ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் அருளிச் செய்தவை
3. திருவேகம்பமுடையார் திருவந்தாதி.
உ
கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
கட்டளைக்கலித்துறை.
மெய்த்தொண்டர்செல்லுநெறியறியேன்மிகநற்பணிசெய்
கைத்தொண்டர்தம்மிலுநற்றொண்டுவந்திலனுண்பதற்கே
பொய்த்தொண்டுபேசிப்புறம்புறமேயுன்னைப்போற்றுகின்ற
வித்தொண்டனென்பணிகொள்ளுதியோகச்சியேகம்பனே. 1
ஏகம்பனேயென்னையாள்பவனேயிமையோர்க்கிரங்கிப்
போகம்பன்னாளுங்கொடுக்கின்றநாயகபொங்குமைவாய்
நாகம்பொன்னாரமெனப்பொலிவுற்றுநன்னீறணியு
மாகம்பொன்மாமலையொப்பவனேயென்பனாதரித்தே. 2
தரித்தேன்மனத்துன்றிகழ்தருநாமந்தடம்பொழில்வாய்
வரித்தேன்முரல்கச்சியேகம்பனேயென்றன்வல்வினையை
யரித்தேனுனைப்பணியாதவரேழைமைகண்டவரைச்
சிரித்தேனுனக்கடியாரடிபூணத்தெளிந்தனனே. 3
தெளிதருகின்றதுசென்றென்மனநின்றிருவடிவ
மளிதருநின்னருட்கையமினியிலையந்திச்செக்கர்
ஒளிதருமேனியெம்மேகம்பனேயென்றுகந்தவர்தாள்
தளிதருதூளியென்றன்றலைமேல்வைத்ததன்மைபெற்றே. 4
பெற்றுகந்தேனென்றுமர்ச்சனைசெய்யப்பெருகுநின்சீர்
கற்றுகந்தேனென்கருத்தினிதாக்கச்சியேகம்பத்தின்
பற்றுகந்தேறுமுகந்தவனேபடநாகக்கச்சின்
சுற்றுகந்தேர்விடைமேல்வருவாய்நின்றுணையடியே. 5
அடிநின்றசூழலகோசரமாலுக்கயற்கலரின்
முடிநின்றசூண்முடிகாண்பரிதாயிற்றுக்கார்முகிலி
னிடிநின்றசூழ்குரலேறுடையேகம்பயாமெங்ஙனே
வடிநின்றசூலப்படையுடையாயைவணங்குவதே. 6
வணக்கந்தலைநின்றிடுவடிக்கேசெய்யுமையல்கொண்டோ
ரிணக்கன்றிமற்றோரிணக்கறிவோமல்லம்வல்லரவின்
குணக்குன்றவில்லிகுளிர்கச்சியேகம்பம்பாடினல்லாற்
கணக்கன்றுமற்றொருதேவரைப்பாடுங்கவிநலமே. 7
நலந்தரநானொன்றுசொல்லுவன்கேண்மினல்லீர்களன்பு
கலந்தரனார்கச்சியேகம்பங்கண்டுகனற்றிகிரி
சலந்தரனாகமொழிக்கவைத்தாய்தக்கன்வேள்வியெல்லா
நிரந்தரமாகச்செய்தாயென்றுபூசித்துநின்மின்களே. 8
மின்களென்றார்சடைகொண்டலென்றார்கண்டமேனிவண்ணம்
பொன்களென்றார்வெளிப்பாடுதம்பொன்னடிபூண்டுகொண்ட
வென்களென்றாலும்பிரிந்தறியார்கச்சியேகம்பத்தான்
றன்களென்றாருலகெல்லாநிலைபெற்றதன்மைகளே. 9
தன்மையிற்குன்றாத்தவத்தோரிமையவர்தாம்வணங்கும்
வன்மையிற்குன்றாமதிற்கச்சியேகம்பர்வண்கயிலைப்
பொன்மயிற்சாயலுஞ்சேயரிக்கண்ணும்புரிகுழலும்
மென்மையிற்சாயுமருங்குலுங்காதல்விளைத்தனவே. 10
தனமிட்டுமைதழுவத்தழும்புற்றவர்தம்மடியார்
மனம்விட்டுகலாமதிற்கச்சியேகம்பர்வான்கயிலைச்
சினம்விட்டகலாக்களிறுவினாவியோர்சேயனையார்
புனம்விட்டகலார்பகலாம்பொழுதுநம்பூங்கொடியே. 11
பூங்கொத்திருத்தழையார்பொழிற்கச்சியேகம்பர்பொற்பார்
கோங்கத்திருந்தகுடுமிக்கயிலையெம்பொன்னொருத்தி
பாங்கொத்திருந்தனையாரணங்கேபடர்கல்லருவி
யாங்கத்திருந்திழையாடிவந்தாற்கண்டடிவருத்தே. 12
வருத்தந்தருமெய்யுங்கையிற்றழையும்வன்மாவினவுங்
கருத்தந்தரிக்குநடக்கவின்றையகழனினையத்
திருத்தந்தருளுந்திகழ்கச்சியேகம்பர்சீர்க்கயிலைத்
[1] துருத்தந்திருப்பதன்றிப்புனங்காக்குந்தொழிலெமக்கே.
1. துரு=ஆராய்ச்சி, ஈறுகுறைந்த முதனிலைத் தொழிற்பெயர். 13
எம்மையுமெம்மைப்பணிகொள்ளுங்கம்பரெழிற்கயிலை
யும்மையுமானிடமிப்புனத்தேவிட்டுவந்தமைந்தர்
தம்மையுமானையுஞ்சிந்தையுநோக்கங்கவர்வவென்றோ
வம்மையுமம்மலர்க்கண்ணும்பெரியீரருளுமினே. 14
அருளைத்தருகம்பரம்பொற்கயிலையுளெம்மையரம்
பிருளைக்கரிமறிக்கும்மிவரையருறுத்தியெய்ய
வெருளக் கலைகணை தன்னொடும்போயினவில்லிமைக்கு
மருளைத்தருசொல்லியெங்கோவிலையுண்டிவ்வையகத்தே 15
வையார்மழுப்படையேகம்பரீங்கோய்மலைப்புனத்து
ளையார்வருகலையேனங்கரிதொடர்வேட்டையெல்லாம்
பொய்யானவையர்மனத்தவெம்பூங்கொடிகொங்கைபெறாப்
பையாரரவிடையாயிற்றுவந்து பரிமணத்தே. 16
பருமுத்துதிர்த்திடுஞ்சீர்மத்தயானைநுதல்பகுந்திட்
டுருமொத்ததிண்குரற்சீயந்திரிநெறியோங்குவைவாய்ப்
பொருமுத்தலைவேற்படைக்கம்பர்பூங்கயிலைப்புனத்துட்
டருமுத்தனநகைத்தன்னசையால்வெற்பசார்வரிதே. 17
அரிதன்றிருக்கண்ணிடநிரம்பாயிரம்போதணிய
வரிதன்றிருவடிக்கர்ச்சித்தகண்ணுக்கருளுகம்ப
ரரிதன்றிருக்கங்குலியாலழிந்தகயிலையல்லிங்
கரிதென்றிருப்பதெம்பால்வெற்பவெம்மையர்க்கஞ்சுதுமே. 18
அஞ்சரத்தான்பொடியாய்விழத்தீவிழித்தன்புசெய்வோர்
நெஞ்சரத்தாழ்வுகந்தோர்கச்சியேகம்பர்நீள்கயிலைக்
குஞ்சரத்தாழ்வரைவீழநுங்கொம்புய்யக்கும்ப [1] முழ
நெஞ்சரத்தாரனவோவல்லவோவிவ்வியன்முரசே.
[1] மூழ்கும்-என்றும் பாடம். 19
சேய்தந்தகைம்மையுமைகணவன்றிருவேகம்பத்தான்
றாய்தந்தையாயுயிர்காப்போன்கயிலைத்தயங்கிருள்வாய்
வேய்தந்ததோளிநம்மூசலொடும்விரைவேங்கைதன்னைப்
பாய்தந்துபூசலுண்டாங்கொண்டதோகைப்பகடுவந்தே. 20
வந்தும்மணம்பெறிற்பொன்னனையீர்மன்னுமேகம்பர்த
முந்துமருவிக்கயிலைமலையுயர்தேனிழிற்சித்
தந்துமலர்கொய்துந்தண்டினைமேயுங்கிளிகடிந்துஞ்
சிந்தும்புகர்மலைக்கச்சுமிச்சாரற்றிரிதவனே. 21
திரியப்புரமெய்தவேகம்பனார்திகழுங்கயிலைக்
கிரியக்குறவர்பருவத்திடுதரளம்வினையோம்
விரியச்சுருண்முதலானுமடைந்தோம்விரைவிரைந்து
பிரியக்கதிர்முத்தினீர்பெற்றதென்னங்குப்பேசுமினே. 22
பேசுகயாவருமைக்கணியாரென்றுபித்தரெங்கும்
பூசுகையார்திருநீற்றெழிலேகம்பர்பொற்கயிலைத்
தேசுகையார்சிலைவெற்பன்பிரியும்பரிசலரக்
கூசுகையாதுமில்லாக்குலவேங்கைப்பெயர் [1] நும்மையே.
[1] நுமக்கே-என்றும் பாடம். 23
பெயராநலத்தெழிலேகம்பனார்பிறைதோய்கயிலைப்
பெயராதிருக்கப்பெறுகிளிகாள்புனமேபிரிவின்
றுயரால்வருத்திமனமுமிங்கோடித்தொழுதுசென்ற
தயாராதுறையும்வெற்பற்கடியற்கும்விடைதமினே. 24
[2] நம்மைப்பிறவிக்கடல்கடப்பிப்பவர்நாம்வணங்கு
மும்மைத்திருக்கண்முகத்தெழிலேகம்பர்மொய்கயிலை
யம்மைக்கருங்கண்ணிதன்னொடின்பந்தருந்தண்புனமே
யெம்மைக்கவலைசெயச்சொல்லியோவல்லியெய்தியதே.
[2] தம்மைப் பிறவிக்கடல் கடப்பிப்பவர்தாம்-என்றும் பாடம். 25
இயங்குந்திரிபுரமெய்தவேகம்பரெழிற்கயிலைத்
தயங்குமலர்ப்பொழில்காடையலாடருவித்தடங்கா
முயங்குமணியறைகாண்மொழியீரொழியாதுநெஞ்ச
மயங்கும்பரிசுபொன்னாற்சென்றசூழல்வகுத்தெமக்கே. 26
வகுப்பாரிவர்போன்மணத்துக்குநாண்மணந்தன்னொடின்ப
மிகுப்பார்களாருயிரொன்றாமிருவரைவிள்ளக்கள்வாய்
நெகுப்பான்மலர்கொண்டுநின்றார்கிடக்கநிலாவுகம்பர்
தொகுப்பான்மணிசிந்தருவிக்கயிலையிச்சூழ்புனத்தே. 27
புனங்குழையாதென்றுமென்றினைகொய்ததும்போகலுற்ற
கனங்குழையாடற்பிரியநமக்குறுங்கையறவால்
மனங்குழையாவருங்கண்கனிபண்பலபாடுந்தொண்ட
ரிணங்குழையாத்தொழுமேகம்பரிக்கயிலாயத்துள்ளே. 28
உள்ளம்பெரியரல்லாச்சிறுமானிடருற்றசெல்வங்
கள்ளம்பெரியசிறுமனத்தார்க்கன்றிக்கங்கையென்னும்
வெள்ளம்பெரியசடைத்திருவேகம்பர்விண்ணரணந்
தள்ளம்பெரிகொண்டமைத்தாரடியவர்சார்வதன்றே. 29
அன்றும்பகையடர்க்கும்பரிமாவுமதவருவிக்
குன்றும்பதாதியுந்தேருங்குலவிக்குடைநிழற்கீழ்
நின்றும்பொலியினுங்கம்பர்நன்னீறுநுதற்கிலரேல்
என்றுமரசுமுரசும்பொலியாதிருநிலத்தே. 30
நிலத்திமையோரிற்றலையாப்பிறந்துமறையொடங்கம்
வலத்திமைப்போதும்பிரியாரெரிவளர்த்தாலும்வெற்பன்
குலத்துமையோர்பங்கர்கச்சியுளேகம்பங்கூடித்தொழு
நலத்தமையாதவர்வேட்டுவர்தம்மினடுப்படையே. 31
படையாலுயிர்கொன்றுதின்றுபசுக்களைப்போலச்செல்லு
நடையாலறிவின்றிநாண்சிறிதின்றிநகுங்குலத்திற்
கடையாப்பிறக்கினுங்கச்சியுளேகம்பத்தெங்களையா
ளுடையான்கழற்கன்பரேலவர்யாவர்க்குமுத்தமரே. 32
உத்துங்கயானையுரியார்விரலாலரக்கன்சென்னி
பத்துங்கையானவிருபதுஞ்சோர்தரவைத்திலமை
யொத்துங்கையாலவன்பாடக் [1] கயிலையுள்ளோர்நற்கைவா
ளெத்துங்கையானென்றுகந்தளித்தார்கச்சியேகம்பரே.
[1] கயிலைகைவாளொடு நாள் என்றும்பாடம். 33
அம்பரங்காலனனீர்நிலந்திங்களருக்கனணு
வம்பரங்கொள்வதோர்வேழத்துரியவன்றன்னுருவா
பெம்பரன்கச்சியுளேகம்பத்தானிடையாதடைவா
னம்பரன்றன்னடியாரறிவார்க்குநறுந்துணையே. 34
துணைத்தாமரையடியும்பவளத்திரணன்குறங்கும்
பணைத்தோளகலமுங்கண்டத்துநீலமுமண்டத்துமின்
பணைத்தாலனசடையுந்திருமுக்கணும்பெண்ணொர்பக்கத்
தணைத்தாரெழிற்கம்பரெங்கள்பிரானார்க்கழகியவே. 35
அழகறிவிற்பெரிதாகியவேகம்பரத்தர்கொற்றம்
பழகறிவிற்பெரியோர்தமைப்பற்றலர்பற்றுமன்பின்
குழகறிவேற்பினுளொன்றறியாரறியாமைதெய்வங்
கிழகெறியப்பட்டுலந்தாருலகிற்கிடந்தனரே. 36
கிடக்குமொருபாலிரைக்கின்றபாம்பொருபான்மதியந்
தொடக்குண்டிலங்குமலங்குந்திரைக்கங்கைசூடுங்கொன்றை
வடக்குண்டுகட்டத்தலைமாலைவாளான்மலைந்தவெம்போர்
கடக்கும்விடைத்திருவேகம்பர்கற்றைச்சடைமுடியே. 37
கற்றைப்பவளச்சடைவலம்பூக்கமழ்கொன்றையந்தார்
முற்றுற்றிலர்மதியின்கொழுந்தேகம்பர்மொய்குழலா
மற்றைத்திசையின்மணிப்பொற்கொழுந்தத்தரங்கழுநீர்
தெற்றிப்பொலிகின்றசூட்டழகாகித்திகழ்தருமே. 38
தருமருட்டன்மைவலப்பாற்கமலக்கணெற்றியின்மேற்
றிருமலர்க்கண்பிளவின்றிகழுந்தழல்செல்வக்கம்பர்
கருமலர்க்கண்ணிடப்பாலதுநீலங்கனிமதத்து
வருநுதற்பொட்டணங்குக்குயர்ந்தோங்குமலர்க்குழலே. 39
மலர்ந்தபடத்துச்சியைந்தினுஞ்செஞ்சுடர்மாமணிவிட்
டலர்ந்தமணிக்குண்டலம்வலக்காதினிலாடிவரும்
நலந்திருநீள்வயிரம்வெயிற்பாயுநகுமணிகள்
கலந்தசெம்பொன்மகரக்குழையேகம்பர்காதிடமே. 40
காதலைக்கும்வலத்தோள்பவளக்குன்றமங்குயர்ந்து
போதலைக்கும்பனிப்பொன்மலைநீற்றின்பொலியகலந்
தாதலைக்குங்குழல்சேர்பணைத்தோணறுஞ்சாந்தணிந்து
குதலைக்கும்முலைமார்பிடமேகம்பர்சுந்தரமே. 41
தரம்பொற்பழியுமுலகட்டியெய்த்துத்தரந்தளரா
வுரம்பொற்புடையதிருவயிறாம்வலமும்பர்மும்மைப்
புரம்பொற்பழித்தகம்பர்க்குத்தரத்திடுபூண்முலையு
நிரம்பப்பொறாதுதளரிளவஞ்சியுநேருடைத்தே. 42
உடைப்புலியாடையின்மேலுரக்கச்சுவீக்கிமுஞ்சி
வடத்தொருகோவணந்தோன்றுமரைவலமற்றையல்குற்
றொடக்குறுகாஞ்சித்தொடுத்தவரசிலைதூநுண்டுகி
லடற்பொலியேறுடையேகம்பமேயவடிகளுக்கே. 43
அடிவலப்பாலதுசெந்தாமரையொத்ததிர்கழல்சூழ்ந்
திடிகுரற்கூற்றினெருத்திறவைத்ததிளந்தளிரி
னடியிடப்பாலதுபஞ்சுறவஞ்சுஞ்சிலம்பணிந்த
வடிவுடைத்தார்கச்சியேகம்பமேயவரதருக்கே. 44
தருக்கவற்றான்மிக்கமுப்புரமெய்தயன்றன்றலையை
நெருக்கவற்றோடமழுவாள்விசைத்ததுநெற்களென்றும்
பருக்கவற்றாங்கச்சியேகம்பரத்தர்தம்பாம்புகளின்
றிருக்கயிற்றாலிட்டருளுங்கடகத்திருக்கரமே. 45
கரத்தமருகத்தோசைகடுத்தண்டமீபிளப்ப
வரத்தத்தபாதநெரித்திட்டவனிதலநெரியத்
தரத்தத்திசைகளுக்கப்புரம்போர்ப்பச்ச்சடைவிரித்து
வரத்தைத்தருகம்பராடுவரெல்லியுமாநடமே. 46
நடனம்பிரானுகந்துய்யக்கொண்டானென்றுநன்மறையோ
ருடன்வந்துமூவாயிரவரிறைஞ்சிநிறைந்தவன்பின்
கடனன்றிமற்றறியாத்தில்லையம்பலங்காளத்தியா
மிடமெம்பிறான்கச்சியேகம்பமேயாற்கினியனவே. 47
இனியவரின்னாரவரையொப்பார்பிறரென்னவொன்ணாத்
தனியவர்தையலுடனாமுருவரறம்பணித்த
முனியவரென்றுமுகந்தமுக்கண்ணவர்தண்டியன்புக்
கினியவர்காய்மழுவாட்படையார்கச்சியேகம்பரே. 48
பரவித்தனைநினையக்கச்சியேகம்பர்பண்ணுமையல்
வரவித்தனையுள்ளதெங்கரிந்தேன்முன்னவர்மகனார்
புரவித்தனையடிக்கக்கொடிதாய்விடியாவிரவி
லரவித்தனையுங்கொண்டார்மடவார்முன்றிலாட்டிடவே. 49
இடவஞ்சுருக்கெனப்பாயுமஞ்சென்னிநகுதலைகண்
டிடவஞ்சுவர்மடவாரிரிகின்றனரேகம்பத்தீர்
படமஞ்சுவாயதுநாகமிரைக்குமதனுக்குமுற்
படவஞ்சுவரெங்கனேபலிவந்திடும்பாங்குகனே. 50
பாங்குடைக்கோட்புலியின்னதள்கொண்டிர்நும்பாரிடங்க
டாங்குடைகொள்ளப்பலிகொள்ளவந்தீர்தடங்கமலம்
பூங்குடைகொள்ளப்புனற்கச்சியேகம்பங்கோயில்கொண்டீ
ரீங்கிடைகொள்ளக்கலைகொள்ளவந் தீரிடைக்குமின்றே. 51
இடைக்குமின்றோர்க்குமிணைமுலையாய்முதியார்கடஞ்சொற்
கடைக்கணன்றாங்கச்சியேகம்பரையங்கொளக்கடவும்
விடைக்குமுன்றோத்தநில்லேநின்றினியிந்தமொய்குழலார்
கிடைக்குமுன்றோத்த [1] நஞ்சங்கிதுவோதன்கிறித்துவமே.
[1] நெஞ்சங்கிதுவோ - என்றும் பாடம். 52
கிறிபலபேசிக்கதிரானடந்துவிடங்குபடக்
குறிபலபாடிக்குளிர்கச்சியேகம்பரையங்கொள்ள
நெறிபலவார்குழலார்மெலிவுற்றநெடுந்தெருவிற்
செறிபலவெள்வளைபோயினதாயர்கடேடுவரே. 53
தேடுற்றிலகள்ளநோக்கந்தெரிந்திலசொற்கண்முடி
கூடுற்றிலகுழல்கொங்கைபொடித்திலகூறுமிவண்
மாடுற்றிலமணியின்மடவல்குலுமற்றிவள்பா
னாடுற்றிலவெழிலேகம்பனார்க்குள்ளநல்கிடத்தே. 54
நல்கும்புகழ்க்கடவூர்நன்மறையவனுய்யநண்ணிக்
கொல்கின்றகூற்றைக்குமைத்தவெங்கூற்றங்குளிர்திரைகண்
மல்குந்திருமறைக்காட்டமிர்தென்றுமலைமகடான்
புல்கும்பொழிற்கச்சியேகம்பமேவியபொன்மலையே. 55
மலையத்தகத்தியனர்ச்சிக்கமன்னிவடகயிலை
நிலையத்தமரர்தொழவிருந்தானெடுமேருவென்னுஞ்
சிலையைத்தன்பைம்பொன்மதிற்றிருவேகம்பத்தான்றிகழ்நீ
ரலையத்தடம்பொன்னிசூழ்திருவையாற்றருமணியே. 56
மணியாரருவித்தடவிமயங்குடக்கொல்லிகல்லின்
றிணியாரருவியினார்த்தசிராமலையைவனங்க
ளணியாரருவிகவர்கிளியொப்புமின்சாரல்லிந்தம்
பணிவாரருவினைதீர்க்குமேகமபர்பருப்பதமே. 57
பருப்பதங்கார்தவழ்மந்தரமிந்திரநீலம்வெள்ளை
மருப்பதங்கார்கருங்குன்றியங்கும்பரங்குன்றம்வில்லார்
நெருப்பதங்காகுதிநாறுமயேந்திரமென்றிவற்றி
லிருப்பதங்காவுகந்தான்கச்சியேகம்பத்தெம்மிறையே. 58
திருவேகம்பமுடையார்
இறைத்தார்புரமெய்தவில்லிமைநல்லிமவான்மகட்கு
மறைத்தார்கருங்குன்றம்வெண்குன்றஞ்செங்குன்றமன்னற்குன்ற
நிறைத்தார்நெடுங்குன்றநீள்கழுக்குன்றமென்றீவினைகள்
குறைத்தார்முதுகுன்றமேகம்பர்குன்றென்றுகூறுமினே. 59
கூறுமின்றொண்டர்குற்றாலநெய்த்தானந்துருத்தியம்பேர்
தேறுமின்வேள்விக்குடிதிருத்தோணிபுரம்பழன
மாறுமின்போற்சடைவைத்தவனாரூரிடைமருதென்
றேறுமினீரெம்பிரான்கச்சியேகம்பமுன்னினைந்தே. 60
நினைவார்க்கருளும்பிரான்றிருச்சோற்றுத்துறைநியமம்
புனைவார்சடையோன்புகலூர்புறம்பியம்பூவணநீர்
பனைவார்பொழிற்றிருவெண்காடுபாச்சிலதிகையென்று
நினைவார்தருநெஞ்சினீர்கச்சியேகம்பநண்ணுமினே. 61
நண்ணிப்பரவுந்திருவாவடுதுறைநல்லநல்லூர்
மண்ணிற்பொலிகடம்பூர்கடம்பந்துறைமன்னுபுன்கூ
ரெண்ணற்கரியபராய்த்துறையோர்கொளெதிற்கொள்பாடிக்
கண்ணிப்பிறைச்சடையோன்கச்சியேகம்பங்காண்மின்சென்றே. 62
சென்றேறிவிண்ணுறுமண்ணாமலைதிகழ்வல்லமென்பூ
வின்றேறல்பாய்திருமாற்பேறுபாசூரெழிலழுந்தூர்
வன்றேரவன்றிருவிற்பெறும்பேறுமதிலொற்றியூர்
நின்றேர்தருகச்சியேகம்பமேயார்நிலாவியவே. 63
நிலாவுபுகழ்திருவோத்தூர்திருவாமாத்தூர்நிறைநீர்
சுலாவுசடையோன்புலிவலம்வில்வலங்கொச்சைகொண்டர்
குலாவுந்திருப்பனங்காடுநன்மாகறல்கூற்றம்வந்தா
லலாயென்றடியார்க்கருள்புரியேகம்பராலயமே. 64
ஆலையங்கார்கருகாவைகச்சூர்திருக்காரிகரை
வேலையங்கேறுதிருவான்மியூர்திருவூறன்மிக்க
சோலையங்கார்திருப்போந்தைமுக்கோணந்தொடர்கடுக்கை
மாலையன்வாழ்திருவாலங்காடேகம்பம்வாழ்த்துமினே. 65
வாழப்பெரிதெமக்கின்னருள்செய்யுமலர்க்கழலோர்
தாழைச்சடைத்திருவேகம்பர்தம்மைத்தொழாதவர்போய்
வாழ்ப்பரற்சுரமாற்றாதளிரடிபூங்குழலெம்
ஏழைக்கிடையிறுக்குங்குயபாரமியக்குறினே. 66
உறுகின்றவெவ்வழலக்கடமிக்கொடிக்குன்பின்வரப்
பெறுகின்றவண்மையினாலையபோருளேகம்பனார்
துறுகின்றமென்மலர்த்தண்பொழிற்கச்சியைச்சூழ்ந்திளையோர்
குறுகின்றபூங்குவளைக்குறுந்தண்பணையென்றுகொளே. 67
கொள்ளுங்கடுங்கதிரிற்கள்ளித்தீத்சிலவேயுலர்ந்து
விள்ளும்வெடிபடும்பாலையென்பாவைவிடலைபின்னே
தெள்ளும்புனற்கச்சியுட்டிருவேகம்பர்சேவடியை
யுள்ளுமதுமறந்தாரெனப்போவதுரைப்பரிதே. 68
பரிப்பருந்திண்மைப்படையதுகானரெனிற்சிறகு
விரிப்பருந்துக்கிரையாக்கும்வெய்யேனஞ்சலஞ்சடைமேற்
றரிப்பருந்திண்கங்கையார்திருவேகம்பமன்னபொன்னே
வரிப்பருந்திண்சிலையேயுமராயின்மறைகுவனே. 69
வனவரித்திண்புலியின்னதளேகம்பமன்னருளே
யெனவருபொன்னணங்கென்னணங்கிற்கெனெழிற்கழங்குத்
தனவரிப்பந்துங்கொடுத்தெனைப்புல்லியுமிற்பிரிந்தே
யின்வரிக்கல்லதர்செல்வதெங்கேயொல்குமேழைநெஞ்சே. 70
நெஞ்சார்தரவின்பஞ்செய்கழலேகம்பர்கச்சியன்னாள்
பஞ்சாரடிவைத்தபாங்கிவையாங்கவட்பெற்றெடுத்த
வெஞ்சார்வொழியத்தன்பின்செலமுன்செல்வெடுவெடென்ற
வஞ்சாவடுதிறற்காளைதன்போக்கிவையந்தத்திலே. 71
இலவவெங்கானுனையல்லாற்றொழுஞ்சரணேகம்பனார்
நிலவுஞ்சுடரொளிவெய்யவனேதண்மலர்மிதித்துச்
செலவும்பருக்கைகுளிரத்தளிரடிசெல்சுரத்துன்
னுலவுங்கதிர்தணிவித்தருள்செய்யுன்னுறுதுணைக்கே. 72
துணையொத்தகோவையும்போலெழிற்பேதையுந்தோன்றலுமுன்
னிணையொத்தகொங்கையொடேயொத்தகாதலொடேகினரே
யணையத்தரேறொத்தகாளையைக்கண்டனமற்றவரெற்
பிணையொத்தனோக்குடைப்பெண்ணிவடன்னொடும்பேசுமினே. 73
மின்னலிக்கும்வணக்கத்திடையாளையுமீளியையு
நென்னலிப்பாக்கைவந்தெய்தினிரேலெம்மனையிற்கண்டீர்
பின்னரிபோக்கருங்குன்றுகடந்தவரின்றுகம்பர்
மன்னரிதேர்ந்துதொழுங்கச்சிநாட்டிடைவைகுவரே. 74
உவரச்சொல்வேடுடைக்காடுகந்தாடியவேகம்பனார்
அவரக்கன்போனவிமானத்தையாயிரமுண்மைசுற்றுந்
துவரச்சிகரச்சிவாலயஞ்சூலந்துலங்குவிண்மேற்
கவரக்கொடிதிளைக்குங்கச்சிகாணினுங்கார்மயிலே. 758
கார்மிக்ககண்டத்தெழிற்றிருவேகம்பர்கச்சியின்வா
யேர்மிக்கசேற்றெழினென்னடுவோரொலிபொன்மலைபோற்
போர்மிக்கசென்னெல்குவிப்போரொலிகருப்பாலையொலி
நீர்மிக்கமாக்கடலின்னொலியேயொக்குநேரிழையே. 76
நேர்த்தமையாமைவிறற்கொடுவேடர்நெடுஞ்சுரத்தைப்
பார்த்தமையாலிமைதீர்ந்தகண்பொன்னேபகட்டுரிவை
போர்த்தமையாலுமைநோக்கருங்கம்பர்கச்சிப்பொழிலுட்
சேர்த்தமையாலிமைப்போதணிசீதஞ்சிறந்தனவே. 77
சிறைவண்டுபாடுங்கமலக்கிடங்கிவைசெம்பழுக்காய்
நிறைகொண்டபாளைக்கமுகின்பொழிலவைதீங்கனியின்
பொறைகொண்டவாழைப்பொதும்புவைபுன்சடையேகம்பனார்
நறைகொண்டபூங்கச்சிநாடெங்குமிவ்வண்ணநன்னுதலே. 78
நன்னுதலார்கருங்கண்ணுஞ்செவ்வாயுமிவ்வாறெனப்போய்
மன்னிதழார்திருநீலமுமாம்பலும்பூப்பவள்ளை
யென்னவெலாமொப்புக்காதென்றுவீறிடுமேகம்பனார்
பொன்னுதலார்விழியார்கச்சிநாட்டுளிப்பொய்கையுமே. 79
உள்வார்குளிரநெருங்கிக்கடுங்கிடங்கிட்டநன்னீர்
வள்வாளைகளொடுசெங்கயன்மேய்கின்றவெங்களையாட்
கொள்வார்பிறவிகொடாதவேகம்பர்குளிர்குவளை
கள்வார்தருகச்சிநாட்டெழிலேரிகளப்பரப்பே. 80
பரப்பார்விசும்பிற்படிந்தகருமுகிலன்னநன்னீர்
தரப்பாசிகண்மிகுபண்பொடுசேம்படர்தண்பணைவாய்ச்
சுரப்பாரெருமைமலர்தின்னத்துன்னுகராவொருத்தல்
பொரப்பார்பொலிநுதலாய்செல்வக்கம்பர்தம்பூங்கச்சியே. 81
கச்சார்முலைமலைமங்கைகண்ணாரவெண்ணான் கறமும்
வைச்சார்மகிழ்திருவேகம்பர்தேவிமகிழவிண்ணோர்
விச்சாதரர்தொழுகின்றவிமானமுந்தன்மமறா
வச்சாலையும்பரப்பாங்கணிமாடங்களோங்கினவே. 82
ஒங்கினவூரகமுள்ளகமும்பருருகிடமாம்
பாங்கினினின்றதரியுறைபாடகந்தெவ்விரிய
வாங்கினவாட்கண்ணிமற்றவர்மைத்துனிவான்கவிக
டாங்கினநாட்டிருந்தாளதுதன்மனையாயிழையே. 83
இழையாரரவணியேகம்பர்நெற்றிவிழியின்வந்த
பிழையாவருணம்பிராட்டியதின்னபிறங்கலுன்னு
நுழையாவருதிரிசூலத்தணோக்கரும்பொன்கடுக்கைத்
தழையார்பொழிலுதுபொன்னேநமக்குத்தளர்வில்லையே. 84
தளராமிகுவெள்ளங்கண்டுமையோடித்தமைத்தழுவக்
கிளையார்வளைக்கைவடுப்படுமீங்கோர்கிறிபடுத்தார்
வளமாப்பொழிற்றிருவேகம்பமற்றிதுவந்திறைஞ்சி
யுளராவதுபடைத்தோமடவாயிவ்வுலகத்துளே. 85
உலவியமின்வடம்வீசியுருமதிர்வுண்முழங்கி
வலவியமாமதம்பாய்முகில்யானைகள்வானில்வந்தாற்
சுலவியவார்குழல்பின்னரென்பாரிரெனநினைந்து
நிலவியவேகம்பர்கோயிற்கொடியன்னநீர்மையனே. 86
நீரென்னிலும்மழுங்கண்முகில்காணெஞ்சமஞ்சலையென்
றாரென்னிலுந்தமராயுரைப்பாரமராபதிக்கு
நேரென்னிலுந்தகுங்கச்சியுளேகம்பர்நீண்மதில்வாய்ச்
சேரென்னிலுந்தங்கும்வாட்கண்ணிதானன்பர்தேர்வரவே. 87
வரங்கொண்டிமையோர்நலங்கொள்ளுமேகம்பர்கச்சியன்னாய்
பரங்கொங்கைதூவன்மினீர்முத்தமன்பர்தந்தேரின்முன்னே
தரங்கொண்டுபூக்கொண்டுகொன்றைபொன்னாகத்தண்காந்தள்கொத்தின்
கரங்கொண்டுபொற்சுண்ணமேந்தவும்போந்தனகார்முகிலே. 88
கார்முகமாரவண்கைக்கொண்டகம்பர்கழற்றொழுது
போர்முகமாப்பகைவெல்லச்சென்றார்நினையார்புணரி
நீர்முகமாகவிருண்டுசுரந்ததுநேரிழைநா
மார்முகமாகவினைக்கட[1]னீந்துதும்வெய்துயிர்ப்பே. 89
உயிராயினவன்பர்தேர்வரக்கேட்டுமுன்வாட்டமுற்ற
பயிரார்புயல்பெற்றதென்னநம்பல்வளைபான்மைகளாந்
தயிரார்பானெய்யொடுமாடியவேகம்பர்தம்மருள்போற்
கயிராவளையழுந்தக்கச்சிறுத்தனகார்மயிலே. 90
கார்விடைவண்ணத்தனன்றேழ்தழுவினுமின்றுதனிப்
போர்விடைப்பெற்றெதிர்மாண்டாரெனவண்டர்போதவிட்டார்
தார்விடையேகம்பர்கச்சிப்புறவிடைத்தம்பொனன்பூண்
மார்விடைவைகல்பெறுவார்தழுவமழவிடையே. 91
விடைபாய்கொடுமையெண்ணாதுமேலாங்கன்னிவேற்கருங்கட்
கடைபாய்மனத்திளங்காளையர்புல்கொலிகம்பர்கச்சி
மடைபாய்வயலிளமுல்லையின்மான்கன்றொடான்கன்றினங்
கடைபாய்தொறும்பதிமன்றிற்கடல்போற்கலந்தெழுமே. 92
எழுமலர்த்தண்பொழிலேகம்பர்கச்சியிருங்கடல்வாய்க்
கொழுமணப்புன்னைத்துணர்மணற்குன்றிற்பரதர்கொம்பே
செழுமலர்ச்சேலல்லவாளல்லவேலல்லநீலமல்ல
முழுமலர்க்கூரம்பினோரிரண்டாலுமுகத்தெனவே. 93
முகம்பாகம்பண்டமும்பாகமென்றோதியமூதுரையை
யுகம்பார்த்திரேலென்னலமுயரேகம்பர்கச்சிமுன்னீ
ரகம்பாகவார்லினளவில்லையென்னின்பவளச்செவ்வாய்
நகம்பாற்பொழிற்பெற்றநாமுற்றவர்கொள்கநன்மயலே.
[1]நீந்துமயர்வுயிர்ப்பே - எனவும் பாடம். 94
மயக்கத்தநல்லிருட்கொல்லுஞ்சுறவொடெறிமகர
மியக்கத்திடுசுழியோதங்கழிகிளரக்கழித்தார்
துயக்கத்தவர்க்கருளாக்கம்பர்கச்சிக்கடலபொன்னூன்
முயக்கத்தகல்வுபொறாள்கொண்கநீர்வருமூர்க்கஞ்சுமே. 95
மேயிரைவைகக்குருகுணராமதுவுண்டுபுன்னை
மீயிரைவண்டோதமர்புகடியவிரிகடல்வாய்ப்
பாயிரைநாகங்கொண்டோன்றொழுங்கம்பர்கச்சிப்பவ்வநீர்
தூயிரைகானன்மற்றாரறிவார்நந்துறைவர்பொய்யே. 96
பொய்வருநெஞ்சினர்வஞ்சனையாரையும்போகவிடா
மெய்வரும்பேரருளேகம்பர்கச்சிவிரையினவாய்க்
கைவரும்புள்ளொடுசங்கினமார்ப்பநஞ்சேர்ப்பர்திண்டே
ரவ்வருதாமங்களினம்வந்தார்ப்பவணைகின்றதே. 97
இன்றுசெய்வோமிதனிற்றிருவேகம்பர்க்கெத்தனையு
நன்றுசெய்வோம்பணிநாளையென்றுள்ளிநெஞ்சேயுடலிற்
சென்றுசெயாரைவிடுந்துணைநாளும்விடாதடிமை
நின்றுசெய்வாரவர்தங்களினீணெறிகாட்டுவரே. 98
காட்டிவைத்தார்தம்மையரங்கடிப்பூப்பெய்யக்காதல்வெள்ள
மீட்டிவைத்தார்தொழுமேகம்பரேதுமிலாதவெம்மைப்
பூட்டிவைத்தார்தமக்கன்பதுபெற்றுப்பதிற்றுப்பத்துப்
பாட்டிவைத்தார்பரவித்தொழுதாமவர்பாதங்களே. 99
பாதம்பரவியோர்பித்துப்பிதற்றிலும்பல்பணியும்
மேதம்புகுதாவகையருளேகம்பரேத்தெனவே
போதம்பொருளாற்பொலியாதபுன்சொற்பனுவல்களும்
வேதம்பொலியும்பொருளாமெனக்கொள்வர்மெய்த்தொண்டரே. 100
திருச்சிற்றம்பலம்
திருவேகம்பமுடையார் திருவந்தாதி முற்றிற்று