MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  சிவஞானயோகிகள் அருளிச்செய்த பிரபந்தங்கள்
  (பிரபந்தத் திரட்டு நூலில் உள்ளவை)
  1. அரதந்தசிவாசாரியர்சுலோகபஞ்சகமொழிபெயர் அகவல்
  2. சிவதத்துவிவேகமூலமொழிபெயர்ப்பு
  3. சோமோசர்முதுமொழிவெண்பா
  4. குளத்தூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி
  5. இளசைப்பதிற்றுப்பத்தந்தாதி
  6. கலசைப்பதிற்ற்ப்பத்தந்தாதி
  7. திருவேகம்பர்ஆனந்தக்களிப்பு
  8. செங்கழுநீர்விநாயகர்பிள்ளைத்தமிழ்
  9. அமுதாம்பிகைபிள்ளைத்தமிழ்
  10. செப்பறைப்பதிஅகிலாண்டேசுவரிபதிகம்
  11. திருவேகம்பரந்தாதி
  12. திருமுல்லைவாயிலந்தாதி
  13. திருத்தொண்டர்திருநாமக்கோவை
  14. பஞ்சாக்கரதேசிகர்மாலை
  உலகுடையநாயனார் அருளிய ஆசிரியவிருத்தம்
  சிவபுரம்பெரியபிள்ளை அருளிய திருவெண்பா
  குருதோத்திரங்கள்
  1. சிவஞானயோகிகள்மீது கீர்த்தனை
  2. சிவஞானயோகிகள்மீது செய்யுள்கள்

  சிவஞானயோகிகள் அருளிச்செய்த
  திருவேகம்பரந்தாதி


  கணபதிதுணை.
  திருச்சிற்றம்பலம்.
  இஃது, திராவிடம் மகாபாஷ்ய கர்த்தராகிய
  சிவஞானயோகிகள் அருளிச்செய்தது.
  மதுராபுரிவாசியாகிய இ-இராமசுவாமிப்பிள்ளை என்று
  வழங்குகின்ற ஞானசம்பந்தப்பிள்ளை செய்துரையுடன்
  இராமநாதபுரசமஸ்தானம் ம-ரா-ரா-ஸ்ரீ,

  1. திருவேகம்பரந்தாதி.
  சிறப்புப்பாயிரம்.
  கங்கையு மலரின் மங்கையும் பரசுங்
  காமநோக் கம்மைவண் டங்கை
  கொங்கைகண் ஞெமுங்கத் தழுவலு முழுதுங்
  குழைந்தருள் கம்பரந் தாதி
  சங்கையின் மும்மைத் தமிழ்ப்புல வோர்க
  டமக்கொரு காட்டதா வமைத்தான்
  செங்கைகள் கூப்பித் தவர்புகழ் துறைசைச்
  சிவஞான முனிவரன் மாதோ. (1)
  ----
  முக்கிய குறிப்பு:
  இவ்வந்தாதியிலே காப்பும் முதலிறுதிகளில் ஆறு செய்யுட்களும் இறந்துபோயின.
  ----
  கருமங்கையாரமருமத்தரேத்துசெங்காந்தளைநி
  கருமங்கையாரமருமத்தர்வாழ்கச்சிபோலவெப்பாங்
  கருமங்கையாரமருமத்தர்வாய்மைகதிர்ப்பச்சென்ற
  கருமங்கையாரமருமத்தமுங்கடந்தெய்தலென்றே. 1
  என்பங்கம்பங்கம்படச்சூழெனிலெங்குஞ்செல்சரணுக்
  கென்பங்கம்பங்கம்பதித்தபிரான்கச்சியெய்துவம்வா
  வென்பங்கம்பங்கம்பிகையுறச்சேர்த்தவனெம்பெருமா
  னென்பங்கம்பங்கம்பியாவண்ணமேத்துவமேழைநெஞ்சே. 2
  சேகரந்தோயமுடித்தோயிருள்சிந்தையார்க்கப்பரி
  சேகரந்தோயமலாகச்சியேகம்பசேரலர்நஞ்
  சேகரந்தோயனலாவென்றுசிந்தை செய்யாதமலச்
  சேகரந்தோயமனாள்வருங்காலையென்செய்குவரே. 3
  குவலையமாமைவிழியார்மயக்கிற்கொட்கும்புலையேன்
  குவலையமாமையுருவெனக்காலன்குறுகிலென்செய்
  குவலையமாமைதருங்கச்சியேகம்பகோளரவா
  குவலையமாமையினோடணியாக்கொண்டகொள்கையனே. 4
  கைக்கடக்கும்பக்களிறாமைவாயிலுங்கைவசஞ்செய்
  கைக்க்கடக்கும்பக்கமேகவொட்டாதெமர்காள்பொன்னுல
  கைக்கடக்கும்பக்கபூஞ்சினைமாவுறைகம்பன்வெண்ண
  கைக்கடக்கும்பக்கதிர்முலைபாகனைக்கண்ணுமினே. 5
  மின்னலங்காரம்புபெய்யாதுறமிக்கிராசிகடம்
  மின்னலங்காரகனிற்பினுமென்மின்னனார்குமின்கு
  மின்னலங்காரம்பெறநடஞ்செய்வியன்கச்சியைச்சேர்
  மின்னலங்காரப்பணியான்கம்பந்தொழுவீரன்பரே. 6
  அன்பரவைக்களஞ்செல்லேன்கம்பம்பணியாதபுலை
  யன்பரவைக்களந்தீமழுவோயென்றரற்றித்துழா
  யன்பரவைக்களந்தன்புசெய்யேன்மெய்யறிவுகுறி
  யன்பரவைக்களங்கத்தேனெவ்வாறருள்கூடுவதே. 7
  தேங்கடியாரரவார்சடையார்திருக்கம்பந்தொழு
  தேங்கடியாரரவந்திகழ்காஞ்சியிற்சென்றுசிவந்
  தேங்கடியாரரவோசைசெவிமடுத்தேமினிமுந்
  தேங்கடியாரரந்தைப்படுங்கும்பியிற்செல்வழிக்கே. 8
  கேதனக்கேதனமன்வரிலச்சங்கெடுத்தருள்சங்
  கேதனக்கேதனவல்லார்மதிகெடக்கட்டியரைக்
  கேதனக்கேதனமாமுமைபாற்கிளர்வோன்கச்சிநி
  கேதனக்கேதனவானான்கம்பந்தொழக்கேடிலையே. ) 9
  கேட்டையனாமயமாங்கம்பங்கிட்டவொட்டாதமதன்
  கேட்டையனாமயன்மீறச்செய்தீங்கைக்கெடுத்தியெனக்
  கேட்டையனாமயங்கேலெனவாண்டனன்கேழரியாங்
  கேட்டையனாமயனாமறிவாரவன்கீர்த்திகளே. 10
  திகழுமலத்தகத்தாளாடொழக்கம்பஞ்சேர்ந்துறைசோ
  திகழுமலத்தகப்பட்டுழல்குண்டரைச்சேர்ந்திடுமூர்த்
  திகழுமலத்தகத்தெங்கோன்றன்கோன்சிவஞானமளித்
  திகழுமலத்தகட்டாள்வாயென்பார்க்கருள்செய்திடுமே. 11
  செய்யவையம்புயம்வைத்தாளும்வேந்தர்திருவுங்கைப்பச்
  செய்யவையம்புயமன்போலுநோக்கியர்தீமையறச்
  செய்யவையம்புயமார்கச்சியேகம்பஞ்சென்றுபத்தி
  செய்யவையம்புயனேர்களத்தாயெங்கள்சிற்பரனே. 12
  பரவாதவந்தனையன்போல்வளர்த்துப்படித்துளறும்
  பரவாதவந்தனையந்தோவிடேனினிப்பார்வெறுந்தா
  பரவாதவந்தனைசெய்யடியார்தம்பணிசெயென்றம்
  பரவாதவந்தனையீந்தனையேபழங்கம்பத்தனே. 13
  பத்திக்கணங்கணமாநின்றுபோற்றும்பழவடியார்
  பத்திக்கணங்கணவேகம்பத்தாய்பத்துமுற்றுகருப்
  பத்திக்கணங்கணங்கெய்தலென்றன்னைபண்பாகியென்னா
  பத்திக்கணங்கணபாதவிர்த்தாண்டருள்பாலிப்பையே. 14
  பாலிக்குமரிக்குந்தாணிழல்வெப்பம்பணிமொழியாற்
  பாலிக்குமரிக்குமாறுசெய்வார்படிந்தாடிடத்தன்
  பாலிக்குமரிக்குடிஞைக்குமெய்தரும்பாக்கியங்கொள்
  பாலிக்குமரிக்குவாழ்வானகச்சிப்பதிக்கம்பனே 15
  பதிகம்பரம்பரர்காவதுகாஞ்சிபணிபணியென்
  பதிகம்பரம்பரசாயுதமாம்பத்திசெய்பவரேற்
  பதிகம்பரம்பரவுந்தொடைமூவர்பகர்ந்தருளும்
  பதிகம்பரம்பரமானந்தமேயுருப்பார்ப்பவர்க்கே 16
  பவனனகன்றலைவன்காஞ்சிவாழ்பழங்கம்பமெனும்
  பவன்னகன்றலைஞாலமெலாந்தொழப்பட்டகடம்
  பவன்னகன்றலைவற்றநெஞ்சோர்வினைப்பஞ்சினுக்கின்
  பவன்னகன்றலைமாலையனென்றென்றுபாடுதுமே. 17
  பாடலம்போதுநிறைசிவகங்கைபடிந்துநித்தம்
  பாடலம்போதுதொறுமீசன்கம்பன்பரனெனும்வாய்
  பாடலம்போதுகுழல்விழிநாலெண்பகுப்பும்வளர்ப்
  பாடலம்போகுதுமென்னேமெவ்வாறருள்பற்றுதுமே. 18
  மேதகரக்கருந்தேவரும்யாவரும்வேட்கும்பரி
  மேதகரக்கருமன்பருள்வாய்வெண்டாளம்பொன்கோ
  மேதகரக்கருந்துன்றியகாஞ்சியின் மிக்ககம்ப
  மேதகரக்கருங்கூந்தலுநீயும்விரும்பினையே. 19
  9 விரும்பாவலருடம்பாய்மங்கைமார்கொங்கைமெல்லிதழ்க்க
  விரும்பாவலருடங்கும்படிகேண்மனமேயச்சந்த
  விரும்பாவலருடனார்த்தழைவேயந்தவமெய்யறிவ
  விரும்பாவலருடங்கேத்துகம்பாவென்றுவேண்டுவையே. 20
  வையம்பணிசிலைவேதற்குன்பாலினிவாழியென்றான்
  வையம்பணிசிலைதென்காஞ்சிகாற்றனன்மாலென்பறம்
  வையம்பணிசிலைவாழிடமீர்க்குவட்காரைவெல்லும்
  வையம்பணிசிலையேறாகக்கொண்டுவளர்கம்பனே 21
  கம்பரந்தாதிநிலம்வலென்றாதிகளங்கண்முகங்
  கம்பரந்தாதியைகஞ்சமன்னாள்பங்கனேமுத்தியே
  கம்பரந்தாதிருப்பூங்கொன்றையோடென்புங்கட்டியென்சொற்
  கம்பரந்தாதியுங்கைக்கொண்டவாகச்சிகாவலனே. 22
  வலங்கொடியானத்தன்பாளர்கள்சூழ்செந்தின்மாநகர்ச்சே
  வலங்கொடியானத்தனாங்காமக்கோட்டிமணாளனைநா
  வலங்கொடியானத்தன்போலானென்றேத்தல்செய்வாமினிக்க
  வலங்கொடியானத்தன்மன்வாதனையைமருவலமே. 23
  வலமாயக்கண்டகரளவென்றேத்திடின்வல்வினைய
  வலமாயக்கண்டகத்தேகுடிகொண்டுமநக்களைய
  வலமாயக்கண்டகத்தான்பானுவாநின்றுவாழ்வித்திடும்
  வலமாயக்கண்டகரூரெரித்தேகம்பம்வாழ்முதலே. 24
  முதலையையாவிகரந்திபங்காத்தவன்மொய்மலர்த்தாண்
  முதலையையாவிகவானஞ்சுமாடிமுழுமலர்விம்
  முதலையையாவிகமழ்கஞ்சனாடவுமுற்படுமம்
  முதலையையாவிகலனையென்னாண்டமுறைகம்பனே. 25
  பன்னந்தனவனமாக்கேங்கம்பன்பழையோனெனும்பேர்
  பன்னந்தனவனப்பிற்கழிவேம்பசுந்தாமரையின்
  பன்னந்தனவனம்போற்பற்றறேமெப்படிகொல்வெள்ளி
  பன்னந்தனவனம்போதனெய்தாப்பதஞ்சார்வதுவே. 26
  சாறுவதீர்த்தநறுநீரிலேகம்பர்தாமுலவுஞ்
  சாறுவதீர்த்தனென்றேத்திடுமேதியைத்தண்கருப்பஞ்
  சாறுவதீர்த்தலைக்குங்காஞ்சிகாசிகமலைதண்கஞ்
  சாறுவதீர்த்தவொப்பின்பெயர்நீங்கிடச்சார்மனமே. 27
  மனவகங்கைக்கனத்தானனற்போற்றிமறுக்கவெய்யா
  மனவகங்கைக்கனற்காரற்குமைக்குமகவைத்தொழ
  மனவகங்கைக்கனக்கோனன்பர்தாடொழவைத்திகம்ப
  மனவகங்கைக்கனத்தார்முத்தஞ்சேர்கச்சிவானவனே. 28
  வானங்கனைகடலாய்ப்பரந்தான்வன்கரிகரக்க
  வானங்கனைகடவாநடஞ்செய்கச்சிவாணன்பொன்னேர்
  வானங்கனைகடமாவுரியான்கம்பமாவடிவாழ்
  வானங்கனைகடனீதெனக்காட்டிவந்தாண்டனனே. 29
  ஆண்டவனாரணன்கம்பனென்றேத்தவயன்சுரர்பல்
  லாண்டவனாரணனோடடியேனுமணைந்திடிற்பே
  ராண்டவனாரணந்தீசன்கணங்களிவ்வாலயத்து
  ளாண்டவனாரணவுற்றானென்னாதுள்ளழைத்தருளே. 30
  உள்ளலைவாளைதலைப்படுமோடையுடுத்தகச்சி
  யுள்ளலைவாளைநன்னீலஞ்செங்காசுமிழ்கம்பத்தனே
  யுள்ளலைவாளையரிக்கண்ணிகாமனுகுக்குமம்புக்
  குள்ளலைவாளையதார்க்கொன்றையீந்தவளுய்வண்ணமே. 31
  வண்ணஞ்சிவந்தவரேகம்பர்க்கார்மொழிவார்மறையின்
  வண்ணஞ்சிவந்தவமானார்பிரான்முடிவாழ்மதிக்க
  வண்ணஞ்சிவந்தவமேயீரவாடிநன்மாமைசெடும்
  வண்ணஞ்சிவந்தவநங்கனுக்கேங்கிவருந்துவதே. 32
  வருந்தலைவாமனனேமதன்சாபம்வணக்கியெய்ய
  வருந்தலைவாமனனேயயனேமற்றைவானவர்யா
  வருந்தலைவாமனனேகம்பனென்னுமெம்மான்கரந்தை
  வருந்தலைவாமனனேகனுதற்கணைவாழ்த்துதியே. 33
  துதிகானனந்தலையேகம்பவாழ்வையந்தோமிக்கிரந்
  துதிகானனந்தலைமூன்றாளரைத்தொழுந்தேவெனவாழ்த்
  துதிகானனந்தலைநீர்த்தடந்தீத்தன்மைசூளையருந்
  துதிகானனந்தலையாம்பதியென்றெண்ணிச்சூழ்மன்னே. 34
  மனமாலையாற்றவலைகடல்வீரமடியநல
  மனமாலையாற்றனலியத்தருமன்மதன்மதச
  மனமாலையாற்றண்ணளிசுரந்தாள்கச்சிமாநகர்க்கு
  மனமாலையாற்றவனேகம்பமேவியவான்பொருளே. 35
  பொருந்தங்குமரிக்குறும்பற்றிருவர்புகழ்சிவந்தாய்
  பொருந்தங்குமரிக்குமுள்ளேவினையென்றுபோய்க்கம்பமே
  பொருந்தங்குமரிக்குங்காறுமமர்பொன்னிசானவிதண்
  பொருந்தங்குமரிக்குமேலாங்கம்பைப்புனலாடுநெஞ்சே. 36
  சேயரியம்பகமானேபொருள்வயிற்சென்றவர்தாஞ்
  சேயரியம்பகவார்த்திடுங்கார்வரிற்செய்வதென்னாஞ்
  சேயரியம்பகவற்கீங்கெனாச்சிறுத்தொண்டர்தந்தஞ்
  சேயரியம்பகம்பாவென்றென்றேத்துந்திறனல்லதே. 37
  அல்லாக்குமாரணங்குற்றுயிர்த்தேங்குமருள்பொறைதை
  யல்லாக்குமாரனன்னாரருளாரென்னுமம்பகலை
  யல்லாக்குமாரமடர்கச்சிக்கம்பரருட்குரிய
  னல்லாக்குமாரனையீன்பயனீதென்னுமாயிழையே. 38
  ஆயாதிருக்கச்சியேகம்பநின்னடியார்க்கடியே
  னாயாதிருக்கச்சிவமென்பதென்றதையாய்ந்துமற்றொன்
  றாயாதிருக்கச்சிதானந்தமாயமர்வண்ணமளி
  யாயாதிருக்கச்சிதுநீத்தறிவுருவாந்திருவே. 39
  திருக்காமக்கோட்டமுதல்விபங்காண்டருள்செல்வன்வினை
  திருக்காமக்கோட்டமமாற்றிடுங்கம்பன்றிருந்தெழின்மு
  திருக்காமக்கோட்டகளித்தானென்றேத்திநந்தீவினைப்பி
  திருக்காமக்கோட்டமுறும்பாம்பரைக்கசைதேவனையே. 40
  வசனத்தவன்புரவாளனவன்மதியம்பசிய
  வசனத்தவன்புரவிப்பகலோனவன்மன்னுசத்த
  வசனத்தவன்புரம்வென்றோனவனவனேநலஞ்சு
  வசனத்தவன்புரவோர்வாழ்கலிக்கச்சிவாழ்கம்பனே. 41
  கங்கணம்பன்னகஞ்சாந்தமுநீறுகருதொருபா
  கங்கணம்பன்னகருங்குழன்மேனிகழுதுகழ
  கங்கணம்பன்னகமேகம்பமன்பரகங்கள்சிரங்
  கங்கணம்பன்னகவில்லானுக்கோதக்கடவனவே. 42
  கடவாதவன்பருவராதவன்பரகந்தொறுஞ்சங்
  கடவாதவன்பருவராவினையிருட்கார்க்குவன்றேர்
  கடவாதவன்பருவராலுகள்கம்பைக்கம்பனலங்
  கடவாதவன்பருவராதளித்தெனைக்காத்தனனே. 43
  தனம்பொடியாதுமுளையாதெயிறிந்தத்தையல்கம்பத்
  தனம்பொடியாதும்வளராப்பிறைமுடித்தானுக்கென்பா
  தனம்பொடியாதுதைசாந்தமெனுங்கொன்றைதந்திடின்ம
  தனம்பொடியாதுதையாதென்னுமென்கட்டனித்துவந்தே. 44
  வந்தனையாவதுஞ்செய்தறியாமனமேமறலி
  வந்தனையாவதுபார்நரகென்னுமுன்வாய்த்திடுத
  வந்தனையாவதுசெய்தார்க்கருண்மயிலூரருட்ப
  வந்தனையாவதுலாகம்பனேயென்றுவாழ்த்துவையே. 45
  வைகாத்திருப்பதிநாள்கோள்வழங்குங்கதிகளென்ற
  வைகாத்திருப்பதிகைப்பதிகாசிதன்மார்பமன்றி
  வைகாத்திருப்பதிமாற்பேறுமுன்வரைப்பாயினுஞ்செய்
  வைகாத்திருப்பதியான்கச்சியேகம்பமாவடியே. 46
  மாவடிவாயவதாரஞ்செயேகம்பவாணர்கெடு
  மாவடிவாயவம்பிஞ்சியிலேவியமன்னர்புள்ளு
  மாவடிவாயவர்காணாதஞானவரோதயர்த
  மாவடிவாயவந்தீர்சிந்தையாரெம்மையாள்பவரே. 47
  ஆனந்தவெள்ளம்புயத்தாள்பணிகம்பவாணவத்தீ
  யானந்தவெள்ளமலவுடற்பாரமறிவுமிகை
  யானந்தவெள்ளவதியேனுங்கன்மமடாதுருப்பட்
  டானந்தவெள்ளந்துளைந்தாடவைத்தியருமணியே. 48
  மணிகண்டவாதிரைநாளானரன்கம்பவாணனென்கண்
  மணிகண்டவாதினிதாள்வோன்றனைப்புத்தர்வாமிகள
  மணிகண்டவாதியைவென்றுண்மைதேர்மன்வியாகரண
  மணிகண்டவாதிவிபுதர்கணாடொறும்வாழ்த்துமினே. 49
  வாராரிடைமருமான்றொழவேகம்பமன்னிவளர்
  வாராரிடைமருதூரார்தமதன்பர்மாரருங்கொல்
  வாராரிடைமருவிப்புகல்வேனிவ்வருத்தமந்தோ
  வாராரிடைமருளப்பணைபூண்முலைமாதரசே. 50
  மாதேவனீசர்மொழியாற்சிறுதெய்வம்வந்தித்துவிம்
  மாதேவனீசர்சதுர்வேதங்கடாமன்னுதற்புருடன்
  மாதேவனீசனெனவுரியானவனன்பர்கட
  மாதேவனீசலியாதுசெய்யேகம்பவைப்பிற்சென்றே. 51
  வைப்பதுமத்தமுடிமீதுநாடகவர்க்கமெண்சு
  வைப்பதுமத்தகமேலதுநாட்டமருவுகம்பம்
  வைப்பதுமத்தமறுப்பதுபார்வையப்பாகன்வெண்பா
  வைப்பதுமத்தனென்றாலென்னையோநங்கைமால்கொள்வதே. 52
  மாலையடியடிகேண்முனந்தேடவைத்தாய்சமனா
  மாலையடியடியென்னாமற்காத்துவளந்தருபா
  மாலையடியடிதோறுஞ்சுவைபெறப்பாடமையின்
  மாலையடியடியோங்கட்கருள்கச்சிவாழ்கம்பனே. 53
  வாதங்கமண்டலநீரழலாய்க்கம்பமன்னிநின்ற
  வாதங்கமண்டலம்பாயுறிபோய்வன்கழுப்பொருந்த
  வாதங்கமண்டலத்தார்செய்யவென்றவர்வாழ்த்துமத்தா
  வாதங்கமண்டலமூன்றுங்கடந்தென்மனத்தகத்தே. 54
  அகத்தியனாரதன்பூவிற்குநாசியரிந்திடுசெய்
  யகத்தியனாரதவத்தியென்னாதறுத்தான்முதலோ
  ரகத்தியனாரதனாற்றொழுங்கம்பரறிவிற்செம்போ
  தகத்தியனாரதமர்க்கொளித்தேமன்றிலாடுவரே. 55
  ஆடானையம்பலமேயானைக்கம்பனையன்பிலர்பா
  லாடானையம்பலமீவானைக்கண்டனளாகிமங்கை
  யாடானையம்பலகொண்டுசென்றாளங்ஙனேநெகிழ்ந்த
  தாடானையம்பலந்தோவெங்குமாயதலர்த்திருவே. 56
  திருமேற்றளிவளர்கம்பன்பனியுந்திண்கோடையுங்கூ
  திருமேற்றளியுடன்செய்தவத்தோர்க்கிறைசீரெழின்மு
  திருமேற்றளிமுரல்கொன்றையன்றாள்சிந்தியார்சமன
  திருமேற்றளிவிடவேறேதுறுதிதிருந்துவரே. 57
  திருவோணகாந்தன்றளிவளரேகம்பன்சீர்க்கருக
  திருவோணகாந்தன்றன்கோன்வரைப்பாற்சென்றியான்முன்கண்ட
  திருவோணகாந்தனிபேசாமெனுந்திண்விரதத்தின்மு
  திருவோணகாந்தம்பிறிதொன்றொவ்வாணண்பிற்சீரியனே. 58
  அனேகதங்காவதமப்புகழக்கம்பவறுத்தருள்வா
  யனேகதங்காவதம்பற்பலவோடியலைந்துவறி
  யனேகதங்காவதன்பால்வரைப்பாற்றவமாற்றிக்கச்சி
  யனேகதங்காவதனேயலையாவகைநன்னெறியே. 59
  நெறிக்காரைக்காட்டுகுழலார்பின்சென்றுநிற்பீருயிர்போ
  நெறிக்காரைக்காட்டுவிர்கம்பனுக்காலையினேர்ந்தநெறு
  நெறிக்காரைக்காட்டுப்பள்ளிக்கோவுக்கன்புநிகழ்த்திக்கச்சி
  நெறிக்காரைக்காட்டுச்செல்லீர்துனையாவருநீர்மையரே. 60
  மையானப்பதிவளர்கச்சிப்பிரான்வருமேறெனுந்தன்
  மையானப்பதியினையூர்ந்தருளேகம்பவாணனிள
  மையானப்பதிநன்னிலாநீந்துவேணிமௌலியன்க
  மையானப்பதினைந்துமூவேழுநீக்கவரந்தருமே. 61
  தருமந்தரதமந்தேர்கல்விவேட்டுத்தரையினுருத்
  தருமந்தரதமங்கெய்தர்ரெனுஞ்சொற்றனைக்கம்பம்வாழ்
  தருமந்தரதமர்க்கெட்டார்வரைதனிற்கைபுயமாந்
  தருமந்தரதமக்கூந்தற்குநீசென்றுசாற்றுகவே. 62
  கவளக்கரியன்றுவேன்றாரன்பாற்சொன்னகட்டுரைக்காங்
  கவளக்கரியன்றுகொல்லாமித்தெய்வங்கனையிருளாங்
  கவளக்கரியன்றுதந்தநஞ்சுண்டிருள்கண்டனொன்றா
  கவளக்கரியன்றுறைசூழ்கம்பன்வரைக்காரிகையே. 63
  காரியங்காரணமாம்பஞ்சபூதக்கலப்பின்மயங்
  காரியங்காரணங்கெய்தாவகையருள்காட்டுமவி
  காரியங்காரணஞ்சூழ்கம்பனூரல்லுங்காய்பகலுங்
  காரியங்காரணவோசையைக்காட்டுங்கலிக்கச்சியே. 64
  கச்சித்தெருவில்வந்தார்நெகிழ்த்தாரென்களபமுலைக்
  கச்சித்தெருளினர்யாவரென்பேற்குக்கல்லாலமர்யோ
  கச்சித்தெருதினையூருஞ்செயுங்கன்னல்கல்லிபந்துய்க்
  கச்சித்தெருவையுறுஞ்சூலமேந்திடுங்காணென்பரே. (65) 65
  பராரைவரைவரைபோல்வளைக்குங்கம்பரைத்திருவம்
  பராரைவரைவரையோவறியார்பன்னெடுங்கணக்கும்
  பராரைவரைவரையத்தெரியார்படித்தோரிற்செம்மாப்
  பராரைவரைவரையிட்டொழிப்பாரவ்விதண்டையர்க்கே. 66
  தண்டகநாடகமாடுமெந்தாய்தண்குறங்கரம்பைத்
  தண்டகநாடகலல்குல்பங்காபொற்றடவரைக்கோ
  தண்டகநாடகராதிமண்காற்றங்கித்தண்புனலாந்
  தண்டகநாடகம்வாழ்கம்பனேநின்சரண்சரணே. 67
  சரமைந்தனங்கனொருங்கேவுமுன்கொன்றைதந்திருட்குஞ்
  சரமைந்தனங்கண்மெலியச்செய்யார்பொய்மைசாற்றுபரா
  சரமைந்தனங்கணபோற்றியென்றேத்தக்கைதந்தருளீ
  சரமைந்தனங்கண்மகிழ்கம்பைசூழ்கம்பஞ்சார்ந்தவரே. 68
  தவந்தானங்காலந்தொறுமறவார்தங்குகச்சியினெய்
  தவந்தானங்காலன்றிறல்வாட்டுகம்பன்றன்வெற்பினர்கை
  தவந்தானங்காலந்தருமென்செய்கேன்சந்தக்குன்றினும்வந்
  தவந்தானங்காலன்பிலாமதன்றானும்வருத்துவனே. 69
  வரகந்தமாதனவாழ்வோருணற்குமற்றின்பம்விற்ப
  வரகந்தமாதனமாயதென்னேகம்பர்மைந்தமெய்த்த
  வரகந்தமாதனவள்ளிகொண்காவென்றுவாழ்த்தவருள்
  வரகந்தமாதனவெற்பாளர்போலுநம்மன்னவர்க்கே. 70
  மன்னாதபோதனர்வாழ்கம்பவாணநின்வான்கருணை
  மன்னாதபோதனகாபுகலேதென்முன்வந்துதரு
  மன்னாதபோதனதாநரகாரவருந்துகென்னா
  மன்னாதபோதனரியறியாதமெய்வாழ்வருளே. 71
  வாவிக்கமலத்தடவாளைமாங்கனிவாய்கிழித்து
  வாவிக்கமலச்சுரைதேக்கிநீந்தும்வண்கச்சிக்கம்பா
  வாவிக்கமலக்குநாச்செற்றுக்காலன்வந்தெய்துமுன்ன
  வாவிக்கமலத்துணைத்தாடந்தாட்கொளவல்விரைந்தே. 72
  வல்லியங்கோட்டுமலைதிரிகானிருள்வாய்வருவான்
  வல்லியங்கோட்டுவில்லார்மொழிவார்மலையீன்றமுலை
  வல்லியங்கோட்டுநன்னீர்க்கம்பைவாய்த்தழுவக்குழைந்தார்
  வல்லியங்கோட்டுடனார்த்தெழுமேகம்பம்வாழ்வரைக்கே. 73
  வரையும்வரையுமுள்வாடாதிருந்ததடியவர்யா
  வரையும்வரையுமவ்வேட்டன்பர்பார்த்திவனாரிவனை
  வரையும்வரையுமென்னாதெனைச்சேர்த்துவரையுங்கம்பர்
  வரையும்வரையுந்திடமுமுள்ளார்தந்தமாந்தழையே. 74
  மாந்தருமங்கலவாவிடமாந்தியவ்வானவரு
  மாந்தருமங்கலரிட்டேத்தவாழ்கம்பவாணனொற்றை
  மாந்தருமங்கலவைப்பாக்கொண்டானடிவாழ்த்துபுவிம்
  மாந்தருமங்கலமாகக்கொள்ளாம்வம்பின்மாழ்குதுமே. ) 75
  மாவலியேவலையாப்பகைமீன்களைமாட்டிமண்மேன்
  மாவலியேவலைமாற்றினன்றாழ்கம்பமஞ்சுளரோ
  மாவலியேவலைநோக்கிபங்காமகன்பெண்ணெனுநா
  மாவலியேவலையேகொடியேன்வினைமாய்த்திடவே. 76
  வேதனைவாய்ப்பணிவுற்றவமேமெலிவேனுமுற
  வேதனைவாய்ப்பணியார்கம்பத்தேவெளிநின்றுவிண்டு
  வேதனைவாய்ப்பணிசெய்துமெட்டாதெங்குமேவுசம
  வேதனைவாய்ப்பணீயான்றடுத்தாண்டனன்மேதகவே. 77
  தகரங்கந்திக்குங்குழலாயினியுயிர்தாங்கெனுஞ்சொற்
  றகரங்கந்திக்குமருள்வாரலர்தபனன்றனைச்சேந்
  தகரங்கந்திக்குமுகனைக்கொய்கம்பர்தடவரைப்போ
  தகரங்கந்திக்குமரம்போற்கொல்யானைத்தனிமன்னரே. 78
  தனித்தனமேயன்பர்க்காகிநின்றோன்றமிழ்க்கச்சிக்கம்பத்
  தனித்தனமேயன்பராசத்திபூசனைகொண்டபுனி
  தனித்தனமேயபசப்பொழியான்மற்றொர்சார்புமில்லேந்
  தனித்தனமேயனமேயினியேதுய்யத்தக்கதுவே. 79
  வேதாகமங்கலைகற்றதனான்முத்திவேட்பதறி
  வேதாகமங்கலைநீர்போக்குமேவியன்பத்திவிளை
  வேதாகமங்கலைமாமதிவேய்ந்தவெண்ணிற்றொளிச்சு
  வேதாகமங்கலையாத்திசைகொண்டமெய்யேகம்பனே. 80
  ஏகம்பத்தானையரிதிசையூர்புகழேறுகச்சி
  யேகம்பத்தானையுரிபோர்வைவாழிடஞ்சூதமதா
  மேகம்பத்தானையுகைத்தடியார்க்கெளிவந்தருளு
  மேகம்பத்தானையரிக்கண்ணிபாகனுக்கென்பர்களே. 81
  பரம்பரமானந்தவாதவர்சூழ்கம்பனேயிம்பரும்
  பரம்பரமானந்தமாநிறைந்தோய்பசுஞ்சாபக்கரும்
  பரம்பரமானந்தமொத்தகண்ணார்திறம்பாறவெங்கும்
  பரம்பரமானந்தமுத்திதந்தாண்டருள்பாலிப்பையே. 82
  பாலனஞ்செய்துதவார்கொன்றைமாலைதண்பாசடைமேற்,
  பாவனஞ்செய்துறுதென்கச்சியேகம்பர்பானுவுமேற்,பாலனஞ்
  செய்துதல்போலெய்துமாலையின்பைந்துளவோன், பாலனஞ்
  செய்துகொல்வானென்றென்றேங்குமென்பான்மொழியே. 83
  பாதகமஞ்சனவெற்பாகவீட்டுநற்பண்புவிரும்
  பாதகமஞ்சனமாட்டாதுகைபன்னுநாப்புகழ்செப்
  பாதகமஞ்சனகண்டாகம்பாபன்றிநாடரிய
  பாதகமஞ்சனமின்னமுங்காணரும்பண்ணவனே. 84
  வனப்புண்டரிகமுகத்தார்தமுற்பலமாமலரின்
  வனப்புண்டரிகவர்கண்விரும்பேல்வணங்காயுரைசெய்
  வனப்புண்டரிகலவாமலருண்டுவண்கம்பமுண்டு
  வனப்புண்டரிகவுரியானுண்டேமனம்வாய்கையுண்டே. 85
  கைத்தாயினையகன்றாயமும்யானுங்கவலமறு
  கைத்தாயினையவருகாலன்போலுமோர்சண்டகன்றன்
  கைத்தாயினையவென்கண்மணியேகக்கடவியெனைக்
  கைத்தாயினையநற்கம்பந்தொழாரிற்கடுந்தெய்வமே. 86
  கடமாதங்கம்பப்பிரானைச்சிவநிசிக்கண்வணங்கிற்
  கடமாதங்கம்பற்பலசூழவாழ்ந்தங்குங்கஞ்சர்கண்ணர்
  கடமாதங்கம்பணியாப்பூண்டுவைகிப்பின்கார்மலச்சங்
  கடமாதங்கப்பற்றறப்போய்க்கலப்பர்திருவடியே. 87
  திருக்கோவையாரணனைப்படைத்தேகம்பத்தேமகிழ்வோய்
  திருக்கோவையாருளத்தோரன்பர்கூறிடச்சிற்றம்பலத்
  திருக்கோவையார்கரத்தால்வரைந்தாண்டசெல்வாவருள்கூ
  திருக்கோவையார்படைவேட்கோவின்றாற்றுமென்சேல்விழியே. 88
  விழுமந்தவாதவர்சார்பேநயந்துவிவேகங்கள
  விழுமந்தவாதவவேனோர்மதங்களைமேற்கொண்டங்கண்
  விழுமந்தவாதவமென்றுமைகாட்டிவிளக்கினைநல்
  விழுமந்தவாதவர்வெற்பாகம்பாவென்விளம்புவனே. 89
  புவனம்பவனங்கமண்ணழலாவன்புள்ளூர்களர்காம்
  புவனம்பவனங்களாவமர்வோன்வினைபொய்மலந்த
  புவனம்பவனங்கணன்கம்பனென்றென்றுபோற்றிவிரும்
  புவனம்பவனங்கனத்தனென்றேகொண்டபோதனையே. 90
  போதுமினையம்பரேநடவாதிங்கும்பூம்பகழிப்
  பொதுமினையம்பரத்தைப்பொருமிடையார்வசையும்
  போதுமினையம்பரிகம்பர்தார்புரிந்தாரினியோர்
  போதுமினையம்பரவையின்வீரமும்பொன்றுகவே. 91
  கவலைக்கரும்பரவப்பூம்பகழிக்குங்கன்னியர்நோக்
  கவலைக்கரும்பரவேர்நகையல்குலுக்காசைகொண்டு
  கவலைக்கரும்பரவைக்குள்விழாதுகருணைபெரு
  கவலைக்கரும்பரமானந்தமீந்தனன்கம்பத்தனே. 92
  கம்பாகம்பாநதிப்பாற்பூசைசெய்கவுரிக்கருணோக்
  கம்பாகம்பாலித்தகோவேமகளிர்கடிதடநா
  கம்பாகம்பாமொழிகண்களென்னாதுன்கழலைமுறுக்
  கம்பாகம்பாகமுறுந்தமிழ்பாடுங்கடன்பணியே. 93
  பணியாதனந்தம் பரிசடியாரெதிர்ப்பட்டிடிற்செய்
  பணியாதனந்தன் புகழநிற்பீரென்றுபாடிப்புத்தி
  பணியாதனந்தந்து பசரியாதுகம்பாவரவப்
  பணியாதனந்தஞ்ச மென்றழிவேனெப்படியுய்வனே. 94

  திருச்சிற்றம்பலம்.
  மெய்கண்டதேவர் திருவடிவாழ்க.
  சிவஞானயோகிகள் திருவடிவாழ்க.