திருப்பாடற்றிரட்டு.
பட்டணத்துப்பிள்ளையார் அருளிச்செய்த
நெஞ்சொடுமகிழ்தல்.
அன்றுமுதலின்றளவுமாக்கையொடுசூட்சியமாய்
நின்றநிலையறியநேசமுற்றாய்நெஞ்சமே. 1
அங்கங்குணர்வாயறிவாகியேநிரம்பி
எங்கெங்குமானதிலேயேகரித்தாய்நெஞ்சமே. 2
அலையாதபேரின்பவானந்தவெள்ளத்தில்
நிலையாயுருவிறந்துநின்றனையேநெஞ்சமே. 3
பாராமற்பதையாமற்பருகாமல்யாதொன்றும்
ஓராதுணர்வுடனேயொன்றினையேநெஞ்சமே. 4
களவிறந்துகொலையிறந்துகாண்பனவுங்காட்சியும்போ
யளவிறந்துநின்றதிலேயன்புற்றாய்நெஞ்சமே. 5
பேச்சிறந்துசுட்டிறந்துபின்னிறந்துமுன்னிறந்து
நீச்சிறந்துநின்றதிலேநேசமுற்றாய்நெஞ்சமே. 6
விண்ணிறந்துமண்ணிறந்துவெளியிறந்துவொளியிறந்து
எண்ணிறந்துநின்றதிலேயேகரித்தாய்நெஞ்சமே. 7
பார்த்தவிடமெங்கும்பரமெனவேயுட்புறம்புங்
கோத்தபடியுண்மையெனக்கொண்டனையேநெஞ்சமே. 8
ஊரிறந்துபேரிறந்துவொளியிறந்துவெளியிறந்து
சீரிறந்துநின்றதிலேசேர்ந்தனையேநெஞ்சமே. 9
ஆண்பெண்ணலியென்றழைக்கவரிதாய்நிறைந்து
காணவரிதாயவிடங்கண்ணுற்றாய்நெஞ்சமே. 10
ஆங்காரமச்சமகற்றியறிவினொடு
தூங்காமற்றூங்கிச்சுகம்பெற்றாய்நெஞ்சமே. 11
ஆதியாய்நின்றவகண்டபரிபூரணத்தைச்
சாதியாநின்றவிடஞ்சார்வுற்றாய்நெஞ்சமே. 12
விருப்புவெறுப்பில்லாதவெட்டவெளியதனில்
இருப்பேசுகமென்றிருந்தனையேநெஞ்சமே. 13
ஆருமுறாப்பேரண்டத்தப்புறத்துமிப்புறத்தும்
நீருமுப்புமென்னநிலைபெற்றாய்நெஞ்சமே. 14
உடனாகவேயிருந்துமுணரவரியானோடு
கடனீருமாறும்போற்கலந்தனையேநெஞ்சமே. 15
நெடியகத்தைப்போக்கிநின்றசழக்கறுத்துப்
படிகத்துக்கும்போற்பற்றினையேநெஞ்சமே. 16
மேலாகியெங்கும்விளங்கும்பரம்பொருளிற்
பாலூறுமென்சுவைபோற்பற்றினையேநெஞ்சமே. 17
நீரொடுதண்ணாவிவிண்டுநீரானவாறேபோல்
ஊரொடுபேரில்லானோடொன்றினையேநெஞ்சமே. 18
இப்பிறப்பைப்பாழ்படுத்தியிருந்தபடியேயிருக்கச்
செப்பவரிதாயவிடஞ்சேர்ந்தனையேநெஞ்சமே. 19
மேலாம்பதங்களெல்லாம்விட்டுவிட்டாராய்ந்து
நாலாம்பதத்தினடந்தனையேநெஞ்சமே. 20
கடங்கடங்கடோறுங்கதிரவனூடாடி
யடங்குமிடந்தானறிந்தன்புற்றாய்நெஞ்சமே. 21
கற்றவனாய்க்கேட்டவனாய்க்காணானாய்க்காண்பவனாய்
உற்றவனாய்நின்றதிலேயொன்றுபட்டாய்நெஞ்சமே. 22
நாலுவகைக்கரணநல்குபுலனைந்துமொன்றாய்ச்
சீலமுற்றுநின்றதிலேசேர்ந்தனையேநெஞ்சமே. 23
விட்டிடமுந்தொட்டிடமும்விண்ணிடமுமண்ணிடமுங்
கட்டுமொருதன்மையெனக்கண்ணுற்றாய்நெஞ்சமே. 24
எந்தெந்தநாளுமிருந்தபடியேயிருக்க
அந்தச்சுகாதீதமாக்கினையேநெஞ்சமே. 25
வாக்கிறந்துநின்றமனோகோசரந்தனிலே
தாக்கறவேநின்றதிலேதலைசெய்தாய் நெஞ்சமே. 26
எத்தேசமுநிறைந்தேயெக்காலமுஞ்சிறந்து
சித்தாயசித்தினிடஞ்சேர்ந்தனையே நெஞ்சமே. 27
தாழாதேநீளாதேதன்மயமதாய்நிறைந்து
வாழாதேவாழமருவினையே நெஞ்சமே. 28
உள்ளும்புறம்புமுவட்டாதவானந்தக்
கள்ளருந்திநின்றதிலேகண்ணுற்றாய் நெஞ்சமே. 29
வாதனைபோய் நிஷ்டையும்போய் மாமௌனராச்சியம்போய்
பேதமற நின்றவிடம் பெற்றனையே நெஞ்சமே. 30
இரதம்பிரிந்துகலந்தேகமாம்வாறேபோல்
விரகந்தவிர்ந்தணல்பால்மேவினையேநெஞ்சமே. 31
சோதியான்சூழ்பனிநீர்சூறைகொளுமாறேபோல்
நீதிகுருவின்றிருத்தாள்நீபெற்றாய்நெஞ்சமே. 32
நெஞ்சமொடுமகிழ்தல் முற்றிற்று.