MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் அருளிச் செய்தவை

    5. திருப்பாடற்றிரட்டு
    திருவெண்காட்டுத் திருவிசைப்பா.

    பூதமுங்கரணம் பொறிகளைம்புலனும் பொருந்திய குணங்க
    ளோர்மூன்றும், நாதமுங்கடந்தவெளியிலேநீயுநானுமாய்நிற்குநாளு
    ளதோ, வாதமுஞ்சமயபேதமுங்கடந்த மனோலய வின்பசாகரனே,
    ஏதுமொன்றறியேன்யாதுநின்செயலே யிறைவனேயேகநாயகனே. 1
    யாவரேயிருந்தும் யாவரேவாழ்ந்தும் யாவரேயெமக்குறவாயும்,
    தேவரீரல்லாற் றிசைமுகமெனக்குத் திருவுளமறிய வேறுளதோ,
    பாவலானொருவன் செந்தமிழ்க்கிரங்கிப் பரவையாருடலைமாற்ற,
    ஏவலாளாகியிரவெலாமுழன்றவிறைவனே யேகநாயகனே. 2
    உண்டதேயுண்டு முடுத்ததேயுடுத்து மடுத்தடுத்துரைத்த யுரைத்தும்,
    கண்டதேகண்டுங் கேட்டதேகேட்டுங் கழிந்தனக நாளெல்லாம்,
    விண்டதா மரைமேலன்னம் வீற்றிருக்கும்விழ வீதிவெண்காடா,
    அண்டரேபோற்ற வம்பலத்தாடுமையனேயு மாறருளே. 3
    வேறு.
    மத்தளையிருண்டானுமலர்மிசைமன்னினானும்
    நித்தமுந்தேடிக்காணாநிமலனே யமலமூர்த்தி
    செய்த்தளைக்கயல்பாய்நாங்கூர்ச்சேந்தனைவேந்தனிட்ட
    கைத்தளைநீக்கியென்முன் காட்டுவெண்காட்டுளானே.

    திருச்செங்காடு.

    நெருப்பானமேனியர்செங்காட்டிலாத்திநிழலருகே
    யிருப்பார்திருவுளமெப்படி யோவின்னமென்னையன்னைக்
    கருப்பாசயக்குழிக்கேதள்ளுமோகண்ணன்காணரிய
    திருப்பாதமேதருமோதெரியாதுசிவன்செயலே.

    திருவொற்றியூர்.

    ஐயுந்தொடர்ந்துவிழியுஞ்செருகியறிவழிந்து
    மெய்யும்பொய்யாகிவிடுகின்றபோதொன்று வேண்டுவன்யான்
    செய்யுந்திருவொற்றியூருடையீர்திருநீறுமிட்டுக்
    கையுந்தொழப்பண்ணியைந்தெழுத்தோதவுங்கற்பியுமே.

    சுடப்படுவாரறியார்புரமூன்றையுஞ்சுட்டபிரான்
    றிடப்படுமாமதிற்றென்னொற்றியூரன்றெருப்பரப்பி
    னடப்பவர்பொற்பதநந்தலைமேற்படநன்குருண்டு
    கிடப்பதுகாண்மனமேவிதியேட்டைக்கிழிப்பதுவே.

    திருவிடைமருதூர்.

    காடேதிரிந்தென்னகாற்றேபுசித்தென்னகந்தைசுற்றி
    யோடேயெடுத்தென்னவுள்ளன்பிலாதவரோங்குவிண்ணோர்
    நாடேயிடைமருதீசர்க்குமெய்யன்பர்நாரியர்பால்
    வீடேயிருப்பினுமெய்ஞ்ஞானவீட்டின்பமேவுவரே. 1
    தாயும்பகைகொண்டபெண்டீர்பெரும்பகைதன்னுடைய
    சேயும்பகையுறவோரும்பகையிச்செகமும்பகை
    யாயும்பொழுதிலருஞ்செல்வநீங்கிலிங்காதலினாற்
    றோயுநெஞ்சேமருதீசர்பொற்பாதஞ்சுதந்திரமே. 2

    திருக்கழுக்குன்றம்.

    காடோசெடி யோகடற்புறமோகனமேமிகுந்த
    நாடோநகரோநகர்நடுவோநலமேமிகுந்த
    வீடோபுறந்திண்ணையோதமியேனுடல்வீழுமிட
    நீடோய்கழுக்குன்றிலீசாவுயிர்த்துணைநின்பதமே.

    திருக்காளத்தி.

    பத்தும்புகுந்துபிறந்துவளர்ந்துபட்டாடைசுற்றி
    முத்தும்பவளமும்பூண்டோடியாடிமுடிந்தபின்பு
    செத்துக்கிடக்கும்பிணத்தருகேயினிச்சாம்பிணங்கள்
    நத்துங்கணக்கென்னகாண்கயிலாபுரிக்காளத்தியே. 1
    பொன்னாற்பிரயோசனம் பொன்படைத்தாற்குண்டு பொன்ப
    டைத்தோன், றன்னாற்பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டத்
    தன்மையைப்போ, லுன்னாற்பிரயோசனம் வேணதெல்லாமுண்டு
    னைப்பணியு, மெண்ணாற்பிரயோசனமேதுண்டு காளத்தியீசுரனே. 2
    வாளான்மகவரிந்தூட்டவல்லேநல்லன்மாதுசொன்ன
    சூளாலிளமைதுறக்கவல்லேனல்லன்றொண்டுசெய்து
    நாளாறிற்கண்ணிடந்தப்பவல்லேனல்லனானினிச்சென்
    றாளாவதெப்படியோதிருக்காளத்தியப்பருக்கே. 3
    முப்போதுமன்னம்புசிக்கவுந்தூங்கவுமோகத்தினாற்
    செப்போதிளமுலையாருடன்சேரவுஞ்சீவன்விடு
    மப்போதுகண்கலக்கப்படவும்மமைத்தாயையனே
    யெப்போதுகாணவல்லேன்றிருக்காளத்தியீசுரனே. 4
    இரைக்கேயிரவும்பகலுந்திரிந்திங்கிளைத்துமின்னா
    ரரைக்கேயவலக்குழியருகேயசும்பார்ந்தொழுகும்
    புரைக்கேயுழலுந்தமியேனையாண்டருள்பொன்முகலிக்
    கரைக்கேகல்லாலநிழற்கீழமர்ந்தருள்காளத்தியே. 5
    நாறுங்குருதிச்சலதாரைதோற்புரைநாடொறுஞ்சீ
    யூறுமலக்குழிகாமத்துவாரமொளித்திடும்புண்
    டேறுந்தசைப்பிளப்பந்தரங்கத்துளசிற்றின்பம்விட்
    டேறும்பதந்தருவாய்திருக்காளத்தியீசுரனே. 6

    கைலாயம்.

    கான்சாயும்வெள்ளிமலைக்கரசேநின்கழனம்பினே
    னூன்சாயுஞ்சென்மமொழித்திடுவாய்கரவூரனுக்காய்
    மான்சாயச்செங்கைமழுவலஞ்சாயவனைந்தகொன்றைத்
    தேன்சாயநல்லதிருமேனிசாய்த்தசிவக்கொழுந்தே. 1
    இல்லந்துறந்துபசிவந்தபோதங்கிரந்துதின்று
    பல்லுங்கறையற்றுவெள்வாயுமாயொன்றிற்பற்றுமின்றிச்
    சொல்லும்பொருளுமிழந்துசுகானந்தத்தூக்கத்திலே
    யல்லும்பகலுமிருப்பதென்றோகயிலாயத்தனே. 2
    சினந்தனையற்றுப்பிரியமுந்தானற்றுச்செய்கையற்று
    நினைந்ததுமற்றுநினையாமையுமற்றுநிர்ச்சிந்தனாய்த்
    தனந்தனியேயிருந்தானந்தநித்திரைதங்குகின்ற
    வனந்தலிலென்றிருப்பேனத்தனேகயிலாயத்தனே. 3
    கையாரவேற்றுநின்றங்ஙனத்தின்றுகரித்துணியைத்
    தையாதுடுத்துநின்சன்னிதிக்கேவந்துசந்ததமு
    மெய்யாரநிற்பணிந்துள்ளேயுரோமம்விதிர்விதிர்ப்ப
    வையாவென்றோலமிடுவதென்றோகயிலாயத்தனே. 4
    நீறார்த்தமேனியுரோமஞ்சிலிர்த்துளநெக்குநெக்குச்
    சேறாய்க்கசிந்துகசிந்தேயுருகிநின்சீரடிக்கே
    மாறாத்தியானமுற்றானந்தமேற்கொண்டுமார்பிற்கண்ணீ
    ராறாய்ப்பெருகக்கிடப்பதென்றோகயிலாயத்தனே. 5
    செல்வரைப்பின்சென்றுசங்கடம்பேசித்தினந்தினமும்
    பல்லினைக்காட்டிப்பரிதவியாமற்பரானந்தத்தி
    னெல்லையிற்புக்கிடவேகாந்தமாயெனக்காமிடத்தே
    யல்லலற்றென்றிருப்பேனத்தனேகயிலாயத்தனே. 6
    மந்திக்குருளையொத்தேனில்லைநாயேன்வழக்கறிந்துஞ்
    சிந்திக்குஞ்சிந்தையையனென்செய்வேனெனைத்தீதகற்றிப்
    புந்திப்பரிவிற்குருளையையேந்தியபூசையைப்போ
    லெந்தைக்குரியவன்காணத்தனேகயிலாயத்தனே. 7
    வருந்தேன்பிறந்துமிறந்துமயக்கும்புலன்வழிபோய்ப்
    பொருந்தேனரகிற்புகுகின்றிலேன்புகழ்வாரிடத்தி
    லிருந்தேனினியவர்கூட்டம்விடேனியலஞ்செழுத்தா
    மருந்தேனருந்துவனின்னருளாற்கயிலாயத்தனே. 8

    மதுரை.

    விடப்படுமோ விப்பிரவஞ்சவாழ்க்கையை விட்டுமனந்
    திடப்படுமோ நின்னருளின்றியே தினமேயலையக்
    கடப்படுமோ வற்பர்வாயிலிற்சென்று கண்ணீர்ததும்பிப்
    படப்படுமோ சொக்கநாதாசௌந்தரபாண்டியனே.

    பொது.

    உடைகோவணமுண்டுறங்கப்புறந்திண்ணையுண்டுணவிங்
    கடைகாயிலையுண்டருந்தத்தண்ணீருண்டருந்துணைக்கே
    விடையேறுமீசர்திருநாமமுண்டிந்தமேதினியில்
    வடகோடுயர்ந்தென்னதென்கோடுசாய்ந்தென்னவான்பிறைக்கே. 1
    வீடுநமக்குத்திருவாலங்காடுவிமலர்தந்த
    வோடுநமக்குண்டுவற்றாதபாத்திரமோங்குசெல்வ
    நாடுநமக்குண்டுகேட்டதெல்லாந்தரநன்னெஞ்சமே
    யீடுநமக்குச்சொலவோயொருவருமிங்கில்லையே. 2
    நாடிக்கொண்டீசரைநாட்டமுற்றாயிலைநாதரடி
    தேடிக்கொண்டாடித்தெளிந்தாயிலைசெகமாயைவந்து
    மூடிக்கொண்டோமென்றுங்காமாயுதங்கண்முனிந்தவென்றும்
    பீடிப்பையோநெஞ்சமேயுனைப்போலிலைப்பித்தர்களே. 3
    கையொன்றுசெய்யவிழியொன்றுநாடக்கருத்தொன்றெண்ணப்
    பொய்யொன்றுவஞ்சகநாவொன்றுபேசப்புலால்கமழு
    மெய்யொன்றுசாரச்செவியொன்றுகேட்கவிரும்புமியான்
    செய்கின்றபூசையெவ்வாறுகொள்வாய்வினைதீர்த்தவனே. 4
    கண்ணுண்டுகாணக்கருத்துண்டுநோக்கக்கசிந்துருகிப்
    பண்ணுண்டுபாடச்செவியுண்டுகேட்கப்பல்பச்சிலையா
    லெண்ணுண்டுசாத்தவெதிர்நிற்கவீசனிருக்கையிலே
    மண்ணுண்டுபோகுதையோகெடுவீரிந்தமாநுடமே. 5
    சொல்லிலுஞ்சொல்லின்முடிவிலும்வேதச்சுருதியிலு
    மல்லிலுமாசற்றவாகாயந்தன்னிலுமாய்ந்துவிட்டோ
    ரில்லிலுமன்பரிடத்திலுமீசனிருக்குமிடங்
    கல்லிலுஞ்செம்பிலுமோவிருப்பானெங்கள்கண்ணுதலே. 6
    வினைப்போகமேயொருதேகங்கண்டாய்வினைதானொழிந்தாற்
    றினைப்போதளவுநில்லாதுகண்டாய்சிவன்பாதநினை
    நினைப்போரைமேவுநினையாரைநீங்கிந்நெறியினின்றா
    லுனைப்போலொருவருண்டோமனமேயெனக்குற்றவரே. 7
    பட்டைக்கிழித்துப்பருவூசிதன்னைப்பரிந்தெடுத்து
    முட்டச்சுருட்டியென்மொய்குழலாள்கையின்முன்கொடுத்துக்
    கட்டியிருந்தகனமாயக்காரிதன்காமமெல்லாம்
    விட்டுப்பிரியவென்றோவிங்ஙனேசிவன்மீண்டதுவே. 8
    சூதுற்றகொங்கையும்மானார்கலவியுஞ்சூழ்பொருளும்
    போதுற்றபூசலுக்கென்செயலாஞ்செய்தபுண்ணியத்தால்
    தீதற்றமன்னவன்சிந்தையினின்றுதெளிவதற்கோ
    காதற்றவூசியைத்தந்துவிட்டானேன்றன்கைதனிலே. 9
    வாதுற்றதிண்புயரண்ணாமலையர்மலர்ப்பதத்தைப்
    போதுற்றெப்போதும்புகலுநெஞ்சேயிந்தப்பூதலத்திற்
    றீறுற்றசெல்வமென்றேடிப்புதைத்ததிரவியமென்
    காதற்றவூசியும்வாராதுகாணுங்கடைவழிக்கே. 10
    வேதத்தினுட்பொருண்மண்ணாசைமங்கையைவிட்டுவிடப்
    போதித்தவன்மொழிகேட்டிலையோசெய்தபுண்ணியத்தா
    லாதித்தன்சந்திரன்போலேவெளிச்சமதாம்பொழுது
    காதற்றவூசியும்வாராதுகாணுங்கடைவழிக்கே. 11
    மனையாளுமக்களும்வாழ்வுந்தனமுந்தன்வாயின்மட்டே
    யினமானசுற்றமயானமட்டேவழிக்கேதுதுணை
    தினையாமளவெள்ளளவாகினுமுன்புசெய்ததவந்
    தனையாளவென்றும்பாலோகஞ்சித்திக்குஞ்சத்தியமே. 12
    அத்தமும்வாழ்வுமகத்துமட்டேவிழியம்பொழுக
    மெத்தியமாதரும்வீதிமட்டேவிம்மிவிம்மியிரு
    கைத்தலமேல்வைத்தழுமைந்தருஞ்சுடுகாடுமட்டே
    பற்றிற்தொடருமிருவினைப்புண்ணியபாவமுமே. 13
    சீயுங்குருதிச்செழுநீர்வழும்புஞ்செறிந்தெழுந்து
    பாயும்புடைவையொன்றில்லாதபோதுபகலிரவா
    யீயுமெறும்பும்புகுகின்றயோனிக்கிரவுபகன்
    மாயுமனிதரைமாயாமல்வைக்கமருந்தில்லையே. 14
    சீதப்பனிக்குண்டுசிக்கெனக்கந்தைதினம்பசித்தால்
    நீதுய்க்கச்சோறுமனைதோறுமுண்டுநினைவெழுந்தால்
    வீதிக்குணல்லவிலைமாதருண்டிந்தமேதினியி
    லேதுக்குநீசலித்தாய்மனமேயென்றும்புண்படவே. 15
    ஆறுண்டுதோப்புண்டணிவீதியம்பலந்தானுமுண்டு
    நீருண்டுகந்தைநெடுங்கோவணமுண்டுநித்தநித்த
    மாறுண்டுலாவிமயங்குநெஞ்சேமனைதோறுஞ்சென்று
    சோறுண்டுதூங்கிப்பின்சும்மாவிருக்கச்சுகமுமுண்டே. 16
    உடுக்கக்கவிக்கக்குளிர்காற்றுவெய்யிலெரடுங்கிவந்தாற்
    றடுக்கப்பழையவொருவேட்டியுண்டுசகமுழுதும்
    படுக்கப்புறந்திண்ணையெங்கெங்குமுண்டுபசித்துவந்தாற்
    கொடுக்கச்சிவனுண்டுநெஞ்சேநமக்குக்குறைவில்லையே. 17
    மாடுண்டுகன்றுண்டுமக்களுண்டென்றுமகிழ்வதெல்லாம்
    கேடுண்டெனும்படிகேட்டுவிட்டோமினிக்கேண்மனமே
    யோடுண்டுகந்தையுண்டுள்ளேயெழுத்தைந்துமோதவுண்டு
    தோடுண்டகண்டனடியார்நமக்குத்துணையுமுண்டே. 18
    மாத்தானவத்தையுமாயாபுரியின்மயக்கத்தையு
    நீத்தார்தமக்கொருநிஷ்டையுண்டோநித்தனன்புகொண்டு
    வேர்த்தார்குளித்துப்பசித்தாற்புசித்துவிழிதுயின்று
    பார்த்தாலுலகத்தவர்போலிருப்பர்பற்றற்றவரே. 19
    ஒன்றென்றிருதெய்வமுண்டென்றிருவுயர்செல்வமெல்லா
    மன்றென்றிருபசித்தோர்முகம்பார்நல்லறமுநட்பு
    நன்றென்றிருநடுநீங்காமலேநமக்கிட்டபடி
    யென்றென்றிருமனமேயுனக்கேயுபதேசமிதே. 20
    நாட்டமென்றேயிருசற்குருபாதத்தைநம்புபொம்ம
    லாட்டமென்றேயிருபொல்லாவுடலையடர்ந்தகந்தைக்
    கூட்டமென்றேயிருசுற்றத்தைவாழ்வைக்குடங்கவிழ்நீ
    ரோட்டமென்றேயிருநெஞ்சேயுனக்குபதேசமிதே. 21
    என்செயலாவதியாதொன்றுமில்லையினித்தெய்வமே
    யுன்செயலேயென்றுணரப்பெற்றேனிந்தவூனெடுத்த
    பின்செய்ததீவினையாதொன்றுமில்லைப்பிறப்பதற்கு
    முன்செய்ததீவினையோவிங்ஙனேவந்துமூண்டதுவே. 22
    திருவேடமாகித்தெருவிற்பயின்றெனைத்தேடிவந்து
    பரிவாகப்பிச்சைபகருமென்றானைப்பதம்பணிந்தேன்
    கருவாகுமேதக்கடற்கரைமேவக்கருதுமென்னை
    யுருவாக்கிக்கொள்ளவல்லோவிங்ஙனேசிவனுற்றதுவே. 23
    விட்டேனுலகம்விரும்பேனிருவினைவீணருடன்
    கிட்டேனவருரைகேடுமிரேன்மெய்கெடாதநிலை
    தொட்டேன்சுகதுக்கமற்றுவிட்டேன்றொல்லைநான்மறைக்கு
    மெட்டேனெனும்பரமென்னிடத்தேவந்திங்கெய்தியதே. 24
    அட்டாங்கயோகமுமாதாரமாறுமவத்தையைந்தும்
    விட்டேறிப்போனவெளிதனிலேவியப்பொன்றுகண்டேன்
    வட்டாகிச்செம்மதிப்பாலூறலுண்டுமகிழ்ந்திருக்க
    வெட்டாதபேரின்பமென்னைவிழுங்கியிருக்கின்றதே. 25
    எரியெனக்கென்னும்புழுவோவெனக்கென்னுமிந்தமண்ணுஞ்
    சரியெனக்கென்னும்பருந்தோவெனக்கெனுந்தான்புசிக்க
    நரியெனக்கென்னும்புன்னாயெனக்கென்னுமிந்நாறுடலைப்
    பிரியமுடன்வளர்த்தேனிதனாலென்னபேறெனக்கே. 26
    அண்ணறன்வீதியரசிருப்பாகுமணிபடையோர்
    நண்ணொருநாலொன்பதாமவரேவலுநண்ணூமிவ்வூர்
    துண்ணென்பசிக்குமடைப்பள்ளியானசுகமுமெல்லா
    மெண்ணிலிகாலமவமேவிடுத்தனமெண்ணரிதே. 27
    என்பெற்றதாயருமென்னைப்பிணமென்றிகழ்ந்துவிட்டார்
    பொன்பெற்றமாதரும்போவென்றுசொல்லிப்புலம்பிவிட்டார்
    கொன்பெற்றமைந்தரும்பின்வலம்வந்துகுடமுடைத்தா
    றான்பற்றொழியவொருபற்றுமில்லையுடையவனே. 28
    கறையற்றபல்லுங்கரித்துணியாடையுங்கள்ளமின்றிப்
    பொறையுற்றநெஞ்சமும்பொல்லாதவூணும்புறந்திண்ணையுந்
    தறையிற்கிடப்புமிரந்துண்ணுமோடுஞ்சகமறியக்
    குறைவற்றசெல்வமென்றேகோலமாமறைகூப்பிடுமே. 29
    எட்டுத்திசையும்பதினாறுகோணமுமெங்குமொன்றாய்
    முட்டித்ததும்பிமுளைத்தோங்குசோதியைமூடரெல்லாங்
    கட்டிச்சுருட்டித்தங்கக்கக்கத்தில்வைப்பர்கருத்தில்வையார்
    பட்டப்பகலையிரவென்றுகூறிடும்பாதகரே. 30
    வாய்நாறுமூழன்மயிர்ச்சிக்குநாறிடுமையிடுங்கண்
    பீநாறுமங்கம்பிணவெடிநாறும்பெருங்குழிவாய்ச்
    சீநாறும்யோனியழனாறுமிந்தியச்சேறுசிந்திப்
    பாய்நாறுமங்கையர்க்கோவிங்ஙனேமனம்பற்றியதே. 31
    உரைக்கைக்குநல்லதிருவெழுத்தைந்துண்டுரைப்படியே
    செருக்கித்தரிக்கத்திருநீறுமுண்டுதெருக்குப்பையிற்
    றரிக்கக்கரித்துணியாடையுமுண்டெந்தச்சாதியிலு
    மிரக்கத்துணிந்துகொண்டேன்குறைவேதுமெனக்கில்லையே. 32
    ஏதப்பட்டாயினிமேற்படும்பாட்டையிதென்றறிந்து
    போதப்பட்டாயில்லைநல்லோரிடஞ்சென்றுபுல்லறிவால்
    வாதைப்பட்டாய்மடமானார்கல்விமயக்கத்திலே
    பேதைப்பட்டாய்நெஞ்சமேயுனைப்போலில்லைபித்தருமே. 33
    சுரப்பற்றுவல்வினைசுற்றமுமற்றுத்தொழில்களற்றுக்
    கரப்பற்றுமங்கையர்கையிணக்கற்றுக்கவலையற்று
    வரப்பற்றுநாதனைவாயாரவாழ்த்திமனமடங்கப்
    பரப்பற்றிருப்பதன்றோபரமாபரமானந்தமே. 34
    பேய்போற்றிரிந்துபிணம்போற்கிடந்திட்டபிச்சையெல்லா
    நாய்போலருந்திநரிபோலுழன்றுநன்மங்கையரைத்
    தாய்போற்கருதித்தமர்போலனைவர்க்குந்தாழ்மைசொல்லிச்
    சேய்போலிருப்பர்கண்டீருண்மைஞானந்தெளிந்தவரே. 35
    விடக்கேபருந்தின்விருந்தேகமண்டலவீணனிட்ட
    முடக்கேபுழுவந்துறையிடமேநலமுற்றுமிலாச்
    சடக்கேகருவிதளர்ந்துவிட்டாற்பெற்றதாயுந்தொடாத்
    தொடக்கேயுனைச்சுமந்தேனின்னினேதுசுகமெனக்கே. 36
    அழுதாற்பயனென்னநொந்தாற்பயனென்னவாவதில்லை
    தொழுதாற்பயனென்னநின்னையொருவர்சுடவுரைத்த
    பழுதாற்பயனென்னநன்மையுந்தீமையும்பங்கயத்தோ
    னெழுதாப்படிவருமோசலியாதிரென்னேழைநெஞ்சே. 37
    செல்வரைப்பின்சென்றுபசாரம்பேசித்தினந்தினமும்
    பல்லினைக்காட்டிப்பரிதவியாமற்பரானந்தத்தி
    னெல்லையிற்புக்குநல்லேகாந்தமாயெனக்காமிடத்தே
    யல்லலற்றென்றிருபேனாலநீழலரும்பொருளே. 38
    ஊரீருமக்கோருபதேசங்கேளுமுடம்படங்கப்
    போரீர்சமணைக்கழுவேற்றுநீற்றைப்புறந்திண்ணையிற்
    சாரீரனந்தலைச்சுற்றத்தைநீங்கிச்சகநகைக்க
    வேரீருமக்கவர்தாமேதருவரிணையடியே. 39
    நீற்றைப்புனைந்தென்னநீராடப்போயென்னநீமனமே
    மாற்றிப்பிறக்கவகையறிந்தாயில்லைமாமறைநூ
    லேற்றிக்கிடக்குமெழுகோடிமந்திரமென்னகண்டா
    யாற்றிற்கிடந்துந்துறையறியாமலலைகின்றையே. 40
    ஓங்காரமாய்நின்றவந்துவிலேயொருவித்துவந்து
    பாங்காய்முளைத்தபயனறிந்தாற்பதினாலுலகு
    நீங்காமனீங்கிநிறையாநிறைத்துநிறையுருவா
    யாங்காரமானவர்க்கெட்டர்க்கனிவந்தமர்ந்திடுமே. 41
    விதியார்படைப்புமரியாரளிப்பும்வியன்கயிலைப்
    பதியார்தொடைப்புநம்பாலணுகாதுபரானந்தமே
    கதியாகக்கொண்டுமற்றெல்லாந்துயிலிற்கனவெனநீ
    மதியாதிருமனமேவிதுகாணன்மருந்துனக்கே. 42
    நாய்க்குண்டுதெண்டுநமக்குண்டுபிச்சைநமனைவெல்ல
    வாய்க்குண்டுமந்திரபஞ்சாட்சரமதியாமல்வரும்
    பேய்க்குண்டுநீறுதிகைப்புண்டுநின்றபிறவிப்பிணி
    நோய்க்குண்டுதேசிகன்றன்னருணோக்கங்கணோக்குதற்கே. 43
    நேமங்கணிட்டைகள்வேதங்களாகமநீதிநெறி
    யோமங்கடர்ப்பணஞ்சந்திசெபமந்த்ரயோகநிலை
    நாமங்கள்சந்தனம்வெண்ணீருபூசிநலமுடனே
    சாமங்கடோறுமிவர்செய்யும்பூசைகள்சர்ப்பனையே. 44
    நானெத்தனைபுத்திசொன்னாலுங்கேட்டிலைநன்னெஞ்சமே
    யேனிப்படிக்கெட்டுழலுகின்றாயினியேதுமிலா
    வானத்தின்மீனுக்குவன்றூண்டிவிட்டவகயைதுபோற்
    போனத்தைமீளநினைக்கின்றனையென்னபுத்தியிதே. 45
    அஞ்சக்கரமெனுங்கோடாலிகொண்டிந்தவைம்புலனாம்
    வஞ்சப்புலக்கட்டைவேரறவெட்டிவளங்கள்செய்து
    விஞ்சத்திருத்திச்சதாசிவமென்கின்றவித்தையிட்டுப்
    புஞ்சக்களைபறித்தேன்வளர்த்தேன்சிவபோகத்தையே. 46
    தாயாருஞ்சுற்றமும்பெண்டிருங்கைவிட்டுத்தாழ்ந்திடுநா
    ணீயாருநானாரெனப்பகர்வாரந்தநேரத்திலே
    நோயாரும்வந்துகுடிகொள்வரேகொண்டநோயுமொரு
    பாயாருநீயுமல்லாற்பின்னையேதுநட்பாமுடலே. 47
    ஆயும்பொழுதுமயிர்க்கால்கடோறுமருங்கிருமி
    தோயுமலக்குட்டையாகியகாயத்தைச்சுட்டுவிட்டாற்
    பேயுநடனமிடுங்கடமாமென்றுபேசுவதை
    நீயுமறிந்திலையோபொருடேடநினைந்தனையே. 48
    பூணும்படிக்கல்லபொன்னுக்குத்தானல்லபூமிதனைக்
    காணும்படிக்கல்லமங்கையர்க்கல்லநற்காட்சிக்கல்ல
    சேணுங்கடந்தசிவனடிக்கல்லவென்சிந்தைகெட்டுச்
    சாணும்வளர்க்கவடியேன்படுந்துயர்சற்றல்லவே. 49
    வெட்டாதசக்கரம்பேசாதமந்திரம்வேறொருவர்க்
    கெட்டாதபுட்பமிறையாததீர்த்தமினிமுடிந்து
    கட்டாதலிங்கங்கருதாதநெஞ்சங்கருத்தினுள்ளே
    முட்டாதபூசையன்றோகுருநாதன்மொழிந்ததுவே. 50
    எருமுட்டைபிட்கினுதிர்ந்திடுஞ்செல்லுக்கெவரழுவார்
    கருமுட்டைபுக்குக்கழலகன்றாய்கனதுக்கமதாய்ப்
    பெருமுட்டுப்பட்டவர்போலழும்பேதையிர்பேத்துகிறீ
    ரொருமுட்டும்வீட்டுமரனாமமென்றைக்குமோதுமினே. 51
    மையாடுகண்ணியுமைந்தரும்வாழ்வுமனையுஞ்செந்தீ
    யையாநின்மாயையுருவெளித்தோற்றமகிலத்துள்ளே
    மெய்யாயிருந்ததுநாட்செலநாட்செலவெட்டவெறும்
    பொய்யாய்ப்பழங்கதையாய்க்கனவாய்மெல்லபோனதுவே. 52
    ஆயாய்பலகலையாய்ந்திடுந்தூயவருந்தவர்பாற்
    போயாகிலுமுண்மையைத்தெரிந்தாயில்லைபூதலத்தில்
    வேயார்ந்ததோளியர்காமவிகாரத்தில்வீழ்ந்தழுந்திப்
    பேயாய்விழிக்கின்றனைமனமேயென்னபித்துனக்கே. 53
    அடியாருறவுமரன்பூசைநேசமுமன்புமன்றிப்
    படிமீதில்வேறுபயனுளதோபங்கயன்வகுத்த
    குடியானசுற்றமுந்தாரமும்வாழ்வுங்குயக்கலங்கள்
    தடியாலடியுண்டவாறொக்குமென்றினஞ்சார்ந்திலரே. 54
    ஆங்காரபொக்கசங்கோபக்களஞ்சியமாணவந்தா
    னீங்காவரண்மனைபொய்வைத்தகூடம்விண்ணீடிவளர்
    தேங்காற்பெருமதிற்காமவிலாசமித்தேகங்கந்தல்
    பாங்காயுனைப்பணிந்தெப்படிஞானம்பலிப்பதுவே. 55
    ஒழியாப்பிறவியெடுத்தேங்கியேங்கியுழன்றநெஞ்சே
    யழியாப்பதவிக்கவுடதங்கேட்டியனாதியனை
    மழுமான்கரத்தனைமால்விடையானைமனத்திலுன்னி
    விழியாற்புனல்சிந்திவிம்மியழுநன்மைவேண்டுமென்றே. 56
    நாய்க்கொருசூலுமதற்கோர்மருத்துவநாட்டிலுண்டோ
    பேய்க்கொருஞானம்பிடிபடுமோபெருங்காஞ்சிரங்கா
    யாக்குவராரதருந்துவராரதுபோலுடம்பு
    தீக்கிரையாவதல்லாலேதுக்காமிதைச்செப்புமினே. 57
    கச்சிற்கிடக்குங்கனதனத்திற்கடைக்கண்கள்பட்டே
    யிச்சித்திருக்கின்றவேழைநெஞ்சேயிமவான்பயந்த
    பச்சைப்பசுங்கொடியுண்ணாமுலைபங்கர்பாதத்திலே
    தைச்சுக்கிடமனமேயொருகாலுந்தவறில்லையே. 58
    மானார்விழியைக்கடந்தேறிவந்தனன்வாழ்குருவுங்
    கோனாகியென்னைக்குடியேற்றிக்கொண்டனன்குற்றமில்லை
    போனாலும்பேறிருந்தாலுநற்பேறிதுபொய்யன்றுகா
    னானாலுமிந்தவுடம்போடிருப்பதருவருப்பே. 59
    சற்றாகினுந்தன்னைத்தானறியாய்தனையாய்ந்தவரை
    யுற்றாகிலுமுரைக்கப்பொருந்தாயுனக்கானநிலை
    பற்றாய்குருவைப்பணியாய்பரத்தையர்பாலிற்சென்றேன்
    பெற்றாய்மடநெஞ்சமேயுனைப்போலில்லைபித்தனுமே. 60
    உளியிட்டகல்லையுமொப்பிட்டசாந்தையுமூத்தையறப்
    புளியிட்டசெம்பையும்போற்றுகிலேனுயர்பொன்னெனவே
    யொளியிட்டதாளிரண்டுள்ளேயிருத்துவதுண்மையென்று
    வெளியிட்டடைத்துவைத்தேனினிமேலொன்றும்வேண்டிலனே. 61

    திருச்சிற்றம்பலம்.

    தாயாருக்குத்தகனகிரியை செய்கையிற்பாடிய வெண்பா.

    ஐயிரண்டுதிங்களாவங்கமெலாநொந்துபெற்றுப்
    பையலென்றபோதேபரிந்தெடுத்துச் -செய்யவிரு
    கைப்புறத்திலேந்திக்கனகமுலைதந்தாளை
    யெப்பிறப்பிற்காண்பேனினி. 1
    முந்தித்தவங்கிடந்துமுந்நூறுநாட்சுமந்தே
    யந்திபகலாச்சிவனையாதரித்துத் -தொந்தி
    சரியச்சுமந்துபெற்றதாயார்தமக்கோ
    வெரியத்தழன்மூட்டுவேன். 2
    வட்டிலிலுந்தொட்டிலிலுமார்மேலுந்தோண்மேலுங்
    கட்டிலிலும்வைத்தென்னைக்காதலித்து - முட்டச்
    சிறகிலிட்டுக்காப்பாற்றிச்சீராட்டுந்தாய்க்கோ
    விறகிலிட்டுத்தீமூட்டுவேன். 3
    நொந்துசுமந்துபெற்றுநோவாமலேந்திமுலை
    தந்துவளர்ந்தெடுத்துத்தாழாமே - யந்திபகல்
    கையிலேகொண்டென்னைக்காப்பாற்றுந்தாய்தனக்கோ
    மெய்யிலேதீமூட்டுவேன். 4
    அரிசியோநானிடுவேனாத்தாடனக்கு
    வரிசையிட்டுப்பாத்துமகிழாம - லுருசியுள்ள
    தேனேயமிர்தமேசெல்வத்திரவியபு
    மானேயனவழைத்தவாய்க்கு. 5
    அள்ளியிடுவதரிசியோதாய்தலைமேற்
    கொள்ளிதனைவைப்பேனோகூசாமன் - மெள்ள
    முகமேன்முகம்வைத்துமுத்தாடியென்றன்
    மகனேயெனவழைத்தவாய்க்கு. 6
    விருத்தம்.

    முன்னையிட்டதீமுப்புரத்திலே
    பின்னையிட்டதீதென்னிலங்கையி
    லன்னையிட்டதீயடிவயிற்றிலே
    யானுமிட்டதீமூள்கமூள்கவே. 7
    வெண்பா.

    வேகுதேதீயதனில்வெந்துபொடிசாம்ப
    லாகுதேபாவியேனையகோ - மாகக் குருவிபறவாமற்கோதாட்டியென்னைக்
    கருதிவளர்த்தெடுத்தகை. 8
    வெந்தாளோசோணகிரிவித்தகாநின்பதத்தில்
    வந்தாளோவென்னைமறந்தாளோ - சந்ததமு
    முன்னையேநோக்கியுகந்துவரங்கிடந்தென்
    றன்னையயீன்றெடுத்ததாய். 9
    வீற்றிருந்தாளன்னைவீதிதனிலிருந்தாள்
    நேற்றிருந்தாளின்றுவெந்துநீறானாள் - பாற்றெளிக்க
    வெல்லீரும்வாருங்களேதென்றிரங்காமல்
    எல்லாஞ் சிவமயமே யாம். 10

    தனிவெண்பா.

    இடைமருது.

    மென்றுவிழுங்கிவிடாய்கழிக்கநீர்தேட
    லென்றுவிடியுமெனக்கென்கோவே - நன்றி
    கருதார்புரமூன்றுங்கட்டழலாற்செற்ற
    மருதாவுன்சந்நிதிக்கேவந்து. 1
    ஒற்றி.

    கண்டங்கரியதாங்கண்மூன்றுடையதா
    மண்டத்தைப்போலவழகியதாந் - தொண்ட
    ருடலுருகத்தித்திக்குமோங்குபுகழொற்றிக்
    கடலருகேநிற்குங்கரும்பு. 2
    ஒடுவிழுந்துசீப்பாயுமொன்பதுவாய்ப்புண்ணுக்
    கிடுமருந்தையானறிந்துகொண்டேன் - கடுவருந்துந்
    தேவாதிதேவன்றிருவொற்றியூர்த்தெருவிற்
    பெருவாரடியிற்பொடி. 3
    வாவியெல்லாந்தீர்த்தமணலெல்லாம்வெண்ணீறு
    காவனங்களெல்லாங்கணநாதர் - பூவுலகி
    லீதுசிவலோகமென்றென்றேமெய்த்தவத்தோ
    ரோதுந்திருவொற்றியூர். 4
    திருவாரூர்.

    ஆரூரரிங்கிருக்கவவ்வூர்த்திருநாளென்
    றூரூர்கடோறுமுழலுவீர் - நேரே
    யுளக்குறிப்பைநாடாதவூமர்காணீவிர்
    விளக்கிருக்கத்தீத்தேடுவீர். 5
    எருவாய்க்கிருவிரன்மேலேறுண்டிருக்குங்
    கருவாய்க்கோகண்கலக்கப்பட்டாய் - திருவாரூர்த்
    தேரோடும்வீதியிலேசெத்துக்கிடக்கின்றாய்
    நீரோடுந்தாரைக்காநீ. 6
    திருக்காஞ்சி.

    எத்தனையூரெத்தனைவீடெத்தனைதாய்பெற்றவர்க
    ளெத்தனைபேரிட்டழைக்கவேனென்றே - னித்த
    மெனக்குக்களையாற்றாயேகம்பாகம்பா
    வுனக்குத்திருவிளையாட்டோ. 7
    கச்சிக்காரோணம்.

    அத்திமுதலெறும்பீறானவுயிரத்தனைக்குஞ்
    சித்தமகிழ்ந்தளிக்குந்தேசிகா - மெத்தப்
    பசிக்குதையாபாவியேன்பாழ்வயிற்றைப்பற்றி
    யிசிக்குதையாகாரோணரே. 8
    திருக்காளத்தி.

    பொய்யையொழியாய்புலாலைவிடாய்காளத்தி
    யையரையெண்ணாயறஞ்செய்யாய் - வெய்ய
    சினமேயொழியாய்திருவெழுத்தைந்தோதாய்
    மனமேயுனக்கென்னமாண்பு. 9
    திருவிருப்பையூர்.

    மாதாவுடல்சலித்தாள்வல்லினையேன்கால்சலித்தேன்
    வேதாவுங்கைசலித்துவிட்டானே - நாதா
    விருப்பையூர்வாழ்சிவனேயின்னமோரன்னை
    கருப்பையூர்வாராமற்கா. 10
    திருவையாறு.

    மண்ணுந்தணலாறவானும்புகையாற
    வெண்ணரியதாயுமிளைப்பாறப் - பண்ணுமயன்
    கையாறவுமடியேன்காலாறவுங்கண்பா
    ரையாதிருவையாறா. 11
    குற்றாலம்.

    காலன்வருமுன்னேகண்பஞ்சடைமுன்னே
    பாலுண்கடைவாய்படுமுன்னே - மேல்விழுந்தே
    யுற்றாரழுமுன்னேயூரார்சுடுமுன்னே
    குற்றாலத்தானையேகூறு. 12

    பொதுவெண்பா.

    சிற்றம்பலமுஞ்சிவனுமருகிருக்க
    வெற்றம்பலந்தேடிவிட்டோமே - நித்தம்
    பிறந்திடத்தைத்தேடுதேபேதைமடநெஞ்சங்
    கறந்திடத்தைநாடுதேகண். 1
    தோடவிழும்பூங்கோதைத்தோகையுனையிப்போது
    தேடினவர்போய்விட்டார்தேறியிரு - நாடிநீ
    யென்னைநினைத்தாலிடுப்பிலுதைப்பேனா
    னுன்னைநினைத்தாலுதை. 2
    வாசற்படிகடந்துவாராதபிச்சைக்கிங்
    காசைப்படுவதில்லையண்ணலே - யாசைதனைப்
    பட்டிறந்தகாலமெலாம்போதும்பரமேட்டி
    சுட்டிறந்தஞானத்தைச்சொல். 3
    நச்சரவம்பூண்டானைநன்றாத்தொழுவதுவு
    மிச்சையிலேதானங்கிருப்பதுவும் - பிச்சைதனை
    வாங்குவதுமுண்பதுவும்வந்துதிருவாயிலிலே
    தூங்குவதுந்தானேசுகம். 4
    இருக்குமிடந்தேடியென்பசிக்கேயன்ன
    முருக்கமுடன்கொண்டுவந்தாலுண்பேன் - பெருக்க
    வழைத்தாலும்போகேனரனேயென்றேக
    மிளைத்தாலும்போகேனினி. 5
    விட்டுவிடப்போகுதுயர்விட்டவுடனேயுடலைச்
    சுட்டுவிடப்போகின்றார்சுற்றத்தார் - பட்டதுபட் டெந்நேரமுஞ்சிவனையேத்துங்கள்போற்றுங்கள்
    சொன்னேனதுவேசுகம். 6
    ஆவியொடுகாயமழிந்தாலுமேதினியிற்
    பாவியென்றுநாமம்படையாதே - மேவியசீர்
    வித்தாரமுங்கடம்பும்வேண்டாமடநெஞ்சே
    செத்தாரைப்போலேதிரி. 7
    வெட்டவெளியானவெளிக்குந்தெரியாது
    கட்டளையுங்கைப்பணமுங்காணாதே - இட்டமுடன்
    பற்றென்றார்பற்றாதுபாவியேனெஞ்சிலவன்
    இற்றெனவேவைத்தவினிப்பு. 8
    பின்முடுகு வெண்பா.
    இப்பிறப்பைநம்பியிருப்பரோநெஞ்சகமே
    வைப்பிருக்கவாயின்மனையிருக்கச் - சொப்பனம்போல்
    விக்கிப்பற்கிட்டக்கண்மெத்தப்பஞ்சிட்டப்பைக்
    கச்சிச்செத்துக்கொட்டக்கண்டு. 9
    மேலுமிருக்கவிரும்பினையேவெள்விடையோன்
    சீலமறிந்திலையேசிந்தையே - கால்கைக்குக்
    கொட்டையிட்டுமெத்தையிட்டுக்குத்திமொத்தப்பட்டவுடல்
    கட்டையிட்டுச்சுட்டுவிடக்கண்டு. 10
    ஒன்பதுவாய்த்தோற்பைக்கொருநாளைப்போலவே
    யன்புவைத்துநெஞ்சேயலைந்தாயே - வன்கழுக்க
    டத்தித்தத்திச்சட்டைதட்டிக்கட்டிப்புட்டுக்
    கத்திக்குத்தித்தின்னக்கண்டு. 11
    இன்னம்பிறக்கவிசைவையோநெஞ்சமே
    மன்னரிவரென்றிருந்துவாழ்ந்தவரை - முன்ன
    மெரிந்தகட்டைமீதிலிணைக்கோவணத்தை
    யுரிந்துருட்டிப்போட்டதுகண்டு. 12
    முதற்சங்கமூதூட்டுமொய்குழலார்தம்மை
    நடுச்சங்கநல்விலங்குபூட்டுங் - கடைச்சங்க
    மாம்போதனவூதுமம்மட்டோவிம்மட்டோ
    நாம்பூமிவாழ்ந்தநலம். 13
    எத்தனைநாள்கூடியெடுத்தசரீரமிவை
    யத்தனையுமண்டின்பதல்லவோ - வித்தகனார்
    காலைப்பிடித்துமெள்ளக்கங்குல்பகலற்றிடத்தே
    மேலைக்குடியிருப்போமே. 14
    எச்சிலென்றுசொல்லியிதமகிதம்பெசாதே
    யெச்சிலிருக்குமிடமறியீ - ரெச்சிறனை
    யுய்த்திருந்துபார்த்தாலொருமைவெளிப்படும்பின்
    சித்தநிராமயமாமே. 15
    எத்தனைபேர்நட்டகுழியெத்தனைபேர்தொட்டமுலை
    யெத்தனைபேர்பற்றியிழுத்தவிதழ் - நித்தநித்தம்
    பொய்யடாபேசும்புவியின்மடமாதரைவிட்
    டுய்யடாவுய்யடாவுய். 16
    இருப்பதுபொய்போவதுமெயென்றெண்ணிநெஞ்சே
    யொருத்தருக்குந்தீங்கினைநீயுன்னாதே - பருத்தொந்தி
    நம்மதென்றுநாமிருப்பநாய்நரிகள்பேய்கழுகு
    தம்மதென்றுதாமிருக்குந்தான். 17
    எந்தொழிலைச்செய்தாலுமேதவத்தைபட்டாலு
    முத்தர்மனமிருக்குமோனத்தே - வித்தகமாய்க்
    காதிவிளையாடியிருகைவீசிவந்தாலுந்
    தாதிமனநீர்க்குடத்தேதான். 18
    மாலைப்பொழுதினறுமஞ்சளரைத்தேகுளித்து
    வேலைமினக்கிட்டுவிழித்திருந்து - சூலாகிப்
    பெற்றாள்வளர்த்தாள்பெயரிட்டாள்பெற்றபிள்ளை
    பித்தானலென்செய்வாள்பின். 19
    விருத்தம்.

    நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந்தேடி
    நலனொன்றுமறியாதநாரியரைக்கூடிப்
    பூப்பிளக்கப்பொய்யுரைத்துப் புற்றீசல்போலப்
    புலபுலெனக்கலகலெனப் புதல்வர்களைப்பெறுவீர்
    காப்பதற்கும்வகையறியீர்கைவிடவுமாட்டீர்
    கவர்பிளந்தமரத்துளையிற்கானுழைத்துக்கொண்டீர்
    ஆப்பதனையசைத்துவிட்டகுரங்கதனைப்போல
    அகப்பட்டீர்கிடந்துழலவகப்பட்டீரே. 20
    இதுவுமதுவேறு.

    வடிவந்தானும்வாலிபம்மகளுந்தாயுமாமியும்
    படிகொண்டாருமூரிலேபழிகொண்டாடனீதியோ
    குடிவந்தானுமேழையேகுயவன்றானுங்கூழையோ
    நடுநின்றானும்வீணானோநகரஞ்சூறையானதே. 21
    மண்ணுமுருகுமரமுருகுமாயையுருகுமாலுருகும்
    பெண்ணுமுருகுமாணுருகும்பேதாபேதவகையுருகும்
    அண்ணலுருகுமிடத்தமர்ந்தவாத்தாளுருகுமரவணையான்
    எண்ணியுருகுங்குருநாதனென்பாலுரைத்தவோர்மொழியே. 22
    திருச்சிற்றம்பலம்.