அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
நான்காம் பகுதி, பாடல்கள் ( 1001- 1326 )
பாடல் 1001 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ...; தாளம் - .....
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ... தனதான
இலகி யிருகுழை கிழிகயல் விழியினு
மிசையி னசைதரு மொழியினு மருவமர்
இருள்செய் குழலினு மிடையினு நடையினு ... மநுராக
இனிமை தருமொரு இதழினு நகையினு
மிளைய ம்ருகமத தனகுவ டழகினு
மியலு மயல்கொடு துணிவது பணிவது ... தணியாதே
குலவி விரகெனு மளறிடை முழுகிய
கொடிய நடலைய னடமிட வருபிணி
குறுகி யிடஎம னிறுதியி லுயிரது ... கொடுபோநாள்
குனகி யழுபவர் அயர்பவர் முயல்பவர்
குதறு முதுபிண மெடுமென வொருபறை
குணலை யிடஅடு சுடலையில் நடவுத ... லினிதோதான்
மலையில் நிகரில தொருமலை தனையுடல்
மறுகி யலமர அறவுர முடுகிய
வலிய பெலமிக வுடையவ னடையவு ... மதிகாய
மவுலி யொருபது மிருபது கரமுடன்
மடிய வொருசரம் விடுபவபன் மதகரி
மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில் ... மதியாதே
அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய
அதுல னிருபத மதுதனி லெழுபுவி
யடைய அளவிட நெடுகிய அரிதிரு ... மருகோனே
அவுண ருடலம தலமர அலைகட
லறவு மறுகிட வடகுவ டனகிரி
யடைய இடிபொடி படஅயில் விடவல ... பெருமாளே.
பாடல் 1002 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ... தனதான
கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு
கனியு முதுபல கனிவகை நலமிவை ... யினிதாகக்
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
அமுது துதிகையில் மனமது களிபெற
கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ... நெடிதான
குடகு வயிறினி லடைவிடு மதகரி
பிறகு வருமொரு முருகசண் முகவென
குவிய இருகர மலர்விழி புனலொடு ... பணியாமற்
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
வறுமை சிறுமையி னலைவுட னரிவையர்
குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ... யொழியாதோ
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு
மறலி வெருவுற ரவிமதி பயமுற
நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ... கொடிதான
நிசிசர் கொடுமுடி சடசட சடவென
பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென
நிகரிலயில்வெயி லெழுபசு மையநிற ... முளதான
நடன மிடுபரிதுரகத மயிலது
முடுகி கடுமையி லுலகதை வலம்வரு
நளின பதவர நதிகுமு குமுவென ... முநிவோரும்
நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென
அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை
நணியெ சரவண மதில்வள ரழகிய ... பெருமாளே.
பாடல் 1003 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ... தனதான)
கமல குமிளித முலைமிசை துகிலிடு
விகட கெருவிக ளசடிகள் கபடிகள்
கலக மிடுவிழி வலைகொடு தழுவிக ... ளிளைஞோர்கள்
கனலி லிடுமெழு கெனநகை யருளிகள்
அநெக விதமொடு தனியென நடவிகள்
கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் ... தமைநாடி
அமுத மொழிகொடு தவநிலை யருளிய
பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை
அடைவு நடைபடி பயிலவு முயலவு ... மறியாத
அசட னறிவிலி யிழிகுல னிவனென
இனமு மனிதரு ளனைவரு முரைசெய
அடிய னிதுபட அரிதினி யொருபொரு ... ளருள்வாயே
திமித திமிதிமி டமடம டமவென
சிகர கரதல டமருக மடிபட
தெனன தெனதென தெனவென நடைபட ... முநிவோர்கள்
சிவமி லுருகியு மரகர வெனவதி
பரத பரிபுர மலரடி தொழஅநு
தினமு நடமிடு பவரிட முறைபவள் ... தருசேயே
குமர சரவண பவதிற லுதவிய
தரும நிகரொடு புலமையு மழகிய
குழக குருபர னெனவொரு மயில்மிசை ... வருவோனே
குறவ ரிடுதினை வனமிசை யிதணிடை
மலையு மரையொடு பசலைகொள் வளர்முலை
குலவு குறமக ளழகொடு தழுவிய ... பெருமாளே.
பாடல் 1004 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - பாகேஸ்ரீ
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ... தனதான
தசையு முதிரமு நிணமொடு செருமிய
கரும கிருமிக ளொழுகிய பழகிய
சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு ... குடில்பேணுஞ்
சகல கருமிகள் சருவிய சமயிகள்
சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்
சவலை யறிவினர் நெறியினை விடஇனி ... யடியேனுக்
கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு
வசன முறஇரு வினையற மலமற
இரவு பகலற எனதற நினதற ... அநுபூதி
இனிமை தருமொரு தனிமையை மறைகளின்
இறுதி யறுதியி டவரிய பெறுதியை
இருமை யொருமையில் பெருமையை வெளிபட ... மொழிவாயே
அசல குலபதி தருமொரு திருமகள்
அமலை விமலைக ளெழுவரும் வழிபட
அருளி அருணையி லுறைதரு மிறையவ ... ளபிராமி
அநகை அநுபவை அநுதயை அபிநவை
அதல முதலெழு தலமிவை முறைமுறை
அடைய அருளிய பழையவ ளருளிய ... சிறியோனே
வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி
மவுன மருளிய மகிமையு மிமையவர்
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் ... வடிவேலும்
மயிலு மியலறி புலமையு முபநிட
மதுர கவிதையும் விதரண கருணையும்
வடிவு மிளமையும் வளமையு மழகிய ... பெருமாளே.
பாடல் 1005 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - காம்போதி
தாளம் - அங்கதாளம் (7 1/2)
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ... தனதான
நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி
நெறுநெ றெனநெரியவுமுது பணிபதி
நிபிட முடிகிழி யவுநில மதிரவும் ... விளையாடும்
நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்
நினது கருணையு முறைதரு பெருமையும்
நிறமு மிளமையும் வளமையு மிருசர ... ணமும்நீப
முடியு மபிநவ வனசரர் கொடியிடை
தளர வளர்வன ம்ருகமத பரிமள
முகுள புளகித தனகிரிதழுவிய ... திரடோ ளும்
மொகுமொ கெனமது கரமுரல் குரவணி
முருக னறுமுக னெனவரு வனபெயர்
முழுது மியல்கொடு பழுதற மொழிவது ... மொருநாளே
கொடிய படுகொலை நிசிசர ருரமொடு
குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு
குருதி நதிவித சதியொடு குதிகொள ... விதியோடக்
குமுறு கடல்குடல் கிழிபட வடுமர
மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர்
குருகு பெயரிய வரைதொளை படவிடு ... சுடர்வேலா
இடியு முனைமலி குலிசமு மிலகிடு
கவள தவளவி கடதட கனகட
இபமு மிரணிய தரணியு முடையதொர் ... தனியானைக்
கிறைவ குருபர சரவண வெகுமுக
ககன புனிதையும் வனிதைய ரறுவரும்
எனது மகவென வுமைதரு மிமையவர் ... பெருமாளே.
பாடல் 1006 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஸஹானா
தாளம் - அங்கதாளம் (7 1/2)
(எடுப்பு - 1/2 தள்ளி)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ... தனதான
பகிர நினைவொரு தினையள விலுமிலி
கருணை யிலியுன தருணையொ டுதணியல்
பழநி மலைகுரு மலைபணி மலைபல ... மலைபாடிப்
பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல்
பழகி யழகிலி குலமிலி நலமிலி
பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி ... லிகுலாலன்
திகிரிவருமொரு செலவிநி லெழுபது
செலவு வருமன பவுரிகொ டலமரு
திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல் ... நினையாத
திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி
திருடன் மதியிலி கதியிலி விதியிலி
செயலி லுணர்விலி சிவபத மடைவது ... மொருநாளே
மகர சலநிதி முறையிட நிசிசரன்
மகுட மொருபது மிருபது திரள்புய
வரையு மறவொரு கணைதெரிபுயல்குரு ... ந்ருபதூதன்
மடுவில் மதகரிமுதலென வுதவிய
வரத னிருதிறல் மருதொடு பொருதவன்
மதலை குதலையின் மறைமொழி யிகழிர ... ணியனாகம்
உ கிரினுதிகொடு வகிருமொ ரடலரி
திகிரிதரமர கதகிரியெரியுமிழ்
உ ரக சுடிகையில் நடநவி லரிதிரு ... மருகோனே
உ ருகு மடியவ ரிருவினை யிருள்பொரு
முதய தினகர இமகரன் வலம்வரும்
உ லக முழுதொரு நொடியினில் வலம்வரு ... பெருமாளே.
பாடல் 1007 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ... தனதான
முருகு செறிகுழ லவிழ்தர முகமதி
முடிய வெயர்வர முதுதிரை யமுதன
மொழிகள் பதறிட வளைகல கலவென ... அணைபோக
முலையின் மிசையிடு வடமுடி யறஇடை
முறியு மெனஇரு பரிபுர மலறிட
முகுள அலரிள நிலவெழ இலவிதழ் ... பருகாநின்
றுருகி யுளமுட லுடலொடு செருகிட
வுயிரு மெனதுயி ரெனமிக வுறவுசெய்
துதவு மடமக ளிர்களொடு மமளியி ... லநுராக
உ ததி யதனிடை விழுகினு மெழுகினும்
உ ழலு கினுமுன தடியிணை எனதுயி
ருதவி யெனவுனை நினைவது மொழிவது ... மறவேனே
எருவை யொடுகொடி கெருடனும் வெளிசிறி
திடமு மிலையென வுலவிட அலகையின்
இனமும் நிணமுண எழுகுறள் களுமிய ... லிசைபாட
இகலி முதுகள மினமிசை யொடுதனி
யிரண பயிரவி பதயுக மிகுநட
மிடவு மிகவெதி ரெதிரெதி ரொருதனு ... விருகாலும்
வரிசை யதனுடன் வளைதர வொருபது
மகுட மிருபது புயமுடன் மடிபட
வலியி னொருகணை விடுகர முதலரி... நெடுமாயன்
மருக குருபர சரவண மதில்வரு
மகிப சுரபதி பதிபெற அவுணர்கள்
மடிய இயல்கொளு மயில்மிசை வரவல ... பெருமாளே.
பாடல் 1008 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ... தனதான
இலகு வேலெனு மிருவினை விழிகளும்
எழுதொ ணாதெனு மிருதன கிரிகளும்
இசையி னால்வசை பொசிதரு மொழிகளு ... மெதிர்வேகொண்
டெதிரிலாவதி பலமுடை யிளைஞரெ
னினிய மாவினை யிருளெனும் வலைகொடு
இடைவி டாதெறு நடுவனு மெனவளை ... மடவார்தம்
கலவி மால்கொடு கலைகளு மறிவொடு
கருதொ ணாதென முனிவுற மருள்கொடு
கரையி லாவிதி யெனுமொரு கடலிடை ... கவிழாதே
கருணை வானவர் தொழுதெழு மயிலுறை
குமர கானவர் சிறுமியொ டுருகிய
கமல தாளிணை கனவிலு நினைவுற ... அருள்தாராய்
பலகை யோடொரு பதுசிர மறஎறி
பகழி யானர வணைமிசை துயில்தரு
பரமன் மால்படி யளவிடு மரிதிரு ... மருகோனே
பழுதி லாமன முடையவர் மலர்கொடு
பரவ மால்விடை மிசையுறை பவரொடு
பரம ஞானமு மிதுவென வுரைசெய்த ... பெரியோனே
அலகை காளிகள் நடமிட அலைகட
லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை
அசுரர் மார்பக மளறது படவிடு ... மயில்வேலா
அரிய பாவல ருரைசெய அருள்புரி
முருக ஆறிரு புயஇய லிசையுடன்
அழகு மாண்மையு மிலகிய சரவண ... பெருமாளே.
பாடல் 1009 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ... தனதான
முருகு லாவிய குழலினு நிழலினும்
அருவ மாகிய இடையினு நடையினு
முளரிபோலுநல் விழியினு மொழியினு ... மடமாதர்
முனிவி லாநகை வலையினு நிலையினும்
இறுக வாரிடு மலையெனு முலையினு
முடிவி லாததொர் கொடுவிட மடுவித ... மயலாகி
நரகி லேவிழு மவலனை யசடனை
வழிப டாதவொர் திருடனை மருடனை
நலமி லாவக கபடனை விகடனை ... வினையேனை
நடுவி லாதன படிறுகொ ளிடறுசொ
லதனில் மூழ்கிய மறவனை யிறவனை
நளின மார்பத மதுபெற ஒருவழி ... யருள்வாயே
வரிய ராவினின் முடிமிசை நடமிடு
பரத மாயவ னெழுபுவி யளவிடு
வரதன் மாதவ னிரணிய னுடலிரு ... பிளவாக
வகிரு மாலரிதிகிரிய னலையெறி
தமர வாரிதி முறையிட நிசிசரன்
மகுட மானவை யொருபதும் விழவொரு ... கணையேவுங்
கரிய மேனியன் மருதொடு பொருதவன்
இனிய பாவல னுரையினி லொழுகிய
கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடு ... மபிராமன்
கருணை நாரண னரபதி சுரபதி
மருக கானக மதனிடை யுறைதரு
கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய ... பெருமாளே.
பாடல் 1010 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ... தனதான
அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத
கலசமு மதனுய ரம்பொன் மாமுடி
யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியு ... மொருகோடி
அடைபடு குடயுக ளங்க ளாமென
ம்ருகமத களபம ணிந்த சீதள
அபிநவ கனதன மங்கை மாருடன் ... விளையாடி
இரவொடு பகலொழி வின்றி மால்தரு
மலைகட லளறுப டிந்து வாயமு
தினிதென அருளஅ ருந்தி யார்வமொ ... டிதமாகி
இருவரு மருவிய ணைந்து பாழ்படு
மருவினை யறவும றந்து னீள்தரு
மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது ... மொருநாளே
சுரர்குல பதிவிதி விண்டு தோலுரி
யுடைபுனை யிருடிக ளண்ட ரானவர்
துதிசெய எதிர்பொர வந்த தானவ ... ரடிமாள
தொலைவறு மலகையி னங்க ளானவை
நடமிட நிணமலை துன்ற வேயதில்
துவரிது புளியிது தொய்ந்த தீதிது ... இதுவீணால்
பருகுத லரியது கந்த தீதிது
உ ளதென குறளிகள் தின்று மெதகு
பசிகெட வொருதனி வென்ற சேவக ... மயில்வீரா
பகிரதி சிறுவலி லங்க லுடுறு
குறமகள் கொழுநப டர்ந்து மேலெழு
பருவரை யுருவஎ றிந்த வேல்வல ... பெருமாளே.
பாடல் 1011 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ... தந்ததான
உ ரைதரு பரசம யங்க ளோதுவ
துருவென அருவென வொன்றி லாததொ
ரொளியென வெளியென வும்ப ராமென ... இம்பராநின்
றுலகுகள் நிலைபெறு தம்ப மாமென
வுரைசெய அதுபொருள் கண்டு மோனமொ
டுணர்வுற வுணர்வொடி ருந்ந நாளும ... ழிந்திடாதே
பரகதி பெறுவதொ ழிந்தி டார்வன
பரிசன தெரிசன கந்த வோசைகள்
பலநல விதமுள துன்ப மாகிம ... யங்கிடாதே
பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்
பலபல விதமுள துன்ப சாகர
படுகுழி யிடைவிழு பஞ்ச பாதக ... னென்றுதீர்வேன்
அரகர சிவசுத கந்த னேநின
தபயம பயமென நின்று வானவர்
அலறிட வொழிகினி யஞ்சி டாதென ... அஞ்சல்கூறி
அடல்தரு நிருதர நந்த வாகினி
யமபுர மடையஅ டர்ந்து போர்புரி
அசுரன தகலமி டந்து போகவ ... கிர்ந்தவேகம்
விரிகடல் துகளெழ வென்ற வேலவ
மரகத கலபசி கண்டி வாகன
விரகுள சரவண முந்தை நான்மறை ... யந்தமோதும்
விரைதரு மலரிலி ருந்த வேதனும்
விடவர வமளிது யின்ற மாயனும்
விமலைகொள் சடையர னும்ப ராவிய ... தம்பிரானே.
பாடல் 1012 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ... தந்ததான
இமகிரிமத்திற் புயங்க வெம்பணி
கயிறது சுற்றித் தரங்க வொண்கடல்
இமையவர் பற்றிக் கடைந்த அன்றெழு ... நஞ்சுபோலே
இருகுழை தத்திப் புரண்டு வந்தொரு
குமிழையு மெற்றிக் கரும்பெ னுஞ்சிலை
ரதிபதி வெற்றிச் சரங்க ளஞ்சையும் ... விஞ்சிநீடு
சமரமி குத்துப் பரந்த செங்கயல்
விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சிய
தமனிய வெற்புக் கிசைந்த வம்பணி ... கொங்கைமீதே
தனிமனம் வைத்துத் தளர்ந்து வண்டமர்
குழலியர் பொய்க்குட் கலங்க லின்றியெ
சததளம் வைத்துச் சிவந்த நின்கழல் ... தந்திடாயோ
அமரர்து திக்கப் புரந்த ரன்தொழ
எழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறி
யலையைய டைத்துக் கடந்து சென்றெதிர் ... முந்துபோரில்
அசுரர்மு தற்கொற் றவன்பெ ருந்திறல்
இருபது கொற்றப் புயங்கள் சிந்திட
அழகிய கொத்துச் சிரங்க ளொன்பது ... மொன்றுமாளக்
கமலம லர்க்கைச் சரந்து ரந்தவர்
மருமக மட்டுக் கொன்றை யந்தொடை
கறையற வொப்பற்ற தும்பை யம்புலி ... கங்கைசூடுங்
கடவுளர் பக்கத் தணங்கு தந்தருள்
குமரகு றத்தத் தைபின்தி ரிந்தவள்
கடினத னத்திற் கலந்தி லங்கிய ... தம்பிரானே.
பாடல் 1013 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ... தந்ததான
முகமுமி னுக்கிப் பெருங்க ருங்குழல்
முகிலைய விழ்த்துச் செருந்தி சண்பக
முடியநி றைத்துத் ததும்பி வந்தடி ... முன்பினாக
முலையைய சைத்துத் திருந்த முன்தரி
கலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சக
முறுவல்வி ளைத்துத் துணிந்து தந்தெரு ... முன்றிலுடே
மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின்
மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறை
வடவையெ றிக்கத் திரண்டு பண்டனை ... வண்டுபாட
மலயநி லத்துப் பிறந்த தென்றலு
நிலைகுலை யத்தொட் டுடம்பு புண்செய
மயலைய ளிக்கக் குழைந்து சிந்தைம ... லங்கலாமோ
பகலவன் மட்கப் புகுந்து கந்தர
ககனமு கட்டைப் பிளந்து மந்தர
பருவரை யொக்கச் சுழன்று பின்புப ... றந்துபோகப்
பணமணி பட்சத் துரங்க முந்தனி
முடுகின டத்திக் கிழிந்து விந்தெழு
பரவைய ரற்றப் ப்ரபஞ்ச நின்றுப ... யந்துவாடக்
குகனென முக்கட் சயம்பு வும்ப்ரிய
மிகவசு ரர்க்குக் குரம்பை வந்தரு
குறவமர் குத்திப் பொருங்கொ டும்படை ... வென்றவேளே
குழைசயை யொப்பற் றிருந்த சங்கரி
கவுரியெ டுத்துப் பரிந்து கொங்கையில்
குணவமு துய்க்கத் தெளிந்து கொண்டருள் ... தம்பிரானே.
பாடல் 1014 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன ... தந்ததான
படிதனி லுறவெனு மனைவர்கள் பரிவொடு
பக்கத் திற்பல கத்திட் டுத்துயர் ... கொண்டுபாவப்
பணைமர விறகுடை யழலிடை யுடலது
பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலை ... யொன்றியேகக்
கடிசம னுயிர்தனை யிருவிழி யனலது
கக்கச் சிக்கென முட்டிக் கட்டியு ... டன்றுபோமுன்
கதிதரு முருகனு மெனநினை நினைபவர்
கற்பிற் புக்கறி வொக்கக் கற்பது ... தந்திடாயோ
வடகிரிதொளைபட அலைகடல் சுவறிட
மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் ...வென்றிவாய
வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட
மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திம ... லைந்தவீரா
அடர்சடை மிசைமதி யலைஜல மதுபுனை
அத்தர்க் குப்பொருள் கற்பித் துப்புகழ் ... கொண்டவாழ்வே
அடியுக முடியினும் வடிவுட னெழுமவு
னத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள் ... தம்பிரானே.
பாடல் 1015 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன ... தந்ததான
விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி
வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ... யென்றுபேசும்
விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில்
இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ... ழன்றுவாடும்
நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது
கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ... கொண்டுபோயே
நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி
முத்திக் குட்படு நித்யத் தத்துவம் ... வந்திடாதோ
இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய
மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ... நஞ்சுவாளி
எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள்
பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ... மிந்த்ரலோகா
வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட
மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி ... யஞ்சசூரன்
மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட
முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ... தம்பிரானே.
பாடல் 1016 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - பெஹாக்
தாளம் - அங்கதாளம்
(எடுப்பு 1 /2 அக்ஷரம் தள்ளி)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த ... தனதான
குகையில்நவ நாத ருஞ்சி றந்த
முகைவனச சாத னுந்த யங்கு
குணமுமசு ரேச ருந்த ரங்க ... முரல்வேதக்
குரகதபு ராரியும்ப்ர சண்ட
மரகதமு ராரியுஞ்செ யங்கொள்
குலிசகைவ லாரியுங்கொ டுங்க ... ணறநூலும்
அகலியபு ராண மும்ப்ர பஞ்ச
சகலகலை நூல்க ளும்ப ரந்த
அருமறைய நேக முங்கு விந்தும் ... அறியாத
அறிவுமறி யாமை யுங்க டந்த
அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன்
அருணசர ணார விந்த மென்று ... அடைவேனோ
பகைகொள்துரியோத னன்பி றந்து
படைபொருத பார தந்தெ ரிந்து
பரியதொரு கோடு கொண்டு சண்ட ... வரைமீதே
பழுதறவி யாச னன்றி யம்ப
எழுதியவி நாய கன்சி வந்த
பவளமத யானை பின்பு வந்த ... முருகோனே
மிகுதமர சாக ரங்க லங்க
எழுசிகர பூத ரங்கு லுங்க
விபரிதநி சாச ரன்தி யங்க ... அமராடி
விபுதர்குல வேழ மங்கை துங்க
பரிமளப டீர கும்ப விம்ப
ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த ... பெருமாளே.
பாடல் 1017 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த ... தனதான
மழையளக பார முங்கு லைந்து
வரிபரவு நீல முஞ்சி வந்து
மதிமுகமும் வேர்வு வந்த ரும்ப ... அணைமீதே
மகுடதன பார முங்கு லுங்க
மணிகலைக ளேற வுந்தி ரைந்து
வசமழிய வேபு ணர்ந்த ணைந்து ... மகிழ்வாகிக்
குழையஇத ழூற லுண்ட ழுந்தி
குருகுமொழி வாய்ம லர்ந்து கொஞ்ச
குமுதபதி போக பொங்கு கங்கை ... குதிபாயக்
குழியிலிழி யாவி தங்க ளொங்கு
மதனகலை யாக மங்கள் விஞ்சி
குமரியர்க ளோடு ழன்று நைந்து ... விடலாமோ
எழுபடைகள் சூர வஞ்ச ரஞ்ச
இரணகள மாக அன்று சென்று
எழுசிகர மாநி லங்கு லுங்க ... விசையூடே
எழுகடலு மேரு வுங்க லங்க
விழிபடர்வு தோகை கொண்ட துங்க
இயல்மயிலின் மாறு கொண்ட மர்ந்த ... வடிவேலா
பொழுதளவு நீடு குன்று சென்று
குறவர்மகள் காலி னும்ப ணிந்து
புளிஞரறி யாம லுந்தி ரிந்து ... புனமீதே
புதியமட லேற வுந்து ணிந்த
அரியபரிதாப முந்த ணிந்து
புளகிதப யோத ரம்பு ணர்ந்த ... பெருமாளே.
பாடல் 1018 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தானத் தாத்தத் தனதன
தத்தானத் தாத்தத் தனதன
தத்தானத் தாத்தத் தனதன ... தனதான
கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய
சொற்பாகைக் காட்டிப் புழுகொடு
கஸ்தூரிச் சேற்றைத் தடவிய ... இளநீரைக்
கட்சேலைக் காட்டிக் குழலழ
கைத்தோளைக் காட்டித் தரகொடு
கைக்காசைக் கேட்டுத் தெருவினில் ... மயில்போலே
நிற்பாருக் காட்பட் டுயரிய
வித்தாரப் பூக்கட் டிலின்மிசை
நெட்டூரக் கூட்டத் தநவர ... தமுமாயும்
நெட்டாசைப் பாட்டைத் துரிசற
விட்டேறிப் போய்ப்பத் தியருடன்
நெக்கோதிப் போற்றிக் கழலிணை ... பணிவேனோ
வெற்பால்மத் தாக்கிக் கடல்கடை
மைச்சாவிக் காக்கைக் கடவுளை
விட்டார்முக் கோட்டைக் கொருகிரி... யிருகாலும்
விற்போலக் கோட்டிப் பிறகொரு
சற்றேபற் காட்டித் தழலெழு
வித்தார்தத் வார்த்தக் குருபர ... னெனவோதும்
பொற்பாபற் றாக்கைப் புதுமலர்
பெட்டேயப் பாற்பட் டுயரிய
பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெ ... யெனமாலாய்ப்
புட்கானத் தோச்சிக் கிரிமிசை
பச்சேனற் காத்துத் திரிதரு
பொற்பூவைப் பேச்சுக் குருகிய ... பெருமாளே.
பாடல் 1019 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தானத் தாத்தத் தனதன
தத்தானத் தாத்தத் தனதன
தத்தானத் தாத்தத் தனதன ... தனதான
சிற்றாயக் கூட்டத் தெரிவையர்
வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி
சற்றேறப் பார்த்துச் சிலபணி ... விடையேவிச்
சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடு
பித்தேறிக் கூப்பிட் டவர்பரி
செட்டாமற் றுர்த்தத் தலைபடு ... சிறுகாலை
உ ற்றார்பெற் றார்க்குப் பெரிதொரு
பற்றாயப் பூட்டுக் கயிறுகொ
டுச்சாயத் தாக்கைத் தொழிலொடு ... தடுமாறி
உ க்காரித் தேக்கற் றுயிர்நழு
விக்காயத் தீப்பட் டெரியுட
லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வது ... மொருநாளே
வற்றாமுற் றாப்பச் சிளமுலை
யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு
மைக்காமக் கோட்டக் குலமயில் ... தருபாலா
மத்தோசைப் போக்கிற் றயிருறி
நெய்பாலுக் காயச்சிக் கிருபதம்
வைத்தாடிக் காட்டிப் பருகரி... மருகோனே
கற்றாவிற் காட்டிக் கரைதுறை
நற்றாயிற் காட்டிப் புகழ்கலை
கற்றார் சொற் கேட்கத் தனிவழி ... வருவோனே
கைச்சூலக் கூற்றைக் கணைமத
னைத்தூள்பட் டார்ப்பக் கனல்பொழி
கர்த்தாவுக் கேற்கப் பொருளருள் ... பெருமாளே.
பாடல் 1020 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத் ... தனதான
இருட்குழலைக் குலைத்துமுடித்
தெழிற்கலையைத் திருத்தியுடுத்
திணைக்கயலைப் புரட்டிவிழித் ... ததிபார
இழைக்களபப் பொருப்பணிகச்
செடுத்துமறைத் தழைத்துவளைத்
திருத்தியகப் படுத்திநகைத் ... துறவாடி
பொருட்குமிகத் துதித்திளகிப்
புலப்படுசித் திரக்கரணப்
புணர்ச்சிவிளைத் துருக்குபரத் ... தையர்மோகப்
புழுத்தொளையிற் றிளைத்ததனைப்
பொறுத்தருளிச் சடக்கெனஅப்
புறத்திலழைத் திருத்தியளித் ... திடுவாயே
உ ருத்திரரைப் பழித்துலகுக்
குகக்கடையப் பெனக்ககனத்
துடுத்தகரப் படுத்துகிரித் ... தலமேழும்
உ டுத்தபொலப் பொருப்புவெடித்
தொலிப்பமருத் திளைப்பநெருப்
பொளிக்கஇருப் பிடத்தைவிடச் ... சுரரோடித்
திரைக்கடலுட் படச்சுழலச்
செகத்ரையமிப் படிக்கலையச்
சிரித்தெதிர்கொக் கரித்துமலைத் ... திடுபாவி
செருக்கழியத் தெழித்துதிரத்
திரைக்கடலிற் சுழித்தலையிற்
றிளைத்தஅயிற் கரக்குமரப் ... பெருமாளே.
பாடல் 1021 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத் ... தனதான
வினைத்திரளுக் கிருப்பெனவித்
தகப்படவிற் சலப்பிலமிட்
டிசைக்குமிடற் குடிற்கிடைபுக் ... கிடுமாய
விளைப்பகுதிப் பயப்பளவுற்
றமைத்ததெனக் கருத்தமைவிற்
சகப்பொருள்மெய்க் குறப்பருகக் ... கருதாதே
எனக்கெதிரொப் பிசைப்பவரெத்
தளத்துளரெச் சமர்த்தரெனப்
புறத்துரையிட் டிகழ்ச்சியினுற் ... றிளையாதுன்
எழிற்கமலத் திணைக்கழலைத்
தமிழ்ச்சுவையிட் டிறப்பறஎய்த்
திடக்கருணைத் திறத்தெனைவைத் ... தருள்வாயே
சினத்தைமிகுத் தனைத்துலகத்
திசைக்கருதிக் கடற்பரவித்
திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற் ... றிடுசூரன்
சிரத்துடன்மற் புயத்தகலத்
தினிற்குருதிக் கடற்பெருகச்
சிறப்புமிகத் திறத்தொடுகைத் ... திடும்வேலா
கனத்தமருப் பினக்கரிநற்
கலைத்திரள்கற் புடைக்கிளியுட்
கருத்துருகத் தினைக்குளிசைத் ... திசைபாடி
கனிக்குதலைச் சிறுக்குயிலைக்
கதித்தமறக் குலப்பதியிற்
களிப்பொடுகைப் பிடித்தமணப் ... பெருமாளே.
பாடல் 1022 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்த தனதனன தானத் தான
தத்த தனதனன தானத் தான
தத்த தனதனன தானத் தானத் ... தனதான
முத்து மணிபணிக ளாரத் தாலு
மொய்த்த மலைமுலைகொ டேவித் தார
முற்று மிளைஞருயிர் மோகித் தேகப் ... பொருமாதர்
முற்று மதிமுகமும் வானிற் காரு
மொத்த குழல்விழியும் வேய்நற் றோளு
முத்தி தகுமெனும்வி னாவிற் பாயற் ... கிநட்முழ்கிப்
புத்தி கரவடமு லாவிச் சால
மெத்த மிகஅறிவி லாரைத் தேறி
பொற்கை புகழ்பெரிய ராகப் பாடிப் ... புவியூடே
பொய்க்கு ளொழுகியய ராமற் போது
மொய்த்த கமலஇரு தாளைப் பூண
பொற்பு மியல்புதுமை யாகப் பாடப் ... புகல்வாயே
பத்து முடியுமத னோடத் தோளிர்
பத்து மிறையவொரு வாளிக் கேசெய்
பச்சை முகில்சதுர வேதத் தோடுற் ... றயனாரும்
பற்ற வரியநட மாடத் தாளில்
பத்தி மிகவினிய ஞானப் பாடல்
பற்று மரபுநிலை யாகப் பாடித் ... திரிவோனே
மெத்த அலைகடலும் வாய்விட் டோ ட
வெற்றி மயில்மிசைகொ டேகிச் சூரர்
மெய்க்கு ளுறஇலகு வேலைப் போகைக் ... கெறிவோனே
வெற்றி மிகுசிலையி னால்மிக் கோர்தம்
வித்து விளைபுனமும் வேய்முத் தீனும்
வெற்பு முறையுமயில் வேளைக் காரப் ... பெருமாளே.
பாடல் 1023 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்த தனதனன தானத் தான
தத்த தனதனன தானத் தான
தத்த தனதனன தானத் தானத் ... தனதான
விட்ட புழுகுபனி நீர்கத் தூரி
மொய்த்த பரிமளப டீரச் சேறு
மிக்க முலையைவிலை கூறிக் காசுக் ... களவேதான்
மெத்த விரியுமலர் சேர்கற் பூர
மெத்தை மிசைகலவி யாசைப் பாடு
விற்கு மகளிர்சுரு ளோலைக் கோலக் ... குழையோடே
முட்டி யிலகுகுமிழ் தாவிக் காமன்
விட்ட பகழிதனை யோடிச் சாடி
மொய்க்கு மளியதனை வேலைச் சேலைக் ... கயல்மீனை
முக்கி யமனையட மீறிச் சீறு
மைக்கண் விழிவலையி லேபட் டோ டி
முட்ட வினையன்மரு ளாகிப் போகக் ... கடவேனோ
செட்டி யெனுமொர்திரு நாமக் கார
வெற்றி யயில்தொடுப்ர தாபக் கார
திக்கை யுலகைவல மாகப் போகிக் ... கணமீளுஞ்
சித்ர குலகலப வாசிக் கார
தத்து மகரசல கோபக் கார
செச்சை புனையுமண வாளக் கோலத் ... திருமார்பா
துட்ட நிருதர்பதி சூறைக் கார
செப்பு மமரர்பதி காவற் கார
துப்பு முகபடக போலத் தானக் ... களிறுரும்
சொர்க்க கனதளவி நோதக் கார
முத்தி விதரணவு தாரக் கார
சுத்த மறவர்மகள் வேளைக் காரப் ... பெருமாளே.
பாடல் 1024 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ... தனதான
ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு
மேவதுப ழிக்கும் ... விழியாலே
ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி
லேமருவி மெத்த ... மருளாகி
நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்
நாரியர்கள் சுற்ற ... மிவைபேணா
ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும்
நாடிநர கத்தில் ... விழலாமோ
ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி
யாடுமொரு பச்சை ... மயில்வீரா
ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்
ஆருமுய நிற்கு ... முருகோனே
வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்
மேவியகு றத்தி ... மணவாளா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ... பெருமாளே.
பாடல் 1025 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - பீம்பளாஸ்
தாளம் - ஆதி
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ... தனதான
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
மானபிணி சுற்றி ... யுடலுடே
சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க
தீதுவிளை விக்க ... வருபோதில்
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
சாகரம தற்கு ... ளழியாமுன்
தாரணி தனக்கு ளாரண முரைத்த
தாள்தர நினைத்து ... வரவேணும்
மாதர்மய லுற்று வாடவடி வுற்று
மாமயிலில் நித்தம் ... வருவோனே
மாலுமய னொப்பி லாதபடி பற்றி
மாலுழலு மற்ற ... மறையோர்முன்
வேதமொழி வித்தை யோதியறி வித்த
நாதவிறல் மிக்க ... இகல்வேலா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ... பெருமாளே.
பாடல் 1026( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ... தனதான
தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற
தோர்தனம சைத்து ... இளைஞோர்தம்
தோள்வலி மனத்து வாள்வலி யுழக்கு
தோகையர் மயக்கி ... லுழலாதே
பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி
யோடுநினை பத்தர் ... பெருவாழ்வே
பாவவினை யற்று னாமநினை புத்தி
பாரிலருள் கைக்கு ... வரவேணும்
ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி
ஆண்மையுட னிற்கு ... முருகோனே
ஆதியர னுக்கு வேதமொழி முற்றி
யார்வம்விளை வித்த ... அறிவோனே
வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு
வேளையென நிற்கும் ... விறல்வீரா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ... பெருமாளே.
பாடல் 1027 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ... தனதான
தோதகமி குத்த பூதமருள் பக்க
சூலைவலி வெப்பு ... மதநீர்தோய்
சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று
சோகைபல குட்ட ... மவைதீரா
வாதமொடு பித்த மூலமுடன் மற்று
மாயபணி சற்று ... மணுகாதே
வாடுமெனை முத்தி நீடியப தத்தில்
வாழமிக வைத்து ... அருள்வாயே
காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த
கானககு றத்தி ... மணவாளா
காசினிய னைத்து மோடியள விட்ட
கால்நெடிய பச்சை ... மயில்வீரா
வேதமொழி மெத்த வோதிவரு பத்தர்
வேதனைத விர்க்கு ... முருகோனே
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ... பெருமாளே.
பாடல் 1028 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - சங்கராபரணம்
தாளம் - அங்கதாளம் (10 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தான தான தானான தானத் ... தனதான
காதி மோதி வாதாடு நூல்கற் ... றிடுவோருங்
காசு தேடி யீயாமல் வாழப் ... பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ... குருகாரும்
மாறி லாத மாகால னூர்புக் ... கலைவாரே
நாத ரூப மாநாத ராகத் ... துறைவோனே
நாக லோக மீரேழு பாருக் ... குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற் ... கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ... பெருமாளே.
பாடல் 1029 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தான தான தானான தானத் ... தனதான
கூறு மார வேளார வாரக் ... கடலாலே
கோப மீது மாறாத கானக் ... குயிலாலே
மாறு போலு மாதாவின் வார்மைப் ... பகையாலே
மாது போத மாலாகி வாடத் ... தகுமோதான்
ஏறு தோகை மீதேறி யாலித் ... திடும்வீரா
ஏழு லோகம் வாழ்வான சேவற் ... கொடியோனே
சீறு சூரர் நீறாக மோதிப் ... பொரும்வேலா
தேவ தேவ தேவாதி தேவப் ... பெருமாளே.
பாடல் 1030( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஹிந்தோளம்
தாளம் - அங்கதாளம் (10 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தான தான தானான தானத் ... தனதான
பேர வாவ றாவாய்மை பேசற் ... கறியாமே
பேதை மாத ராரோடு கூடிப் ... பிணிமேவா
ஆர வார மாறாத நூல்கற் ... றடிநாயேன்
ஆவி சாவி யாகாமல் நீசற் ... றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க் ... கெளிவாயா
தோகை யாகு மாரா கிராதக் ... கொடிகேள்வா
தீர தீர தீராதி தீரப் ... பெரியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ... பெருமாளே.
பாடல் 1031 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தான தான தனத்தம் தான தான தனத்தம்
தான தான தனத்தம் ... தனதான
காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங்
கான யாழின் மொழிக்கும் ... பொதுமாதர்
காணொ ணாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங்
காதில் நீடு குழைக்கும் ... புதிதாய
கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங்
கோவை வாயமு துக்குந் ... தணியாமல்
கூருவே னொரு வர்க்குந் தேடொ ணாததொ ரர்த்தங்
கூடு மாறொரு சற்றுங் ... கருதாயோ
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும்
போத தேசிக சக்ரந் ... தவறாதே
போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண்
போத ஆதர வைக்கும் ... புயவீரா
சோதி வேலை யெடுத்தன் றோத வேலையில் நிற்குஞ்
சூத தாருவும் வெற்பும் ... பொருகோவே
சூரர் சேனை யனைத்துந் தூளி யாக நடிக்குந்
தோகை வாசி நடத்தும் ... பெருமாளே.
பாடல் 1032 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தான தான தனத்தம் தான தான தனத்தம்
தான தான தனத்தம் ... தனதான
காரு லாவு குழற்குங் கூரிதான விழிக்குங்
காதல் பேணு நுதற்குங் ... கதிர்போலுங்
காவி சேர்பவ ளத்தின் கோவை வாயித ழுக்குங்
காசு பூணு முலைக்குங் ... கதிசேரா
நேரிதான இடைக்குஞ் சீத வார நகைக்கும்
நேரிலாத தொடைக்குஞ் ... சதிபாடும்
நீத மான அடிக்கும் மாலு றாத படிக்குன்
னேய மோடு துதிக்கும் ... படிபாராய்
பார மேரு வளைக்கும் பாணி யார்சடை யிற்செம்
பாதி சோம னெருக்கும் ... புனைவார்தம்
பால காஎன நித்தம் பாடு நாவலர் துக்கம்
பாவ நாச மறுத்தின் ... பதமீவாய்
சோரிவாரியிடச்சென் றேறி யோடி யழற்கண்
சூல காளி நடிக்கும் ... படிவேலாற்
சூரர் சேனை தனைக்கொன் றார வார மிகுத்தெண்
தோகை வாசி நடத்தும் ... பெருமாளே.
பாடல் 1033 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானத்த தானத்த தானத்த தானத்த
தானத்த தானத்த ... தனதான
தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற
தோய்மைக்க ணால்மிக்க ... நுதலாலே
தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள்
சோர்கைக்கு மால்விற்கு ... மடவார்தம்
ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க
ஓசைக்கு நேசித்து ... உ ழலாதே
ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி
யோதற்கு நீசற்று ... முணர்வாயே
வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின்
மீதுற்ற பேதைக்கொர் ... மணவாளா
வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க
வேதத்தி லேநிற்கு ... மயனாருந்
தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த
சேமத்தி னாமத்தை ... மொழிவோனே
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த ... பெருமாளே.
பாடல் 1034 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - சுருட்டி
தாளம் - சதுஸ்ர த்ருபுடை - கண்டநடை (20)
நடை- தகதகிட
தானத்த தானத்த தானத்த தானத்த
தானத்த தானத்த ... தனதான
தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற
தோளுக்கை காலுற்ற ... குடிலுடே
சொர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு
வேதித்த சூலத்த ... னணுகாமுன்
கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ
டேபட்டு வீழ்வித்த ... கொலைவேலா
கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி
கூர்கைக்கு நீகொற்ற ... அருள்தாராய்
ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த
ராவிக்கள் மாள்வித்து ... மடியாதே
ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு
மாம்வித்தை யாமத்தை ... யருள்வோனே
சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட
தோதக்கண் மானுக்கு ... மணவாளா
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த ... பெருமாளே.
பாடல் 1035 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஸிந்துபைரவி
தாளம் - ஆதி
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ... தனதான
ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
யூருங் கருவழி ... யொருகோடி
ஓதும் பலகலை கீதஞ் சகலமு
மோரும் படியுன ... தருள்பாடி
நானுன் திருவடி பேணும் படியிரு
போதுங் கருணையில் ... மறவாதுன்
நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
நாடும் படியருள் ... புரிவாயே
கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு
காலங் களுநடை ... யுடையோனுங்
காருங் கடல்வரை நீருந் தருகயி
லாயன் கழல்தொழு ... மிமையோரும்
வானிந் திரனெடு மாலும் பிரமனும்
வாழும் படிவிடும் ... வடிவேலா
மாயம் பலபுரிசூரன் பொடிபட
வாள்கொண் டமர்செய்த ... பெருமாளே.
பாடல் 1036 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ... தனதான
தீயும் பவனமு நீருந் தரணியும்
வானுஞ் செறிதரு ... பசுபாசத்
தேகந் தனைநிலை யேயொன் றிருவினை
தீருந் திறல்வினை ... யறியாதே
ஓயும் படியறு நூறும் பதினுறழ்
நூறும் பதினிரு ... பதுநூறும்
ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல
யோகம் புரிவது ... கிடையாதோ
வேயுங் கணியும்வி ளாவும் படுபுன
மேவுஞ் சிறுமிதன் ... மணவாளா
மீனம் படுகட லேழுந் தழல்பட
வேதங் கதறிய ... வொருநாலு
வாயுங் குலகிரிபாலுந் தளைபட
மாகந் தரமதில் ... மறைசூரன்
மார்புந் துணையுறு தோளுந் துணிபட
வாள்கொண் டமர்செய்த ... பெருமாளே.
பாடல் 1037( பொதுப்பாடல்கள் )
ராகம் - பெஹாக்
தாளம் - ஆதி
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ... தனதான
வாதந் தலைவலி சூலம் பெருவயி
றாகும் பிணியிவை ... யணுகாதே
மாயம் பொதிதரு காயந் தனின்மிசை
வாழுங் கருவழி ... மருவாதே
ஓதம் பெறுகடல் மோதுந் திரையது
போலும் பிறவியி ... லுழலாதே
ஓதும் பலஅடி யாருங் கதிபெற
யானுன் கழலிணை ... பெறுவேனோ
கீதம் புகழிசை நாதங் கனிவொடு
வேதங் கிளர்தர ... மொழிவார்தம்
கேடின் பெருவலி மாளும் படியவ
ரோடுங் கெழுமுத ... லுடையோனே
வேதந் தொழுதிரு மாலும் பிரமனு
மேவும் பதமுடை ... விறல்வீரா
மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட
வேல்கொண் டமர்செய்த ... பெருமாளே.
பாடல் 1038 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் ... தனதான
ஊனே தானா யோயா நோயா
லுசா டூசற் ... குடில்பேணா
ஓதா மோதா வாதா காதே
லோகா சாரத் ... துளம்வேறாய்
நானே நீயாய் நீயே நானாய்
நானா வேதப் ... பொருளாலும்
நாடா வீடா யீடே றாதே
நாயேன் மாயக் ... கடவேனோ
வானே காலே தீயே நீரே
பாரே பாருக் ... குரியோனே
மாயா மானே கோனே மானார்
வாழ்வே கோழிக் ... கொடியோனே
தேனே தேனீள் கானா றாய்வீழ்
தேசார் சாரற் ... கிரியோனே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ... பெருமாளே.
பாடல் 1039 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் ... தனதான
சாவா மூவா வேளே போல்வாய்
தாளா வேனுக் ... கருள்கூருந்
தாதா வேஞா தாவே கோவே
சார்பா னார்கட் ... குயிர்போல்வாய்
ஏவால் மாலே போல்வாய் காரே
போல்வா யீதற் ... கெனையாள்கொண்
டேயா பாடா வாழ்வோர் பாலே
யான்வீ ணேகத் ... திடலாமோ
பாவா நாவாய் வாணீ சார்வார்
பாரா வாரத் ... துரகேசப்
பாய்மீ தேசாய் வார்கா ணாதே
பாதா ளாழத் ... துறுபாதச்
சேவா மாவூர் கோமான் வாழ்வே
சீமா னேசெச் ... சையமார்பா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ... பெருமாளே.
பாடல் 1040( பொதுப்பாடல்கள் )
ராகம் - மலஹரி
தாளம் - ஆதி - 2 களை
தானா தானா தானா தானா
தானா தானத் ... தனதான
நாரா லேதோல் நீரா லேயாம்
நானா வாசற் ... குடிலுடே
ஞாதா வாயே வாழ்கா லேகாய்
நாய்பேய் சூழ்கைக் ... கிடமாமுன்
தாரா ரார்தோ ளீரா றானே
சார்வா னோர்நற் ... பெருவாழ்வே
தாழா தேநா யேனா வாலே
தாள்பா டாண்மைத் ... திறல்தாராய்
பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
பாவார்வேதத் ... தயனாரும்
பர்ழு டேவா னூடே பர்ரு
டேயூர் பாதத் ... தினைநாடாச்
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
சேவூர் வார்பொற் ... சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ... பெருமாளே.
பாடல் 1041 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் ... தனதான
மாதா வோடே மாமா னானோர்
மாதோ டேமைத் ... துனமாரும்
மாறா னார்போ னீள்தீ யூடே
மாயா மோகக் ... குடில்போடாப்
போதா நீரு டேபோய் மூழ்கா
வீழ்கா வேதைக் ... குயிர்போமுன்
போதா காரா பாராய் சீரார்
போதார் பாதத் ... தருள்தாராய்
வேதா வோடே மாலா னார்மேல்
வானோர் மேனிப் ... பயமீள
வேதா னோர்மே லாகா தேயோர்
வேலால் வேதித் ... திடும்வீரா
தீதார் தீயார் தீயு ட்முள்
சேரா சேதித் ... திடுவோர்தஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ... பெருமாளே.
பாடல் 1042 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் ... தனதான
வாராய் பேதாய் கேளாய் நீதாய்
மானார் மோகத் ... துடனாசை
மாசூ டாடா தூடே பாராய்
மாறா ஞானச் ... சுடர்தானின்
றாரா யாதே யாராய் பேறாம்
ஆனா வேதப் ... பொருள்காணென்
றாள்வாய் நீதா னாதா பார்மீ
தார்வே றாள்கைக் ... குரியார்தாம்
தோரா வானோர் சேனா தாரா
சூரா சாரற் ... புனமாது
தோள்தோய் தோளீ ராறா மாசூர்
தூளாய் வீழச் ... சிறுதாரைச்
சீரா வாலே வாளா லேவே
லாலே சேதித் ... திடும்வீரா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ... பெருமாளே.
பாடல் 1043 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ... தனதான
அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய
அரிய மோன மேகோயி ... லெனமேவி
அசைய வேக்ரியாபீட மிசைபு காம காஞான
அறிவி னாத ராமோத ... மலர்தூவிச்
சகல வேத னாதீத சகல வாச காதீத
சகல மாக்ரியாதீத ... சிவ்ருப
சகல சாத காதீத சகல வாச னாதீத
தனுவை நாடி மாபூசை ... புரிவேனே
விகட தார சூதான நிகள பாத போதூள
விரக ராக போதார ... சுரர்கால
விபுத மாலி காநீல முகப டாக மாயூர
விமல வ்யாப காசீல ... கவிநோத
ககன கூட பாடீர தவள சோபி தாளான
கவன பூத ரர்ருட ... சதகோடி
களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர
கருணை மேரு வேதேவர் ... பெருமாளே.
பாடல் 1044 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ... தனதான
அடைப டாது நாடோ றும் இடைவிடாது போம்வாயு
அடைய மீளில் வீடாகு ... மெனநாடி
அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல்
அவனி மீதி லோயாது ... தடுமாறும்
உ டலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக
உ தறி வாச காதீத ... அடியூடே
உ ருகி ஆரியாசார பரம யோகி யாமாறுன்
உ பய பாத ராசீக ... மருள்வாயே
வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது
மகர வாரியோரேழு ... மமுதாக
மகுட வாள ராநோவ மதிய நோவ வாணச
வனிதை மேவு தோளாயி ... ரமுநோவக்
கடையு மாதி கோபாலன் மருக சூலி காபாலி
புதல்வ கான வேல்வேடர் ... கொடிகோவே
கனக லோக பூபால சகல லோக ஆதார
கருணை மேரு வேதேவர் ... பெருமாளே.
பாடல் 1045 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - யமுனா கல்யாணி
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ... தனதான
அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
அமுத பான ம்முல ... அனல்மூள
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
அரிச தான சோபான ... மதனாலே
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
மெளிது சால மேலாக ... வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீத ... மருள்வாயே
விமலை தோடி மீதொடு யமுனை போல வோரேழு
விபுத மேக மேபோல ... வுலகேழும்
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
வெகுவி தாமு காகாய ... பதமோடிக்
கமல யோனி வீடான ககன கோள மீதோடு
கலப நீல மாயூர ... இளையோனே
கருணை மேக மேதூய கருணை வாரியேயீறில்
கருணை மேரு வேதேவர் ... பெருமாளே.
பாடல் 1046 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ... தனதான
அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரிதாயீச
ரமுத ளாவு மாவேச ... மதுபோல
அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி
னளவு மோடி நீடோ தி ... நிழலாறித்
துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத
துறவ ரான பேர்யாரு ... மடலேறத்
துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு
துவளு வேனை யீடேறு ... நெறிபாராய்
பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான
பவதி யாம ளாவாமை ... அபிராமி
பரிபு ரார பாதார சரணி சாம ளாகார
பரம யோகி னீமோகி ... மகமாயி
கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி
கனத னாச லாபார ... அமுதூறல்
கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர
கருணை மேரு வேதேவர் ... பெருமாளே.
பாடல் 1047 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ... தனதான
இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக
இனிய போக வாராழி ... யதில்மூழ்கி
இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு
மினிய மாதர் தோள்கூடி ... விளையாடுஞ்
சரச மோக மாவேத சரியை யோக்ரியாஞான
சமுக மோத ராபூத ... முதலான
சகள மோச டாதார முகுள மோநி ராதார
தரணி யோநி ராகார ... வடிவேயோ
பரத நீல மாயூர வரத நாக கேயூர
பரம யோகி மாதேசி ... மிகுஞான
பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத
பதும சேக ராவேலை ... மறவாத
கரத லாவி சாகாச கலக லாத ராபோத
கமுக மூஷி கர்ருட ... மததாரைக்
கடவுள் தாதை சூழ்போதில் உ லக மேழு சூழ்போது
கருணை மேரு வேதேவர் ... பெருமாளே.
பாடல் 1048 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ... தனதான
குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
குலைய ஏம னாலேவி ... விடுகாலன்
கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத
கொடுமை நோய்கொ டேகோலி ... யெதிராமுன்
பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி
பயமு றாமல் வேலேவு ... மிளையோனே
பழுது றா பாவாண ரெழுதொ ணாத தோள்வீர
பரிவி னோடு தாள்பாட ... அருள்தாராய்
மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி
மடுவி லானை தான்மூல ... மெனவோடி
வருமு ராரிகோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
வசன மோம றாகேசன் ... மருகோனே
கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி
கடிய பேயி னோடாடி ... கருதார்வெங்
கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத
கருணை மேரு வேதேவர் ... பெருமாளே.
பாடல் 1049 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ... தனதான
சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது
துரிய மீது சாராது ... எவராலுந்
தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத
சுகம கோத தீயாகி ... யொழியாது
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது
பவனம் வீசில் வீழாது ... சலியாது
பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது
பரம ஞான வீடேது ... புகல்வாயே
நிருதர் பூமி பாழாக மகர பூமி தநமுள
நிபிட தாரு காபூமி ... குடியேற
நிகர பார நீகார சிகர மீது வேலேவு
நிருப வேத ஆசாரி... யனுமாலும்
கருது மாக மாசாரிகனக கார்மு காசாரி
ககன சாரிபூசாரி... வெகுசாரி
கயிலை நாட காசாரிசகல சாரிவாழ்வான
கருணை மேரு வேதேவர் ... பெருமாளே.
பாடல் 1050( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ... தனதான
தொடஅ டாது நேராக வடிவு காண வாராது
சுருதி கூறு வாராலு ... மெதிர்கூறத்
துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக
துரிய மாகி வேறாகி ... யறிவாகி
நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு
மெனவு நேர்மை நூல்கூறி ... நிறைமாயம்
நிகரில் கால னாரேவ முகரியான தூதாளி
நினைவொ டேகு மோர்நீதி ... மொழியாதோ
அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி
யமர்செய் வீர ஈராறு ... புயவேளே
அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன்
அரியும் வாழ வானாளு ... மதிரேகா
கடுவி டாக ளர்ருப நடவி நோத தாடாளர்
கருதி டார்கள் தநமுள ... முதல்நாடுங்
கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத
கருணை மேரு வேதேவர் ... பெருமாளே.
பாடல் 1051 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ... தனதான
நிலவில் மார னேறுதை யசைய வீசு மாராம
நிழலில் மாட மாமாளி ... கையின்மேலாம்
நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு
நியதி யாக வாயார ... வயிறார
இலவி லுறு தேனூறல் பருகி யார வாமீறி
யிளகி யேறு பாடீர ... தனபாரம்
எனது மார்பி ல்முழ்க இறுக மேவி மால்கூரு
கினுமு னீப சீர்பாத ... மறவேனே
குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர்
குழைய மாலி காநாக ... மொடுதாவிக்
குடில கோம ளாகார சடில மோலி மீதேறு
குமர வேட மாதோடு ... பிரியாது
கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர்
கடக வாரிதூளாக ... அமராடுங்
கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர
கருணை மேரு வேதேவர் ... பெருமாளே.
பாடல் 1052 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - திலங்
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ... தனதான
மனக பாட பாடீர தனத ராத ரர்ருப
மதன ராச ராசீப ... சரகோப
வருண பாத காலோக தருண சோபி தாகார
மகளி ரோடு சீராடி ... யிதமாடிக்
குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான
குறைய னேனை நாயேனை ... வினையேனைக்
கொடிய னேனை யொதாத குதலை யேனை நாடாத
குருட னேனை நீயாள்வ ... தொருநாளே
அநக வாம னாகார முநி ராக மால்தேட
அரிய தாதை தானேவ ... மதுரேசன்
அரிய சார தாபீட மதனி லேறி யீடேற
அகில நாலு மாராயு ... மிளையோனே
கனக பாவ னாகார பவள கோம ளாகார
கலப சாம ளாகார ... மயிலேறுங்
கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார
கருணை மேரு வேதேவர் ... பெருமாளே.
பாடல் 1053 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - பிருந்தாவன சாரங்கா
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ... தனதான
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட ... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள ... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட ... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி ... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை ... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கேர்டுதி ... அலைமோதும்
உ ததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உ வண மூர்தி மாமாயன் ... மருகோனே
உ தய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் ... பெருமாளே.
பாடல் 1054 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ... தனதான
குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு
குடிசை கோழை மாசூறு ... குழிநீர்மேற்
குமிழி போல நேராகி அழியு மாயை யாதார
குறடு பாறு நாய்கூளி ... பலகாகம்
பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில்
படியின் மூழ்கி யேபோது ... தளிர்வீசிப்
பரவு நாட காசார கிரியை யாளர் காணாத
பரம ஞான வீடேது ... புகல்வாயே
எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான
இமய மாது மாசூலி ... தருபாலா
எழுமை யீறு காணாதர் முநிவ ரோடு வானாடர்
இசைக ளோடு பாராட ... மகிழ்வோனே
அரவி னோடு மாமேரு மகர வாரிபூலோக
மதிர நாக மோரேழு ... பொடியாக
அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட
அசுரர் மாள வேலேவு ... பெருமாளே.
பாடல் 1055 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
தனன தனன தாத்தன ... தனதான
சரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசி
தணிகை பொருடி ராப்பகல் ... தடுமாறுஞ்
சகல சமய தார்க்கிகர் கலக மொழிய நாக்கொடு
சரண கமல மேத்திய ... வழிபாடுற்
றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொ
ரறிவின் வடிவ மாய்ப்புள ... கிதமாகி
அவச கவச மூச்சற அமரு மமலர் மேற்சில
ரதிப திவிடு பூக்கணை ... படுமோதான்
விரியு முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழ
மிடையு மலகில் தேர்ப்படை ... யொடுசூழும்
விகட மகுட பார்த்திப ரனைவ ருடனு நூற்றுவர்
விசைய னொருவ னாற்பட ... வொருதூது
திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதி
சிறுவ தறுகண் வேட்டுவர் ... கொடிகோவே
திமிர யுததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடு
சிகரிதகர வீக்கிய ... பெருமாளே.
பாடல் 1056 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
தனன தனன தாத்தன ... தனதான
மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில்
மறுகி புறமு மார்த்திட ... வுடலுடே
மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவ
ருடனு மியமன் மாட்டிட ... அணுகாமுன்
உ கமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு
முளது மிலது மாச்சென ... வுறைவோரும்
உ ருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு
உ னது கழல்கள் போற்றிட ... அருள்தாராய்
புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக
ழுடைய திருத ராட்டிர ... புதல்வோர்தம்
புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர்
புவியின் விதன மாற்றினர் ... மருகோனே
மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு
வெனவு மருவி வேற்கொடு ... பொருசூரன்
விரைசெய் நெடிய தோட்கன அடலுமுருவ வேற்படை
விசைய முறவும் வீக்கிய ... பெருமாளே.
பாடல் 1057 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன
தனன தாத்தன ... தந்ததான
குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு
குறைவி லாப்பல ... என்பினாலுங்
கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய
குடிலி லேற்றுயி ... ரென்றுகூறும்
வடிவி லாப்புல மதனை நாட்டிடு
மறலி யாட்பொர ... வந்திடாமுன்
மதியு மூத்துன தடிக ளேத்திட
மறுவிலாப் பொருள் ... தந்திடாதோ
கடிய காட்டக முறையும் வேட்டுவர்
கருதொ ணாக்கணி ... வெங்கையாகிக்
கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர்
களவி னாற்புணர் ... கந்தவேளே
முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ
முடிய வேற்கொடு ... வென்றவீரா
முடிய லாத்திரு வடிவை நோக்கிய
முதிய மூர்த்திகள் ... தம்பிரானே.
பாடல் 1058 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஹம்ஸத்வனி
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிடதகதிமி-3 1/2
தனன தாத்தன தனன தாத்தன
தனன தாத்தன ... தந்ததான
பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்
இரவு போய்ப்புகல் ... கின்றவேதப்
பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு
வெளிய தாய்ப்புதை ... வின்றியீறில்
கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு
கமுத மாய்ப்புல ... னைந்துமாயக்
கரண மாய்த்தெனை மரண மாற்றிய
கருணை வார்த்தையி ... ருந்தவாறென்
உ ததி கூப்பிட நிருத ரார்ப்பெழ
உ லகு போற்றிட ... வெங்கலாப
ஒருப ராக்ரம துரக மோட்டிய
வுரவ கோக்கிரி... நண்பவானோர்
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை
முலைகள் தேக்கிட ... வுண்டவாழ்வே
முளரிபாற்கடல் சயில மேற்பயில்
முதிய மூர்த்திகள் ... தம்பிரானே.
பாடல் 1059 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - பாகேஸ்ரீ
தாளம் - மிஸ்ரஅட (18) (/7/7 00)
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
(முதல் லகு)
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ... தனதான
கவடு கோத்தெழு முவரிமாத்திறல்
காய்வேல் பாடே னாடேன் வீடா ... னதுகூட
கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன
கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ ... தினும்வீழேன்
தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர்
தாழா தீயேன் வாழா தேசா ... வதுசாலத்
தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச
தாவா மாறே நீதா னாதா ... புரிவாயே
சுவடு பார்த்தட வருக ராத்தலை
தூளா மாறே தானா நாரா ... யணனேநற்
றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது
ழாய்மார் பாகோ பாலா காவா ... யெனவேகைக்
குவடு கூப்பிட வுவண மேற்கன
கேர்டு தாவா னேபோ தாள்வான் ... மருகோனே
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ... பெருமாளே.
பாடல் 1060 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஸஹானா
தாளம் - மிஸ்ரஅட (18) (17 17 00)
(முதல் லகு)
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ... தனதான
பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்
பாராய் வானாய் நீர்தீ காலா ... யுடுசாலம்
பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி
னாலா றேழா மேனா ளாயே ... ழுலகாகிச்
சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட
ராய்வே தாவாய் மாலாய் மேலே ... சிவமான
தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்
சூடா நாடா ஈடே றாதே ... சுழல்வேனோ
திருத ராட்டிர னுதவு நூற்றுவர்
சேணா டாள்வா னாளோர் மூவா ... றினில்வீழத்
திலக பார்த்தனு முலகு காத்தருள்
சீரா மாறே த்ருர் கோமான் ... மருகோனே
குருதி வேற்கர நிருத ராஷத
கோபா நீபா குதா ளாமா ... மயில்வீரா
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ... பெருமாளே.
பாடல் 1061 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ... தனதான
முதலி யாக்கையு மிளமை நீத்தற
மூவா தாரா காவா தாரா ... எனஞாலம்
முறையி டாப்படு பறைக ளார்த்தெழ
மூடா வீடு டேகேள் கோகோ ... எனநோவ
மதலை கூப்பிட மனைவி கூப்பிட
மாதா மோதா வீழா வாழ்வே ... யெனமாய
மறலி யூர்ப்புகு மரண யாத்திரை
வாரா வானாள் போநாம் நீமீ ... ளெனவேணும்
புதல றாப்புன எயினர் கூக்குரல்
போகா நாடார் பாரா வாரா ... ரசுரோடப்
பொருது தாக்கிய வயப ராக்ரம
பூபா லாநீ பாபா லாதா ... தையுமோதுங்
குதலை வாய்க்குரு பரச டாக்ஷர
கோடா ரூபா ரூபா பாண ... சதவேள்விக்
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ... பெருமாளே.
பாடல் 1062 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ... தனதான
வருக வீட்டெனும் விரகர் நேத்திரம்
வாளோ வேலோ சேலோ மானோ ... எனுமாதர்
மனது போற்கரு கினகு வாற்குழல்
வானோ கானோ மாயா மாயோன் ... வடிவேயோ
பருகு பாற்கடல் முருகு தேக்கிய
பாலோ தேனோ பாகோ வானோ ... ரமுதேயோ
பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி
பாடா நாயே னீடே றாதே ... யொழிவேனோ
அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ
ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ... வெனஏகி
அவுணர் கூப்பிட வுததி தீப்பட
ஆகா சூரா போகா தேமீ ... ளெனவோடிக்
குருகு பேர்க்கிரியுருவ வோச்சிய
கூர்வே லாலே யோர்வா ளாலே ... அமராடிக்
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ... பெருமாளே.
பாடல் 1063 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ... தனதான
மறலி போற்சில நயன வேற்கொடு
மாயா தோயா வேயார் தோளார் ... மறையோதும்
வகையு மார்க்கமு மறமு மாய்த்திட
வாறா ராயா தேபோ மாறா ... திடதீர
விறலு மேற்பொலி அறிவு மாக்கமும்
வேறாய் நீரே றாதோர் மேடாய் ... வினையூடே
விழுவி னாற்களை யெழும தாற்பெரு
வீரா பாராய் வீணே மேவா ... தெனையாளாய்
மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரம
மால்கா ணாதே மாதோ டேவாழ் ... பவர்சேயே
மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும்
வாயார் நாவால் மாறா தேயோ ... தினர்வாழ்வே
குறவர் காற்புன அரிவை தோட்கன
கோடார் மார்பா கூர்வே லாலே ... அசுரேசர்
குலைய மாக்கட லதனி லோட்டிய
கோவே தேவே வேளே வானோர் ... பெருமாளே.
பாடல் 1064 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தனன தனன தனன
தனன தனன ... தனதான
குருதி யொழுகி யழுகு மவல
குடிலை யினிது ... புகலாலே
குலவு மினிய கலவி மகளிர்
கொடிய கடிய ... விழியாலே
கருது மெனது விரக முழுது
கலக மறலி ... அழியாமுன்
கனக மயிலி னழகு பொழிய
கருணை மருவி ... வரவேணும்
பரிதி சுழல மருவு கிரியை
பகிர எறிசெய் ... பணிவேலா
பணில வுததி யதனி லசுரர்
பதியை முடுக ... வரும்வீரா
இரதி பதியை யெரிசெய் தருளு
மிறைவர் குமர ... முருகோனே
இலகு கமல முகமு மழகு
மெழுத வரிய ... பெருமாளே.
பாடல் 1065 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தனன தனன தனன
தனன தனன ... தனதான
துயர மறுநின் வறுமை தொலையு
மொழியு மமிர்த ... சுரபானம்
சுரபி குளிகை யெளிது பெறுக
துவளு மெமது ... பசிதீரத்
தயிரு மமுது மமையு மிடுக
சவடி கடக ... நெளிகாறை
தருக தகடொ டுருக எனுமி
விரகு தவிர்வ ... தொருநாளே
உ யரு நிகரில் சிகரிமிடறு
முடலு மவுணர் ... நெடுமார்பும்
உ ருவ மகர முகர திமிர
வுததி யுதர ... மதுபீற
அயரு மமரர் சரண நிகள
முறிய எறியு ... மயில்வீரா
அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய ... பெருமாளே.
பாடல் 1066 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தனன தனன தனன
தனன தனன ... தனதான
பணிகள் பணமு மணிகொள் துகில்கள்
பழைய அடிமை ... யொடுமாதும்
பகரிலொருவர் வருக அரிய
பயண மதனி ... லுயிர்போகக்
குணமு மனமு முடைய கிளைஞர்
குறுகி விறகி ... லுடல்போடாக்
கொடுமை யிடுமு னடிமை யடிகள்
குளிர மொழிவ ... தருள்வாயே
இணையி லருணை பழநி கிழவ
இளைய இறைவ ... முருகோனே
எயினர் வயினின் முயலு மயிலை
யிருகை தொழுது ... புணர்மார்பா
அணியொ டமரர் பணிய அசுரர்
அடைய மடிய ... விடும்வேலா
அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய ... பெருமாளே.
பாடல் 1067 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தந்த தனன தந்த தனன
தந்த தனன ... தனதான
மைந்த ரினிய தந்தை மனைவி
மண்டி யலறி ... மதிமாய
வஞ்ச விழிகள் விஞ்சு மறலி
வன்கை யதனி ... லுறுபாசந்
தந்து வளைய புந்தி யறிவு
தங்கை குலைய ... உ யிர்போமுன்
தம்ப முனது செம்பொ னடிகள்
தந்து கருணை ... புரிவாயே
மந்தி குதிகொ ளந்தண் வரையில்
மங்கை மருவு ... மணவாளா
மண்டு மசுரர் தண்ட முடைய
அண்டர் பரவ ... மலைவோனே
இந்து நுதலு மந்த முகமு
மென்று மினிய ... மடவார்தம்
இன்பம் விளைய அன்பி னணையு
மென்று மிளைய ... பெருமாளே.
பாடல் 1068 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - மணிரங்கு
தாளம் - ஆதி
தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த ... தனதான
ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி
உ யர்கால் கரத்தி ... னுருவாகி
ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து
உ ழல்மாய மிக்கு ... வருகாயம்
பழசா யிரைப்பொ டிளையா விருத்த
பரிதாப முற்று ... மடியாமுன்
பரிவா லுளத்தில் முருகா எனச்சொல்
பகர்வாழ் வெனக்கு ... மருள்வாயே
எழுவா னகத்தி லிருநாலு திக்கில்
இமையோர் தமக்கு ... மரசாகி
எதிரேறு மத்த மதவார ணத்தில்
இனிதேறு கொற்ற ... முடன்வாழுஞ்
செழுமா மணிப்பொ னகர்பாழ் படுத்து
செழுதீ விளைத்து ... மதிள்கோலித்
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
சிறைமீள விட்ட ... பெருமாளே.
பாடல் 1069 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த ... தனதான
கருவாய் வயிற்றி லுருவா யுதித்து
முருகாய் மனக்க ... வலையோஆட
கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த
தலைபோய் வெளுத்து ... மரியாதே
இருபோது மற்றை யொருபோது மிட்ட
கனல்மூழ்கி மிக்க ... புனல்மூழ்கி
இறவாத சுத்த மறையோர் துதிக்கு
மியல்போத கத்தை ... மொழிவாயே
அருமாத பத்தஅமரா பதிக்கு
வழமுடி விட்ட ... தனைமீள
அயிரா வதத்து விழியா யிரத்த
னுடனே பிடித்து ... முடியாதே
திருவான கற்ப தருநா டழித்து
விபுதேசர் சுற்ற ... மவைகோலித்
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
சிறைமீள விட்ட ... பெருமாளே.
பாடல் 1070 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
தனத்த தந்தனம் ... தனதான
புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்
புனத்தி லன்றுசென் ... றுறவாடிப்
புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண்
புதுக்கு ரும்பைமென் ... புயமீதே
செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்
திளைக்கு நின்திறம் ... புகலாதிந்
த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந்
தியக்க மென்றொழிந் ... திடுவேனோ
குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங்
குவட்டி லங்கையுந் ... துகளாகக்
கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங்
கொதித்து மண்டுவெம் ... பகையோடத்
துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந்
துரத்த னும்பிறந் ... திறவாத
சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்
துதிக்கு மும்பர்தம் ... பெருமாளே.
பாடல் 1071 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
தனத்த தந்தனம் ... தனதான
பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன்
ப்ரபுத்த னங்கள்பண் ... பெணுநாணும்
பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன்
றமைத்த பெண்தனந் ... தனையாரத்
திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின்
திறத்தை யன்புடன் ... தெளியாதே
சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென்
திருக்கு மென்றொழிந் ... திடுவேனோ
தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன்
தரித்த குன்றநின் ... றடியோடுந்
தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந்
தறித்த கண்டனெண் ... டிசையோருஞ்
சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன்
துணைச்செய் கின்றநின் ... பதமேவும்
சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்
துதிக்கு மும்பர்தம் ... பெருமாளே.
பாடல் 1072 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - வஸந்தா
தாளம் - சதுஸ்ர அட (12)
தனந்த தானந் தந்தன தனதன ... தனதான
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு ... முறுகேளும்
இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் ... வளமேவும்
விரிந்த நாடுங் குன்றமு நிலையென ... மகிழாதே
விளங்கு தீபங் கொண்டுனை வழிபட ... அருள்வாயே
குருந்தி லேருங் கொண்டலின் வடிவினன் ... மருகோனே
குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் ... மணவாளா
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு ... புலவோனெ
சிவந்த காலுந் தண்டையு மழகிய ... பெருமாளே.
பாடல் 1073 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனந்த தானந் தந்தன தனதன ... தனதான
கலந்த மாதுங் கண்களி யுறவரு ... புதல்வோருங்
கலங்கி டாரென் றின்பமு றுலகிடை ... கலிமேவி
உ லந்த காயங் கொண்டுள முறுதுய ... ருடன்மேவா
உ கந்த பாதந் தந்துனை யுரைசெய ... அருள்வாயே
மலர்ந்த பூவின் மங்கையை மருவரி... மருகோனே
மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ... மணவாளா
சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ... ஒலிவீசச்
சிவந்த காலுந் தண்டையு மழகிய ... பெருமாளே.
பாடல் 1074 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ணதிகெளளை
தாளம் - சதுஸ்ர அட (12)
தனந்த தானந் தனதன தானன ... தனதான
இசைந்த ஏறுங் கரியுரிபோர்வையும் ... எழில்நீறும்
இலங்கு நூலும் புலியத ளாடையு ... மழுமானும்
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ... முடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ... குருநாதா
உ சந்த சூரன் கிளையுடன் வேரற ... முனிவோனே
உ கந்த பாசங் கயிறொடு தூதுவர் ... நலியாதே
அசந்த போதென் துயர்கெட மாமயில் ... வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய ... பெருமாளே.
பாடல் 1075 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - தர்பாரிகானடா
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனன தனதன தனன
தனதன தனன ... தனதான
திரிபுர மதனை யொருநொடி யதனி
லெரிசெய்த ருளிய ... சிவன்வாழ்வே
சினமுடை யசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி ... விடுவோனே
பருவரை யதனை யுருவிட எறியு
மறுமுக முடைய ... வடிவேலா
பசலையொ டணையு மிளமுலை மகளை
மதன்விடு பகழி ... தொடலாமோ
கரிதிரு முகமு மிடமுடை வயிறு
முடையவர் பிறகு ... வருவொனே
கனதன முடைய குறவர்த மகளை
கருணையொ டணையு ... மணிமார்பா
அரவணை துயிலு மரிதிரு மருக
அவனியு முழுது ... முடையோனே
அடியவர் வினையு மமரர்கள் துயரு
மறஅரு ளுதவு ... பெருமாளே.
பாடல் 1076 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தனன தனதன தனன
தனதன தனன ... தனதான
புழுககில் களப மொளிவிடு தரள
மணிபல செறிய ... வடமேருப்
பொருமிரு கலச முலையினை யரிவை
புனையிடு பொதுவின் ... மடமாதர்
அழகிய குவளை விழியினு மமுத
மொழியினு மவச ... வநுராக
அமளியின் மிசையி லவர்வச முருகி
அழியுநி னடிமை ... தனையாள்வாய்
குழலிசை யதுகொ டறவெருள் சுரபி
குறுநிரை தருளி ... யலைமோதுங்
குரைசெறி யுததி வரைதனில் விறுசு
குமுகுமு குமென ... வுலகோடு
முழுமதி சுழல வரைநெறு நெறென
முடுகிய முகிலின் ... மருகோனே
மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு
முளரியின் முதல்வர் ... பெருமாளே.
பாடல் 1077 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தனன தனதன தனன
தனதன தனன ... தந்ததான
முழுமதி யனைய முகமிரு குழையில்
முனிவழி முனைகள் ... கொண் முவா
முதலறி வதனை வளைபவர் கலவி
முழுகிய வினையை ... மொண்டுநாயேன்
வழிவழி யடிமை யெனுமறி வகல
மனமுறு துயர்கள் ... வெந்துவாட
மதிதரு மதிக கதிபெறு மடிகள்
மகிழ்வொடு புகழு ... மன்புதாராய்
எழுதிட அரிய எழில்மற மகளின்
இருதன கிரிகள் ... தங்குமார்பா
எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி
இமையவர் சிறையை ... யன்றுமீள்வாய்
அழகிய குமர எழுதல மகிழ
அறுவர்கள் முலையை ... யுண்டவாழ்வே
அமருல கிறைவ உ மைதரு புதல்வ
அரியர பிரமர் ... தம்பிரானே.
பாடல் 1078 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தனதன தத்தத் தத்தத்
தாந்தாந் ... தனதான
கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்
கூன்போந் ... தசடாகுங்
குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்
கோண்பூண் ... டமையாதே
பொடிவன பரசம யத்துத் தப்பிப்
போந்தேன் ... தலைமேலே
பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்
பூண்டாண் ... டருள்வாயே
துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்
சூழ்ந்தாங் ... குடனாடத்
தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்
தோந்தாந் ... தரிதாளம்
படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்
பாழ்ங்கான் ... தனிலாடும்
பழயவர் குமரகு றத்தத் தைக்குப்
பாங்காம் ... பெருமாளே.
பாடல் 1079 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தனதன தத்தத் தத்தத்
தாந்தாந் ... தனதான
சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச்
சூழ்ந்தோங் ... கிடுபாரிற்
றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச்
சோர்ந்தோய்ந் ... திடநாறுங்
கடுகென எடுமெனு டற்பற் றற்றுக்
கான்போந் ... துறவோருங்
கனலிடை விதியிடு தத்துக் கத்தைக்
காய்ந்தாண் ... டருளாயோ
தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத்
தாந்தோய்ந் ... திருபாலும்
தமருக வொலிசவு தத்திற் றத்தத்
தாழ்ந்தூர்ந் ... திடநாகம்
படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப்
பாய்ந்தாய்ந் ... துயர்கானம்
பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப்
பாங்காம் ... பெருமாளே.
பாடல் 1080 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தத்த தந்த தனதன தத்த தந்த
தனதன தத்த தந்த ... தனதான
குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல்
குறமகள் வைத்த நண்பை ... நினைவோனே
வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த
மதசல முற்ற தந்தி ... யிளையோனே
இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து
இசையறி வித்து வந்து ... எனையாள்வாய்
தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்து
சமர்கள வெற்றி கொண்ட ... பெருமாளே.
பாடல் 1081 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தத்த தந்த தனதன தத்த தந்த
தனதன தத்த தந்த ... தனதான
மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து
மறுமைத னிற்சு ழன்று ... வடிவான
சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்து
தளர்வுறு தற்கு முந்தி ... யெனையாள்வாய்
படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற
பசுமுகி லுக்கு கந்த ... மருகோனே
குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த
குமரகு றத்தி நம்பு ... பெருமாளே.
பாடல் 1082 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் ... தனதான
கருமய லேறிப் பெருகிய காமக்
கடலினில் மூழ்கித் ... துயராலே
கயல்விழி யாரைப் பொருளென நாடிக்
கழியும நாளிற் ... கடைநாளே
எருமையி லேறித் தருமனும் வாவுற்
றிறுகிய பாசக் ... கயிறாலே
எனைவளை யாமற் றுணைநினை வேனுக்
கியலிசை பாடத் ... தரவேணும்
திருமயில் சேர்பொற் புயனென வாழத்
தெரியல னோடப் ... பொரும்வீரா
செகதல மீதிற் பகர்தமிழ் பாடற்
செழுமறை சேர்பொற் ... புயநாதா
பொருமயி லேறிக் கிரிபொடி யாகப்
புவியது சூழத் ... திரிவோனே
புனமக ளாரைக் கனதன மார்பிற்
புணரும்வி நோதப் ... பெருமாளே.
பாடல் 1083 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் ... தனதான
குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்
குலவிய தோலத் ... தியினூடே
குருதியி லேசுக் கிலமது கூடிக்
குவலயம் வானப் ... பொருகாலாய்
உ டலெழு மாயப் பிறவியி லாவித்
துறுபிணி நோயுற் ... றுழலாதே
உ ரையடி யேனுக் கொளிமிகு நீபத்
துனதிரு தாளைத் ... தரவேணும்
கடலிடை சூரப் படைபொடி யாகக்
கருதல ரோடப் ... பொரும்வேலா
கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்
கலைபல தேர்முத் ... தமிழ்நாடா
சடையினர் நாடப் படர்மலை யோடித்
தனிவிளை யாடித் ... திரிவோனே
தனமட மானைப் பரிவுட னாரத்
தழும்வி நோதப் ... பெருமாளே.
பாடல் 1084 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த ... தனதான
கருதியே மெத்த விடமெலாம் வைத்த
கலகவா ளொத்த ... விழிமானார்
கடினபோ கத்த புளகவா ருற்ற
களபமார் செப்பு ... முலைமீதே
உ ருகியான் மெத்த அவசமே வுற்ற
வுரைகளே செப்பி ... யழியாதுன்
உ பயபா தத்தி னருளையே செப்பு
முதயஞா னத்தை ... அருள்வாயே
பருவரா லுற்று மடுவின்மீ துற்ற
பகடுவாய் விட்ட ... மொழியாலே
பரிவினோ டுற்ற திகிரியே விட்ட
பழயமா யற்கு ... மருகோனே
முருகுலா வுற்ற குழலிவே டிச்சி
முலையின்மே வுற்ற ... க்ருபைவேளே
முருகனே பத்த ரருகனே வெற்பு
முரியவேல் தொட்ட ... பெருமாளே.
பாடல் 1085 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த ... தனதான
கொலையிலே மெத்த விரகிலே கற்ற
குவளையேர் மைக்கண் ... விழிமானார்
குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்த
குழலிலே பற்கள் ... தனிலேமா
முலையிலே யற்ப இடையிலே பத்ம
முகநிலா வட்ட ... மதின்மீதே
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை
மொழியிலே சித்தம் ... விடலாமோ
கலையனே உ க்ர முருகனே துட்டர்
கலகனே மெத்த ... இளையோனே
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு
கடவுளே பச்சை ... மயிலோனே
உ லகனே முத்தி முதல்வனே சித்தி
உ டையனே விஷ்ணு ... மருகோனே
ஒருவனே செச்சை மருவுநேர் சித்ர
வுருவனே மிக்க ... பெருமாளே.
பாடல் 1086 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனனந் தான தனதனனந் தான
தனதனனந் தான ... தனதான
அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு
மசலமிரண் டாலு ... மிடைபோமென்
றடியில்விழுந் தாடு பரிபுரசெஞ் சீர
தபயமிடுங் கீத ... மமையாதே
நகமிசைசென் றாடி வனசரர்சந் தான
நவையறநின் றேனல் ... விளைவாள்தன்
லளிதவிர்சிங் கார தனமுறுசிந் தூர
நமசரணென் றோத ... அருள்வாயே
பகலிரவுண் டான இருவரும்வண் டாடு
பரிமளபங் கேரு ... கனுமாலும்
படிகநெடும் பா கடதடகெம் பீர
பணைமுகசெம் பால ... மணிமாலை
முகபடசிந் தூர கரியில்வருந் தேவு
முடியஅரன் தேவி ... யுடனாட
முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழி
முடிவினுமஞ் சாத ... பெருமாளே.
பாடல் 1087 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனனந் தானம் தனதனனந் தானம்
தனதனனந் தானம் ... தனதான
கலகமதன் காதுங் கனமலரம் பாலுங்
களிமதுவண் டூதும் ... பயிலாலும்
கடலலையங் காலுங் கனஇரையொன் றாலும்
கலைமதியங் காயும் ... வெயிலாலும்
இலகியசங் காளும் இனியவளன் பீனும்
எனதருமின் தானின் ... றிளையாதே
இருள்கெடமுன் தானின் றினமணிசெந் தார்தங்
கிருதனமுந் தோள்கொண் ... டணைவாயே
உ லகைவளைந் தோடுந் கதிரவன்விண் பால்நின்
றுனதபயங் காவென் ... றுனைநாட
உ ரவியவெஞ் சூரன் சிரமுடன்வன் தோளும்
உ ருவியுடன் போதும் ... ஒளிவேலா
அலகையுடன் பூதம் பலகவிதம் பாடும்
அடைவுடனின் றாடும் ... பெரியோர்முன்
அறமுமறந் தோயும் அறிவுநிரம் போதென்
றழகுடனன் றோதும் ... பெருமாளே.
பாடல் 1088 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனனந் தானந் தனதனனந் தானந்
தனதனனந் தானந் ... தனதான
குருதிசலந் தோலுங் குடலுடனென் பாலுங்
குலவியெழுங் கோலந் ... தனில்மாயக்
கொடுமையுடன் கோபங் கடுவிரகஞ் சேருங்
குணவுயிர்கொண் டேகும் ... படிகாலன்
கருதிநெடும் பாசங் கொடுவரநின் றாயுங்
கதறமறந் தேனென் ... றகலாமுன்
கமலமலர்ந் தேறுங் குகனெனவும் போதுன்
கருணைமகிழ்ந் தோதுங் ... கலைதாராய்
நிருதர்தளஞ் சூழும் பெரியநெடுஞ் சூரன்
நினைவுமழிந் தோடும் ... படிவேலால்
நிகரிலதம் பாரொன் றிமையவர்நெஞ் சால்நின்
நிலைதொழநின் றேமுன் ... பொருவீரா
பருதியுடன் சோமன் படியையிடந் தானும்
பரவவிடந் தானுண் ... டெழுபாரும்
பயமறநின் றாடும் பரமருளங் கூரும்
பழமறையன் றோதும் ... பெருமாளே.
பாடல் 1089 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனன தாத்த தனதனன தாத்த
தனதனன தாத்த ... தனதான
இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை
யெடுமெடென வீட்டி ... லனைவோரும்
இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில்
எரியஎரிமூட்டி ... யிடுமாறு
கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர்
கயிறிறுக மாட்டி ... யழையாமுன்
கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு
கழலிணைகள் காட்டி ... யருள்வாயே
பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு
பழையகுற வாட்டி ... மணவாளா
பகைஞர்படை வீட்டில் முதியகன லுட்டு
பகருநுதல் நாட்ட ... குமரேசா
அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை
அடைவடைவு கேட்ட ... முருகோனே
அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டி
அமரர்சிறை மீட்ட ... பெருமாளே.
பாடல் 1090 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனன தாத்த தனதனன தாத்த
தனதனன தாத்த ... தனதான
உ றவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து
உ ளமுருகு தீர்த்தி ... வுடலுடே
உ டலை முடிவாக்கு நெடியதொரு காட்டில்
உ யர்கனலை மூட்டி ... விடஆவி
மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி
வலிவினொடு தாக்கி ... வளையாமுன்
மனமுமுனி வேட்கை மிகவு முன தாட்கள்
மகிழ்வியல்கொ டேத்த ... மதிதாராய்
பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு
வரையில்மற வோக்கு ... மகவாகப்
பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த
பிடியினடி போற்று ... மணவாளா
அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த
அடர்சடையி னார்க்கு ... மறிவீவாய்
அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து
அமரர்சிறை மீட்ட ... பெருமாளே.
பாடல் 1091 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன ... தனதான
அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென
அமுதமொழி பதறியெழ ... அணியாரம்
அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக
அமுதநிலை யதுபரவ ... அதிமோகம்
உ ளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனு
முறுகபட மதனில்மதி ... யழியாதே
உ லகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு
னுபயநறு மலரடியை ... அருள்வாயே
வளையமலை கடல்சுவற விடுபகழி வரதனிரு
மருதினொடு பொருதருளு ... மபிராமன்
வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள்கொழுநன்
மருகஅமர் முடுகிவரு ... நிருதேசர்
தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற
தகனமெழ முடுகவிடு ... வடிவேலா
தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ
சகலகலை முழுதும்வல ... பெருமாளே.
பாடல் 1092 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன ... தனதான
அனகனென அதிகனென அமலனென அசலனென
அபயனென அதுலனென ... அநபாயன்
அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி
யவர்பெயரு மிடைசெருகி ... யிசைபாடி
வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை
மகிபஎன தினையளவு ... ளவுமீயா
மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய
மனமொழிய வொருபொருளை ... அருள்வாயே
இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென
இருசதுர திசையிலுர ... கமும்வீழ
இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில
மெனவிமலை யமுனை யென ... நிழல்வீசிக்
ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி
கதுவியெழில் பொதியமிசை ... படர்கோலக்
கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத ... பெருமாளே.
பாடல் 1093 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன ... தனதான
குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு
கொழுவுமுதி ரமும்வெளிற ... ளறுமாகக்
கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி
குமுகுமென இடைவழியில் ... வரநாறும்
உ டலில்மண மலிபுழுகு தடவியணி கலமிலக
வுலகமரு ளுறவரும ... ரிவையாரன்
பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன
தொழிவிலக லறிவையருள் ... புரிவாயே
வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய
வடிவுகொளு நெடியவிறல் ... மருவாரை
வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென
மகரசல நிதிமுழுகி ... விளையாடிக்
கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில
ககனமுக டுறநிமிரு ... முழுநீலக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத ... பெருமாளே.
பாடல் 1094 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ... தனதான
குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு
குமுதமிடு பரசமய ... மொருகோடி
குருடர்தெரிவரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது
கொடியஇரு வினையெனும ... ளறுபோக
உ தறிவித றியகரண மரணமற விரணமற
வுருகியுரை பருகியநு ... தினஞான
உ ணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத
யுகளமினி யுணரஅருள் ... புரிவாயே
சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை
சிறுபொறிக ளெனவுரக ... பிலமேழுஞ்
செகதலமு நிகர்சிகரிபலவுநல கெசபுயக
திசையுமுட னுருகவரு ... கடைநாளிற்
கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை
யெனமுடிவில் ககனமுக ... டதிலோடுங்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத ... பெருமாளே.
பாடல் 1095 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ... தனதான
வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென
வயிரமர கதமகர ... மளவாக
வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி
வளையிளைஞ ருயிர்கவர ... வருமாய
இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி
எழுபிறவி நெறியொழிய ... வழிகாணா
இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன
திருநயன கருணைசிறி ... தருள்வாயே
பதயுகள மலர்தொழுது பழுதில்பொரிஅவல்துவரை
பயறுபெரு வயிறுநிறை ... யவிடாமுப்
பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை
பரியதனி யெயிறுகொடு ... குருநாடார்
கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய
கடலுலகு நொடியில்வரு ... மதிவேகக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத ... பெருமாளே.
பாடல் 1096 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ... தனதான
விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற
விதறிவளை கலகலென ... அநுராகம்
விளையம்ருக மதமகுள முலைபுளக மெழநுதலில்
வியர்வுவர அணிசிதற ... மதுமாலை
அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி
யிதழ்பருகி யுருகியரி... வையரோடே
அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி
யவசமுறு கினுமடிகள் ... மறவேனே
உ டலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர
வுரகர்பில முடியவொரு ... பதமோடி
உ ருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர
வுயரவகி லபுவனம ... திரவீசிக்
கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ்
கருதரிய விதமொடழ ... குடனாடுங்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத ... பெருமாளே.
பாடல் 1097 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - கரஹரப்ரியா
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த ... தனதான
எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து
இடர்முளைக ளேமுளைத்து ... வளர்மாயை
எனுமுலவை யேயணைத்து விரககுழை யேகுழைத்து
இருளிலைக ளேதழைத்து ... மிகநீளும்
இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து
இடியுமுடல் மாமரத்தி ... னருநீழல்
இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு
இனியதொரு போதகத்தை ... யருள்வாயே
வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற
மதியிரவி தேவர்வஜ்ர ... படையாளி
மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர
மறையஎதிர் வீரவுக்ரர் ... புதல்வோனே
அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு
அசலமிசை வாகையிட்டு ... வரும்வேலா
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி
அமரர்சிறை மீளவிட்ட ... பெருமாளே.
பாடல் 1098 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த ... தனதான
நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள்
நயனமத னால்மருட்டி ... வருவாரை
நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று
லளிதமுட னேபசப்பி ... யுறவாடி
வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி
மதனனுடை யாகமத்தி ... னடைவாக
மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும்
வனிதையர்க ளாசைபற்றி ... யுழல்வேனோ
இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க
இருகையுற வேபிடித்து ... உ ரலோடே
இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண
னியல்மருக னேகுறத்தி ... மணவாளா
அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு
அரியதமிழ் வாதுவெற்றி ... கொளும்வேலா
அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட
அமரர்சிறை மீளவிட்ட ... பெருமாளே.
பாடல் 1099 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த ... தனதான
மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து
மதசுகப்ர தாபசித்ர ... முலையாலே
மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை
மனமகிழ் வேயளித்து ... மறவாதே
உ டலுயிர தாயிருக்க உ னதெனதெ னாமறிக்கை
ஒருபொழுதொ ணாதுசற்று ... மெனவேதான்
உ ரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை
யொழியவொரு போதகத்தை ... யருள்வாயே
தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம
சரணயுக மாயனுக்கு ... மருகோனே
சரவணமி லேயுதித்த குமரமுரு கேசக்ர
சயிலம்வல மாய்நடத்து ... மயில்வீரா
அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும்
அறுமுகவ ஞானதத்வ ... நெறிவாழ்வே
அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட
அமரர்சிறை மீளவிட்ட ... பெருமாளே.
பாடல் 1100 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
தந்தனந் தந்தனந் ... தனதான
அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்
சன்பிலன் துன்பவன் ... புகழ்வாரா
அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந்
தங்குமிங் குந்திரிந் ... திரைதேடுஞ்
சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ்
சஞ்சலன் கிஞ்சுகந் ... தருவாயார்
தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின்
தண்டையம் பங்கயம் ... புகழ்வேனோ
கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங்
கங்களுங் திங்களுங் ... கழுநீருங்
கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங்
கந்தமுந் துன்றுசெஞ் ... சடையாளர்
பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும்
பந்தவெங் குண்டர்தங் ... குலகாலா
பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும்
பண்புநண் பும்பெறும் ... பெருமாளே.
பாடல் 1101 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
தந்தனந் தந்தனந் ... தனதான
தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன்
தண்டவொன் றன்றொடுங் ... கிடுமாவி
தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந்
தன்றுமென் றுந்தனந் ... தனைநாடி
நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ்
சின்கணன் பொன்றில்மங் ... கையர்நேசம்
நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந்
தின்பமொன் றின்றியிங் ... குழல்வேனோ
சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன்
தொண்டனென் றன்றுகொண் ... டிடுமாதி
தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன்
பங்கடிந் தென்பொடுந் ... தொலையாநீர்
அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந்
தன்றுமின் றும்புனைந் ... திடும்வேணி
அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென்
றண்டரண் டந்தொழும் ... பெருமாளே.
பாடல் 1102 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
தந்தனா தனதனந் ... தனதான
உ ம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண்
டுண்டுமே கலைகழன் ... றயலாக
உ ந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன்
பொன்றிலா ரொடுதுவண் ... டணைமீதே
செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ்
சிந்தவாள் விழிசிவந் ... தமராடத்
திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ்
சிந்தையே னெனவிதங் ... கரைசேர்வேன்
கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங்
கொண்டல்ப்லோ மசையள்சங்க் ... ரமபாரக்
கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங்
கொண்டலா னையைமணஞ் ... செயும்வீரா
அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன்
றஞ்சவா னவருறுஞ் ... சிறைமீள
அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந்
தங்கைவே லுறவிடும் ... பெருமாளே.
பாடல் 1103 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
தந்தனா தனதனந் ... தனதான
வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென்
பந்திமா மலர்சொரிந் ... துடைசோர
வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந்
தந்தமா மதனலம் ... விதமாக
விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண்
டொன்றுமா யுறவழிந் ... தநுபோகம்
விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந்
துன்றன்மே லுருகஎன் ... றருள்வாயே
பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம்
பைம்பொன்மா நகரிலிந் ... திரன்வாழ்வு
பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந்
தன்பினோ ரகமமர்ந் ... திடுவோனே
அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந்
தண்டுவாள் கொடுநடந் ... திடுசூரன்
அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண்
டங்கைவே லுறவிடும் ... பெருமாளே.
பாடல் 1104 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானனா தந்தனந் தானனா தந்தனந்
தானனா தந்தனந் ... தனதான
காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங்
காரநா கஞ்செழுங் ... கனிவாய்கண்
காளகூ டங்கொடுங் கால்ரு பம்பொருங்
காமபா ணஞ்சுரும் ... பினம்வாழும்
ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந்
தோநமோ கந்தஎன் ... றுரையாதே
ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின்
றோயுமா றொன்றையுங் ... கருதாதோ
தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந்
தாரம்வா சந்திசந் ... தனநீடு
சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந்
தானமா தெங்கள்பைம் ... புனமேவும்
தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ்
சேகரா தண்டையங் ... கழல்பேணித்
தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந்
தேசிகா வும்பர்தம் ... பெருமாளே.
பாடல் 1105 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானனா தத்தனத் தானனா தத்தனத்
தானனா தத்தனத் ... தனதான
கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக்
கோவைபா டக்கொடிக் ... கொடிவாதிற்
கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக்
கூறுகா ளக்கவிப் ... புலவோன்யான்
சீலகா லப்புயற் பாரிசா தத்தருத்
த்யாகமே ருப்பொருப் ... பெனவோதுஞ்
சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக்
கேளெனா நிற்பதைத் ... தவிர்வேனோ
ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத்
தாரவா ரக்கடற் ... கிடைசாயும்
ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட்
டாத்ரு பத்தினிற் ... சுடராய
காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக்
காகவே ளைப்புகக் ... கழுநீராற்
காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக்
காமவேள் மைத்துனப் ... பெருமாளே.
பாடல் 1106 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானனா தத்தனத் தானனா தத்தனத்
தானனா தத்தனத் ... தனதான
ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத்
தீதெனா நற்றவத் ... தணைவோர்தம்
நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட்
டோ யுநா யொப்பவர்க் ... கிளையாதே
நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்
டூரசூர் கெட்டுகப் ... பொரும்வேலா
நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற்
றோதநீ திப்பொருட் ... டரவேணும்
கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத்
தானும்வே தக்குலத் ... தயனாருங்
கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப்
போதுறா நிற்பஅக் ... கொடிதான
காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக்
கோதைகா மக்கடற் ... கிடைமுழ்கக்
காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக்
காமவேள் மைத்துனப் ... பெருமாளே.
பாடல் 1107 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனா தனதனந் தனதனா தனதனந்
தனதனா தனதனந் ... தனதான
கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங்
களினறா துயில்வதுஞ் ... சரிபேசுங்
கரசரோ ருகநகம் படவிடாய் தணிவதுங்
கமலநா பியின்முயங் ... கியவாழ்வும்
அரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின்
பநல்மகோ ததிநலம் ... பெறுமாறும்
அதரபா னமுதமுந் தவிரவே மவுனபஞ்
சரமனோ லயசுகந் ... தருவாயே
பரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம்
படர்பகீ ரதிவிதம் ... பெறஆடல்
பயில்பணா வனமுகந் தகுணமா சுணகணம்
பனிநிலா வுமிழுமம் ... புலிதாளி
குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங்
குடிலவே ணியிலணிந் ... தவராகங்
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்
குமரனே யமரர்தம் ... பெருமாளே.
பாடல் 1108 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனா தனதனந் தனதனா தனதனந்
தனதனா தனதனந் ... தனதான
வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந்
தமர்செய்வாள் விழியர்நெஞ் ... சினில்மாயம்
வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந்
தணுகுமா நிதிகவர்ந் ... திடுமாதர்
துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந்
தமளிதோய் பவர்வசஞ் ... சுழலாதே
தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந்
துனதுதாள் தொழமனந் ... தருவாயே
படியெலா முடியநின் றருளுமா லுதவுபங்
கயனுநான் மறையுமும் ... பரும்வாழப்
பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண்
டலகையோ டெரிபயின் ... றெருதேறிக்
கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங்
குவளைசேர் சடையர்தந் ... திருமேனி
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்
குமரனே யமரர்தம் ... பெருமாளே.
பாடல் 1109 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான ... தனதான
கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய
கட்டுவிடு மோர்கால ... மளவாவே
கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு
கற்புநெறி தான்மாய ... வுயர்காலன்
இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி
யிட்டவிதி யோயாவி ... யிழவாமுன்
எத்தியுனை நாடோ று முத்தமிழி னாலோத
இட்டமினி தோடார ... நினைவாயே
துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்
தொக்கில்நெடு மாமார்பு ... தொளையாகத்
தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால
சுத்ததமி ழார்ஞான ... முருகோனே
மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ
மத்தமயில் மீதேறி ... வருநாளை
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத ... பெருமாளே.
பாடல் 1110 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான ... தனதான
பக்கமுற நேரான மக்களுட னேமாதர்
பத்தியுடன் மேல்மூடி ... யினிதான
பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை
பற்றியணை வோர்கூவி ... யலைநீரிற்
புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு
பொற்றியிட வேயாவி ... பிரியாமுன்
பொற்கழலை நாடோ று முட்பரிவி னாலோது
புத்திநெடி தாம்வாழ்வு ... புரிவாயே
இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர்
எப்பொருளு மாமீசர் ... பெருவாழ்வே
எட்டவரிதோர்வேலை வற்றமுது சூர்மாள
எட்டியெதி ரேயேறு ... மிகல்வேலா
மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ
மத்தமயில் மீதேறி ... வருவோனே
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத ... பெருமாளே.
பாடல் 1111 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானதன தந்தான தானதன தந்தான
தானதன தந்தான ... தனதான
நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி
நீளமக லஞ்சோதி ... வடிவான
நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல
நேர்மருவி யுண்காத ... லுடன்மேவிச்
சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத
சோதிமரு வும்பூமி ... யவையூடே
தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட
சோதிஅயி லுந்தாரு ... மருள்வாயே
வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்
வாய்விடவொ டெண்பாலு ... முடுபோல
வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட
மாமயில்வி டுஞ்சேவல் ... கொடியோனே
ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு
மாடலரு ணஞ்சோதி ... யருள்பாலா
ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத
லாசைமரு வுஞ்சோதி ... பெருமாளே.
பாடல் 1112 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஹிந்தோளம்
தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)
தகதிமிதக-3, தகிட-1 1/2
(எடுப்பு - 3/4 இடம்)
தத்ததனா தான தத்ததனா தான
தத்ததனா தான ... தனதான
சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
துக்கமிலா ஞான ... சுகமேவிச்
சொற்கரணா தீத நிற்குண்மு டாடு
சுத்தநிரா தார ... வெளிகாண
மொட்டலர்வா ணச சக்ரசடா தார
முட்டவுமீ தேறி ... மதிமீதாய்
முப்பதுமா றாறு முப்பதும்வே றான
முத்திரையா மோன ... மடைவேனோ
எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ
னப்பிரமா வோட ... வரைசாய
எற்றியஏ ழாழி வற்றிடமா றாய
எத்தனையோ கோடி ... யசுரேசர்
பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு
பத்திருதோள் வீர ... தினைகாவல்
பத்தினிதோள் தோயு முத்தமம றாது
பத்திசெய்வா னாடர் ... பெருமாளே.
பாடல் 1113 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்ததனா தான தத்ததனா தான
தத்ததனா தான ... தனதான
மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு
மக்களுமா றாத ... துயர்கூர
மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ
வைத்தவர்தா மேக ... மதிமாய
நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு
நெட்டளவாம் வாதை ... யணுகாமுன்
நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி
நித்தலும்வாழ் மாறு ... தருவாயே
நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத
னற்றவர்தா நாட ... விடையேறி
நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு
நற்றுணைவா ஞால ... மிகவாழப்
பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக
பத்தியதா மாறு ... முகநாளும்
பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத
பத்திசெய்வா னாடர் ... பெருமாளே.
பாடல் 1114 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
தத்தனத் தத்ததன ... தனதான
தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு
சத்துவிட் டப்படிபொ ... லடியேனுஞ்
சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி
சத்துவத் தைப்பிரிய ... விடும்வேளை
சுத்தமத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு
தொக்குசற் றுக்கடையன் ... மிடிதீரத்
துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி
சுற்றவிட் டுக்கடுகி ... வரவேணும்
வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய
வெற்றிசத் திக்கரக ... முருகோனே
வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல
விட்டபச் சைச்சரண ... மயில்வீரா
கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்
கச்சியப் பர்க்கருள்செய் ... குருநாதா
கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்
கற்பினுக் குற்றுபுணர் ... பெருமாளே.
பாடல் 1115 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
தத்தனத் தத்ததன ... தனதான
மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்
மற்றுமுற் றக்குரவ ... ரனைவோரும்
வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு
மட்டுமற் றுப்பெருகு ... மடியாரும்
புக்குதுக் தித்தெரிகள் தத்தவைக் கப்புகுது
பொய்க்குமெய்க் குச்செயலு ... முருகாதே
புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு
புத்திமெத் தத்தருவ ... தொருநாளே
செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு
செக்கமுற் றச்சலமு ... மதிசூடி
சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு
சித்தமுத் திச்சிவமு ... மருள்வோனே
கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை
கொத்தினொக் கக்கொலைசெய் ... வடிவேலா
கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது
குத்திவெட் டிப்பொருத ... பெருமாளே.
பாடல் 1116 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ... தனதான
உ ற்பா தப்பூ தக்கா யத்தே
யொத்தோ டித்தத் ... தியல்காலை
உ ட்பூ ரித்தே சற்றே சற்றே
யுக்கா ரித்தற் ... புதனேரும்
அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ
லப்பா வித்துத் ... திரிவேனுக்
கப்பா சத்தா லெட்டா அப்பா
லைப்போ தத்தைப் ... புரிவாயே
பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா
கப்போய் முட்டிக் ... கிரிசாடிப்
புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்
பொட்டா கக்குத் ... தியவேலா
முற்பா டப்பா டற்றா ருக்கோர்
முட்கா டற்கப் ... பொருளீவாய்
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ... பெருமாளே.
பாடல் 1117 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ... தனதான
எற்றா வற்றா மட்டா கத்தீ
யிற்காய் செக்கட் ... பிறைவாளே
யிற்றார் கைப்பா சத்தே கட்டா
டிக்கோ பித்துக் ... கொடுபோமுன்
உ ற்றார் பெற்றார் சுற்றா நிற்பா
ரொட்டோ ம் விட்டுக் ... கழியீரென்
றுற்றோ துற்றே பற்றா நிற்பா
ரக்கா லத்துக் ... குறவார்தான்
பற்றார் மற்றா டைக்கே குத்தா
பற்றா னப்பிற் ... களைவோனே
பச்சே னற்கா னத்தே நிற்பாள்
பொற்பா தத்திற் ... பணிவோனே
முற்றா வற்றா மெய்ப்போ தத்தே
யுற்றார் சித்தத் ... துறைவோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ... பெருமாளே.
பாடல் 1118 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ... தனதான
செட்டா கத்தே னைப்போ லச்சீ
ரைத்தே டித்திட் ... பமதாகத்
திக்கா மற்பா டுற்றா ரிற்சீ
ருற்றா ருக்குச் ... சிலபாடல்
பெட்டா கக்கூ றிப்போ தத்தா
ரைப்போல் வப்புற் ... றுழலாதே
பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள்
சற்றோ தப்பெற் ... றிடுவேனோ
எட்டா நெட்டா கத்தோ கைக்கே
புக்கோ லத்திட் ... டிமையொர்வா
னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா
னெட்டா வெட்டிப் ... பொரும்வேலா
முட்டா மற்றா ளைச்சே விப்பார்
முற்பா வத்தைக் ... களைவோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ... பெருமாளே.
பாடல் 1119 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ... தனதான
பட்டா டைக்கே பச்சோ லைக்கா
துக்கே பத்தித் ... தனமாகும்
பக்கே நிட்டூ ரப்பார் வைக்கே
பட்டா சைப்பட் ... டுறவாடி
ஒட்டார் நட்டார் வட்டா ரத்தே
சுற்றே முற்றத் ... தடுமாறும்
ஒட்டா ரப்பா விக்கே மிக்கா
முற்றாள் கிட்டத் ... தகுமோதான்
கட்டா விப்போ துட்டா விப்பூ
கக்கா விற்புக் ... களிபாடுங்
கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய்
கத்தா சத்தித் ... தகவோடே
முட்டா கக்கூ ரிட்டே னற்றாள்
முற்றா மற்கொட் ... குமரேசா
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ... பெருமாளே.
பாடல் 1120 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ... தனதான
பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்
வைத்தே பத்திப் ... படவேயும்
பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா
சற்கா ரத்துக் ... கிரைதேடி
எத்தே சத்தோ டித்தே சத்தோ
டொத்தேய் சப்தத் ... திலுமோடி
எய்த்தே நத்தா பற்றா மற்றா
திற்றே முக்கக் ... கடவேனோ
சத்தே முற்றா யத்தா னைச்சூர்
கற்சா டிக்கற் ... பணிதேசா
சட்சோ திப்பூ திப்பா லத்தா
அக்கோ டற்செச் ... சையமார்பா
முத்தா பத்தா ரெட்டா வைப்பா
வித்தா முத்தர்க் ... கிறையோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ... பெருமாளே.
பாடல் 1121 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ... தனதான
பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே
பொய்ப்போ கத்தைப் ... பகர்வார்தம்
பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ
கித்தே கைக்குப் ... பொருள்தேடித்
தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்
திக்கோ டிப்பச் ... சிமமான
திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ
வுக்கோ டிக்கெட் ... டிடலாமோ
தற்கோ லிப்பா விப்பார் நற்சீ
ரைச்சா ரத்தற் ... பரமானாய்
தப்பா முப்பா லைத்தே டித்தே
சத்தோர் நிற்கத் ... தகையோடே
முற்கா னப்பே தைக்கா கப்போய்
முற்பால் வெற்பிற் ... கணியானாய்
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ... பெருமாளே.
பாடல் 1122 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ... தனதான
பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ
தப்பே சிப்பொற் ... கனிவாயின்
பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ
ணைப்பூண் வெற்பிற் ... றுகில்சாயக்
கற்பா லெக்கா வுட்கோ லிக்கா
சுக்கே கைக்குத் ... திடுமாதர்
கட்கே பட்டே நெட்டா சைப்பா
டுற்றே கட்டப் ... படுவேனோ
சொற்கோ லத்தே நற்கா லைச்சே
விப்பார் சித்தத் ... துறைவோனே
தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர்
விக்கா முக்கத் ... தொடும்வேலா
முற்கா லத்தே வெற்பேய் வுற்றார்
முத்தாள் முத்தச் ... சிறியோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ... பெருமாளே.
பாடல் 1123 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ... தனதான
மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே
வித்தா ரத்திற் ... பலகாலும்
வேட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே
வித்தா சைச்சொற் ... களையோதிக்
கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா
ரைப்போ லக்கற் ... பழியாதுன்
கற்பூ டுற்றே நற்றா ளைப்பா
டற்கே நற்சொற் ... றருவாயே
பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய்
முற்பால் வெற்பிற் ... புனமானைப்
பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா
தத்தாள் பற்றிப் ... புகல்வோனே
முக்கோ ணத்தா னத்தா ளைப்பால்
வைத்தார் முத்தச் ... சிறியோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ... பெருமாளே.
பாடல் 1124 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - கரஹரப்ரியா
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35)
(எடுப்பு - /4/4/4 0)
நடை - தகதகிட
தனதனன தனதனன தந்தந்த தத்ததன
தனதனன தனதனன தந்தந்த தத்ததன
தனதனன தனதனன தந்தந்த தத்ததன ... தத்ததன தான
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு ... மாய
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு ... காலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு ... மானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் ... வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு ... தீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரியென்றென்றி டக்கையுமு டுக்கையுமி ... யாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரிகொண்டின்பு றப்படுக ளத்திலொரு ... கோடி
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த ... பெருமாளே.
பாடல் 1125 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... : தாளம் -
தனன தந்தன தனனா தனதன
தந்தன தனனா தனதன
தனன தந்தன தனனா தனதன ... தனதான
அரிய வஞ்சக ரறவே கொடியவர்
அவலர் வன்கண ரினியா ரவகுணர்
அசட ரன்பில ரவமே திரிபவர் ... அதிமோக
அலையில் மண்டிய வழியே யொழுகியர்
வினைநி ரம்பிடு பவமே செறிபவர்
அருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள் ... நரகேற
உ ரிய சஞ்சல மதியா னதுபெறு
மனஇ டும்பர்க ளிடமே தெனஅவர்
உ பய அங்கமு நிலையா கிடவொரு ... கவியாலே
உ லக முண்டவர் மதனா ரிமையவர்
தருவெ னும்படி மொழியா வவர்தர
உ ளது கொண்டுயி ரவமே விடுவது ... தவிராதோ
கரிய கொந்தள மலையா ளிருதன
அமுது ணுங்குரு பரனே திரைபடு
கடல டும்படி கணையே வியஅரி... மருகோனே
கருணை கொண்டொரு குறமா மகளிடை
கலவி தங்கிய குமரா மயில்மிசை
கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு ... மிளையோனே
திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து
பொதுந டம்புரியரனா ரிடமுறை
சிவைச வுந்தரியுமையா ளருளிய ... புதல்வோனே
சிகர வெண்கரிஅயிரா வதமிசை
வருபு ரந்தர னமரா பதியவர்
சிறைவி டும்படி வடிவேல் விடவல ... பெருமாளே.
பாடல் 1126 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - திலங்
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தான தானன
தானான தான தான தானன
தானான தான தான தானன ... தந்ததான
ஆராத காத லாகி மாதர்த
மாபாத சூட மீதி லேவிழி
யாலோல னாய்வி கார மாகியி ... லஞ்சியாலே
ஆசாப சாசு மூடி மேலிட
ஆசார வீன னாகி யேமிக
ஆபாச னாகி யோடி நாளும ... ழிந்திடாதே
ஈராறு தோளு மாறு மாமுக
மோடாரு நீப வாச மாலையு
மேறான தோகை நீல வாசியு ... மன்பினாலே
ஏனோரு மோது மாறு தீதற
நானாசு பாடி யாடி நாடொறு
மீடேறு மாறு ஞான போதக ... மன்புறாதோ
வாராகி நீள்க பாலி மாலினி
மாமாயி யாயி தேவி யாமளை
வாசாம கோச ராப ராபரை ... யிங்குளாயி
வாதாடி மோடி காடு காளுமை
மாஞால லீலி யால போசனி
மாகாளி சூலி வாலை யோகினி ... யம்பவானி
சூராரி மாபு ராரிகோமளை
தூளாய பூதி பூசு நாரணி
சோணாச லாதி லோக நாயகி ... தந்தவாழ்வே
தோளாலும் வாளி னாலு மாறிடு
தோலாத வான நாடு சூறைகொள்
சூராரியேவி சாக னேசுரர் ... தம்பிரானே.
பாடல் 1127 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - கீரவாணி
தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த
தானாதன தானந் தனத்த ... தனதான
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
மாவாகன மாமந் திரத்து ... மடலாலும்
ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
மாமாறெரிதாமிந் தனத்து ... மருளாதே
நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த
நீநானற வேறின்றி நிற்க ... நியமாக
நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி
நேரேபர மாநந்த முத்தி ... தரவேணும்
வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
வேதாளச மூகம் பிழைக்க ... அமராடி
வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க
வேர்மாமர மூலந் தறித்து ... வடவாலும்
வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து
வாணாசன மேலுந் துணித்த ... கதிர்வேலா
வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து
வானோர்பரிதாபந் தவிர்த்த ... பெருமாளே.
பாடல் 1128 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன
தானா தத்தன தத்தன ... தனதான
ஆலா லத்தைய ழுத்திய வேல்போல் நற்குழை யைப்பொரு
தாகா ரைத்தொடர் கைக்கெணும் ... விழியாலே
ஆளா மற்றவர் சுற்றிட மீளா மற்றலை யிட்டறி
வார்போ கச்செயல் விச்சைகள் ... விலைகூறிக்
கோலா லக்கண மிட்டுவ ராதார் நெக்குரு கப்பொருள்
கூறா கப்பெறில் நிற்கவு ... மிலதானார்
கூடா நட்புமு ரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள்
கோமா ளத்துய ருட்பய ... முறலாமோ
பாலா மக்கட லிற்றுயில் மாலோ ரெட்டுத லைக்கிரி
பால்பார் வைக்கள விட்டுமை ... யுறுபோதிற்
பார்மே லிக்கனு டற்பொறி யாய்வீ ழச்சுடும் வித்தகர்
பாலா பத்தரிடத்தியல் ... பயில்வோனே
மேலா யத்தொடு திக்கடை மேவார் வெற்பொட ரக்கரை
வேர்மா ளப்பொரு திட்டொளி ... விடும்வேலா
மேனா டர்ச்சிறை விட்டருள் மீளா விக்கிர மத்தொடு
வேதா வைச்சிறை யிட்டருள் ... பெருமாளே.
பாடல் 1129 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - சுருட்டி
தாளம் - அங்கதாளம் (9)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன ... தனதான
ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும்
ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும்
ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ... ரழியாதே
ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்
வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும்
ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி ... துலகேழும்
யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்
தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்
ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் ... இடராழி
ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய
நானாவி கார புற்பு தப்பி றப்பற
ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் ... மறவேனே
மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர்
மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு
மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி... லொ முவர்
மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்
தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்
வாழ்வேவ லாரிபெற்றெ டுத்த கற்பக ... வனமேவும்
தேநாய காஎ னத்து தித்த வுத்தம
வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல்
சேராத சூர னைத்து ணித்த டக்கிய ... வரைமோதிச்
சேறாய சோரிபுக்க ளக்கர் திட்டெழ
மாறாநி சாச ரக்கு லத்தை யிப்படி
சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய ... பெருமாளே.
பாடல் 1130 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனனந் தாத்த தான தத்த
தனதனனந் தாத்த தான தத்த
தனதனனந் தாத்த தான தத்த ... தனதான
இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து
விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து
இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் ... வலையாலே
இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து
முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும்
இருவரையுங் காட்டி மாலெ ழுப்பி ... விலைபேசி
மடலவிழும் பூக்க ளால்நி றைத்த
சுருளளகந் தூற்றி யேமு டித்து
மறுகிடைநின் றார்க்க வேந கைத்து ... நிலையாக
வருபொருள்கண் டேற்க வேப றிக்கும்
அரிவையர்தம் பேச்சி லேமு ழுக்க
மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து ... விடலாமோ
படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி
முதுமறையின் பேச்சி நூலி டைச்சி
பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி ... யிருநாழி
படிகொடறங் காத்த மாப ரைச்சி
மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி
பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி ... நெடுநீலி
அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி
சமரமுகங் காட்டு மால்வி டைச்சி
அகிலமுமுண் டார்க்கு நேரிளைச்சி ... பெருவாழ்வே
அரியயனின் றேத்த வேமி குத்த
விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த
அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த ... பெருமாளே.
பாடல் 1131 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத்
தனதத்தத் தனதத்தத் ... தனதான
இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட்
டினிமைச்சுற் றமுமற்றைப் ... புதல்வோரும்
இனமொப்பித் திசையச்சொற் பலகத்திட் டிழியப்பிற்
கிடையத்துக் கமும்விட்டிட் ... டவரேக
விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் தனமுற்றிட்
டுயிர்வித்துத் தனையெற்றிக் ... கொடுபோமுன்
வினைபற்றற் றறநித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப்
புயவெற்றிப் புகழ்செப்பப் ... பெறுவேனோ
அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க்
கறிவொக்கப் பொருள்கற்பித் ... திடுவோனே
அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட்
டலறக்குத் துறமுட்டிப் ... பொரும்வேலா
கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக்
கிரிகைக்குட் டிகிரிக்கொற் ... றவன்மாயன்
கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட் டிசையர்க்குக்
கடவுட்சக் கிரவர்த்திப் ... பெருமாளே.
பாடல் 1132 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ..; தாளம் -
தனதனன தான தத்த தந்த
தனதனன தான தத்த தந்த
தனதனன தான தத்த தந்த ... தனதான
இரவினிடை வேள்தொ டுத்து டன்று
முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி
யிருகுழையு மோதி யப்ப டங்கு ... கடலோடே
எதிர்பொருது மானி னைத்து ரந்து
சலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி
யினியமுத ஆல முற்ற கண்கள் ... வலையாலே
முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்து
விசிறிவளை மாத ரைக்க லந்து
மொழியதர கோவை யிக்க ருந்தி ... யமுதாகு
முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து
சுழிமிதுன வாவி யிற்பு குந்து
முழுகியழி யாம னற்ப தங்கள் ... தரவேணும்
திரையுலகு சாக ரத்தி லங்கை
நகரிலுறை ராவ ணற்கி யைந்த
தெசமுடியு மீரு பத்தொ ழுங்கு ... திணிதோளுஞ்
சிதையவொரு வாளி யைத்து ரந்த
அரிமருக தீத றக்க டந்து
தெளிமருவு கார ணத்த மர்ந்த ... முருகோனே
அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்து
கருதுமொரு மூவ ருக்கி ரங்கி
யருளுமொரு நாய கற்ப ணிந்த ... குருநாதா
அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்து
இரவுபகலாக நெக்க விழ்ந்த
அடியவர்கள் பாட லுக்கி சைந்த ... பெருமாளே.
பாடல் 1133 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - தர்பரிகானடா
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா ... தனதான
இரவொ டும்பக லேமா றாதே
அநுதி னந்துய ரோயா தேயே
யெரியு முந்தியி னாலே மாலே ... பெரிதாகி
இரைகொ ளும்படி யூடே பாடே
மிகுதி கொண்டொழி யாதே வாதே
யிடைக ளின்சில நாளே போயே ... வயதாகி
நரைக ளும்பெரிதாயே போயே
கிழவ னென்றொரு பேரே சார்வே
நடைக ளும்பல தாறே மாறே ... விழலாகி
நயன முந்தெரியாதே போனால்
விடிவ தென்றடி யேனே தானே
நடன் குஞ்சித வீடே கூடா ... தழிவேனோ
திருந லம்புரிதாளீ தூளீ
மகர குண்டலி மாண சூரி
திரிபு ரந்தழ லேவீ சார்வீ ... யபிராமி
சிவனி டந்தரிநீலீ சூலீ
கவுரிபஞ்சவி யாயீ மாயீ
சிவைபெ ணம்பிகை வாலா சீலா ... அருள்பாலா
அரவ கிங்கிணி வீரா தீரா
கிரிபு ரந்தொளிர் நாதா பாதா
அழகி ளங்குற மானார் தேனார் ... மணவாளா
அரிய ரன்பிர மாவோ ட்மு
வகைய ரிந்திர கோமா னீள்வா
னமரர் கந்தரு வானோ ரேனோர் ... பெருமாளே.
பாடல் 1134 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தானான தானன
தனதன தானான தானன
தனதன தானான தானன ... தனதான
இருகுழை மீதோடி மீளவும்
கயல்களு மாலால காலமும்
ரதிபதி கோலாடு பூசலு ... மெனவேநின்
றிலகிய கூர்வேல் விலோசன
ம்ருகமத பாடிர பூஷித
இளமுலை மாமாத ரார்வச ... முருகாதே
முருகவிழ் கூதாள மாலிகை
தழுவிய சீர்பாத தூளியின்
முழுகிவி டாய்போ மனோலயம் ... வரவோது
முழுமதி மாயாவி காரமு
மொழிவது வாசாம கோசர
முகுளித ஞானோப தேசமு ... மருள்வேணும்
அருமறை நூலோதும் வேதியன்
இரணிய ரூபாந மோவென
அரிகரிநாராய ணாவென ... ஒருபாலன்
அவனெவ னாதார மேதென
இதனுள னோவோது நீயென
அகிலமும் வாழ்வான நாயக ... னெனவேகி
ஒருகணை தூணோடு மோதிட
விசைகொடு தோள்போறு வாளரி
யுகிர்கொடு வாரா நிசாசர ... னுடல்பீறும்
உ லகொரு தாளான மாமனும்
உ மையொரு கூறான தாதையும்
உ ரைதரு தேவாசு ராதிபர் ... பெருமாளே.
பாடல் 1135 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தனதன தத்தத் தானன
தனதன தனதன தத்தத் தானன
தனதன தனதன தத்தத் தானன ... தனதான
இருமுலை மலையென ஒப்பிட் டேயவர்
இருவிழி யதனில் கப்பட் டேமன
மிசைபட வசனமு ரைத்திட் டேபல ... மினிதொடே
இடையது துவளகு லுக்கிக் காலணி
பரிபுர வொலிகள் தொனிக்கப் பூதர
இளமுலை குழைய அணைத்துக் கேயுர ... மணியோடே
மதகத பவள மழுத்திப் பூஷண
மணிபல சிதறி நெறித்துத் தானுக
மருமலர் புனுகு தரித்துப் பூவணை ... மதராஜன்
மருவிய கலவி தனக்கொப் பாமென
மகிழ்வொடு ரசிது மிகுத்துக் கோதையை
மருவியு முருகி களைத்துப் பூமியி ... லுழல்வேனோ
திரிபுர மெரிய நகைத்துக் காலனை
யுதைபட மதனை யழித்துச் சாகர
திரைவரு கடுவை மிடற்றிற் றானணி ... சிவனார்தந்
திருவருள் முருக பெருத்துப் பாரினில்
சியொதனன் மடிய மிகுத்துப் பாரத
செயமுறு மரிதன் மனத்துக் காகிய ... மருகோனே
நரிகழு வதுகள் களிக்கச் சோரிகள்
ரணகள முழுதுமி குத்துக் கூளிகள்
நடமிட அசுரர் குலத்துக் காலனை ... நிகராகி
நனிகடல் கதற பொருப்புத் தூளெழ
நணுகிய இமையவ ருக்குச் சீருற
நணுகலர் மடியதொ லைத்துப் பேர்பேறு ... பெருமாளே.
பாடல் 1136 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தானா தானா தனதன தானா தானா
தனதன தானா தானா ... தனதான
இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ
எமன்விடு தூதோ மானோ ... விடமீதோ
எனவிழி கூறா வாரா அரிவையர் தேர்ளு டாடா
இறுதியில் வேறாய் மாறா ... நினைவாலே
பலபல கோளாய் மாலா யுழலும தானால் வீணே
படிறுசொ லாகா லோகா ... யதனாகிப்
பரிவுட னாடாய் வீடா யடிமையு மீடே றாதே
பணிதியில் மூழ்கா மாயா ... விடுவேனோ
அலைகடல் கோகோ கோகோ எனவுரை கூறா வோடா
அவுணரை வாடா போடா ... எனலாகி
அழகிய வேலால் வாளால் நிலவிய சீரா வாலே
யவருடல் வாணா ளீரா ... எதிராகி
மலைமிகு தோளா போதா அழகிய வாலா பாலா
மகபதி வாழ்வே சேயே ... மயில்வீரா
மறைதொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே
வளவிய வேளே மேலோர் ... பெருமாளே.
பாடல் 1137 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தனதத்த தனனா தனனா
தனதன தனதத்த தனனா தனனா
தனதன தனதத்த தனனா தனனா ... தனதான
உ மையெனு மயில்பெற்ற மயில்வா கனனே
வனிதைய ரறுவர்க்கு மொருபா லகனே
உ ளமுரு கியபத்த ருறவே மறவே ... னெனவோதி
உ ருகுத லொருசற்று மறியேன் வறியேன்
இ ருவினை யிடையிட்ட கொடியே னடியேன்
உ ணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய் ... மடமாதர்
அமையென வளர்சித்ர இருதோள் தழுவா
அமுதென மதுரித்த கனிவா யணுகா
அமளியி லணைவுற்ற அநுரா கமகோ ... ததமுழ்கி
அநவர தமுமுற்ற மணிமா முலைதோய்
கலவியி னலமற்ப சுகமா கினுமா
அநுபவ மிதுசற்றும் விடவோ இயலா ... தியலாதே
தமனிய குலசக்ர கிரியோ கடலோ
விடமென முடிவைத்த முதுபே ரிருளோ
தனுவென முனையிட்ட கொநல்மு விலைவேல் ... கொடுபார்வை
தழலெழ வருமுக்ர எமபா தகனோ
யுகஇறு தியில்மிக்க வடவா னலமோ
தனியிவ னெனமிக்க பிசிதா சனபூ ... பதியாகி
இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோ
அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ
எழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோ ... பொரவாரும்
எனவரு மொருதுட்டன் முறையோ முறையோ
வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா
எனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர் ... பெருமாளே.
பாடல் 1138 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனத்த தத்தன தனதன தந்தத்
தனத்த தத்தன தனதன தந்தத்
தனத்த தத்தன தனதன தந்தத் ... தனதான
உ ரைத்த பற்றுட னடிகள்ப ணிந்திட்
டிருத்தி மெத்தென இளநகை யுஞ்சற்
றுமிழ்த்த டைக்கல மெனஎதிர் கும்பிட் ... டணைமேல்வீழ்ந்
துடுத்த பொற்றுகி லகலல்கு லுந்தொட்
டெடுத்த ணைத்திதழ் பெருகமு தந்துய்த்
துனக்கெ னக்கென வுருகிமு யங்கிட் ... டுளும்வேறாய்
அருக்கி யத்தனை யெனுமவ சம்பட்
டறுத்தொ துக்கிய நகநுதி யுந்தைத்
தறப்பி தற்றிட அமளிக லங்கித் ... தடுமாறி
அளைத்து ழைத்திரு விழிகள்சி வந்திட்
டயர்த்தி தத்தொடு மொழிபவ ருந்திக்
கடுத்த கப்படு கலவியில் நொந்தெய்த் ... திடலாமோ
தரைக்க டற்புகு நிருதர்த யங்கச்
சளப்ப டத்தட முடிகள்பி டுங்தித்
தகர்த்தொ லித்தெழு மலையொடு துண்டப் ... பிறைசூடி
தனுக்கி ரித்திரிதரஎதி ருங்கொக்
கினைப்ப தைத்துட லலறிட வஞ்சத்
தருக்க டக்கிய சமர்பொரு துங்கத் ... தனிவேலா
பருப்ப தப்ரிய குறுமுனி வந்தித்
திருக்கு முத்தம நிருதர்க லங்கப்
படைப்பெ லத்தொடு பழயக்ர வுஞ்சக் ... கிரிசாடிப்
படர்ப்ப றைக்குரு குடலுதி ரங்குக்
குடக்கொ டிக்கிடு குமரகொ டுங்கற்
பதத்தி றுத்துகு பசியசி கண்டிப் ... பெருமாளே.
பாடல் 1139 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஆந்தோளிகா
தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தனதத்தன தானன தந்தன
தனதத்தன தானன தந்தன
தனதத்தன தானன தந்தன ... தனதான
உ லகத்தினில் மாதரு மைந்தரும்
உ றுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை
உ யர்துக்கமு மோடுற வென்றுற ... வருகாலன்
உ திரத்துட னேசல மென்பொடு
உ றுதிப்பட வேவள ருங்குடில்
உ திரக்கனல் மீதுற என்றனை ... யொழியாமுன்
கலகக்கலை நூல்பல கொண்டெதிர்
கதறிப்பத றாவுரை வென்றுயர்
கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு ... களிகூருங்
கவலைப்புல மோடுற என்துயர்
கழிவித்துன தாளினை யன்பொடு
கருதித்தொழும் வாழ்வது தந்திட ... நினைவாயே
இலகப்பதி னாலுல கங்களும்
இருளைக்கடி வானெழு மம்புலி
யெழில்மிக்கிட வேணியில் வந்துற ... எருதேறி
இருகைத்தல மான்மழு வும்புனை
யிறையப்பதி யாகிய இன்சொலன்
இசையப்பரிவோடினி தன்றரு ... ளிளையோனே
மலைபட்டிரு கூறெழ வன்கடல்
நிலைகெட்டபி தாவென அஞ்சகர்
வலியற்றசு ரேசரு மங்கிட ... வடிவேலால்
மலைவித்தக வானவ ரிந்திரர்
மலர்கைக்கொடு மாதவ ருந்தொழ
வடிவுற்றொரு தோகையில் வந்தருள் ... பெருமாளே.
பாடல் 1140 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - வலஜி
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35)
(எடுப்பு - /4/4/4 0)
நடை - தகதகிட
தனதனன தனதனன தானான தானதன
தனதனன தனதனன தானான தானதன
தனதனன தனதனன தானான தானதன ... தந்ததான
உ றவின்முறை கதறியழ ஊராரு மாசையற
பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற
உ லகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியு ... மந்தநாளில்
உ னதுமுக கருணைமல ரோராறு மாறிருகை
திரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும்
உ பயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் ... அந்தமார்பும்
மறையறைய அமரர்தரு பூமாரியேசொரிய
மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர
மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர் ... வந்துகூட
மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது
விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து
மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன் ... வந்திடாயோ
பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ
அதிரஎழு புவியுலக மீரேழு மோலமிட
பிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில் ... நின்றநாகம்
பிரியநெடு மலையிடிய மாவாரிதூளியெழ
பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு
பிணநிணமு முணவுசெய்து பேயோடு மாடல்செய ... வென்றதீரா
குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட
கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு
குளிர்கணியி னிளமரம தேயாகி நீடியுயர் ... குன்றுலாவி
கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடைய
வொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய்
குமரகுரு பரஅமரர் வானாடர் பேணஅருள் ... தம்பிரானே.
பாடல் 114த ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன ... தனதான
உ றவு சிங்கிகள் காமா காரிகள்
முறைம சங்கிக ளாசா வேசிகள்
உ தடு கன்றிகள் நாணா வீணிகள் ... நகரேகை
உ டைய கொங்கையின் மீதே தூசிகள்
பிணமே னும்படி பேய்நீ ராகிய
உ ணவை யுண்டுடை சோர்கோ மாளிகள் ... கடல்ஞாலத்
தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள்
வறுமை தந்திடு பாழ்மூ தேவிகள்
அணிநெ ருங்கிக ளாசா பாஷண ... மடமாதர்
அழகு யர்ந்தபொய் மாயா ரூபிகள்
கலவி யின்பமெ னாவே சோருதல்
அலம லந்தடு மாறா தோர்கதி ... யருள்வாயே
பறவை யென்கிற கூடார் மூவரண்
முறையி டுந்தமர் வானோர் தேரரி
பகழி குன்றவி லாலே நீறெழ ... வொ முவர்
பதநி னைந்துவி டாதே தாள் பெற
அருள்பு ரிந்தபி ரானார் மாபதி
பரவு கந்தசு வாமீ கானக ... மதின்மேவுங்
குறவர் தங்கள்பி ரானே மாமரம்
நெறுநெ றென்றடி வேரோ டேநிலை
குலைய வென்றிகொள் வேலே யேவிய ... புயவீரா
குயில்க ளன்றில்கள் கூகூ கூவென
மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை
குறவர் சுந்தரியோடே கூடிய ... பெருமாளே.
பாடல் 1142 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானான தானன தனத்த தத்தன
தானான தானன தனத்த தத்தன
தானான தானன தனத்த தத்தன ... தந்ததான
ஊனோடு வாதுயிர் தரித்து மட்டற
வூசாடு பாழ்குடி லெடுத்த திற்படி
ஓயாத மாமய லுழற்றி னிற்படு ... வம்பனேனை
ஊதாரியாய்விடு சமத்தில் நிற்பது
மாராத காதலை மனத்தில் வைப்பது
மூரோடு போயெதிர் பிணக்கி னிற்பது ... முந்திடாதே
தேனூறு வாய்மொழி பரத்தை யர்க்கொரு
நாய்போல வேயவர் வசத்தில் நிற்பது
சீர்கேட தாய்விடு சிறுப்பி ளைத்தன ... மென்றுநீபச்
சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள்
சீராடி நாண்மல ரெனப்ரியப்படு
சீர்பாத போதக மநுக்ர கிப்பது ... மெந்தநாளோ
மானாக பாயலில் படுக்கை யிட்டவர்
மாமேரு வாரியில் திரித்து விட்டவர்
மாடோ டு போய்வரு மிடைக்குலத்தவ ... ரன்றுவாவி
வாய்நாக மோலிட பிடித்த சக்கிர
வாளேவி யேகர வினைத்த றித்தவர்
மாமாய னாயுல களித்த வித்தகர் ... தங்கைவாழ்வே
கானாரு மாமலை தினைப்பு னத்தினில்
கால்மேல்வி ழாவொரு குறச்சி றுக்கியை
காணாது போயியல் புணர்ச்சி யிட்டருள் ... கந்தவேளே
காரேழு மாமலை யிடித்து ருக்கெட
காராழி யேழவை கலக்கி விட்டுயர்
காவான நாடர்கள் பகைச்ச வட்டிய ... தம்பிரானே.
பாடல் 1143 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - த்விஜாவந்தி
தாளம் - ஆதி - 2 களை
தத்தன தனதன தானா தனதன
தத்தன தனதன தானா தனதன
தத்தன தனதன தானா தனதன ... தனதான
எட்டுட னொருதொளை வாயா யதுபசு
மட்கல மிருவினை தோயா மிகுபிணி
யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் ... நிலையாக
எப்படி யுயர்கதி நாமே றுவதென
எட்பகி ரினுமிது வோரார் தமதம
திச்சையி னிடருறு பேரா சைகொள்கட ... லதிலேவீழ்
முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு
முப்பதி னறுபதின் மேலா மறுவரு
முற்றுத லறிவரு ஞானோ தயவொளி ... வெளியாக
முக்குண மதுகெட நானா வெனவரு
முத்திரை யழிதர ஆரா வமுதன
முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ ... தொருநாளே
திட்டென எதிர்வரு மாகா ளியினொடு
திக்கிட தரிகிட தீதோ மெனவொரு
சித்திர வெகுவித வாதா டியபத ... மலராளன்
செப்புக வெனமுன மோதா துணர்வது
சிற்சுக பரவெளி யீதே யெனஅவர்
தெக்ஷண செவிதனி லேபோ தனையருள் ... குருநாதா
மட்டற அமர்பொரு சூரா திபனுடல்
பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு
மற்புய மரகத மாதோ கையில்நட ... மிடுவோனே
வச்சிர கரதல வானோ ரதிபதி
பொற்புறு கரிபரிதேரோ டழகுற
வைத்திடு மருமக னேவா ழமரர்கள் ... பெருமாளே.
பாடல் 1144 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்த தனதனன தான தானதன
தத்த தனதனன தான தானதன
தத்த தனதனன தான தானதன ... தனதான
எத்தி யிருகுழையை மோதி மீனமதின்
முட்டி யிடறியம தூதர் போல முகி
லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை ... யெதிர்சீறி
எத்தி சையினுமொரு காம ராஜன்மிக
வெற்றி யரசுதனை யாள வீசியட
லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி ... மடமாதர்
வித்தை தனிலுருகி யாசை யாகியவர்
கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரை
மெத்தை தனிலுருகி மோக மாகிவிட ... அதன்மேலே
வெட்க மிலைநடவு மேகு மேகுமினி
மற்ற வரையழையு மாத ரேயெனமுன்
விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெட ... அருள்வாயே
ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல்
அத்தி நகரமர சான வாள்நிருபன்
ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெல ... நிலைகூற
உ ற்ற தருமனடல் வீமன் வேல்விசையன்
வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும்
ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி... லசுரேசன்
பத்து முடிகள்துக ளாக வாகுஇரு
பத்து மொருகணையில் வீழ நேரவுணர்
பட்டு மடியஅமர் மோது காளமுகில் ... மருகோனே
பச்சை மயிலில்வரு வீர வேல்முருக
துட்ட நிருதர்குல கால வானவர்கள்
பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதவு ... பெருமாளே.
பாடல் 1145 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்த தந்தன தந்தன தந்தன
தத்த தந்தன தந்தன தந்தன
தத்த தந்தன தந்தன தந்தன ... தந்ததான
ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திட
வெற்பெ னுங்கன கொங்கைகு ழைந்திட
உ ற்ப லங்கள்சி வந்துக விந்திட .... ; ந்த்ரகோபம்
ஒத்த தொண்டைது வண்டமு தந்தர
மெச்சு தும்பிக ருங்குயில் மென்புற
வொக்க மென்தொனி வந்துபி றந்திட ... அன்புகூர
மிக்க சந்திர னொன்றுநி லங்களில்
விக்ர மஞ்செய்தி லங்குந கம்பட
மெத்த மென்பொரு ளன்பள வுந்துவ ... ளின்பமாதர்
வித்த கந்தரு விந்துத புங்குழி
பட்ட ழிந்துந லங்குகு ரம்பையை
விட்ட கன்றுநி னம்புய மென்பத ... மென்றுசேர்வேன்
மைக்க ருங்கட லன்றெரிமண்டிட
மெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிட
மற்று நன்பதி குன்றிய ழிந்திட ... வும்பர்நாடன்
வச்சி ரங்கைய ணிந்துப தம்பெற
மெச்சு குஞ்சரிகொங்கைபு யம்பெற
மத்த வெஞ்சின வஞ்சகர் தங்களை ... நுங்கும்வேலா
குக்கு டங்கொடி கொண்டப ரம்பர
சக்ர மண்டல மெண்டிசை யம்புகழ்
கொட்க கொன்றைய ணிந்தசி ரஞ்சர ... ணங்கிகாரா
கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கிய
மிக்க வங்கண கங்கண திண்புய
கொற்ற வங்குற மங்கைவி ரும்பிய ... தம்பிரானே.
பாடல் 1146 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தான தத்தன தானன தானன
தான தத்தன தானன தானன
தான தத்தன தானன தானன ... தனதான
ஓது வித்தவர் கூலிகொ டாதவர்
மாத வர்க்கதி பாதக மானவர்
ஊச லிற்கன லாயெரிகாளையர் ... மறையோர்கள்
ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்
ஆர்த னக்குமு தாசின தாரிகள்
ஓடி யுத்தம ரூதிய நாடின ... ரிரவோருக்
கேது மித்தனை தானமி டாதவர்
பூத லத்தினி லோரம தானவர்
ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை ... யிகழ்வோர்கள்
ஏக சித்ததி யானமி லாதவர்
மோக முற்றிடு போகித மூறினர்
ஈன ரித்தனை பேர்களு மேழ்நர ... குழல்வாரே
தாத தத்தத தாதத தாதத
தூது துத்துது தூதுது தூதுது
சாச சச்சச சாசச சாசச ... சசசாச
தாட டட்டட டாடட டாடட
டூடு டுட்டுடு டூடுடு டூடுடு
தாடி டிட்டிடி டீடிடி டீடிடி ... டிடிடீடீ
தீதி தித்திதி தீதிதி தீதிதி
தோதி குத்திகு தோதிகு தோதிகு
சேகு செக்குகு சேகுகு சேகுகு ... செகுசேகு
சேயெ னப்பல ராடிட மாகலை
ஆயு முத்தமர் கூறிடும் வாசக
சேகு சித்திர மாக நிணாடிய ... பெருமாளே.
பாடல் 1147 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ...; தாளம் -
தானன தத்தன தத்த தத்தன
தானன தத்தன தத்த தத்தன
தானன தத்தன தத்த தத்தன ... தந்ததான
ஓலைத ரித்தகு ழைக்கு மப்புற
மோடிநி றத்தும தர்த்து நெய்த்தற
லோதிநி ழற்குள ளிக்கு லத்துட ... னொன்றிஞானம்
ஓதிமி குத்தத வத்த வர்க்கிட
ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி
யூடுவி டத்தையி ருத்தி வைத்தக ... ணம்பினாலே
மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள்
வாசமு லைக்குள கப்ப டுத்தியில்
வாவென முற்றிந டத்தி யுட்புகு ... மந்தமாதர்
மாயம யக்கையொ ழித்து மெத்தென
வானவ ருக்கரு ளுற்ற அக்ஷர
வாய்மையெ னக்குமி னித்த ளித்தருள் ... தந்திடாதோ
வேலைய டைக்க அரிக்கு லத்தொடு
வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில்
வேகமொ டப்பும லைக்கு லத்தைந ... ளன்கைமேலே
வீசஅ வற்றினை யொப்ப மிட்டணை
மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட
வீடண னுக்கருள் வைத்த வற்றமை ... யன்கள்மாளக்
காலயி லக்கணை தொட்ட ருட்கன
மாலமை திக்கரை யிற்ற ரித்துல
காளஅ ளித்தப்ர புத்வ ருட்கடல் ... தந்தகாமன்
காயமொ ழித்தவர் பெற்ற கொற்றவ
நானில வித்ததி னைப்பு னத்தொரு
காதல்மி குத்துமி கப்ர மித்தருள் ... தம்பிரானே.
பாடல் 1148 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனன தந்தனந் தனன தந்தன
தனன தந்தனந் தனன தந்தன
தனன தந்தனந் தனன தந்தன ... தனதான
கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு
குழையை யுந்துரந் தரிப ரந்தொளிர்
கரிய கண்துறந் தவர்நி றந்தொளை ... படவோடக்
கலைநெ கிழ்ந்திருங் குழல்ச ரிந்திட
முலைசு மந்தசைந் திடையொ சிந்துயிர்
கவர இங்கிதங் கெறுவி தம்பெற ... விளையாடும்
படைம தன்பெருங் கிளைதி ருந்திய
அதர கிஞ்சுகந் தனையு ணர்ந்தணி
பணிநி தம்பஇன் பசுக முந்தர ... முதிர்காம
பரவ சந்தணிந் துனையு ணர்ந்தொரு
மவுன பஞ்சரம் பயில்த ருஞ்சுக
பதம டைந்திருந் தருள்பொ ருந்தும ... தொருநாளே
வடநெ டுஞ்சிலம் புகள்பு லம்பிட
மகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திட
வருபு ரந்தரன் தனபு ரம்பெற ... முதுகோப
மகர வெங்கருங் கடலொ டுங்கிட
நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற
வனச னின்றழும் படிநெ ருங்கிய ... வொருசூதம்
அடியொ டும்பிடுங் கியத டங்கர
வடிவ அஞ்சுரும் புறவி ரும்பிய
அடவி யுந்தொழும் பொடுதொ ழும்படி ... யநுராக
அவச மும்புனைந் தறமு னைந்தெழு
பருவ தஞ்சிறந் தகன தந்தியின்
அமுத மென்குயங் களின்மு யங்கிய ... பெருமாளே.
பாடல் 1149 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தனதன தத்தாத் தானன
தனதன தனதன தத்தாத் தானன
தனதன தனதன தத்தாத் தானன ... தந்ததான
கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள்
பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி
கருவற இருவினை கெட்டாற் காண்வரு ... மென்றஏகங்
கருகிய வினைமன துட்டாக் காதது
சுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வது
கசடற முழுதையும் விட்டாற் சேர்வது ... ணர்ந்திடாதே
விதமது கரமுரல் மொட்டாற் சாடிய
ரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன்
வினைபுரிபவரிடு முற்றாச் சாலிரு ... புண்டாணக
ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக
நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக
விரகுடை விழிவலை பட்டாற் றாதுந ... லங்கலாமோ
பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக
சுருதிக ளடிதொழ எட்டாத் தேசிக
பருகென வனமுலை கிட்டாத் தாரகை ... தந்துநாளும்
பரிவுற வெகுமுக நெட்டாற் றுடொரு
படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை
படர்வன பரிமள முட்டாட் டாமரை ... தங்கிவாழுஞ்
சததள அமளியை விட்டாற் றேறிய
சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு
தமனிய குலகிரிபொட்டாய்த் தூளெழ ... வென்றகோவே
தழைதரு குழைதரு பட்டாட் சாலவு
மழகிய கலவிதெ விட்டாக் காதலி
தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள் ... தம்பிரானே.
பாடல் 1150 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ...; தாளம் -
தனதன தனதன தானன தானந்
தனத் தனந்தன தனன தான தனதன
தானான தான தனனந் தானந்
தனன தாத்தன தானத் தானத் தானத் ... தாத்தன தனதான
கலவியி னலமுரை யாமட வார்சந்
தனத் தனங்களில் வசம தாகி யவரவர்
பாதாதி கேச மளவும் பாடுங்
கவிஞ னாய்த்திரிவேனைக் காமக் ரோதத் ... தூர்த்தனை யபராதக்
கபடனை வெகுபரிதாபனை நாளும்
ப்ரமிக்கு நெஞ்சனை உ ருவ மாறி முறை முறை
ஆசார வீன சமயந் தோறுங்
களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச் ... சாத்திர நெறிபோயைம்
புலன்வழி யொழுகிய மோகனை மூகந்
தனிற் பிறந் தொரு நொடியின் மீள அழிதரு
மாதேச வாழ்வை நிலையென் றேயம்
புவியின் மேற்பசு பாசத் தேபட் டேனைப் ... பூக்கழ லிணைசேரப்
பொறியிலி தனையதி பாவியை நீடுங்
குணத் ரயங்களும் வரும நேக வினைகளு
மாயா விகார முழுதுஞ் சாடும்
பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக் ... காப்பது மொருநாளே
குலகிரிதருமபி ராம மயூரம்
ப்ரியப் படும்படி குவளை வாச மலர்கொடு
வாரா வுலாவி யுணரும் யோகங்
குலைய வீக்கிய வேளைக் கோபித் தேறப் ... பார்த்தரு ளியபார்வைக்
குரிசிலு மொருசுரர் பூசுர னோமென்
றதற் கநந்தர மிரணி யாய நமவென
நாராய ணாய நமவென் றோதுங்
குதலை வாய்ச்சிறி யோனுக் காகத் தூணிற் ... றோற்றிய வசபாணிப்
பலநக நுதியி னிசாசர னாகங்
கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல்
தோண்மாலை யாக அணியுங் கோவும்
பரவி வாழ்த்திட வேகற்றாரச் சோதிப் ... பாற்பணி யிறைவாகைப்
படமுக வடலயி ராபத மேறும்
ப்ரபுப் பயங்கெட வடப ராரை வரைகெட
வேலேவி வாவி மகரஞ் சீறும்
பரவை கூப்பிட மோதிச் சூர்கெட் டோ டத் ... தாக்கிய பெருமாளே.
பாடல் 1151 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனத்த தானன தானான தந்தன
தனத்த தானன தானான தந்தன
தனத்த தானன தானான தந்தன ... தந்ததான
கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை
சிவத்து நீடிய வாய்மீன வொண்குழை
கடக்க வோடிய ஆலால நஞ்சன ... வஞ்சநீடு
கயற்க ணார்கனி வாயூற லுண்டணி
கழுத்து மாகமு மேகீப வங்கொடு
கலக்க மார்பக பாடீர குங்கும ... கொங்கைமீதே
உ றுத்து மாரமு மோகாவ டங்களு
மருத்து நேரிய கூர்வாள்ந கம்பட
உ டுத்த ஆடையும் வேறாயு ழன்றுக ... ழன்றுவீழ
உ ருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை
செருக்கு மோகன வாராத ரங்களை
யொழிக்க வோர்வகை காணேனு றுந்துணை ... யொன்றுகாணேன்
நிறத்த நூபுர பாதார விந்தமு
முடுத்த பீலியும் வாரார்த னங்களும்
நிறத்தி லேபடு வேலான கண்களும் ... வண்டுபாட
நெறித்த வோதியு மாயான்ம னம்பர
தவிக்க மால்தர லாமோ கலந்திட
நினைக்க லாமென வேல்வேடர் கொம்புட ... னண்புகூர்வாய்
மறித்த வாரிதி கோகோவெ னும்படி
வெறுத்த ராவணன் வாணாளை யம்பினில்
வதைத்த மாமனு மேவார்பு ரங்கனல் ... மண்டமேரு
வளைத்த தாதையு மாறான குன்றமு
மனைத்து லோகமும் வேதாக மங்களும்
மதித்த சேவக வானாளு மும்பர்கள் ... தம்பிரானே.
பாடல் 1152 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ...; தாளம் -
தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன ... தனதான
குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்குமிரு
குழைக்கும்வடு விழிக்குமெழு ... குமிழாலுங்
கொடிப்பவள இதழ்க்குமிகு சுடர்த்தரள நகைக்குமமு
தினுக்குமிக வுறத்தழுவு ... குறியாலும்
அறப்பெரிய தனக்குமன நடைக்குமினி னிடைக்குமல
ரடிக்குமிள நகைக்குமுள ... மயராதே
அகத்தியனொ டுரைத்தபொரு ளளித்தருளி அரிப்பிரமர்
அளப்பரிய பதக்கமல ... மருள்வாயே
கறுத்தடரு மரக்கரணி கருக்குலைய நெருக்கியொரு
கணத்திலவர் நிணத்தகுடல் ... கதிர்வேலாற்
கறுத்தருளி யலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமை
யளித்திடரை யறுத்தருளு ... மயில்வீரா
செறுத்துவரு கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரி
சினத்தினொடு பறித்தமர்செய் ... பெருகானிற்
செலக்கருதி யறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனது
சிமிழ்த்தனமு னுறத்தழுவு ... பெருமாளே.
பாடல் 1153 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனன தனதான தானான தானான
தனதனன தனதான தானான தானான
தனதனன தனதான தானான தானான ... தனதான
குனகியொரு மயில்போல வாராம னோலீலை
விளையவினை நினையாம லேயேகி மீளாத
கொடியமன தநியாய மாபாத காபோதி ... யெனஆசைக்
கொளுவ அதில் மயலாகி வீறொடு போய்நீள
மலரமளி தனிலேறி யாமாறு போமாறு
குலவிநல மொழிகூறி வாரேறு பூணார ... முநல்முழ்கி
மனமுருக மதராஜ கோலாடு மாபூசல்
விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள
மதிவதன மொளிவீச நீராள மாய்மேவி ... யநுராக
வகைவகையி லதிமோக வாராழி யூடான
பொருளளவ தளவாக யாரோடு மாலான
வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற ... அருள்வாயே
எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி
லெனவிரகு குலையாத மாதாவு நேரோத
இசையுமொழி தவறாம லேயேகி மாமாது ... மிளையோனும்
இனிமையொடு வருமாய மாணச மானாவி
குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள
இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி ... யுயிர்சீறி
அநுமனொடு கவிகூட வாராக நீராழி
யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி
அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப ... நிருதேசன்
அருணமணி திகழ்பார வீராக ராமோலி
யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி
அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் ... பெருமாளே.
பாடல் 1154 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தனனத் தனனத், தனதன தனனத் தனனத்
தனதன தனனத் தனனத் ... தனதான
கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக்
கொடியிடை துவளத் துவளத் ... தனபாரக்
குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக்
குயில்மொழி பதறப் பதறப் ... ப்ரியமோகக்
கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகிக்
கரமொடு தழுவித் தழுவிச் ... சிலநாளிற்
கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும் விடுசிச் சியெனக்
கடியொரு செயலுற் றுலகிற் ... றிரிவேனோ
சலநிதி சுவறச் சவறத் திசைநிலை பெயரப் பெயரத்
தடவரை பிதிரப் பிதிரத் ... திடமேருத்
தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச்
சமனுடல் கிழியக் கிழியப் ... பொருசூரன்
பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப்
பிறநரிதொடரத் தொடரத் ... திரள்கூகை
பெடையொடு குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப்
ப்ரபையயில் தொடுநற் குமரப் ... பெருமாளே.
பாடல் 1155 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானனா தனன தத்த, தானனா தனன தத்த
தானனா தனன தத்த ... தனதான
கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்
கோதுசே ரிழிகு லத்தர் ... குலமேன்மை
கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர
கோவுநா னென இசைப்பர் ... மிடியூடே
ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்
ஆசுசேர் கலியு கத்தி ... னெறியீதே
ஆயுநூ லறிவு கெட்ட நானும் வேறல அதற்கு
ளாகையா லவைய டக்க ... வுரையீதே
ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர
ஈசன்மேல் வெயிலெ றிக்க ... மதிவேணி
ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்
ஏறியே யினிதி ருக்க ... வருவோனே
வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து
வேதனா ரையும் விடுத்து ... முடிசூடி
வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த
வீறுசேர் சிலை யெடுத்த ... பெருமாளே.
பாடல் 1156 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தந்தனந் தனந்த தந்த, தந்தனந் தனந்த தந்த
தந்தனந் தனந்த தந்த ... தனதான
சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை
சந்திரந் ததும்ப சைந்து ... தெருவூடே
சங்கினங் குலங்க செங்கை யெங்கிலும் பணிந்து டம்பு
சந்தனந் துவண்ட சைந்து ... வருமாபோல்
கொந்தளங் குலுங்க வண்சி லம்புபொங்க இன்சு கங்கள்
கொஞ்சிபொன் தொடர்ந்தி டும்பொன் ... மடவார்தோள்
கொங்கைபைங் கரம் புணர்ந்த ழிந்துணங் கலுந்த விர்ந்து
கொஞ்சுநின் சரண்க ளண்ட ... அருள்தாராய்
தந்தனந் தசெஞ்சி லம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச
தண்டையம்ப தம்பு லம்ப ... வருவோனே
சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்க
சண்பகம் புனங்கு றம்பொன் ... அணைமார்பா
வந்தநஞ் சுகந் தமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி
மந்தரம் பொதிந்த கொங்கை ... யுமையீனும்
மைந்தனென் றுகந்து விஞ்சு மன்பணிந் தசிந்தை யன்பர்
மங்கலின் றுளம்பு குந்த ... பெருமாளே.
பாடல் 1157 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - குந்தலவராளி
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2
தனன தனதனன தான தானன
தனதனன தான தானன
தனன தனதனன தான தானன தந்ததான
சுருதி வெகுமுகபு ராண கோடிகள்
சரியை கிரியைமக யோக மோகிகள்
துரித பரசமய பேத வாதிகள் ... என்றுமோடித்
தொடர வுணரஅரிதாய தூரிய
பொருளை யணுகியநு போக மானவை
தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய ... நின்ப்ரகாசங்
கருதி யுருகியவி ரோதி யாயருள்
பெருகு பரமசுக மாம கோததி
கருணை யடியரொடு கூடியாடிம ... கிழ்ந்துநீபக்
கனக மணிவயிர நூபு ராரிய
கிரண சரண அபி ராம கோமள
கமல யுகளமற வாது பாடநி ... னைந்திடாதோ
மருது நெறுநெறென மோதி வேரோடு
கருது மலகைமுலை கோதி வீதியில்
மதுகை யொடுதறுக ணானை வீரிட ... வென்றுதாளால்
வலிய சகடிலறி மாய மாய்மடி
படிய நடைபழகி யாயர் பாடியில்
வளரு முகில்மருக வேல்வி நோதசி ... கண்டிவீரா
விருதர் நிருதர்குல சேனை சாடிய
விஜய கடதடக போல வாரண
விபுதை புளகதன பார பூஷண ... அங்கிராத
விமலை நகிலருண வாகு பூதர
விபுத கடககிரிமேரு பூதர
விகட சமரசத கோடி வானவர் ... தம்பிரானே.
பாடல் 1158 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தத் தனதன தத்தன தனதன
தத்தத் தனதன தத்தன தனதன
தத்தத் தனதன தத்தன தனதன ... தனதானத்
சுற்றத் தவர்களு மக்களு மிதமுள
சொற்குற் றரிவையும் விட்டது சலமிது
சுத்தச் சலமினி சற்றிது கிடைபடு ... மெனமாழ்கித்
துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல்
சுட்டக் குடமொடு சுட்டெரிகனலொடு
தொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை ... பிண்முடச்
சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல்
சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது
தப்பிற் றவறுறு மத்திப நடையென ... உ ரையாடிச்
சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசை
தப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழி
தத்தச் சடம்விடு மப்பொழு திருசர ... ணருள்வாயே
சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல்
சித்ரப் ப்ரபைபுனை பொற்பின ளிளமயில்
செற்கட் சிவகதி யுத்தமி களிதர ... முதுபேய்கள்
திக்குச் செககெண தித்தரிதிகுதிகு
செச்செச் செணக்ருத டொட்டரிசெணக்ருத
டெட்டெட் டுடுடுடு தத்தரிதரியென ... நடமாடுங்
கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள்
குட்டிக் கரிமுக னிக்கவ லமுதுசெய்
கொச்சைக் கணபதி முக்கண னிளையவ ... களமீதே
குப்புற் றுடனெழு சச்சரிமுழவியல்
கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர்
கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்த ... பெருமாளே.
பாடல் 1159 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன
தந்த தத்தன தானாதன ... தனதான
செங்கை னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள்
தெண்டெ னத்துணை தாள்மேல்விழ ... அமராடிச்
சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரியத்தினி லோடாசில
திண்டி றற்றவ வாள்வீரரொ ... டிகலாநின்
றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன
மந்தி பட்டிருள் மூடாவகை ... யவிரோத
அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந
லன்பு வைத்தரு ளாமோர்கழ ... லருளாதோ
கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி
கும்பி டத்தகு பாகீரதி ... மதிமீது
கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர
குண்ட லத்தர்பி னாகாயுத ... ருடனேயச்
சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர்
தங்க ளைச்சிறை மீளாயென ... அசுரேசன்
தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர
சண்ட விக்ரம வேலேவிய ... பெருமாளே.
பாடல் 1160 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத் தானதனத் ... தனதான
சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித்
தூறுசிவப் பேறுவிழிக் ... கணையாலே
தேனிரதத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத்
தேறலெனக் கூறுமொழிச் ... செயலாலே
ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத்
தாலுமிதத் தாலும்வளைப் ... பிடுவோர்மேல்
ஆசையினைத் தூரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற்
றாளிணையைச் சேரஎனக் ... கருள்வாயே
காலனைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட் டேமதனைக்
காயஎரித் தேவிதியிற் ... றலையூடே
காசியினிற் காணஇரப் போர்மதியைச் சூடியெருத்
தேறிவகித் தூருதிரைக் ... கடல்மீதில்
ஆலமிடற் றானையுரித் தோலையுடுத் தீமமதுற்
றாடியிடத் தேயுமைபெற் ... றருள்வாழ்வே
ஆழியினைச் சூரனைவெற் பேழினையுற் றேயயில்விட்
டாதுலருக் காறுமுகப் ... பெருமாளே.
பாடல் 1161 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன ... தனதான
சொக்குப்பொட் டெத்திக் கைப்பொரு
ளைக்கெத்திற் பற்றிச் சிக்கொடு
சுற்றுப்பட் டெற்றித் தெட்டிகள் ... முலைமீதே
சுற்றுப்பொற் பட்டுக் கச்சினர்
முற்றிக்குத் தத்தைக் கொப்பென
சொற்பித்துக் கற்பிற் செப்பிய ... துயராலே
சிக்குப்பட் டுட்கிப் பற்கொடு
வெற்றிக்கைக் குத்துப் பட்டிதழ்
தித்திப்பிற் கொத்துப் பித்துயர் ... கொடுநாயேன்
திக்குக்கெட் டொட்டுச் சிட்டென
பட்டத்துற புத்திக் கட்டற
செப்பத்துற் பற்றற் கற்புத ... மருள்வாயே
தக்குத்தக் குக்குக் குக்குட
தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென
தக்குத்திக் கெட்டுப் பொட்டெழ ... விருதோதை
தத்தித்தித் தித்தித் தித்தென
தெற்றுத்துட் டக்கட் டர்ப்படை
சத்திக்கொற் றத்திற் குத்திய ... முருகோனே
துக்கித்திட் டத்தித் துக்கக
நெக்குப்பட டெக்கித் துட்டறு
சுத்தப்பொற் பத்தர்க் குப்பொரு ... ளருள்வேலா
துற்றப்பொற் பச்சைக் கட்கல
பச்சித்ரப் பக்ஷிக் கொற்றவ
சொக்கர்க்கர்த் தத்தைச் சுட்டிய ... பெருமாளே.
பாடல் 1162 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானான தானன தானன தானன
தானான தானன தானன தானன
தானான தானன தானன தானன ... தனதான
ஞானாவி பூஷணி காரணி காரணி
காமாவி மோகினி வாகினி யாமளை
மாமாயி பார்வதி தேவிகு ணாதரி... உ மையாள்தன்
நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக
வேதாக மேயருள் தேவர்கள் தேவந
லீசாச டாபர மேசர்சர் வேசுரி... முருகோனே
தேனார்மொ ழீவளி நாயகி நாயக
வானாடு ளோர்தொழு மாமயில் வாகன
சேணாளு மானின்ம னோகர மாகிய ... மணவாளா
சீர்பாத சேகர னாகவு நாயினன்
மோகாவி காரவி டாய்கெட ஓடவெ
சீராக வேகலை யாலுனை ஓதவும் ... அருள்வாயே
பேணார்கள் நீறதி டாஅம ணோர்களை
சூராடி யேகழு மீதினி லேறிட
கூனான மீனனி டேறிட கூடலில் ... வருவோனே
பேராண்மை யாளனி சாசரர் கோனிரு
கூறாக வாளிதொ டூரகு நாயகன்
பூவாய னாரணன் மாயனி ராகவன் ... மருகோனே
வாணாள்ப டாவரு சூரர்கள் மாளவெ
சேணாடு ளோரவர் வீடதி டேறிட
கோனாக வேவரு நாதகு ரூபர ... குமரேசா
வாசாம கோசர மாகிய வாசக
தேசாதி யோரவர் பாதம தேதொழ
பாசாவி நாசக னாகவு மேவிய ... பெருமாளே.
பாடல் 1163 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - அமிர்தவர்ஷணி
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35)
(எடுப்பு - /4/4/4 0)
நடை - தகதகிட
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ... தனதான
தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந்
துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின்
தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் ... பதுவாயுந்
தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும்
பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன்
தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் ... வசமாகித்
திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின்
கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன்
சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் ... அயர்வாகிச்
செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன்
சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ்
செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் ... கழல்தாராய்
செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங்
கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந்
திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் ... மகிழ்வாகிச்
சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன்
டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்
டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந் ... தவமோதச்
சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ்
சிறைவைட வருமுருக என்றுவந் திந்திரன்
சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங் ... கதிர்வேலா
சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந்
தெரிவரிய முடியினர வங்ளுந் திங்களுஞ்
சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும் ... பெருமாளே.
பாடல் 1164 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத்
தனந்தத்தத் தனந்தத்தத் ... தனதான
தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற்
சதங்கைக்கற் சிலம்பொத்திக் ... கையில்வீணை
ததும்பக்கைக் குழந்தைச்சொற் பரிந்தற்புக் கிதங்கப்பொற்
சரஞ்சுற்றிட் டிணங்கக்கட் ... சரவேலால்
தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத்
தினந்தெட்டிக் கடன்பற்றிக் ... கொளுமாதர்
சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச்
சிவம்பெற்றுத் தவம்பற்றக் ... கழல்தாராய்
தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட்
டடண்டட்டட் டிமிண்டுட்டுட் ... டியல்தாளந்
தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயர்ந்துக்கத்
தகண்டத்தர்க் குடன்பட்டுற் ... றசுராரைச்
சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச்
சிரந்தத்தப் பிளந்துட்கக் ... கிரிதூளாச்
செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச்
செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப் ... பெருமாளே.
பாடல் 1165 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனனதன தான தான தனனதன தான தான
தனனதன தான தான ... தனதான
நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு
நடுசிகர மாகி வாய்வ ... கரமாகி
நதிமுடிய சார மாகி உ தயதிரு மேனி யாகி
நவசிவய மாமை யாகி ... எழுதான
அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன்
அறிவிலறி வான பூர ... ணமுமாகும்
அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி
மருவுமவ தான போதம் ... அருள்வாயே
குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி
குறையகல வேலை மீது ... தனியூருங்
குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு
குலவுதிரை சேரு மாது ... தனைநாடி
அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி
அரியமண மேசெய் தேக ... வலைதேடி
அறுமுகவன் மீக ரான பிறவியம ராசை வீசும்
அசபைசெகர் சோதி நாத ... பெருமாளே.
பாடல் 1166 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - நாதநாமக்ரியா
தாளம் - அங்கதாளம் (7 1/2)
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த ... தனதான
நரையொடு பற்க ழன்று தோல்வற்றி
நடையற மெத்த நொந்து காலெய்த்து
நயனமி ருட்டி நின்று கோலுற்று ... நடைதோயா
நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து
நமதென மெத்த வந்த வாழ்வுற்று
நடலைப டுத்து மிந்த மாயத்தை ... நகையாதே
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற
ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு
மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் ... வினையோடு
மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு
மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன்
விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு ... வினவாதோ
உ ரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு
மொளிபெற நற்ப தங்கள் போதித்து
மொருபுடை பச்சை நங்கை யோடுற்று ... முலகூடே
உ றுபலி பிச்சை கொண்டு போயுற்று
முவரிவி டத்தை யுண்டு சாதித்து
முலவிய முப்பு ரங்கள் வேவித்து ... முறநாகம்
அரையொடு கட்டி யந்த மாய்வைத்து
மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க
அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து ... மரவோடே
அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த
அரியய னித்தம் வந்து பூசிக்கும்
அரநிம லர்க்கு நன்றி போதித்த ... பெருமாளே.
பாடல் 1167 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - காபி
தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)
தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த
தனந்த தனனந் தனந்த ... தனதான
நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி
நிறைந்த வயிறுஞ் சரிந்து ... தடியூணி
நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு
நினைந்த மதியுங் கலங்கி ... மனையாள்கண்
டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து
உ றைந்த உ யிருங் கழன்று ... விடுநாள்முன்
உ கந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து
ஒடுங்கி நினையும் பணிந்து ... மகிழ்வேனோ
திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி
திரண்ட சதியும் புரிந்து ... முதுசூரன்
சிரங்கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்து
சினங்க ழுகொடும் பெருங்கு ... ருதமுழ்க
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட
அடர்ந்த அயில்முன் துரந்து ... பொருவேளே
அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி
அணங்கை மணமுன் புணர்ந்த ... பெருமாளே.
பாடல் 1168 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - மத்யமாவதி
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதமி-2
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன ... தனதான
நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய
நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய ... விறலான
நெடிய வேற்படை யானே ஜேஜெய
எனஇ ராப்பகல் தானே நான்மிக
நினது தாட்டொழு மாறே தானினி ... யுடனேதான்
தரையி னாழ்த்திரை யேழே போலெழு
பிறவி மாக்கட லுடே நானுறு
சவலை தீர்த்துன தாளே சூடியு ... னடியார்வாழ்
சபையி னேற்றியின் ஞானா போதமு
மருளி யாட்கொளு மாறே தானது
தமிய னேற்குமு னேநீ மேவுவ ... தொருநாளே
தருவி னாட்டர சாள்வான் வேணுவி
னுருவ மாய்ப்பல நாளே தானுறு
தவசி னாற்சிவ னீபோய் வானவர் ... சிறைதீரச்
சகல லோக்கிய மேதா னாளுறு
மசுர பார்த்திப னோடே சேயவர்
தமரை வேற்கொடு நீறா யேபட ... விழமோதென்
றருள ஏற்றம ரோடே போயவ
ருறையு மாக்கிரியோடே தானையு
மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ... ரடலாகி
அமரில் வீட்டியும் வானோர் தானுறு
சிறையை மீட்டர னார்பால் மேவிய
அதிப ராக்ரம வீரா வானவர் ... பெருமாளே.
பாடல் 1169 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - கேதாரம்
தாளம் - ஆதி - திஸ்ர நடை (2 களை) (24)
தான தான தான தந்த தான தான தான தந்த
தான தான தான தந்த ... தனதான
ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து
ஆழி வேலை போன்மு ழங்கி ... யடர்வார்கள்
ஆக மீதி லேசி வந்து ஊசி தானு மேநு ழைந்து
ஆலைமீதி லேக ரும்பு ... எனவேதான்
வீர மான சூரிகொண்டு நேரை நேரை யேபி ளந்து
வீசு வார்கள் கூகு வென்று ... அழுபோது
வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து
மேலை வீழ்வ ணது கண்டு ... வருவாயே
நாரிவீரிசூரியம்பை வேத வேத மேபு கழ்ந்த
நாதர் பாலி லேயி ருந்த ... மகமாயி
நாடி யோடி வாற அன்பர் காண வேண தேபு கழ்ந்து
நாளு நாளு மேபு கன்ற ... வரைமாது
நீரின் மீதி லேயி ருந்த நீலி சூலி வாழ்வு மைந்த
நீப மாலை யேபு னைந்த ... குமரேசா
நீல னாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட
நீத னான தோர்கு ழந்தை ... பெருமாளே.
பாடல் 1170 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - நவரஸ கண்டை
தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
தான தந்த தான தான தான தந்த தான தான
தான தந்த தான தான ... தனதான
நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு
நீளு மங்க மாகி மாய ... வுயருறி
நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி
நீதி யொன்று பால னாகி ... யழிவாய்வந்
தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத
ரோடு சிந்தை வேடை கூர ... உ றவாகி
ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச
ஊனு டம்பு மாயு மாய ... மொழியாதோ
சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது
தோகை யின்கண் மேவி வேலை ... விடும்வீரா
தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு
தோகை பங்க ரோடு சூது ... மொழிவோனே
பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள்
பாடல் கண்டு ஏகு மாலின் ... மருகோனே
பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல் வேத வாய்மை
பாடு மன்பர் வாழ்வ தான ... பெருமாளே.
பாடல் 1171 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதத்தத் தத்தத் தனதன
தனதத்தத் தத்தத் தனதன
தனதத்தத் தத்தத் தனதன ... தனதான
பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடு
நவரத்நப் பத்தித் தொடைநக
நுதிபட்டிட் டற்றுச் சிதறிட .... ; த்ழுறல்
பருகித்தித் திக்கப் படுமொழி
பதறக்கைப் பத்மத் தொளிவளை
வதறிச்சத் திக்கப் புளகித ... தனபாரம்
அகலத்திற் றைக்கப் பரிமள
அமளிக்குட் கிக்கிச் சிறுகென
இறுகக்கைப் பற்றித் தழுவிய ... அநுராக
அவசத்திற் சித்தத் தறிவையு
மிகவைத்துப் பொற்றித் தெரிவையர்
வசம்விட்டர்ச் சிக்கைக் கொருபொழு ... துணர்வேனோ
இகல்வெற்றிச் சத்திக் கிரணமு
முரணிர்த்தப் பச்சைப் புரவியு
மிரவிக்கைக் குக்டத் துவசமு ... மறமாதும்
இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு
கவிமெத்தச் செப்பிப் பழுதற
எழுதிக்கற் பித்துத் திரிபவர் ... பெருவாழ்வே
புகலிற்றர்க் கிட்டுப் ப்ரமையுறு
கலகச்செற் றச்சட் சமயிகள்
புகலற்குப் பற்றற் கரியதொ ... ருபதேசப்
பொருளைப்புட் பித்துக் குருபர
னெனமுக்கட் செக்கர்ச் சடைமதி
புனையப்பர்க் கொப்பித் தருளிய ... பெருமாளே.
பாடல் 1172 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ... தனதான
பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி
பட்டப்புள கச்செப் பிளமுலை
பட்டிட்டெதிர் கட்டுப் பரதவ ... ருயர்தாளப்
பத்மத்திய ரற்புக் கடுகடு
கட்சத்தியர் மெத்தத் திரவிய
பட்சத்திய ரிக்குச் சிலையுரு ... விலிசேருஞ்
சித்தத்தரு ணர்க்குக் கனியத
ரப்புத்தமு தத்தைத் தருமவர்
சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை ... நுதலார்தந்
தெட்டிற்படு கட்டக் கனவிய
பட்சத்தரு ளற்றுற் றுனதடி
சிக்கிட்டிடை புக்கிட் டலைவது ... தவிராதோ
மத்தப்பிர மத்தக் கயமுக
னைக்குத்திமி தித்துக் கழுதுகள்
மட்டிட்டஇ ரத்தக் குருதியில் ... விளையாட
மற்றைப் பதினெட்டுக் கணவகை
சத்திக்கந டிக்கப் பலபல
வர்க்கத்தலை தத்தப் பொருபடை ... யுடையோனே
முத்திப்பர மத்தைக் கருதிய
சித்தத்தினில் முற்றத் தவமுனி
முற்பட்டுழை பெற்றுத் தருகுற ... மகள்மேல்மால்
முற்றித்திரிவெற்றிக் குருபர
முற்பட்டமு ரட்டுப் புலவனை
முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு ... பெறுமாளே.
பாடல் 1173 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதனன தந்ததன தானத் தாத்தன
தனதனன தந்ததன தானத் தாத்தன
தனதனன தந்ததன தானத் தாத்தன ... தனதான
பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள்
அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள்
பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோ ட்டிகள் ... கொடிதாய
பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறி
தழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள்
பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர் ... ஒருகாம
விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில்
ம்ருகமதமி குந்தபனி நீரைத் தேக்கியெ
விபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றிய ... தமிழ்நூலின்
விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள்
முலைகளில்வி ழுந்துபரிதாபத் தாற்றினில்
விடியளவு நைந்துருகு வேனைக் காப்பது ... மொருநாளே
உ ரகபணை பந்தியபி ஷேகத் தாற்றிய
சகலவுல குந்தரும மோகப் பார்ப்பதி
யுடனுருவு பங்குடைய நாகக் காப்பனும் ... உ றிதாவும்
ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குல
மகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்ந்திடும்
உ ரலொடுத வழ்ந்தநவ நீதக் கூற்றனு ... மதிகோபக்
கரவிகட வெங்கடக போலப் போர்க்கிரி
கடவியபு ரந்தரனும் வேளைப் போற்றுகை
கருமமென வந்துதொழ வேதப் பாற்பதி ... பிறியாத
கடவுளைமு னிந்தமர ரூரைக் காத்துயர்
கரவடக்ர வுஞ்சகிரிசாயத் தோற்றெழு
கடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கிய ... பெருமாளே.
பாடல் 1174 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த
தனதன தானத் தனந்த ... தனதான
பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து
பலபல யோகத் திருந்து ... மதராசன்
பரிமள பாணத் தயர்ந்து பனைமட லுர்தற் கிசைந்து
பரிதவி யாமெத்த நொந்து ... மயல்கூர
அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி
யவர்விழி பாணத்து நெஞ்ச ... மறைபோய்நின்
றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றையுன்ற
னருள்வச மோஇப்ர மந்தெ ... ரிகிலேனே
எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை
யெனவொரு ஞானக் குருந்த ... ருளமேவும்
இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து
இரணியன் மார்பைப் பிளந்த ... தனியாண்மை
பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த
புளகப டீரக் குரும்பை ... யுடன்மேவும்
புயல்கரிவாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து
புனமிசை யோடிப் புகுந்த ... பெருமாளே.
பாடல் 1175 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ஹரிகாம்போதி
தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன
தானத்தத் தனான தானன ... தந்ததான
பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள்
பாஷிக்கத் தகாது பாதக ... பஞ்சபூத
பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை
பாவிக்கப் பெறாது வாதனை ... நெஞ்சமான
ஏணிக்கெட் லொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி
யேறிபபற் றொணாது நாடினர் ... தங்களாலும்
ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி
யேறச்செச் சைநாறு தாளைவ ... ணங்குவேனோ
ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன்
ஆபத்தைக் கெடாநி சாசரர் ... தம்ப்ரகாசம்
ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர
ஆழிச்சக் ரவாள மாள்தரும் ... எம்பிரானே
மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதைநூபுர
வாசப்பத் மபாத சேகர ... சம்புவேதா
வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல்
வாசிப்பித் ததேசி காசுரர் ... தம்பிரானே.
பாடல் 1176 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - ... ; தாளம் -
தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த ... தனதான
பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி
பாயலி லிருத்திக் காட்டி ... யநுராகம்
பாகிதழ் கொடுத்துக்காட்டி நூல்களை விரித்துக்காட்டி
பார்வைகள் புரட்டிக் காட்டி ... யுறவாகி
மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி
மேல்விழு நலத்தைக் காட்டு ... மடவார்பால்
மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு
மேன்மையை யெனக்குக் காட்டி ... யருள்வாயே
காலனை யுதைத்துக் காட்டி யாவியை வதைத்துக் காட்டி
காரணம் விளைத்துக்காட்டி ... யொருங்காலங்
கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி
காமனை யெரித்துக் காட்டி ... தருபாலா
மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில்
வாலிப மிளைத்துக்காட்டி ... அயர்வாகி
மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டு
வாழ்வுறு சமத்தைக்காட்டு ... பெருமாளே.
பாடல் 1177 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - மலய மாருதம்
தாளம் - அங்கதாளம் (7 1/2)
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன