த சோறும்
  வரகுமுத லாகாதென் றுரைத்த சோறும்
  வாயினின்றும் விழுமவைதாம் பட்ட சோறும்
  வாய்கொண்ட கவளத்தின் மகுந்த சோறுந்
  தீயவர்கண் படுஞ்சோறுந் தீதற் சோறுஞ்
  சீரையுரை தும்மிலிவை பட்ட சோறு
  நாய் முதலா னவைபார்க்குந் தீண்டுஞ் சோறு
  நாடூய்தல் லாச்சோறு நண்ணாச் சோறே.

  19-3
  மனிசர்பசு முதலானோர் மோந்த சோறு
  மனிசர்தமி லாகாதார் தீண்டுஞ் சோறு
  மினிமையுட னாதரமில் லாதார் சோறு
  மீப்புழுநூன் மயிருகிர்க ளிருக்குஞ் சோறு
  முனிவரெனுந் துறவறத்தோ ரீந்த சோறு
  முனிவர்தங்கள் பாத்திரத்திற் பட்ட சோறு
  மனிசரெலி குக்குடங்கள் காகம் பூனை
  வாய்கொண்ட கறிசோறு மருவாச் சோறே.

  19-4
  அத்திகள்பே ரார்க்கிறலி வெண்கத் தாரி
  யாலரசு நறுவிலிபுங் காயி லாரை
  புத்திகொல்லி குறிஞ்சிதான்றி குசும்பை வேளை
  புனமுருங்கை முருங்கைசுக முளரி யுள்ளி
  சிற்றவரை கொம்மட்டி பண்ணை தொய்யில்
  சீங்கர்ன் றேறலுaவை பனைம யூரன்
  சுத்தியிலா நிலத்திலவை கடம்பு காளான்
  சுரைபீர்க்குச் சணந்தின்னார் சுருதி யோரே.

  19-5
  சிறுகீரை செவ்வகத்தி முருக்கி ரண்டுஞ்
  சிறுபசளை பெரும்பசளை யம்ம ணந்தாள்
  பறித்தொருவர் கொடாதிருக்கத் தானே சென்று
  பாய்தெடுத்துக் கொள்ளுமவை பகிராக் கூறுங்
  குறித்தாலுந் தின்னவொணாக் கைப்பு வர்ப்புங்
  கூர்க்குமவை யழலுமவை கொடும்பு ளிப்புங்
  கறிக்காகா விவையென்று கண்டு ரைத்தார்
  கார்மேனி யருளாளர் கடகத் தாரே.

  19-6
  மாலமுது செய்யாமல் வந்த வெல்லாம்
  வருவிருந்தில் வழங்காமல் வைத்த வெல்லாங்
  காலமிது வன்றென்று கழித்த வெல்லாங்
  கடையின்வருங் கறி முதல் கழுவா வெல்லா
  நுலைசையா வழிகளினால் வந்த வெல்லா
  நுகராத துடன்பாகஞ் செய்த வெல்லா
  ஞ்சீலமிலாச் சிறியோராக் கினவு நல்லோர்
  செலமலங்கள் பட்டனவுந் தின்னார் தாமே.

  19-7
  தேவர்களுக் கிவையென்று வைத்த வெல்லாஞ்
  சிவன்முதலாத் தேவர்களுக் கிட்ட வெல்லா
  மாவிமுத லானவற்றுக் காகா வெல்லா
  மதுவிதவென் றறியவரி தான வெல்லா
  நாவிலிடு வதற்கரிதா யிருப்ப வெல்லா
  நன்றென்று தம்முள்ள மிசையா வெல்லா
  மோவியநா ளோவாத பூவுங் காயு
  முத்தமர்க ளட்டுப்பு முகவார் தாமே.

  19-8
  கிளிஞ்சின்முதல் சுட்டனசுண் ணாம்பு தானுங்
  கிளர்புனலி லெழுங்குமிழி நுரைக டாமும்
  விளைந்தனின் முதன்மாலுக் கீயா வெல்லாங்
  விளைந்தநில மறுகாம்பென் றெழுந்த வெல்லாங்
  களைந்தமனத் தார்மற்றுங் கழித்த வெல்லாங்
  கடியமுதி னியமத்தார் கழத்த வெல்லாந்
  தெளிந்தபுனற் றிருவேங்க டத்த மாறன்
  றிருவாணை கடவாதார் தின்னார் தாமே.

  19-9
  மோரலது சாரங்கள் வாங்கிற் றெல்லா
  முழுப்பகலில் விளங்கனியுந் தானந் தானு
  மோரிரவி லெள்ளுசனே கூடிற் றெல்லா
  மெள்ளதனி லெண்ணைய்தயர் தருபண் டங்க
  ளோர்தவத்தை மந்திரத்தை யொழிப்ப வெல்லா
  முண்ணாத நாட்களிலூ ணத்திப் போதூ
  ணூரணனூ ரடிபணியு நல்லோர் நாளு
  நள்ளிரவி லூணுமிவை யுண்ணார் தாமே.

  19-10
  குளிமுதலா னவைசெய்யா துண்ணு மூணுங்
  கூட்டலடலாப் பந்திலூண் பிறக்கை யூணு
  நளிமதிதீ வளக்காக வுண்ணு மூணு
  நள்ளிரவில் வளக்கின்றி யுண்ணு மூணுங்
  கிளிமொழியா ளுணூநிற்கக் கணவ னூணுங்
  கீழோரை நோக்கூணு மிடக்கை யூணு
  மொளிமறையோர் மற்றுமுக வாத வூணு
  மொளியரங்க ரடிபணிவார் ருகவார் தாமே.

  19-11
  எச்சிறனில் வார்க்குந்நெய் யிருபா கங்க
  ளிருமபாலுங் கையாலு மிட்ட வெல்லாம்
  பச்சையலாற் கடித்தகுறை பழைய வூசல்
  பிறரகத்துப் பாகஞ்செய் தெடுத்த வன்ன
  மச்சினவை பழித்தவைமண் ணாற்றந் தீது
  நகத்தாலே விண்டவைதாங் காணு முப்பும்
  பிச்சுளதா மவைகாடி பின்ன பாகம்
  பிசின்கடனிற் சிவந்ததுவும் பிழையூ ணாமே.

  19-12
  தாதைநல்லா சூரியன்முதற் றமைய னெச்
  சிறரணிசுரர் சோமத்தி லருந்து மெச்சின்
  மாதர்கடகுக் கணவனித மான வெச்சின்
  மயிர்புழுநூல் வழுந்தாலும் புனித மண்ணின்
  மாதவத்துக் கூவிளங்காய் முகவா சத்து
  மாதுளங்காய் மரணம்வரிற் கழித்த வெல்லா
  மோதிவைத்த வுண்ணாநா ளுகந்த வெட்டு
  முளவென்றுங் கழித்தவற்றி னன்றா மூணே.

  19-13
  மாகரும்பின் சாறுதயிர் பானெய் பாக்கு
  வளை மிளகு தேனேலம் பனிநீ ராதி
  யாகரசந் துஎய்தாகு மறியா வெல்லா
  மறியாதார்க் கறியவுந் தூய வாகுஞ்
  சாகரங்க டூயனவா முவாக்கள் கூடிற்
  சலமெல்லாங் கங்கையதா முபரா கத்தின்
  மாகரங்கள் பிணமுதலா மனைத்துங் கொண்டு
  வருபுனலுந் தூய்தாகும் வேகத் தாலே.

  19-14
  தீயாலே நீரொழிய வெந்த வெல்லாந்
  தீயிடுத லொழிந்திடவே பழுத்த வெல்லாந்
  தீயாலு நீராலும் வெந்த வற்றிற்
  றேறவுலர் நெல்லுமுத லான வெல்லா
  மூசாத மாவடக மப்பஞ் சீடை
  யுரொட்டிமுத லாமவற்றிற் பழைய தேனுங்
  கூசாதே கொண்டிடுமின் புதிய தேனுங்
  கொள்ளேனமின் றன்னிரதங் குலைந்தக் காலே.

  19-15
  தலைப்பயனாம் விகாரங்கள் சாக தங்கள்
  சக்கரங்கக் னக்கடைத்த மருந்து தானுங்
  கலக்கமிலா நன்னீரில் வைத்த சோறுங்
  கறிமோர்நெய் பாறயிர்கள் கலந்த சோறும்
  விலக்கமிலா மாக்கன்னற் கோது மத்தால்
  விளைவுறவாக் கியநல்வி காரந் தானு
  மிலைக்கறிபோ லிவையனைத்தும் பழைய வேனு
  மெந்நாளும் வைத்துண்ண விசைகின் றாரே.

  19-16
  தயிர்தன்னின் விகாரங்கள் பூவிற் காயிற்
  பழத்தில்வருஞ் சாறூச றூய வாகு
  முயிரழியா மைக்குண்ணா வூச லுண்ணி
  லுறக்கழுவி நெய்தேனிட் டுண்ண லாகும்
  பயின்மறைநூ லுரையாத பழைய வூசல்
  பழிப்பிலதா நெய்யாலென் றுரைத்தான் சங்கன்
  மயிற்முதலா னவைபின்னும் பட்ட தாயின்
  மண்ணீர்மற் றுரைத்தவற்றால் வரங்க ளாமே.

  19-17
  ஒருகுளம்பி யிருகன்றி யொட்fட கப்பா
  லுப்புடன்பான் மோருடன் மாதர் தம்பால்
  கருவுடைய வற்றின்பால் கன்றி லாப்பான்
  மறுகன்றாற் கறத்திடும்பா றிரிந்தி டும்பா
  றிருமகளார் கணவனலாத் தெய்வத் தின்பேர்
  சின்னமுடை யவற்றின்பால் செம்ம றிப்பால்
  பரிவதிலந் தணர்விலைப்பால் செம்பி னிற்பா
  றீதாம்பா லிவையனைத்தும் பருகாப் பாலே.

  19-18
  கங்கையல்ல திரண்டநாள் வைத்த நீருங்
  கால்கழுவி மகுநீருங் கலங்க னீருந்
  தெங்கனுள தாய்தீயாற் காய்ந்த நீருஞ்
  சிறுகுழுநீர் வழித்தண்ணீர்ப் பந்த னீருஞ்
  சங்கைடை நீர்வண்ணான் றுறைவி னீருந்
  தாரையினா லெச்சிலுது வென்ற நீருஞ்
  சங்குகல மாக்கொண்டு பருகு நீருந்
  தரையில்விழா மழைநீருந் தவிரு நீரே.

  19-19
  வெற்றிலைமுன் றின்னாதே தின்னும்
  வெற்றிலையி னடிநுனியு நடுவி லீர்க்கும்
  வெற்றிலையும் பாக்குமுடன் கூட்டித் தின்னும்
  விதவைக்கு முதன்முடிவாச் சிரமத் தார்க்கும்
  வெற்றிலையுஞ் சுண்ணாம்பி னிலையு மற்றும்
  விரதங்கொண் டிடுநாள்வெற் றிலையும் பாக்கும்
  செற்றிலைதின் னாநிற்கப் பருகு நீரும்
  விதையெனவைத் ததுதினலும் விலக்கி னாரே.

  19-20
  சாதிகுண மாச்சிரமந் தேசங் காலந்
  தருமங்க ணிமித்தங்லண் முதலா வோதும்
  பேதமுத லாகவொரு திரவி யந்தான்
  பிரிந்துநலந் தீங்கினையும் பெற்று நிற்கும்
  பாதமிசைப் பிறந்தோர்க்குக் கபிலை யின்பால்
  பருகிடலா காதென்று மறையோர் சொன்னா
  ராதலினா லோதியுணர்ந் தவர்பா லெல்லா
  மடிக்கடியுங் கேட்டயர்வு தீர்மி னீரே.

  19-21
  கங்கிருளால் விடியாத வுலகுக் கெல்லாங்
  கைவிளக்கா மிவையென்று கண்ணன் காட்டும்
  பொங்குபுக ழாகமங்க டெளியச் சொன்ன
  பொருளிவைநாம் புண்ணியர்பாற் கேட்டுச் சொன்னோ
  மங்குடலும் பொருளுமல்லல தறியா மாந்தர்
  வலையுளகப் பட்டுவரம் பழியா தென்றும்
  பங்கயமா துற்றவரு ளாளர் தம்பாற்
  பத்திமிகு பவித்தரங்கள் பயின்மி னீரே.

  ஸ்ரீதேசிகப்பிரபந்தம்-உரை முற்றிற்று