அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
பாடல்கள் ( 331-670 )
பாடல் 331 அற்றைக் கற்றைக் கொப்பித் ( காஞ்சீபுரம் ) பாடல் 332 சுத்தச் சித்தத் ( காஞ்சீபுரம் ) பாடல் 333 கொக்குக் கொக்கத் தலையிற் ( காஞ்சீபுரம் ) பாடல் 334 தத்தித் தத்திச் ( காஞ்சீபுரம் ) பாடல் 335 பொக்குப்பைக் கத்தத் ( காஞ்சீபுரம் ) பாடல் 336 அயிலப்புக் கயலப்புத் ( காஞ்சீபுரம் ) பாடல் 337 கச்சிட் டணிமுலை ( காஞ்சீபுரம் ) பாடல் 338 கமலரு சோகம்பர ( காஞ்சீபுரம் ) பாடல் 339 கரும மானபி ( காஞ்சீபுரம் ) பாடல் 340 கலகலெ னப்பொற் ( காஞ்சீபுரம் ) பாடல் 341 கொத்தார் பற்கா ( காஞ்சீபுரம் ) பாடல் 342 கோவைச் சுத்தத் ( காஞ்சீபுரம் ) பாடல் 343 சீசி முப்புரக் ( காஞ்சீபுரம் ) பாடல் 344 நச்சரவ மென்று ( காஞ்சீபுரம் ) பாடல் 345 படிறொ ழுக்கமு ( காஞ்சீபுரம் ) பாடல் 346 மகுடக்கொப் பாடக் ( காஞ்சீபுரம் ) பாடல் 347 மக்கட்குக் கூறரி ( காஞ்சீபுரம் ) பாடல் 348 மயலோது மந்த ( காஞ்சீபுரம் ) பாடல் 349 முத்து ரத்ந ( காஞ்சீபுரம் ) பாடல் 350 வம்ப றாச்சில ( காஞ்சீபுரம் ) பாடல் 351 வாய்ந்தப்பிடை நீடு ( காஞ்சீபுரம் ) பாடல் 352 அறிவிலாப் பித்த ( காஞ்சீபுரம் ) பாடல் 353 அஞ்சன வேல்விழி ( திருவானைக்கா ) பாடல் 354 அம்புலி நீரைச் ( திருவானைக்கா ) பாடல் 355 அனித்த மான ( திருவானைக்கா ) பாடல் 356 ஆரமணி வாரைப் ( திருவானைக்கா ) பாடல் 357 ஆலம் வைத்தவி ( திருவானைக்கா ) பாடல் 358 உரைக்கா ரிகைப்பா ( திருவானைக்கா ) பாடல் 359 ஓல மறைக ( திருவானைக்கா ) பாடல் 360 கருமுகில்திர ளாகக் ( திருவானைக்கா ) பாடல் 361 காவிப் பூவை ( திருவானைக்கா ) பாடல் 362 குருதிபு லாலென்பு ( திருவானைக்கா ) பாடல் 363 நாடித் தேடித் ( திருவானைக்கா ) பாடல் 364 நிறைந்த துப்பிதழ் ( திருவானைக்கா ) பாடல் 365 பரிமள மிகவுள ( திருவானைக்கா ) பாடல் 366 வேலைப் போல்விழி ( திருவானைக்கா ) பாடல் 367 குமர குருபர ( திருவானைக்கா ) பாடல் 368 அருவ மிடையென ( திருவருணை ) பாடல் 369 கருணை சிறிதுமில் ( திருவருணை ) பாடல் 370 துகிலு ம்ருகமத ( திருவருணை ) பாடல் 371 மகர மெறிகடல் ( திருவருணை ) பாடல் 372 முகிலை யிகல்பொரு ( திருவருணை ) பாடல் 373 முருகு செறிகுழல் ( திருவருணை ) பாடல் 374 விடமு மமுதமு ( திருவருணை ) பாடல் 375 கமரி மலர்குழல் ( திருவருணை ) பாடல் 376 கயல்விழித் தேனெனைச் ( திருவருணை ) பாடல் 377 கறுவுமிக் காவியைக் ( திருவருணை ) பாடல் 378 பரியகைப் பாசம்விட் ( திருவருணை ) பாடல் 379 தருணமணி வானி ( திருவருணை ) பாடல் 380 முழுகிவட வாமு ( திருவருணை ) பாடல் 381 வடவையன லூடு ( திருவருணை ) பாடல் 382 ஆலவிழி நீலத் ( திருவருணை ) பாடல் 383 பேதகவி ரோதத் ( திருவருணை ) பாடல் 384 அமுத மூறுசோ ( திருவருணை ) பாடல் 385 உருகு மாமெழு ( திருவருணை ) பாடல் 386 கரியுரி அரவ ( திருவருணை ) பாடல் 387 கனைகடல் வயிறுகு ( திருவருணை ) பாடல் 388 இரவியு மதியுந் ( திருவருணை ) பாடல் 389 விரகொடு வளைசங் ( திருவருணை ) பாடல் 390 இடமடு சுறவை ( திருவருணை ) பாடல் 391 கெஜநடை மடவார் ( திருவருணை ) பாடல் 392 அருக்கார் நலத்தைத் ( திருவருணை ) பாடல் 393 அருமா மதனைப் ( திருவருணை ) பாடல் 394 அழுதுமா வாவெனத் ( திருவருணை ) பாடல் 395 ஆனைவரிக் கோடிளநிர்ப் ( திருவருணை ) பாடல் 396 இடருக் கிடராகிய ( திருவருணை ) பாடல் 397 இமராஜனி லாவதெ ( திருவருணை ) பாடல் 398 இரத சுரதமுலை களுமார்பு ( திருவருணை ) பாடல் 399 இரவுபகற் பலகாலும் ( திருவருணை ) பாடல் 400 இருவர் மயலோ ( திருவருணை ) பாடல் 401 இருவினை யஞ்ச ( திருவருணை ) பாடல் 402 இருவினை யூண்ப ( திருவருணை ) பாடல் 403 இருளளக மவிழமதி ( திருவருணை ) பாடல் 404 இறுகு மணிமுலை ( திருவருணை ) பாடல் 405 உலையிலன லொத்தா ( திருவருணை ) பாடல் 406 கடல்பரவு தரங்க ( திருவருணை ) பாடல் 407 கமலமுகப் பிறைநுதல்பொற் ( திருவருணை ) பாடல் 408 கமல மொட்டைக் ( திருவருணை ) பாடல் 409 கரிமுகக் கடகளிற் ( திருவருணை ) பாடல் 410 கருநி றஞ்சிறந் ( திருவருணை ) பாடல் 411 காணாத தூர ( திருவருணை ) பாடல் 412 காரா டக்குழ ( திருவருணை ) பாடல் 413 காருமரு வும்பெருகு ( திருவருணை ) பாடல் 414 கீத விநோத ( திருவருணை ) பாடல் 415 குரவநறு மளககுழல் ( திருவருணை ) பாடல் 416 குழவியு மாய்மோக ( திருவருணை ) பாடல் 417 கேதகைய பூமுடித்த ( திருவருணை ) பாடல் 418 கோடான மடவார்கள் ( திருவருணை ) பாடல் 419 கோடுசெறி மத்த ( திருவருணை ) பாடல் 420 சிலைநுதல் வைத்துச் ( திருவருணை ) பாடல் 421 சிவமா துடனே ( திருவருணை ) பாடல் 422 சினமுடுவல் நரிகழுகு ( திருவருணை ) பாடல் 423 சுக்கி லச்சுரொணி ( திருவருணை ) பாடல் 424 செஞ்சொற் பண்பெற் ( திருவருணை ) பாடல் 425 செயசெய அருணாத் ( திருவருணை ) பாடல் 426 தமர குரங்களுங் ( திருவருணை ) பாடல் 427 தமிழோதிய குயிலோமயி ( திருவருணை ) பாடல் 428 தலையை மழித்துச் ( திருவருணை ) பாடல் 429 திருட்டு வாணிப ( திருவருணை ) பாடல் 430 தேதென வாச ( திருவருணை ) பாடல் 431 தோத கப்பெ ( திருவருணை ) பாடல் 432 பாண மலரது ( திருவருணை ) பாடல் 433 பாலாய் நூலாய் ( திருவருணை ) பாடல் 434 பூணர்முலை மடந்தை ( திருவருணை ) பாடல் 435 புலைய னான ( திருவருணை ) பாடல் 436 போககற் பக்கடவுட் ( திருவருணை ) பாடல் 437 மானை விடத்தைத் ( திருவருணை ) பாடல் 438 முகத்து லக்கிக ( திருவருணை ) பாடல் 439 மேக மொத்தகுழ ( திருவருணை ) பாடல் 440 மொழிய நிறங்கறுத்து ( திருவருணை ) பாடல் 441 வலிவாத பித்தமொடு ( திருவருணை ) பாடல் 442 விடுமத வேள்வாளியின் ( திருவருணை ) பாடல் 443 விதிய தாகவெ ( திருவருணை ) பாடல் 444 விந்துப் புளகித ( திருவருணை ) பாடல் 445 வீறுபுழு கானபனி ( திருவருணை ) பாடல் 446 சரக்கே றித்தப் ( திருக்காளத்தி ) பாடல் 447 சிரத்தா னத்திற் ( திருக்காளத்தி ) பாடல் 448 பங்கய னார்பெற் ( திருக்காளத்தி ) பாடல் 449 கனகசபை மேவு ( சிதம்பரம் ) பாடல் 450 கைத்தருண சோதி ( சிதம்பரம் ) பாடல் 451 இருவினையின் மதிம ( சிதம்பரம் ) பாடல் 452 குகனெ குருபர ( சிதம்பரம் ) பாடல் 453 வண்டையொத் துக்கயல் ( சிதம்பரம் ) பாடல் 454 கங்கு லின்குழற் ( சிதம்பரம் ) பாடல் 455 கொந்த ளம்புழு ( சிதம்பரம் ) பாடல் 456 மந்தர மென்குவ ( சிதம்பரம் ) பாடல் 457 வந்து வந்துவித் ( சிதம்பரம் ) பாடல் 458 பணைத்துக்கொம் ( சிதம்பரம் ) பாடல் 459 சிரித்துச் சங்கொளி ( சிதம்பரம் ) பாடல் 460 தத்தையென் றொப்பிடுங் ( சிதம்பரம் ) பாடல் 461 தனத்தைக்கொண் ( சிதம்பரம் ) பாடல் 462 திருடிக ளிணக்கிச் ( சிதம்பரம் ) பாடல் 463 கொந்த ரங்குழ ( சிதம்பரம் ) பாடல் 464 கடந்தொந்தஞ் ( சிதம்பரம் ) பாடல் 465 பருவம் பணைத்தி ( சிதம்பரம் ) பாடல் 466 மதவெங் கரிக்கி ( சிதம்பரம் ) பாடல் 467 முகசந்திர புருவஞ்சிலை ( சிதம்பரம் ) பாடல் 468 சந்திர வோலைகு ( சிதம்பரம் ) பாடல் 469 காய மாய ( சிதம்பரம் ) பாடல் 470 அவகுண விரகனை ( சிதம்பரம் ) பாடல் 471 கட்டி முண்டகர ( சிதம்பரம் ) பாடல் 472 நஞ்சினைப் போலுமன ( சிதம்பரம் ) பாடல் 473 செங்கலச .. ( சிதம்பரம் ) பாடல் 474 கரிய மேக ( சிதம்பரம் ) பாடல் 475 கூந்த லாழவி ( சிதம்பரம் ) பாடல் 476 அத்த னன்னை ( சிதம்பரம் ) பாடல் 477 இருள்காட்டு செவ்வி ( சிதம்பரம் ) பாடல் 478 முல்லைமலர் போலுமுத் ( சிதம்பரம் ) பாடல் 479 அடப்பக் கம்பிடித்துத் ( சிதம்பரம் ) பாடல் 480 அக்குப் பீளைமு ( சிதம்பரம் ) பாடல் 481 ஆரத் தோடணி ( சிதம்பரம் ) பாடல் 482 காதைக் காதி ( சிதம்பரம் ) பாடல் 483 கொள்ளை யாசைக் ( சிதம்பரம் ) பாடல் 484 தாது மாமலர் ( சிதம்பரம் ) பாடல் 485 எலுப்புத் தோல்மயிர் ( சிதம்பரம் ) பாடல் 486 நீல மாமுகில் ( சிதம்பரம் ) பாடல் 487 வாத பித்தமொடு ( சிதம்பரம் ) பாடல் 488 சுரும்புற்ற பொழில்தோறும் ( சிதம்பரம் ) பாடல் 489 இணங்கித் தட்பொடு ( சிதம்பரம் ) பாடல் 490 விடுங்கைக் கொத்தக ( சிதம்பரம் ) பாடல் 491 கொந்தள வோலைக ( சிதம்பரம் ) பாடல் 492 நகையா லெத்திகள் ( சிதம்பரம் ) பாடல் 493 எழுகடல் மணலை ( சிதம்பரம் ) பாடல் 494 தறுகணன் மறலி ( சிதம்பரம் ) பாடல் 495 இரசபா கொத்தமொழி ( சிதம்பரம் ) பாடல் 496 இருளு மோர்கதி ( சிதம்பரம் ) பாடல் 497 காவி யுடுத்துந் ( சிதம்பரம் ) பாடல் 498 கோதிக் கோதிக் ( சிதம்பரம் ) பாடல் 499 சகசம்பக் குடைசூழ் ( சிதம்பரம் ) பாடல் 500 குளமகிழ்ந்துந் ( சிதம்பரம் ) பாடல் 501 சாந்துட னேபுழுகு ( சிதம்பரம் ) பாடல் 502 சுடரனைய திருமேனி ( சிதம்பரம் ) பாடல் 503 தத்தைமயில் போலுமியல் ( சிதம்பரம் ) பாடல் 504 துத்தி பொற்றன ( சிதம்பரம் ) பாடல் 505 நாடா பிறப்புமுடி ( சிதம்பரம் ) பாடல் 506 நாலுசது ரத்த ( சிதம்பரம் ) பாடல் 507 நீலக்குழ லார்முத்தணி ( சிதம்பரம் ) பாடல் 508 பனிபோ லத்துளி ( சிதம்பரம் ) பாடல் 509 மகரமொ டுறுகுழை ( சிதம்பரம் ) பாடல் 510 மச்ச மெச்சு ( சிதம்பரம் ) பாடல் 511 மதிய மண்குண ( சிதம்பரம் ) பாடல் 512 மருவு கடல்முகி ( சிதம்பரம் ) பாடல் 513 ( சிதம்பரம் ) பாடல் 514 முத்த மோகன ( சிதம்பரம் ) பாடல் 515 பரமகுரு நாத ( சிதம்பரம் ) பாடல் 516 வஞ்சமே கோடி ( சிதம்பரம் ) பாடல் 517 திருநில மருவிக் ( கயிலைமலை ) பாடல் 518 தேனுந்து முக்கனிகள் ( கயிலைமலை ) பாடல் 519 நகைத்து வுருக்கி ( கயிலைமலை ) பாடல் 520 பனியின் விந்துளி ( கயிலைமலை ) பாடல் 521 புகலியில்வித் ( கயிலைமலை ) பாடல் 522 முகத்தைப் பிலுக்கி ( கயிலைமலை ) பாடல் 523 ஒருபது மிருபது ( ஸ்ரீ சைலம் திருமலை ) பாடல் 524 கறுத்ததலை வெளிறு ( திருவேங்கடம் ) பாடல் 525 சரவண பவநிதி ( திருவேங்கடம் ) பாடல் 526 நெச்சுப் பிச்சிப் ( திருவேங்கடம் ) பாடல் 527 கோங்கிள நீரிளக ( திருவேங்கடம் ) பாடல் 528 சாந்தமில் மோகவெரி ( திருவேங்கடம் ) பாடல் 529 வரிசேர்ந்திடு சேல்கய ( திருவேங்கடம் ) பாடல் 530 அல்லிவிழி யாலு ( வள்ளிமலை ) பாடல் 531 ஐயுமுறு நோயு ( வள்ளிமலை ) பாடல் 532 கையொத்து வாழு ( வள்ளிமலை ) பாடல் 533 முல்லைக்கு மார ( வள்ளிமலை ) பாடல் 534 கள்ளக்கு வாற்பை ( வள்ளிமலை ) பாடல் 535 வெல்லிக்கு வீக்கு ( வள்ளிமலை ) பாடல் 536 ககனமு மநிலமு ( வள்ளிமலை ) பாடல் 537 அல்லசல டைந்த ( வள்ளிமலை ) பாடல் 538 குடிவாழ்க்கை யன்னை ( வள்ளிமலை ) பாடல் 539 சிரமங்க மங்கைகண் ( வள்ளிமலை ) பாடல் 540 வரைவில்பொய் மங்கையர் ( வள்ளிமலை ) பாடல் 541 அகத்தி னைக்கொண் ( திருக்கழுக்குன்றம் ) பாடல் 542 எழுகுநிறை நாபி ( திருக்கழுக்குன்றம் ) பாடல் 543 ஓல மிட்ட ( திருக்கழுக்குன்றம் ) பாடல் 544 வேத வெற்பி ( திருக்கழுக்குன்றம் ) பாடல் 545 நீலமயில் சேரு ( பேறைநகர் ) பாடல் 546 கொலைகொண்ட போர்விழி ( மயிலம் ) பாடல் 547 அங்கை நீட்டிய ( திருசிராப்பள்ளி ) பாடல் 548 அந்தோமன மேநம ( திருசிராப்பள்ளி ) பாடல் 549 அரிவையர் நெஞ்சுரு ( திருசிராப்பள்ளி ) பாடல் 550 அழுதழு தாசார ( திருசிராப்பள்ளி ) பாடல் 551 இளையவர் நெஞ்சத் ( திருசிராப்பள்ளி ) பாடல் 552 பகலவ னொக்குங் ( திருசிராப்பள்ளி ) பாடல் 553 ஒருவரொடு கண்கள் ( திருசிராப்பள்ளி ) பாடல் 554 குமுத வாய்க்கனி ( திருசிராப்பள்ளி ) பாடல் 555 குவளை பூசல்வி ( திருசிராப்பள்ளி ) பாடல் 556 சத்தி பாணீ ( திருசிராப்பள்ளி ) பாடல் 557 பகலிரவினிற் ( திருசிராப்பள்ளி ) பாடல் 558 புவனத் தொருபொற் ( திருசிராப்பள்ளி ) பாடல் 559 பொருளின் மேற்ப்ரிய ( திருசிராப்பள்ளி ) பாடல் 560 பொருள்கவர் சிந்தை ( திருசிராப்பள்ளி ) பாடல் 561 வாசித்துக் காணொ ( திருசிராப்பள்ளி ) பாடல் 562 வெருட்டி யாட்கொளும் ( திருசிராப்பள்ளி ) பாடல் 563 குடத்தைத் தகர்த்துக் ( திருக்கற்குடி ) பாடல் 564 நெறித்துப் பொருப்புக் ( திருக்கற்குடி ) பாடல் 565 கயலைச் சருவிப் ( இரத்னகிரி ) பாடல் 566 சுற்றகப டோ ( இரத்னகிரி ) பாடல் 567 பத்தியால் யானுனைப் ( இரத்னகிரி ) பாடல் 568 சீரான கோல ( விராலிமலை ) பாடல் 569 பாதாள மாதி ( விராலிமலை ) பாடல் 570 இலாபமில் பொலாவுரை ( விராலிமலை ) பாடல் 571 நிராமய புராதன ( விராலிமலை ) பாடல் 572 இதமுறு விரைபுனல் ( விராலிமலை ) பாடல் 573 உருவேற வேஜெ ( விராலிமலை ) பாடல் 574 எதிரெதிர்கண் டோ ( விராலிமலை ) பாடல் 575 ஐந்து பூதமு ( விராலிமலை ) பாடல் 576 கரதல முங்குறி ( விராலிமலை ) பாடல் 577 கரிபு ராரி ( விராலிமலை ) பாடல் 578 காமாத்திர மாகி ( விராலிமலை ) பாடல் 579 கொடாதவனை யேபு ( விராலிமலை ) பாடல் 580 மாயா செர்ருப ( விராலிமலை ) பாடல் 581 மாலாசை கோப ( விராலிமலை ) பாடல் 582 மேக மெனுங்குழல் ( விராலிமலை ) பாடல் 583 மோதி யிறுகிவட ( விராலிமலை ) பாடல் 584 சரவண ஜாதா ( விநாயகமலை - பிள்ளையார்பட்டி ) பாடல் 585 அன்பாக வந்து ( திருச்செங்கோடு ) பாடல் 586 பந்தாடி யங்கை ( திருச்செங்கோடு ) பாடல் 587 வண்டார் மதங்க ( திருச்செங்கோடு ) பாடல் 588 கரையற வுருகுதல் ( திருச்செங்கோடு ) பாடல் 589 இடம்பார்த் திடம்பார்த் ( திருச்செங்கோடு ) பாடல் 590 கலக்குங் கோதற ( திருச்செங்கோடு ) பாடல் 591 துஞ்சு கோட்டிச் ( திருச்செங்கோடு ) பாடல் 592 நீலமஞ் சானகுழல் ( திருச்செங்கோடு ) பாடல் 593 பொன்ற லைப்பொய்க் ( திருச்செங்கோடு ) பாடல் 594 மந்தக் கடைக்கண் ( திருச்செங்கோடு ) பாடல் 595 மெய்ச்சார் வற்றே ( திருச்செங்கோடு ) பாடல் 596 வருத்தங் காண ( திருச்செங்கோடு ) பாடல் 597 ஆல காலப ( திருச்செங்கோடு ) பாடல் 598 காலனிடத் .. ( திருச்செங்கோடு ) பாடல் 599 தாமா தாமா ( திருச்செங்கோடு ) பாடல் 600 அத்து கிரினலது ( திருச்செங்கோடு ) பாடல் 601 அத்த வேட்கைப் ( திருச்செங்கோடு ) பாடல் 602 பத்தர்க ணப்ரிய ( திருச்செங்கோடு ) பாடல் 603 புற்புதமெ னாம ( திருச்செங்கோடு ) பாடல் 604 பொற்சித்ரப் பச்சைப் ( திருச்செங்கோடு ) பாடல் 605 கொடிய மறலியு ( திருச்செங்கோடு ) பாடல் 606 கட்ட மன்னு ( கொல்லிமலை ) பாடல் 607 தொல்லைமுதல் தானொன்று ( கொல்லிமலை ) பாடல் 608 மாகசஞ் சாரமுகில் ( ராஜகெம்பீரவளநாட்டு மலை ) பாடல் 609 சூதுகொலை கார ( ஞானமலை ) பாடல் 610 மனையவள் நகைக்க ( ஞானமலை ) பாடல் 611 ஆதிமக மாயி ( ஊதிமலை ) பாடல் 612 கோதி முடித்துக் ( ஊதிமலை ) பாடல் 613 கருடன் மிசைவரு ( குருடிமலை ) பாடல் 614 எங்கேனு மொருவர்வர ( தென்சேரிகிரி ) பாடல் 615 கொண்டாடிக் கொஞ்சு ( தென்சேரிகிரி ) பாடல் 616 ஐங்கரனை யொத்தமன ( கொங்கணகிரி ) பாடல் 617 பாட்டி லுருகிலை ( தீர்த்தமலை ) பாடல் 618 அரிவையர்கள் தொடரு ( கநகமலை ) பாடல் 619 மருவுமலர் வாச ( புகழிமலை ) பாடல் 620 மாந்தளிர்கள் போல ( பூம்பறை ) பாடல் 621 அனங்க னம்பொன் ( கொடுங்குன்றம் ) பாடல் 622 எதிர்பொருது கவிகடின ( கொடுங்குன்றம் ) பாடல் 623 அழகெ றிந்த ( குன்றக்குடி ) பாடல் 624 ககுபநிலை குலையவிகல் ( குன்றக்குடி ) பாடல் 625 கடினதட கும்ப ( குன்றக்குடி ) பாடல் 626 நேசா சாரா ( குன்றக்குடி ) பாடல் 627 பிறர்புக ழின்சொற் ( குன்றக்குடி ) பாடல் 628 தவள மதிய ( குன்றக்குடி ) பாடல் 629 நாமேவு குயிலாலு ( குன்றக்குடி ) பாடல் 630 மைக்க ணிக்கன் ( பொதியமலை ) பாடல் 631 வெடித்த வார்குழல் ( பொதியமலை ) பாடல் 632 குதலை மொழியினார் ( கழுகுமலை ) பாடல் 633 முலையை மறைத்துத் ( கழுகுமலை ) பாடல் 634 கோங்க முநகுயு ( கழுகுமலை ) பாடல் 635 அல்லில் நேருமி ( வள்ளியூர் ) பாடல் 636 திருமக ளுலாவு ( கதிர்காமம் ) பாடல் 637 அலகின் மாறு ( கதிர்காமம் ) பாடல் 638 உடுக்கத் துகில்வேணு ( கதிர்காமம் ) பாடல் 639 எதிரி லாத ( கதிர்காமம் ) பாடல் 640 கடகட கருவிகள் ( கதிர்காமம் ) பாடல் 641 சமரமுக வேலொத்த ( கதிர்காமம் ) பாடல் 642 சரத்தே யுதித்தா ( கதிர்காமம் ) பாடல் 643 சரியையா ளர்க்குமக் ( கதிர்காமம் ) பாடல் 644 பாரவித முத்தப்ப ( கதிர்காமம் ) பாடல் 645 மருவறா வெற்றி ( கதிர்காமம் ) பாடல் 646 மாதர்வச மாயுற் ( கதிர்காமம் ) பாடல் 647 முதிரு மார ( கதிர்காமம் ) பாடல் 648 வருபவர்க ளோலை ( கதிர்காமம் ) பாடல் 649 தொடுத்த வாளென ( கதிர்காமம் ) பாடல் 650 விலைக்கு மேனியி ( திருக்கோணமலை ) பாடல் 651 தார ணிக்கதி ( காசி ) பாடல் 652 மங்கைக் கணவனும் ( காசி ) பாடல் 653 வேழ முண்ட ( காசி ) பாடல் 654 சிகர மருந்த ( மாயாபுரி ) பாடல் 655 அருவரை யெடுத்த ( வயிரவிவனம் ) பாடல் 656 அடலரி மகவு ( வெள்ளிகரம் ) பாடல் 657 சிகரிக ளிடிய ( வெள்ளிகரம் ) பாடல் 658 குவலய மல்கு ( வெள்ளிகரம் ) பாடல் 659 பொருவன கள்ள ( வெள்ளிகரம் ) பாடல் 660 கள்ள முள்ள ( வெள்ளிகரம் ) பாடல் 661 தொய்யில் செய்யில் ( வெள்ளிகரம் ) பாடல் 662 இல்லையென நாணி ( வெள்ளிகரம் ) பாடல் 663 பையரவு போலு ( வெள்ளிகரம் ) பாடல் 664 வதன சரோருக ( வெள்ளிகரம் ) பாடல் 665 நசையொடு தோலுந் ( திருவல்லம் ) பாடல் 666 அதிக ராய்ப்பொரு ( வேலூர் ) பாடல் 667 சேலால மொன்று ( வேலூர் ) பாடல் 668 ஒருவரைச் சிறுமனைச் ( விரிஞ்சிபுரம் ) பாடல் 669 குலையமயி ரோதி ( விரிஞ்சிபுரம் ) பாடல் 670 நிகரில் பஞ்ச ( விரிஞ்சிபுரம் ) பாடல் 331 அற்றைக் கற்றைக் கொப்பித் ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் - ...
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் .. தனதான
அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்
தத்தத் தத்தத் .. தருவோர்தாள்
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்
தொக்குத் திக்குக் .. குடில்பேணிச்
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்
செத்துச் செத்துப் .. பிறவாதே
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்
செச்சைச் செச்சைக் .. கழல்தாராய்
துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்
துட்கத் திட்கப் .. பொரும்வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
சொர்க்கத் தத்தைக் .. கினியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்
கத்தக் கத்தக் .. களைவோனே
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் .. பெருமாளே.
பாடல் 332 சுத்தச் சித்தத் ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் - ...
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் .. தனதான
சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்
சுத்தப் பட்டிட் .. டமுறாதே
தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்
சொற்குற் றத்துத் .. துறைநாடி
பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்
றொத்துக் கித்திப் .. பிணிமாதர்
பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்
பிற்பட் டிட்டுத் .. தளர்வேனோ
அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்
தத்திக் கத்துப் .. பலமீவாய்
அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்
தைக்குச் செச்சைத் .. தொடைசூழ்வாய்
கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்
கைத்தச் சத்திப் .. படையேவுங்
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் .. பெருமாளே.
பாடல் 333 கொக்குக் கொக்கத் தலையிற் ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் -
தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்
தத்தத் தத்தத் தனனத் .. தனதான
கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்
கொத்துற் றுக்குப் பிணியுற் .. றவனாகிக்
குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்
கொத்தைச் சொற்கற் றுலகிற் .. பலபாஷை
திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
செற்றைச் சட்டைக் குடிலைச் .. சுமைபேணும்
சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
திட்டத் துக்குப் புகலப் .. பெறுவேனோ
அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்
டத்ரத் தெற்றிக் கடுகப் .. பொருசூரன்
அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்
புக்குப் பட்டுத் துருமத் .. தடைவாகத்
தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்
கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் .. கணமாடிச்
சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்
சத்திக் கச்சிக் குமரப் .. பெருமாளே.
பாடல் 334 தத்தித் தத்திச் ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் -
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் .. தனதான
தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
சத்தப் படுமைக் .. கடலாலே
சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
தட்டுப் படுமப் .. பிறையாலே
சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
சித்ரக் கொடியுற் .. றழியாதே
செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத் .. தரவேணும்
கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
குத்திக் கிரியைப் .. பொரும்வேலா
கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
கொச்சைக் குறவிக் .. கினியோனே
சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
துக்கத் தையொழித் .. திடும்வீரா
சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
சொக்கப் பதியிற் .. பெருமாளே.
பாடல் 335 பொக்குப்பைக் கத்தத் ( காஞ்சீபுரம் )
ராகம் - பஹுதாரி; தாளம் - திஸ்ர ரூபகம் (5)
(எடுப்பு - /3 0)
தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்
த்தத்தத் தத்தத் .. தனதான
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
பொய்த்தெத்துத் தத்துக் .. குடில்பேணிப்
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்
பொற்சித்ரக் கச்சுக் .. கிரியார்தோய்
துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத்
துக்கித்துக் கெய்த்துச் .. சுழலாதே
சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்
துச்சற்றர்ச் சிக்கப் .. பெறுவேனோ
திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்
செற்பத்ரக் கொக்கைப் .. பொரும்வேலா
செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்
செச்சைக்கொத் தொப்பித் .. தணிவோனே
கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்
கட்கத்தத் தர்க்குப் .. பெரியோனே
கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்
கச்சிக்குட் சொக்கப் .. பெருமாளே.
பாடல் 336 அயிலப்புக் கயலப்புத் ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் - ..
தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத்
தனனத்தத் தனனத்தத் .. தனதான
அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக்
கணுரத்தைக் கனவெற்புத் .. தனமேகம்
அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித்
திளகிக்கற் புளநெக்குத் .. தடுமாறித்
துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத்
தொடியர்க்கிப் படியெய்த்துச் .. சுழலாதே
சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித்
தொழுசெச்சைக் கழல்பற்றிப் .. பணிவேனோ
புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்
புனமுத்தைப் புணர்சித்ரப் .. புயவீரா
புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்
புகல்பொற்குக் குடவெற்றிக் .. கொடியோனே
கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக்
கரணிச்சித் தருள்கச்சிப் .. பதியோனே
கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப்
பொருசத்திக் கரசொக்கப் .. பெருமாளே.
பாடல் 337 கச்சிட் டணிமுலை ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் - ..
தத்தத் தனதன தத்தத் தனதன
தத்தத் தனதன .. தனதான
கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய
மச்சக் கொடிமதன் .. மலராலுங்
கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை
அச்சப் படவெழு .. மதனாலும்
பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது
சொச்சத் தரமல .. இனிதான
பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய
செச்சைத் தொடையது .. தரவேணும்
பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய
கச்சிப் பதிதனி .. லுறைவோனே
பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட
உற்றுப் பொரவல .. கதிர்வேலா
இச்சித் தழகிய கொச்சைக் குறமகள்
மெச்சித் தழுவிய .. திருமார்பா
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட
வெட்டித் துணிசெய்த .. பெருமாளே.
பாடல் 338 கமலரு சோகம்பர ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் - ..
தனதன தானாந்தன தனதன தானாந்தன
தனதன தானாந்தன .. தனதான
கமலரு சோகம்பர முடிநடு வேய்பூங்கணை
கலகமர் வாய்தோய்ந்தம .. ளியின்மீதே
களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி
கனவிய வாரேந்தின .. இளநீர்தோய்ந்
தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
இவளுடன் மால்கூர்ந்திடு .. மநுபோகம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய .. மருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
அதுலன நீலாம்பர .. மறியாத
அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
அறமுறு சீகாஞ்சியி .. லுறைவோனே
விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
வெடிபடு தேவேந்திர .. னகர்வாழ
விரிகடல் தநமுண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
வினையற வேல்வாங்கிய .. பெருமாளே.
பாடல் 339 கரும மானபி ( காஞ்சீபுரம் )
ராகம் - பெஹாக்; தாளம் - அங்கதாளம் (15 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தத்தன தனதன
தானா தத்தத் .. தனதான
கரும மானபி றப்பற வொருகதி
காணா தெய்த்துத் .. தடுமாறுங்
கலக காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக் .. கலைநூலின்
வரும நேகவி கற்பவி பரிதம
னோபா வத்துக் .. கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப் .. புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுலச
காதே வர்க்குப் .. புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட் .. டினிலாளுங்
குரும கீதல முட்பட வுளமது
கோடா மற்க்ஷத் .. ரியர்மாளக்
குலவு தோர்கட வச்சுதன் மருககு
மாரா கச்சிப் .. பெருமாளே.
பாடல் 340 கலகலெ னப்பொற் ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் - ..
தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன .. தனதான
கலகலெ னப்பொற் சேந்த நூபுர
பரிபுர மொத்தித் தாந்த னாமென
கரமல ரச்சிற் றாந்தொ மாடிய .. பொறியார்பைங்
கடிதட முற்றுக் காந்த ளாமென
இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை
கனதன பொற்பிட் டோ ங்கு மார்பொடு .. வடமாடச்
சலசல சச்சச் சேங்கை பூண்வளை
பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய
சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி .. சுழலாடத்
தரளந கைப்பித் தாம்ப லாரிதழ்
குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர்
சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய .. ருறவாமோ
திலதமு கப்பொற் காந்தி மாதுமை
யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி
சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி .. சிவகாமி
திரிபுவ னத்தைக் காண்ட நாடகி
குமரிசு கத்தைப் பூண்ட காரணி
சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை .. யருள்பாலா
அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட
நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட
அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர .. முடையோனே
அமரர்ம கட்குப் போந்த மால்கொளும்
விபுதகு றத்திக் காண்ட வாதின
மழகுசி றக்கக் காஞ்சி மேவிய .. பெருமாளே.
பாடல் 341 கொத்தார் பற்கா ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் - ..
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தா .. தனதான
கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
குப்பா யத்திற் .. செயல்மாறிக்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
கொட்டா விக்குப் .. புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
அஆ உஉ.. எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
மப்பே துத்துக் .. கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
நிற்பாய் கச்சிக் .. குமரேசா
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
நெட்டோ தத்திற் .. பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
முட்டா திட்டத் .. தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்திப் .. பெருமாளே.
பாடல் 342 கோவைச் சுத்தத் ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் - ..
தானத் தத்தத் தத்தன தத்தத் .. தனதான
கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் .. கொடியார்தங்
கோலக் கச்சுக் கட்டிய முத்தத் .. தனமேவிப்
பாவத் துக்குத் தக்கவை பற்றித் .. திரியாதே
பாடப் பத்திச் சித்த மெனக்குத் .. தரவேணும்
மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் .. பொரும்வேலா
மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் .. கினியோனே
சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் .. பதியோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் .. பெருமாளே.
பாடல் 343 சீசி முப்புரக் ( காஞ்சீபுரம் )
ராகம் - தர்பர்; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிடதகதிமி-3 1/2
தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத் .. தனதான
சீசி முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச்
சீவன் முத்தியிற் கூட வேகளித் .. தநுபூதி
சேர அற்புதக் கோல மாமெனச்
சூரி யப்புவிக் கேறி யாடுகச்
சீலம் வைத்தருட் டேறி யேயிருக் .. கறியாமற்
பாசம் விட்டுவிட் டோ டி போனதுப்
போது மிப்படிக் காகி லேனினிப்
பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் .. தடியேனைப்
பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை யேதரித் .. தருள்வாயே
தேசில் துட்டநிட் டூர கோதுடைச்
சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்
தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் .. தருள்வோனே
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
பாணி வித்துருப் பாத னோர்புறச்
சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் .. குருநாதா
காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
கோவ லத்தியிற் கான நான்மறைக்
காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் .. புலிவ்ளுர்
காள அத்தியப் பால்சி ராமலைத்
தேச முற்றுமுப் பூசை மேவிநற்
காம கச்சியிற் சால மேவுபொற் .. பெருமாளே.
பாடல் 344 நச்சரவ மென்று ( காஞ்சீபுரம் )
ராகம் - கானடா; தாளம் - ஆதி
தத்ததன தந்த தத்ததன தந்த
தத்ததன தந்த .. தனதான
நச்சரவ மென்று நச்சரவ மென்று
நச்சுமிழ்க ளங்க .. மதியாலும்
நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு
நத்திரைவ ழங்கு .. கடலாலும்
இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
இச்சிறுமி நொந்து .. மெலியாதே
எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி
இத்தனையி லஞ்ச .. லெனவேணும்
பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
பச்சைமலை யெங்கு .. முறைவோனே
பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
பத்திரம ணிந்த .. கழலோனே
கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு
கச்சியில மர்ந்த .. கதிர்வேலா
கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர்
கைத்தளைக ளைந்த .. பெருமாளே.
பாடல் 345 படிறொ ழுக்கமு ( காஞ்சீபுரம் )
ராகம் - சாரங்கா; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிடதகதிமி- 3 1/2
தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன .. தனதான
படிறொ ழுக்கமு மடம னத்துள
படிப ரித்துட .. னொடிபேசும்
பகடி கட்குள மகழ மெய்ப்பொருள்
பலகொ டுத்தற .. உயிர்வாடா
மிடியெ னப்பெரு வடவை சுட்டிய
விதன முற்றிட .. மிகவாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத .. மருள்வாயே
கொடியி டைக்குற வடிவி யைப்புணர்
குமர கச்சியி .. லமர்வோனே
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
குவளை முற்றணி .. திருமார்பா
பொடிப டப்பட நெடிய விற்கொடு
புரமெ ரித்தவர் .. குருநாதா
பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
பொருது ழக்கிய .. பெருமாளே.
பாடல் 346 மகுடக்கொப் பாடக் ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் - ..
தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன .. தந்ததான
மகுடக்கொப் பாடக் காதினில்
நுதலிற்பொட் டூரக் கோதிய
மயிரிற்சுற் றோலைப் பூவோடு .. வண்டுபாட
வகைமுத்துச் சோரச் சேர்நகை
யிதழிற்சொற் சாதிப் பாரியல்
மதனச்சொற் பாடுக் கோகில .. ரம்பைமாதர்
பகடிச்சொற் கூறிப் போர்மயல்
முகவிச்சைப் பேசிச் சீரிடை
பவளப்பட் டாடைத் தோளிரு .. கொங்கைமேலாப்
பணமெத்தப் பேசித் தூதிடு
மிதயச்சுத் தீனச் சோலிகள்
பலரெச்சிற் காசைக் காரிகள் .. சந்தமாமோ
தகுடத்தத் தானத் தானன
திகுடத்தித் தீதித் தோதிமி
தடுடுட்டுட் டாடப் பேரிகை .. சங்குவீணை
தடமிட்டுப் பாவக் கார்கிரி
பொடிபட்டுப் போகச் சூரர்கள்
தலையிற்றிட் டாடப் போர்புரி .. கின்றவேலா
திகிரிப்பொற் பாணிப் பாலனை
மறைகற்புத் தேளப் பூமனை
சினமுற்றுச் சேடிற் சாடிய .. கந்தவேளே
தினையுற்றுக் காவற் காரியை
மணமுற்றுத் தேவப் பூவொடு
திகழ்கச்சித் தேவக் கோன்மகிழ் .. தம்பிரானே.
பாடல் 347 மக்கட்குக் கூறரி ( காஞ்சீபுரம் )
ராகம் - லதாங்கி ; தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தத்தத்தத் தானன தானன
தத்தத்தத் தானன தானன
தத்தத்தத் தானன தானன .. தனதான
மக்கட்குக் கூறரி தானது
கற்றெட்டத் தான்முடி யாதது
மற்றொப்புக் கியாதுமொ வாதது .. மனதாலே
மட்டிட்டுத் தேடவோ ணாதது
தத்வத்திற் கோவைப டாதது
மத்தப்பொற் போதுப கீரதி .. மதிசூடும்
முக்கட்பொற் பாளரு சாவிய
அர்த்தக்குப் போதக மானது
முத்திக்குக் காரண மானது .. பெறலாகா
முட்டர்க்கெட் டாதது நான்மறை
யெட்டிற்றெட் டாதென வேவரு
முற்பட்டப் பாலையி லாவது .. புரிவாயே
செக்கட்சக் ராயுத மாதுலன்
மெச்சப்புற் போதுப டாவிய
திக்குப்பொற் பூதர மேமுதல் .. வெருபம்
சிட்டித்துப் பூதப சாசுகள்
கைக்கொட்டிட் டாடம கோததி
செற்றுக்ரச் சூரனை மார்பக .. முதுசோரி
கக்கக்கைத் தாமரை வேல்விடு
செச்சைக்கர்ப் பூரபு யாசல
கச்சுற்றப் பாரப யோதர .. முலையாள்முன்
கற்புத்தப் பாதுல கேழையு
மொக்கப்பெற் றாள்விளை யாடிய
கச்சிக்கச் சாலையில் மேவிய .. பெருமாளே.
பாடல் 348 மயலோது மந்த ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் - ..
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த .. தனதான
மயலோது மந்த நிலையாலும் வஞ்ச
வசைபேசு கின்ற .. மொழியாலும்
மறிபோலு கின்ற விழிசேரு மந்தி
மதிநேரு கின்ற .. நுதலாலும்
அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச
நடையாலும் அங்கை .. வளையாலும்
அறிவே யழிந்து அயர்வாகி நைந்து
அடியேன் மயங்கி .. விடலாமோ
மயிலேறி யன்று நொடி போதி லண்டம்
வலமாக வந்த .. குமரேசா
மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள்
மலைமாது தந்த .. முருகேசா
நயவா னுயர்ந்த மணிமாட மும்பர்
நடுவே நிறைந்த .. மதிசூழ
நறைவீசு கும்ப குடமேவு கம்பை
நகர்மீத மர்ந்த .. பெருமாளே.
பாடல் 349 முத்து ரத்ந ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் - ..
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த தாத்த .. தனதான
முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்
முற்செ மத்து மூர்க்கர் .. வெகுபாவர்
முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்
முச்சர் மெத்த சூட்சர் .. நகையாலே
எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்
இட்ட முற்ற கூட்டர் .. விலைமாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்
இப்ப டிக்கு மார்க்கம் .. உழல்வேனோ
தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு
சிற்று டுக்கை சேட்டை .. தவில்பேரி
திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்
செக்க டற்கு ளாழ்த்து .. விடும்வேலா
கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்
கத்தர் பித்தர் கூத்தர் .. குருநாதா
கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள்
கச்சி நத்தி நாட்கொள் .. பெருமாளே.
பாடல் 350 வம்ப றாச்சில ( காஞ்சீபுரம் )
ராகம் - ஆபோகி; தாளம் - ஆதி - 2 களை
(எடுப்பு 1/4 இடம்)
தந்த தாத்தன தன்ன தனந்தன
தத்தத் தத்தத் .. தனதானா
வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத் .. திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற் .. றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக் .. கழல்சேர்வார்
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
வைக்கச் சற்றுக் .. கருதாதோ
வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப் .. படமாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத் .. திருமார்பா
கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு
கைக்குக் கற்புத் .. தவறாதே
கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப் .. பெருமாளே.
பாடல் 351 வாய்ந்தப்பிடை நீடு ( காஞ்சீபுரம் )
ராகம் - ..; தாளம் - ...
தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன .. தனதானா
வாய்ந்தப்பிடை நீடு குலாவிய
நீந்திப்பது மாதியை மீதினி
லூர்ந்துற்பல வோடையில் நீடிய .. உகள்சேலை
வார்ந்துப்பக ழீயெதி ராகிமை
கூர்ந்துப்பரி யாவரி சேரவை
சேர்ந்துக்குழை யோடுச லாடிய .. விழியாலே
சாய்ந்துப்பனை யூணவ ரானபொ
லாய்ந்துப்பாணி னாரிரு தாளினில்
வீழ்ந்திப்படி போகினு மோர்மொழி .. மறவேனே
சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ
பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ
காந்தப்பெரு நாதனு மாகிய .. மதராலே
தாந்தக்கிட தாகிட தாகிட
தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெண .. வெனதாளம்
காந்தப்பத மாறியு லாவுய
ராந்தற்குரு நாதனு மாகியெ
போந்தப்பெரு மான்முரு காவொரு .. பெரியோனே
காந்தக்கலு மூசியு மேயென
ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
காஞ்சிப்பதி மாநகர் மேவிய .. பெருமாளே.
பாடல் 352 அறிவிலாப் பித்த ( காஞ்சீபுரம் )
ராகம் - சாரங்கா; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த
தனதனாத் தந்த தந்த .. தனதான
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர்பேய்க் கத்தர் நன்றி .. யறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து
அவரைவாழ்த் தித்தி ரிந்து .. பொருள்தேடிச்
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
தெரிவைமார்க் குச்சொ ரிந்து .. அவமேயான்
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
தெளியமோ க்ஷத்தை யென்று .. அருள்வாயே
இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
இடபமேற் கச்சி வந்த .. உமையாள்தன்
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
இறைவர்கேட் கத்த குஞ்சொ .. லுடையோனே
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
குருவியோட் டித்தி ரிந்த .. தவமானைக்
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
குமரகோட் டத்த மர்ந்த .. பெருமாளே.
பாடல் 353 அஞ்சன வேல்விழி ( திருவானைக்கா )
ராகம் - ..; தாளம் - ..
தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன .. தனதான
அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு
மிங்கித மாகந கைத்துருக்கவு
மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் .. நகரேகை
அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
மந்தர மாமுலை சற்றசைக்கவு
மம்பரம் வீணில விழ்த்துடுக்கவு .. மிளைஞோர்கள்
நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்
வம்புரை கூறிவ ளைத்திணக்கவு
மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு .. மெவரேனும்
நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு
மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற
நின்பத சேவைய நுக்ரகிப்பது .. மொருநாளே
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாசக ரப்ரசித்தனொர்
கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம .. கணராஜன்
கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்
எங்கள் விநாயக னக்கர்பெற்றருள்
குன்றைய ரூபக கற்பகப்பிளை .. யிளையோனே
துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
பந்த சடானன துஷ்டநிக்ரக
தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய .. பரிபாலா
துங்க கஜாரணி யத்திலுத்தம
சம்பு தடாகம டுத்ததக்ஷிண
சுந்தர மாறன்ம திட்புறத்துறை .. பெருமாளே.
பாடல் 354 அம்புலி நீரைச் ( திருவானைக்கா )
ராகம் - ..; தாளம் - ..
தந்தன தானத் தானன தந்தன தானத் தானன
தந்தன தானத் தானன .. தனதான
அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
ஐந்தலை நாகப் பூஷண .. ரருள்பாலா
அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
மங்கையி னானிற் பூசையு .. மணியாமல்
வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டுழ லோதித் தாழலி .. லிருகாதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச்சேர்வையில்
மங்கியெ யேழைப் பாவியெ .. னழிவேனோ
கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி யாலப் போசனி .. யபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்றது வார்பொற் காரிகை .. யருள்பாலா
செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
திண்புய மாரப் பூரண .. மருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென்திரு வானைக் காவுறை .. பெருமாளே.
பாடல் 355 அனித்த மான ( திருவானைக்கா )
ராகம் - பூபாளம் ; தாளம் - சதுஸ்ர ஏகம் (திஸ்ரநடை) (6)
எடுப்பு - அதீதம்
தனத்த தான தானான தனத்த தான தானான
தனத்த தான தானான .. தனதான
அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
யடைதலந வாயு வோடாத .. வகைசாதித்
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல் .. மலமாயை
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ .. னுடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
சிவச்சொ ரூபமாயோகி .. யெனஆள்வாய்
தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத .. மருகோனே
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர .. வயலுரா
மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ர வாக பானீய .. மலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
மதித்த சாமி யேதேவர் .. பெருமாளே.
பாடல் 356 ஆரமணி வாரைப் ( திருவானைக்கா )
ராகம் - ..; தாளம் - ..
தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் .. தனதான
ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
டாடவர்கள் வாடத் .. துறவோரை
ஆசைமட லுலூர்வித் தாளுமதி பாரப்
பாளித படீரத் .. தனமானார்
காரளக நீழற் காதளவு மோடிக்
காதுமபி ராமக் .. கயல்போலக்
காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
காலைமற வாமற் .. புகல்வேனோ
பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
சாமளக லாபப் .. பரியேறிப்
பாய்மதக போலத் தானொடிக லாமுற்
பாடிவரு மேழைச் .. சிறியோனே
சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
காரஇள வேனற் .. புனமேவுந்
தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
சோதிவளர் காவைப் .. பெருமாளே.
பாடல் 357 ஆலம் வைத்தவி ( திருவானைக்கா )
ராகம் - ..; தாளம் - ...
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன .. தனதான
ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச
னாக மக்கலை கற்றச மர்த்திக
ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் .. தெருவூடே
ஆர வட்டமு லைக்குவி லைப்பண
மாயி ரக்கல மொட்டிய ளப்பினு
மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ .. ருடன்மாலாய்
மேலி ளைப்புமு சிப்பும வத்தையு
மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு
மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி .. யதனாலே
மேதி னிக்குள பத்தனெ னப்பல
பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை
வீடு கட்டியி ருக்குமெ னக்குநி .. னருள்தாராய்
பீலி மிக்கம யிற்றுர கத்தினி
லேறி முட்டவ ளைத்துவ குத்துடல்
பீற லுற்றவு யுத்தக ளத்திடை .. மடியாத
பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை
பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்
பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு .. குடனாட
ஏலம் வைத்தபு யத்தி லணைத்தருள்
வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர்
ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை .. யருள்வோனே
ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ
ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம
ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் .. பெருமாளே.
பாடல் 358 உரைக்கா ரிகைப்பா ( திருவானைக்கா )
ராகம் - ..; தாளம் - ..
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தான .. தந்ததான
உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
ருனக்கோ மடற்கோவை .. யொன்றுபாட
உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே
டுனைப்பாரி லொப்பார்கள் .. கண்டிலேன்யான்
குரைக்கான வித்யா கவிப்பூ பருக்கே
குடிக்காண் முடிப்போடு .. கொண்டுவாபொன்
குலப்பூ ணிரத்நா திபொற்றூ செடுப்பா
யெனக்கூ றிடர்ப்பாடின் .. மங்குவேனோ
அரைக்காடை சுற்றார் தமிழ்க்கூட லிற்போய்
அனற்கே புனற்கேவ .. ரைந்தஏடிட்
டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
லறப்பாய் வயற்கீழ .. மர்ந்தவேளே
திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
சிவத்யான முற்றோர்சி .. லந்திநூல்செய்
திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்
திருச்சால கச்சோதி .. தம்பிரானே.
பாடல் 359 ஓல மறைக ( திருவானைக்கா )
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன .. தனதான
ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ .. ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது .. சிவஞானம்
சால வுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ .. னவியோமஞ்
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல் .. பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் .. களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ .. வயலூரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை .. த்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் .. பெருமாளே.
பாடல் 360 கருமுகில்திர ளாகக் ( திருவானைக்கா )
ராகம் - ..; தாளம் - ...
தனதனதன தானத் தானன
தனதனதன தானத் தானன
தனதனதன தானத் தானன .. தனதான
கருமுகில்திர ளாகக் கூடிய
இருளெனமரு ளேறித் தேறிய
கடிகமழள காயக் காரிகள் .. புவிமீதே
கனவியவிலை யோலைக் காதிகள்
முழுமதிவத னேரப் பாவைகள்
களவியமுழு மோசக் காரிகள் .. மயலாலே
பரநெறியுண ராவக் காமுகர்
உயிர்பலிகொளு மோகக் காரிகள்
பகழியைவிழி யாகத் தேடிகள் .. முகமாயப்
பகடிகள்பொரு ளாசைப் பாடிக
ளுருவியதன பாரக் கோடுகள்
படவுளமழி வேனுக் கோரருள் .. புரிவாயே
மரகதவித நேர்முத் தார்நகை
குறமகளதி பாரப் பூண்முலை
மருவியமண வாளக் கோலமு .. முடையோனே
வளைதருபெரு ஞாலத் தாழ்கடல்
முறையிடநடு வாகப் போயிரு
வரைதொளைபட வேல்விட் டேவிய .. அதிதீரா
அரவணைதனி லேறிச் சீருடன்
விழிதுயில்திரு மால்சக் ராயுதன்
அடியிணைமுடி தேடிக் காணவும் .. அரிதாய
அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும்
உடையதொர்மயில் வாசிச் சேவக
அழகியதிரு வானைக் காவுறை .. பெருமாளே.
பாடல் 361 காவிப் பூவை ( திருவானைக்கா )
ராகம் - ..; தாளம் - ..
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன .. தனதான
காவிப் பூவை யேவை யிகல்கவன
நீலத் தால கால நிகர்வன
காதிப் போக மோக மருள்வன .. இருதோடார்
காதிற் காதி மோதி யுழல்கண
மாயத் தார்கள் தேக பரிசன
காமக் ரோத லோப மப மிவை .. சிதையாத
பாவிக் காயு வாயு வலம்வர
லாலிப் பார்கள் போத கருமவு
பாயத் தான ஞான நெறிதனை .. யினிமேலன்
பாலெக் காக யோக ஜெபதப
நேசித் தார வார பரிபுர
பாதத் தாளு மாறு திருவுள .. நினையாதோ
கூவிக் கோழி வாழி யெனமயி
லாலித் தால கால மெனவுயர்
கூளிச் சேனை வான மிசைதனில் .. விளையாடக்
கோரத் தீர சூர னுடைவினை
பாறச் சீற லேன பதிதனை
கோலக் கால மாக அமர்செய்த .. வடிவேலா
ஆவிச் சேல்கள் பூக மடலிள
பாளைத் தாறு கூறு படவுய
ராலைச் சோலை மேலை வயலியி .. லுறைவோனே
ஆசைத் தோகை மார்க ளிசையுட
னாடிப் பாடி நாடி வருதிரு
ஆனைக் காவில் மேவி யருளிய .. பெருமாளே.
பாடல் 362 குருதிபு லாலென்பு ( திருவானைக்கா )
ராகம் - ரஞ்சனி; தாளம் - அங்கதாளம் (8) (புத்தகத்தில் -6 ??)
தகதிமி-2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தானந்த தான தந்தன
தனதன தானந்த தான தந்தன
தனதன தானந்த தான தந்தன .. தனதான
குருதிபு லாலென்பு தொன ரம்புகள்
கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன .. பொதிகாயக்
குடிலிடை யோந்து னேரைம்புல
அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்
கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய .. அதனாலே
சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை
துதியொடு நாடுந்தி யான மொன்றையு .. முயலாதே
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
துரிசற ஆநந்த வீடு கண்டிட .. அருள்வாயே
ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
உடைபட மோதுங்கு மார பங்கய .. கரவீரா
உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்
அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்
உளமதில் நாளுங்க லாவி யின்புற .. வுறைவோனே
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
அரிகரி கோவிந்த கேச வென்றிரு
கழல்தொழு சீரங்க ராச னண்புறு .. மருகோனே
கமலனு மாகண்ட லாதி யண்டரு
மெமது பிரானென்று தாள்வ ணங்கிய
கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் .. பெருமாளே.
பாடல் 363 நாடித் தேடித் ( திருவானைக்கா )
ராகம் - சுத்த ஸாவேரி; தாளம் - அங்கதாளம் (6)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தானத் தானத் .. தனதான
நாடித் தேடித் .. தொழுவார்பால்
நானத் தாகத் .. திரிவேனோ
மாடக் கூடற் .. பதிஞான
வாழ்வைச் சேரத் .. தருவாயே
பாடற் காதற் .. புரிவோனே
பாலைத் தேனொத் .. தருள்வோனே
ஆடற் றோகைக் .. கினியோனே
ஆனைக் காவிற் .. பெருமாளே.
பாடல் 364 நிறைந்த துப்பிதழ் ( திருவானைக்கா )
ராகம் - ..; தாளம் - ..
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன .. தந்ததான
நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
மறந்த ரித்தக ணாலால நேரென
நெடுஞ்சு ருட்குழல் ஜநமுத நேரென .. நெஞ்சின்மேலே
நெருங்கு பொற்றன மாமேரு நேரென
மருங்கு நிட்கள ஆகாச நேரென
நிதம்ப முக்கணர் பூணார நேரென .. நைந்துசீவன்
குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
குமண்டை யிட்டுடை சோராவி டாயில .. மைந்துநாபி
குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்
மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
குரங்கை யொத்துழல் வேனோம னோலய .. மென்றுசேர்வேன்
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
மானங்க ளித்திட லாமோது ரோகித .. முன்புவாலி
வதஞ்செய் விக்ரம சீராம னானில
மறிந்த திச்சர மோகோ கெடாதினி
வரும்ப டிக்குரை யாய்பார் பலாகவ .. மென்றுபேசி
அறந்த ழைத்துநு மானோடு மாகடல்
வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் .. மைந்தனான
அநங்கன் மைத்துன வேளே கலாபியின்
விளங்கு செய்ப்பதி வேலா யுதாவிய
னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் .. தம்பிரானே.
பாடல் 365 பரிமள மிகவுள ( திருவானைக்கா )
ராகம் - தேஷ்; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகிடதகதிமி-3 1/2
(எடுப்பு -1/2 இடம்)
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன .. தனதான
பரிமள மிகவுள சாந்து மாமத
முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு .. முகில்போலே
பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலரடி வேண்டி யேவிய
பணிவிடை களிலிறு மாந்த கூளனை .. நெறிபேணா
விரகனை யசடனை வீம்பு பேசிய
விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
வெகுளியை யறிவது போங்க பாடனை .. மலமாறா
வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது .. மொருநாளே
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநக .. ருறைபேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
கரிவன முறையகி லாண்ட நாயகி .. யருள்பாலா
முரணிய சமரினில் மூண்ட ராவண
னிடியென அலறிமு னேங்கி வாய்விட
முடிபல திருகிய நீண்ட மாயவன் .. மருகோனே
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் .. பெருமாளே.
பாடல் 366 வேலைப் போல்விழி ( திருவானைக்கா )
ராகம் - ..; தாளம் - ..
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன .. தனதான
வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்
வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் .. முலையானை
மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்
மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்
வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் .. களிகூருஞ்
சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்
தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் .. எவரேனும்
தோயப் பாயல ழைக்கும வத்திகள்
மோகப் போகமு யக்கிம யக்கிகள்
சூறைக் காரிகள் துக்கவ லைப்பட .. லொழிவேனோ
காலைக் கேமுழு கிக்குண திக்கினில்
ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண
காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு .. முநிவோர்கள்
கானத் தாசிர மத்தினி லுத்தம
வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் .. மருகோனே
ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை
பாயச் சாலித ழைத்திர தித்தமு
தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி .. யுறைவேலா
ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு
ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு .. பெருமாளே.
பாடல் 367 குமர குருபர ( திருவானைக்கா )
ராகம் - ..; தாளம் - ...
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன .. தனதான
குமர குருபர குணதர நிசிசர
திமிர தினகர சரவண பவகிரி
குமரி சுதபகி ரதிசுத சுரபதி .. குலமானுங்
குறவர் சிறுமியு மருவிய திரள்புய
முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
கொடிய வினையனை யவலனை யசடனை .. யதிமோகக்
கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
களவி னொடுபொரு ளளவள வருளிய
கலவி யளறிடை துவளுறும் வெளிறனை .. யினிதாளக்
கருணை யடியரொ டருணையி லொருவிசை
சுருதி புடைதர வருமிரு பரிபுர
கமல மலரடி கனவிலு நனவிலு .. மறவேனே
தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
சமுக முககண பணபணி பதிநெடு .. வடமாகச்
சகல வுலகமு நிலைபெற நிறுவிய
கனக கிரிதிரி தரவெகு கரமலர்
தளர வினியதொ ரமுதினை யொருதனி .. கடையாநின்
றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
அகில புவனமு மளவிடு குறியவன்
அளவு நெடியவ னளவிட அரியவன் .. மருகோனே
அரவு புனைதரு புநிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
அறிவை யறிவது பொருளென அருளிய .. பெருமாளே.
பாடல் 368 அருவ மிடையென ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ..
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன .. தனதான
அருவ மிடையென வருபவர் துவரிதழ்
அமுது பருகியு முருகியு ம்ருகமத
அளக மலையவு மணிதுகி லகலவு .. மதிபார
அசல முலைபுள கிதமெழ அமளியில்
அமளி படஅந வரதமு மவசமொ
டணையு மழகிய கலவியு மலமல .. முலகோரைத்
தருவை நிகரிடு புலமையு மலமல
முருவு மிளமையு மலமலம் விபரித
சமய கலைகளு மலமல மலமரும் .. வினைவாழ்வுஞ்
சலில லிபியன சனனமு மலமல
மினியு னடியரொ டொருவழி படஇரு
தமர பரிபுர சரணமு மவுனமு .. மருள்வாயே
உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
யிருகு தையுமுடி தமனிய தநுவுட
னுருளை யிருசுடர் வலவனு மயனென .. மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை யடியிட
நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்
உடைய வொருவரு மிருவரு மருள்பெற .. வொருகோடி
தெருவு நகரியு நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன புகைவன
திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு ..முனிவார்தஞ்
சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய
பெரும அருணையி லெழுநிலை திகழ்வன
சிகரி மிசையொரு கலபியி லுலவிய .. பெருமாளே.
பாடல் 369 கருணை சிறிதுமில் ( திருவருணை )
ராகம் - ஹம்ஸா நந்தி; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன .. தனதான
கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்
பிசித அசனம றவரிவர் முதலிய
கலக விபரித வெகுபர சமயிகள் .. பலர்கூடிக்
கலக லெனநெறி கெடமுறை முறைமுறை
கதறி வதறிய குதறிய கலைகொடு
கருத அரியதை விழிபுனல் வரமொழி .. குழறாவன்
புருகி யுனதருள் பரவுகை வரில்விர
கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய
லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள .. றதுபோக
உதறி லெனதெனு மலமறி லறிவினி
லெளிது பெறலென மறைபறை யறைவதொ
ருதய மரணமில் பொருளினை யருளுவ .. தொருநாளே
தருண சததள பரிமள பரிபுர
சரணி தமனிய தநுதரி திரிபுர
தகனி கவுரிப வதிபக வதிபயி .. ரவிசூலி
சடில தரியநு பவையுமை திரிபுரை
சகல புவனமு முதவிய பதிவ்ருதை
சமய முதல்வித னயபகி ரதிசுத .. சதகோடி
அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு
கருணை வருணித தனுபர குருபர
அருணை நகருறை சரவண குரவணி .. புயவேளே
அடவி சரர்குல மரகத வனிதையு
மமரர் குமரியு மனவர தமுமரு
கழகு பெறநிலை பெறவர மருளிய .. பெருமாளே.
பாடல் 370 துகிலு ம்ருகமத ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ..
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன .. தனதான
துகிலு ம்ருகமத பரிமள அளகமு
நெகிழ இருதன கிரியசை தரஇடை
துவள மனிதரு மமரரு முநிவரு .. முடனோடித்
தொடர வனமணி மகரமி லகுகுழை
யடரு வனவிட மிளிர்வன ரதிபதி
சுருதி மொழிவன கயல்விழி புரள்தர .. நடுவாக
வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர
வனச பதயுக பரிபுர மொலிபட
மறுகு தொறுமுல வியினிய கலவியை .. விலைகூறும்
வரைவி லரிவையர் தருசுக சலதியி
லலையு மெனதுயி ரநுதின நெறிதரு
மவுன சிவசுக சலதியில் முழுகுவ .. தொருநாளே
முகிலு மதியமும் ரவியெழு புரவியு
நெடிய குலைமிட றிடறமு துககன
முகடு கிழிபட வளர்வன கமுகின .. மிசைவாளை
முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்
தடமு முளரிய அகழியு மதிள்களு
முழுது முடையதொ ரருணையி லுறைதரு .. மிளையோனே
அகிலு மருதமு முகுளித வகுளமு
மமுத கதலியும் அருணமும் வருடையு
மபரி மிதமத கரிகளு மரிகளு .. முடனேகொண்
டருவி யிழிதரு மருவரை தனிலொரு
சவர வனிதையை முநிதரு புனிதையை
அவச முடன்மல ரடிதொழு துருகிய .. பெருமாளே.
பாடல் 371 மகர மெறிகடல் ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ...
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன .. தனதான
மகர மெறிகடல் விழியினு மொழியினு
மதுப முரல்குழல் வகையினு நகையினும்
வளமை யினுமுக நிலவினு மிலவினு .. நிற்முசும்
மதுர இதழினு மிடையினு நடையினு
மகளிர் முகுளித முலையினு நிலையினும்
வனச பரிபுர மலரினு முலரினு .. மவர்நாமம்
பகரு கினுமவர் பணிவிடை திரிகினு
முருகி நெறிமுறை தவறினு மவரொடு
பகடி யிடுகினு மமளியி லவர்தரு .. மநுராகப்
பரவை படியினும் வசமழி யினுமுத
லருணை நகர்மிசை கருணையொ டருளிய
பரம வொருவச னமுமிரு சரணமு .. மறவேனே
ககன சுரபதி வழிபட எழுகிரி
கடக கிரியொடு மிதிபட வடகுல
கனக கனகுவ டடியொடு முறிபட .. முதுசூதங்
கதறு சுழிகட லிடைகிழி படமிகு
கலக நிசிசரர் பொடிபட நடவிய
கலப மதகத துரகத ந்ருபகிரி .. மயில்வாழ்வே
தகன கரதல சிவசுத கணபதி
சகச சரவண பரிமள சததள
சயன வனசரர் கதிபெற முனிபெறு .. புனமானின்
தரள முகபட நெறிபட நிமிர்வன
தருண புளகித ம்ருகமத தனகிரி
தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய .. பெருமாளே.
பாடல் 372 முகிலை யிகல்பொரு ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ..
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன .. தனதான
முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென
முதிய மதியது முகமென நுதலிணை
முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி .. யென்முவா
முளரி தனின்முகு ளிதமலர் முலையென
முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை
மொழிய வரியதொர் தெரிவையர் வினையென .. மொழிகூறிப்
பகலு மிரவினு மிகமன மருள்கொடு
பதியி லவர்வடி வுளதழ கெனவொரு
பழுது மறஅவர் பரிவுற இதமது .. பகராதே
பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட
விகட முடனடை பயில்மயில் மிசைவரு
பவனி தனையநு தினநினை யென அருள் .. பகர்வாயே
புகல வரியது பொருளிது எனவொரு
புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு
பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள் .. புடைசூழப்
புரமு மெரியெழ நகையது புரிபவர்
புனலும் வளர்மதி புனைசடை யினரவர்
புடவி வழிபட புதை பொருள் விரகொடு .. புகல்வோனே
அகில கலைகளு மறநெறி முறைமையு
மகில மொழிதரு புலவரு முலகினி
லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை .. யதனாலே
அறுவர் முலையுணு மறுமுக னிவனென
அரிய நடமிடு மடியவ ரடிதொழ
அருணை நகர்தனி லழகுடன் மருவிய .. பெருமாளே.
பாடல் 373 முருகு செறிகுழல் ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ...
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன .. தனதான
முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்
முலைக ளளவிடு முகபட பகடிகள்
முதலு முயிர்களு மளவிடு களவியர் .. முழுநீல
முழுகு புழுககில் குழைவடி வழகியர்
முதிர வளர்கனி யதுகவ ரிதழியர்
முனைகொ ளயிலென விழியெறி கடைசிய .. ரநுராகம்
மருவி யமளியி னலமிடு கலவியர்
மனது திரவிய மளவள வளவியர்
வசன மொருநொடி நிலைமையில் கபடியர் .. வழியேநான்
மருளு மறிவின னடிமுடி யறிகிலன்
அருணை நகர்மிசை கருணையொ டருளிய
மவுன வசனமு மிருபெரு சரணமு .. மறவேனே
கருதி யிருபது கரமுடி யொருபது
கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது
கடிய வியனகர் புகவரு கனபதி .. கனல்மூழ்கக்
கவச அநுமனொ டெழுபது கவிவிழ
அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு
களரி தனிலொரு கணைவிடு மடலரி .. மருகோனே
சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி
யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து
தரும னவர்பதி குடிவிடு பதனிசை .. மயில்வீரா
தருண மணியவை பலபல செருகிய
தலையள் துகிலிடை யழகிய குறமகள்
தனது தனமது பரிவொடு தழுவிய .. பெருமாளே.
பாடல் 374 விடமு மமுதமு ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ...
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன .. தனதான
விடமு மமுதமு மிளிர்வன இணைவிழி
வனச மலதழல் முழுகிய சரமென
விரைசெய் ம்ருகமத அளகமு முகிலல .. வொருஞான
விழியின் வழிகெட இருள்வதொ ரிருளென
மொழியு மமுதல வுயிர்கவர் வலையென
விழையு மிளநகை தளவல களவென .. வியனாபித்
தடமு மடுவல படுகுழி யெனஇடை
துடியு மலமத னுருவென வனமுலை
சயில மலகொலை யமனென முலைமிசை .. புரள்கோவை
தரள மணியல யமன்விடு கயிறென
மகளிர் மகளிரு மலபல வினைகொடு
சமையு முருவென வுணர்வொடு புணர்வது .. மொருநாளே
அடவி வனிதையர் தனதிரு பரிபுர
சரண மலரடி மலர்கொடு வழிபட
அசல மிசைவிளை புனமதி லினிதுறை .. தனிமானும்
அமர ரரிவையு மிருபுடை யினும்வர
முகர முகபட கவளத வளகர
அசல மிசைவரு மபிநவ கலவியும் .. விளையாடுங்
கடக புளகித புயகிரி சமுகவி
கடக கசரத துரகத நிசிசரர்
கடக பயிரவ கயிரவ மலர்களும் .. எரிதீயுங்
கருக வொளிவிடு தனுபர கவுதம
புநித முநிதொழ அருணையி லறம்வளர்
கருணை யுமைதரு சரவண சுரபதி .. பெருமாளே.
பாடல் 375 கமரி மலர்குழல் ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ...
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன .. தனதான
கமரி மலர்குழல் சரிய புளகித
கனக தனகிரி யசைய பொருவிழி
கணைக ளெனநுதல் புரள துகிலதை .. நெகிழ்மாதர்
கரிய மணிபுர ளரிய கதிரொளி
பரவ இணைகுழை யசைய நகைகதிர்
கனக வளைகல நடைகள் பழகிகள் .. மயில்போலத்
திமிரு மதபுழு கொழுக தெருவினி
லலைய விலைமுலை தெரிய மயல்கொடு
திலத மணிமுக அழகு சுழலிக .. ளித்ழுறல்
திரையி லமதென கழைகள் பலசுளை
யெனவு மவர்மயல் தழுவு மசடனை
திருகு புலைகொலை கலிகள் சிதறிட .. அருள்தாராய்
குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர
குமர குருபர குமர குருபர .. எனதாளங்
குரைசெய் முரசமொ டரிய விருதொலி
டமட டமடம டமட டமவென
குமுற திமிலைச லரிகி னரிமுத .. லிவைபாட
அமரர் முநிவரு மயனு மனைவரு
மதுகை மலர்கொடு தொழுது பதமுற
அசுரர் பரிகரி யிரத முடைபட .. விடும்வேலா
அகில புவனமொ டடைய வொளிபெற
அழகு சரண்மயில் புறம தருளியொ
ரருண கிரிகுற மகளை மருவிய .. பெருமாளே.
பாடல் 376 கயல்விழித் தேனெனைச் ( திருவருணை )
ராகம் - சிவரஞ்சனி ; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்)
தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் .. தனதான
கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்
கணவகெட் டேனெனப் .. பெறுமாது
கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்
கதறிடப் பாடையிற் .. றலைமீதே
பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்
பறைகள்கொட் டாவரச் .. சமனாரும்
பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்
பரிகரித் தாவியைத் .. தரவேணும்
அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்
றருணையிற் கோபுரத் .. துறைவோனே
அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்
தரியசொற் பாவலர்க் .. கெளியோனே
புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்
புனமறப் பாவையைப் .. புணர்வோனே
பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்
பொருமுழுச் சேவகப் .. பெருமாளே.
பாடல் 377 கறுவுமிக் காவியைக் ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ...
தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் .. தனதான
கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்
திலகுகட் சேல்களிப் .. புடனாடக்
கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்
களவினிற் காசினுக் .. குறவாலுற்
றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்
றுயர் பொருட் கோதியுட் .. படுமாதர்
ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்
புணையிணைத் தாள்தனைத் .. தொழுவேனோ
மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்
செறிதிருக் கோலமுற் .. றணைவானும்
மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்
றிடஅடற் சூரனைப் .. பொரும்வேலா
அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்
றருணையிற் கோபுரத் .. துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச் சேவகப் .. பெருமாளே.
பாடல் 378 பரியகைப் பாசம்விட் ( திருவருணை )
ராகம் - ஸாரமதி ; தாளம் - கண்டசாபு
தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் .. தனதான
பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
பயனுயிர்ப் போயகப் .. படமோகப்
படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்
படரெரிக் கூடுவிட் .. டலைநீரிற்
பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்
பிணிகளுக் கேயிளைத் .. துழல்நாயேன்
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்
பிரியமுற் றோதிடப் .. பெறுவேனோ
கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்
கமைவபற் றாசையக் .. கழலோர்முன்
கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்
கடவுள்செச் சேவல்கைக் .. கொடியோனென்
றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்
கருணையிற் கோபுரத் .. துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச் சேவகப் .. பெருமாளே.
பாடல் 379 தருணமணி வானி ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ...
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த .. தனதான
தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
தழலமளி மீதெ றிக்கு .. நிலவாலே
தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த
தறுகண்மத வேள்தொ டுத்த .. கணையாலே
வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று
மருவுமென தாவி சற்று .. மழியாதே
மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
மயிலின்மிசை யேறி நித்தம் .. வரவேணும்
கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி
கலவிதொலை யாம றத்தி .. மணவாளா
கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
கடியமல ராத ரித்த .. கழல்வீரா
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
அருணைநகர் கோபு ரத்தி .. லுறைவோனே
அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
அமரர்சிறை மீள விட்ட .. பெருமாளே.
பாடல் 380 முழுகிவட வாமு ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ..
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த .. தனதான
முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
முழுமதிநி லாவி னுக்கும் .. வசையாலும்
மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு
முதியமத ராஜ னுக்கு .. மழியாதே
புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த
புதுமையினி லாறி ரட்டி .. புயமீதே
புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர
பொருமயிலி லேறி நித்தம் .. வரவேணும்
எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு
ளெழுதரிய கோபு ரத்தி .. லுறைவோனே
இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த
இளமுலைவி டாத சித்ர .. மணிமார்பா
செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
சிவனைமுத லோது வித்த .. குருநாதா
திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற
சிறையடைய மீள விட்ட .. பெருமாளே.
பாடல் 381 வடவையன லூடு ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ..
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த .. தனதான
வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு
மதுரமொழி யாழி சைக்கு .. மிருநாலு
வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு
மடியருவ வேள்க ணைக்கு .. மறவாடி
நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு
நிறையுமிகு காத லுற்ற .. மயல்தீர
நினைவினொடு பீலி வெற்றி மரகத லாப சித்ர
நிலவுமயி லேறி யுற்று .. வரவேணும்
மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து
மவுலியற வாளி தொட்ட .. அரிராமன்
மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க
மவுனமறை யோது வித்த .. குருநாதா
இடையரிவு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு
ளினியகுண கோபு ரத்தி .. லுறைவோனே
எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு
மிடையுருவ வேலை விட்ட .. பெருமாளே.
பாடல் 382 ஆலவிழி நீலத் ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ..
தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் .. தந்ததான
ஆலவிழி நீலத் தாலதர பானத்
தாலளக பாரக் .. கொண்டலாலே
ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்
தாரநடை யால்நற் .. கொங்கையாலே
சாலமய லாகிக் காலதிரி சூலத்
தாலிறுகு பாசத் .. துன்ப்முழ்கித்
தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்
சாவதன்மு னேவற் .. கொண்டிடாயோ
சோலைதரு கானிற் கோலமற மானைத்
தோளிலுற வாகக் .. கொண்டவாழ்வே
சோதிமுரு காநித் தாபழய ஞானச்
சோணகிரி வீதிக் .. கந்தவேளே
பாலகக லாபக் கோமளம யூரப்
பாகவுமை பாகத் .. தன்குமாரா
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத் .. தம்பிரானே.
பாடல் 383 பேதகவி ரோதத் ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ..
தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் .. தந்ததான
பேதகவி ரோதத் தோதகவி நோதப்
பேதையர்கு லாவைக் .. கண்டுமாலின்
பேதைமையு றாமற் றேதமக லாமற்
பேதவுடல் பேணித் .. தென்படாதே
சாதகவி காரச் சாதலவை போகத்
தாழ்விலுயி ராகச் .. சிந்தையாலுன்
தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
சாரல்மற மானைச் .. சிந்தியேனோ
போதகம யூரப் போதகக டாமற்
போதருணை வீதிக் .. கந்தவேளே
போதகக லாபக் கோதைமுது வானிற்
போனசிறை மீளச் .. சென்றவேலா
பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்
பாருலகு வாழக் .. கண்டகோவே
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத் .. தம்பிரானே.
பாடல் 384 அமுத மூறுசோ ( திருவருணை )
ராகம் - செஞ்சுருட்டி ; தாளம் - அங்தாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன .. தனதான
அமுத மூறுசோ லாகிய தோகையர்
பொருளு ளாரையெ னாணையு னாணையெ
னருகு வீடிது தானதில் வாருமெ .. னுரைகூறும்
அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி .. னருள்தாராய்
குமரி காளிவ ராகிம கேசுரி
கவுரி மோடிசு ராரிநி ராபரி
கொடிய சூலிசு டாரணி யாமளி .. மகமாயி
குறளு ரூபமு ராரிச கோதரி
யுலக தாரிஉதாரிப ராபரி
குருப ராரிவி காரிந மோகரி .. அபிராமி
சமர நீலிபு ராரித னாயகி
மலைகு மாரிக பாலிந னாரணி
சலில மாரிசி வாயம னோகரி .. பரையோகி
சவுரி வீரிமு நீர்விட போஜனி
திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
சகல வேதமு மாயின தாயுமை .. யருள்பாலா
திமித மாடுசு ராரிநி சாசரர்
முடிக டோ றுக டாவியி டேயொரு
சிலப சாசுகு ணாலிநி ணாமுண .. விடும்வேலா
திருவு லாவுசொ ணேசர ணாமலை
முகிலு லாவுவி மானந வோநிலை
சிகர மீதுகு லாவியு லாவிய .. பெருமாளே.
பாடல் 385 உருகு மாமெழு ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ...
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன .. தனதான
உருகு மாமெழு காகவு மேமயல்
பெருகு மாசையு ளாகிய பேர்வரி
லுரிய மேடையில் வார்குழல் நீவிய .. வொளிமானார்
உடைகொள் மேகலை யால்முலை மூடியும்
நெகிழ நாடிய தோதக மாடியு
முவமை மாமயில் போல்நிற மேனிய .. ருரையாடுங்
கரவ தாமன மாதர்கள் நீள்வலை
கலக வாரியில் வீழடி யேநெறி
கருதொ ணாவதி பாதக னேசம .. தறியாத
கசட மூடனை யாளவு மேயருள்
கருணை வாரிதி யேயிரு நாயகி
கணவ னேயுன தாளிணை மாமலர் .. தருவாயே
சுருதி மாமொழி வேதியன் வானவர்
பரவு கேசனை யாயுத பாணிநல்
துளப மாலையை மார்பணி மாயவன் .. மருகோனே
தொலைவி லாவசு ரேசர்க ளானவர்
துகள தாகவு மேயெதி ராடிடு
சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் .. வருவோனே
அருணர் கோடியி னாரொளி வீசிய
தருண வாண்முக மேனிய னேயர
னணையு நாயகி பாலக னேநிறை .. கலையோனே
அணிபொன் மேருயர் கோபுர மாமதி
ளதிரு மாரண வாரண வீதியு
ளருணை மாநகர் மேவியு லாவிய .. பெருமாளே.
பாடல் 386 கரியுரி அரவ ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ...
தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன .. தனதான
கரியுரி அரவ மணிந்த மேனியர்
கலைமதி சலமு நிறைந்த வேணியர்
கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் .. கஞ்சமாதின்
கனமுலை பருகி வளர்ந்த காமனை
முனிபவர் கயிலை யமர்ந்த காரணர்
கதிர்விரி மணிபொ னிறைந்த தோளினர் .. கண்டகாள
விரிவென வுனது ளுகந்த வேலென
மிகவிரு குழையு டர்ந்து வேளினை
யனையவ ருயிரை விழுங்கி மேலும்வெ .. குண்டுநாடும்
வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற
விதமிகு கலவி பொருந்தி மேனியு
மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ .. ழிந்திடாதோ
எரிசொரி விழியு மிரண்டு வாளெயி
றிருபிறை சயில மிரண்டு தோள்முகி
லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ .. டிந்துவீழ்வ
தெனவிழ முதுகு பிளந்து காளிக
ளிடுபலி யெனவு நடந்து தாள்தொழ
எதிர்பொரு துதிர முகந்த வேகமு .. கைந்தவேலா
அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலை
அருணையி லறவு முயர்ந்த கோபுர
மதினுறை குமர அநந்த வேதமொ .. ழிந்துவாழும்
அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள்
அடவியி லரிவை குயங்கள் தோய்புய
அரியர பிரம புரந்த ராதியர் .. தம்பிரானே.
பாடல் 387 கனைகடல் வயிறுகு ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ...
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன .. தநததான
கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட
வடதம னியகிரி கம்ப மாய்நட
கணபண விபரித கந்த காளபு .. யங்கராஜன்
கயிறென அமரர நந்த கோடியு
முறைமுறை யமுதுக டைந்த நாளொரு
கதியற வுலகைவி ழுங்கு மேகவொ .. ழுங்குபோல
வினைமத கரிகளு மெண்டி சாமுக
கிரிகளு முறுகிட அண்ட கோளகை
வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு .. நஞ்சுபோல
விடுகுழை யளவும ளந்து காமுக
ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக
விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ .. ழிந்திடாதோ
முனைபெற வளையஅ ணைந்த மோகர
நிசிசரர் கடகமு றிந்து தூளெழ
முகிலென வுருவமி ருண்ட தாருக .. னஞ்சமீன
முழுகிய திமிரத ரங்க சாகர
முறையிட இமையவர் தங்க ளூர்புக
முதுகிரி யுருவமு னிந்த சேவக .. செம்பொன்மேரு
அனையன கனவித சண்ட கோபுர
அருணையி லுறையும ருந்து ணாமுலை
அபிநவ வனிதைத ருங்கு மாரநெ .. ருங்குமால்கொண்
டடவியில் வடிவுக ரந்து போயொரு
குறமகள் பிறகுதி ரிந்த காமுக
அரியர பிரமபு ரந்த ராதியர் .. தம்பிரானே.
பாடல் 388 இரவியு மதியுந் ( திருவருணை )
ராகம் - குந்தலவராளி; தாளம் - மிஸ்ர சாபு
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனனம் தனதன தனனம்
தனதன தனனம் .. தனதான
இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
புவிதனி லினமொன் .. றிடுமாதும்
எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
மிடர்கொடு நடலம் .. பலகூறக்
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
டுயிரினை நமனுங் .. கருதாமுன்
கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
கழலிணை கருதும் .. படிபாராய்
திருமரு வியதிண் புயனயன் விரியெண்
டிசைகிடு கிடவந் .. திடுசூரன்
திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
சிடவலி யொடுகன் .. றிடும்வேலா
அருமறை யவரந் தரமுறை பவரன்
புடையவ ருயஅன் .. றறமேவும்
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையி லுறையும் .. பெருமாளே.
பாடல் 389 விரகொடு வளைசங் ( திருவருணை )
ராகம் - முகாரி; தாளம் - மிஸ்ர சாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனனம் தனதன தனனம்
தனதன தனனம் .. தனதான
விரகொடு வளைசங் கடமது தருவெம்
பிணிகொடு விழிவெங் .. கனல்போல
வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்
றெனவிதி வழிவந் .. திடுபோதிற்
கரவட மதுபொங் கிடுமன மொடுமங்
கையருற வினர்கண் .. புனல்பாயுங்
கலகமும் வருமுன் குலவினை களையுங்
கழல்தொழு மியல்தந் .. தருள்வாயே
பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்
படவர வணைகண் .. டுயில்மாலம்
பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்
பயமற விடமுண் .. டெருதேறி
அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்
கையுமுற அனலங் .. கையில்மேவ
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையில் மருவும் .. பெருமாளே.
பாடல் 390 இடமடு சுறவை ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ..
தனதன தனன தனதன தனன
தனதன தனதன .. தந்ததான
இடமடு சுறவை முடுகிய மகர
மெறிகட லிடையெழு .. திங்களாலே
இருவினை மகளிர் மருவிய தெருவி
லெரியென வருசிறு .. தென்றலாலே
தடநடு வுடைய கடிபடு கொடிய
சரம்விடு தறுகண .. நங்கனாலே
சரிவளை கழல மயல்கொளு மரிவை
தனிமல ரணையின .. லங்கலாமோ
வடகுல சயில நெடுவுட லசுரர்
மணிமுடி சிதறஎ .. றிந்தவேலா
மறமக ளமுத புளகித களப
வளரிள முலையைம .. ணந்தமார்பா
அடலணி விகட மரகத மயிலி
லழகுட னருணையி .. னின்றகோவே
அருமறை விததி முறைமுறை பகரு
மரியர பிரமர்கள் .. தம்பிரானே.
பாடல் 391 கெஜநடை மடவார் ( திருவருணை )
ராகம் - ..; தாளம் - ..
தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா .. தனதான
கெஜநடை மடவார் வசமதி லுருகா
கிலெசம துறுபாழ் .. வினையாலே
கெதிபெற நினையா துதிதனை யறியா
கெடுசுக மதிலாழ் .. மதியாலே
தசையது மருவீ வசையுட லுடனே
தரணியில் மிகவே .. யுலைவேனோ
சததள மலர்வார் புணைநின கழலார்
தருநிழல் புகவே .. தருவாயே
திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்
திருநெடு கருமால் .. மருகோனே
திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்
திரிபுரை யருள்சீர் .. முருகோனே
நிசிசர ருறைமா கிரியிரு பிளவா
நிறையயில் முடுகா .. விடுவோனே
நிலமிசை புகழார் தலமெனு மருணா
நெடுமதில் வடசார் .. பெருமாளே.
பாடல் 392 அருக்கார் நலத்தைத் ( திருவருணை )
ராகம் - ..; தாளம் -
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
தனத்தா தனத்தத் .. தனதான
அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
கடுத்தாசை பற்றித் .. தளராதே
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
டறப்பே தகப்பட் .. டழியாதே
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
கலிச்சா கரத்திற் .. பிறவாதே
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
கலைப்போ தகத்தைப் .. புகல்வாயே
ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்
டுரைப்பார்கள் சித்தத் .. துறைவோனே
உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
டொளித்தோடும் வெற்றிக் .. குமரேசா
செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
செருச்சூர் மரிக்கப் .. பொரும்வேலா
திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்
றிருக்கோ புரத்திற் .. பெருமாளே.
பாடல் 393 அருமா மதனைப் ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனனா தனனத் தனனா தனனத்
தனனதா தனனத் .. தனதான
அருமா மதனைப் பிரியா தசரக்
கயலார் நயனக் .. கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத்
தணையா வலிகெட் .. டுடல்தாழ
இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்
றிளையா வுளமுக் .. குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
கிருபா தமெனக் .. கருள்வாயே
ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்
டுரமோ டெறிபொற் .. கதிர்வேலா
உறைமா னடவிக் குறமா மகளுக்
குருகா றிருபொற் .. புயவீரா
திருமால் கமலப் பிரமா விழியிற்
றெரியா வரனுக் .. கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்
றிருவீ தியினிற் .. பெருமாளே.
பாடல் 394 அழுதுமா வாவெனத் ( திருவருணை )
ராகம் - ..; தாளம் -
தனதனா தானனத் தனதனா தானனத்
தனதனா தானனத் .. தனதான
அழுதுமா வாவெனத் தொழுத்மு டூடுநெக்
கவசமா யாதரக் .. கடலூடுற்
றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்
கறியொணா மோனமுத் .. திரைநாடிப்
பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்
பெரியஆ தேசபுற் .. புதமாய
பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்
பெறுவதோ நானினிப் .. புகல்வாயே
பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
படியுமா றாயினத் .. தனசாரம்
பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்
பரமமா யூரவித் .. தகவேளே
பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்
பொடிபடா வோடமுத் .. தெறிமீனப்
புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்
பொருதவே லாயுதப் .. பெருமாளே.
பாடல் 395 ஆனைவரிக் கோடிளநிர்ப் ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத் தானதனத் .. தனதானா
ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்
டாடைமறைத் தாடுமலர்க் .. குழலார்கள்
ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட்
டாரையுமெத் தாகமயக் .. கிடுமோகர்
சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்
தூதுவிடுத் தேபொருளைப் .. பறிமாதர்
தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்
சோதியொளிப் பாதமளித் .. தருள்வாயே
தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்
சாயகடற் சூரைவதைத் .. திடுவோனே
தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்
தாபரம்வைத் தாடுபவர்க் .. கொருசேயே
தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்
தேயுருகிச் சேருமணிக் .. கதிர்வேலா
சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்
தேவமகட் கோர்கருணைப் .. பெருமாளே.
பாடல் 396 இடருக் கிடராகிய ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனனத் தனதானன தனனத் தனதானன
தனனத் தனதானன .. தனதான
இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு
மிறுதிச் சிறுகால்வரு .. மதனாலே
இயலைத் தருகானக முயலைத் தருமேனியி
லெரியைத் தருமாமதி .. நிலவாலே
தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
தொலையத் தனிவீசிய .. கடலாலே
துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
துவளத் தகுமோதுயர் .. தொலையாதோ
வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
மடியச் சுடஏவிய .. வடிவேலா
மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
மகிழப் புனமேவிய .. மயில்வீரா
அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய
லருணைத் திருவீதியி .. லுறைவோனே
அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
அமரர்க் கரசாகிய .. பெருமாளே.
பாடல் 397 இமராஜனி லாவதெ ( திருவருணை )
ராகம் - ஸரஸ்வதி; தாளம் - மிஸ்ரஜம்பை (10)
தனதாதன தானன தத்தம் .. தனதான
இமராஜனி லாவதெ றிக்குங் .. கனலாலே
இளவாடையு மூருமொ றுக்கும் .. படியாலே
சமராகிய மாரனெ டுக்குங் .. கணையாலே
தனிமானுயிர் சோரும தற்கொன் .. றருள்வாயே
குமராமுரு காசடி லத்தன் .. குருநாதா
குறமாமக ளாசைத ணிக்குந் .. திருமார்பா
அமராவதி வாழ்வம ரர்க்கன் .. றருள்வோனே
அருணாபுரி வீதியி னிற்கும் .. பெருமாளே.
பாடல் 398 இரத சுரதமுலை களுமார்பு ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
. தனதனத் தனதான
இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப
அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க
இசலி யிசலியுப ரிதலீலை யுற்று இடைநூல் நுடங்க
.. வுளமகிழ்ச் சியினோடே
இருவ ருடலுமொரு வுருவாய் நயக்க முகமே லழுந்த
அளக மவிழவளை களுமேக லிக்க நயனார விந்த
லகரி பெருகஅத ரமுமே யருத்தி முறையே யருந்த
.. உரையெழப் பரிவாலே
புருவ நிமிரஇரு கணவாள் நிமைக்க வுபசார மிஞ்ச
அவச கவசமள வியலே தரிக்க அதிலே யநந்த
புதுமை விளையஅது பரமா பரிக்க இணைதோளு மொன்றி
. அதிசுகக் கலையாலே
புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க
மனமு மனமுமுரு கியெயா தரிக்க வுயிர்போ லுகந்து
பொருள தளவுமரு வுறுமாய வித்தை விலைமாதர் சிங்கி
.. விடஅருட் புரிவாயே
பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த
தமர திமிரபிர பலமோக ரத்ந சலராசி கொண்ட
படியை முழுதுமொரு நொடியே மதித்து வலமாக வந்து
.. சிவனிடத் தமர்சேயே
பழநி மிசையிலிசை யிசையே ரகத்தில் திருவா வினன்கு
டியினில் பிரமபுர மதில்வாழ் திருத்த ணிகையூடு மண்டர்
பதிய முதியகதி யதுநா யெனுக்கு முறவாகி நின்று
.. கவிதையைப் புனைவோனே
அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபால னன்ப
ரடையு மிடரைமுடு கியெநூற துட்ட கொலைகார ரென்ற
அசுரர் படையையடை யவும்வே ரறுத்த அபிராம செந்தி
.. லுரகவெற் புடையோனே
அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த
இரண கரணமுர ணுறுசூர னுட்க மயிலேறு கந்த
அருணை யிறையவர்பெ ரியகோபு ரத்தில் வடபா லமர்ந்த
.. ஆறுமுகப் பெருமாளே.
பாடல் 399 இரவுபகற் பலகாலும் ( திருவருணை )
ராகம் - ஸாமா; தாளம் - கண்டசாபு (2 1/2) (எடுப்பு 1/2 தள்ளி)
தனதனனத் தனதான தனதனனத் .. தனதான
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் .. தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் .. தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் .. துவஞானா
அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் .. பெருமாளே.
பாடல் 400 இருவர் மயலோ ( திருவருணை )
ராகம் - ஸாவேரி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட தகதிமி-3 1/2
தனன தனனா தனன தனனா
தனன தனனா .. தனதான
இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ .. அணுகாத
இருடி அயன்மா லமர ரடியா
ரிசையு மொலிதா .. னிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய் .. மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதா
னுனது கிருபா .. கரமேதோ
பரம குருவா யணுவி லசைவாய்
பவன முதலா .. கியபூதப்
படையு முடையாய் சகல வடிவாய்
பழைய வடிவா .. கியவேலா
அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல் .. விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ் .. பெருமாளே.
பாடல் 401 இருவினை யஞ்ச ( திருவருணை )
ராகம் - பூர்விகல்யாணி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த .. தனதான
இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்க .. மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
வினதக முங்கொ .. டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
களிமலர் சிந்த .. அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந டங்கொ .. டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட .. விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
திகழந டஞ்செய் .. தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
அமலன்ம கிழ்ந்த .. குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குர மங்கை
அமளிந லங்கொள் .. பெருமாளே.
பாடல் 402 இருவினை யூண்ப ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த
தனதன தாந்த தந்த .. தனதான
இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
யிடரடை பாழ்ம்பொ தும்ப .. கிதவாரி
இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப
மிரவிடை தூங்கு கின்ற .. பிணநோவுக்
குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ
டுயிர்குடி போங்கு ரம்பை .. யழியாதென்
றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
னுபயப தாம்பு யங்க .. ளடைவேனோ
அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
ளமரர் குழாங்கு விந்து .. தொழவாழும்
அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
அபிநவ சார்ங்க கண்டன் .. மருகோனே
கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட
கடவுள்ந டேந்த்ரர் மைந்த .. வரைசாடுங்
கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
கரகுலி சேந்த்ரர் தங்கள் .. பெருமாளே.
பாடல் 403 இருளளக மவிழமதி ( திருவருணை )
ராகம் - ..; தாளம் -
தனதனன தனதனன தான தத்த தந்த
தனதனன தனதனன தான தத்த தந்த
தனதனன தனதனன தான தத்த தந்த .. தனதான
இருளளக மவிழமதி போத முத்த ரும்ப
இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள்
இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க .. எவராலும்
எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி
யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த
இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து .. முனிவாறி
மருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து
முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து
மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து .. விடுபோதும்
முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த
பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று
முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று .. மறவேனே
ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து
கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து
உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து .. சபையூடே
ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று
உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று
உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த .. சிறியோனே
அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ
டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த
அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து .. அமுதாக
அருளுமரி திருமருக வார ணத்தை யன்று
அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த
அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த .. பெருமாளே.
பாடல் 404 இறுகு மணிமுலை ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனன தனதன தனன தனதன
தனன தனதன .. தனதான
இறுகு மணிமுலை மருவு தரளமு
மெரியு முமிழ்மதி .. நிலவாலே
இரவி யெனதுயிர் கவர வருகுழ
லிசையி லுறுகட .. லலையாலே
தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு
சரமி லெளியெனு .. மழியாதே
தருண மணிபொழி லருணை நகருறை
சயில மிசையினில் .. வரவேணும்
முறுகு திரிபுர மறுகு கனலெழ
முறுவ லுடையவர் .. குருநாதா
முடிய கொடுமுடி யசுரர் பொடிபட
முடுகு மரகத .. மயில்வீரா
குறவர் மடமக ளமுத கனதன
குவடு படுமொரு .. திருமார்பா
கொடிய சுடரிலை தனையு மெழுகடல்
குறுக விடவல .. பெருமாளே.
பாடல் 405 உலையிலன லொத்தா ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனதனன தத்த தனதனன தத்த
தனதனன தத்த .. தனதான
உலையிலன லொத்தா வுடலினனல் பற்றி
யுடுபதியை முட்டி .. யமுதூற
லுருகிவர விட்ட பரமசுக முற்று
வுனதடியை நத்தி .. நினையாமற்
சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு
திகழ்முகவர் முத்து .. நகையாலே
சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத்
திருடனென வெட்கி .. யலைவேனோ
கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
கனகமயில் விட்ட .. கதிர்வேலா
கருதலரின் முட்டி கருகிவரு துட்ட
கதவமண ருற்ற .. குலகாலா
அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி
அருணைவளர் வெற்பி .. லுறைவோனே
அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு
அரசுநிலை யிட்ட .. பெருமாளே.
பாடல் 406 கடல்பரவு தரங்க ( திருவருணை )
ராகம் - ஆரபி ; தாளம் - அங்கதாளம் (10)
தகதிமிதக-3, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தனதனன தனந்த தானன .. தந்ததான
கடல்பரவு தரங்க மீதெழு .. திங்களாலே
கருதிமிக மலந்தை மார்சொல்வ .. தந்தியாலே
வடவனலை முனிந்து வீசிய .. தென்றலாலே
வயலருணையில் வஞ்சி போதந .. லங்கலாமோ
இடமுமையை மணந்த நாதரி .. றைஞ்சும்வீரா
எழுகிரிகள் பிளந்து வீழஎ .. றிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமு .. னிந்தகோவே
அரிபிரம புரந்த ராதியர் .. தம்பிரானே.
பாடல் 407 கமலமுகப் பிறைநுதல்பொற் ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
தனதனனத் தனதனனத் .. தனதான
கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்
கயலெனபொற் சுழலும்விழிக் .. குழல்கார்போல்
கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற்
கரகமலத் துகிர்விரலிற் .. கிளிசேருங்
குமரிதனத் திதமலைக் கிசலியிணைக் கலசமெனக்
குவிமுலைசற் றசையமணிக் .. கலனாடக்
கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக்
குனகிபொருட் பறிபவருக் .. குறவாமோ
திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட்
டிமிடிமிடிட் டிகுர்திமிதித் .. தொலிதாளம்
செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட்
டிகைசிலைபட் டுவரிபடச் .. சிலைகோடித்
துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்
தொகுதசைதொட் டலகையுணத் .. தொடும்வேலா
துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற்
சுகமொடணைத் தருணகிரிப் .. பெருமாளே.
பாடல் 408 கமல மொட்டைக் ( திருவருணை )
ராகம் - ..; தாளம் -
தனன தத்தத் தத்த தத்தத் தனதன
தனன தத்தத் தத்த தத்தத் தனதன
தனன தத்தத் தத்த தத்தத் தனதன .. தனதான
கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை
நிலகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனிய
கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற .. இளநீரைக்
கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப
சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய
கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத .. னபிஷேகம்
அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து
அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி
னடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ .. டிருதாளம்
அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய
சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு
மபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக .. ளுறவாமோ
தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை
தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு
தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட .. எனவோதிச்
சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ
விழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள்
தசைகள் பட்சித் துக்க ளித்துக் கழுதொடு .. கழுகாட
அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள
அசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியென
அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு .. மயிலோனே
அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி
னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர
அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள் .. பெருமாளே.
பாடல் 409 கரிமுகக் கடகளிற் ( திருவருணை )
ராகம் - மத்யமாவதி ; தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் .. தனதான
கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்
கஜமுகத் தவுணனைக் .. கடியானை
கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்
கனிவயிற் றினிலடக் .. கியவேழம்
அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்
தமர்புரிக் கணபதிக் .. கிளையோனே
அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்
றியைமிகுத் தறுமுகக் .. குமரேசா
நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்
கையில்பிடித் தெதிர்நடத் .. திடுமீசன்
நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்
கரியுரித் தணிபவற் .. கொருசேயே
துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்
துரியமெய்த் தரளமொய்த் .. திடவீறிச்
சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
சுடரயிற் சரவணப் .. பெருமாளே.
பாடல் 410 கருநி றஞ்சிறந் ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனன தந்தனம் தனதன தனதன
தனன தந்தனம் தனதன தனதன
தனன தந்தனம் தனதன தனதன .. தனதான
கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன
மதன தந்திரங் கடியன கொடியன
கனக குண்டலம் பொருவன வருவன .. பரிதாவும்
கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன
விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன
கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன .. இளையோர்முன்
செருவை முண்டகஞ் சிறுவன வுறுவன
களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன
தெனன தெந்தனந் தெனதென தெனதென .. எனநாதம்
தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன
மருள்செய் கண்கள்கொண் டணைவர்த முயிரது
திருகு கின்றமங் கையர்வச மழிதலை .. யொழிவேனோ
மருவு தண்டைகிண் கிணிபரி புரமிவை
கலக லன்கலின் கலினென இருசரண்
மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு .. மிகவேறாய்
வலிய சிங்கமுங் கரடியு முழுவையு
முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை
மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு .. வுளநாடி
அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக
சதத ளம்பணிந் ததிவித கலவியு
ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட .. னணைவோனே
அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில்
நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து
அருணை வந்துதென் திசைதனி லுறைதரு .. பெருமாளே.
பாடல் 411 காணாத தூர ( திருவருணை )
ராகம் - மோஹனம்; தாளம் - அங்கதாளம் (16)
தகதகிடதகிட-4, தகதகிடதகிட-4, தகதகிட-2 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தானான தான
தானான தான .. தந்ததான
காணாத தூர நீணாத வாரி
காதார வாரம .. தன்பினாலே
காலாளும் வேளும் ஆலால நாதர்
காலால் நிலாவுமு .. னிந்துபூமேல்
நாணான தோகை நூலாடை சோர
நாடோ ர்க ளேசஅ .. ழிந்துதானே
நானாப வாத மேலாக ஆக
நாடோ றும் வாடிம .. யங்கலாமோ
சோணாச லேச பூணார நீடு
தோளாறு மாறும்வி .. ளங்குநாதா
தோலாத வீர வேலால டாத
சூராளன் மாளவெ .. குண்டகோவே
சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
தீராத காதல்சி .. றந்தமார்பா
தேவாதி கூடு மூவாதி மூவர்
தேவாதி தேவர்கள் .. தம்பிரானே.
பாடல் 412 காரா டக்குழ ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தானா தத்தன தானா தத்தன
தந்தன தந்தன தான தந்தன
தானா தத்தன தானா தத்தன
தந்தன தந்தன தான தந்தன
தானா தத்தன தானா தத்தன
தந்தன தந்தன தான தந்தன .. தந்ததான
காரா டக்குழ லாலா லக்கணை
கண்கள் சுழன்றிட வேமு கங்களி
னாலா பச்சிலை யாலே மெற்புசி
மஞ்சள் கலந்தணி வாளி கொந்தள
காதா டக்கலன் மேலா டக்குடி
யின்ப ரசங்குட மார்ப ளிங்கொளி .. கொங்கைமாதர்
காசா சைச்செய லாலே சொக்கிடு
விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
போலே நற்றெரு வூடா டித்துயல்
தொங்கல் நெகிழ்ந்திடை யேது வண்டிட
கால்தா விச்சதி யோடே சித்திர
மென்ப நடம்புரி வாரு டன்செயல் .. மிஞ்சலாகிச்
சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரை
வந்து கலந்துயி ரோட வங்கமொ
டூடா டிப்பல நோயோ டுத்தடி
கொண்டு குரங்கென வேந டந்துசொல்
சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய
டங்கி யழிந்துயி ரோடு ளைஞ்சொளி .. யுங்கண்மாறிச்
சேரா மற்பொறி கேளா மற்செவி
துன்பமொ டின்பமு மேம றந்துபின்
ஊரார் சுற்றமு மாதோர் மக்களு
மண்டியு மண்டையு டேகு விந்திது
சீசீ சிச்சிசி போகா நற்சனி
யன்கட வென்றிட வேகி டந்துடல் .. மங்குவேனோ
மாரோன் முப்புர நிறா யுற்றிட
அங்கி யுமிழ்ந்திடு வோரி பம்புலி
தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை
கங்கை யிளம்பிறை யார ணிந்தவர்
மாடே றிக்கட லாலா லத்தையு
முண்டவ ரெந்தைசி வாநு பங்குறை .. யென்றன்மாதா
மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி
யம்பிகை சங்கரி மோக சுந்தரி
வேதா மக்கலை ரூபாள் முக்கணி
ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள்
மாஞா னக்கும ராதோ கைப்பரி
யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர் .. தொண்டுபாடச்
சூரார் மக்கிட மாமே ருக்கிட
அங்கட லெண்கிரி யோடி பங்கொடு
தீபே ழற்றிட பாதா ளத்துறை
நஞ்சர வின்பண மாயி ரங்கெட
சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி
விண்கணி றைந்திட வேந டம்புரி .. கின்றவேலா
சோர்வே தத்தலை மேலா டிச்சுக
பங்கய செங்கர மோட கம்பெற
வாகா னக்குற மாதோ டற்புத
மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல்
தூணோ டிச்சுட ராகா சத்தைய
ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ் .. தம்பிரானே.
பாடல் 413 காருமரு வும்பெருகு ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தானதன தந்ததன தானதன தந்ததன
தானதன தந்ததன .. தந்த தனதான
காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய
காகளம டங்கவுமு .. ழங்கு மதனாலே
காலடர வம்பமளி மேலடர வந்துபொரு
காமன்விடு விஞ்சுகணை .. அஞ்சு மலராலே
ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென
ஓரிரவு வந்தெனது .. சிந்தை யழியாதே
ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு
லாவியக டம்பமலர் .. தந்த ருளுவாயே
ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய
ராதிபர வும்படிநி .. னைந்த குருநாதா
ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி
யாளுமுர முந்திருவும் .. அன்பு முடையோனே
மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய
வேலையலை யும்பகையும் .. அஞ்ச விடும்வேலா
மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு
வீதியிலெ ழுந்தருளி .. நின்ற பெருமாளே.
பாடல் 414 கீத விநோத ( திருவருணை )
ராகம் - திலங் ; தாளம் - அங்கதாளம் (8)
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தான தனான தத்த .. தனதான
கீத விநோத மெச்சு .. குரலாலே
கீறு மையார் முடித்த .. குழலாலே
நீதி யிலாத ழித்து .. முழலாதே
நீமயி லேறி யுற்று .. வரவேணும்
சூதமர் சூர ருட்க .. பொருசூரா
சோண கிரீயி லுற்ற .. குமரேசா
ஆதியர் காதொ ருச்சொ .. லருள்வோனே
ஆனை முகார்க னிட்ட .. பெருமாளே.
பாடல் 415 குரவநறு மளககுழல் ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனதனன தனதனன தானத் தாத்தன
தனதனன தனதனன தானத் தாத்தன
தனதனன தனதனன தானத் தாத்தன .. தனதான
குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ
குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ
குமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ .. குழையாத
குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ
குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ
குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ .. கொடியேன்யான்
பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய
புலையனிவ னெனவுலக மேசப் போக்கென
பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள் .. பெருகாதே
புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ
பொதுவகையி லருணைநிலை நீள்கர்த்தாவென
புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட .. நினையாதோ
அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு
மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ
அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய .. அறிவோனே
அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்
தருமமது சரவணையில் வாவித் தேக்கியெ
அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய .. இளையோனே
சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்பட
துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம
சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட .. முனிவோனே
துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்
துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை
சுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை .. பெருமாளே.
பாடல் 416 குழவியு மாய்மோக ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனதன தானான தானன தனதன தானான தானன
தனதன தானான தானன .. தனதான
குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி
குலவனு மாய்நாடு காடொடு .. தடுமாறிக்
குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட
விறகுட னேதூளி யாவது .. மறியாதாய்ப்
பழயச டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதர
பரிவிலி வானாலை நாடொறு .. மடைமாறிப்
பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக
பதியழி யாவீடு போயினி .. யடைவேனோ
எழுகடல் தநமுள மேருவு மிடிபட வேதாவும் வேதமு
மிரவியும் வாய்பாறி யோடிட .. முதுசேடன்
இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி
யிருபிள வாய்வீழ மாதிர .. மலைசாய
அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய்
அவுணர்த மாசேனை தூளெழ .. விளையாடி
அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயு தாவுயர்
அருணையில் வாழ்வாக மேவிய .. பெருமாளே.
பாடல் 417 கேதகைய பூமுடித்த ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தானதன தானதத்த தானதன தானதத்த
தானதன தானதத்த .. தனதான
கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
கேவலம தானஅற்ப .. நினைவாலே
கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
கேடுறுக வேநினைக்கும் .. வினையாலே
வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
மேதினியெ லாமுழற்று .. மடியேனை
வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து
வீறுமயில் மீதிலுற்று .. வருவாயே
நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து
நீடுபுகழ் தேவரிற்கள் .. குடியேற
நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த
நீலநிற மால்தனக்கு .. மருகோனே
சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்
சோபைவட கோபுரத்தி .. லுறைவோனே
சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி
தோளின்மிசை வாளெடுத்த .. பெருமாளே.
பாடல் 418 கோடான மடவார்கள் ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தானான தனதான .. தனதான
கோடான மடவார்கள் .. முலைமீதே
கூர்வேலை யிணையான .. விழியூடே
ஊடாடி யவரோடு .. முழலாதே
ஊராக திகழ்பாத .. மருள்வாயே
நீடாழி சுழல்தேசம் .. வலமாக
நீடோ டி மயில்மீது .. வருவோனே
சூடான தொருசோதி .. மலைமேவு
சோணாடு புகழ்தேவர் .. பெருமாளே.
பாடல் 419 கோடுசெறி மத்த ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தானதன தத்த தத்த தானதன தத்த தத்த
தானதன தத்த தத்த .. தனதான
கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி
கூறுசெய்த ழித்து ரித்து .. நடைமாணார்
கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட
கோபநுத லத்த ரத்தர் .. குருநாதா
நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு
நீறெழமி தித்த நித்த .. மனதாலே
நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த
நீலமயில் தத்த விட்டு .. வரவேணும்
ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி
ஆரமது மெத்து சித்ர .. முலைமீதே
ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி
ஆறிருதி ருப்பு யத்தில் .. அணைவீரா
தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி
சீருறவு ளத்தெ ரித்த .. சிவவேளே
தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த
தேவர்சிறை வெட்டி விட்ட .. பெருமாளே.
பாடல் 420 சிலைநுதல் வைத்துச் ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன .. தனதான
சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும
தலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய
திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் .. தனிலேறிச்
செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை
தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி
செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக .. விழிசீறிப்
புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர்
பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி
புரிவளை கைக்குட் கலின்க லென்றிட .. அநுராகம்
புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி
லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு
புணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் .. மறவேனோ
கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை
மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட
கணகண கட்கட் கணின்க ணென்றிட .. நடமாடுங்
கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு
முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி
கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் .. புயவீரா
அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை
யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்
அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட .. வருவோனே
அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர்
தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்
அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் .. பெருமாளே.
பாடல் 421 சிவமா துடனே ( திருவருணை )
ராகம் - ஆபோகி; தாளம் - ஆதி
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா .. தனதான
சிவமா துடனே அநுபோ கமதாய்
சிவஞா னமுதே .. பசியாறித்
திகழ்வோ டிருவோ ரொ ரு பமதாய்
திகைலோ கமெலா .. மநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோ
ரிளையோ னெனவே .. மறையோத
இறையோ னிடமாய் விளையா டுகவே
யியல்வே லுடன்மா .. அருள்வாயே
தவலோ கமெலா முறையோ வெனவே
தழல்வேல் கொடுபோ .. யசுராரைத்
தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
தவம்வாழ் வுறவே .. விடுவோனே
கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்
கடனா மெனவே .. அணைமார்பா
கடையேன் மிடிதூள் படநோய் விடவே
கனல்மால் வரைசேர் .. பெருமாளே.
பாடல் 422 சினமுடுவல் நரிகழுகு ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் .. தந்ததான
சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங்
கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ்
செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந் .. துன்பமேவு
செனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந்
தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ்
சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந் .. தொன்றுநாயேன்
கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங்
குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன்
கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண் .. டன்பரோடே
கலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம்
புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங்
கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன் .. சிந்தியாதோ
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்
தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந் .. தண்டர்பேரி
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்
டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்
கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ் .. சிந்திமாளச்
சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந்
திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன்
செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண் .. டஞ்சல்பாடத்
திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங்
கவுரிமன முருகவொரு கங்கைகண் டன்புறுந்
திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந் .. தம்பிரானே.
பாடல் 423 சுக்கி லச்சுரொணி ( திருவருணை )
ராகம் -.., தாளம் -
தத்த தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன .. தந்ததான
சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றநளி
னத்தி லப்புவென ரத்த முற்றிசுக
சுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகை .. வந்துகோலத்
தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிக
வட்ட மிட்டுடல வெப்ப முற்றுமதி
சொற்ற பத்தின் மறியக்ஷ ரத்தினுடை .. விஞ்சையாலே
கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலை
யைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர்
கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை .. அந்தமேவிக்
கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயி
லொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறி
கட்டி யிப்படிபி றப்பி லுற்றுடல .. மங்குவேனோ
தெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிட
ணற்கு நத்தரச ளித்து முத்திகொடு
சித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன் .. மருகோனே
செக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரி
யிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகு
சித்த னைத்தையும்வி ழித்த சத்தியுமை .. தந்தபாலா
தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலை
யுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்ட திசை
தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின் .. மண்டும்வேலா
தத்தை வித்ருமநி றத்தி முத்தணிகு
றத்தி கற்பகவ னத்தி சித்தமவை
தக்கு நத்தஅரு ணைக்கி ரிக்குள்மகிழ் .. தம்பிரானே.
பாடல் 424 செஞ்சொற் பண்பெற் ( திருவருணை )
ராகம் -.; தாளம் -
தந்தத் தந்தத் தனதன தானன
தந்தத் தந்தத் தனதன தானன
தந்தத் தந்தத் தனதன தானன .. தனதான
செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை
கும்பத் தந்திக் குவடென வாலிய
தெந்தப் பந்தித் தரளம தாமென .. விடராவி
சிந்திக் கந்தித் திடுகளை யாமுன
தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ
திண்டுப் புந்தித் திடுகனி தானுமு .. னிதழாமோ
மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை
கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள
வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென .. முறையேய
வந்தித் திந்தப் படிமட வாரொடு
கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு
மந்தப் புந்திக் கசடனெ நாளுன .. தடிசேர்வேன்
நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு
திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர்
நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை .. யுகிராலே
நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர
நந்திக் கம்பத் தெழுநர கேசரி
நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென .. மிகநாடி
வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்
பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி
விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் .. புனமீதே
வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி
துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி
வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய .. பெருமாளே.
பாடல் 425 செயசெய அருணாத் ( திருவருணை )
ராகம் - தேஷ்; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்)
தனதன தனனாத் தனதன தனனத்
தனதன தனனாத் தனதன தனனத்
தனதன தனனாத் தனதன தனனத் .. தனதான
செயசெய அருணாத் திரிசிவ யநமச்
செயசெய அருணாத் திரிமசி வயநச்
செயசெய அருணாத் திரிநம சிவயத் .. தி முலா
செயசெய அருணாத் திரியந மசிவச்
செயசெய அருணாத் திரிவய நமசிச்
செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் .. தெனமாறி
செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
தரகர சரணாத் திரியென உருகிச்
செயசெய குருபாக் கியமென மருவிச் .. சுடர்தாளைச்
சிவசிவ சரணாத் திரிசெய செயனச்
சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
திருவடி சிவவாக் கியகட லமுதைக் .. குடியேனோ
செயசெய சரணாத் திரியென முநிவர்க்
கணமிது வினைகாத் திடுமென மருவச்
செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் .. சுடும்வேலா
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
கடிதலை தெரியாப் படிநிண அருணச்
சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் .. புகல்வோனே
செயசெய சரணாத் திரியெனு மடியெற்
கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் .. குருநாதா
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் .. பெருமாளே.
பாடல் 426 தமர குரங்களுங் ( திருவருணை )
ராகம் - ஆனந்த பைரவி ; தாளம் - அங்கதாளம் (9)
தகதிமி-2, தகதகிட-2 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனன தனந்தனந் தான தத்த தந்த
தனன தனந்தனந் தான தத்த தந்த
தனன தனந்தனந் தான தத்த தந்த
.. தனதனத் தனதான
தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து
தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு
.. முளகதக் கடமாமேல்
தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து
அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து
தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க
. மரணபக் குவமாநாள்
கமல முகங்களுங் கோம ளத்தி லங்கு
நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு
கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க
.. தமுமடற் சுடர்வேலுங்
கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த
மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை
கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து
.. வரமெனக் கருள்கூர்வாய்
இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி
அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை
யிளமுலை யின்செழும் பால்கு டுத்தி லங்கு
.. மியல்நிமிர்த் திடுவோனே
இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க
முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற
ரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த
.. அயிலுடைக் கதிர்வேலா
அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு
கழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்ற
அபிநவ துங்ககங் காந திக்கு மைந்த
.. அடியவர்க் கெளியோனே
அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை
தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ
லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த
.. அறுமுகப் பெருமாளே.
பாடல் 427 தமிழோதிய குயிலோமயி ( திருவருணை )
ராகம் -.; தாளம் -
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் .. தனதான
தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்
கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந்
தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின் .. சுவைசேருந்
தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந்
திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின்
சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின் .. சுடர்பாயக்
குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ்
சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங்
கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின் .. கொடிமாதர்
குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ்
சரணுபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின்
கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுமன் .. தகையேனே
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
திகுடோ டிமி டிமிடோ டிமி டாங்குட டிந்தகமென் .. றியல்பேரி
திநச்முடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங்
கரிதேர்பரி யசுரார்கள மாண்டிட நீண்டரவின்
சிரமீள்பட குவடோ துகள் வான்பெற வாங்கியவண் .. கதிர்வேலா
கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்
தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவண்
கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென் .. குரவோனே
கடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண்
சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின்
கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண் .. பெருமாளே.
பாடல் 428 தலையை மழித்துச் ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த
தனன தனத்தத் தனந்த .. தனதான
தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து
சடையை வளர்த்துப் புரிந்து .. புலியாடை
சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து
தவமொரு சத்தத் தறிந்து .. திருநீறு
கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து
கதறு நிலைக்கைக் கமர்ந்த .. எழிலோடே
கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து
கவலை யொழித்தற் கிரங்கி .. யருள்வாயே
அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து
மமரு லகத்திற் புகுந்து .. முயரானை
அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து
மறிவு ளபத்தர்க் கிரங்கு .. மிளையோனே
மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து
வறிது நகைத்திட் டிருந்த .. சிவனார்தம்
மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து
மறம யிலைச்சுற் றிவந்த .. பெருமாளே.
பாடல் 429 திருட்டு வாணிப ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன .. தனதான
திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள் .. மிகநாணார்
சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக
ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள்
சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள் .. விழியாலே
வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள்
மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை
மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி .. மிகநீறால்
விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்
தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை
விடுத்து நானொரு மித்திரு பொற்கழல் .. பணிவேனே
தரித்த தோகண தக்கண செக்கண
குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு .. எனதாளந்
தடக்கை தாளமு மிட்டியல் மத்தள
மிடக்கை தாளமு மொக்கந டித்தொளி
தரித்த கூளிகள் தத்திமி தித்தென .. கணபூதம்
அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு
மிரந்த மாமுடி யைக்கொடு கக்கழ
லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண .. அறவேதான்
அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி
திருக்கை வேல்தனை விட்டரு ளிப்பொரும்
அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள் .. பெருமாளே.
பாடல் 430 தேதென வாச ( திருவருணை )
ராகம் - ...; தாளம் -
தானன தான தத்த தானன தான தத்த
தானன தான தத்த .. தனதான
தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
தேனளி சூழ மொய்த்த .. மலராலே
சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட
சீதநி லாவெ றிக்கு .. மனலாலே
போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட
போர்மத ராஜ னுக்கு .. மழியாதே
போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்த
பூவையை நீய ணைக்க .. வரவேணும்
மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை
மாயனு மாத ரிக்கு .. மயில்வீரா
வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள்
வாரண மான தத்தை .. மணவாளா
மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து
வீதியின் மேவி நிற்கு .. முருகோனே
மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்
வேலடை யாள மிட்ட .. பெருமாளே.
பாடல் 431 தோத கப்பெ ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தான தத்த தந்த தான தத்த தந்த
தான தத்த தந்த .. தனதான
தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
தோகை யர்க்கு நெஞ்ச .. மழியாதே
சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று
சூழ்பி ணிக்க ணங்க .. ளணுகாதே
பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து
பாசம் விட்டெ றிந்து .. பிடியாதே
பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த
பாடல் மிக்க செஞ்சொல் .. தரவேணும்
வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப
வீர பத்ர கந்த .. முருகோனே
மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து
வேலை யிற்றொ ளைந்த .. கதிர்வேலா
கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த
கோம ளக்கு ரும்பை .. புணர்வோனே
கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த
கோபு ரத்த மர்ந்த .. பெருமாளே.
பாடல் 432 பாண மலரது ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தான தனதன தத்தம் .. தனதான
பாண மலரது தைக்கும் .. படியாலே
பாவி யிளமதி கக்குங் .. கனலாலே
நாண மழிய வுரைக்குங் .. குயிலாலே
நானு மயலி லிளைக்குந் .. தரமோதான்
சேணி லரிவை யணைக்குந் .. திருமார்பா
தேவர் மகுட மணக்குங் .. கழல்வீரா
காண அருணையில் நிற்குங் .. கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் .. பெருமாளே.
பாடல் 433 பாலாய் நூலாய் ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் .. தனதான
பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
பாகாய் வாய்சொற் .. கொடியார்தாம்
பாடா வாடா வேடா வாலே
பாடா யீடற் .. றிடைபீறுந்
தோலா லேகா லாலே யூனா
லேசூழ் பாசக் .. குடில்மாசு
தோயா மாயா வோயா நோயால்
சோர்வாய் மாளக் .. கடவேனோ
ஞாலா மேலா வேதா போதா
நாதா சோதிக் .. கிரியோனே
ஞானா சாரா வானாள் கோனே
நானா வேதப் .. பொருளோனே
வேலா பாலா சீலா காரா
வேளே வேடக் .. கொடிகோவே
வீரா தாரா ஆறா தாரா
வீரா வீரப் .. பெருமாளே.
பாடல் 434 பூணர்முலை மடந்தை ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனதன தனந்த தான தனதன தனந்த தான
தனதன தனந்த தான .. தனதான
பூணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக
பொறியுட லிறந்து போன .. தளவேதுன்
புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி
பொருளென நினைந்து நாயெ .. னிடர்தீர
மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு
மணிகிரி யிடங்கொள் பாநு .. வெயிலாசை
வரிபர வநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத
மயில்மிசை மகிழ்ந்து நாடி .. வரவேணும்
பணைமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள் போல
பரிவுகொ டுகந்து வேத .. மதுகூறப்
பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர்
படைகட லிறந்து போக .. விடும்வேலா
அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல
அமளியில் களங்க ளோசை .. வளர்மாது
அரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக
அருணையின் விலங்கல் மேவு .. பெருமாளே.
பாடல் 435 புலைய னான ( திருவருணை )
ராகம் - ஸிந்து பைரவி ; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான .. தனதான
புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
பொறையி லாத கோபீகன் .. முமுடன்
புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
பொறிக ளோடி போய்வீழு .. மதிசூதன்
நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
நெறியி லாத வேமாளி .. குலபாதன்
நினது தாளை நாடோ று மனதி லாசை வீடாமல்
நினையு மாறு நீமேவி .. யருள்வாயே
சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
சிதையு மாறு போராடி .. யொருசீதை
சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
திறமி யான மாமாயன் .. மருகோனே
அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
அமர தாடி யேதோகை .. மயிலேறி
அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
அருணை மீதி லேமேவு .. பெருமாளே.
பாடல் 436 போககற் பக்கடவுட் ( திருவருணை )
ராகம் -.; தாளம் -
தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத்
தானனத் தத்ததனத் .. தத்த தனதான
போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்
பாரியைப் பொற்குவையுச் .. சிப்பொ ழுதிலீயும்
போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத்
தோரைமெச் சிப்பிரியப் .. பட்டு மிடிபோகத்
த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்
தாரமுட் பட்டதிருட் .. டுக்க விகள்பாடித்
தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்
சேல்வலைப் பட்டடிமைப் .. பட்டு விடலாமோ
ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்
றாதரிக் கைக்கருணைத் .. துப்பு மதில்சூழும்
ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக்
காகவெற் றிக்கலபக் .. கற்கி யமர்வோனே
தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்
தூணிமுட் டச்சுவறத் .. திக்கி லெழுபாரச்
சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்
சூரனைப் பட்டுருவத் .. தொட்ட பெருமாளே.
பாடல் 437 மானை விடத்தைத் ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தான தனத்தத் தனத்த தத்தன
தான தனத்தத் தனத்த தத்தன
தான தனத்தத் தனத்த தத்தன .. தனதான
மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்
மீனை நிரப்பிக் குனித்து விட்டணை
வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை .. வடிவேலை
வாளை வனத்துற் பலத்தி னைச்செல
மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர்
மாய வலைப்பட் டிலைத்து டக்குழல் .. மணநாறும்
ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு
வூறு முபத்தக் கருத்த டத்தினை
யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு .. தடுமாறும்
ஊசலை நித்தத் த்வமற்ற செத்தையு
பாதியை யொப்பித் துனிப்ப வத்தற
வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை .. தெளியாதோ
சானகி கற்புத் தனைச்சு டத்தன
சோக வனத்திற் சிறைப்ப டுத்திய
தானை யரக்கற் குலத்த ரத்தனை .. வருமாளச்
சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல்
வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு
தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் .. மருகோனே
சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி
லானை மதத்துக் கிடக்கு மற்புத
சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ .. மணிநீபத்
தோள்கொடு சக்ரப் பொருப்பி னைப்பொடி
யாகநெ ருக்கிச் செருக்க ளத்தெதிர்
சூரனை வெட்டித் துணித்த டக்கிய .. பெருமாளே.
பாடல் 438 முகத்து லக்கிக ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனத்த தத்தன தானா தனதன
தனத்த தத்தன தானா தனதன
தனத்த தத்தன தானா தனதன .. தந்ததான
முகத்து லக்கிக ளாசா ரவினிகள்
விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள்
முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள் .. முந்துசூது
மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை
பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ
முயற்று பொட்டிகள் மோகா வலமுறு .. கின்ற்முடர்
செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள்
திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள்
சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை .. சிந்தைமாயத்
திரட்பொ றிச்சிகள் மாபா விகளப
கடத்த சட்டைகள் மூதே விகளொடு
திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி .. யென்றுசேர்வேன்
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு
செகுச்செ குச்செகு சேசே செககண
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு .. தொந்ததீதோ
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு
திகுத்தி குத்திகு தீதோ எனவொரு
துவக்க நிர்த்தன மாடா வுறைபவர் .. தொணடர்பேணும்
அகத்தி யப்பனு மால்வே தனும்அறம்
வளர்த்த கற்பக மாஞா லியுமகி
ழவுற்ற நித்தபி ரானே அருணையில் .. நின்றகோவே
அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழ
முறித்து ழக்கிய வானோர் குடிபுக
அமர்த்தி விட்டசு வாமீ அடியவர் .. தம்பிரானே.
பாடல் 439 மேக மொத்தகுழ ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தான தத்ததன தான தத்ததன
தான தத்ததன தான தத்ததன
தான தத்ததன தான தத்ததன .. தனதான
மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ
வாளி யொத்தவிழி யார்மு கக்கமல
மீது பொட்டிடழ கார்க ளத்திலணி .. வடமாட
மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென
மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம்
வீறி டத்துவளு நூலொ டொத்தஇடை .. யுடைமாதர்
தோகை பக்ஷிநடை யார்ப தத்திலிடு
நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள்
சோர நற்றெருவு டேந டித்துமுலை .. விலைகூறிச்
சூத கச்சரச மோடெ யெத்திவரு
வோரை நத்திவிழி யால்ம ருட்டுமயல்
தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க .. ளுறவாமோ
சேக ணச்செகண தோதி மித்திகுட
டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
தீத கத்திமித தோவு டுக்கைமணி .. முரசோதை
தேச முட்கவர ஆயி ரச்சிரமு
மூளி பட்டுமக மேரு வுக்கவுணர்
தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற .. விடும்வேலா
ஆதி மத்திபல கார ணத்தியெனை
யீண சத்திஅரி ஆச னத்திசிவ
னாக முற்றசிவ காமி பத்தினியின் .. முருகோனே
ஆர ணற்குமறை தேடி யிட்டதிரு
மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி
ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ் .. பெருமாளே.
பாடல் 440 மொழிய நிறங்கறுத்து ( திருவருணை )
ராகம் - .:; தாளம் -
தனதன தந்ததத்த தனதன தந்ததத்த
தனதன தந்ததத்த .. தனதான
மொழிய நிறங்கறுத்து மகரவி னங்கலக்கி
முடியவ ளைந்தரற்று .. கடலாலும்
முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள்
முழுகியெ ழுந்திருக்கு .. நிலவாலும்
மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற
மயல்தணி யும்படிக்கு .. நினைவாயே
மரகத துங்கவெற்றி விகடந டங்கொள்சித்ர
மயிலினில் வந்துமுத்தி .. தரவேணும்
அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி
னமுதத னம்படைத்த .. திருமார்பா
அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்கு
மருணைவ ளம்பதிக்கு .. மிறையோனே
எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்க
எழுசயி லந்தொளைத்த .. சுடர்வேலா
இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த
ரிவர்கள்ப யந்தவிர்த்த .. பெருமாளே.
பாடல் 441 வலிவாத பித்தமொடு ( திருவருணை )
ராகம் - கெளரி மனோஹரி ; தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதான தத்ததன தனதான தத்ததன
தனதான தத்ததன .. தனதான
வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
வறல்சூலை குட்டமொடு .. குளிர்தாகம்
மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை
வருநீர டைப்பினுடன் .. வெகுகோடி
சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை
தெளியாவெ னக்குமினி .. முடியாதே
சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
சிவஞான சித்திதனை .. யருள்வாயே
தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு
சுடர்வீசு சக்ரமதை .. யருள்ஞான
துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
சுகவாரி சித்தனருள் .. முருகோனே
அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ
டசுராரி றக்கவிடு .. மழல்வேலா
அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்
அருணா சலத்திலுறை .. பெருமாளே.
பாடல் 442 விடுமத வேள்வாளியின் ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தனதன தானாதன தனதன தானாதன
தனதன தானாதன .. தனதான
விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
விழிகொடு வாபோவென .. வுரையாடும்
விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள்
ம்ருகமத கோலாகல .. முலைதோய
அடையவு மாசாபர வசமுறு கோமாளியை
அவனியு மாகாசமும் .. வசைபேசும்
அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை
அடியவ ரோடாள்வது .. மொருநாளே
வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம்
வனிதையர் தோள்தோய்தரு .. மபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல
மகிபச தாகாலமு .. மிளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற
உலகுய வாரார்கலி .. வறிதாக
உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ
ஒருதனி வேலேவிய .. பெருமாளே.
பாடல் 443 விதிய தாகவெ ( திருவருணை )
ராகம் - ஆஹிரி .; தாளம் - அங்கதாளம் (14 1/2)
தகிடதகதிமி-3 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தக-1, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தனன தானன தனன தானனா
தனன தானனம் .. தனதான
விதிய தாகவெ பருவ மாதரார்
விரகி லேமனந் .. தடுமாறி
விவர மானதொ ரறிவு மாறியே
வினையி லேஅலைந் .. தி முடன்
முதிய மாதமி ழிசைய தாகவே
மொழிசெய் தேநினைந் .. திடுமாறு
முறைமை யாகநி னடிகள் மேவவே
முனிவு தீரவந் .. தருள்வாயே
சதிய தாகிய அசுரர் மாமுடீ
தரணி மீதுகுஞ் .. சமராடிச்
சகல லோகமும் வலம தாகியே
தழைய வேவருங் .. குமரேசா
அதிக வானவர் கவரி வீசவே
அரிய கோபுரந் .. தனில்மேவி
அருணை மீதிலே மயிலி லேறியே
அழக தாய்வரும் .. பெருமாளே.
பாடல் 444 விந்துப் புளகித ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தந்தத் தனதன தந்தத் தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன தனத்த தனதன
--------- 3 முறை ----------- .. தனதான
விந்துப் புளகித இன்புற் றுருகிட
சிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளி
விரித்த கமலமெல் தரித்து ளொருசுழி
யிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி
விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு
மிண்டிச் செயலினி ரம்பித் துருவொடு
மெழுக்கி லுருவென வலித்து எழுமதி
கழித்து வயிர்குட முகுப்ப வொருபதில்
விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி
வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு
விழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடு
கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு .. மருள்கூர
மென்பற் றுருகிமு கந்திட் டனைமுலை
யுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர்
வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடை
துடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு
வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட
முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு
விதித்த முறைபடி படித்து மயல்கொள
தெருக்க ளினில்வரு வியப்ப இளமுலை
விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி
துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி
விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென
நடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வரு .. வழியேபோய்ச்
சத்தித் துறவொடு பஞ்சிட் டணைமிசை
கொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொ
டணைத்து மலரிதழ் கடித்து இருகர
மடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர்
சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர்
சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட
சரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல்
வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத
சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடு
வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினை
சலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி
பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர் .. நரைமேவித்
தன்கைத் தடிகொடு குந்திக் கவியென
உந்திக் கசனம றந்திட் டுளமிக
சலித்து வுடல்சல மிகுத்து மதிசெவி
விழிப்பு மறைபட கிடத்தி மனையவள்
சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில்
சண்டக் கருநம னண்டிக் கொளுகயி
றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை
பதைப்ப தனிவழி யடித்து கொடுசெல
சந்தித் தவரவர் பங்குக் கழுதுஇ
ரங்கப் பிணமெடு மென்றிட் டறைபறை
தடிப்ப சுடலையி லிறக்கி விறகொடு
கொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனு .. முடலாமோ
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
என்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடி
பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை
திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு
டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு
செம்பொற் குடமுழ வுந்தப் புடன்மணி
பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை
செழித்த மறைசிலர் துதிப்ப முநிவர்கள்
களித்து வகைமனி முழக்க அசுரர்கள் .. களமீதே
சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம்
ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ
சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள்
சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடு
செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த
தும்பக் கருடன டங்கொட் டிடகொடி
மறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள்
நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல்
செம்பொற் பவளமு டங்கிக் கமர்விட
வெந்திட் டிகமலை விண்டுத் துகள்பட
சிமக்கு முரகனு முழக்கி விடபட
மடைத்த சதமுடி நடுக்கி யலைபட .. விடும்வேலா
தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி
பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி
சுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடி
கரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய்
தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி
கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர்
தொடுத்த மதனுரு பொடித்த விழியினர்
மிகுத்த புரமதை யெரித்த நகையினர்
தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர்
தொந்திக் கடவுளை தந்திட் டவரிட
சுகத்தி மழுவுழை கரத்தி மரகத
நிறத்தி முயலக பதத்தி அருளிய .. முருகோனே
துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடை
ரம்பைக் கரசியெ னும்பற் றருமகள்
சுகிப்ப மணவறை களிக்க அணையறு
முகத்தொ டுறமயல் செழித்த திருபுய
செம்பொற் கரகம லம்பத் திருதல
மம்பொற் சசியெழ சந்தப் பலபடை
செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை
சிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள்
தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனி
டைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில்
தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை
நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய .. பெருமாளே.
பாடல் 445 வீறுபுழு கானபனி ( திருவருணை )
ராகம் - .; தாளம் -
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன .. தனதான
வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு
மேருகிரி யானகொடு .. தனபார
மீதுபுர ளாபரண சோதிவித மானநகை
மேகமனு காடுகட .. லிருள்மேவி
நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள
நாணமழி வார்களுட .. னுறவாடி
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
ஞானசிவ மானபத .. மருள்வாயே
கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய
கோலமயி லானபத .. மருள்வோனே
கூடஅர னோடுநட மாடரிய காளியருள்
கூருசிவ காமியுமை .. யருள்பாலா
ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன
மாரவிளை யாடிமண .. மருள்வோனே
ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய
ஆதியரு ணாபுரியில் .. பெருமாளே.
பாடல் 446 சரக்கே றித்தப் ( திருக்காளத்தி )
ராகம் - கல்யாணி;தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனத்தா தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத் .. தனதான
சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்
பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் .. செயல்மேவிச்
சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் .. குடிபேணிக்
குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் .. படுவேனைக்
குறித்தே முத்திக் குமறா வின்பத்
தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் .. கழல்தாராய்
புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் .. றருள்வோனே
புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் .. தருள்வோனே
திருக்கா னத்திற் பரிவோ டந்தக்
குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் .. புணர்வோனே
சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் .. பெருமாளே.
பாடல் 447 சிரத்தா னத்திற் ( திருக்காளத்தி )
ராகம் - கானடா; தாளம் - சதுஸ்ர ஜம்பை (7)
(எடுப்பு - அதீதம்), (விச்சில் 1/2 இடம்)
தனத்தா தத்தத் .. தனதான
சிரத்தா னத்திற் .. பணியாதே
செகத்தோர் பற்றைக் .. குறியாதே
வருத்தா மற்றொப் .. பிலதான
மலர்த்தாள் வைத்தெத் .. தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத் .. துவநேசா
நினைத்தார் சித்தத் .. துறைவோனே
திருத்தாள் முத்தர்க் .. கருள்வோனே
திருக்கா ளத்திப் .. பெருமாளே.
பாடல் 448 பங்கய னார்பெற் ( திருக்காளத்தி )
ராகம் - .; தாளம் -
தந்தன தானத் தனந்த தானன
தந்தன தானத் தனந்த தானன
தந்தன தானத் தனந்த தானன தனதான
பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர
அண்டம தாயுற் றிருந்த பார்மிசை
பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர .. உருவாயே
பந்தம தாகப் பிணிந்த ஆசையில்
இங்கித மாகத் திரிந்து மாதர்கள்
பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் .. படிறாயே
சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை
வந்துடல் மூடக் கலங்கி டாமதி
தந்தடி யேனைப் புரந்தி டாயுன .. தருளாலே
சங்கரர் வாமத் திருந்த நூபுர
சுந்தரி யாதித் தருஞ்சு தாபத
தண்டைய னேகுக் குடம்ப தாகையின் .. முருகோனே
திங்களு லாவப் பணிந்த வேணியர்
பொங்கர வாடப் புனைந்த மார்பினர்
திண்சிலை சூலத் தழுந்து பாணியர் .. நெடிதாழ்வார்
சிந்துவி லேயுற் றெழுந்து காளவி
டங்கள மீதிற் சிறந்த சோதியர்
திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய .. குருநாதா
சிங்கம தாகத் திரிந்த மால்கெரு
வம்பொடி யாகப் பறந்து சீறிய
சிம்புள தாகச் சிறந்த காவென .. வருகோமுன்
செங்கதி ரோனைக் கடிந்த தீவினை
துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய
தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள் .. பெருமாளே.
பாடல் 449 கனகசபை மேவு ( சிதம்பரம் )
ராகம் - கரஹரப்ரியா ; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்)
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் .. தனதானா
கனகசபை மேவு மெனதுகுரு நாத
கருணைமுரு கேசப் .. பெருமாள்காண்
கனகநிற வேத னபயமிட மோது
கரகமல சோதிப் .. பெருமாள்காண்
வினவுமடி யாரை மருவிவிளை யாடு
விரகுரச மோகப் .. பெருமாள்காண்
விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
விமலசர சோதிப் .. பெருமாள்காண்
சனகிமண வாளன் மருகனென வேத
சதமகிழ்கு மாரப் .. பெருமாள்காண்
சரணசிவ காமி யிரணகுல காரி
தருமுருக நாமப் .. பெருமாள்காண்
இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
டியல்பரவு காதற் .. பெருமாள்காண்
இணையிலிப தோகை மதியின்மக ளோடு
மியல்புலியுர் வாழ்பொற் .. பெருமாளே.
பாடல் 450 கைத்தருண சோதி ( சிதம்பரம் )
ராகம் - ஜோன்புரி; தாளம் - ஆதி
தத்ததன தான தத்ததன தான
தத்ததன தான .. தனதான
கைத்தருண சோதி யத்திமுக வேத
கற்பகச கோத்ரப் .. பெருமாள்காண்
கற்புசிவ காமி நித்யகலி யாணி
கத்தர்குரு நாதப் .. பெருமாள்காண்
வித்துருப ராம ருக்குமரு கான
வெற்றி யயில் பாணிப் .. பெருமாள்காண்
வெற்புளக டாக முட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப் .. பெருமாள்காண்
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
திக்கினினி லாதப் .. பெருமாள்காண்
தித்திமிதி தீதே னொத்திவிளை யாடு
சித்திரகு மாரப் .. பெருமாள்காண்
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்டகவி ராஜப் .. பெருமாள்காண்
துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப் .. பெருமாளே.
பாடல் 451 இருவினையின் மதிம ( சிதம்பரம் )
ராகம் - ஆரபி ; தாளம் - அங்கதாளம் (9)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமிதக-3
தனதனன தனன தந்தத் .. தனதானா
இருவினையின் மதிம யங்கித் .. திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற் .. றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட் .. டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் .. கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப் .. புலவோனே
சிவனருளு முருக செம்பொற் .. கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க் .. கெளியோனே
கனகசபை மருவு கந்தப் பெருமாளே.
பாடல் 452 குகனெ குருபர ( சிதம்பரம் )
ராகம் - வஸந்தா ; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத் .. தனதான
குகனெ குருபர னேயென நெஞ்சிற்
புகழ அருள்கொடு நாவினி லின்பக்
குமுளி சிவவமு தூறுக வுந்திப் .. பசியாறிக்
கொடிய இருவினை மூலமும் வஞ்சக்
கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்
குலைய நமசிவ யோமென கொஞ்சிக் .. களிகூரப்
பகலு மிரவுமி லாவெளி யின்புக்
குறுகி யிணையிலி நாடக செம்பொற்
பரம கதியிது வாமென சிந்தித் .. தழகாகப்
பவள மனதிரு மேனியு டன்பொற்
சரண அடியவ ரார்மன வம்பொற்
றருண சரண்மயி லேறியு னம்பொற் .. கழல்தாராய்
தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் .. டியல்தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
தடிய ழனவுக மாருத சண்டச் .. சமரேறிக்
ககன மறைபட ஆடிய செம்புட்
பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்
கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் .. தொடும்வேலா
கயிலை மலைதனி லாடிய தந்தைக்
குருக மனமுன நாடியெ கொஞ்சிக்
கனக சபைதனில் மேவிய கந்தப் .. பெருமாளே.
பாடல் 453 வண்டையொத் துக்கயல் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன .. தந்ததான
வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு
வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை
வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு .. கென்பக்ரீவம்
மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பணை
கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு
வந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொரு .. ளன்பினாலே
கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள்
கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன
குங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில் .. மங்குறாமல்
கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துனி
னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ்
குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை .. யென்றுசேர்வேன்
அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு
டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம
டஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிட .. லென்பதாளம்
அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள்
கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல
னஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள் .. வந்தசூரர்
கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச
னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர்
கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையி .. லங்குவேலால்
கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக
ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன
கம்பலத் திற்குற மங்கைபக் கத்துறை .. தம்பிரானே.
பாடல் 454 கங்கு லின்குழற் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தந்த தந்தனத் தான தந்தன
தந்த தந்தனத் தான தந்தன
தந்த தந்தனத் தான தந்தன .. தந்ததான
கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி
மஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறு
கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக .. செம்பொனாரம்
கந்த ரந்தரித் தாடு கொங்கைக
ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி
கந்த முஞ்சிறுத் தேம லும்பட .. சம்பைபோல
அங்க மைந்திடைப் பாளி தங்கொடு
குந்தி யின்குறைக் கால்ம றைந்திட
அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி .. கொஞ்சமேவும்
அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல்
அங்கை பொன்பறிக் கார பெண்களோ
டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ .. தென்றுபோமோ
சங்கு பொன்தவிற் காள முந்துரி
யங்கள் துந்துமிக் காட திர்ந்திட
சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட .. அண்டகோசம்
சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட
இந்தி ரன்குலத் தார்பொ ழிந்திட
தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட .. வந்தசூரைச்
செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ
அந்த கன்புரத் தேற வஞ்சகர்
செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி .. கந்தவேளே
திங்க ளொண்முகக் காமர் கொண்டவன்
கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு
செம்பொ னம்பலத் தேசி றந்தருள் .. தம்பிரானே.
பாடல் 455 கொந்த ளம்புழு ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன .. தனதான
கொந்த ளம்புழு கெந்த வண்பனி
ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர
கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய .. மடமாதர்
கொந்த ணங்குழ லின்ப மஞ்சள
ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி
கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில் .. மயில்போலே
வந்து பஞ்சணை யின்ப முங்கொடு
கொங்கை யும்புய முந்த ழும்புற
மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ .. மயல்மேலாய்
வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி
யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த
வஞ்சி னங்களு டன்கி டந்துட .. லழிவேனோ
தந்த னந்தன தந்த னந்தன
திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
சங்கு வெண்கல கொம்பு துந்துமி .. பலபேரி
சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி
தங்கு டுண்டுடு டுண்டு டன்பல
சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் .. களமீதே
சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு
செம்பு ளங்கரு டன்ப ருந்துகள்
செங்க ளந்திகை யெங்கு மண்டிட .. விடும்வேலா
திங்க ளிந்திர னும்ப ரந்தர
ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை
செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் .. பெருமாளே.
பாடல் 456 மந்தர மென்குவ ( சிதம்பரம் )
ராகம் -. தாளம் -
தந்தன தந்தன தான தந்தன
தான தனந்தன தான தந்தன
------------ 3 தரம் ----- .. தந்ததான
மந்தர மென்குவ டார்த னங்களி
லார மழுந்திட வேம ணம்பெறு
சந்தன குங்கும சேறு டன்பனி
நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி
மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல்
வாள்விழி செங்கழு நீர்த தும்பிய .. கொந்தளோலை
வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை
வாடந டம்புரி வார்ம ருந்திடு
விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
மோகன வஞ்சியர் போல கம்பெற
வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர்
போல இருந்ததெ னாம யங்கிட .. இன்சொல்கூறிச்
சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர்
வாருமெ னும்படி யால கங்கொடு
பண்சர சங்கொள வேணு மென்றவர்
சேம வளந்துறு தேன ருந்திட
துன்றுபொ னங்கையின் மீது கண்டவ
ரோடு விழைந்துமெ கூடி யின்புறு .. மங்கையோரால்
துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு
சீபுழு வுஞ்சல மோடி றங்கிய
புண்குட வன்கடி யோடி ளஞ்சனி
சூலைமி குந்திட வேப றந்துடல்
துஞ்சிய மன்பதி யேபு குந்துய
ராழி விடும்படி சீர்ப தம்பெறு .. விஞ்சைதாராய்
அந்தர துந்துமி யோடு டன்கண
நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய
ரிந்திர சந்திரர் சூரி யன்கவி
வாணர்த வம்புலி யோர்ப தஞ்சலி
அம்புய னந்திரு மாலொ டிந்திரை
வாணிய ணங்கவ ளோட ருந்தவர் .. தங்கள்மாதர்
அம்பர ரம்பைய ரோடு டன்திகழ்
மாவுர கன்புவி யோர்கள் மங்கையர்
அம்புவி மங்கைய ரோட ருந்ததி
மாதர் புகழ்ந்திட வேந டம்புரி
அம்புய செம்பதர் மாட கஞ்சிவ
காம சவுந்தரி யாள்ப யந்தருள் .. கந்தவேளே
திந்திமி திந்திமி தோதி மிந்திமி
தீததி திந்தித தீதி திந்திமி
தந்தன தந்தன னாத னந்தன
தான தனந்தன னாவெ னும்பறை
செந்தவில் சங்குட னேம ழங்கசு
ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் .. கண்டவேலா
செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில்
வாழுமி ளங்கொடி யாள்ப தங்களில்
வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு
தாளழ கங்கையின் வேலு டன்புவி
செம்பொனி னம்பல மேல கம்பிர
காரச மந்திர மீத மர்ந்தருள் .. தம்பிரானே.
பாடல் 457 வந்து வந்துவித் ( சிதம்பரம் )
ராகம் - தர்பார்; தாளம் - ஆதி - 4 களை (32)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தந்த தந்தனத் தான தந்ததன
தந்த தந்தனத் தான தந்ததன
தந்த தந்தனத் தான தந்ததன் .. தந்ததான
வந்து வந்துவித் தூறி யென்றனுடல்
வெந்து வெந்துவிட் டோ ட நொந்துயிரும்
வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி .. வங்களாலே
மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது
சிந்தை சந்தோஷித் தாளு கொண்டருள
வந்து சிந்துரத் தேறி யண்டரொடு .. தொண்டர்சூழ
எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ
சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க
னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர .. மந்திமேவும்
எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி
சுந்த ரந்திருப் பாத பங்கயமும்
என்றன் முந்துறத் தோணி யுன்றனது .. சிந்தைதாராய்
அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள்
சிந்தை மந்திரத் தோட கெந்தருவ
ரம்பு யன்சலித் தோட எண்டிசையை .. யுண்டமாயோன்
அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென
வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ
அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு .. செங்கைவேலா
சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற
மங்கை யின்புறத் தோள ணைந்துருக
சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் .. கந்தவேளே
சிந்தி முன்புரக் காடு மங்கநகை
கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ்
செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் .. தம்பிரானே.
பாடல் 458 பணைத்துக்கொம் ( சிதம்பரம் )
ராகம் -.; தாளம் -
தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத் .. தனதான
கதித்துப்பொங் கலுக்கொத்துப்
பணைத்துக்கொம் பெனத்தெற்றிக்
கவித்துச்செம் பொனைத்துற்றுக் .. குழலார்பின்
கழுத்தைப்பண் புறக்கட்டிச்
சிரித்துத்தொங் கலைப்பற்றிக்
கலைத்துச்செங் குணத்திற்பித் .. திடுமாதர்
பதித்துத்தந் தனத்தொக்கப்
பிணித்துப்பண் புறக்கட்டிப்
பசப்பிப்பொன் தரப்பற்றிப் .. பொருள்மாளப்
பறித்துப்பின் துரத்துச்சொற்
கபட்டுப்பெண் களுக்கிச்சைப்
பலித்துப்பின் கசுத்திப்பட் .. டுழல்வேனோ
கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற்
கொதித்துச்சங் கரித்துப்பற்
கடித்துச்சென் றுழக்கித்துக் .. கசுரோரைக்
கழித்துப்பண் டமர்க்குச்செப்
பதத்தைத்தந் தளித்துக்கைக்
கணிக்குச்சந் தரத்தைச்சுத் .. தொளிர்வேலா
சிதைத்திட்டம் புரத்தைச்சொற்
கயத்தைச்சென் றுரித்துத்தற்
சினத்தக்கன் சிரத்தைத்தட் .. சிவனார்தஞ்
செவிக்குச்செம் பொருட்கற்கப்
புகட்டிச்செம் பரத்திற்செய்த்
திருச்சிற்றம் பலச்சொக்கப் .. பெருமாளே.
பாடல் 459 சிரித்துச் சங்கொளி ( சிதம்பரம் )
ராகம் -.; தாளம் -
தனத்தத் தந்தன தானன தானன
தனத்தத் தந்தன தானன தானன
தனத்தத் தந்தன தானன தானன .. தனதான
சிரித்துச் சங்கொளி யாமின லாமென
வுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு
செணத்திற் சம்பள மேபறி காரிகள் .. சிலபேரைச்
சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல்
புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடை
திருத்திப் பண்குழ லேய்முகி லோவிய .. மயில்போலே
அருக்கிப் பண்புற வேகலை யால்முலை
மறைத்துச் செந்துவர் வாயமு தூறல்க
ளளித்துப் பொன்குயி லாமென வேகுரல் .. மிடறோதை
அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணி
மினுக்கிச் சந்தன வாசனை சேறுட
னமைத்துப் பஞ்சணை மீதணை மாதர்க .. ளுறவாமோ
இரைத்துப் பண்டம ராவதி வானவ
ரொளித்துக் கந்தசு வாமிப ராபர
மெனப்பட் டெண்கிரி ஏழ்கடல் தூள்பட .. அசுரார்கள்
இறக்கச் சிங்கம தேர்பரி யானையொ
டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ
டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு .. மயில்வீரா
சிரித்திட் டம்புர மேமத னாருட
லெரித்துக் கண்டக பாலியர் பாலுறை
திகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல் .. கியசேயே
திருச்சித் தந்தனி லேகுற மானதை
யிருத்திக் கண்களி கூர்திக ழாடக
திருச்சிற் றம்பல மேவியு லாவிய .. பெருமாளே.
பாடல் 460 தத்தையென் றொப்பிடுங் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன .. தந்ததான
தத்தையென் றொப்பிடுங் தோகைநட் டங்கொளுவர்
பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள்
சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை .. யென்பநீலச்
சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ
டொற்றிநன் சித்திரம் போலஎத் தும்பறியர்
சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர் .. சங்கமாதர்
சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர்
முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர்
சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும் .. விஞ்சையோர்பால்
தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவை
விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு
துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி .. யெந்தநாளோ
குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு
பொட்டெழுந் திட்டுநின் றாடஎட் டந்திகையர்
கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி .. கொண்டவேலா
கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி
பத்தரன் புற்றஎந் தாயெழிற் கொஞ்சுகிளி
கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி .. மங்கைபாலா
சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர
செட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி
சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரு .. மெங்கள்கோவே
சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர்
ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில்
தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர் .. தம்பிரானே.
பாடல் 461 தனத்தைக்கொண் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
----- 2 முறை -------- .. தனதான
தனத்திற்குங் குமத்தைச்சந்
தனத்தைக்கொண் டணைத்துச்சங்
கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன்
தனிற்கொத்துந் தரித்துச்சுந்
தரத்திற்பண் பழித்துக்கண்
சுழற்றிச்சண் பகப்புட்பங் .. குழல்மேவித்
தரத்தைக்கொண் டசைத்துப்பொன்
தகைப்பட்டுந் தரித்துப்பின்
சிரித்துக்கொண் டழைத்துக்கொந்
தளத்தைத்தண் குலுக்கிச்சங்
கலப்புத்தன் கரத்துக்கொண்
டணைத்துச்சம் ப்ரமித்துக்கொண் .. டுறவாடிப்
புனித்தப்பஞ் சணைக்கட்டிண்
படுத்துச்சந் தனப்பொட்டுங்
குலைத்துப்பின் புயத்தைக்கொண்
டணைத்துப்பின் சுகித்திட்டின்
புகட்டிப்பொன் சரக்கொத்துஞ்
சிதைப்பப்பொன் தரப்பற்றும் .. பொதுமாதர்
புணர்ப்பித்தும் பிடித்துப்பொன்
கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன்
திணிக்கட்டுஞ் சிதைத்துக்கண்
சிறுப்பப்புண் பிடித்தப்புண்
புடைத்துக்கண் பழுத்துக்கண்
டவர்க்குக்கண் புதைப்பச்சென் .. றுழல்வேனோ
சினத்துக்கண் சிவப்பச்சங்
கொலிப்பத்திண் கவட்டுச்செங்
குவட்டைச்சென் றிடித்துச்செண்
டரைத்துக்கம் பிடிக்கப்பண்
சிரத்தைப்பந் தடித்துக்கொண்
டிறைத்துத்தெண் கடற்றிட்டுங் .. கொளைபோகச்
செழித்துப்பொன் சுரர்ச்சுற்றங்
களித்துக்கொண் டளிப்புட்பஞ்
சிறக்கப்பண் சிரத்திற்கொண்
டிறைத்துச்செம் பதத்திற்கண்
திளைப்பத்தந் தலைத்தழ்த்தம்
புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண் .. புயவேளே
பனித்துட்கங் கசற்குக்கண்
பரப்பித்தன் சினத்திற்றிண்
புரத்தைக்கண் டெரித்துப்பண்
கயத்தைப்பண் டுரித்துப்பன்
பகைத்தக்கன் தவத்தைச்சென்
றழித்துக்கொன் றடற்பித்தன் .. தருவாழ்வே
படைத்துப்பொன் றுடைத்திட்பன்
தனைக்குட்டும் படுத்திப்பண்
கடிப்புட்பங் கலைச்சுற்றும்
பதத்தப்பண் புறச்சிற்றம்
பலத்திற்கண் களித்தப்பைம்
புனத்திற்செங் குறத்திப்பெண் .. பெருமாளே.
பாடல் 462 திருடிக ளிணக்கிச் ( சிதம்பரம் )
ராகம் -.; தாளம் -
தனதன தனத்தத் தந்த தந்தன
தனதன தனத்தத் தந்த தந்தன
தனதன தனத்தத் தந்த தந்தன .. தனதான
திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி
நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள்
சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள் .. சதிகாரர்
செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள்
அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள்
செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர் .. வெகுமோகக்
குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக
ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள்
குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர் .. விழியாலே
கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள்
நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள்
குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக .. ளுறவாமோ
இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு
மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு
மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட .. வருசூரர்
இபமொடு வெதித்தச் சிங்க மும்பல
இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட
இவுளியி ரதத்துற் றங்க மங்கிட .. விடும்வேலா
அரிகரி யுரித்திட் டங்க சன்புர
மெரிதர நகைத்துப் பங்க யன்சிர
மளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவ .. ரருள்கோனே
அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல்
குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற
அழகிய திருச்சிற் றம்ப லம்புகு .. பெருமாளே.
பாடல் 463 கொந்த ரங்குழ ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன .. தந்ததான
கொந்த ரங்குழ லிந்து வண்புரு
வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை
கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி .. துண்டமாதர்
கொந்த ளங்கதி ரின்கு லங்களி
னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி
கொண்ட நண்பித ழின்சு கங்குயி .. லின்சொல்மேவுந்
தந்த வந்தர ளஞ்சி றந்தெழு
கந்த ரங்கமு கென்ப பைங்கழை
தண்பு யந்தளி ரின்கு டங்கைய .. ரம்பொனாரந்
தந்தி யின்குவ டின்த னங்களி
ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர்
தங்க டம்படி யுங்க வண்டிய .. சிந்தையாமோ
மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர்
தங்க டைந்தவ னஞ்சு மங்குலி
மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற .. எந்தவாழ்வும்
வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந
டங்கோ ளுந்திரு மங்கை பங்கினன்
வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி .. கண்டமாயோன்
உந்தி யின்புவ னங்க ளெங்கும
டங்க வுண்டகு டங்கை யன்புக
ழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர் .. பங்கின்மேவும்
உம்ப லின்கலை மங்கை சங்கரி
மைந்த னென்றய னும்பு கழ்ந்திட
வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் .. தம்பிரானே.
பாடல் 464 கடந்தொந்தஞ் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனந்தந்தம் தனந்தந்தம்
தனந்தந்தம் தனந்தந்தம்
தனந்தந்தம் தனந்தந்தம் .. தனதான
தியங்குஞ்சஞ் சலந்துன்பங்
கடந்தொந்தஞ் செறிந்தைந்திந்
த்ரியம்பந்தந் தருந்துன்பம் .. படுமேழை
திதம்பண்பொன் றிலன்பண்டன்
தலன்குண்டன் சலன்கண்டன்
தெளிந்துன்றன் பழந்தொண்டென் .. றுயர்வாகப்
புயங்கந்திங் களின்துண்டங்
குருந்தின்கொந் தயன்றன்கம்
பொருந்துங்கங் கலந்தஞ்செஞ் .. சடைசூடி
புகழ்ந்துங்கண் டுகந்துங்கும்
பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும்
புலம்பும்பங் கயந்தந்தென் .. குறைதீராய்
இயம்புஞ்சம் புகந்துன்றுஞ்
சுணங்கன்செம் பருந்தங்கங்
கிணங்குஞ்செந் தடங்கண்டுங் .. களிகூர
இடும்பைங்கண் சிரங்கண்டம்
பதந்தந்தங் கரஞ்சந்தொன்
றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ் .. செயும்வேலா
தயங்கும்பைஞ் சுரும்பெங்குந்
தனந்தந்தந் தனந்தந்தந்
தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ் .. சிறுகூரா
தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ்
சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந்
தலந்துன்றம் பலந்தங்கும் .. பெருமாளே.
பாடல் 465 பருவம் பணைத்தி ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
தனனந் தனத்த தந்த .. தனதான
பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு
பவளம் பதித்த செம்பொ .. னிறமார்பிற்
படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த
பலவிஞ் சையைப்பு லம்பி .. யழகான
புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று
புளகஞ் செலுத்தி ரண்டு .. கயல்மேவும்
பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
பொடிகொண் டழிக்கும் வஞ்ச .. ருறவாமோ
உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து
உறவும் பிடித்த ணங்கை .. வனமீதே
ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து
ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த .. மணிமார்பா
செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
சிவமஞ் செழுத்தை முந்த .. விடுவோனே
தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு
திருவம் பலத்த மர்ந்த .. பெருமாளே.
பாடல் 466 மதவெங் கரிக்கி ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
தனனந் தனத்த தந்த .. தனதான
மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு
வளரும் தனத்த ணிந்த .. மணியாரம்
வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்கு
வரருந் திகைத்தி ரங்க .. வருமானார்
விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள்
மிகைகண் டுறக்க லங்கி .. மருளாதே
விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து
மிகவிஞ் சுபொற்ப தங்கள் .. தருவாயே
நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த
நடநம் பருற்றி ருந்த .. கயிலாய
நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்
நவதுங் கரத்ந முந்து .. திரடோ ளுஞ்
சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல்
திறல்செங் கணச்சு தன்றன் .. மருகோனே
தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த
திருவம் பலத்த மர்ந்த .. பெருமாளே.
பாடல் 467 முகசந்திர புருவஞ்சிலை ( சிதம்பரம் )
ராகம் -.; தாளம் -
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் .. தனதான
முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல
முகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட
மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற் .. குழையாட
முழவங்கர கமுகம்பரி மளகுங்கும வாச
முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில்
முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக் .. கொடிபோலத்
துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை
மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு
துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச் .. செயல்மேவித்
தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட
விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண் டணைகீனும்
சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் .. கருள்வாயே
அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி
உறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமி
அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக் .. கொருசேயே
அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு
சரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாய
அமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர் போலத் .. திகழ்வோனே
மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை
மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத
மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் .. கதிர்வேலா
வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக
சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில்
மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப் .. பெருமாளே.
பாடல் 468 சந்திர வோலைகு ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தந்தன தானன தான தந்தன
தந்தன தானன தான தந்தன
தந்தன தானன தான தந்தன .. தந்ததான
சந்திர வோலைகு லாவ கொங்கைகள்
மந்தர மாலந னீர்த தும்பநல்
சண்பக மாலைகு லாவி ளங்குழல் .. மஞ்சுபோலத்
தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை
விண்புரு வாரிதழ் கோவை யின்கனி
தன்செய லார்நகை சோதி யின்கதிர் .. சங்குமேவுங்
கந்தரர் தேமலு மார்ப ரம்பநல்
சந்தன சேறுட னார்க வின்பெறு
கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய .. ரம்பையாரைக்
கண்களி கூரவெ காசை கொண்டவர்
பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு
கண்களி ராறுமி ராறு திண்புய .. முங்கொள்வேனே
இந்திர லோகமு ளாரி தம்பெற
சந்திர சூரியர் தேர்ந டந்திட
எண்கிரி சூரர்கு ழாமி றந்திட .. கண்டவேலா
இந்திரை கேள்வர்பி தாம கன்கதி
ரிந்துச டாதரன் வாச வன்தொழு
தின்புற வேமனு நூல்வி ளம்பிய .. கந்தவேளே
சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு
பெண்கள்சி காமணி மோக வஞ்சியர்
செந்தினை வாழ்வளி நாய கொண்குக .. அன்பரோது
செந்தமிழ் ஞானத டாக மென்சிவ
கங்கைய ளாவு மகாசி தம்பர
திண்சபை மேவும னாச வுந்தர .. தம்பிரானே.
பாடல் 469 காய மாய ( சிதம்பரம் )
ராகம் - ஹம்ஸாநந்தி ; தாளம் - அங்கதாளம் (19)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2,
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தான தான தான தானன தான தந்த
தத்த தந்த தத்த தந்த .. தந்ததான
காய மாய வீடு மீறிய கூடு நந்து
புற்பு தந்த னிற்கு ரம்பை .. கொண்டுநாளுங்
காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி
யப்ர மந்த டித்த லைந்து .. சிந்தைவேறாய்
வேயி லாய தோள மாமட வார்கள் பங்க
யத்து கொங்கை யுற்றி ணங்கி .. நொந்திடாதே
வேத கீத போத மோனமெய் ஞான நந்த
முற்றி டின்ப முத்தி யொன்று .. தந்திடாயோ
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
விக்ர மங்கொள் வெற்பி டந்த .. செங்கைவேலா
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை
யைப்பு ணர்ந்த வெற்ப கந்த .. செந்தில்வேளே
ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்சே
ழுத்த ழங்க முட்ட நின்று .. துன்றுசோதீ
ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப
லச்சி தம்ப ரத்த மர்ந்த .. தம்பிரானே.
பாடல் 470 அவகுண விரகனை ( சிதம்பரம் )
ராகம் - மோஹனம்; தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2
(எடுப்பு - 1/2 இடம்)
தனதன தனதன தானான தானன
தனதன தனதன தானான தானன
தனதன தனதன தானான தானன .. தந்ததான
அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனை .. அஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிகரு வழிவரு வீணாதி வீணனை
அழுகலை யவிசலை ஆறான வூணனை .. அன்பிலாத
கவடனை விகடனை நானாவி காரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை .. வெம்பிவீழுங்
களியனை யறிவுரை பேணாத மாநுட
கசனியை யசனியை மாபாத னாகிய
கதியிலி தனையடி நாயேனை யாளுவ .. தெந்தநாளோ
மவுலியி லழகிய பாதாள லோகனு
மரகத முழுகிய காகோத ராஜனு
மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட .. னும்பர்சேரும்
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர .. மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
தெரிசன பரகதி யானாய் நமோநம
திசையினு மிசையினும் வாழ்வே நமோநம .. செஞ்சொல்சேருந்
திருதரு கலவி மணாளா நமோநம
திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் .. தம்பிரானே.
பாடல் 471 கட்டி முண்டகர ( சிதம்பரம் )
ராகம் - முகாரி; தாளம் - ஆதி 4 களை (32)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன .. தனதான
கட்டி முண்டகர பாலி யங்கிதனை
முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி
கத்த மந்திரவ தான வெண்புரவி .. மிசையேறிக்
கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர்
பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு
கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ .. டசையாமற்
கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு
தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர்
சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத .. முறமேவித்
துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில்
வச்சி ரங்களென மேனி தங்கமுற
சுத்த கம்புகுத வேத விந்தையொடு .. புகழ்வேனோ
எட்டி ரண்டுமறி யாத என்செவியி
லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென
எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு .. முருகோனே
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி
யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ
லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் .. விடுவோனே
செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட
சித்த முங்குளிர நாதி வண்பொருளை .. நவில்வோனே
செட்டி யென்றுவன மேவி யின்பரச
சத்தி யின்செயலி னாளை யன்புருக
தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் .. பெருமாளே.
பாடல் 472 நஞ்சினைப் போலுமன ( சிதம்பரம் )
ராகம் - ஆபோகி; தாளம் - கண்டசாபு (2 1/2)
தந்தனத் தானதன தந்தனத் தானதன
தந்தனத் தானதன .. தந்ததான
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
நம்புதற் றீதெனநி .. னைந்துநாயேன்
நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை
நங்களப் பாசரண .. மென்றுகூறல்
உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
உன்சொலைத் தாழ்வுசெய்து .. மிஞ்சுவாரார்
உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்
உம்பருக் காவதினின் .. வந்துதோணாய்
கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு
கண்களிப் பாகவிடு .. செங்கையோனே
கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு
கஞ்சுகப் பான்மைபுனை .. பொன்செய்தோளாய்
அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்
அந்தரத் தேறவிடு .. கந்தவேளே
அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை
அம்பலத் தாடுமவர் .. தம்பிரானே.
பாடல் 473 செங்கலச .. ( சிதம்பரம் )
ராகம் -.; தாளம் -
தந்ததன .. தனதான
செங்கலச .. முலையார்பால்
சிந்தைபல .. தடுமாறி
அங்கமிக .. மெலியாதே
அன்புருக .. அருள்வாயே
செங்கைபிடி .. கொடியோனே
செஞ்சொல்தெரி .. புலவோனே
மங்கையுமை .. தருசேயே
மன்றுள்வளர் .. பெருமாளே.
பாடல் 474 கரிய மேக ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன .. தந்ததான
கரிய மேக மெனுங்குழ லார்பிறை
சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி
கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி .. துண்டமாதர்
கமுக க்ரீவர் புயங்கழை யார்தன
மலைக ளாஇணை யுங்குவ டார்கர
கமல வாழை மனுந்தொடை யார்சர .. சுங்கமாடை
வரிய பாளித முந்துடை யாரிடை
துடிகள் நூலிய லுங்கவி னாரல்குல்
மணமு லாவிய ரம்பையி னார்பொருள் .. சங்கமாதர்
மயில்கள் போல நடம்புரி வாரியல்
குணமி லாத வியன்செய லார்வலை
மசகி நாயெ னழிந்திட வோவுன .. தன்புதாராய்
சரியி லாத சயம்பவி யார்முகி
லளக பார பொனின்சடை யாள்சிவை
சருவ லோக சவுந்தரி யாளருள் .. கந்தவேளே
சதப ணாம குடம்பொடி யாய்விட
அவுணர் சேனை மடிந்திட வேயொரு
தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக .. செம்பொன்வாகா
அரிய மேனி யிலங்கை யிராவணன்
முடிகள் வீழ சரந்தொடு மாயவன்
அகில மீரெழு முண்டவன் மாமரு .. கண்டரோதும்
அழகு சோபித அங்கொளு மானன
விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி
அருள்கொ டாடி சிதம்பர மேவிய .. தம்பிரானே.
பாடல் 475 கூந்த லாழவி ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தாந்த தானன தந்த தனந்தன
தாந்த தானன தந்த தனந்தன
தாந்த தானன தந்த தனந்தன .. தந்ததான
கூந்த லாழவி ரிந்து சரிந்திட
காந்து மாலைகு லைந்து பளிங்கிட
கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட .. கொங்கைதானுங்
கூண்க ளாமென பொங்கந லம்பெறு
காந்தள் மேனிம ருங்குது வண்டிட
கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர .. சங்கள்பாயச்
சாந்து வேர்வின ழிந்து மணந்தப
வோங்க வாகில்க லந்து முகங்கொடு
தான்ப லாசுளை யின்சுவை கண்டித .. ழுண்டுமோகந்
தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட
வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு
சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் .. மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் .. பொங்குசூரைச்
சேண்சு லாமகு டம்பொடி தம்பட
வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில்
சேந்த வேலது கொண்டு நடம்பயில் .. கந்தவேளே
மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட
தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு
வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் .. செங்கைவேலா
மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர
மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன்
வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய .. தம்பிரானே.
பாடல் 476 அத்த னன்னை ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய .. தனதான
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வ .. ருடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
லற்று நின்னை வல்ல .. படிபாடி
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
முத்த னென்ன வுள்ள .. முணராதே
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
முட்ட னிங்ங னைவ .. தொழியாதோ
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
தித்து மன்னு பிள்ளை .. முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
சித்ர வண்ண வல்லி .. யலர்சூடும்
பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
பத்தர் கன்னி புல்லு .. மணிமார்பா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல .. பெருமாளே.
பாடல் 477 இருள்காட்டு செவ்வி ( சிதம்பரம் )
ராகம் -.; தாளம் -
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய .. தனதான
இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி
னுதல்காட்டி வெல்லு .. மிருபாண
இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை
நகைகாட்டு வல்லி .. யிடைமாதர்
மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல
இடுகாட்டி னெல்லை .. நடவாத
வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல
வினை வாட்டி யல்லல் .. செயலாமோ
தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
மொழிகாட்டு தில்லை .. யிளையோனே
தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
குறவாட்டி புல்லு .. மணிமார்பா
அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
அடல்காட்டு வல்ல .. சுரர்கோபா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல .. பெருமாளே.
பாடல் 478 முல்லைமலர் போலுமுத் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தய்யதன தானனத் தானனந் தானதன
தய்யதன தானனத் தானனந் தானதன
தய்யதன தானனத் தானனந் தானதன .. தனதான
முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை
வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை
முல்லைமலர் மாலைசுற் றாடுகொந் தாருகுழ .. லலைபோதம்
மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல்
கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுக
முன்னல்கமு கார்களத் தோய்சுணங் காயமுலை .. மலையானை
வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயி
றுள் ளதுகில் நூலிடைக் காமபண் டார அல் குல்
வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி .. புரவோசை
மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல்
தள்ளுநடை யோடுசற் றேமொழிந் தாசைகொடு
வல்லவர்கள் போலபொற் சூறைகொண் டார்கள்மய .. லுறவாமோ
அல்லல்வினை போகசத் தாதிவிண் டோ டநய
வுள்ளமுற வாகவைத் தாளுமெந் தாதைமகி
ழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமர .. முருகோனே
அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிரல்
என்னுடைய தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழல்
அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி .. மணவாளா
செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோ டதிர
வல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதி
செல்லதிசை யோடுவிட் டாடுசிங் காரமுக .. வடிவேலா
தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி
வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல்
தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு .. பெருமாளே.
பாடல் 479 அடப்பக் கம்பிடித்துத் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனத்தத் தந்தனத்தத் தானன தானன
தனத்தத் தந்தனத்தத் தானன தானன
தனத்தத் தந்தனத்தத் தானன தானன .. தனதான
அடப்பக் கம்பிடித்துத் தோளொடு தோள்பொர
வளைத்துச் செங்கரத்திற் சீரொடு பாவொடு
அணுக்கிச் செந்துணுக்கிற் கோவித ழுறல்க .. ளதுகோதி
அணிப்பொற் பங்கயத்துப் பூண்முலை மேகலை
நெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபண மேயென
அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்க .. ளுறவோடே
படிச்சித் தங்களித்துத் தான்மிக மாயைகள்
படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள
பசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிக .. ளவமாயப்
பரத்தைக் குண்டுணர்த்துத் தோதக பேதைகள்
பழிக்குட் சஞ்சரித்துப் போடிடு மூடனை
பரத்துற் றண்பதத்துப் போதக் மீதென .. அருள்தாராய்
தடக்கைத் தண்டெடுத்துச் சூரரை வீரரை
நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழ
தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண .. கலைவீரா
தகட்டுப் பொன்சுவட்டுப் பூவணை மேடையில்
சமைப்பித் தங்கொருத்திக் கோதில மாமயில்
தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளி .. மணவாளா
திடத்திற் றிண்பொருப்பைத் தோள்கொடு சாடிய
அரக்கத் திண்குலத்தைச் சூறைகொள் வீரிய
திருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர் .. அறியாமல்
திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய
சமர்த்தர்ப் பொன்புவிக்குட் டேவர்க ணாயக
திருச்சிற் றம்பலத்துட் கோபுர மேவிய .. பெருமாளே.
பாடல் 480 அக்குப் பீளைமு ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தத்தத் தானன தானன தானன
தத்தத் தானன தானன தானன
தத்தத் தானன தானன தானன .. தனதான
அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ
டுப்புக் காய்பனி நிர்மயிர் தோல்குடி
லப்புச் சீபுழு வோடடை யார்தசை .. யுறமேவி
அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ
ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ
ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி .. விரகாளர்
சுக்கத் தாழ்கட லேசுக மாமென
புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள்
தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ .. டதனாலே
துக்கத் தேபர வாமல்ச தாசிவ
முத்திக் கேசுக மாகப ராபர
சொர்க்கப் பூமியி லேறிட வேபத .. மருள்வாயே
தக்கத் தோகிட தாகிட தீகிட
செக்கச் சேகண தாகண தோகண
தத்தத் தானன டீகுட டாடுடு .. வெனதாளந்
தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி
கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட
சத்திக் கேயிரை யாமென வேவிடு .. கதிர்வேலா
திக்கத் தோகண தாவென வேபொரு
சொச்சத் தாதையர் தாமென வேதிரு
செக்கர்ப் பாதம தேபதி யாசுதி .. யவைபாடச்
செப்பொற் பீலியு லாமயில் மாமிசை
பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு
தெற்குக் கோபுர வாசலில் மேவிய .. பெருமாளே.
பாடல் 481 ஆரத் தோடணி ( சிதம்பரம் )
ராகம் -.; தாளம் -
தானத் தானன தானன தானன
தானத் தானன தானன தானன
தானத் தானன தானன தானன .. தனதான
ஆரத் தோடணி மார்பிணை யானைகள்
போருக் காமென மாமுலை யேகொடு
ஆயத் தூசினை மேவிய நூலிடை .. மடமாதர்
ஆலைக் கோதினி லீரமி லாமன
நேசத் தோடுற வானவர் போலுவர்
ஆருக் கேபொரு ளாமென வேநினை .. வதனாலே
காருக் கேநிக ராகிய வோதிய
மாழைத் தோடணி காதொடு மோதிய
காலத் தூதர்கை வேலெனு நீள்விழி .. வலையாலே
காதற் சாகர மூழ்கிய காமுகர்
மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள்
காமத் தோடுற வாகையி லாவருள் .. புரிவாயே
சூரர்க் கேயொரு கோளரி யாமென
நீலத் தோகைம யூரம தேறிய
தூளிக் கேகடல் தூரநி சாசரர் .. களமீதே
சோரிக் கேவெகு ரூபம தாவடு
தானத் தானன தானன தானன
சூழிட் டேபல சோகுக ளாடவெ .. பொரும்வேலா
வீரத் தால்வல ராவண னார்முடி
போகத் தானொரு வாளியை யேவிய
மேகத் தேநிக ராகிய மேனியன் .. மருகோனே
வேதத் தோன்முத லாகிய தேவர்கள்
பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்
மேலைக் கோபுர வாசலில் மேவிய .. பெருமாளே.
பாடல் 482 காதைக் காதி ( சிதம்பரம் )
ராகம் -.; தாளம் -
தானத் தான தத்த தானத் தான தத்த
தானத் தான தத்த .. தனதான
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற
காமப் பூச லிட்டு .. மதியாதே
காரொத் தேய்நி றத்த வோதிக் காவனத்தி
னீழற் கேத ருக்கி .. விளையாடிச்
சேதித் தேக ருத்தை நேருற்றேபெ ருத்த
சேலொத் தேவ ருத்தும் .. விழிமானார்
தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க
தீமைக் காவி தப்ப .. நெறிதாராய்
மாதைக் காத லித்து வேடக் கான கத்து
வாசத் தாள்சி வப்ப .. வருவோனே
வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி
மாளப் போர்தொ லைத்த .. வடிவேலா
வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன்
வீரத் தேர்ம றைத்த .. புலியூர்வாழ்
மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க
வேதத் தோர்து தித்த .. பெருமாளே.
பாடல் 483 கொள்ளை யாசைக் ( சிதம்பரம் )
ராகம் -.; தாளம் -
தய்ய தானத் தானன தானன
தய்ய தானத் தானன தானன
தய்ய தானத் தானன தானன .. தனதான
கொள்ளை யாசைக் காரிகள் பாதக
வல்ல மாயக் காரிகள் சூறைகள்
கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் .. விழியாலே
கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்
வெல்லு மோகக் காரிகள் சூதுசொல்
கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு .. மவர்போலே
உள்ள நோவைத் தேயுற வாடியர்
அல்லை நேரோப் பாமன தோஷிகள்
உள்வி ரோதக் காரிகள் மாயையி .. லுழல்நாயேன்
உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு
கையு நீபத் தார்முக மாறுமுன்
உள்ள ஞானப் போதமு நீதர .. வருவாயே
கள்ள மாயத் தாருகன் மாமுடி
துள்ள நீலத் தோகையின் மீதொரு
கையின் வேல்தொட் டேவிய சேவக .. முருகோனே
கல்லி லேபொற் றாள்பட வேயது
நல்ல ரூபத் தேவர கானிடை
கெளவை தீரப் போகுமி ராகவன் .. மருகோனே
தெள்ளி யேமுற் றீரமு னோதிய
சொல்வ ழாமற் றானொரு வானுறு
செல்வி மார்பிற் பூஷண மாயணை .. மணவாளா
தெள்ளு மேனற் சூழ்புன மேவிய
வள்ளி வேளைக் காரம னோகர
தில்லை மேலைக் கோபுர மேவிய .. பெருமாளே.
பாடல் 484 தாது மாமலர் ( சிதம்பரம் )
ராகம் -.; தாளம் -
தான தானன தனனா தானன
தான தானன தனனா தானன
தான தானன தனனா தானன .. தனதான
தாது மாமலர் முடியா லேபத
றாத நூபுர அடியா லேகர
தாள மாகிய நொடியா லேமடி .. பிடியாலே
சாடை பேசிய வகையா லேமிகு
வாடை பூசிய நகையா லேபல
தாறு மாறுசொல் மிகையா லேயன .. நடையாலே
மோதி மீறிய முலையா லேமுலை
மீதி லேறிய கலையா லேவெகு
மோடி நாணய விலையா லேமயல் .. தருமானார்
மோக வாரிதி தனிலே நாடொறு
மூழ்கு வேனுன தடியா ராகிய
மோன ஞானிக ளுடனே சேரவு .. மருள்வாயே
காத லாயருள் புரிவாய் நான்மறை
மூல மேயென வுடனே மாகரி
காண நேர்வரு திருமால் நாரணன் .. மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ்சபை
நாத னார்தம திடமே வாழ்சிவ
காம நாயகி தருபா லாபுலி .. சையில்வாழ்வே
வேத நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யாலெழில் புநன்மு வாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை .. புரிகோவே
வீறு சேர்வரை யரசாய் மேவிய
மேரு மால்வரை யெனநீள் கோபுர
மேலை வாயிலின் மயில்மீ தேறிய .. பெருமாளே.
பாடல் 485 எலுப்புத் தோல்மயிர் ( சிதம்பரம் )
ராகம் - சிந்து பைரவி ; தாளம் - ஆதி (எடுப்பு - 1/2 இடம்)
தனத்தத் தானன தானன தானன
தனத்தத் தானன தானன தானன
தனத்தத் தானன தானன தானன .. தந்ததான
எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை
இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள்
இரத்தச் சாகர நீர்மல மேவிய .. கும்பியோடை
இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி
உளைப்புச் சூலையொ டேவலு வாகிய
இரைப்புக் கேவல மூலவி யாதியொ .. டண்டவாதங்
குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ
டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை
குருட்டுக் கால்முட மூமையு ளூடறு .. கண்டமாலை
குடிப்புக் கூனமி தேசத மாமென
எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு
னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ .. அன்புதாராய்
கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி
ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட .. கண்டவேலா
கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ
யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி
கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி .. பங்கின்மேவும்
வலித்துத் தோள்மலை ராவண னானவன்
எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து
மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர .. சம்புபாலா
மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை
அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய
வடக்குக் கோபுர வாசலில் மேவிய .. தம்பிரானே.
பாடல் 486 நீல மாமுகில் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தான தானன தான தானன
தான தானன தான தானன
தான தானன தான தானன .. தனதான
நீல மாமுகில் போலும் வார்குழ
லார்கள் மாலைகு லாவ வேல்கணை
நீள வாள்விழி பார்வை காதிரு .. குழையாட
நீடு மார்பணி யாட வோடிய
கோடு போலிணை யாட நூலிடை
நேச பாளித சோலை மாமயி .. லெனவேகிக்
காலி னூபுர வோசை கோவென
ஆடி மால்கொடு நாணி யேவியர்
காய மோடணு பாகு பால்மொழி .. விலைமாதர்
காத லாயவ ரோடு பாழ்வினை
மூழ்கி யேழ்நர காழு மூடனை
காரிர் பாருமை யாசி வாபத .. மருள்வாயே
கோல மாமயி லேறி வார்குழை
யாட வேல்கொடு வீர வார் கழல்
கோடி கோடிடி யோசை போல்மிக .. மெருதூளாய்க்
கோடு கோவென ஆழி பாடுகள்
தீவு தாடசு ரார்கு ழாமொடு
கூள மாகவி ணோர்கள் வாழ்வுற .. விடும்வேலா
நாலு வேதமு டாடு வேதனை
யீண கேசவ னார்ச கோதரி
நாதர் பாகம்வி டாள்சி காமணி .. உமைபாலா
ஞான பூமிய தான பேர்புலி
யூரில் வாழ்தெய்வ யானை மானொடு
நாலு கோபுர வாசல் மேவிய .. பெருமாளே.
பாடல் 487 வாத பித்தமொடு ( சிதம்பரம் )
ராகம் - கானடா; தாளம் - ஆதி 4 களை (32)
அமைப்பு
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தான தத்ததன தான தத்ததன
தான தத்ததன தான தத்ததன
தான தத்ததன தான தத்ததன .. தந்ததான
வாத பித்தமொடு சூலை விப்புருதி
யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்
மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ .. டந்திமாலை
மாச டைக்குருடு காத டைப்பு செவி
டூமை கெட்டவலி மூல முற்றுதரு
மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க .. ளுண்டகாயம்
வேத வித்துபரி கோல முற்றுவிளை
யாடு வித்தகட லோட மொய்த்தபல
வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் .. சிங்கியாலே
வீடு கட்டிமய லாசை பட்டுவிழ
வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற
வீட ளித்துமயி லாடு சுத்தவெளி .. சிந்தியாதோ
ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி
நீறு பட்டலற சூர வெற்பவுண
ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக .. ழங்கிவேலா
ஓந மச்சிவய சாமி சுத்தஅடி
யார்க ளுக்குமுப காரி பச்சையுமை
ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் .. தந்தசேயே
ஆதி கற்பகவி நாய கர்க்குபிற
கான பொற்சரவ ணாப ரப்பிரம
னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய .. றிந்தகோவே
ஆசை பெற்றகுற மாதை நித்தவன
மேவி சுத்தமண மாடி நற்புலியு
ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் .. தம்பிரானே.
பாடல் 488 சுரும்புற்ற பொழில்தோறும் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனந்தத்த தனதான தனந்தத்த தனதான
தனந்தத்த தனதான .. தனதான
சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
துரந்துற்ற குளிர்வாடை .. யதனாலுந்
துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால
தொடர்ந்துற்று வருமாதர் .. வசையாலும்
அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு
மடைந்திட்ட விடைமேவு .. மணியாலும்
அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
அசைந்துற்ற மதுமாலை .. தரவேணும்
கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி
கரந்துற்ற மடமானி .. னுடனேசார்
கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில்
களம்பற்றி நடமாடு .. மரன்வாழ்வே
இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர
இதம்பெற்ற மயிலேறி .. வருகொவே
இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ
டெறிந்திட்டு விளையாடு .. பெருமாளே.
பாடல் 489 இணங்கித் தட்பொடு ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன .. தனதான
இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்
மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள்
இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள் .. கடிதாகும்
இடும்பைப் பற்றிய தாமென மேயினர்
பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர்
இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள் .. எவரேனும்
பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள்
மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள்
பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் .. அவரோடே
பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர
கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன
பதம்பற் றிப்புக ழானது கூறிட .. அருள்வாயே
வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்
சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ
மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் .. மருகோனே
மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர்
குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை
வளைந்திட் டுக்கள மீதினி லேகொல .. விடும்வேலா
பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள்
பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ
பிளந்திட் டுப்பல மாமயி லேறிய .. முருகோனே
பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள்
சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு
பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய .. பெருமாளே.
பாடல் 490 விடுங்கைக் கொத்தக ( சிதம்பரம் )
ராகம் - சங்கராபரணம்; தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2
தகதிமி-2, தகதிமி-2
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன .. தனதான
விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட
மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும்
விழுங்கப் பட்டற வேயற லோதியர் .. விழியாலே
விரும்பத் தக்கன போகமு மோகமும்
விளம்பத் தக்கன ஞானமு மானமும்
வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் .. விடுநாளில்
இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்
கிடந்திட் டுத்தம ரானவர் கோவென
இடங்கட் டிச்சுடு காடுபு காமுன .. மனதாலே
இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்
இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்
இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர .. இசைவாயே
கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்
நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய
குரங்கைச் செற்றும கோததி தூளெழ .. நிருதேசன்
குலங்கட் பட்டநி சாசரர் கோவென
இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய
குமண்டைக் குத்திர ராவண னார்முடி .. அடியோடே
பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி
ப்ரியங் கொட் டக்கநன் மாமரு காஇயல்
ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென .. விருதூதும்
ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி
ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ
பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய .. பெருமாளே.
பாடல் 491 கொந்தள வோலைக ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம் .. தனதான
கொந்தள வோலைக ளாடப்பண்
சங்கொளி போல்நகை வீசித்தண்
கொங்கைகள் மார்பினி லாடக்கொண் .. டையென்மேகம்
கொங்கெழு தோள்வளை யாடக்கண்
செங்கயல் வாளிகள் போலப்பண்
கொஞ்சிய கோகில மாகப்பொன் .. பறிகாரர்
தந்திர மாமென வேகிப்பொன்
தொங்கலொ டாரமு மாடச்செந்
தம்பல வாயொடு பேசிக்கொண் .. டுறவாடிச்
சம்பள மீதென வோதிப்பின்
பஞ்சணை மேல்மய லாடச்சஞ்
சங்கையில் மூளியர் பால்வைக்குஞ் .. செயல்தீராய்
அந்தக னாருயிர் போகப்பொன்
திண்புர மோடெரி பாயப்பண்
டங்கச னாருடல் வேகக்கண் .. டழல்மேவி
அண்டர்க ளோடட லார்தக்கன்
சந்திர சூரியர் வீழச்சென்
றம்பல மீதினி லாடத்தன் .. குருநாதா
சிந்துர மோடரி தேர்வர்க்கம்
பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன்
சிந்திட வேல்விடு வாகைத்திண் .. புயவேளே
செங்குற மாதுமி னாளைக்கண்
டிங்கித மாயுற வாடிப்பண்
செந்தமிழ் மால்புலி யூர்நத்தும் .. பெருமாளே.
பாடல் 492 நகையா லெத்திகள் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனனா தத்தன தானத்தம்
தனனா தத்தன தானத்தம்
தனனா தத்தன தானத்தம் .. தனதான
நகையா லெத்திகள் வாயிற்றம்
பலமோ டெத்திகள் நாணற்றின்
நயனா லெத்திகள் நாறற்புண் .. தொடைமாதர்
நடையா லெத்திக ளாரக்கொங்
கையினா லெத்திகள் மோகத்தின்
நவிலா லெத்திகள் தோகைப்பைங் .. குழல்மேகச்
சிகையா லெத்திக ளாசைச்சங்
கடியா லெத்திகள் பாடிப்பண்
திறனா லெத்திகள் பாரத்திண் .. தெருவூடே
சிலர்கூ டிக்கொடு ஆடிக்கொண்
டுழல்வா ருக்குழல் நாயெற்குன்
செயலா லற்புத ஞானத்தின் .. கழல்தாராய்
பகையா ருட்கிட வேலைக்கொண்
டுவரா ழிக்கிரி நாகத்தின்
படமோ டிற்றிட சூரைச்சங் .. கரிசூரா
பணநா கத்திடை சேர்முத்தின்
சிவகா மிககொரு பாகத்தன்
பரிவால் சத்துப தேசிக்குங் .. குரவோனே
சுகஞா னக்கடல் மூழ்கத்தந்
தடியே னுக்கருள் பாலிக்குஞ்
சுடர்பா தக்குக னேமுத்தின் .. கழல்வீரா
சுகரே சத்தன பாரச்செங்
குறமா தைக்கள வால்நித்தஞ்
சுக்முழ் கிப்புலி யூர்நத்தும் .. பெருமாளே.
பாடல் 493 எழுகடல் மணலை ( சிதம்பரம் )
ராகம் - அடாணா; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனன தனதன தனன
தனதன தனன .. தனதான
எழுகடல் மணலை அளவிடி னதிக
மெனதிடர் பிறவி .. அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக .. முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு .. மயர்வானார்
கடனுன தபய மடிமையு னடிமை
கடுகியு னடிகள் .. தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளு .. முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் .. வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை .. யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு .. பெருமாளே.
பாடல் 494 தறுகணன் மறலி ( சிதம்பரம் )
ராகம் - வலஜி ; தாளம் - அங்கதாளம் (14)
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தக-1, திமிதக-2
தனதன தனன தனதன தனன
தனதன தனனாத் .. தனதான
தறுகணன் மறலி முறுகிய கயிறு
தலைகொடு விசிறீக் .. கொடுபோகுஞ்
சளமது தவிர அளவிடு சுருதி
தலைகொடு பலசாத் .. திரமோதி
அறுவகை சமய முறைமுறை சருவி
யலைபடு தநல்முச் .. சினையாகும்
அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற் .. கருள்வாயே
நறுமல ரிறைவி யரிதிரு மருக
நகமுத வியபார்ப் .. பதிவாழ்வே
நதிமதி யிதழி பணியணி கடவுள்
நடமிடு புலியூர்க் .. குமரேசா
கறுவிய நிருதர் எறிதிரை பரவு
கடலிடை பொடியாப் .. பொருதோனே
கழலிணை பணியு மவருடன் முனிவு
கனவிலு மறியாப் .. பெருமாளே.
பாடல் 495 இரசபா கொத்தமொழி ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனதனா தத்ததன தனதனா தத்ததன
தனதனா தத்ததன தானனந் தனன
----- 3 முறை ----- .. தந்ததான
இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை
யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர்
எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க
ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர்
எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக
ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு .. திங்கள்மேவும்
இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி
லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி
யிணைசொல்க்ரீ வத்தரள வினவொள்தா லப்பனையி
னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி
யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட
ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச .. தங்கமார்பின்
வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின்
வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய
மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை
மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல்
மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென்
வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை .. ரம்பைமாதர்
மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு
மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை
வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர்
மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி
வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ்
வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை .. தந்துஆள்வாய்
முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள்
முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை
முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை
முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர்
முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ
டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை .. யெங்குமோட
முடுகிவேல் விட்டுவட குவடு வாய் விட்டமரர்
முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள்
முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள்
முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள்
முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர
முடிபதா கைப்பொலிய வேந டங்குலவு .. கந்தவேளே
அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி
ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன்
அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க
ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய
அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க
ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர் .. சந்தவேலா
அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி
யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை
அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி
யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ்
அருண்ரு பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ
டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர் .. தம்பிரானே.
பாடல் 496 இருளு மோர்கதி ( சிதம்பரம் )
ராகம் - வாசஸ்பதி ; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிடதகதிமி-3 1/2
தனன தானன தனன தானன
தனன தானன .. தனதான
இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ
னிடம தேறியெ .. னிருநோயும்
எரிய வேமல மொழிய வேசுட
ரிலகு மூலக .. வொளிமேவி
அருவி பாயஇ னமுத மூறவுன்
அருளெ லாமென .. தளவாக
அருளி யேசிவ மகிழ வேபெற
அருளி யேயிணை .. யடிதாராய்
பரம தேசிகர் குருவி லாதவர்
பரவை வான்மதி .. தவழ்வேணிப்
பவள மேனியர் எனது தாதையர்
பரம ராசியர் .. அருள்பாலா
மருவி நாயெனை யடிமை யாமென
மகிழ்மெய் ஞானமு .. மருள்வோனே
மறைகு லாவிய புலியுர் வாழ்குற
மகள்மெ லாசைகொள் .. பெருமாளே.
பாடல் 497 காவி யுடுத்துந் ( சிதம்பரம் )
ராகம் - மத்யமாவதி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தான தனத்தம் தான தனத்தம்
தான தனத்தம் .. தனதான
காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
காடுகள் புக்குந் .. தடுமாறிக்
காயகனி துய்த்துங் காயமொ றுத்துங்
காசினி முற்றுந் .. திரியாதே
சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
தேற வுதிக்கும் .. பரஞான
தீப விளக்கங் காண எனக்குன்
சீதள பத்மந் .. தருவாயே
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட வுக்ரந் .. தருவீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சுங் .. கதிர்வேலா
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
சோலை சிறக்கும் .. புலியூரா
சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்
தோகை நடத்தும் .. பெருமாளே.
பாடல் 498 கோதிக் கோதிக் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தானத் தானத் தாந்தன தானன
தானத் தானத் தாந்தன தானன
தானத் தானத் தாந்தன தானன .. தனதான
கோதிக் கோதிக் கூந்தலி லேமலர்
பாவித் தாகச் சாந்தணி வார்முலை
கோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழி .. குயில்போலக்
கூவிக் கூவிக் காண்டிசை போலவெ
நாணிக் கூனிப் பாய்ந்திடு வார்சிலர்
கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள் .. வருமோவென்
றோதித் தோளிற் பூந்துகி லால்முலை
மூடிச் சூதிற் றூங்கமி லார்தெரு
வோடித் தேடிச் சோம்பிடு வார்சில .. விலைமாதர்
ஓருச் சேரச் சேர்ந்திடு வார்கலி
சூளைக் காரச் சாங்கமி லார்சில
வோரைச் சாகத் தீம்பிடு வார்செய .. லுறவாமோ
வேதத் தோனைக் காந்தள்கை யால்தலை
மேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடி
வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல் .. விடும்வேலா
வேளைச் சீறித் தூங்கலொ டேவய
மாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிட
மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை .. தருசேயே
நாதத் தோசைக் காண்டுணை யேசுடர்
மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர்
நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள் .. சுரமானை
ஞானப் பால்முத் தேன்சுரு பாள்வளி
மாதைக் கானிற் சேர்ந்தணை வாய்சிவ
ஞானப் பூமித் தேன்புலி யூர்மகிழ் .. பெருமாளே.
பாடல் 499 சகசம்பக் குடைசூழ் ( சிதம்பரம் )
ராகம் -.; தாளம் -
தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன .. தனதான
சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல்
மதவின்பத் துடனே பலபணி
தனிதம்பட் டுடையோ டிகல்முர .. சொலிவீணை
தவளந்தப் புடனே கிடுகிடு
நடைதம்பட் டமிடோ ல் பலவொலி
சதளம்பொற் றடிகா ரருமிவை .. புடைசூழ
வெகுகும்பத் துடனே பலபடை
கரகஞ்சுற் றிடவே வரஇசை
வெகுசம்பத் துடனே யழகுட .. னிதமேவும்
விருமஞ்சித் திரமமா மிதுநொடி
மறையும் பொய்ப் பவுஷோ டுழல்வது
விடவும்பர்க் கரிதா மிணையடி .. தருவாயே
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுர் தஞ்செச் செகசே செககண .. எனபேரிக்
திமிர்தங்கற் குவடோ டெழுகட
லொலிகொண்டற் றுருவோ டலறிட
திரள்சண்டத் தவுணோர் பொடிபட .. விடும்வேலா
அகரம்பச் சுருவோ டொளியுறை
படிகம்பொற் செயலா ளரனரி
அயனண்டர்க் கரியா ளுமையருள் .. முருகோனே
அமுர்தம்பொற் குவடோ டிணைமுலை
மதிதுண்டப் புகழ்மான் மகளொடும்
அருள் செம்பொற் புலியூர் மருவிய .. பெருமாளே.
பாடல் 500 குளமகிழ்ந்துந் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம்
------ 3 முறை ------ .. தனதான
சகுடமுந்துங் கடலடைந்துங்
குளமகிழ்ந்துந் தோய்சங்கங்
கமுகடைந்தண் டமுதகண்டந்
தரளகந்தந் தேர்கஞ்சஞ்
சரமெனுங்கண் குமிழதுண்டம்
புருவெனுஞ்செஞ் சாபம்பொன் .. திகழ்மாதர்
சலசகெந்தம் புழுகுடன்சண்
பகமணங்கொண் டேய்ரண்டந்
தனகனம்பொன் கிரிவணங்கும்
பொறிபடுஞ்செம் பேர்வந்தண்
சலனசம்பொன் றிடைபணங்கின்
கடிதடங்கொண் டாரம்பொன் .. தொடர்பாவை
புகலல்கண்டஞ் சரிகரம்பொன்
சரணபந்தந் தோதிந்தம்
புரமுடன்கிண் கிணிசிலம்பும்
பொலியலம்புந் தாள்ரங்கம்
புணர்வணைந்தண் டுவரொடுந்தொண்
டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் .. கடைநாயேன்
புகழடைந்துன் கழல்பணிந்தொண்
பொடியணிந் தங்காநந்தம்
புனல்படிந்துண் டவசமிஞ்சுந்
தவசர்சந்தம் போலுந்திண்
புவனிகண்டின் றடிவணங்குஞ்
செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் .. கழல்தாராய்
திகுடதிந்திந் தகுடதந்தந்
திகுடதிந்திந் தோதிந்தம்
டகுடடண்டண் டிகுடடிண்டிண்
டகுடடண்டண் டோ டிண்டிண்
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண்
டிமுடடிண்டென் றேசங்கம் .. பலபேரி
செககணஞ்சஞ் சலிகைபஞ்சம்
பறைமுழங்கும் போரண்டஞ்
சிலையிடிந்துங் கடல்வடிந்தும்
பொடிபறந்துண் டோ ர்சங்கஞ்
சிரமுடைந்தண் டவுணரங்கம்
பிணமலைந்தன் றாடுஞ்செங் .. கதிர்வேலா
அகிலஅண்டஞ் சுழலஎங்கும்
பவுரிகொண்டங் காடுங்கொன்
புகழ்விளங்குங் கவுரிபங்கன்
குருவெனுஞ்சிங் காரங்கொண்
டறுமுகம்பொன் சதிதுலங்குந்
திருபதங்கந் தாஎன்றென் .. றமரோர்பால்
அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண்
சரணமுங் கொண் டோ தந்தம்
புனைகுறம்பெண் சிறுமியங்கம்
புணர்செயங்கொண் டேயம்பொன்
அமைவிளங்கும் புலிசரம்பொன்
திருநடங்கொண் டார்கந்தம் .. பெருமாளே.
பாடல் 501 சாந்துட னேபுழுகு ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன .. தனதான
சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை
மோந்துப யோதரம .. தணையாகச்
சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்த நுராகசுக
காந்தமொ டூசியென .. மடவார்பால்
கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி
ஓர்ந்துண ராவுணர்வி .. லடிநாயேன்
கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை
பூண்டுற வாடுதின .. முளதோதான்
பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள்
நீண்டிடு மாலொடய .. னறியாது
பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன்
ஏய்ந்தெதிர் காணநட .. மிடுபாதர்
பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட
மாங்கன காபுரியி .. லமர்வாழ்வே
பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை
சூழ்ம்புலி யூரிலுறை .. பெருமாளே.
பாடல் 502 சுடரனைய திருமேனி ( சிதம்பரம் )
ராகம் - கெளளை; தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான .. தனதான
சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
சொருபகிரி யிடமேவு .. முகமாறும்
சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய
துகிரிதழின் மொழிவேத .. மணம்வீச
அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட
அயில்தரமொ டெழில்தோகை .. மயிலேறி
அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை
அதிசயமெ னருள்பாட .. வரவேணும்
விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட
மிடறடைய விடம்வாரி .. யருள்நாதன்
மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
மிகமகிழ அநுபூதி .. யருள்வோனே
இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி
னிணையிளநிர் முலைமார்பி .. னணைமார்பா
இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி
யிருடியர்கள் புகழ்ஞான .. பெருமாளே.
பாடல் 503 தத்தைமயில் போலுமியல் ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன .. தனதான
தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை
யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர்
சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி .. பிடிபோல
தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ
யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென
தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ .. ருடல்பூசி
வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு
கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற
வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி .. யுடைசோர
மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட
னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம்
வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி .. செயலாமோ
சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக
நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை
தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை .. யருள்பாலா
சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட
ரத்நமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ
சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட .. மிடுவோனே
துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு
சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை
சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர .. மணிமார்பா
சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர்
சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக
சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ் .. பெருமாளே.
பாடல் 504 துத்தி பொற்றன ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தத்த தத்தன தான தானன
தத்த தத்தன தான தானன
தத்த தத்தன தான தானன .. தனதான
துத்தி பொற்றன மேரு வாமென
வொத்தி பத்திரள் வாகு வாயவிர்
துப்பு முத்தொடு மார்பினாடிட .. மயில்போலே
சுக்கை மைக்குழ லாட நூலிடை
பட்டு விட்டவிர் காம னாரல்குல்
சுற்று வித்துறு வாழை சேர்தொடை .. விலைமாதர்
தத்தை பட்குர லோசை நூபுர
மொத்த நட்டமொ டாடி மார்முலை
சற்ற சைத்துகு லாவும் வேசிய .. ரவரோடே
தர்க்க மிட்டுற வாடி யீளைநொய்
கக்கல் விக்கல்கொ ளூளை நாயென
சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட .. வுழல்வேனோ
தித்தி மித்திமி தீத தோதக
தத்த னத்தன தான தீதிமி
திக்கு முக்கிட மூரி பேரிகை .. தவில்போடச்
சித்ர வித்தைய ராட வானவர்
பொற்பு விட்டிடு சேசெ சேயென
செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட .. விடும்வேலா
செத்தி டச்சம னார்க டாபட
அற்று தைத்தசு வாமி யாரிட
சித்தி ரச்சிவ காமி யாரருள் .. முருகோனே
தெற்க ரக்கர்கள் தீவு நீறிட
விட்ட அச்சுத ரீன மானொடு
சித்தி ரப்புலி யூரில் மேவிய .. பெருமாளே.
பாடல் 505 நாடா பிறப்புமுடி ( சிதம்பரம் )
ராகம் - ஷண்முகப்ரியா; தாளம் - ஸங்கீர்ண சாபு (4 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன .. தனதான
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயே னரற்றுமொழி .. வினையாயின்
நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்குமுன .. தருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை .. அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரே னெனக்கெதிர் முன் .. வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
தோலா சனத்தியுமை .. யருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
தோழா கடப்பமல .. ரணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
மேராள் குறத்திதிரு .. மணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ் .. பெருமாளே.
பாடல் 506 நாலுசது ரத்த ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன
தானதன தத்த தந்தன .. தந்ததான
நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை
நாடியின டத்தி மந்திர .. பந்தியாலே
நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர்
நாறிசை நடத்தி மண்டல .. சந்தியாறிற்
கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு
கோவென முழக்கு சங்கொலி .. விந்துநாதங்
கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு
கோடிநட னப்ப தஞ்சபை .. யென்றுசேர்வேன்
ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி
ஆரணர் தலைக்க லங்கொளி .. செம்பொன்வாசி
ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை
ஆளுமை பரத்தி சுந்தரி .. தந்தசேயே
வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர்
வீடெரி கொளுத்தி யெண்கட .. லுண்டவேலா
வேசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர்
வீறுநட னர்க்கி சைந்தருள் .. தம்பிரானே.
பாடல் 507 நீலக்குழ லார்முத்தணி ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன .. தனதான
நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை
நீளச்சசி யார்பொட்டணி .. நுதல்மாதர்
நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி
நேமித்தெழு தாசித்திர .. வடிவார்தோள்
ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை
யாகத்தமி யேனித்தமு .. முழல்வேனோ
ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
மாகக்கொள வேமுத்தியை .. யருள்வாயே
மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி
மார்பிற்பிர காசக்கிரி .. தனபார
வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி
மாணிக்கமி னாள்நிஷ்கள .. உமைபாகர்
சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு
சோதிப்பொருள் கேள்விக்கிடு .. முருகோனே
சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர்
சோதிப்புலி யூர்நத்திய .. பெருமாளே.
பாடல் 508 பனிபோ லத்துளி ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனனா தத்தன தனனா தத்தன
தனனா தத்தன .. தனதான
பனிபோ லத்துளி சலவா யுட்கரு
பதின்மா தத்திடை .. தலைகீழாய்ப்
படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி
பயில்வா ருத்தியில் .. சிலநாள்போய்த்
தனமா தர்க்குழி விழுவார் தத்துவர்
சதிகா ரச்சமன் .. வருநாளிற்
றறியா ரிற்சடம் விடுவா ரிப்படி
தளர்மா யத்துய .. ரொழியாதோ
வினைமா யக்கிரி பொடியா கக்கடல்
விகடா ருக்கிட .. விடும்வேலா
விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ
மிகவே குட்டிய .. குருநாதா
நினைவோர் சித்தமொ டகலா மற்புகு
நிழலாள் பத்தினி .. மணவாளா
நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு
நிறைவே பத்தர்கள் .. பெருமாளே.
பாடல் 509 மகரமொ டுறுகுழை ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனதன தனதன தான தாத்தன
தனதன தனதன தான தாத்தன
தனதன தனதன தான தாத்தன .. தனதான
மகரமொ டுறுகுழை யோலை காட்டியு
மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்
வரவர வரஇத ழூற லூட்டியும் .. வலைவீசும்
மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில்
வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில்
வளமையி லிளமையில் மாடை வேட்கையில் .. மறுகாதே
இகலிய பிரமக பால பாத்திர
மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற
மிதழியை யழகிய வேணி யார்த்ததும் .. விருதாக
எழில்பட மழுவுடன் மானு மேற்றது
மிசைபட இசைதரு ஆதி தோற்றமு
மிவையிவை யெனவுப தேச மேற்றுவ .. தொருநாளே
ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு
தலைபறி யமணர்ச மூக மாற்றிய
தவமுனி சகமுளர் பாடு பாட்டென .. மறைபாடி
தரிகிட தரிகிட தாகு டாத்திரி
கிடதரி கிடதரி தாவெ னாச்சில
சபதமொ டெழுவன தாள வாச்சிய .. முடனேநீள்
அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல
அலகைக ளடைவுட னாடு மாட்டமு
மரனவ னுடனெழு காளி கூட்டமு .. மகலாதே
அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு
மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு
மரிதென முறைமுறை யாடல் காட்டிய .. பெருமாளே.
பாடல் 510 மச்ச மெச்சு ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த தாத்த .. தனதான
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம்
வைச்சி றைச்ச பாத்ர .. மநுபோகம்
மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த வாழ்க்கை
மட்டு லப்ப தார்த்த .. மிடிபாறை
எய்ச்சி ளைச்ச பேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்கு
மெய்ச்சி ளைச்ச ஈக்கு .. மிரையாகும்
இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி
இப்படிக்கு மோக்ஷ .. மருள்வாயே
பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி
பொற்ப தத்து ளாக்கு .. புலியூரா
பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு
புத்தி மெத்த காட்டு .. புனவேடன்
பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு
பைச்சி லைக்கு மாட்கொ .. ளரன்வாழ்வே
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட
பத்த ருக்கு வாய்த்த .. பெருமாளே.
பாடல் 511 மதிய மண்குண ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன .. தந்ததான
மதிய மண்குண மஞ்சு நால்முக
நகர முன்கலை கங்கை நால்குண
மகர முன்சிக ரங்கி மூணிடை .. தங்குகோண
மதன முன்தரி சண்ட மாருத
மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு
வகர மிஞ்சிய கன்ப டாகமொ .. ரென்றுசேறுங்
கதிர டங்கிய அண்ட கோளகை
யகர நின்றிடும் ரண்டு கால்மிசை
ககன மின்சுழி ரண்டு கால்பரி .. கந்துபாயுங்
கருணை யிந்திரி யங்கள் சோதிய
அருண சந்திர மண்ட லீகரர்
கதிகொள் யந்திர விந்து நாதமொ .. டென்றுசேர்வேன்
அதிர பம்பைகள் டங்கு டாடிக
முதிர அண்டமொ டைந்து பேரிகை
டகுட டண்டட தொந்த தோதக .. என்றுதாளம்
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோ
டிதவி தம்பெறு சிந்து பாடிட
அமரர் துந்துமி சங்கு தாரைகள் .. பொங்கவூடு
உதிர மண்டல மெங்கு மாயொளி
யெழகு மண்டியெ ழுந்து சூரரை
உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி .. சிந்திவீழ
உறுசி னங்கொடெ திர்ந்த சேவக
மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற
வுரகு னும்புலி கண்ட வூர்மகிழ் .. தம்பிரானே.
பாடல் 512 மருவு கடல்முகி ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன
தத்தத் தத்தன தத்தத் தத்தன
--------- 3 முறை --------- .. தனதான
மருவு கடல்முகி லனைய குழல்மதி
வதன நுதல்சிலை பிறைய தெணும்விழி
மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமி
ழொப்பக் கத்தரி யொத்திட் டச்செவி
குமுத மலரித ழமுத மொழிநிரை
தரள மெனுநகை மிடறு கமுகென
வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ
டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர்
வகைய விரலொடு கிளிகள் முகநக
மெனவு மிகலிய குவடு மிணையென
வட்டத் துத்திமு கிழ்ப்பச் சக்கிரம்
வைத்தப் பொற்குட மொத்திட் டுத்திகழ் .. முலைமேவும்
வடமு நிரைநிரை தரள பவளமொ
டசைய பழுமர இலைவ யிறுமயி
ரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும்
அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி
மதன னுருதுடி யிடையு மினலென
அரிய கடிதட மமிர்த கழைரச
மட்டுப் பொற்கம லத்திற் சக்கிரி
துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை
மருவு தொடையிணை கதலி பரடுகொள்
கணையு முழவென கமட மெழுதிய
வட்டப் புத்தக மொத்துப் பொற்சர
ணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள் .. மயில்போலே
தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர்
மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடு
தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள்
பற்றிக் கட்டில ணைக்கொப் பிப்புணர்
திலத மழிபட விழிகள் சுழலிட
மலர்க ளணைகுழ லிடைகொள் துகில்பட
தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு
கட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட
திரையி லமுதென கழையில் ரசமென
பலவில் சுளையென வுருக வுயர்மயல்
சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும்
வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென .. நரைமேவிச்
செவியொ டொளிர்விழி மறைய மலசல
மொழுக பலவுரை குழற தடிகொடு
தெத்திப் பித்தமு முற்றித் தற்செய
லற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட
சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினி
லுவரி நிறமுடை நமனு முயிர்கொள
செப்பற் றுப்பிண மொப்பித் துப்பெய
ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு
செனன மிதுவென அழுது முகமிசை
அறைய அணைபவ ரெடென சுடலையில்
சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படி
நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சட .. முழல்வேனோ
குருவி னுருவென அருள்செய் துறையினில்
குதிரை கொளவரு நிறைத வசிதலை
கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத
மெற்றிப் பொற்பொரு ளிட்டுக் கைக்கொளு
முதல்வ ரிளகலை மதிய மடைசடை
அருண வுழைமழு மருவு திருபுயர்
கொட்டத் துப்புரர் கெட்டுப் பொட்டெழ
விட்டத் திக்கணை நக்கர்க் கற்புத
குமர னெனவிரு தொலியு முரசொடு
வளையு மெழுகட லதிர முழவொடு
கொட்டத் துட்டரை வெட்டித் தட்கட
லொப்பத் திக்கும டுத்துத் தத்திட .. அமர்மேவிக்
குருகு கொடிசிலை குடைகள் மிடைபட
மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட
கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி
எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல்
குமர குருபர குமர குருபர
குமர குருபர எனவோ தமரர்கள்
கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சர
ணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட
குலவு நரிசிறை கழுகு கொடிபல
கருட னடமிட குருதி பருகிட
கொற்றப் பத்திர மிட்டுப் பொற்கக
னத்தைச் சித்தமி ரக்ஷித் துக்கொளு .. மயில்வீரா
சிரமொ டிரணிய னுடல்கி ழியவொரு
பொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடு
சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர
வர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன்
அரிய விழிகெட இருப தமுமுல
கடைய நெடியவர் திருவு மழகியர்
தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சின
முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர
செயமு மனவலி சிலைகை கொடுகர
மிருப துடைகிரி சிரமொர் பதும்விழ
திக்கெட் டைக்கக னத்தர்க் குக்கொடு
பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர .. மருகோனே
திலத மதிமுக அழகி மரகத
வடிவி பரிபுர நடனி மலர்பத
சித்தர்க் குக்குறி வைத்திட் டத்தன்
முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர
சிவைகொள் திருசர சுவதி வெகுவித
சொருபி முதுவிய கிழவி யியல்கொடு
செட்டிக் குச்சுக முற்றத் தத்துவ
சித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறு
திரையி லமுதென மொழிசெய் கவுரியி
னரிய மகனென புகழ்பு லிநகரில்
செப்புப் பொற்றன முற்றப் பொற்குற
தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய .. பெருமாளே.
பாடல் 513 ( சிதம்பரம் )
ராகம் - கல்யாணி; தாளம் - ஆதி
தனனா தனத்ததன தனனா தனத்ததன
தனனா தனத்ததன .. தனதானா
மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்
வருவா யுரைத்தமொழி .. தவறாதே
மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு
மனமாயை யற்றசுக .. மதிபாலன்
நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல
நிலைவே ரறுக்கவல .. பிரகாசன்
நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம
நிழலாளி யைத்தொழுது .. வருவாயே
இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய
இளையோ ளொரொப்புமிலி .. நிருவாணி
எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை
யிதழ்வேணி யப்பனுடை .. குருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர
முதுசூ ரரைத்தலை கொள் .. முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு
முருகா தமிழ்ப்புலியுர் .. பெருமாளே.
பாடல் 514 முத்த மோகன ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தத்த தானன தத்தன தானன
தத்த தானன தத்தன தானன
தத்த தானன தத்தன தானன .. தனதான
முத்த மோகன தத்தையி னார்குர
லொத்த வாயித சர்க்கரை யார்நகை
முத்து வாரணி பொற்குவ டார்முலை .. விலைமாதர்
மொக்கை போகசெ குத்திடு வார்பொருள்
பற்றி வேறும ழைத்திடு வார்சிலர்
முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் .. கலிசூழச்
சித்தி லாடஅ ழைத்திடு வார்கவ
டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை
சித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர் .. மடமீதே
சித்தெ லாமொரு மித்துன தாறினம்
வைத்து நாயென ருட்பெற வேபொருள்
செப்பி யாறும கப்பரி வோடுணர் .. வருள்வாயே
தத்த னானத னத்தன தானெனு
டுக்கை பேரிமு ழக்கிட வேகடல்
சத்த தீவுத யித்தியர் மாளிட .. விடும்வேலா
சத்தி லோகப ரப்பர மேசுர
நிர்த்த மாடுக ழற்கரு ணாகர
தற்ப ராபர நித்தனொர் பாலுறை .. யுமைபாலா
துத்தி மார்முலை முத்தணி மோகன
பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள்
துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன் .. மணிமார்பா
சுட்டி நீலஇ ரத்தின மாமயி
லுற்று மேவிய ருட்புலி யூர்வளர்
சுத்த னேசசி பெற்றபெ ணாயகி .. பெருமாளே.
பாடல் 515 பரமகுரு நாத ( சிதம்பரம் )
ராகம் - ஹிந்தோளம் ; தாளம் - ஆதி
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் .. தனதானா
பரமகுரு நாத கருணையுப தேச
பதவிதரு ஞானப் .. பெருமாள்காண்
பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
பகருமதி காரப் .. பெருமாள்காண்
திருவளரு நீதி தினமனொக ராதி
செகபதியை யாளப் .. பெருமாள்காண்
செகதலமும் வானு மருவையவை பூத
தெரிசனைசி வாயப் .. பெருமாள்காண்
ஒருபொருள தாகி அருவிடையை யூரு
முமைதன்மண வாளப் .. பெருமாள்காண்
உகமுடிவு கால மிறுதிகளி லாத
உறுதியநு பூதிப் .. பெருமாள்காண்
கருவுதனி லூறு மருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப் .. பெருமாள்காண்
கனகசபை மேவி அனவரத மாடு
கடவுள்செக சோதிப் .. பெருமாளே.
பாடல் 516 வஞ்சமே கோடி ( சிதம்பரம் )
ராகம் - .; தாளம் -
தந்தனா தான தானன தந்தனா தான தானன
தந்தனா தான தானன .. தனதான
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
வன்கணா ரார வாரமு .. மருள்வோராய்
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்
வந்தியா ஆசை யேதரு .. விலைமாதர்
பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு
பஞ்சியே பேசி நாடொறு .. மெலியாதே
பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை .. யருள்வாயே
அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்
அன்றுதா னேவி வானவர் .. சிறைமீள
அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்
அண்டர்கோ வேப ராபர .. முதல்வோனே
கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய
கொன்றையா னாளு மேமகிழ் .. புதல்வோனே
கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு
குன்றுதோ றாடல் மேவிய .. பெருமாளே.
பாடல் 517 திருநில மருவிக் ( கயிலைமலை )
ராகம் - .; தாளம் -
தனதன தனனத் தான தனதன தனனத் தான
தனதன தனனத் தான .. தனதான
திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோ டி
சிவவழி யுடனுற் றேக .. பரமீதே
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
திரிபுர மெரியத் தீயி .. னகைமேவி
இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
யிருள்கதி ரிலிபொற் பூமி .. தவசூடே
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
ரிளையவ னெனவித் தார .. மருள்வாயே
பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்
பழமறை பணியச் சூல .. மழுமானும்
பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
பரியினை மலர்விட் டாடி .. அடியொர்கள்
அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
மருள்செயு முமையிற் பாக .. ரருள்பாலா
அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ
டடியவர் கயிலைக் கான .. பெருமாளே.
பாடல் 518 தேனுந்து முக்கனிகள் ( கயிலைமலை )
ராகம் - தோடி; தாளம் - கண்டசாபு (2 1/2)
தானந் தனத்ததன தானந் தனத்ததன
தானந் தனத்ததன .. தனதான
தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்
சீரும் பழத்தசிவ .. ம ளுறத்
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
சீவன் சிவச்சொருப .. மெனதேறி
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
நாதம் பரப்பிரம .. வொளிமீதே
ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளுங் களிக்கபத .. மருள்வாயே
வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்
மாலும் பிழைக்கஅலை .. விடமாள
வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு
மானின் கரத்தனருள் .. முருகோனே
தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண் கடப்பமல .. ரணிமார்பா
தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை
சாலுங் குறத்திமகிழ் .. பெருமாளே.
பாடல் 519 நகைத்து வுருக்கி ( கயிலைமலை )
ராகம் - .; தாளம் -
தனத்த தனத்த தனத்த தனத்த
தனத்த தனத்த .. தனதான
நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி
நடித்து விதத்தி .. லதிமோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி
நலத்தி லணைத்து .. மொழியாலுந்
திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை
திரட்டி யெடுத்து .. வரவேசெய்
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
தெவிட்டு கலைக்குள் .. விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து
படர்ச்சி கறுத்த .. மயிலேறிப்
பணைத்த கரத்த குணத்த மணத்த
பதத்த கனத்த .. தனமாதை
மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து
வெளுத்த பொருப்பி .. லுறைநாதா
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க
ம்ருகத்தை யெடுத்தொர் .. பெருமாளே.
பாடல் 520 பனியின் விந்துளி ( கயிலைமலை )
ராகம் - .; தாளம் -
தனன தந்தன தானனா தனதனன
தனன தந்தன தானனா தனதனன
தனன தந்தன தானனா தனதனன .. தனதான
பனியின் விந்துளி போலவே கருவினுறு
மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர்
பனைதெ னங்கனி போலவே பலகனியின் .. வயறாகிப்
பருவ முந்தலை கீழதாய் நழுவிநில
மருவி யொன்பது வாசல்சே ருருவமுள
பதுமை யின்செயல் போலவே வளிகயிறி .. னுடனாடி
மனவி தந்தெரி யாமலே மலசலமொ
டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின்
மயம யின்றொரு பாலனா யிகமுடைய .. செயல்மேவி
வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும்
அறம றந்தக மீதுபோய் தினதினமு
மனம ழிந்துடல் நாறினே னினியுனது .. கழல்தாராய்
தனன தந்தன தானனா தனதனன
தினன திந்தன தீததோ திகுததிகு
தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு .. வளைபேரி
தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி
யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு
சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு .. மவுணோர்கள்
சினம ழிந்திட தேர்கள் தோலரிபரிகள்
குருதி யெண்டிசை மூடவே அலகைநரி
சிறையி னங்களி கூரவே நகையருளி .. விடும்வேலா
சிவன்ம கிழ்ந்திரு ளானைமா முகன்மருவி
மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ்
திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் .. பெருமாளே.
பாடல் 521 புகலியில்வித் ( கயிலைமலை )
ராகம் - அடானா; தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதனனத் .. தனதான
புமியதனிற் ..ப்ரபுவான
புகலியில்வித் .. தகர்போல
அமர்தகவித் .. தொடைபாட
அடிமைதனக் .. கருள்வாயே
சமரிலெதிர்த் .. தசுர்மாளத்
தனியயில்விட் .. டருள்வோனே
நமசிவயப் .. பொருளானே
ரசதகிரிப் .. பெருமாளே.
பாடல் 522 முகத்தைப் பிலுக்கி ( கயிலைமலை )
ராகம் - .; தாளம் -
தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த
தனத்தத் தனத்த தத்த .. தனதான
முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந
முலைக்கச் சவிழ்த்த சைத்து .. முசியாதே
முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து
மொழிக்குட் படுத்த ழைத்த .. மளிமீதே
நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த
நயத்திற் கழுத்தி றுக்கி .. யணைவார்பால்
நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து
நயத்துக் தியக்கி நித்த .. மழிவேனோ
செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க
திமித்தித் திமித்தி தித்தி .. யெனஆடும்
செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த
ஜெனத்துக் கினித்த சித்தி .. யருள்வோனே
மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன்
மிகுத்துப் பெயர்த்தெ டுத்த .. கயிலாய
மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்து
மிதித்துத் துகைத்து விட்ட .. பெருமாளே.
பாடல் 523 ஒருபது மிருபது ( ஸ்ரீ சைலம் திருமலை )
ராகம் - பிலஹரி ; தாளம் - ஆதி
(எடுப்பு - 1/2 இடம்)
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன .. தனதான
ஒருபது மிருபது மறுபது முடனறு
முணர்வுற இருபத .. முளநாடி
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
வெளியொடு வொளிபெற .. விரவாதே
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
திரிதொழி லவமது .. புரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் .. புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை .. பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி .. யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
பிணிகெட அருள்தரு .. குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
பிணையமர் திருமலை .. பெருமாளே.
பாடல் 524 கறுத்ததலை வெளிறு ( திருவேங்கடம் )
ராகம் - முகாரி ; தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகதிமிதக-3, தகதிமி-2, தகிட-1 1/2
தனத்ததன தனதன தனந்த
தனத்ததன தனதன தனந்த
தனத்ததன தனதன தனந்த .. தனதான
கறுத்ததலை வெளிறு மிகுந்து
மதர்த்த இணை விழிகள் குழிந்து
கதுப்பிலுறு தசைகள் வறண்டு .. செவிதோலாய்க்
கழுத்தடியு மடைய வளைந்து
கனத்தநெடு முதுகு குனிந்து
கதுப்புறுப லடைய விழுந்து .. தடுநீர்சோர்
உறக்கம்வரு மளவி லெலும்பு
குலுக்கிவிடு மிருமல் தொடங்கி
உரத்தகன குரலு நெரிந்து .. தடிகாலாய்
உரத்தநடை தளரு முடம்பு
பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
உனக்கடிமை படுமவர் தொண்டு .. புரிவேனோ
சிறுத்தசெலு வதன ளிருந்து
பெருத்ததிரை யுததி கரந்து
செறித்தமறை கொணர நிவந்த .. ஜெயமாலே
செறித்தவளை கடலில் வரம்பு
புதுக்கியிளை யவனோ டறிந்து
செயிர்த்தஅநு மனையு முகந்து .. படையோடி
மறப்புரிசை வளையு மிலங்கை
யரக்கனொரு பதுமுடி சிந்த
வளைத்தசிலை விஜய முகுந்தன் .. முருகோனே
மலர்க்கமல வடிவுள செங்கை
அயிற்குமர குகைவழி வந்த
மலைச்சிகர வடமலை நின்ற .. பெருமாளே.
பாடல் 525 சரவண பவநிதி ( திருவேங்கடம் )
ராகம் - பிருந்தாவன ஸாரங்கா; தாளம் - ஆதி
(எடுப்பு - 1/2 இடம்)
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன .. தனதான
சரவண பவநிதி யறுமக குருபர
சரவண பவநிதி யறுமக குருபர
சரவண பவநிதி யறுமக குருபர .. எனவோதித்
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
சனனம ரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற .. வருள்வாயே
கருணைய விழிபொழி யொருதனி முதலென
வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற .. வருள்நேயா
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
கலகமி னையதுள கழியவும் நிலைபெற
கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது .. மொருநாளே
திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய .. வடிவேலா
தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
திமிரம லமொழிய தினகர னெனவரு .. பெருவாழ்வே
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
மருகனெ னவெவரு மதிசய முடையவ
அமலிவி மலிபரை உமையவ ளருளிய .. முருகோனே
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
அழகினு லனமரு மரகர சிவசிவ .. பெருமாளே.
பாடல் 526 நெச்சுப் பிச்சிப் ( திருவேங்கடம் )
ராகம் - .; தாளம் -
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் தனதான
தனத்த தனத்த தனத்த தனத்தன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன .. தனதான
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்
கச்சிக் கச்சுற் றறன்மேவி
நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய
நிரைதரு மருமலர் செருகிடு பரிமள
நிறையுறை மதுகர .. நெடிதாடி
நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற்
றொப்புக் கொப்புக் குயர்வாகி
நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை
நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு
நிகழ்புழு கொழுகிய .. குழன்மேலும்
வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட்
டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல
வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன்
மதசிலை யதுவென மகபதி தனுவென
மதிதில தமும்வதி .. நுதன்மேலும்
மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்
பொற்பக் கத்திச் சையனாகி
மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத
மலரல திலைநிலை யெனமொழி தழியமெய்
வழிபட லொழிவனை .. யருள்வாயே
நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத்
துட்டக் கட்டத் தசிகாண
நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில்
நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்
நகைமுக திருவுறை .. மணிமார்பன்
நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத்
தைக்கைப் பற்றிப் பொருமாய
னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற
நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த
நரகரி யொருதிரு .. மருகோனே
கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப்
பட்டுக் குட்பட் டமுதாலுங்
கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு
கனதன பரிமள முழுகுப னிருபுய
கனகதி வியமணி .. யணிமார்பா
கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப்
பட்சிக் கக்கொட் டசுராதி
கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு
கடவட மலையுறை .. பெருமாளே.
பாடல் 527 கோங்கிள நீரிளக ( திருவேங்கடம் )
ராகம் - .; தாளம் -
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன .. தனதான
கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்
வாங்கிய வேல்விழியும் .. இருள்கூருங்
கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்
மாந்தளிர் போல்வடிவும் .. மிகநாடிப்
பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு
தீங்குட னேயுழலும் .. உயிர்வாழ்வு
பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்
வீழ்ந்தலை யாமலருள் .. புரிவாயே
பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்
வேங்கையு மாய்மறமி .. னுடன்வாழ்வாய்
பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக
பாண்டிய னீறணிய .. மொழிவோனே
வேங்கையும் வாரணமும் வேங்யு மானும்வளர்
வேங்கட மாமலையி .. லுறைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு .. பெருமாளே.
பாடல் 528 சாந்தமில் மோகவெரி ( திருவேங்கடம் )
ராகம் - .; தாளம் -
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன .. தனதான
சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
மூண்டவி யாதசம .. யவிரோத
சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
தாந்துணை யாவரென .. மடவார்மேல்
ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
தோயந்துரு காவறிவு .. தடுமாறி
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
யான்தனி போய்விடுவ .. தியல்போதான்
காந்தளி னானகர மான்தரு கானமயில்
காந்தவி சாகசர .. வணவேளே
காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
யாண்டகை யேயிபமின் .. மணவாளா
வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
வேங்கட மாமலையி .. லுறைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு .. பெருமாளே.
பாடல் 529 வரிசேர்ந்திடு சேல்கய ( திருவேங்கடம் )
ராகம் - சக்ரவாஹம் ; தாளம் - திஸ்ர த்ருபுடை
தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன .. தனதான
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
முழைவார்ந்திடு வேலையு நீலமும்
வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் .. வலையாலே
வளர்கோங்கிள மாமுகை யாகிய
தனவாஞ்சையி லேமுக மாயையில்
வளமாந்தளிர் போல்நிற மாகிய .. வடிவாலே
இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
இனிதாங்கனி வாயமு தூறல்கள் .. பருகாமே
எனதாந்தன தானவை போயற
மலமாங்கடு மோகவி காரமு
மிவைநீங்கிட வேயிரு தாளினை .. யருள்வாயே
கரிவாம்பரி தேர்திரள் சேனையு
முடனாந்துரி யோதன னாதிகள்
களமாண்டிட வேயொரு பாரத .. மதிலேகிக்
கனபாண்டவர் தேர்தனி லேயெழு
பரிதூண்டிய சாரதி யாகிய
கதிரோங்கிய நேமிய னாமரி .. ரகுராமன்
திரைநீண்டிரை வாரியும் வாலியும்
நெடிதோங்கும ராமர மேழொடு
தெசமாஞ்சிர ராவண னார்முடி .. பொடியாகச்
சிலைவாங்கிய நாரண னார்மரு
மகனாங்குக னேபொழில் சூழ்தரு
திருவேங்கட மாமலை மேவிய .. பெருமாளே.
பாடல் 530 அல்லிவிழி யாலு ( வள்ளிமலை )
ராகம் - தர்பாரி கானடா; தாளம் - ஆதி
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் .. தனதான
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் .. கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் .. தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் .. சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் .. கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக் .. குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளிவன மீதுற் .. றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத் .. தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் .. பெருமாளே.
பாடல் 531 ஐயுமுறு நோயு ( வள்ளிமலை )
ராகம் - மோஹனம்; தாளம் - ஆதி
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் .. தனதான
ஐயுமுறு நோயு மையலும வாவி
னைவருமு பாயப் .. பலநூலின்
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
முள்ளமுமில் வாழ்வைக் .. கருதாசைப்
பொய்யுமக லாத மெய்யைவள ராவி
உய்யும்வகை யோகத் .. தணுகாதே
புல்லறிவு பேசி யல்லல் படு வேனை
நல்லஇரு தாளிற் .. புணர்வாயே
மெய்யபொழில் நீடு தையலைமு நாலு
செய்யபுய மீதுற் .. றணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
வெள்ளமுது மாவைப் .. பொருதோனே
வையமுழு தாளு மையமயில் வீர
வல்லமுரு காமுத் .. தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் .. பெருமாளே.
பாடல் 532 கையொத்து வாழு ( வள்ளிமலை )
ராகம் - .; தாளம் -
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த தான தந்த .. தனதான
கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து
பொய்யொத்த வாழ்வு கண்டு .. மயலாகிக்
கல்லுக்கு நேரும் வஞ்ச வுள்ளத்தர் மேல்வி ழுந்து
கள்ளப்ப யோத ரங்க .. ளுடன்மேவி
உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று
பொய்யர்க்கு மேய யர்ந்து .. ளுடைநாயேன்
உள்ளப்பெ றாக நின்று தொய்யப்ப டாம லென்று
முள்ளத்தின் மாய்வ தொன்றை .. மொழியாயோ
ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு
தெய்வத்தெய் வானை கொங்கை .. புணர்வோனே
அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று
வெல்லப்ப தாகை கொண்ட .. திறல்வேலா
வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை
மெய்யொத்த நீதி கண்ட .. பெரியோனே
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட .. பெருமாளே.
பாடல் 533 முல்லைக்கு மார ( வள்ளிமலை )
ராகம் - .; தாளம் -
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த தான தந்த .. தனதான
முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
பல்லுக்கும் வாடி யின்ப .. முயலாநீள்
முள்ளுற்ற கால்ம டிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
பள்ளத்தில் வீழ்வ தன்றி .. யொருஞான
எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு
மெல்லைக்கும் வாவி நின்ற .. னருள்நாமம்
எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று
முள்ளப்பெ றாரி ணங்கை .. யொழிவேனோ
அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க
அல்லிக்கொள் மார்ப லங்கல் .. புனைவோனே
அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
மெள்ளச்ச ரோரு கங்கள் .. பயில்நாதா
வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த
மல்லுப்பொ ராறி ரண்டு .. புயவீரா
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட .. பெருமாளே.
பாடல் 534 கள்ளக்கு வாற்பை ( வள்ளிமலை )
ராகம் - .; தாளம் -
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
தய்யத்த தாத்த .. தனதான
கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
துள்ளிக்க னார்க்க .. யவுகோப
கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
கொள்ளைத்து ராற்பை .. பசுபாச
அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
வெள்ளிட்ட சாப்பி .. சிதமீரல்
அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்
கொள்ளப்ப டாக்கை .. தவிர்வேனோ
தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
வெள்ளுத்தி மாற்கு .. மருகோனே
சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்
புள்ளத்த மார்க்கம் .. வருவோனே
வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க
வல்லைக்கு ளேற்று .. மிளையோனே
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த .. பெருமாளே.
பாடல் 535 வெல்லிக்கு வீக்கு ( வள்ளிமலை )
ராகம் - .; தாளம் -
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
தய்யத்த தாத்த .. தனதான
வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு
வில்லிக்க தாக்க .. ருதும்வேளால்
வில்லற் றவாக்கொள் சொல்லற்று காப்பொய்
யில்லத் துறாக்க .. வலைமேவு
பல்லத்தி வாய்க்க அல்லற்ப டாக்கை
நல்லிற் பொறாச்ச .. மயமாறின்
பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
கல்விக் கலாத்த .. லையலாமோ
அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து
சொல்குக்கு டார்த்த .. இளையோனே
அல்லுக்கு மாற்றி னெல்லுக்க மேற்புல்
கெல்லைப்ப டாக்க .. ருணைவேளே
வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர்
வல்லிக்கு மேற்ற .. ரருள்வோனே
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த .. பெருமாளே.
பாடல் 536 ககனமு மநிலமு ( வள்ளிமலை )
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஆதி 2 களை (16)
தனதன தனதன தனதன தனதன
தய்யத்த தாத்த .. தனதான
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
கள்ளப் புலாற்கி .. ருமிவீடு
கனலெழ மொழிக்தரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பை .. சுமவாதே
யுகஇறு திகளனலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்கு .. மறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க .. அருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
வெள்ளைப்பி ராட்டி .. இறைகாணா
விடதர குடிலச டிலமிசை வெகுமுக
வெள்ளத்தை யேற்ற .. பதிவாழ்வே
வகுளமு முகுளித வழைகளு மலிபுன
வள்ளிக்கு லாத்தி .. கிரிவாழும்
வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்த்த .. பெருமாளே.
பாடல் 537 அல்லசல டைந்த ( வள்ளிமலை )
ராகம் - .; தாளம் -
தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த .. தனதான
அல்லசல டைந்த வில்லடல நங்கன்
அல்லிமல ரம்பு .. தனையேவ
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமது கிண்ட .. அணையூடே
சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று .. முனியாதே
துய்யவரி வண்டு செய்யுமது வுண்டு
துள்ளியக டம்பு .. தரவேணும்
கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
கல்விகரை கண்ட .. புலவோனே
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லறை வொன்றை .. யருள்வோனே
வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த .. மயில்வீரா
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த .. பெருமாளே.
பாடல் 538 குடிவாழ்க்கை யன்னை ( வள்ளிமலை )
ராகம் - அமிர்தவர்ஷணி ; தாளம் - ஆதி (தேசாதி)
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய .. தனதான
குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போற்ப்ர சன்ன .. மொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
குருவார்த்தை தன்னை .. யுணராதே
இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல் .. கொடுபோகி
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
னிருதாட்கள் தம்மை .. யுணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
மயில்மேற்றி கழ்ந்த .. குமரேசா
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த நல்ல .. மணவாளா
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
யருள்போற்றும் வண்மை .. தரும்வாழ்வே
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல .. பெருமாளே.
பாடல் 539 சிரமங்க மங்கைகண் ( வள்ளிமலை )
ராகம் -.; தாளம் -
தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம்
தனதந்த தந்தனம் .. தனதான
சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
சலமென்பு திண்பொருந் .. திடுமாயம்
சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
தழலிண்கண் வெந்துசிந் .. திடஆவி
விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
துயர்கொண்ட லைந்துலைந் .. தழியாமுன்
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந் .. தருள்வாயே
அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்
டமரஞ்ச மண்டிவந் .. திடுசூரன்
அகலம் பிளந்தணைந் தகிலம் பரந்திரங்
கிடஅன் றுடன்றுகொன் .. றிடும்வேலா
மரைவெங் கயம்பொருந் திடவண் டினங்குவிந்
திசையொன்ற மந்திசந் .. துடனாடும்
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
வரநின்று கும்பிடும் .. பெருமாளே.
பாடல் 540 வரைவில்பொய் மங்கையர் ( வள்ளிமலை )
ராகம் - .; தாளம் -
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன .. தனதான
வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன
விழியையு கந்துமு கந்து கொண்டடி
வருடிநி தம்பம ளைந்து தெந்தென .. அளிகாடை
மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல
குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற
மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல் .. மெழுகாகி
உருகியு கந்திதழ் தின்று மென்றுகை
யடியின கங்கள்வ ரைந்து குங்கும
உபய தனங்கள்த தும்ப அன்புட .. னணையாமஞ்
சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ
அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட
உணர்வழி யின்பம றந்து நின்றனை .. நினைவேனோ
விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு
மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு
விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர் .. களிகூர
வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி
ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை
விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு .. மருகோனே
அருகர் கணங்கள்பி ணங்கி டும்படி
மதுரையில் வெண்பொடி யும்ம ரந்திட
அரகர சங்கர வென்று வென்றருள் .. புகழ்வேலா
அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை
வயல்கள் பொருந்திய சந்த வண்கரை
யரிவை விலங்கலில் வந்து கந்தருள் .. பெருமாளே.
பாடல் 541 அகத்தி னைக்கொண் ( திருக்கழுக்குன்றம் )
ராகம் - .; தாளம் -
தனத்த தத்தம் தத்தன தானன
தனத்த தத்தம் தத்தன தானன
தனத்த தத்தம் தத்தன தானன .. தனதான
அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில
தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின்
அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு .. கணையாலே
அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்
நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ .. சிலநாள்போய்
இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்
மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட
லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை .. முதிர்வாயே
எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்
மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன
திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு .. னருள்தாராய்
புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி
படச்சி ரித்தண் முப்புர நீறுசெய்
புகைக்க னற்கண் பெற்றவர் காதலி .. யருள்பாலா
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர
சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை
புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் .. மருகோனே
திகழ்க்க டப்பம் புட்பம தார்புய
மறைத்து ருக்கொண் டற்புத மாகிய
தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை .. யணைசீலா
செகத்தி லுச்சம் பெற்றம ராவதி
யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி
திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய .. பெருமாளே.
பாடல் 542 எழுகுநிறை நாபி ( திருக்கழுக்குன்றம் )
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - ஆதி-தேசாதி (8)
தனதனன தான தனதனன தான
தனதனன தான .. தனதான
எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர் .. முதலானோர்
இறைவியெனு மாதி பரைமுலையி னூறி
யெழுமமிர்த நாறு .. கனிவாயா
புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
புநிதனென ஏடு .. தமிழாலே
புனலிலெதி ரேற சமணர்கழு வேற
பொருதகவி வீர .. குருநாதா
மழுவுழைக பால டமரகத்ரி சூல
மணிகரவி நோத .. ரருள்பாலா
மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய் .. முருகோனே
கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு
கதிருலவு வாசல் .. நிறைவானோர்
கடலொலிய தான மறைதமிழ்க ளோது
கதலிவன மேவு .. பெருமாளே.
பாடல் 543 ஓல மிட்ட ( திருக்கழுக்குன்றம் )
ராகம் - .; தாளம் -
தான தத்த தனந்த தனா தனாதன
தான தத்த தனந்த தனா தனாதன
தான தத்த தனந்த தனா தனாதன .. தனனதான
ஓல மிட்ட சுரும்பு தனா தனாவென
வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென
வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென .. விரகலீலை
ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென
வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென
ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென .. அமுதமாரன்
ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென
வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென
ஆர முத்த மணிந்து அளா வளாவென .. மருவுமாதர்
ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ
சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்
ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென .. வகைவராதோ
மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென
மேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென
வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென .. எதிர்கொள்சூரன்
மார்பு மொக்க நெரிந்து காணல் காணலென
பேய்கு திக்க நிணங்கள்ழு ழுவென
வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென .. உதிரமாறாய்
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென
மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென .. விசைகள்கூற
வேலெ டுத்து நடந்த திவா கராசல
வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ்
வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ .. குமரவேளே.
பாடல் 544 வேத வெற்பி ( திருக்கழுக்குன்றம் )
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
தான தத்த தான தத்த தான தத்த .. தனதான
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு .. மபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை .. முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி .. புயநேய
ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி .. புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க .. மகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி .. யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த .. முநிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த .. பெருமாளே.
பாடல் 545 நீலமயில் சேரு ( பேறைநகர் )
ராகம் - .; தாளம் -
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த .. தனதான
நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த
காரமிக வேநி றைந்த .. குழலாலும்
நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர
னேர்தருமு கார விந்த .. மதனாலும்
ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள்
ஆசைவலை வீசு கெண்டை .. விழியாலும்
ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த
னாகிமயல் நானு ழன்று .. திரிவேனோ
கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து
கூவிடு முராரி விண்டு .. திருமார்பன்
கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த
கோபவரி நார சிங்கன் .. மருகோனே
பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள்
பேர்பெரிய வேல்கொள் செங்கை .. முருகோனே
பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற
பேறைநகர் வாழ வந்த .. பெருமாளே.
பாடல் 546 கொலைகொண்ட போர்விழி ( மயிலம் )
ராகம் - .; தாளம் -
தனதந்த தானன தானா தானா
தனதந்த தானன தானா தானா
தனதந்த தானன தானா தானா .. தனதான
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
குழைகொண்டு லாவிய மீனோ மானோ .. எனுமானார்
குயில்தங்கு மாமொழி யாலே நேரே
யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்
குளிர்கொங்கை மேருவி னாலே நானா .. விதமாகி
உலைகொண்ட மாமெழு காயே மோகா
யலையம்பு ராசியி னூடே மூழ்கா
வுடல்பஞ்ச பாதக மாயா நோயா .. லழிவேனோ
உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா .. ளருள்வாயே
அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
எனநின்று வாய்விட வேநீள் மாசூ
ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா .. யிடவேதான்
அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறோர் .. வடிவாகி
மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்
குறமங்கை யாளுட னேமா லாயே
மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் .. குமரேசா
மதிமிஞ்சு போதக வேலா ஆளா
மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் .. பெருமாளே.
பாடல் 547 அங்கை நீட்டிய ( திருசிராப்பள்ளி )
ராகம் - .; தாளம் -
தந்த தாத்தன தத்தத் தானன
தந்த தாத்தன தத்தத் தானன
தந்த தாத்தன தத்தத் தானன .. தனதான
அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய
கொங்கை காட்டிம றைத்துச் சீரிய
அன்பு போற்பொய்ந டித்துக் காசள .. வுறவாடி
அம்பு தோற்றக ணிட்டுத் தோதக
இன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம்
அன்றில் போற்குர லிட்டுக் கூரிய .. நகரேகை
பங்க மாக்கிய லைத்துத் தாடனை
கொண்டு வேட்கையெ ழுப்பிக் காமுகர்
பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத .. லியல்பாகப்
பண்டி ராப்பகல் கற்றுச் சூளைகள்
தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதி
பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ .. அருள்வாயே
எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன
அங் மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும்
இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின் .. முடிவேறாய்
இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக
மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத
மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல .. வயலூரா
செங்கை வேற்கொடு துட்டச் சூரனை
வென்று தோற்பறை கொட்டக் கூளிகள்
தின்று கூத்துந டிக்கத் தோகையில் .. வரும்வீரா
செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர
மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு
தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள் .. பெருமாளே.
பாடல் 548 அந்தோமன மேநம ( திருசிராப்பள்ளி )
ராகம் - கல்யாணி ; தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தந்தாதன தானன தாத்தன
தந்தாதன தானன தாத்தன
தந்தாதன தானன தாத்தன .. தனதான
அந்தோமன மேநம தாக்கையை
நம்பாதெயி தாகித சூத்திர
மம்போருக னாடிய பூட்டிது .. இனிமேல்நாம்
அஞ்சாதமை யாகிரி யாக்கையை
பஞ்சாடிய வேலவ னார்க்கிய
லங்காகுவம் வாஇனி தாக்கையை .. ஒழியாமல்
வந்தோமிது வேகதி யாட்சியு
மிந்தாமயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாமென வீக்கிய .. சிவநீறும்
வந்தேவெகு வாநமை யாட்கொளு
வந்தார்மத மேதினி மேற்கொள
மைந்தாகும ராவெனு மார்ப்புய .. மறவாதே
திந்தோதிமி தீதத மாத்துடி
தந்தாதன னாதன தாத்தன
செம்பூரிகை பேரிகை யார்த்தெழ .. மறையோதச்
செங்காடென வேவரு மூர்க்கரை
சங்காரசி காமணி வேற்கொடு
செண்டாடிம காமயில் மேற்கொளு .. முருகோனே
இந்தோடிதழ் நாகம காக்கடல்
கங்காளமி னார்சடை சூட்டிய
என்தாதைச தாசிவ கோத்திர .. னருள்பாலா
எண்கூடரு ளால்நெளவி நோக்கியை
நன்பூமண மேவிசி ராப்பளி
யென்பார்மன மேதினி நோக்கிய .. பெருமாளே.
பாடல் 549 அரிவையர் நெஞ்சுரு ( திருசிராப்பள்ளி )
ராகம் - .; தாளம் -
தனதன தந்தன தாத்தன
தனதன தந்தன தாத்தன
தனதன தந்தன தாத்தன .. தனதான
அரிவையர் நெஞ்சுரு காப்புணர்
தருவிர கங்களி னாற்பெரி
தவசம்வி ளைந்துவி டாய்த்தடர் .. முலைமேல்வீழ்ந்
தகிலொடு சந்தன சேற்றினில்
முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை
யடியின கம்பிறை போற்பட .. விளையாடிப்
பரிமளம் விஞ்சிய பூக்குழல்
சரியம ருங்குடை போய்ச்சில
பறவைக ளின்குர லாய்க்கயல் .. விழிசோரப்
பனிமுக முங்குறு வேர்ப்பெழ
இதழமு துண்டிர வாய்ப்பகல்
பகடியி டும்படி தூர்த்தனை .. விடலாமோ
சரியையு டன்க்ரியை போற்றிய
பரமப தம்பெறு வார்க்கருள்
தருகணன் ரங்கபு ரோச்சிதன் .. மருகோனே
சயிலமெ றிந்தகை வேற்கொடு
மயிலினில் வந்தெனை யாட்கொளல்
சகமறி யும்படி காட்டிய .. குருநாதா
திரிபுவ னந்தொழு பார்த்திபன்
மருவிய மண்டப கோட்டிகள்
தெருவில்வி ளங்குசி ராப்பளி .. மலைமீதே
தெரியஇ ருந்தப ராக்ரம
உருவளர் குன்றுடை யார்க்கொரு
திலதமெ னும்படி தோற்றிய .. பெருமாளே.
பாடல் 550 அழுதழு தாசார ( திருசிராப்பள்ளி )
ராகம் -.; தாளம் -
தனதன தானான தானன தனதன தானான தானன
தனதன தானான தானன .. தந்ததான
அழுதழு தாசார நேசமு முடையவர் போலேபொய் சூழ்வுறும்
அசடிகள் மாலான காமுகர் .. பொன்கொடாநாள்
அவருடன் வாய்பேசி டாமையு முனிதலு மாறாத தோஷிகள்
அறுதியில் காசாசை வேசைகள் .. நஞசுதோயும்
விழிகளி னால்மாட வீதியில் முலைகளை யோராம லாரொடும்
விலையிடு மாமாய ரூபிகள் .. பண்பிலாத
விரகிகள் வேதாள மோவென முறையிடு கோமாள மூளிகள்
வினைசெய லாலேயெ னாவியு .. யங்கலாமோ
வழியினில் வாழ்ஞான போதக பரமசு வாமீவ ரோதய
வயலியில் வேலாயு தாவரை .. யெங்குமானாய்
மதுரையின் மீதால வாயினில் எதிரம ணாரோ ரெணாயிரர்
மறிகழு மீதேற நீறுப .. ரந்துலாவச்
செழியனு மாளாக வாதுசெய் கவிமத சீகாழி மாமுனி
சிவசிவ மாதேவ காவென .. வந்துபாடும்
திருவுடை யாய்தீதி லாதவர் உமையொரு பாலான மேனியர்
சிரகிரி வாழ்வான தேவர்கள் .. தம்பிரானே.
பாடல் 551 இளையவர் நெஞ்சத் ( திருசிராப்பள்ளி )
ராகம் - .; தாளம் -
தனதன தந்தத் தனதன தந்தத்
தனதன தந்தத் .. தனதான
இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற்
றிடைகொடு வஞ்சிக் .. கொடிபோல்வார்
இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித்
திதழமு துந்துய்த் .. தணியாரக்
களபசு கந்தப் புளகித இன்பக்
கனதன கும்பத் .. திநட்முழ்குங்
கலவியை நிந்தித் திலகிய நின்பொற்
கழல்தொழு மன்பைத் .. தருவாயே
தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற்
சதுமறை சந்தத் .. தொடுபாடத்
தரிகிட தந்தத் திரிகிட திந்தித்
தகுர்தியெ னுங்கொட் .. டுடனாடித்
தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற்
சிறுவஅ லங்கற் .. றிருமார்பா
செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத்
திரிசிர குன்றப் .. பெருமாளே.
பாடல் 552 பகலவ னொக்குங் ( திருசிராப்பள்ளி )
ராகம் - .; தாளம் -
தனதன தத்தம் தனதன தத்தம்
தனதன தத்தம் .. தனதான
பகலவ னொக்குங் கனவிய ரத்னம்
பவளவெண் முத்தந் .. திரமாகப்
பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம்
பரிவென வைக்கும் .. பணவாசை
அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண்
டழியும வத்தன் .. குணவீனன்
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்
டலைதலொ ழித்தென் .. றருள்வாயே
சகலரு மெச்சும் பரிமள பத்மந்
தருணப தத்திண் .. சுரலோகத்
தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந்
தழுவஅ ணைக்குந் .. திருமார்பா
செகதல மெச்சும் புகழ்வய லிக்குந்
திகுதிகெ னெப்பொங் .. கியவோசை
திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ்
சிரகிரி யிற்கும் .. பெருமாளே.
பாடல் 553 ஒருவரொடு கண்கள் ( திருசிராப்பள்ளி )
ராகம் -.; தாளம் -
தனதனன தந்த தனதனன தந்த
தனதனன தந்த .. தனதான
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை
ஒருவரொடு செங்கை .. யுறவாடி
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை
ஒருவரொடி ரண்டு .. முரையாரை
மருவமிக அன்பு பெருகவுள தென்று
மனநினையு மிந்த .. மருள்தீர
வனசமென வண்டு தனதனன வென்று
மருவுசர ணங்க .. ளருளாயோ
அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க
அடலிடுப்ர சண்ட .. மயில்வீரா
அமரர்முத லன்பர் முநிவர்கள்வ ணங்கி
அடிதொழவி ளங்கு .. வயலூரா
திருவையொரு பங்கர் கமலமலர் வந்த
திசைமுகன்ம கிழ்ந்த .. பெருமானார்
திகுதகுதி யென்று நடமிட முழங்கு
த்ரிசிரகிரி வந்த .. பெருமாளே.
பாடல் 554 குமுத வாய்க்கனி ( திருசிராப்பள்ளி )
ராகம் - .; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா .. தனதான
குமுத வாய்க்கனி யமுத வாக்கினர்
கோலே வேலே சேலே போலே .. அழகான
குழைகள் தாக்கிய விழிக ளாற்களி
கூரா வீறா தீரா மாலா .. யவரோடே
உமது தோட்களி லெமது வேட்கையை
ஓரீர் பாரீர் வாரீர் சோணர் .. எனவேநின்
றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தன
மூடே வீழ்வே னீடே றாதே .. யுழல்வேனோ
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய
தாதா வேமா ஞாதா வேதோ .. கையிலேறீ
சயில நாட்டிறை வயலி நாட்டிறை
சாவா மூவா மேவா நீவா .. இளையோனே
திமிர ராக்கதர் சமர வேற்கர
தீரா வீரா நேரா தோரா .. உமைபாலா
திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ்
தேவே கோவே வேளே வானோர் .. பெருமாளே.
பாடல் 555 குவளை பூசல்வி ( திருசிராப்பள்ளி )
ராகம் - ஆனந்த பைரவி ( மத்யம ஸ்ருதி ); தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தத்தன தந்தன
தனன தானன தத்தன தந்தன
தனன தானன தத்தன தந்தன .. தனதான
குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்
கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர்
குமுத வாயமு தத்தை நுகர்ந்திசை .. பொருகாடை
குயில்பு றாமயில் குக்கில் சுரும்பினம்
வனப தாயுத மொக்கு மெனும்படி
குரல்வி டாஇரு பொற்குட மும்புள .. கிதமாகப்
பவள ரேகைப டைத்தத ரங்குறி
யுறவி யாளப டத்தை யணைந்துகை
பரிச தாடன மெய்க்கர ணங்களின் .. மதனூலின்
படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ
அவச மாய்வட பத்ர நெடுஞ்சுழி
படியு மோகச முத்ரம ழுந்துத .. லொழிவேனோ
தவள ரூபச ரச்சுதி யிந்திரை
ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கை பயங்கரி .. புவநேசை
சகல காரணி சத்தி பரம்பரி
யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலி .. யெமதாயி
சிவைம நோமணி சிற்சுக சுந்தரி
கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் .. முருகோனே
சிகர கோபுர சித்திர மண்டப
மகர தோரண ரத்ந அலங்க்ருத
திரிசி ராமலை அப்பர் வணங்கிய .. பெருமாளே.
பாடல் 556 சத்தி பாணீ ( திருசிராப்பள்ளி )
ராகம் - ஸிந்து பைரவி; தாளம் - அங்கதாளம் (6)
தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தத்த தானா தனாதன தத்த தானா தனாதன
தத்த தானா தனாதன .. தந்ததான
சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
தத்வ வாதீ நமோநம .. விந்துநாத
சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
தற்ப்ர தாபா நமோநம .. என்றுபாடும்
பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
பச்சை பாடீர பூஷித .. கொங்கைமேல்வீழ்
பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித
பத்ம சீர்பாத நீயினி .. வந்துதாராய்
அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி
யர்க்ய சோமாசி யாகுற .. சம்ப்ரதாயா
அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய
அக்ஷ மாலா தராகுற .. மங்கைகோவே
சித்ர கோலா கலாவிர லஷ்மி சாதா ரதாபல
திக்கு பாலா சிவாகம .. தந்தரபோதா
சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
தெர்ப்பை யாசார வேதியர் .. தம்பிரானே.
பாடல் 557 பகலிரவினிற் ( திருசிராப்பள்ளி )
ராகம் - மோஹனம்; தாளம் - திஸ்ர ஏகம் (3)
தனதனதனத் .. தனதான
பகலிரவினிற் .. றடுமாறா
பதிகுருவெனத் .. தெளிபோத
ரகசியமுரைத் .. தநுபூதி
ரதநிலைதனைத் .. தருவாயே
இகபரமதற் .. கிறையோனே
இயலிசையின்முத் .. தமிழோனே
சகசிரகிப் .. பதிவேளே
சரவணபவப் .. பெருமாளே.
பாடல் 558 புவனத் தொருபொற் ( திருசிராப்பள்ளி )
ராகம் - பெஹாக்; தாளம் - ஆதி
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத் .. தனதான
புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்
கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்
புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் .. திடிலாவி
புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
புரள்வித் துவருத் திமணற் சொரிவித் .. தனலூடே
தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் .. திடவாய்கண்
சலனப் படஎற் றியிறைச் சியறுத்
தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் .. துயர்தீராய்
பவனத் தையொடுக் குமனக் கவலைப்
ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்
படரிச் சையொழித் ததவச் சரியைக் .. க்ரியையோகர்
பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்
பரவப் படுசெய்ப் பதியிற் பரமக் .. குருநாதா
சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்
கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்
த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் .. குணணாதி
செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்
புதனொப் பிலியுற் பவபத் மதடத்
த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் .. பெருமாளே.
பாடல் 559 பொருளின் மேற்ப்ரிய ( திருசிராப்பள்ளி )
ராகம் - .; தாளம் -
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன .. தந்ததான
பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்
பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள்
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் .. கொங்கைமேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
மிடிய ராக்குபொ லர்மு தேவிகள்
புலையர் மாட்டும றாதே கூடிகள் .. நெஞ்சமாயம்
கருதொ ணாப்பல கோடா கோடிகள்
விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள்
கலவி சாத்திர நூலே யோதிகள் .. தங்களாசைக்
கவிகள் கூப்பிடு மோயா மாரிகள்
அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள்
கருணை நோக்கமி லாமா பாவிக .. ளின்பமாமோ
குருக டாக்ஷக லாவே தாகம
பரம வாக்கிய ஞானா சாரிய
குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக .. வன்பரான
கொடிய வேட்டுவர் கோகோ கோவென
மடிய நீட்டிய கூர்வே லாயுத
குருகி க்ஷேத்ரபு ரேசா வாசுகி .. அஞ்சமாறும்
செருப ராக்ரம கேகே வாகன
சரவ ணோற்பவ மாலா லாளித
திரள்பு யாத்திரி யீரா றாகிய .. கந்தவேளே
சிகர தீர்க்கம காசீ கோபுர
முகச டாக்கர சேணா டாக்ருத
திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் .. தம்பிரானே.
பாடல் 560 பொருள்கவர் சிந்தை ( திருசிராப்பள்ளி )
ராகம் - .; தாளம் -
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த .. தனதான
பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்
புழுககில் சந்து .. பனிநீர்தோய்
புளகித கொங்கை யிளகவ டங்கள்
புரளம ருங்கி .. லுடைசோர
இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து
இணைதரு பங்க .. அநுராகத்
திரிதலொ ழிந்து மனதுக சிந்து
னிணையடி யென்று .. புகழ்வேனோ
மருள்கொடு சென்று பரிவுட னன்று
மலையில்வி ளைந்த .. தினைகாவல்
மயிலை மணந்த அயிலவ எங்கள்
வயலியில் வந்த .. முருகோனே
தெருளுறு மன்பர் பரவ விளங்கு
திரிசிர குன்றில் .. முதனாளில்
தெரிய இருந்த பெரியவர் தந்த
சிறியவ அண்டர் .. பெருமாளே.
பாடல் 561 வாசித்துக் காணொ ( திருசிராப்பள்ளி )
ராகம் - பூர்வி கல்யாணி; தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2
தானத்தத் தான தானன தானத்தத் தான தானன
தானத்தத் தான தானன .. தந்ததான
வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் போசொ ணாதது .. நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது .. விந்துநாத
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது .. கண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும .. யங்கலாமோ
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி .. கந்தவேள
ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது .. ரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென .. நின்றநாதா
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர் .. தம்பிரானே.
பாடல் 562 வெருட்டி யாட்கொளும் ( திருசிராப்பள்ளி )
ராகம் - .; தாளம் -
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன .. தனதான
வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை
நெகிழ்த்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில்
விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய .. மிலரானால்
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு
பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள
விசித்ர மேற்படு முலையினு நிலையினு .. மெவரோடும்
மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும்
அவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினு
மதிக்கொ ணாத்தள ரிடையினு நடையினு .. மவமேயான்
மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணு
தடத்து மோக்ஷம தருளிய பலமலர்
மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலு .. மறவேனே
இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய
சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற
இரக்ஷை வாய்த்தருள் முருகப னிருகர .. குகவீரா
இலக்ஷு மிச்சுர பசுபதி குருபர
சமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல்
இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி .. களிகூரத்
திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட
எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய
செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட .. மயிலேறும்
செருப்ப ராக்ரம நிதிசர வணபவ
சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு
திருச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு .. பெருமாளே.
பாடல் 563 குடத்தைத் தகர்த்துக் ( திருக்கற்குடி )
ராகம் - .; தாளம் -
தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத்
தனத்தத் தனத்தத் .. தனதான
குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்
குவட்டைச் செறுத்துக் .. ககசாலக்
குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக்
குருத்தத் துவத்துத் .. தவர்சோரப்
புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்
புறப்பட்ட கச்சுத் .. தனமாதர்
புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்
புரித்துப் பதத்தைத் .. தருவாயே
கடத்துப் புனத்துக் குறத்திக்கு மெத்தக்
கருத்திச்சை யுற்றுப் .. பரிவாகக்
கனக்கப்ரி யப்பட் டகப்பட்டு மைக்கட்
கடைப்பட்டு நிற்கைக் .. குரியோனே
தடத்துற் பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்
தழைப்பித்த கொற்றத் .. தனிவேலா
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்
தருக்கற் குடிக்குப் .. பெருமாளே.
பாடல் 564 நெறித்துப் பொருப்புக் ( திருக்கற்குடி )
ராகம் - .; தாளம் -
தனத்தத் தனத்தத் தத்த
தனத்தத் தனத்தத் தத்த
தனத்தத் தனத்தத் தத்த .. தனதான
நெறித்துப் பொருப்புக் கொத்த
முலைக்குத் தனத்தைக் கொட்டி
நிறைத்துச் சுகித்துச் சிக்கி .. வெகுநாளாய்
நினைத்துக் கொடத்துக் கத்தை
யவத்தைக் கடுக்கைப் பெற்று
நிசத்திற் சுழுத்திப் பட்ட .. அடியேனை
இறுக்கிப் பிடித்துக் கட்டி
யுகைத்துத் துடிக்கப் பற்றி
யிழுத்துத் துவைத்துச் சுற்றி .. யமதூதர்
எனக்குக் கணக்குக் கட்டு
விரித்துத் தொகைக்குட் பட்ட
இலக்கப் படிக்குத் தக்க .. படியேதான்
முறுக்கித் திருப்பிச் சுட்டு
மலத்திற் புகட்டித் திட்டி
முழுக்கக் கலக்கப் பட்டு .. அலையாமல்
மொழிக்குத் தரத்துக் குற்ற
தமிழ்க்குச் சரித்துச் சித்தி
முகத்திற் களிப்புப் பெற்று .. மயிலேறி
உறுக்கிச் சினத்துச் சத்தி
யயிற்குத் தரத்தைக் கைக்குள்
உதிக்கப் பணித்துப் பக்கல் .. வருவாயே
உனைச்சொற் றுதிக்கத் தக்க
கருத்தைக் கொடுப்பைச் சித்தி
யுடைக்கற் குடிக்குட் பத்தர் .. பெருமாளே.
பாடல் 565 கயலைச் சருவிப் ( இரத்னகிரி )
ராகம் - .; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் .. தனதான
கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற்
கமலத் தியல்மைக் .. கணினாலே
கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக்
கதிர்விட் டெழுமைக் .. குழலாலே
நயபொற் கலசத் தினைவெற் பினைமிக்
குளநற் பெருசெப் .. பிணையாலே
நலமற் றறிவற் றுணர்வற் றனனற்
கதியெப் படிபெற் .. றிடுவேனோ
புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக்
கறமுற் சரமுய்த் .. தமிழ்வோடும்
பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட்
டொழியப் புகழ்பெற் .. றிடுவோனே
செயசித் திரமுத் தமிழுற் பவநற்
செபமுற் பொருளுற் .. றருள்வாழ்வே
சிவதைப் பதிரத் தினவெற் பதனிற்
றிகழ்மெய்க் குமரப் .. பெருமாளே.
பாடல் 566 சுற்றகப டோ ( இரத்னகிரி )
ராகம் - மோஹனம்; தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35)
(எடுப்பு) /4/4/4 0
நடை - தகிட தக
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன .. தனதான
சுற்றகப டோ டுபல சூதுவினை யானபல
கற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலி
சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு .. துயர்மேவித்
துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு .. பொறியாலே
சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்
சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை .. விளையாடித்
தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத .. மருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு .. எனதாளம்
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் .. களமீதே
எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்
எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு .. வடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
சித்தமலை காமுககு காநமசி வாயனெடு
ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் .. பெருமாளே.
பாடல் 567 பத்தியால் யானுனைப் ( இரத்னகிரி )
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஆதி (எடுப்பு - 3/4 இடம்)
தத்தனா தானனத் .. தனதான
பத்தியால் யானுனைப் .. பலகாலும்
பற்றியே மாதிருப் .. புகழ்பாடி
முத்தனா மாறெனைப் .. பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் .. கருள்வாயே
உத்தமா தானசற் .. குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் .. கிரிவாசா
வித்தகா ஞானசத் .. திநிபாதா
வெற்றிவே லாயுதப் .. பெருமாளே.
பாடல் 568 சீரான கோல ( விராலிமலை )
ராகம் - .; தாளம் -
தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன .. தனதான
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக .. மலராலும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள .. இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜநமுத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட .. முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது .. பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு .. ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர .. குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு .. மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை .. பெருமாளே.
பாடல் 569 பாதாள மாதி ( விராலிமலை )
ராகம் - .; தாளம் -
தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன .. தனதான
பாதாள மாதி லோக நிகிலமு
மாதார மான மேரு வெனவளர்
பாடீர பார மான முலையினை .. விலைகூறிப்
பாலோடு பாகு தேனெ னினியசொ
லாலேய நேக மோக மிடுபவர்
பாதாதி கேச மாக வகைவகை .. கவிபாடும்
வேதாள ஞான கீனன் விதரண
நாதானி லாத பாவி யநிஜவன்
வீணாள்ப டாத போத தவமிலி .. பசுபாச
வ்யாபார மூடன் யானு முனதிரு
சீர்பாத தூளி யாகி நரகிடை
வீழாம லேசு வாமி திருவருள் .. புரிவாயே
தூதாள ரோடு காலன் வெருவிட
வேதாமு ராரி யோட அடுபடை
சோராவ லாரி சேனை பொடிபட .. மறைவேள்விச்
சோமாசி மார்சி வாய நமவென
மாமாய வீர கோர முடனிகல்
சூர்மாள வேலை யேவும் வயலியி .. லிளையோனே
கூதாள நீப நாக மலர்மிசை
சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
கோலால நாத கீத மதுகர .. மடர்சோலை
கூராரல் தேரு நாரை மருவிய
கானாறு பாயு மேரி வயல்பயில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை .. பெருமாளே.
பாடல் 570 இலாபமில் பொலாவுரை ( விராலிமலை )
ராகம் - மனோலயம் ; தாளம் - ஆதி - கண்டநடை (20)
(எடுப்பு - அதீதம்)
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனன .. தனதான
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
ரியாவரு மிராவுபக .. லடியேனை
இராகமும் விநோதமு முலொபமு டன்மோகமு
மிலானிவ னுமாபுருஷ .. னெனஏய
சலாபவ மலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுரச .. கலலோக
சராசர வியாபக பராபர மநோலய
சமாதிய நுபூதிபெற .. நினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
நியாயப ரிபாலஅர .. நதிசூடி
நிசார குலாதிப திராவண புயாரிட
நிராமய சரோருகர .. னருள்பாலா
விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
வியாதர்கள் விநோதமகள் .. மணவாளா
விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
விராலிம லைமீதிலுறை .. பெருமாளே.
பாடல் 571 நிராமய புராதன ( விராலிமலை )
ராகம் - தேஷ்; தாளம் - ஆதி - கண்டநடை (20)
(எடுப்பு - அதீதம்)
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனத் .. தனதான
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப் .. ப்ரபையாகி
நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
நிராயுத புராரியச் .. சுதன்வேதா
சுராலய தராதல சராசர பராணிகள்
செர்ருபமி வராதியைக் .. குறியாமே
துரால்புகழ் பராதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற் .. றடைவேனோ
இராகவ இராமன்முன் இராவண இராவண
இராவண இராஜனுட் .. குடன்மாய்வென்
றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
யிராஜசொ லவாரணர்க் .. கிளையோனே
விராகவ சுராதிப பொராதுத விராதடு
விராயண பராயணச் .. செருவூரா
விராவிய குராவகில் பராரைமு திராவளர்
விராலிம லைராஜதப் .. பெருமாளே.
பாடல் 572 இதமுறு விரைபுனல் ( விராலிமலை )
ராகம் - .; தாளம் -
தனதன தனதன தனன தனதன
தனதன தனதன தனன தனதன
தத்தன தந்ததன தத்தன தந்ததன
--------- 3 முறை --------- .. தனதான
இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண
முதவிய புகையினி லளவி வகைவகை
கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலென
அறலென இசையளி யெனந ளிருளென
நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட
நெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும்
இலகிய பிறையென எயினர் சிலையென
விலகிய திலதநு தலும திமுகமும்
உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு .. முனைவாளும்
இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு
கடுவது மெனநெடி தடுவ கொடியன
இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி றைந்தவிழி
தளவன முறுவலு மமுத குமுதமும்
விளைநற வினியமொ ழியுமி னையதென
ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு றைந்துகமு
கிடியொடி படவினை செயும்வின் மதகலை
நெடியக வுடியிசை முரலு சுரிமுக
நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனைய .. எழில்தோளும்
விதரண மனவித னமதை யருள்வன
சததள மறைமுகி ழதனை நிகர்வன
புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவன
இமசல ம்ருகமத களப பரிமள
தமனிய ப்ரபைமிகு தருண புளகித
சித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககன
விகலித மிருதுள ம்ருதுள நவமணி
முகபட விகடின தனமு முயர்வட
பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள .. மதியாத
விபரித முடையிடை யிளைஞர் களைபட
அபகட மதுபுரி யரவ சுடிகைய
ரத்நபண மென்பவழ குற்றவரை யும்புதிய
நுணியத ளிரெனவு லவிய பரிபுர
அணிநட னபதமு முடைய வடிவினர்
பொற்கலவி யின்பமதி துக்கமென லன்றியவர்
விரகினி லெனதுறு மனம துருகிய
பிரமையு மறவுன தருள்கை வரவுயர்
பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ .. தொருநாளே
தததத தததத ததத தததத
திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு
டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு
தமிதமி தமிதக தமித திமிதக
திமிதிமி செககண திமித திகதிக
தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி .. யெனவேதான்
தபலை டமுழவு திமிலை படகம
தபுதச லிகைதவில் முரசு கரடிகை
மத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள்
மொகுமொகு மொகுவென அலற விருதுகள்
திகுதிகு திகுவென அலகை குறளிகள்
விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகு
சதிர்பெற அதிர்தர உததி சுவறிட
எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட
வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ .. வெகுகோடி
மதகஜ துரகர தமுமு டையபுவி
யதலமு தல்முடிய இடிய நெடியதொர்
மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி டிந்துவிட
இரவியு மதியமு நிலைமை பெறஅடி
பரவிய அமரர்கள் தலைமை பெறஇயல்
அத்திறல ணங்குசெய சத்திவிடு கந்ததிரு
வயலியி லடிமைய குடிமை யினலற
மயலொடு மலமற அரிய பெரியதி
ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு .. கவிராலி
மலையுறை குரவந லிறைவ வருகலை
பலதெரி விதரண முருக சரவண
உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமய
நிருபவி மலசுக சொருப பரசிவ
குருபர வெளிமுக டுருவ வுயர்தரு
சக்ரகிரி யுங்குலைய விக்ரமந டம்புரியு
மரகத கலபமெ ரிவிடு மயில்மிசை
மருவியெ யருமைய இளமை யுருவொடு
சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு .. பெருமாளே.
பாடல் 573 உருவேற வேஜெ ( விராலிமலை )
ராகம் - .; தாளம் -
தனதான தான தத்த தனதான தான தத்த
தனதான தான தத்த .. தந்ததான
உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
யுடனாக ஆக மத்து .. கந்துபேணி
உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை
யொழியாது வூதை விட்டி .. ருந்துநாளும்
தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்
தருவார்கள் ஞான வித்தை .. தஞ்சமாமோ
தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி
தருமாகி லாகு மத்தை .. கண்டிலேனே
குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க
குடிமாள மாய விட்டு .. குந்திபாலர்
குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட
குறளாக னூறில் நெட்டை .. கொண்டஆதி
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர
மலைமே லுலாவு சித்த .. அங்கைவேலா
மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
வளைகூனை யேநி மிர்த்த .. தம்பிரானே.
பாடல் 574 எதிரெதிர்கண் டோ ( விராலிமலை )
ராகம் .; தாளம் -
தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த
தனதனனந் தான தாத்த .. தனதான
எதிரெதிர்கண் டோ டி யாட்கள் களவதறிந் தாசை பூட்டி
இடறிவிழும் பாழி காட்டு .. மடமாதர்
இறைவைகொளுங் கூவல் மூத்த கறையொழுகுந் தாரை பார்க்கி
லிளமைகொடுங் காத லாற்றில் .. நிலையாத
அதிவிகடம் பீழ லாற்ற அழுகிவிழும் பீற லூத்தை
அடையுமிடஞ் சீலை தீற்று .. கருவாயில்
அருவிசலம் பாயு மோட்டை அடைவுகெடுந் தூரை பாழ்த்த
அளறிலழுந் தாம லாட்கொ .. டருள்வாயே
விதுரனெடுந் த்ரோண மேற்று எதிர்பொருமம் பாதி யேற்றி
விரகினெழுந் தோய நூற்று .. வருமாள
விரவுஜெயன் காளி காட்டில் வருதருமன் தூத னீற்ற
விஜயனெடும் பாக தீர்த்தன் .. மருகோனே
மதியணையுஞ் சோலை யார்த்து மதிவளசந் தான கோட்டின்
வழியருளின் பேறு காட்டி .. யவிராலி
மலைமருவும் பாதி யேற்றி கடிகமழ்சந் தான கோட்டில்
வழியருளின் பேறு காட்டு .. பெருமாளே.
பாடல் 575 ஐந்து பூதமு ( விராலிமலை )
ராகம் - பைரவி ; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தகிட-1 1/2, தகதிமி-2
தந்த தானன தான தனதன
தந்த தானன தான தனதன
தந்த தானன தான தனதன .. தனதான
ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும் .. வெருப
அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும்
அந்தி போலுரு வானு நிலவொடு .. வெயில்காலும்
சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு மேக வடிவம
தன்சொ ரூபம தாக வுறைவது .. சிவயோகம்
தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர
சம்ப்ர தாயமொ டேயு நெறியது .. பெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
மண்டு பூதப சாசு பசிகெட .. மயிடாரி
வன்கண் வீரிபி டாரி ஹரஹர
சங்க ராஎன மேரு கிரிதலை
மண்டு தூளழ வேலை யுருவிய .. வயலூரா
வெந்த நீறணி வேணி யிருடிகள்
பந்த பாசவி கார பரவச
வென்றி யானச மாதி முறுகுகல் .. முழைகூடும்
விண்டு மேல்மயி லாட இனியக
ளுண்டு காரளி பாட இதழிபொன்
விஞ்ச வீசுவி ராலி மலையுறை .. பெருமாளே.
பாடல் 576 கரதல முங்குறி ( விராலிமலை )
ராகம் - .; தாளம் -
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன .. தனதான
கரதல முங்குறி கொண்ட கண்டமும்
விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர்
கனவிய கொண்டைகு லைந்த லைந்திட .. அதிபாரக்
களபசு கந்தமி குந்த கொங்கைக
ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய்
கனியித ழுண்டுது வண்டு பஞ்சணை .. மிசைவீழா
இரதம ருந்தியு றுங்க ருங்கயல்
பொருதுசி வந்துகு விந்தி டும்படி
யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி .. லுற்முழ்கி
இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய்
வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய
இளமை கிழம்படு முன்ப தம்பெற .. வுணர்வேனோ
பரத சிலம்புபு லம்பு மம்பத
வரிமுக எண்கினு டன்கு ரங்கணி
பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி .. யிடையேபோய்ப்
பகடியி லங்கை கலங்க அம்பொனின்
மகுடசி ரந்தச முந்து ணிந்தெழு
படியுந டுங்கவி ழும்ப னம்பழ .. மெனவாகும்
மருதமு தைந்தமு குந்த னன்புறு
மருககு விந்தும லர்ந்த பங்கய
வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி .. யவிராலி
மலையில் விளங்கிய கந்த என்றுனை
மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை
வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் .. பெருமாளே.
பாடல் 577 கரிபு ராரி ( விராலிமலை )
ராகம் - தோடி; தாளம் - அங்கதாளம் (5 1/2)
(எடுப்பு - 1/2 தள்ளி)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான .. தனதான
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி .. கழையோனி
கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
கணமொ டாடி காயோகி .. சிவயோகி
பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
பகரொ ணாத மாஞானி .. பசுவேறி
பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
பரம ஞான வூர்பூத .. அருளாயோ
சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
துரக கோப மீதோடி .. வடமேரு
சுழல வேலை தநமுள அழுத ளாவி வாய்பாறி
சுரதி னோடு சூர்மாள .. வுலகேழும்
திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
திரளி னோடு பாறோடு .. கழுகாடச்
செருவி னாடு வானீப கருணை மேரு வேபார
திருவி ராலி யூர்மேவு .. பெருமாளே.
பாடல் 578 காமாத்திர மாகி ( விராலிமலை )
ராகம் - .; தாளம் -
தானாத்தன தான தனதன
தானாத்தன தான தனதன
தானாத்தன தான தனதன .. தனதான
காமாத்திர மாகி யிளைஞர்கள்
வாழ்நாட்கொடு போகி யழகிய
காதாட்டிய பார இருகுழை .. யளவோடிக்
கார்போற்றவ ழோதி நிழல்தனி
லார்வாட்கடை யீடு கனகொடு
காலேற்றுவை வேலின் முனைகடை .. யமதூதர்
ஏமாப்பற மோக வியல்செய்து
நீலோற்பல ஆசில் மலருட
னேராட்டவி நோத மிடும்விழி .. மடவார்பால்
ஏகாப்பழி பூணு மருளற
நீதோற்றிமு னாளு மடிமையை
யீடேற்றுத லாலுன் வலிமையை .. மறவேனே
சீமாட்டியு மாய திரிபுரை
காலாக்கினி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுரதிரி .. புவநேசை
சீகார்த்திகை யாய அறுவகை
மாதாக்கள்கு மார னெனவெகு
சீராட்டொடு பேண வடதிசை .. கயிலாசக்
கோமாற்குப தேச முபநிட
வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள்
கோதாட்டி ஸ்வாமி யெனவரு .. மிளையோனே
கோடாச்சிவ பூஜை பவுருஷ
மாறாக்கொடை நாளு மருவிய
கோனாட்டுவி ராலி மலையுறை .. பெருமாளே.
பாடல் 579 கொடாதவனை யேபு ( விராலிமலை )
ராகம் - கரஹரப்ரியா ; தாளம் - சதுஸ்ர்ருபகம் (6)
(எடுப்பு - வீச்சில் 1/2 இடம்)
தனாதனன தான தந்த தனாதனன தான தந்த
தனாதனன தான தந்த .. தனதான
கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
குலாவியவ மேதி ரிந்து .. புவிமீதே
எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
எலாவறுமை தீர அன்று .. னருள்பேணேன்
சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
சுகாதரம தாயொ ழுங்கி .. லொழுகாமல்
கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
கிலாதவுட லாவி நொந்து .. மடியாமுன்
தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
சொலேழுலக மீனு மம்பை .. யருள்பாலா
நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
நபோமணி சமான துங்க .. வடிவேலா
படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து
பசேலெனவு மேத ழைந்து .. தினமேதான்
விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
விராலிமலை மீது கந்த .. பெருமாளே.
பாடல் 580 மாயா செர்ருப ( விராலிமலை )
ராகம் - .; தாளம் -
தானா தனான தனத்த தத்தன
தானா தனான தனத்த தத்தன
தானா தனான தனத்த தத்தன .. தனதான
மாயா செர்ருப முழுச்ச மத்திகள்
ஓயா வுபாய மனப்ப சப்பிகள்
வாணாளை யீரும் விழிக்க டைச்சிகள் .. முநிவோரும்
மாலாகி வாட நகைத்து ருக்கிகள்
ஏகாச மீது தனத்தி றப்பிகள்
வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் .. வெகுமோகம்
ஆயாத வாசை யெழுப்பு மெத்திகள்
ஈயாத போதி லறப்பி ணக்கிகள்
ஆவேச நீருண் மதப்பொ றிச்சிகள் .. பழிபாவம்
ஆமா றெணாத திருட்டு மட்டைகள்
கோமாள மான குறிக்க ழுத்திகள்
ஆசார வீன விலைத்த னத்திய .. ருறவாமோ
காயாத பால்நெய் தயிர்க்கு டத்தினை
ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள்
காணாத வாறு குடிக்கு மப்பொழு .. துரலோடே
கார்போலு மேனி தனைப்பி ணித்தொரு
போர்போ லசோதை பிடித்த டித்திட
காதோடு காது கையிற்பி டித்தழு .. தினிதூதும்
வேயா லநேக விதப்ப சுத்திரள்
சாயாமல் மீள அழைக்கு மச்சுதன்
வீறான மாம னெனப்ப டைத்தருள் .. வயலூரா
வீணாள் கொடாத படைச்செ ருக்கினில்
சூர்மாள வேலை விடுக்கும் அற்புத
வேலா விராலி மலைத்த லத்துறை .. பெருமாளே.
பாடல் 581 மாலாசை கோப ( விராலிமலை )
ராகம் - மாண்ட்; தாளம் - ஆதி
தானான தான தானான தான
தானான தான .. தனதான
மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார .. வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு .. மினிநீயே
நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனு .. மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேச .. மருள்வாயே
பாலா கலார ஆமோத லேப
பாடீர வாக .. அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை .. வயலூரா
வேலா விராலி வாழ்வே ச்முக
வேதாள பூத .. பதிசேயே
வீரா கடோ ர சூராரி யேசெ
வேளே சுரேசர் .. பெருமாளே.
பாடல் 582 மேக மெனுங்குழல் ( விராலிமலை )
ராகம் - .; தாளம் -
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
தானன தந்தன தாத்தன .. தனதான
மேக மெனுங்குழல் சாய்த்திரு கோக னகங்கொடு கோத்தணை
மேல்விழு கின்ற பராக்கினி .. லுடைசோர
மேகலை யுந்தனி போய்த்தனி யேகர ணங்களு மாய்க்கயல்
வேல்விழி யுங்குவி யாக்குரல் .. மயில்காடை
கோகில மென்றெழ போய்க்கனி வாயமு துண்டுரு காக்களி
கூரவு டன்பிரி யாக்கல .. வியின்மூழ்கிக்
கூடிமுயங்கி விடாய்த்திரு பார தனங்களின் மேற்றுயில்
கூரினு மம்புய தாட்டுணை .. மறவேனே
மோகர துந்துமி யார்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில்
மூவுல குந்தொழு தேத்திட .. வுறைவோனே
மூதிசை முன்பொரு காற்றட மேருவை யம்பினில் வீழ்த்திய
மோகன சங்கரி வாழ்த்திட .. மதியாமல்
ஆக மடிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்தணி
யாமையின் வென்றவ னாற்பிற .. கிடுதேவர்
ஆதி யிளந்தலை காத்தர சாள அவன்சிறை மீட்டவ
னாளு லகங்குடி யேற்றிய .. பெருமாளே.
பாடல் 583 மோதி யிறுகிவட ( விராலிமலை )
ராகம் -.; தாளம் -
தான தனதனன தான தனதனன
தான தனதனன .. தந்ததான
மோதி யிறுகிவட மேரு வெனவளரு
மோக முலையசைய .. வந்துகாயம்
மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி
மூட மெனஅறிவு .. கொண்டதாலே
காதி வருமியம தூதர் கயிறுகொடு
காலி லிறுகஎனை .. வந்திழாதே
காவ லெனவிரைய வோடி யுனதடிமை
காண வருவதினி .. யெந்தநாளோ
ஆதி மறையவனு மாலு முயர்சுடலை
யாடு மரனுமிவ .. ரொன்றதான
ஆயி யமலைதிரி சூலி குமரிமக
மாயி கவுரியுமை .. தந்தவாழ்வே
சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசை
தோய வளர்கிரியி .. னுந்திநீடு
சோலை செறிவுளவி ராலி நகரில்வளர்
தோகை மயிலுலவு .. தம்பிரானே.
பாடல் 584 சரவண ஜாதா ( விநாயகமலை - பிள்ளையார்பட்டி )
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - அங்தாளம் (6 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
தனதன தானா தனாதன .. தனதான
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநம .. அபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநம .. ஜகதீச
பரம செர்ருபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம .. உமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம .. அருள்தாராய்
இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் .. முறையோவென்
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் .. விடுவோனே
மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு .. மடிபேண
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வோலா மகீதர
வனசர ராதார மாகிய .. பெருமாளே.
பாடல் 585 அன்பாக வந்து ( திருச்செங்கோடு )
ராகம் - ஆஹிரி ; தாளம் - ஆதி
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த .. தனதான
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற .. நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் .. முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற .. குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து .. அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை .. யணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த .. வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு .. வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோ டமர்ந்த .. பெருமாளே.
பாடல் 586 பந்தாடி யங்கை ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த .. தனதான
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
பைந்தார் புனைந்த .. குழல்மீதே
பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
பங்கே ருகங்கொள் .. முகமீதே
மந்தார மன்றல் சந்தார மொன்றி
வன்பாத கஞ்செய் .. தனமீதே
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
மங்காம லுன்ற .. னருள்தாராய்
கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
கன்றா முகுந்தன் .. மருகோனே
கன்றா விலங்க லொன்றாறு கண்ட
கண்டா வரம்பை .. மணவாளா
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
திண்டோ ள் நிரம்ப .. அணிவோனே
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
செங்கோட மர்ந்த .. பெருமாளே.
பாடல் 587 வண்டார் மதங்க ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த .. தனதான
வண்டார் மதங்க ளுண்டே மயங்கி
வந்தூரு கொண்ட .. லதனோடும்
வண்காம னம்பு தன்கால் மடங்க
வன்போர் மலைந்த .. விழிவேலும்
கொண்டே வளைந்து கண்டார் தியங்க
நின்றார் குரும்பை .. முலைமேவிக்
கொந்தா ரரும்பு நின்தாள் மறந்து
குன்றாம லுன்ற .. னருள்தாராய்
பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
பண்போ னுகந்த .. மருகோனே
பண்சார நைந்து நண்போது மன்பர்
பங்காகி நின்ற .. குமரேசா
செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
நின்றாடி சிந்தை .. மகிழ்வாழ்வே
செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற
செங்கோ டமர்ந்த .. பெருமாளே.
பாடல் 588 கரையற வுருகுதல் ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தனதன தனதன தனதன தனதன
தந்தான தந்த .. தனதான
கரையற வுருகுதல் தருகயல் விழியினர்
கண்டான செஞ்சொல் .. மடமாதர்
கலவியில் முழுகிய நெறியினி லறிவுக
லங்காம யங்கும் .. வினையேனும்
உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும்
உன்பாத கஞ்ச .. மலர்மீதே
உரவாடு புனைதர நினைதரு மடியரொ
டொன்றாக என்று .. பெறுவேனோ
வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி
வந்தேற இந்த்ர .. புரிவாழ
மதவித கஜரத துரகத பததியின்
வன்சேனை மங்க .. முதுமீன
திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்
திண்டாட வென்ற .. கதிர்வேலா
ஜெகதல மிடிகெட விளைவன வயலணி
செங்கோ டமர்ந்த .. பெருமாளே.
பாடல் 589 இடம்பார்த் திடம்பார்த் ( திருச்செங்கோடு )
ராகம் -.; தாளம் -
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
தனந்தாத் தனத்தம் .. தனதான
இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்
றிணங்காப் பசிப்பொங் .. கனல்மூழ்கி
இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்
கிரங்கார்க் கியற்றண் .. டமிழ்நூலின்
உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்
துளங்காத் திடப்புன் .. கவிபாடி
ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்
துறும்பாற் குணக்கன் .. புறலாமோ
கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்
கணைந்தாட் கணித்திண் .. புயமீவாய்
கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்
துசெங்கோட் டில்நிற்குங் .. கதிர்வேலா
அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்
கவிழ்ந்தோர்க் குணற்கொன் .. றிலதாகி
அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க்
கறிந்தோர்க் களிக்கும் .. பெருமாளே.
பாடல் 590 கலக்குங் கோதற ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தனத்தந் தானன தனத்தந் தானன
தனத்தந் தானன .. தனதான
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
கருப்பஞ் சாறெனு .. மொழியாலே
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகளள்
கடைக்கண் பார்வையி .. லழியாதே
விலக்கும் போதக மெனக்கென் றேபெற
விருப்பஞ் சாலவு .. முடையேனான்
வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
விடற்கஞ் சேலென .. அருள்வாயே
அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
அறுக்குங் கூரிய .. வடிவேலா
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
யடுக்கும் போதக .. முடையோராம்
சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
திருச்செங் கோபுர .. வயலூரா
திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
திருச்செங் கோடுறை .. பெருமாளே.
பாடல் 591 துஞ்சு கோட்டிச் ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் .. தனதான
துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்
கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக்
கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் .. திரிமானார்
தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத்
தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத்
துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத் .. துழலாதே
கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக்
கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக்
கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் .. கிடையாநீ
கண்டு வேட்டுப் பொருட் கொண்டாட்டத்
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
தந்து காத்துத் திருக்கண் சாத்தப் .. பெறுவேனோ
வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத்
துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப்
பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத் .. துடையோனே
வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத்
தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித்
தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத் .. திளையோனே
கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட்
குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக்
கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற் .. புணர்வோனே
கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற்
கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக்
கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் .. பெருமாளே.
பாடல் 592 நீலமஞ் சானகுழல் ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தானனந் தானதன தானனந் தானதன
------ 6 முறை ----- .. தந்ததான
நீலமஞ் சானகுழல் மாலைவண் டோ டுகதி
நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை
நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு
நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி
நேர்சுகம் போலமு கானகந் தாரர்புய
நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி .. ரண்டுபோல
நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை
நீடலங் காரசர மோடடைந் தார்மருவி
நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி
னீலவண் டேவியநல் காமனங் காரநிறை
நேசசந் தானஅல்குல் காமபண் டாரமுதை
நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர் .. சம்பையாரஞ்
சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண
தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை
சாதிசந் தானெகின மார்பரந் தோகையென
தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி
தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி
தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை .. யஞ்சியோடத்
தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள்
தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு
தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள்
தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு
சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு
தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக .. விஞ்சைதாராய்
சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை
தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல
தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை
தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய்
தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை
தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் .. விந்தையோனே
சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர்
தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை
தோளகண் டாபரம தேசிகந் தாவமரர்
தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதி
தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர்
சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன .. முங்கொள்வேலா
மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு
வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு
மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு
மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர்
மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு
மார்பகன் காணமுடி யோனணங் கானமதி .. யொன்றுமானை
மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை
வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச
வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண
வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி
மாதுபங்கா மறைகு லாவுசெங் கோடைநகர்
வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் .. தம்பிரானே.
பாடல் 593 பொன்ற லைப்பொய்க் ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத் .. தனதான
பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்
தும்ப றுத்திட் டின்று நிற்கப்
புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் .. கறியாமே
பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
சிங்கி யொத்தச் சங்க டத்துப்
புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் .. கொடியார்மேல்
துன்று மிச்சைப் பண்ட னுக்குப்
பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத்
தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் .. பதிமீதே
தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக்
கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
துங்க ரத்தப் பங்க யத்தைத் .. தருவாயே
குன்றெ டுத்துப் பந்த டித்துக்
கண்சி வத்துச் சங்க ரித்துக்
கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் .. சுரலோகா
கொம்பு குத்திச் சம்ப ழுத்தித்
திண்ட லத்திற் றண்டு வெற்பைக்
கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் .. பொரும்வேழம்
சென்று ரித்துச் சுந்த ரிக்கச்
சந்த விர்த்துக் கண்சு கித்துச்
சிந்தை யுட்பற் றின்றி நித்தக் .. களிகூருஞ்
செண்ப கத்துச் சம்பு வுக்குத்
தொம்ப தத்துப் பண்பு ரைத்துச்
செங்கு வட்டிற் றங்கு சொக்கப் .. பெருமாளே.
பாடல் 594 மந்தக் கடைக்கண் ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன
தந்தத் தனத்தந் தாத்தன .. தனதான
மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர்
மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ .. ரநுராக
வஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர்
வண்பற் றிருப்புங் காட்டுவர் .. தனபாரச்
சந்தப் பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர்
சங்கக் கழுத்துங் காட்டுவர் .. விரகாலே
சண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட்டுவர்
தங்கட் கிரங்கங் காட்டுவ .. தொழிவேனோ
பந்தித் தெருக்கந் தோட்டினை யிந்துச் சடைக்கண் சூட்டுமை
பங்கிற் றகப்பன் தாட்டொழு .. குருநாதா
பைம்பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர்
பங்கப் படச்சென் றோட்டிய .. வயலூரா
கொந்திற் புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடு
கும்பிட் டிடக்கொண் டாட்டமொ .. டணைவோனே
குன்றிற் கடப்பந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டிய
கொங்கிற் றிருச்செங் கோட்டுறை .. பெருமாளே.
பாடல் 595 மெய்ச்சார் வற்றே ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் .. தனதான)
மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே
நிச்சார் துற்பப் .. பவவேலை
விட்டே றிப்போ கொட்டா மற்றே
மட்டே யத்தத் .. தையர்மேலே
பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்
பத்தார் விற்பொற் .. கழல்பேணிப்
பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்
முற்பா லைக்கற் .. பகமேதான்
செச்சா லிச்சா லத்தே றிச்சே
லுற்றா ணித்துப் .. பொழிலேறுஞ்
செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்
நித்தா செக்கர்க் .. கதிரேனல்
முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்
முத்தார் வெட்சிப் .. புயவேளே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் .. பெருமாளே.
பாடல் 596 வருத்தங் காண ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தனத்தந் தான தானன தனத்தந் தான தானன
தனத்தந் தான தானன .. தனதான
வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு
மயக்கம் பூண மோதிய .. துரமீதே
மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய
மரிக்கும் பேர்க ளோடுற .. வணியாதே
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய
பிறப்புந் தீர வேயுன .. திருதாளே
பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள்
பெலத்தின் கூர்மை யானது .. மொழிவாயே
இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடு
எதிர்த்துஞ் சூரர் மாளவெ .. பொரும்வேலா
இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன்
எனத்திண் கூளி கோடிகள் .. புடைசூழத்
திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ்
செழித்தன் பாக வீறிய .. பெருவாழ்வே
திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு
திருச்செங் கோடு மேவிய .. பெருமாளே.
பாடல் 597 ஆல காலப ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன .. தனதான
ஆல காலப டப்பைம டப்பியர்
ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர்
யாவ ராயினு நத்திய ழைப்பவர் .. தெருவூடே
ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர்
பேசி யாசை கொடுத்தும ருட்டிகள்
ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் .. பல்ருடே
மாலை யோதிவி ரித்துமு டிப்பவர்
சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள்
வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் .. உறவாலே
மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள்
காம போகவி னைக்குளு னைப்பணி
வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி .. லுழல்வேனோ
மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
பால னாகியு தித்தொர்மு நிக்கொரு
வேள்வி காவல்ந டத்திய கற்குரு .. அடியாலே
மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
மாது தோள்தழு விப்பதி புக்கிட
வேறு தாயட விக்குள் விடுத்தபி .. னவனோடே
ஞால மாதொடு புக்கவ னத்தினில்
வாழும் வாலிப டக்கணை தொட்டவ
னாடி ராவண னைச்செகு வித்தவன் .. மருகோனே
ஞான தேசிக சற்குரு உத்தம
வேல வாநெரு வைப்பதி வித்தக
நாக மாமலை சொற்பெற நிற்பதொர் .. பெருமாளே.
பாடல் 598 காலனிடத் .. ( திருச்செங்கோடு )
ராகம் - சங்கராபரணம் ; தாளம் - திஸ்ர ஏகம் (3)
தான தனத் .. தனதான
காலனிடத் .. தணுகாதே
காசினியிற் .. பிறவாதே
சீலஅகத் .. தியஞான
தேனமுதைத் .. தருவாயே
மாலயனுக் .. கரியானே
மாதவரைப் .. பிரியானே
நாலுமறைப் .. பொருளானே
நாககிரிப் .. பெருமாளே.
பாடல் 599 தாமா தாமா ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் .. தனதான
தாமா தாமா லாபா லோகா
தாரா தாரத் .. தரணீசா
தானா சாரோ பாவா பாவோ
நாசா பாசத் .. தபராத
யாமா யாமா தேசா ரூடா
யாரா யாபத் .. தெனதாவி
யாமா காவாய் தீயே னீர்வா
யாதே யீமத் .. துகலாமோ
காமா காமா தீனா நீணா
காவாய் காளக் .. கிரியாய்கங்
காளா லீலா பாலா நீபா
காமா மோதக் .. கனமானின்
தேமார் தேமா காமீ பாகீ
தேசா தேசத் .. தவரோதுஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் .. பெருமாளே.
பாடல் 600 அத்து கிரினலது ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தத்த தனதனன தத்த தனதனன
தத்த தனதனன .. தனதான
அத்து கிரினலது ரத்து அலனவள
கத்து வளர்செய்புள .. கிதபூத
ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி
யத்தி யிடனுறையு .. நெடுமாம
ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத
லத்து ரகசிகரி .. பகராதே
யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை
யத்தி னிடையடிமை .. விழலாமோ
தத்து கவனவரி ணத்து வுபநிடவி
தத்து முநியுதவு .. மொழியாறுத்
தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
தத்தை தழுவியப .. னிருதோளா
தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்
தத்து மலையவுணர் .. குலநாகந்
தத்த மிசைமரக தத்த மனியமயில்
தத்த விடுமமரர் .. பெருமாளே.
பாடல் 601 அத்த வேட்கைப் ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தத்த தாத்தத் தத்த தாத்தத்
தத்த தாத்தத் .. தனதான
அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
தத்தை மார்க்குத் .. தமராயன்
பற்ற கூட்டத் திற்ப ராக்குற்
றச்சு தோட்பற் .. றியவோடும்
சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கித் .. திணிதாய
சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
செச்சை சாத்தப் .. பெறுவேனோ
கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
கொற்ற வேத்துக் .. கரசாய
குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்
பொற்ப வேற்கைக் .. குமரேசா
தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
தெட்டு மேற்றுத் .. திடமேவும்
தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
சத்ய வாக்யப் .. பெருமாளே.
பாடல் 602 பத்தர்க ணப்ரிய ( திருச்செங்கோடு )
ராகம் - பீம்பளாஸ் ; தாளம் - ஆதி
(எடுப்பு - 3/4 இடம்)
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன .. தனதான
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய .. குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத .. மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி .. தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக .. மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி .. தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப .. னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட .. மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் .. பெருமாளே.
பாடல் 603 புற்புதமெ னாம ( திருச்செங்கோடு )
ராகம் - நவரஸ கன்னட; தாளம் - ஆதி
தத்ததன தான தத்ததன தான
தத்ததன தான .. தனதான
புற்புதமெ னாம அற்பநிலை யாத
பொய்க்குடில்கு லாவு .. மனையாளும்
புத்திரரும் வீடு மித்திரரு மான
புத்திசலி யாத .. பெருவாழ்வு
நிற்பதொரு கோடி கற்பமென மாய
நிட்டையுடன் வாழு .. மடியேன்யான்
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
நிற்கும்வகை யோத .. நினைவாயே
சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
சக்ரகதை பாணி .. மருகோனே
தர்க்சமண் மூகர் மிக்ககழு வேற
வைத்தவொரு காழி .. மறையோன
கற்புவழு வாது வெற்படியின் மேவு
கற்றைமற வாணர் .. கொடிகோவே
கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
கற்பதரு நாடர் .. பெருமாளே.
பாடல் 604 பொற்சித்ரப் பச்சைப் ( திருச்செங்கோடு )
ராகம் - .; தாளம் -
தத்தத்தத் தத்தத் தத்தத்
தத்தத்தத் தத்தத் தத்தத்
தத்தத்தத் தத்தத் தத்தத் .. தனதான
பொற்சித்ரப் பச்சைப் பட்டுக்
கச்சிட்டுக் கட்டிப் பத்மப்
புட்பத்துக் கொப்பக் கற்பித் .. திளைஞோர்கள்
புட்பட்டுச் செப்பத் துப்பற்
கொத்தப்பொற் றித்தத் திட்பப்
பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத் .. தனமானார்
கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித்
தத்திற்புக் கிட்டப் பட்டுக்
கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் .. திரியாமல்
கற்றுற்றுச் சித்திக் கைக்குச்
சித்திப்பப் பக்ஷத் திற்சொற்
கற்பித்தொப் பித்துக் கொற்றக் .. கழல்தாராய்
குற்சித்துக் கொட்டுக் கொட்டுத்
துக்கச்சத் துக்குக் குக்குக்
குக்குக்குக் குக்குக் குக்குக் .. கெனமாறா
குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக்
கக்ஷத்திற் பட்சத் தத்தக்
கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக் .. குடதாரி
சற்சித்துத் தொற்புத் திப்பட்
சத்தர்க்கொப் பித்தட் சத்துச்
சத்தத்தைச் சத்திக் கொச்சைப் .. பதிவாழ்வே
தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற்
செற்பற்றைச் செற்றிட் டுச்சச்
சற்பப்பொற் றைக்குட் சொக்கப் .. பெருமாளே.
பாடல் 605 கொடிய மறலியு ( திருச்செங்கோடு )
ராகம் - சந்தர கெளன்ஸ்; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன .. தனதான
கொடிய மறலியு மவனது கடகமு
மடிய வொருதின மிருபதம் வழிபடு
குதலை யடியவ னினதருள் கொடுபொரு .. மமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
கொடியு மகிலமும் வெளிபட இருதிசை .. யிருநாலும்
படியு நெடியன எழுபுண ரியுமுது
திகிரி திகிரியும் வருகென வருதகு
பவுரி வருமொரு மரகத துரகத .. மிசையேறிப்
பழய அடியவ ருடனிமை யவர்கண
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
பரவ வருமதி லருணையி லொருவிசை .. வரவேணும்
சடில தரவிட தரபணி தரதர
பரசு தரசசி தரசுசி தரவித
தமரு கமிருக தரவனி தரசிர .. தரபாரத்
தரணி தரதநு தரவெகு முககுல
தடினி தரசிவ சுதகுண தரபணி
சயில விதரண தருபுர சசிதரு .. மயில்வாழ்வே
நெடிய வுடலரு இருளெழ நிலவெழ
எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ .. நெடுவானும்
நிலனும் வெருவர வருநிசி சரர்தள
நிகில சகலமு மடியவொர் படைதொடு
நிருப குருபர சுரபதி பரவிய .. பெருமாளே.
பாடல் 606 கட்ட மன்னு ( கொல்லிமலை )
ராகம் -.; தாளம் -
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய .. தனதான
கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
கட்கு மன்னு மில்ல .. மிதுபேணி
கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு
கக்க எண்ணி முல்லை .. நகைமாதர்
இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி
யிட்டு பொன்னை யில்லை .. யெனஏகி
எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி
யெற்று மிங்ங னைவ .. தியல்போதான்
முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
முட்ட நன்மை விள்ள .. வருவோனே
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
முத்தி விண்ண வல்லி .. மணவாளா
பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
பட்ட துன்னு கொல்லி .. மலைநாடா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்சை வல்ல .. பெருமாளே.
பாடல் 607 தொல்லைமுதல் தானொன்று ( கொல்லிமலை )
ராகம் - பிருந்தாவன சாரங்கா; தாளம் - கண்டசாபு (2 1/2)
தய்யதன தானந்த தய்யதன தானந்த
தய்யதன தானந்த .. தனதான
தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த .. மெனவாகி
துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க .. மெனமேவும்
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி .. யிசையாகிப்
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த
பெளவமுற வேநின்ற .. தருள்வாயே
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்லுருக வேநின்ற .. குழலூதுங்
கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் .. கதிர்வேலா
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை .. யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற .. பெருமாளே.
பாடல் 608 மாகசஞ் சாரமுகில் ( ராஜகெம்பீரவளநாட்டு மலை )
ராகம் - .; தாளம் -
தானனந் தானதன தாத்த தனதன
தானனந் தானதன தாத்த தனதன
தானனந் தானதன தாத்த தனதன .. தந்ததான
மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு
போகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடு
மானவண் டேறுகணை தோற்ற விழிகொடு .. கண்டுபோல
மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடு
சோலைசென் றூதுகுயில் தோற்ற இசைகொடு
வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு .. மன்றுளாடி
சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு
போகபண் டாரபணி தோற்ற அரைகொடு
தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு .. வந்துகாசு
தேடுகின் றாரொடுமெய் தூர்த்த னெனவுற
வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு
சீவனொன் றானபர மார்த்த தெரிசனை .. வந்துதாராய்
வேகமுண் டாகியுமை சாற்று மளவினில்
மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை
வீரனென் பானொருப ராக்ர னெனவர .. அன்றுசோமன்
மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக
ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை
வீழநன் பாரதியு மூக்கு நழுவிட .. வந்தமாயன்
ஏகநின் றாகியமர் தோற்று வதறிட
வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள்
ஏறிவென் றாடுகள நீக்கி முநிவரர் .. வந்துசேயென்
றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை
தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய
ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் .. தம்பிரானே.
பாடல் 609 சூதுகொலை கார ( ஞானமலை )
ராகம் - .; தாளம் -
தானதன தான தானதன தான
தானதன தான .. தனதான
சூதுகொலை கார ராசைபண மாதர்
தூவையர்கள் சோகை .. முகநீலர்
சூலைவலி வாத மோடளைவர் பாவர்
தூமையர்கள் கோளர் .. தெருவூடே
சாதனைகள் பேசி வாருமென நாழி
தாழிவிலை கூறி .. தெனவோதி
சாயவெகு மாய தூளியுற வாக
தாடியிடு வோர்க .. ளுறவாமோ
வேதமுநி வோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூச .. லெனஏகி
வீறசுரர் பாறி வீழஅலை யேழு
வேலையள றாக .. விடும்வேலா
நாதரிட மேவு மாதுசிவ காமி
நாரியபி ராமி .. யருள்பாலா
நாரண சுவாமி யீனுமக ளோடு
ஞானமலை மேவு .. பெருமாளே.
பாடல் 610 மனையவள் நகைக்க ( ஞானமலை )
ராகம் - ரீதிகெளளை; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனத்த தான தனதன தனத்த தான
தனதன தனத்த தான .. தனதான
மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
மகளிரு நகைக்க தாதை .. தமரோடும்
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளு .. மடியேனை
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
னகமதை யெடுத்த சேம .. மிதுவோவென்
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
மணுகிமு னளித்த பாத .. மருள்வாயே
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
தமருக மறைக்கு ழாமு .. மலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
சமரிடை விடுத்த சோதி .. முருகோனே
எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
எழுதரிய பச்சை மேனி .. யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு .. பெருமாளே.
பாடல் 611 ஆதிமக மாயி ( ஊதிமலை )
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த .. தனதான
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த .. குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க .. அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க .. ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பி .. மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க .. வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த .. வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் .. வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த .. பெருமாளே.
பாடல் 612 கோதி முடித்துக் ( ஊதிமலை )
ராகம் - .; தாளம் -
தான தனத்தத் தனத்த தந்தன
தான தனத்தத் தனத்த தந்தன
தான தனத்தத் தனத்த தந்தன .. தனதான
கோதி முடித்துக் கனத்த கொண்டையர்
சூது விதத்துக் கிதத்து மங்கையர்
கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் .. நினையாதே
கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
கூறு மிடத்துக் கிதத்து நின்றருள் .. புரிவாயே
நாத நிலைக்குட் கருத்து கந்தருள்
போதக மற்றெச் சகத்தை யுந்தரு
நான்முக னுக்குக் கிளத்து தந்தையின் .. மருகோனே
நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது
தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு
நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள் .. வடிவேலா
தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
தோதிமி தித்தித் தனத்த தந்தவெ .. னிசையோடே
சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி
ரான துறத்தற் கிரக்க முஞ்சுப
சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் .. புரிவோனே
ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ
காரண பத்தர்க் கிரக்க முந்தகு
ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட .. ரொளியோனே
ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன
காபர ணத்திற் பொருட் பயன்றரு
ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள் .. பெருமாளே.
பாடல் 613 கருடன் மிசைவரு ( குருடிமலை )
ராகம் -.; தாளம் -
தனன தனதன தனன தனதன
தனன தனதன .. தனதான
கருடன் மிசைவரு கரிய புயலென
கமல மணியென .. வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
கருதி முதுமொழி .. களைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
செவியில் நுழைவன .. கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
சிறிது முணர்வகை .. யறியேனே
வருடை யினமது முருடு படுமகில்
மரமு மருதமு .. மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை
வழிய வகைவகை .. குதிபாயுங்
குருடி மலையுறை முருக குலவட
குவடு தவிடெழ .. மயிலேறுங்
குமர குருபர திமிர தினகர
குறைவி லிமையவர் .. பெருமாளே.
பாடல் 614 எங்கேனு மொருவர்வர ( தென்சேரிகிரி )
ராகம் - .; தாளம் -
தந்தான தனதனன தந்தான தனதனன
தந்தான தனதனன .. தனதான
எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு
இங்கேவ ருனதுமயல் .. தரியாரென்
றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ
என்றாசை குழையவிழி .. யிணையாடித்
தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள்
சந்தேக மறவெபறி .. கொளுமானார்
சங்கீத கலவிநல மென்றோது முததிவிட
தண்பாரு முனதருளை .. யருள்வாயே
சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு
சந்தாரும் வெதிருகுழ .. லதுவூதித்
தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
தங்கூறை கொடுமரமி .. லதுவேறுஞ்
சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள
சென்றேயும் அமரருடை .. சிறைமீளச்
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
தென்சேரி கிரியில்வரு .. பெருமாளே.
பாடல் 615 கொண்டாடிக் கொஞ்சு ( தென்சேரிகிரி )
ராகம் - .; தாளம் -
தந்தானத் தந்த தனதன
தந்தானத் தந்த தனதன
தந்தானத் தந்த தனதன .. தனதான
கொண்டாடிக் கொஞ்சு மொழிகோடு
கண்டாரைச் சிந்து விழிகொடு
கொந்தாரச் சென்ற குழல்கொடு .. வடமேருக்
குன்றோடொப் பென்ற முலைகொடு
நின்றோலக் கஞ்செய் நிலைகொடு
கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு .. பலரோடும்
பண்டாடச் சிங்கி யிடுமவர்
விண்டாலிக் கின்ற மயிலன
பண்பாலிட் டஞ்செல் மருளது .. விடுமாறு
பண்டேசொற் றந்த பழமறை
கொண்டேதர்க் கங்க ளறவுமை
பங்காளர்க் கன்று பகர்பொருள் .. அருள்வாயே
வண்டாடத் தென்றல் தடமிசை
தண்டாதப் புண்ட ரிகமலர்
மங்காமற் சென்று மதுவைசெய் .. வயலூரா
வன்காளக் கொண்டல் வடிவொரு
சங்க்ராமக் கஞ்சன் விழவுதை
மன்றாடிக் கன்பு தருதிரு .. மருகோனே
திண்டாடச் சிந்து நிசிசரர்
தொண்டாடக் கண்ட வமர்பொரு
செஞ்சேவற் செங்கை யுடையசண் .. முகதேவே
சிங்காரச் செம்பொன் மதிளத
லங்காரச் சந்த்ர கலைதவழ்
தென்சேரிக் குன்றி லினிதுறை .. பெருமாளே.
பாடல் 616 ஐங்கரனை யொத்தமன ( கொங்கணகிரி )
ராகம் - மனோலயம்; தாளம் - ஆதி - கண்டநடை (2)
தந்ததன தத்ததன தந்ததன தத்ததன
தந்ததன தத்ததன .. தனதான
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை .. வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமன .. மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி .. யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ .. யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமைய .. அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை .. யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு .. ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் .. பெருமாளே.
பாடல் 617 பாட்டி லுருகிலை ( தீர்த்தமலை )
ராகம் - சங்கரானந்தப்ரியா; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2
தாத்த தனதன தாத்த தனதன
தாத்த தனதன தாத்த தனதன
தாத்த தனதன தாத்த தனதன .. தனதான
பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
கூற்று வருவழி பார்த்து முருகிலை
பாட்டை யநுதின மேற்று மறிகிலை .. தினமானம்
யாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை
நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் .. வழிபோக
மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை
பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ .. னிதுகேளாய்
வாக்கு முனதுள நோக்கு மருளுவ
னேத்த புகழடி யார்க்கு மெளியனை
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை .. மருவாயோ
ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
பூட்டி திரிபுர மூட்டி மறலியி
னாட்ட மறசர ணீட்டி மதனுடல் .. திருநீறாய்
ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
யாட்டின் முகமதை நாட்டி மறைமக
ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ .. னருள்பாலா
சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
ஓட்டி யழல்பசை காட்டி சமணரை
சீற்ற மொடுகழு வேற்ற அருளிய .. குருநாதா
தீர்த்த எனதக மேட்டை யுடனினை
ஏத்த அருளுட னோக்கி அருளுதி
தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் .. பெருமாளே.
பாடல் 618 அரிவையர்கள் தொடரு ( கநகமலை )
ராகம் - ஸாவேரி ; தாளம் - அங்கதாளம் (6)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தனன தந்தத்
தனதனன தனன தந்தத்
தனதனன தனன தந்தத் .. தனதான
அரிவையர்கள் தொடரு மின்பத்
துலகுநெறி மிகம ருண்டிட்
டசடனென மனது நொந்திட் .. டயராமல்
அநுதினமு முவகை மிஞ்சிச்
சுகநெறியை விழைவு கொண்டிட்
டவநெறியின் விழையு மொன்றைத் .. தவிர்வேனோ
பரிதிமதி நிறைய நின்றஃ
தெனவொளிரு முனது துங்கப்
படிவமுக மவைகள் கண்டுற் .. றகமேவும்
படர்கள்முழு வதும கன்றுட்
பரிவினொடு துதிபு கன்றெற்
பதயுகள மிசைவ ணங்கற் .. கருள்வாயே
செருவிலகு மசுரர் மங்கக்
குலகிரிகள் நடுந டுங்கச்
சிலுசிலென வலைகு லுங்கத் .. திடமான
செயமுதவு மலர்பொ ருங்கைத்
தலமிலகு மயில்கொ ளுஞ்சத்
தியைவிடுதல் புரியு முன்பிற் .. குழகோனே
கருணைபொழி கிருபை முந்தப்
பரிவினொடு கவுரி கொஞ்சக்
கலகலென வருக டம்பத் .. திருமார்பா
கரிமுகவர் தமைய னென்றுற்
றிடுமிளைய குமர பண்பிற்
கநககிரி யிலகு கந்தப் .. பெருமாளே.
பாடல் 619 மருவுமலர் வாச ( புகழிமலை )
ராகம் - .; தாளம் -
தனனதன தான தனனதன தான
தனனதன தான .. தனதான
மருவுமலர் வாச முறுகுழலி னாலும்
வரிவிழியி னாலு .. மதியாலும்
மலையினிக ரான இளமுலைக ளாலு
மயல்கள்தரு மாதர் .. வகையாலும்
கருதுபொரு ளாலு மனைவிமக வான
கடலலையில் மூழ்கி .. அலைவேனோ
கமலபத வாழ்வு தரமயிலின் மீது
கருணையுட னேமுன் .. வரவேணும்
அருமறைக ளோது பிரமன்முதல் மாலும்
அமரர்முநி ராசர் .. தொழுவோனே
அகிலதல மோது நதிமருவு சோலை
அழகுபெறு போக .. வளநாடா
பொருதவரு சூரர் கிரியுருவ வாரி
புனல்சுவற வேலை .. யெறிவோனே
புகலரிய தான தமிழ்முநிவ ரோது
புகழிமலை மேவு .. பெருமாளே.
பாடல் 620 மாந்தளிர்கள் போல ( பூம்பறை )
ராகம் - .; தாளம் -
தாந்ததன தான தாந்ததன தான
தாந்ததன தான .. தனதான
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
வாந்தவிய மாக .. முறைபேசி
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
வாழ்ந்தமனை தேடி .. உறவாடி
ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
ஏங்குமிடை வாட .. விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
ஏய்ந்தவிலை மாதர் .. உறவாமோ
பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
தாஞ்செகண சேசெ .. எனவோசை
பாங்குபெறு தாள மேங்கநட மாடு
பாண்டவர்ச காயன் .. மருகோனே
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
பூங்கதலி கோடி .. திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பறையின் மேவு .. பெருமாளே.
பாடல் 621 அனங்க னம்பொன் ( கொடுங்குன்றம் )
ராகம் - .; தாளம் -
தனந்த தந்தம் தந்தம் தந்தந் .. தந்ததான
அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் .. கண்களாலே
அடர்ந்தெ ழும்பொன் குன்றங் கும்பங் .. கொங்கையாலே
முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் .. பெண்களாலே
முடங்கு மென்றன் தொண்டுங் கண்டின் .. றின்புறாதோ
தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் .. தெந்தெனானா
செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் .. தும்பிபாடக்
குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் .. துன்றுசோலை
கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந் .. தம்பிரானே.
பாடல் 622 எதிர்பொருது கவிகடின ( கொடுங்குன்றம் )
ராகம் - .; தாளம் -
தனதனன தனதனன தத்தத்த தந்ததன
தத்தத்த தந்ததன
--------- 3 முறை ---------- .. தந்ததான
எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது
குத்தித் திறந்துமலை
யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி
முத்துச் செறிந்தவட
மெனுநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரி
னிற்கொத்து மங்குசநெ .. ருங்குபாகர்
எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்ப
தைக்கக்க டிந்துமிக
இரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனு
முட்கத்தி ரண்டிளகி
யிளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு
டைத்துச்சி னந்துபொரு .. கொங்கையானை
பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி
யொக்கத்து வண்டமளி
புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள்
செக்கச்சி வந்தமுது
பொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலைய
முத்தத்து டன்கருணை .. தந்துமேல்வீழ்
புதுமைதரு கலவிவலை யிற்பட்ட ழுந்தியுயிர்
தட்டுப்ப டுந்திமிர
புணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரிய
சட்டைக்கு ரம்பையழி
பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி
னிர்த்தச் சரண்களைம .. றந்திடேனே
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி
தத்தத்த தந்ததத
தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத
திக்கட்டி கண்டிகட
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித
தக்கத்த குந்தகுர்த .. திந்திதீதோ
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட
டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட
டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
குக்குக்கு குங்குகுகு .. என்றுதாளம்
முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு
டுக்கைப்பெ ரும்பதலை
முழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரம
கத்திக்க ளும்பரவ
முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய
மிக்கக்க வந்தநிரை .. தங்கியாட
முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர
வுக்ரப்பெ ருங்குருதி
முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வே
டிக்கத்து ணிந்ததிர
முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி
வெட்டிக்க ளம்பொருத .. தம்பிரானே.
பாடல் 623 அழகெ றிந்த ( குன்றக்குடி )
ராகம் - .; தாளம் -
தனன தந்த தந்த தனன தந்த தந்த
தனன தந்த தந்த .. தனதான
அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த
அமுத புஞ்ச இன்சொல் .. மொழியாலே
அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ
டணிச தங்கை கொஞ்சு .. நடையாலே
சுழியெ றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து
தொடுமி ரண்டு கண்க .. ளதனாலே
துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள்
துயரை யென்றொ ழிந்து .. விடுவேனோ
எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி
யெதிர டைந்தி றைஞ்சல் .. புரிபோதே
இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த தங்க
மொழிய வென்ற கொண்டல் .. மருகோனே
மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச
மநுவி யம்பி நின்ற .. குருநாதா
வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க
மலைவி ளங்க வந்த .. பெருமாளே.
பாடல் 624 ககுபநிலை குலையவிகல் ( குன்றக்குடி )
ராகம் - .; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன
தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன
--------- 3 முறை ------------- .. தனதானா
ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய
தந்தத்தி னைத்தடிவ தொந்தத் திரத்தையுள
அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும்
அம்பொற்ப தத்தர்தநு வம்பொற்பொ ருப்படர்வ
களபபரி மளமெழுகும் எழிலில்முழு குவமுளரி
யஞ்சப் புடைத்தெழுவ வஞ்சக் கருத்துமத .. னபிஷேகங்
கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ
இன்பச் சுடர்க்கனக கும்பத் தரச்செருவ
பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர்
புந்திக் கிடர்த்தருவ பந்தித் தகச்சடர்வ
கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர்
சங்கிப்பி முத்தணிவ பொங்கிக் கனத்தொளிர்வ .. முலைமாதர்
வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமத
மொன்றிக்க றுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழல்
அசையருசி யமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ
னும்புட் குரற்பகர வம்புற்ற மற்புரிய
வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள்
கன்றிச் சிவக்கமகிழ் நன்றிச் சமத்துநக .. நுதிரேகை
வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவிதழ்
உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற் றணைத்தவதி
செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுதல்
உந்திப் பிறப்பறநி னைந்திட்ட முற்றுனடி
வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர
துன்றட்ட சிட்டகுண குன்றக் குடிக்கதிப .. அருளாதோ
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு
தங்குத் தகுத்தககு திங்குத் திகுத்திகிகு
சகணசக சகசகண செகணசெக செகசெகெண
சங்கச் சகச்சகண செங்கச்செ கச்செகண
தனனதன தனதனன தெனனதென தெனதெனன
தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன .. தனனானா
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத் தகுத்தகுகு திங்குத் திகுத்திகுகு
டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி
டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
தன்றத் தரத்தரர தின்றித் திரித்திரிரி .. யெனதாளந்
தொகுதிவெகு முரசுகர டிகைடமரு முழவுதவில்
தம்பட்ட மத்தளமி னம்பட் டடக்கைபறை
பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை
மண்டைத் திரட்பருகு சண்டைத் திரட்கழுகு
துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென
வந்துற் றிடக்குடர்நி ணந்துற் றிசைத்ததிர .. முதுபேய்கள்
சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய்
வெங்குக் குடத்தகொடி துங்குக் குகுக்குகென
வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவி
திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல
துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல்
மிண்டைக் குலைத்தமர்செய் தண்டர்க் குரத்தையருள் .. பெருமாளே.
பாடல் 625 கடினதட கும்ப ( குன்றக்குடி )
ராகம் - .; தாளம் -
தனதனன தந்த தானன தனதனன தந்த தானன
தனதனன தந்த தானன .. தனதான
கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழு
கலவிதரு கின்ற மாதரொ .. டுறவாடிக்
கனவளக பந்தி யாகிய நிழல்தனிலி ருந்து தேனுமிழ்
கனியிதழை மென்று தாடனை .. செயலாலே
துடியிடைநு டங்க வாள்விழி குழைபொரநி ரம்ப மூடிய
துகில்நெகிழ வண்டு கோகில .. மயில்காடை
தொனியெழவி ழைந்து கூரிய கொடுநகமி சைந்து தோள்மிசை
துயிலவச இன்ப மேவுத .. லொழிவேனோ
இடிமுரச றைந்து பூசல்செய் அசுரர்கள்மு றிந்து தூளெழ
எழுகடல்ப யந்து கோவென .. அதிகோப
எமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடு
இரணமுக சண்ட மாருத .. மயிலோனே
வடிவுடைய அம்பி காபதி கணபதிசி றந்து வாழ்தட
வயலிநகர் குன்ற மாநக .. ருறைவோனே
வகைவகைபு கழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர சூரியர்
வழிபடுதல் கண்டு வாழ்வருள் .. பெருமாளே.
பாடல் 626 நேசா சாரா ( குன்றக்குடி )
ராகம் - .; தாளம் -
தானா தானா தந்தன தத்தன
தானா தானா தந்தன தத்தன
தானா தானா தந்தன தத்தன .. தனதான
நேசா சாரா டம்பர மட்டைகள்
பேசா தேயே சுங்கள மட்டைகள்
நீசா ளோடே யும்பழ கிக்கவர் .. பொருளாலே
நீயே நானே யென்றொரு சத்தியம்
வாய்கூ சாதோ துங்க படத்திகள்
நேரா லேதா னின்றுபி லுக்கிகள் .. எவர்மேலும்
ஆசா பாசா தொந்தரை யிட்டவர்
மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ
காயே மீதோ லெங்கு மினுக்கிகள் .. வெகுமோகம்
ஆகா தாவே சந்தரு திப்பொழு
தோகோ வாவா வென்று பகட்டிக
ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு .. முறவாமோ
பேசா தேபோய் நின்றுமி யிற்றுயிர்
வாயா வாவா வென்று குடித்தருள்
பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர் .. வருதூது
பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு
வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு
பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன் .. மருகோனே
மாசூ டாடா டும்பகை யைப்பகை
சூரா ளோடே வன்செரு வைச்செறு
மாசூ ராபா ரெங்கும ருட்பொலி .. முருகோனே
வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு
தேனா றேசூழ் துங்க மலைப்பதி
மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள் .. பெருமாளே.
பாடல் 627 பிறர்புக ழின்சொற் ( குன்றக்குடி )
ராகம் - .; தாளம் -
தனதன தந்தத் தனதன தந்தத்
தனதன தந்தத் .. தனதான
பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப்
பருவம தன்கைச் .. சிலையாலே
பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப்
பெருவழி செனறக் .. குணமேவிச்
சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச்
செயலும ழிந்தற் .. பமதான
தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச்
சிலசில பங்கப் .. படலாமோ
கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக்
கிலுமெதிர் சண்டைக் .. கெழுசூரன்
கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக்
கிழிபட துன்றிப் .. பொருதோனே
குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற்
பனமநு வுஞ்சொற் .. குருநாதா
குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்
குடிவளர் கந்தப் .. பெருமாளே.
பாடல் 628 தவள மதிய ( குன்றக்குடி )
ராகம் -.; தாளம் -
தனன தனன தனத்தந் .. தனதான
தவள மதிய மெறிக்குந் .. தணலாலே
சரச மதனன் விடுக்குங் .. கணையாலே
கவன மிகவு முரைக்குங் .. குயிலாலே
கருதி மிகவு மயக்கம் .. படவோநான்
பவள நிகரு மிதழ்ப்பைங் .. குறமானின்
பரிய வரையை நிகர்க்குந் .. தனமேவுந்
திவளு மணிகள் கிடக்குந் .. திருமார்பா
திகழு மயிலின் மலைக்கண் .. பெருமாளே.
பாடல் 629 நாமேவு குயிலாலு ( குன்றக்குடி )
ராகம் - .; தாளம் -
தானான தனதான தானான தனதான
தானான தனதான .. தனதான
நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
நாடோ று மதிகாயும் .. வெயிலாலும்
நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு
நாடாசை தருமோக .. வலையூடே
ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி
லேவாரும் விழிமாதர் .. துய்ருடே
ஏகாம லழியாத மேலான பதமீதி
லேகீயு னுடன்மேவ .. அருள்தாராய்
தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு
தானேறி விளையாடு .. மொருபோதில்
தாயாக வருசோதை காணாது களவாடு
தாமோத ரன்முராரி .. மருகோனே
மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
மாலாகி விளையாடு .. புயவீரா
வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ
மாயூர கிரிமேவு .. பெருமாளே.
பாடல் 630 மைக்க ணிக்கன் ( பொதியமலை )
ராகம் - .; தாளம் -
தத்த தத்த தான தான தத்த தத்த தான தான
தத்த தத்த தான தான .. தனதான
மைக்க ணிக்கன் வாளி போல வுட்க ளத்தை மாறி நாடி
மட்டு முற்ற கோதை போத .. முடிசூடி
மத்த கத்தி னீடு கோடு வைத்த தொத்தின் மார்பி னூடு
வட்ட மிட்ட வாரு லாவு .. முலைமீதே
இக்கு வைக்கு மாடை வீழ வெட்கி யக்க மான பேரை
யெத்தி முத்த மாடும் வாயி .. னிசைபேசி
எட்டு துட்ட மாதர் பாய லிச்சை யுற்றெ னாக மாவி
யெய்த்து நித்த மான வீன .. முறலாமோ
துர்க்கை பக்க சூல காளி செக்கை புக்க தாள வோசை
தொக்க திக்க தோத தீத .. வெனவோதச்
சுற்றி வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதி
சொற்கு நிற்கு மாறு தார .. மொழிவோனே
திக்கு மிக்க வானி னூடு புக்க விக்க மூடு சூரர்
திக்க முட்டி யாடு தீர .. வடிவேலா
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதி னோடு
செப்பு வெற்பில் சேய தான .. பெருமாளே.
பாடல் 631 வெடித்த வார்குழல் ( பொதியமலை )
ராகம் - .; தாளம் -
தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன .. தந்ததான
வெடித்த வார்குழல் விரித்து மேல்விழி
விழித்து மேகலை பதித்து வார்தொடு
மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம .. ருங்கினாடை
மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை
துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி
மிரட்டி யாரையு மழைத்து மால்கொடு .. தந்தவாய்நீர்
குடித்து நாயென முடக்கு மேல்பிணி
யடுத்த பாதிகள் படுத்த தாய்தமர்
குலத்தர் யாவரு நகைக்க வேயுடல் .. மங்குவேனைக்
குறித்து நீயரு கழைத்து மாதவர்
கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
கொடுத்து வேதமு மொருத்த னாமென .. சிந்தைகூராய்
உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ வென
திகுத்த தீதிகு திகுர்த்த தாவென
உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி .. ரங்குபோரில்
உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி
துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை
யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ .. ரும்பராரை
அடைத்த மாசிறை விடுத்து வானுல
களிக்கு மாயிர திருக்க ணானர
சளித்து நாளுமெ னுளத்தி லேமகி .. ழுங்குமாரா
அளித்த தாதையு மிகுத்த மாமனும்
அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ்
அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய .. தம்பிரானே.
பாடல் 632 குதலை மொழியினார் ( கழுகுமலை )
ராகம் - .; தாளம் -
தனன தனதனா தனத்த தானன
தனன தனதனா தனத்த தானன
தனன தனதனா தனத்த தானன .. தனதான
குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி
முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்
கொடிது கொடிததால் வருத்த மாயுறு .. துயராலே
மதலை மறுகிவா லிபத்தி லேவெகு
பதகர் கொடியவா ளிடத்தி லேமிக
வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி .. முடியாதே
முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல்
மடிய அயிலையே விடுத்த வாகரு
முகிலை யனையதா நிறத்த மால்திரு .. மருகோனே
கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி
யிசையை முரலமா வறத்தில் மீறிய
கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய .. பெருமாளே.
பாடல் 633 முலையை மறைத்துத் ( கழுகுமலை )
ராகம் - .; தாளம் -
தனதன தத்தத் தனத்த தானன
தனதன தத்தத் தனத்த தானன
தனதன தத்தத் தனத்த தானன .. தனதான
முலையை மறைத்துத் திறப்ப ராடையை
நெகிழ வுடுத்துப் படுப்பர் வாயிதழ்
முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமல .. ரணைமீதே
அலைகுலை யக்கொட் டணைப்ப ராடவர்
மனவலி யைத்தட் டழிப்பர் மால்பெரி
தவர்பொரு ளைக்கைப் பறிப்பர் வேசைக .. ளுறவாமோ
தலைமுடி பத்துத் தெறித்து ராவண
னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு
தநுவை வளைத்துத் தொடுத்த வாளியன் .. மருகோனே
கலைமதி யப்புத் தரித்த வேணிய
ருதவிய வெற்றித் திருக்கை வேலவ
கழுகு மலைக்குட் சிறக்க மேவிய .. பெருமாளே.
பாடல் 634 கோங்க முநகுயு ( கழுகுமலை )
ராகம் - .; தாளம் -
தாந்த தனன தனன தாந்த தனன தனன
தாந்த தனன தனனந் .. தனதான
கோங்க முநகுயு மெலிய வீங்கு புளக களப
மேந்து குவடு குழையும் .. படிகாதல்
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய
தேங்கு கலவி யமுதுண் .. டியல்மாதர்
வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும்
வாய்ந்த துயிலை மிகவுந் .. தணியாத
வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை
நீந்தி அமல அடிவந் .. தடைவேனோ
ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர
மோங்கு ததியின் முழுகும் .. பொருசூரும்
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில்
ஊர்ந்து மயில துலவுந் .. தனிவேலா
வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக
வேங்கை வடிவு மருவுங் .. குமரேசா
வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
வேண்டு மளவி லுதவும் .. பெருமாளே.
பாடல் 635 அல்லில் நேருமி ( வள்ளியூர் )
ராகம் - அடாணா ; தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தய்ய தானன .. தனதான
அல்லில் நேருமி .. னதுதானும்
அல்ல தாகிய .. உடல்மாயை
கல்லி னேரஅ .. வழிதோறுங்
கையு நானுமு .. லையலாமோ
சொல்லி நேர்படு .. முதுசூரர்
தொய்ய வூர்கெட .. விடும்வேலா
வல்லி மாரிரு .. புறமாக
வள்ளி யூருறை .. பெருமாளே.
பாடல் 636 திருமக ளுலாவு ( கதிர்காமம் )
ராகம் - குந்தல வராலி; தாளம் - ஆதி
தனதனன தான தனதனன தான
தனதனன தான .. தனதான
திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் .. பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் .. பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் .. பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் .. பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் .. பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் .. பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் .. பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் .. பெருமாளே.
பாடல் 637 அலகின் மாறு ( கதிர்காமம் )
ராகம் - .; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான .. தனதான
அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி
அடைவில் ஞாளி கோமாளி .. அறமீயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
அருளி லாத தோடாய .. மருளாகிப்
பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
பருவ மேக மேதாரு .. வெனயாதும்
பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
பரிசில் தேடி மாயாத .. படிபாராய்
இலகு வேலை நீழ்வாடை யெரிகொள் வேலை மாசூரி
லெறியும் வேலை மாறாத .. திறல்வீரா
இமய மாது பாகீர திநதி பால காசார
லிறைவி கான மால்வேடர் .. சுதைபாகா
கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத
கதிர காம மூதூரி .. லிளையோனே
கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
கருணை மேரு வேதேவர் .. பெருமாளே.
பாடல் 638 உடுக்கத் துகில்வேணு ( கதிர்காமம் )
ராகம் - காம்போதி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2
தனத்தத் தனதான தானன
தனத்தத் தனதான தானன
தனத்தத் தனதான தானன .. தனதான
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய் .. யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ் .. வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி .. ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ .. தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக .. வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் .. வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு .. வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய .. பெருமாளே.
பாடல் 639 எதிரி லாத ( கதிர்காமம் )
ராகம் - சக்ரவாஹம்; தாளம் - திஸ்ர்ருபகம் - திஸ்ரநடை (7 1/2)
(எடுப்பு - /3 0)
தனன தான தத்த .. தனதான
எதிரி லாத பத்தி .. தனைமேவி
இனிய தாள்நி னைப்பை .. யிருபோதும்
இதய வாரி திக்கு .. ளுறவாகி
எனது ளேசி றக்க .. அருள்வாயே
கதிர காம வெற்பி .. லுறைவோனே
கனக மேரு வொத்த .. புயவீரா
மதுர வாணி யுற்ற .. கழலோனே
வழுதி கூனி மிர்த்த .. பெருமாளே.
பாடல் 640 கடகட கருவிகள் ( கதிர்காமம் )
ராகம் - தோடி; தாளம் - ஆதி (2 களை)
தனதன தனதன தனதன தனதன
தானத் தனந்தந் .. தனதான
கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
காமத் தரங்கம் .. மலைவீரா
கனகத நககுலி புணரித குணகுக
காமத் தனஞ்சம் .. புயனோட
வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் .. தவழாது
வழிவழி தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன் .. றிடுமோதான்
அடவியி ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென் .. றயர்வோனே
அயிலவ சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண் .. டருள்வோனே
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக் கிடங்கண் .. டவர்வாழ்வே
இதமொழி பகரினு மதமொழி பகரினு
மேழைக் கிரங்கும் .. பெருமாளே.
பாடல் 641 சமரமுக வேலொத்த ( கதிர்காமம் )
ராகம் - .; தாளம் -
தனதனன தானத்த தனதனன தானத்த
தனதனன தானத்த .. தனதான தானனா
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
தனமசைய வீதிக்குள் .. மயில்போ லுலாவியே
சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்கு பாசுத்தர்
தமையுணர ராகத்தின் .. வசமாக மேவியே
உமதடிய னாருக்கு மனுமரண மாயைக்கு
முரியவர் மகாதத்தை .. யெனுமாய மாதரார்
ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு
முனதருள்க்ரு பாசித்த .. மருள்கூர வேணுமே
இமகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி
யெழுதரிய காயத்ரி .. யுமையாள் குமாரனே
எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து
இதணருகு சேவிக்கு .. முருகா விசாகனே
அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு
மதிகவித சாமர்த்ய .. கவிராஜ ராஜனே
அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
அரியகதிர் காமத்தி .. லுரியாபி ராமனே.
பாடல் 642 சரத்தே யுதித்தா ( கதிர்காமம் )
ராகம் - காபி; தாளம் - ஆதி - கண்டநடை (20)
(எடுப்பு - அதீதம்)
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தா .. தனதான
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா யெதிர்த்தே .. வருசூரைச்
சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
தகர்த்தா யுடற்றா .. னிருகூறாச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
செகுத்தாய் பலத்தார் .. விருதாகச்
சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
திருத்தா மரைத்தா .. ளருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
பொரத்தா னெதிர்தே .. வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
பொரித்தார் நுதற்பார் .. வையிலேபின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
கருத்தார் மருத்தூர் .. மதனாரைக்
கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
கதிர்க்காம முற்றார் .. முருகோனே
பாடல் 643 சரியையா ளர்க்குமக் ( கதிர்காமம் )
ராகம் - .; தாளம் -
தனதனா தத்தனத் தனதனா தத்தனத்
தனதனா தத்தனத் .. தனதான
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
சகலயோ கர்க்குமெட் .. டரிதாய
சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
டருபரா சத்தியிற் .. பரமான
துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்தநற் .. பதிநீடு
துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
சுகசெர்ரு பத்தையுற் .. றடைவேனோ
புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
புருஷவீ ரத்துவிக் .. ரமசூரன்
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
புகழையோ தற்கெனக் .. கருள்வோனே
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
கனிகள்பீ றிப்புசித் .. தமராடிக்
கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
கதிரகா மக்கிரிப் .. பெருமாளே.
பாடல் 644 பாரவித முத்தப்ப ( கதிர்காமம் )
ராகம் - .; தாளம் -
தானதன தத்தத்த தானதன தத்தத்த
தானதன தத்தத்த .. தனதான
பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப
யோதர நெருக்குற்ற .. இடையாலே
பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப
பாணவிழி யிற்பொத்தி .. விடுமாதர்
காரணி குழற்கற்றை மேல்மகர மொப்பித்த
காதில்முக வட்டத்தி .. லதிமோக
காமுக னகப்பட்ட வாசையைம றப்பித்த
கால்களைம றக்கைக்கும் .. வருமோதான்
தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ
சாசிரனை மர்த்தித்த .. அரிமாயன்
சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி
கோணசயி லத்துக்ர .. கதிர்காம
வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு
மேகலை யிடைக்கொத்தி .. னிருதாளின்
வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
வேல்களில கப்பட்ட .. பெருமாளே.
பாடல் 645 மருவறா வெற்றி ( கதிர்காமம் )
ராகம் - .; தாளம் -
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த .. தனதான
மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
வலிசெயா நிற்கு .. மதனாலும்
மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கு .. மதனாலும்
இருகணால் முத்த முதிரயா மத்தி
னிரவினால் நித்த .. மெலியாதே
இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
மிவளைவாழ் விக்க .. வரவேணும்
கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
கலவிகூர் சித்ர .. மணிமார்பா
கனகமா ணிக்க வடிவனே மிக்க
கதிரகா மத்தி .. லுறைவோனே
முருகனே பத்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை .. மயில்வீரா
முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
முறியவேல் தொட்ட .. பெருமாளே.
பாடல் 646 மாதர்வச மாயுற் ( கதிர்காமம் )
ராகம் - குந்தல வராலி; தாளம் - அங்கதாளம் (7)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தானதன தானத் .. தனதான
மாதர்வச மாயுற் .. றுழல்வாரும்
மாதவமெ ணாமற் .. றிரிவாரும்
தீதகல வோதிப் .. பணியாரும்
தீநரக மீதிற் .. றிகழ்வாரே
நாதவொளி யேநற் .. குணசீலா
நாரியிரு வோரைப் .. புணர்வேலா
சோதிசிவ ஞானக் .. குமரேசா
தோமில் கதிர்காமப் .. பெருமாளே.
பாடல் 647 முதிரு மார ( கதிர்காமம் )
ராகம் - .; தாளம் -
தனன தான தான தத்த தனன தான தான தத்த
தனன தான தான தத்த .. தனதான
முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி
முனியு மார வார முற்ற .. கடலாலே
முடிவி லாத தோர் வடக்கி லெரியு மால மார்பி டத்து
முழுகி யேறி மேலெ றிக்கு .. நிலவாலே
வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும்
வினைவி டாத தாய ருக்கு .. மழியாதே
விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற
விகட மாதை நீ யணைக்க .. வரவேணும்
கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த
கடவு ளேக லாப சித்ர .. மயில்வீரா
கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி
ககன மேவு வாளொ ருத்தி .. மணவாளா
அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க
அரிய ஞான வாச கத்தை .. யருள்வோனே
அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி
அமரர் லோகம் வாழ வைத்த .. பெருமாளே.
பாடல் 648 வருபவர்க ளோலை ( கதிர்காமம் )
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த .. தனதான
வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
மடிபிடிய தாக நின்று .. தொடர்போது
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
வசைகளுட னேதொ டர்ந்து .. அடைவார்கள்
கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
கரியபுன லேசொ ரிந்து .. விடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
கடுகிவர வேணு மெந்தன் .. முனமேதான்
பரகிரியு லாவு செந்தி மனையினுட னேயி டும்பன்
பழநிதனி லேயி ருந்த .. குமரேசா
பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
பதமடியர் காண வந்த .. கதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
யணிவர் சடை யாளர் தந்த .. முருகோனே
அரகரசி வாய சம்புலத குருபரகு மார நம்பு
மடியர்தமை யாள வந்த .. பெருமாளே.
பாடல் 649 தொடுத்த வாளென ( கதிர்காமம் )
ராகம் - .; தாளம் -
தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன .. தனதான
தொடுத்த வாளென விழித்து மார்முலை
யசைத்து மேகலை மறைத்து மூடிகள்
துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் .. கொளுமாதர்
சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ
முடித்த வார்குழல் விரித்து மேவிதழ்
துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு .. வழியேபோய்ப்
படுத்த பாயலி லணைத்து மாமுலை
பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ்
கடித்து நாணம தழித்த பாவிகள் .. வலையாலே
பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை
வெளுத்து வாய்களு மலத்தி னாயென
பசித்து தாகமு மெடுத்தி டாவுயி .. ருழல்வேனோ
வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் .. மருகோனே
விதித்து ஞாலம தளித்த வேதனை
யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல்
விழித்து காமனை யெரித்த தாதையர் .. குருநாதா
அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி
நடுக்க மாமலை பிளக்க வேகவ
டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு .. மயில்வீரா
அறத்தில் வாழுமை சிறக்க வேயறு
முகத்தி னோடணி குறத்தி யானையொ
டருக்கொ ணாமலை தருக்கு லாவிய .. பெருமாளே.
பாடல் 650 விலைக்கு மேனியி ( திருக்கோணமலை )
ராகம் - .; தாளம் -
தனத்த தானன தனத்தான தானன
தனத்த தானன தனத்தான தானன
தனத்த தானன தனத்தான தானன .. தனதான
விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ .. மயலூறி
மிகுத்த காமிய னெனப்பாரு ளொரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு .. கொடியேனைக்
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு .. மொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுகு
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் .. தரவேணும்
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் .. தருவேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு .. முருகோனே
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் .. வருவோனே
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி .. பெருமாளே.
பாடல் 651 தார ணிக்கதி ( காசி )
ராகம் - சந்த்ர கெளன்ஸ்; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன .. தனதான
தார ணிக்கதி பாவி யாய்வெகு
சூது மெத்திய மூட னாய்மன
சாத னைக்கள வாணி யாயுறு .. மதிமோக
தாப மிக்குள வீண னாய்பொரு
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
தாமு யச்செயு மேது தேடிய .. நினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவிய
மோது தற்புணர் வான நேயர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇரு .. வினையேனைப்
பூசி மெய்ப்பத மான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய
போத கத்தினை யேயு மாறருள் .. புரிவாயே
வார ணத்தினை யேக ராவுமு
னேவ ளைத்திடு போதுமேவிய
மாய வற்கித மாக வீறிய .. மருகோனே
வாழு முப்புர வீற தானது
நீறெ ழப்புகை யாக வேசெய்த
மாம திப்பிறை வேணி யாரருள் .. புதல்வோனே
கார ணக்குறி யான நீதிய
ரான வர்க்குமு னாக வேநெறி
காவி யச்சிவ நூலை யோதிய .. கதிர்வேலா
கான கக்குற மாதை மேவிய
ஞான சொற்கும ராப ராபர
காசி யிற்பிர தாப மாயுறை .. பெருமாளே.
பாடல் 652 மங்கைக் கணவனும் ( காசி )
ராகம் - .; தாளம் -
தந்தத் தனதன தானன தானன
தந்தத் தனதன தானன தானன
தந்தத் தனதன தானன தானன .. தனதான
மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல்
பங்கப் படமிசை யேபனி போல்மதம்
வந்துட் பெருகிட வேவிதி யானவ .. னருள்மேவி
வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பல
பந்துப் பனைபழ மோடிள நீர்குட
மண்டிப் பலபல வாய்வினை கோலும .. வழியாலே
திங்கட் பதுசெல வேதலை கீழுற
வந்துப் புவிதனி லேமத லாயென
சிந்தைக் குழவியெ னாவனை தாதையு .. மருள்கூரச்
செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல
பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல
சிங்கிப் பெருவிழி யாரவ மாயதி .. லழிவேனோ
அங்கைத் தரியென வேயொரு பாலக
னின்பக் கிருபைய தாயொரு தூண்மிசை
அம்பற் கொடுவரி யாயிரண் யாசுர .. னுடல்பீறி
அண்டர்க் கருள்பெரு மான் முதி ராவணி
சங்குத் திகிரிக ரோனரி நாரவ
ரங்கத் திருவணை மேல்துயில் நாரணன் .. மருகோனே
கங்கைச் சடைமுடி யோனிட மேவிய
தங்கப் பவளொளி பால்மதி போல்முக
கங்குற் றரிகுழ லாள்பர மேசுரி .. யருள்பாலா
கந்துப் பரிமயில் வாகன மீதிரு
கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ்
கங்கைப் பதிநதி காசியில் மேவிய .. பெருமாளே.
பாடல் 653 வேழ முண்ட ( காசி )
ராகம் - சாரங்கா; தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தக-1
தான தந்தன தானன .. தனதான
வேழ முண்ட விளாகனி .. யதுபோல
மேனி கொண்டு வியாபக .. மயலூறி
நாளு மிண்டர்கள் போல்மிக .. அயர்வாகி
நானு நைந்து விடாதருள் .. புரிவாயே
மாள அன்றம ணீசர்கள் .. கழுவேற
வாதில் வென்ற சிகாமணி .. மயில்வீரா
காள கண்ட னுமாபதி .. தருபாலா
காசி கங்கையில் மேவிய .. பெருமாளே.
பாடல் 654 சிகர மருந்த ( மாயாபுரி )
ராகம் - பந்துவராளி; தாளம் - அங்கதாளம் (8 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தனன தனந்த தானன .. தனதான
சிகர மருந்த வாழ்வது .. சிவஞானம்
சிதறி யலைந்து போவது .. செயலாசை
மகர நெருங்க வீழ்வது .. மகமாய
மருவி நினைந்தி டாவருள் .. புரிவாயே
அகர நெருங்கி னாமய .. முறவாகி
அவச மொடுங்கை யாறொடு .. முனமேகிக்
ககன மிசைந்த சூரியர் .. புகமாயை
கருணை பொழிந்து மேவிய .. பெருமாளே.
பாடல் 655 அருவரை யெடுத்த ( வயிரவிவனம் )
ராகம் - ஸரஸ்வதி ; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனத்த தான தனதன தனத்த தான
தனதன தனத்த தான .. தனதான
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு
மரனிட மிருக்கு மாயி .. யருள்வோனே
அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
மணிமயில நடத்து மாசை .. மருகோனே
பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
னிருகர மிகுத்த பார .. முருகாநின்
பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
பணியவு மெனக்கு ஞானம் .. அருள்வாயே
சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி
சொலுவென வுரைத்த ஞான .. குருநாதா
சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
துணிபட அரக்கர் மாள .. விடும்வேலா
மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
வயல்புடை கிடக்கு நீல .. மலர்வாவி
வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
வயிரவி வனத்தில் மேவு .. பெருமாளே.
பாடல் 656 அடலரி மகவு ( வெள்ளிகரம் )
ராகம் - சாமா; தாளம் - அங்கதாளம் (15)
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதன தனன தனதன தனன
தய்ய தனத்த தந்த .. தனதானா
அடலரி மகவு விதிவழி யொழுகு
மைவ ருமொய்க்கு ரம்பை .. யுடனாளும்
அலைகட லுலகி லலம்வரு கலக
வைவர் தமக்கு டைந்து .. தடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
டெல்லை விடப்ர பஞ்ச .. மயல்தீர
எனதற நினது கழல்பெற மவுன
வெல்லை குறிப்ப தொன்று .. புகல்வாயே
வடமணி முலையு மழகிய முகமும்
வள்ளை யெனத்த யங்கு .. மிருகாதும்
மரகத வடிவு மடலிடை யெழுதி
வள்ளி புனத்தில் நின்ற .. மயில்வீரா
விடதர திகுணர் சசிதரர் நிமலர்
வெள்ளி மலைச்ச யம்பு .. குருநாதா
விகசித கமல பரிபுர முளரி
வெள்ளி கரத்த மர்ந்த .. பெருமாளே.
பாடல் 657 சிகரிக ளிடிய ( வெள்ளிகரம் )
ராகம் - மாயாமாளவகெளளை ; தாளம் - அங்கதாளம் (15)
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதன தனன தனதன தனன
தய்ய தனத்த தந்த .. தனதான
சிகரிக ளிடிய நடநவில் கலவி
செவ்வி மலர்க்க டம்பு .. சிறுவாள்வேல்
திருமுக சமுக சததள முளரி
திவ்ய கரத்தி ணங்கு .. பொருசேவல்
அகிலடி பறிய எறிதிரை யருவி
ஐவன வெற்பில் வஞ்சி .. கணவாஎன்
றகிலமு முணர மொழிதரு மொழியி
னல்லது பொற்பதங்கள் .. பெறலாமோ
நிகரிட அரிய சிவசுத பரம
நிர்வச னப்ர சங்க .. குருநாதா
நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
நெல்லி மரத்த மர்ந்த .. அபிராம
வெகுமுக ககன நதிமதி யிதழி
வில்வ முடித்த நம்பர் .. பெருவாழ்வே
விகசித கமல பரிமள கமல
வெள்ளி கரத்த மர்ந்த .. பெருமாளே.
பாடல் 658 குவலய மல்கு ( வெள்ளிகரம் )
ராகம் - .; தாளம் -
தனதன தய்ய தனதன தய்ய
தனதன தய்ய .. தனதான
குவலய மல்கு தவலிகள் முல்லை
குளிர்நகை சொல்லு .. முதுபாகு
குழையிள வள்ளை யிடைசிறு வல்லி
குயமுலை கொள்ளை .. விழைமேவிக்
கவலைசெய் வல்ல தவலரு முள்ள
கலவியில் தெள்ளு .. கவிமாலை
கடிமல ரைய அணிவன செய்ய
கழலிணை பைய .. அருள்வாயே
தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளு
தனியுழை புள்ளி .. யுடனாடித்
தருபுன வள்ளி மலைமற வள்ளி
தருதினை மெள்ள .. நுகர்வோனே
அவநெறி சொல்லு மவரவை கொல்லு
மழகிய வெள்ளி .. நகர்வாழ்வே
அடையலர் செல்வ மளறிடை செல்ல
அமர்செய வல்ல .. பெருமாளே.
பாடல் 659 பொருவன கள்ள ( வெள்ளிகரம் )
ராகம் - .; தாளம் -
தனதன தய்ய தனதன தய்ய
தனதன தய்ய .. தனதான
பொருவன கள்ள இருகயல் வள்ளை
புரிகுழை தள்ளி .. விளையாடும்
புளகித வல்லி யிளகித வல்லி
புரியிள முல்லை .. நகைமீதே
உருகிட வுள்ள விரகுடை யுள்ள
முலகுயி ருள்ள .. பொழுதேநின்
றுமைதரு செல்வ னெனமிகு கல்வி
யுணர்வொடு சொல்ல .. வுணராதோ
மருமலர் வள்ளி புரமுள வள்ளி
மலைமற வள்ளி .. மணவாளா
வளர்புவி யெல்லை யளவிடு தொல்லை
மரகத நல்ல .. மயில்வீரா
அருவரை விள்ள அயில்விடு மள்ள
அணிவயல் வெள்ளி .. நகர்வாழ்வே
அடையலர் செல்வ மளறிடை செல்ல
அமர்செய வல்ல .. பெருமாளே.
பாடல் 660 கள்ள முள்ள ( வெள்ளிகரம் )
ராகம் - .; தாளம் -
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய .. தனதான
கள்ள முள்ள வல்ல வல்லி
கையி லள்ளி .. பொருளீயக்
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு
கல்வி செல்வர் .. கிளைமாய
அள்ளல் துள்ளி ஐவர் செல்லு
மல்லல் சொல்ல .. முடியாதே
ஐய ரைய மெய்யர் மெய்ய
ஐய செய்ய .. கழல்தாராய்
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு
வள்ளி கிள்ளை .. மொழியாலே
மைய லெய்து மைய செய்யில்
வையில் வெள்வ .. ளைகளேற
மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின்
வெள்ள வெள்ளி .. நகர்வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல .. பெருமாளே.
பாடல் 661 தொய்யில் செய்யில் ( வெள்ளிகரம் )
ராகம் - ..; தாளம் -
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய .. தனதான
தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
தொய்யு மைய .. இடையாலுந்
துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல்
சொல்லு கள்ள .. விழியாலும்
மைய செவ்வி மவ்வல் முல்லை
மல்கு நல்ல .. குழலாலும்
மையல் கொள்ள எள்ளல் செய்யும்
வல்லி சொல்லை .. மகிழ்வேனோ
செய்ய துய்ய புள்ளி நவ்வி
செல்வி கல்வ .. ரையிலேனல்
தெய்வ வள்ளி மையல் கொள்ளு
செல்வ பிள்ளை .. முருகோனே
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய
வெள்ளை வெள்ளி .. நகர்வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல .. பெருமாளே.
பாடல் 662 இல்லையென நாணி ( வெள்ளிகரம் )
ராகம் - குமுதக்ரியா; தாளம் - ஆதி
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான .. தனதான
இல்லையென நாணி யுள்ளதின் மறாம
லெள்ளினள வேனும் .. பகிராரை
எவ்வமென நாடி யுய்வகையி லேனை
யெவ்வகையு நாமங் .. கவியாகச்
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
தொல்லைமுத லேதென் .. றுணரேனைத்
தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது
துய்யகழ லாளுந் .. திறமேதோ
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
மையவரை பாகம் .. படமோது
மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
வள்ளிமலை வாழுங் .. கொடிகோவே
வெல்லுமயி லேறு வல்லகும ரேச
வெள்ளிலுட னீபம் .. புனைவோனே
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
வெள்ளிநகர் மேவும் .. பெருமாளே.
பாடல் 663 பையரவு போலு ( வெள்ளிகரம் )
ராகம் - .; தாளம் -
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான .. தனதான
பையரவு போலு நொய்யஇடை மாதர்
பையவரு கோலந் .. தனைநாடிப்
பையலென வோடி மையல்மிகு மோக
பவ்வமிசை வீழுந் .. தனிநாயேன்
உய்யவொரு கால மையவுப தேச
முள்ளுருக நாடும் .. படிபேசி
உள்ளதுமி லாது மல்லதவி ரோத
உல்லசவி நோதந் .. தருவாயே
வையமுழு தாளு மையகும ரேச
வள்ளிபடர் கானம் .. புடைசூழும்
வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள
மையுததி யேழுங் .. கனல்மூள
வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ
வெல்லயில்வி நோதம் .. புரிவோனே
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
வெள்ளிநகர் மேவும் .. பெருமாளே.
பாடல் 664 வதன சரோருக ( வெள்ளிகரம் )
ராகம் - பிருந்தாவன ஸாரங்கா ; தாளம் - அங்கதாளம் (23 1/2)
தகதிமிதகதிமி-4, தகதிமி தகதிமி-4
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமிதகதிமிதகதிமிதக-7, தகிடதகதிமி-3 1/2
தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த
தானாதன தானந் தானன .. தந்ததான
வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
வாராய்பதி காதங் காதரை .. யொன்
முரும்
வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப
மற்றழிந்து மாலாய்மட லேறுங் காமுக .. எம்பிரானே
இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று
லீலாசல மாடுந் தூயவன் .. மைந்தநாளும்
இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து
நூறாயிர பேதஞ் சாதமொ .. ழிந்தவாதான்
கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த
கோபாலம கீபன் தேவிம .. கிழ்ந்துவாழக்
கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து
ஆகாய பாலம் பீறநி .. மிர்ந்துநீள
விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
நாராயண மாமன் சேயைம .. னிந்தகோவே
விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த
வேலாயுத மேவுந் தேவர்கள் .. தம்பிரானே.
பாடல் 665 நசையொடு தோலுந் ( திருவல்லம் )
ராகம் - .; தாளம் -
தனதன தானந் தனதன தானந்
தனதன தானந் .. தனதான
நசையொடு தோலுந் தசைதுறு நீரும்
நடுநடு வேயென் .. புறுகீலும்
நலமுறு வேயொன் றிடஇரு கால்நன்
றுறநடை யாருங் .. குடிலூடே
விசையுறு காலம் புலனெறி யேவெங்
கனலுயிர் வேழந் .. திரியாதே
விழுமடி யார்முன் பழுதற வேள்கந்
தனுமென வோதும் .. விறல்தாராய்
இசையுற வேயன் றசைவற வூதும்
எழிலரி வேழம் .. எனையாளென்
றிடர்கொடு மூலந் தொடர்வுட னோதும்
இடமிமை யாமுன் .. வருமாயன்
திசைமுக னாருந் திசைபுவி வானுந்
திரிதர வாழுஞ் .. சிவன்மூதூர்
தெரிவையர் தாம்வந் தருநட மாடுந்
திருவல மேவும் .. பெருமாளே.
பாடல் 666 அதிக ராய்ப்பொரு ( வேலூர் )
ராகம் - .; தாளம் -
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன .. தந்ததான
அதிக ராய்ப்பொரு ளீவார் நேர்படில்
ரசனை காட்டிக ளீயார் கூடினும்
அகல வோட்டிகள் மாயா ரூபிகள் .. நண்புபோலே
அசட ராக்கிகள் மார்மே லேபடு
முலைகள் காட்டிகள் கூசா தேவிழும்
அழகு காட்டிக ளாரோ டாகிலு .. மன்புபோலே
சதிர தாய்த்திரி வோயா வேசிகள்
கருணை நோக்கமி லாமா பாவிகள்
தருமு பேட்சைசெய் தோஷா தோஷிகள் .. நம்பொணாத
சரச வார்த்தையி னாலே வாதுசெய்
விரக மாக்கி விடர்மு தேவிகள்
தகைமை நீத்துன தாளே சேர்வதும் .. எந்தநாளோ
மதுரை நாட்டினி லேவாழ் வாகிய
அருகர் வாக்கினி லேசார் வாகிய
வழுதி மேற்றிரு நீறே பூசிநி ..மிர்ந்துகூனும்
மருவு மாற்றெதிர் வீறே டேறிட
அழகி போற்றிய மாறா லாகிய
மகிமையாற் சமண் வேரோ டேகெட .. வென்றகோவே
புதிய மாக்கனி வீழ்தே னூறல்கள்
பகலி ராத்திரி யோயா ஆலைகள்
புரள மேற்செல வூரூர் பாயஅ .. ணைந்துபோதும்
புகழி னாற்கடல் சூழ்பார் மீதினி
லளகை போற்பல வாழ்வால் வீறிய
புலவர் போற்றிய வேலூர் மேவிய .. தம்பிரானே.
பாடல் 667 சேலால மொன்று ( வேலூர் )
ராகம் - .; தாளம் -
தானான தந்த தந்த தானான தந்த தந்த
தானான தந்த தந்த .. தனதான
சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர்
சீர்வாழ்வு சிந்தை பொன்ற .. முதல்நாடித்
தேன்மேவு செஞ்சொ லின்சொல் தானோதி வந்த ணைந்து
தீராத துன்ப இன்ப .. முறுமாதர்
கோலாக லங்கள் கண்டு மாலாகி நின்ற னன்பு
கூராமல் மங்கி யங்க .. மழியாதே
கோள்கோடி பொன்ற வென்று நாடோ று நின்றி யங்கு
கூர்வாய்மை கொண்டி றைஞ்ச .. அருள்தாராய்
மாலாலு ழன்ற ணங்கை யார்மாம தன்க ரும்பின்
வாகோட ழிந்தொ டுங்க .. முதல்நாடி
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்த டர்ந்த
மாசூரர் குன்ற வென்றி .. மயிலேறீ
மேலாகு மொன்ற மைந்த மேனாடர் நின்றி ரங்க
வேலாலெ றிந்து குன்றை .. மலைவோனே
வேய்போல வுந்தி ரண்ட தோள்மாதர் வந்தி றைஞ்சு
வேலூர்வி ளங்க வந்த .. பெருமாளே.
பாடல் 668 ஒருவரைச் சிறுமனைச் ( விரிஞ்சிபுரம் )
ராகம் - .; தாளம் -
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் .. தனதான
ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத்
தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட்
டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட் .. டதனாலே
ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட்
டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட்
டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச் .. செயுமானார்
தருமயற் ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச்
சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத்
தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத் .. திரிவேனைச்
சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத்
தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனதுபொற்
சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திடஅருட் .. டருவாயே
குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத்
தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக்
கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத் .. திடும்வேலா
குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற்
சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக்
கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப் .. புணர்வோனே
கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப்
பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக்
கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத் .. திடுவோனே
கமுகினிற் குலையறக் கதலியிற் கனியுகக்
கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற்
கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப் .. பெருமாளே.
பாடல் 669 குலையமயி ரோதி ( விரிஞ்சிபுரம் )
ராகம் - .; தாளம் -
தனதனன தான தனதனன தான
தனதனன தான .. தனதானா
குலையமயி ரோதி குவியவிழி வீறு
குருகினிசை பாடி .. முகமீதே
குறுவியர்வு லாவ அமுதினினி தான
குதலையுமொ ராறு .. படவேதான்
பலவிதவி நோத முடனுபய பாத
பரிபுரமு மாட .. அணைமீதே
பரிவுதரு மாசை விடமனமொ வாத
பதகனையு மாள .. நினைவாயே
சிலைமலைய தான பரமர்தரு பால
சிகிபரிய தான .. குமரேசா
திருமதுரை மேவு மமணர்குல மான
திருடர்கழு வேற .. வருவோனே
கலின்வடிவ மான அகலிகைபெ ணான
கமலபத மாயன் .. மருகோனே
கழனிநெடு வாளை கமுகொடிய மோது
கரபுரியில் வீறு .. பெருமாளே.
பாடல் 670 நிகரில் பஞ்ச ( விரிஞ்சிபுரம் )
ராகம் - மனோலயம் ; தாளம் - அங்கதாளம் (5)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனன தந்த தானன தனன தந்த தானன
தனன தந்த தானன .. தனதான
நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
நெகிழ வந்து நேர்படு .. மவிரோதம்
நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
நிருப அங்கு மாரவெ .. ளெனவேதம்
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதக .. ரறியாத
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
சரண புண்டரீணகம .. தருள்வாயே
மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
மறுகி வெந்து வாய்விட .. நெடுவான
வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு
மடிய இந்தி ராதியர் .. குடியேறச்
சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
சிறுவ சந்த்ர சேகரர் .. பெருவாழ்வே
திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய
திருவி ரிஞ்சை மேவிய .. பெருமாளே.