MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    12.5 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
    ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் (1317 -1327)
    1317 பாலித் தெழில்தங்கு பார்முகம் உய்யப் பறிதலையோர்
    மாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத்
    தாலித் தலர்மிசை அன்னம் நடப்ப அணங்கிதென்னாச்
    சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே. 1
    1318 கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி
    பங்குதங்கும் மங்கை தன்னருள் பெற்றவன் பைம்புணரிப்
    பொங்குவங் கப்புனல் சேர்த்த புதுமணப் புன்னையின்கீழ்ச்
    சங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே. 2
    1319 குவளைக் கருங்கண் கொடியிடை துன்பம் தவிரஅன்று
    துவளத் தொடுவிடம் தீர்த்த தமிழின் தொகைசெய்தவன்
    திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சூளிகைச் சென்னியின்வாய்த்
    தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே. 3
    1320 கள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கடம் ஆக்கிஅஃதே
    வெள்ளம் பணிநெய்தல் ஆக்கிய வித்தகன் வெண்குருகு
    புள்ளொண் தவளப் புரிசங்கொ டாலக் கயல்உகளத்
    தள்ளந் தடம்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே. 4
    1321 ஆறதே றுஞ்சடை யான்அருள் மேவ அவனியர்க்கு
    வீறதே றுந்தமி ழால்வழி கண்டவன் மென்கிளிமாந்
    தேறல்கோ தித்தூறு சண்பகம் தாவிச் செழுங்கமுகின்
    தாறதே றும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே. 5
    1322 அந்தமுந் தும்பிற வித்துயர் தீர அரனடிக்கே
    பந்தமுந் தும்தமிழ் செய்த பராபரன் பைந்தடத்தேன்
    வந்துமுந் தும்நந்தம் முத்தங் கொடுப்ப வயற்கயலே
    சந்தமுந் தும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே. 6
    1323 புண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற் புகஅடைக்கும்
    ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா சனிஉம்பர் பம்பிமின்னும்
    கொண்டலைக் கண்டுவண் டாடப் பெடையொடும் கொக்குறங்கும்
    தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர் காவலன் சம்பந்தனே. 7
    1324 எண்டலைக் குந்தலை வன்கழல் சூடிஎன் உள்ளம்வெள்ளம்
    கண்டலைப் பத்தன் கழல்தந்த வன்கதிர் முத்தநத்தம்
    விண்டலைப் பத்தியில் ஓடும் விரவி மிளர்பவளம்
    தண்டலைக் கும்கடற் சண்பையர் காவலன் சம்பந்தனே. 8
    1325 ஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி அமண்முழுதும்
    பாறுமண் டக்கண்ட சைவ சிகாமணி பைந்தடத்த
    சேறுமண் டச்சங்கு செங்கயல் தேமாங் கனிசிதறிச்
    சாறுமண் டும்வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே. 9
    1326 விடந்திளைக் கும்அர வல்குல்மென் கூந்தல் பெருமணத்தின்
    வடந்திளைக் குங்கொங்கை புல்கிய மன்மதன் வண்கதலிக்
    கடந்திளைத் துக்கழு நீர்புல்கி ஒல்கிக் கரும்புரிஞ்சித்
    தடந்திளைக் கும்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே. 10
    1327 பாலித்த கொங்கு குவளைகள் ளம்பொழில் கீழ்ப்பரந்து
    ஆலிப்ப ஆறதே றுங்கழ னிச் சண்பை அந்தமுந்து
    மேலிட்ட புண்டலைக் குஞ்சரத் தெண்டலைக் குந்தலைவன்
    கோலிட்ட வாறு விடந்திளைக் கும்அர வல்குலையே. 11

    திருச்சிற்றம்பலம்