சிவஞான யோகிகள் அருளிய
பிரபந்தத் திரட்டு - பாகம் 5
பொருளடக்கம்
5.1 கலசைப் பதிற்றுப்பத்தந்தாதி (101) 5.2 கச்சிஆனந்தருத்திரேசர் பதிகம். (10) 5.3 திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு 5.4 சிவதத்துவவிவேகமூல மொழிபெயர்ப்பு. (70) 5.5 திருத்தொண்டர் திருநாமக்கோவை. 5.6 பஞ்சாக்கரதேசிகர் மாலை (10) 5.7 அரதத்த சிவாசாரியர் சுலோகபஞ்சக மொழிபெயர்ப்பு 5.8 சிவபுரம் பெரியபிள்ளையவர்கள் அருளிச் செய்த திருவெண்பா.(10)
5.9 திருக்கைலாச சந்தான குரவர்களின் தோத்திரங்கள் (24) 5.10 சிவஞானயோகிகள்மீது கீர்த்தனை. 5.11 சிவஞானயோகிகள்மீது செய்யுட்கள் கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
5.1 கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி
காப்பு
பருமாலை நிரைவீதித் திருத்தொட்டிக் கலைப்பதிற்றுப் பத்தந்தாதித்,
திருமாலை யெமையாளுஞ் சிவபெருமான் றிருவடியிற் சேர்க்கநல்கும்,
பொருமாலைக் கயமுகனைக் குடர்குழம்பத் துகைத்துருட்டிப் புரட்டிநாயேன்,
கருமாலைத் துரந்தருள வெழுந்தருளுஞ் செங்கழுநீர்க் களபந்தானே.
நூல்.
திருமால்பிரமன்றெளியாதழலா
யருமாலுறநீண்டருளங்கணனெம்
பெருமான்கலைசைப்பதிபேணியவா
விருமாமலமற்றெளியேனுயவே. (1)
உய்யும்படியொன்றுணரேனையுமான்
கையன்கதியன்கலைசைப்பதிவாழ்
மெய்யன்விமலன்விடையேறியவென்
னையன்வலித்தாண்டதுமற்புதமே (2)
புதியான்பழையான்புறத்தானகத்தான்
முதியானிளையான்முதலான்முடியான்
பதியாங்கலைசைப்பகவன்பெருமை
மதியாலெவர்தேறிடவல்லவரே (3)
வல்லாண்மைசெலுத்துமலத்துயராற்
பொல்லாநிலையிற்பொறிகெட்டுழல்வேன்
கல்லானிழலாய்கலைசைப்பதியா
யெல்லாமறவென்றுனையெய்துவதே (4)
தேறாய்கலைசைச்சிவனேயிறையென்
றேறாய்சிவலோகமிடும்பையெலாம்
பாறாய்பதமஞ்சும்விதிப்படியே
கூறாயருளேகுறியாய்மனமே. (5)
மனைமக்கள்கடும்புமடந்தையர்பொன்
னெனவிப்படி யெய்திமயக்கியிடுந்
தனையொப்புறுமாயைவிலாசமெலாங்
கனவிற்கழியாய்கலைசைக்கிறையே. (6)
இறையுந்தரியேனினியிவ்வுடலப்
பொறைதானுனையல்லதுபோக்கறியேன்
முறையோமுறையோவருளாய்முதல்வா
நிறைநீர்க்கலைசைப்பதிநின்மலனே. (7)
மல்கும்புலவேடர்மயக்கமருண்
டொல்குஞ்சிறியேனையுமுன்னடிசேர்த்
தல்கும்படியென்றருள்வாய்வளமே
பல்குங்கலைசைப்பதிகாவலனே. (8)
காவாய்சிவனேசரணங்கலைசைத்
தேவாசிவனேசரணஞ்சிறியே
னாவாசிவனேசரணமருளே
தாவாசிவனேசரணஞ்சரணம். (9)
சரணம்புகும்வானவர்தாங்களெலா
மரணம்புகுதாதருள்வைத்துவருங்
கரளந்தனையுண்டனைகாத்தருளா
யரணம்புடைசூழ்கலைசைக்கரசே. (10)
வேறு.
அருவுருவங்கடந்துநிறைந்தானந்தப்பரவெளியாய்
மருவுபெருஞ்சிவபோகவாரிதியிற்றுளைந்தாடி
யிரவுபகலற்றிருக்குமிவ்வாழ்வையெனக்களித்தாய்க்
குருகிமனங்கரையகிலேன்றிருக்கலைசையுத்தமனே. (11)
உத்தியாரவகலல்குலொள்ளிழையார்முலைத்தடத்தே
பித்துமிகுந்திழிவேனைப்பிறழாமேதடுத்தாண்ட
வத்தனேயுனையிழந்துமாவிதரித்துய்வேனோ
கொத்தலர்பூம்பொழிற்கலைசைக்குலநகர்வாழ்கோமானே. (12)
மான்போலும்விழிசாயன்மயில்போலுமடந்தையர்சொற்
றேன்போலுமெனப்பிதற்றித்திரிவேனையாட்கொண்டாய்
நான்போலும்மடிமையுமற்றுன்போலுநாயனுந்தான்
மீன்போர்செய்வயற்கலைசைவித்தகனேகிடையாதே. (13)
கிடையாதபெருவாழ்வுகிடைத்திருந்துங்கைவிட்டு
முடையானவுடலோம்பிமூர்க்கனாய்த்திரிந்துழலுங்
கடையேனைக்கடைபோகக்காப்பதுநின்கடனன்றோ
நடையாளுந்திருக்கலைசைநகர்மேவுபரம்பொருளே. (14)
பரந்தெழுமுன்றிருவருளேபார்த்துமனங்குழைந்துருகி
நிரந்தரமாயன்புசெயாநீசனேன்றனக்கந்தோ
புரந்தரன்மாலயன்முதலோர்புகலரும்பேறளித்தருளி
யரந்தைதவிர்த்தனையென்னேதிருக்கலைசையாண்டானே (15)
ஆண்டாய்நீயுனக்கடியேனானேனானினியென்னை
வேண்டாதுவெறுத்திடவும்விதியுண்டோகீழ்மேலாய்
நீண்டானேதிருத்தொட்டிக்கலைமேவுநின்மலனே
தூண்டாதவிளக்கொளியாய்ச்சுடர்பரப்புந்தொல்லோனே. (16)
தொல்லைவினைத்தொடக்குண்டுசுடுநெருப்பினரவேய்ப்ப
வல்லலுறும்புலையேனையாவாவென்றளித்தருளா
யெல்லையறுத்தூடுருவியெங்கணுமாய்நிறைந்தருளிச்
செல்வமலிகலைசையில்வாழ்சிவானந்தப்பழங்கடலே. (17)
பழங்கணுறவெகுண்டெழுந்துபகடேறிப்படையெடுத்துத்
தழங்குபெருஞ்சேனையொடுந்தருக்கிவருங்கொடுங்காலன்
முழங்குமொலிகேளாமுன்மூரிவிடைமிசையேறி
யழுங்கேலென்றெதிர்ந்தருளாயருட்கலைசைப்பதியானே. (18)
பதிகடொறுஞ்சென்றேத்திப்பயின்மூவர்தமிழ்மாலைப்
பதிகமெலாமங்கங்கேபாடியுளங்களிகூரும்
பதிகரொடுமெனைக்கூடப்பணித்தருளாயிமையவர்தம்
பதிகளுக்கும்பதியாகிப்பதிக்கலைசைப்பதியானே. (19)
யானென்றுமெனதென்றுமிச்செருக்கிலெழும்வினையா
லூனொன்றிப்பொறிவழிபோயுலவாதயோனிதொறுந்
தானொன்றியிதுகாறுந்தளர்ந்தொழிந்தேனினியிரங்காய்
தேனொன்றுமலர்ச்சோலைத்திருக்கலைசையுடையானே (20)
வேறு.
உடைந்துநைந்துநெக்குநெக்குளங்குழைந்துசின்மயத்
தடைந்துகண்ணசும்பிருந்துதாரைபாயவன்புநீர்
குடைந்துவாழுமன்பர்சிந்தைகோயில்கொண்டுவாழ்வரான்
மடந்தைபாகமாய்க்கலைசைவாழ்சிதம்பரேசரே. (21)
சிதம்பரேசர்சோலைசூழ்ந்ததென்கலைசைநாயகர்
கதம்பராவுகாமனோடுகாலனைக்கடிந்தவர்
பதம்பராவியேத்துமன்பர்பாதபங்கயங்கள்சந்
ததம்பராவியேவலிற்சரிப்பரண்டவாணரே. (22)
அண்டரண்டமூடறுத்தகம்புறம்புமேகமாய்
மண்டியெங்கணும்பரந்தவின்பவாரிதன்னுளே
தண்டலைக்கலைசைவாழ்சிதம்பரேசர்தம்முருக்
கண்டுகொண்டுபோற்றவல்லகாட்சியாளர்செல்வரே. (23)
செல்வமென்னகீர்த்தியென்னசித்தியென்னகற்றிடுங்
கல்வியென்னவீங்கிவற்றினாற்பயன்கள்காண்பரோ
நல்லதென்கலைசைமேயநாதனன்பர்நாமமே
சொல்லியேத்தியேவல்செய்தொழும்பர்காணவல்லரே. (24)
வல்லவண்ணம்வாழ்கலைசைவானவர்க்கடித்தொழி
லல்லுமெல்லுமாற்றுமன்பர்வேண்டிலஞ்சுபூதமு
மொல்லைமாற்றிவேறுசெய்யவல்லரும்பர்மாலயன்
றொல்லைவான்பதங்களுந்துரும்பெனக்கழிப்பரே. (25)
பரந்தெழுந்துமுப்பதிற்றிரண்டுபல்லையுந்திறந்
திரந்துபுல்லர்வாயிறோறுமின்றுகாறுமெவ்வமுற்
றரந்தையாலழிந்துளேனிதாற்றிலேனெனையனே
வரந்தராய்கலைசைவாழ்சிதம்பரேசவள்ளலே. (26)
வள்ளலென்றுபாரியென்றுமாரியென்றுவீணிலே
யெள்ளளவுமீகிலாரையேத்தியேத்தியாயுளைத்
தள்ளுவீர்கலைசைவாழ்சிதம்பரேசர்கீர்த்தியைத்
தெள்ளியோதுகிற்கிவீர்கணன்றுநுங்கள்செய்கையே. (27)
கைகள்கொண்டுநொச்சியைக்கரந்தையைப்பறித்தணிந்
தையனேயிரங்கெனத்துதித்திறைஞ்சிலண்டரு
மெய்தரும்பதத்திலுய்க்குமெம்பிரான்கலைசைவாழ்
சைவனென்றறிந்திலார்சழக்குரைத்துமாய்வரே. (28)
மாய்வதும்பிறப்பதும்வளர்ந்துமங்கைமார்முலை
தோய்வதும்புலன்வழிச்சுழல்வதும்பிணியினாற்
றேய்வதும்பவந்தொறுமெனக்கமைத்தசெல்வனே
யாய்கலைக்கலைசைமேவுமையவாழிவாழியே. (29)
வாழ்வுமிக்கதென்கலைசைவாணநின்னையேசில
ராழியங்கைமாயனென்பரம்புயத்தனென்பர்தேன்
வீழ்கடுக்கையீசனென்பர்வெய்யவங்கியென்பர்மா
வேழ்பரித்ததேரினண்ணலென்பர்மாயையாலரோ. (30)
வேறு.
மாயனாயினை மறையவனானாய்
மன்னுயிர்த்தொகையனைத்தையுமொடுக்கும்,
பாயுமால்விடை யுருத்திரனானாய்
பன்னுமூவர்க்கு மூல மாய்நின்றாய்,
ஞேயமாயினை ஞாதிருவானாய்
நிகழுஞானமுமாயினையெந்தாய்,
வேயதோளுமை பங்குறைநீல
மிடற்றனேதிருக்கலைசையுத்தமனே. (31)
தமோகுணத்தினிற் றிருவுருத் தரித்துச்
சத்துவத்தொழில் பூண்டநாரணற்குந்,
தமோகுணத்தொழி லழிப்பினைப்பூண்டு
சத்துவத்துருத்தரித்தசங்கரர்க்குந்,
தமோகுணத்துறா திராசதத்துருவந்
தாங்கியக்குணத்தொழிலுறுமயற்குந்,
தமோமயத்தினிற் றமியனாங்லைசைத்
தாணுநீயிறையாயிருந்தனையே. (32)
ஆயிரஞ்சிர மாயிரமுடிகளாயிரஞ்
செவியாயிரம்விழிக,
ளாயிரம்புய மாயிரஞ்சரண
மாயிரங்குண மாயிரந்தொழில்க,
ளாயிரம்பெயருடையநின்பெருமை
யையவென்மொழிக் கடங்குமோபத்தி,
யாயிரந்தவர்க்காயெனவுதவு மங்கணா
திருக் கலைசைமுக்கணனே. (33)
முக்குணங்களின் மூவரைத்தோற்றி
மூவருக்குமுத் தொழில்வகுத்தருளி,
யக்குணங்களுக் கதீதமாய்நிறைவா
யத்துவாக்களைக் கடந்தமேலுலகிற்,
றக்கநற்கண நாதரேத்தெடுப்பச்
சத்தியம்பிகையுடனருளுருவாய்த்,
தொக்ககோடிசூரிய ருதயம்போற்
றோற்றிநின்றனை கலைசைவிண்ணவனே. (34)
விண்ணவார்க்கெலா முன்னமுன்னிடத்தே
வேதனைப்படைத்தருளினையவனுக்
கெண்ணுவேதசாத் திரபுராணங்க
ளெவையுமோதுவித் தனையவன்றன்பாற்,
கண்னகன்புவி காத்தழித்தருளுங்
கடவுளோர்தமைத் தந்தனைகலைசை,
யண்ணலேயெலா முன்றிருவிளை
யாட் டாகுமாலுலகினுக்கொருமுதலே. (35)
ஒருகற்பத்தினி லரனைமுன்படைப்பா
யொருகற்பத்தினி லரியைமுன்படைப்பாய்,
வருகற்பத்தினி லயனைமுன்படைப்பாய்
மறு கற்பத்தினின் மூவரையொருங்கே,
தருவைமுற்படப் பிறந்தவர்
பிறரைத் தரவுஞ்செய்குவை நின்றிருவிளையாட்,
டருள்பழுத்ததென்கலை சைவாழ்முதலே
யாரறிந்தெடுத்தோதவல்லவரே. (36)
வல்லவானவர் கடல்கடைபொழுதின்
மறுகவந்தெழு மாலகாலத்துக்,
கொல்கியாவரு மோட்டெடுத்தலறி
யோலமிட்டெமக் குறுசரணுனையே,
யல்லதில்லையென் றரற்றிடுமந்நா
ளஞ்சலீரென வல்லைநீயல்லா,
லில்லைவேறெனிற் கலைசைவானவநா
னெவர்க்கடைக்கலம் புகன்றுபோற்றுவனே. (37)
போற்றிசெங்கதிர் மண்டலத்துறைவோய்
போற்றிசோமலோ கத்தமர்முதல்வா,
போற்றியன்பர்தம் மனக்குகையுடையாய்
போற்றியாரழற்சிகை நுனியமர்வோய்,
போற்றிநாரண னகத்தொளிர்விளக்கே
போற்றிதில்லையம் பலத்துநின்றாடி,
போற்றியென்றனைப்பதித்தசெஞ்சரணா
போற்றிதென்றிருக் கலைசைவானவனே. (38)
வானுளோர்களு மறைகளுமின்னும்
வருந்திநேடியும் வரம்புகண்டறியா,
தீனமுற்றலைந் துழன்றிடிற்சிறியே
னேதறிந்துனைப் பாடுவனெந்தாய்,
கானுலாமலர்க் குழலுமைபாகா
கலைசைமாநகர் மேவியவமுதே,
தேனுலாமலர்க் கொன்றையஞ்சடையா
திரிபுரங்களைச் சிரித்தெரித்தவனே. (39)
சிரித்தெரித்தனை புரங்களைவிழியைத்
திறந்தெரித்தனை மாரனையுகிரா,
லுரித்துடுத்தனை யுழுவையைச்சரணா
லுதைத்துருட்டினை காலனைவிரலா,
னெரித்தழித்தனை யரக்கனையென்பார்
நின்றயாவையு நீங்குநாளொருங்கே,
பொரித்தெரித்திட வல்லதென்கலைசைப்
புண்ணியாவுனக் கிவையுமோர்புகழோ. (40)
வேறு.
புகழ்ந்தவருக்கருள்பூங்கலைசைக்கோ
னகழ்ந்துபறந்தவரண்ணலனென்பார்
மகிழ்ந்துயர்கூடலின்மண்கள்சுமந்தே
யிகழ்ந்தடிபட்டனனென்பதுமென்னே. (41)
என்னையுமாளுமிருங்கலைசைக்கோன்
மன்னுலகுக்கொரு மன்னவனென்பார்
மின்னிடையார்மனையெங்கணுமேவி
யன்னமிரந்தனனாவதுமென்னே. (42)
ஆவகையன்பரையாள்கலைசைக்கோன்
மூவருமேவல்செய்முன்னவனென்பார்
நாவலர்கோன்விடநள்ளிருளின்க
ணேவலினேகினனென்றதுமென்னே. (43)
என்மனமேவுமிருங்கலைசைக்கோன்
பன்மறையும்மறியாப்பரனென்பார்
கொன்மிகுகூளிகள்கண்டுகைகொட்ட
வன்னடமாடினனாமிதுவென்னே. (44)
ஆமையினோடணியக்கலைசைக்கோன்
காமமறுத்தவர்கண்ணுளனென்பார்
தாமமலர்க்குழல்கொங்கைகடாக்கக்
கோமளமேனிகுழைந்தமையென்னே. (45)
குழைத்தெனையாண்டருள்கூர்கலைசைக்கோன்
வழுத்தபுகீர்த்தியின்மாமலையென்பா
ரிழித்தபுறச்சமயத்தவரெல்லாம்
பழித்திடநின்றருள்பான்மையிதென்னே. (46)
பான்மதிசூடுபரன்கலைசைக்கோன்
மான்முதலோர்தொழுமாமுதலென்பார்
மேன்மையில்வாணன்வியன்பதிவாயிற்
கான்மலைமாதொடுகாத்தமையென்னே. (47)
தமைத்தெளிவோர்தெளிதண்கலைசைக்கோ
னமைப்பருமாகருணாகரனென்பா
ரிமைக்குமுனண்டமெவற்றையுமொக்கக்
குமைத்திடுமச்செயல்கொண்டிடலென்னே. (48)
கொண்டலுரிஞ்செயில்கூர்கலைசைக்கோ
னண்டமெவற்றினுமப்புறனென்பார்
மண்டனில்விண்டனில்வான்றனில்யாருங்
கண்டிடநின்றுழல்காரணமென்னே. (49)
காரணகாரணனாங்கலைசைக்கோன்
பேருணர்வோர்க்கருள்பிஞ்ஞகனென்பா
ரோருணர்வின்றியுயங்குமெனக்கு
மாரருள்செய்திடுமற்புதமென்னே. (50)
வேறு.
அற்புதக்கலைசைமேவுமங்கணனளக்கொணாத
பற்பலவிளையாட்டெல்லாம்பரித்திடும்பான்மைநோக்கின்
முற்பவக்கடலின்மூழ்கிமுடிவின்றியுழலுமிந்தச்
சிற்றுயிர்களின்மேல்வைத்தகருணையாய்ச்சிறக்குமன்றே. (51)
அன்றுதொட்டின்றுகாறுமருமறைநான்குந்தேடி
நின்றலந்தோலமிட்டுங்காணொணாநிமலமூர்த்தி
யின்றமிழ்க்கலைசைவாணனியல்பினையிரண்டுநாளிற்
பொன்றிடுமனிதர்தேறியெங்ஙனம்போற்றுவாரே. (52)
போற்றிலேன்பூதிமெய்யிற்புனைந்திலேனெழுந்தோரைந்துஞ்
சாற்றிலேனக்கமாலைதரிக்கிலேனடியாரேவ
லாற்றிலேன்கலைசைவாழுமண்ணலேதறுகண்வெள்ளை
யேற்றனேயெளியேனந்தோவெங்ஙனமுய்யுமாறே. (53)
மாறிலாக்கருணைமேருமலைபழுத்தனையமெய்யு
மாறணிசடையுங்காளகண்டமுமழகுபூத்த
நீறணிமார்புமுள்ளேநிலவியநகையுமம்மை
கூறுமாய்க்கலைசைவாணனெனதகங்குடிகொண்டானே. (54)
கொண்டனையென்னையுன்னைக்கொடுத்தனைமலநோய்நீங்கக்
கண்டனைவினைகளெல்லாங்கழித்தனையுடலின்பாரம்
விண்டனைபரமானந்தம்விளைத்தனைகலைசைவாழு
மண்டனேயுண்டுகொல்லோவடியனேன்செயுங்கைம்மாறே. (55)
மாறினேன்சமயபேதவழிப்படும்புன்மையெல்லாந்
தேறினேன்வீடுசேர்க்குஞ்சைவசித்தாந்தமென்றே
யேறினேன்சிவலோகத்தேயிரண்டறக்கலந்தொன்றாகி
யாறினேன்வருத்தமெல்லாங்கலைசைக்கோவருளினாலே. (56)
அருள்வழிநடந்துபாசமறுக்குமாறுணரமாட்டீர்
மருள்வழிநடந்துமேன்மேல்வல்வினையீட்டவல்லீர்
தெருள்வழிகேட்பீராகிற்சிவபிரான்கலைசைவாழ்வை
யொருமுறையிறைஞ்சீரென்றுமின்பத்தேனுண்ணலாமே. (57)
உண்ணிறையமுதேயென்றுமுயிரினுக்குயிரேயென்றும்
பண்ணினல்லிசையேயென்றும்பழத்திடைச்சுவையேயென்றுங்
கண்ணினுண்மணியேயென்றுங்கலைசைவாழ்சிவமேயென்று
மெண்ணிநெஞ்சுருகியேத்தப்பெற்றவாறெளியனேனே. (58)
எளியனேனறிவிலாதவேழையேன்மடவாராசைக்
களியனேனுடலேயோம்புங்கடையனேனுலகவாழ்விற்
குளியனேனெனையுமாவாகுலப்புகழ்க்கலைசைக்கோமா
னளியனேனாகக்கைக்கொண்டாண்டவாறென்னேயென்னே. (59)
என்னையுமுனையுங்காட்டாதென்னுளேயன்றுதொட்டுத்
துன்னியமலவீரத்தின்றொடக்கறுத்தறிவுகாட்டிப்
பன்னருந்துரியாதீதப்பராபரநிலையிற்சேர்த்தா
யந்நிலைபிறழாவண்ணமளித்தருள்கலைசைவாழ்வே. (60)
வேறு.
வேயொன்றுதோளிமலையான்மடந்தைவிரிநீருடுத்தவுலகந்
தாயென்றிறைஞ்சுசிவகாமியம்மையொருபான்மணந்ததலைவன்
வாயொன்றுமன்பினடியார்கள்வாழ்த்து கலைசைப்பெரும்பதியில்வாழ்
தீயொன்றுகையனடியேயலாதுதெருளாதுசிந்தைபிறிதே. (61)
பிறப்போடிறப்பிலிதுகாறுநைந்துபிறிதொன்றுசார்புகிடையா
துறுப்பான்மயங்கிமடவார்வலைக்குளுழிதந்தலைந்தசிறியேன்
புறச்சார்புமற்றையகச்சார்புநீத்துனருளைப்பொருந்தவருளா
யிறப்பார்களென்புதலைமாலைசூடிகலைசைப்பதிக்குளிறையே. (62)
இறையென்றுநம்பிவழிபாடுசெய்யினிறவாதவின்பமருவக்
குறைவின்றிநின்றவடியார்குழாங்களொடுகூடிவாழவருளு
மறையொன்றுநாவன்முதலோர்கள்வாழ்வைமதியாதவீரமுதவும்
பொறைகொண்டசிந்தையவர்கோவிருந்தபுரமேவுமாதிமுதலே. (63)
முதலென்பதின்றிநடுவென்பதின்றிமுடிவென்பதின்றிமுழுதா
யதுவென்பதின்றியவனென்பதின்றியவளென்பதின்றியவையா
யிதுவென்றெவர்க்குமறியப்படாதவியல்பாகியுள்ளபொறுளா
மதிதங்குசோலைசெறிகோவிருந்தபுரமன்னுமெங்கள்சிவனே. (64)
சிவந்தாருமாவர்கரியாருமாவர்வெளியாருமாவர்செழும்பொன்
னுவந்தாருமாவர்பசியாருமாவரொளிவண்ணராவர்தழலாய்
நிவந்தேவிரிஞ்சர்முகில்வண்ணர்தங்கணினைவிற்குமெட்டவரியா
ரவந்தானிலாதகலைசைப்பதிக்கணமர்ந்தாருமாவரவரே. (65)
அவமேவிளைத்துமுழுமூடனாகியறிவென்பதின்றியழிவாய்ப்
பவமேவிளைக்குமுடலோம்பியென்றுநரகிற்படிந்துதுளைவேன்
சிவமேவிளைக்குமடியார்குழாங்களொடுசேருநாளுமுளதோ
தவமேவிளைக்குமுயர்கோவிருந்தபுரமன்னுசைவமுதலே. (66)
சைவத்தில்வந்துசரியாதிமூன்று தடையின்றி முற்றுபரவ
மைவைத்ததீயமலைபாகநோக்கிவினையொப்புறுத்திவழியான்
மெய்வைத்தஞானகுருவாகிவந்துகதியுய்க்கவல்லவிமலன்
செய்தற்றுடுத்தகலைசைக்குண்மேவுசிவனாகுமெய்ம்மையிதுவே (67)
இதுவன்றிவேறுசமயத்தைநம்பிலிலைமுத்தியுண்மையெனவே
மதமாறுதோறுமதிமாறுகொண்டுபலவாதமோதிமருள்வே
னதுதீரவாய்மையிதுவென்றுகாட்டியருள்செய்தசெய்கையெளிதோ
பொதுவாட்டுகந்துவளாகோவிருந்தபுரமன்னுஞானமணியே (68)
மண்ணீர்வீசும்புகனல்காலருக்கன்மதியாவியென்னுமுறையா
வெண்ணீர்மைகொண்டவிவையெட்டுமன்றியுலகென்பதில்லையிவையோ
யண்ணாவுனக்குவடிவாகுமென்னிலவைதோறுயிர்க்குயிரத்தாங்
கண்ணானதெய்வமெவா வேறுளார்கள்கலைசைப்பதிக்கிறைவனே. (69)
வனந்தோறலைந்துவிரதங்கள்பூண்டுசடைகட்டிவாடலுறினுந்
தனஞ்சேர்ந்துயர்ந்தகுலத்திற்பிறந்துசதுர்வேதமோதிவரினுந்
தினஞ்சாத்திரங்கள்பலகற்றுவாதுசெயவல்லரேனுமெவனா
மனந்தாதியானகலைசைச்சிவன்றனருளைப்பெறாதுவிடினே (70)
வேறு.
விடரொடுதூர்த்தர்பேதையர்கயவர்வேழம்பரனையரோடுறவாய்
நடையெலாங்கெடுத்தேயிழிதொழில்விரும்பு நாயினேனுய்யுமாறுளதோ
மடலவிழ்கமலவாவிகடோறுமாதரார்வளம்புனல்குடையந்
தடநெடும்பரிசைக்கலைசைமாநகர்வாழ்தற்பராசிதம்பரேசுரனே. (71)
சுரிகுழன்மடவாரிளமுலைப்பணைப்புந்
துகிலிறைசோர்வதுநகையும்,
வரிவிழித்தொழிலுஞ் சேயிதழ்த்துடிப்பு
மனத்திடை யெழுதிவைத்தழிவேன்,
றெரிதமிழ்க்கலைசைச் சிவபிரான்
வடிவுஞ்செய்கையுந் தன்னடியார்க்குப்,
பரிவுகூரருளு மனத்தகத்தெழுதாப்
பாவியேற் கினிப்புகலென்னே. (72)
என்பினைநரம்பாற் கட்டி மேற்றோல்போர்த்
திறைச்சியு மூளையுமடைத்த,
வன்புழுக்குரம்பை நாற்றமென்னாது
மஞ்சளு மாடையுமணியு,
முன்புறநோக்கி மாதரென்றெண்ணி
முயங்கிட முயலுதிநெஞ்சே.
யன்புறுங்கலைசைச் சிதம்பரேசுரன்றா
ளடைந்துளோர் மதிப்பரோவனையே. (73)
உன்னுமுன்கடலு மலையும்வானகமு
மோடுவைமீளுவைவறிதே,
பன்னிடுமெல்லாங் கிடைத்ததாய்மதித்துப்
பாவனைசெய்து தேக்கிடுவா,
யென்னிதிற்பயனென் றோர்ந்திலாய்கலைசை
யீசனைப்பணிந்திலா யெளியேன்,
றன்னையுமுடன்கொண் டிழுத்திழுத்தலைத்தாய்
தக்கதோ மனக்கருங்குரங்கே. (74)
மனக்கருங்குரங்கின்கைவசப்பட்டு
மயங்கினேன்பதைபதைத்துருகேன்,
கனக்கறைமிடற்றாயென்றழைத்தலறேன்
கலைசையைச்சேர்ந்திலேனடியா,
ரினக்குழாத்தெய்திச்சிவநெறி
யொழுகேனென்செய்கேனேழையேனந்தோ,
வுனக்கெவனடுத்ததாவவென்றருளா
யுலந்துபோனேன்சிவமுதலே. (75)
சிவனெனுமொழியைக்கொடியசண்டாளன்
செப்பிடினவனுடனுறைக,
வவனொடுகலந்துபேசுகவனோடரு
கிருந்துண்ணுகவென்னு,
முவமையில்சுருதிப்பொருடனை
நம்பாவூமரோடுடன்பயில்கொடியோ,
னிவனெனக்கழித்தாலையனேகதி
வேறெனக்கிலைகலைசையாண்டகையே. (76)
ஆண்டவன்றன்னை யடிமையென்றுரைப்பா
ரடிமையையாண்டவனென்பார்,
மாண்டகுபதியைப் பசுவென்றும்பசுவைப்
பதியென்றுமதித்துனையிகழ்ந்தே,
தாண்டருநிரயக்கிடங்கினில்
வீழுஞ்சழக்கரோடிணங்குறாவரமே,
வேண்டினேனருளாய் கலைசைமாநகரின்
மேவிவாழ்ந்தருள்பசுபதியே. (77)
பதியுமோகத்தான்மானத்தான்மருளாற்
பற்றியசார்பினாலுன்னைத்,
துதிசெயாதிகழ்வோரிகழுககலைசைச்
சுந்தராசிதம்பரேசுரனே,
மதிபொதிசடையா யாங்களெல்லோமும்
வழிவழியுன்னடித்தொழும்பே,
நிதியெனவுடையேமென்றுமிக்கருத்தே
நிலைபெறச்செய்துகாத்தருளே. (78)
அருண்மடைதிறந்தநோக்கமும்
வரதாபயங்களுமம்புயக்கரமுந்,
திருமுகப்பொலிவுங்குறுநகையழகுஞ்
செஞ்சுடர்மகுடமுமரையின்,
மருவுதோலுடையுஞ்சேவடித்துணையு
மகிழ்சிவகாமநாயகிசே,
ருருவுமாய்க்கலைசைச்சிதம்பரேசுரரென்னுள்ள
கங்கோயில்கொண்டனரே. (79)
கொண்டல்போன்முழங்கிக்
கூற்றுவனெதிரேகுறுகிடநாடியுந்தளரக்,
கண்டவரிரங்கவைம்பொறிகலங்கக்
கண்டமேலையெழுந்துந்தி,
மண்டிடவறிவுகலங்குமந்நாளுன்
மலரடிவழுத்திடமாட்டே,
னண்டர்சூழ்கலைசைப்பராவின்றே
யடைக்கலங்கண்டுகொண்டருளே. (80)
வேறு.
அருவினனுருவினனருவிலனுருவில
னிருளினனொளியினனிருளிலனொளியிலன்
மருவளர்கலைசையின்மகிழ்பவனிகபர
மிருமையுமெழுமையுமெனையுடையவனே. (81)
அவனவளதுவெனுமவைதொறும்விரவினை
யிவனவனெனவுணர்வரியதொரியல்பினை
தவமலிகலைசையின்மருவியதகுதியை
சிவனெனுமொழியினையிவையுனசெயலே. (82)
செயலெவரறிபவர்திருவளர்கலைசையின்
மயிலியலுமையொடுமகிழுவைமதனுட
லியலறவெரிசெய்துமுனியெனவடநிழ
லயலினுமமர்குவையதிசயமரனே. (83)
அரகரகரவெனவலறிடுபுலவரொ
டரியயன்வெருவுறவருமிடமமுதுசெய்
தரிலறுமமரரென்னொருபெயரமைவுற
வருள்பவர்கலைசையிலரனலதிலையே. (84)
இலவிதழ்மடநடையுமையொடுமிரசத
மலைமிசையமர்பவர்மகிழ்தருமிடமா
நிலைபெறவளமையுநிதிகளுமளவறி
கலைகளுநிறைவுறுகலைசைநன்னகரே. (85)
நகவலர்திரிபுரநலிவுறவழலென
மிகவலரரியயன்வெருவுறவுளமது
புகவலர்மதனுடல்பொடிபடவிழியெரி
யுகவலர்கலைசையினுறையிறையவரே. (86)
இறையவனிறையினிலியமனையுதைசெய்த
நிறையவனிறையுறுகலைசையினிலவிய
மறையவன்மறைவறவளரடியவரக
வறையவனறைபுனலவிர்சடையவனே. (87)
சடைமுடியரவணிதலைகலன்வனமிட
முடையுரிகழுதினமுணவதுபலியெனு
மடைவினர்கலைசையினடிகளையவனியி
னிடையிறையெனவழிபடுபவரெவரே. (88)
எவனுலகுயிர்தொறுமிசைவுறுமருவின
னெவனவரவர்தமைவினைவழியிருவின
னெவனெனையுடையவனிணையறுபரசிவ
னெவனவனுயர்கலைசையில்வருமிறையே. (89)
இறவொடுபிறவியினிழிதருமெளிய
னிறைசுகவடிவினிலைபெறவருளின
னறிவொடுவழிபடுமடியவர்குழுமிய
செறிவுறுகலைசையில்வருபரசிவனே. (90)
வேறு
சிவந்தமேனியாய் போற்றிநாயினேன்
செய்திடும்பெரும்பிழைபொறுத்துவான்,
சிவந்தரும் பெருங்கருணைபோற்றிகற்
சிலைவளைத்து முப்புரங்கணீறெழச்,
சிவந்தவாளியாய்போற்றிகாலனைச்
சிதைத்துருட்டியன்றோலமென்னவஞ்,
சிவந்தபாலனைக்காத்தளித்திடுஞ்
செல்வபோற்றி தென்கலைசைவாணனே. (91)
வாணனார்மனச்செருக்குமாறிட மறுவில்
கண்ணனையேவல்கொண்டுபின்,
னாணுறாதவர்க்குனதுகோயிலி
னடனகாலையிற்குடமுழக்கிடக்,
கோணமால்வரங்கொடுத்தளித்திடுங்குழக
போற்றிதென்கலைசைமேவிவாழ்,
நீணிலாப்பிறைச்சடிலமாமுடி
நிமலபோற்றிமற்றெங்கண்மன்னனே. (92)
எங்குநோக்கினு மங்கெலாமெனக்
கிருண்டகண்டமு நான்குதோள்களுங்,
கங்கைவேணியுமுக்கணுஞ்
சிவகாமிபாகமும்கமலபாதமுஞ்,
செங்கைமான்மழுப்படையுநீற்றொளி
சிறந்தமார்பமுங்காணவெய்திநின்,
றங்கணச்சநீத் தருள்சுரந்திடுங்
கலைசைவாணநின் னடிகள்போற்றியே. (93)
போற்றிபோற்றியென்றமரர்மாதவர்
புவியுளோர்திரண்டிசைமுழக்கிட,
நீற்றொளிச்சிவநேசர்வாழ்த்தவின்
னியங்களார்ப்பெழத்தெரிவைமாரிளங்,
காற்றினொல்குபூங்கொடியினாடிடக்
கலைசைவீதியிற்கௌரியோடுநீ,
யேற்றின்மேல்வருஞ்சேவைதந்தெனை
யாண்டுகொண்டவாபோற்றியெந்தையே. (94)
எந்தைநீயெமக் கன்னைநீயெமக்
கிறைவனீயெமை யாண்டநாயனீ,
சிந்தைநீசெய்யுஞ்செயலுநீபெறுஞ்செல்வ
நீதொழுந்தெய்வநீகற்கும்,
விந்தைநீயெப்பில்வைப்புநீநசை
வெறுப்புநீயலால்வேறுகண்டிலேங்,
கந்தவார்பொழிற்கலைசைவாழ்
சிவகாமியாகநின்கருணைபோற்றியே. (95)
கருணையாளனேபோற்றிதென்பெருங்கலைசை
யாளனேபோற்றிநின்னலா,
லுரிமைவேறிலேன்போற்றிபாசநோயொழியுமாறு
செய்போற்றியாட்கொளக்,
குருவுமாயினாய்போற்றிவீட்டினைக்
கூடவேண்டினேன்போற்றிஞாலமேற்,
பருவராதருள்போற்றியிவ்வுடற்
பாரமாற்றிலேன்போற்றியையனே. (96)
ஐயனேயடிபோற்றிபேரரு ளாளனேயடி
போற்றியன்பர்பான்,
மெய்யனேயடி போற்றிதில்லைவாழ்
வித்தகாவடி போற்றிபொய்யர்தம்,
பொய்யனேயடி போற்றியீறிலாப்
புராணனேயடி போற்றிமான்மழுக்,
கையனேயடி போற்றிதென்பெருங்கலைசை
யாயடி போற்றி போற்றியே. (97)
போற்றிபோற்றிபேரின்பஞானமாப்
புணரியாய்நிறைந்தெங்குமாயினாய்,
போற்றிபோற்றியோர்மறுவிலாப்
பெரும்புகழ்படைத்தவானந்தவெள்ளமே,
போற்றிபோற்றிமெய்யன்பர்
சிந்தையிற்பொங்கியூறுதீஞ்சுவைக்கரும்பனே,
போற்றிபோற்றிதென் கலைசைவைப்பனே
பொறுக்கிலேனினிமாயவாழ்க்கையே. (98)
மாயனைக்கணையாகவேவினைமாயனைவிடையாகவூர்ந்தனை
மாயனைத்திருமனைவியாக்கிமுன்மணந்துசாத்தனைத்தந்தளித்தனை
மாயனுக்கொருபாகமீந்தனைமாயனுள்ளமேகோயில்கொண்டனை
மாயனேத்திரமலர்ந்ததாளினாய்வரதபோற்றிதென்கலைசையீசனே. (99)
ஈசனேதிருக்கலைசைமேவிவாழிறைவனேசிவகாமநாயகி
நேசனேயருட்சிதம்பரேசனேநித்தநித்தநெக்குருகியேத்துவோர்
பாசவேரறப்பறிக்குநின்னிருபாதபங்கயம்போற்றிபொய்யெலாம்
வீசிமேலைவீட்டின்பநல்குவாய்மெல்லமெல்லவந்தெனைத்திருத்தியே. (100)
ஆகச்செய்யுள் - 101.
கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி முடிந்தது.
மெய்கண்டதேவர் திருவடி வாழ்க.
சிவஞானயோகிகள் திருவடி வாழ்க.
------------
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்.
5.2 கச்சிஆனந்தருத்திரேசர் பதிகம்.
ஐந்தையாறினையடக்கியருந்தவம்புரியாரேனும்
வந்தையாவெனவெல்லோரும்வணங்கிடவாழலாமால்
முந்தையாறிரண்டுதன்மமுதல்விசெய்மூதூர்வாழும்
எந்தையானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே. (1)
குடங்களிற்பணைத்தணாந்தகொங்கைமால்களிறுமல்குற்
படங்களுங்கொடுமின்னார்செய்பருவரல்பாற்றலாமால்
மடங்களைந்தறிவான்மிக்கமாதவர்மனம்போற்காஞ்சி
இடங்கொளானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே. (2)
வருந்தலாதெண்ணெண்கல்விவாய்க்குமெண்செல்வப்பேறு
பொருந்தவாயுகங்கணூறும்புகழுடன்பொலியலாமால்
திருந்தவால்வளையுமுத்துஞ்செய்தொறுஞ்செறிதென்காஞ்சி
இருந்தவானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே. (3)
பொறைதவமறிவொழுக்கம்புத்திரமித்திராதி
குறைவறுசெல்வம்யாவுங்குலவவீற்றிருக்கலாமால்
மறையொலிமுரசந்துஞ்சாவளநகர்க்காஞ்சிவாழும்
இறைவனந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே. (4)
ஆசைவேரகழ்ந்துவெண்ணீறஞ்செழுத்தக்கமாலை
பூசியுச்சரித்துப்பூண்டபுனிதரோடிணங்கலாமால்
யோசனைகமழுய்யானமுடுத்திடுங்காஞ்சியூர்வாழ்
ஈசனானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே. (5)
பானந்தங்கையிலேந்தும்பைந்துழாய்மார்பன்முன்னாம்
வானந்தங்கமரர்யாரும்வணங்கவாழ்ந்திருக்கலாமால்
கானந்தண்பொழிலிலாறுகால்செயுங்கச்சிமூதூர்
ஆனந்தருத்திரேசனடித்துணையிறைஞ்சினோர்க்கே. (6)
கங்கணான்குள்ளான்முன்னுங்கருமமுங்காரானூர்தி
செங்கையார்பாசந்தன்னாற்சிமிழ்த்தலுந்தீரலாமால்
அங்களாலுயர்ந்தகாஞ்சியகநகரமர்ந்துவாழும்
எங்களானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே. (7)
விழிகளான்மாதர்நாளும்விளைந்திடும்வேட்கையாய
குழிகளாடுற்றுவீழுங்கொடுந்துயர்குமைக்கலாமால்
வழிகளார்சோலைசூழ்ந்தமாமதிற்கச்சிவாழும்
எழில்கொளானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே. (8)
இருக்கெலாமளவிட்டின்னுமினைத்தெனவறியவெட்டாத்
திருக்குலாவியபேரின்பச்செழுங்கடறிளைக்கலாமால்
மருக்கலாரங்கண்மொய்த்தவாவிசூழ்காஞ்சிவாழ்வுற்
றிருக்குமானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே. (9)
மாந்தளிரியலார்செம்பொன்மண்ணெனுமார்வவாரி
நீந்திமேலானமுத்திநீள்கரையேறலாமால்
காந்துபொன்மாடஞ்சூழ்ந்தகச்சியம்பதிவாழ்கங்கை
ஏந்துமானந்தருத்திரேசனையிறைஞ்சினோர்க்கே. (10)
ஆனந்தமலைபோலோங்குமம்பலத்துமையாணங்கை
ஆனந்தமகிழ்ச்சிபூப்பவானந்தவமிழ்தமூறி
ஆனந்தநிருத்தஞ்செய்யுமங்கணன்கச்சிமூதூர்
ஆனந்தருத்திரேசனடியிணைக்கன்புசெய்வோம். (11)
திருச்சிற்றம்பலம்.
மெய்கண்டதேவர் திருவடிவாழ்க.
சிவஞானயொகிகள் திருவடிவாழ்க.
-------------
உ
கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.
5.3 திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு.
ஆனந்தமானந்தந்தோழி - கம்பர்
ஆடுந்திருவிளையாட்டினைப்பார்க்கில்
ஆனந்தமானந்தந்தோழி.
ஒன்றுவிட்டொன்றுபற்றாமல் - என்றும்
ஒன்றுவிட்டொன்றினைப்பற்றவல்லாருக்
கொன்றுமிரண்டுமல்லாமல்-நின்ற
ஒன்றினைவாசகமொன்றிலளிப்பார், ஆனந்தம்.
இரண்டுவினையால்விளைந்த-வகை
இரண்டையுங்காட்டியென்சென்னியின்மீதே
இரண்டுசரணமுஞ்சூட்டி-அஞ்சில்
இரண்டையிரண்டிலடக்கவல்லாராம், ஆனந்தம்.
மூன்றுலகும்படைப்பாராம்-அந்த
மூன்றுலகும்முடனேதுடைப்பாராம்
மூன்றுகடவுளாவாராம்-அந்த
மூன்றுகடவுளர்காணவொண்ணாராம், ஆனந்தம்.
நாலுவருணம்வைப்பாராம்-பின்னும்
நால்வகையாச்சிரமங்கள்வைப்பாராம்
நாலுபாதங்கள்வைப்பாராம்-அந்த
நாலுக்குநாலுபதமும்வைப்பாராம், ஆனந்தம்.
அஞ்சுமலமஞ்சவத்தை-பூதம்
அஞ்சுதன்மாத்திரையஞ்சிந்திரியம்
அஞ்சுதொழிலஞ்சுமாற்றி-எழுத்
தஞ்சுமஞ்சாகவமைக்கவல்லாராம், ஆனந்தம்.
ஆறாறுதத்துவக்கூட்டம் -உடன்
ஆறத்துவாக்களு மாதாரமாறும்
ஆற்றுகுற்றங்களுநீங்க-இரண்
டாறின்முடிவினடனஞ்செய்வாராம், ஆனந்தம்.
ஏழுபுவனப்பரப்புங்-கடல்
ஏழுஞ்சிகரிகளேழும்பெருந்தீ
ஏழும்பிறவிகளேழும்-இசை
ஏழும்படைத்தவிறைவரிவராம், ஆனந்தம்.
எட்டுவடிவுமாவாராம்-அந்த
எட்டுவடிவுக்குமெட்டரியாராம்
எட்டுக்குணமுடையாராம்-பத்தி
எட்டுமுடையோரிதயத்துளாராம், ஆனந்தம்.
ஒன்பதுமொன்பதுமொன்றும்-மற்றை
ஒன்பதுமுப்பதுமொன்பதுமொன்றும்
ஒன்பதுமொன்பதுமொன்றும்-பின்னும்
ஒன்பதுமானவைக்கப்புறத்தாராம், ஆனந்தம்.
பத்துத்திசையுடையாராம்-பத்துப்
பத்துப்பத்தாந்திருப்பேருடையாராம்
பத்துக்கரமுடையாராந்-தவம்
பத்தினிலொன்றுபத்தாகச்செய்வாராம், ஆனந்தம்.
ஞானமுஞேயப்பொருளும்-பற்றும்
ஞாதாவுமில்லையென்பார்க்கரியாராம்
ஞானமுஞேயப்பொருளும்-பற்றும்
ஞாதாவுமாய்ப்பகுப்பார்க்குமெட்டாராம், ஆனந்தம்.
மெய்யிலணிவதும்பாம்பு-மலை
வில்லினினாணாய்விசிப்பதும்பாம்பு
கையிற்பிடிப்பதும்பாம்பு-அவர்
காட்டினநாடகங்காண்பதும்பாம்பு, ஆனந்தம்.
நாதத்துடியினடிப்பும்-மெல்ல
நடந்துநடந்துநடிக்குநடிப்பும்
வேதம்படிக்கும்படிப்பும்-நுதல்
மீதுவிளங்குகுறுவேர்ப்பொடிப்பும், ஆனந்தம்.
கையிற்கபாலத்தழகுந்-திருக்
காலினிற்பாதுகைசேர்த்தவழகும்
மெய்யணிநீற்றினழகும்-மையல்
மீறுங்குறுநகைமூரலழகும், ஆனந்தம்.
உடுப்பதுகாவியுடையாம் - மறை
ஓதிமந்தேடுஞ்சிரமேற்சடையாம்
எடுப்பதுபிச்சையமுதாம் - மார்பில்
ஏற்பதுகாமாட்சிகொங்கைச்சுவடாம், ஆனந்தம்.
ஆனந்தக்களிப்பு முடிந்தது.
மெய்கண்டதேவர்திருவடிவாழ்க.
சிவஞானயோகிகள்திருவடிவாழ்க.
உ
கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
5.4 சிவதத்துவவிவேக மூல மொழிபெயர்ப்பு
பாயிரம்.
உலகெ லாந்தன தொருசிறு கூற்றினு ளமைய
வலகி லாற்றலா னிறைந்தவ னெனவரு ணூலோர்
குலவி யேத்துவோ னெவனவ னுமையொரு கூற்றி
னலர்க றைக்களச் சிவபிரா னடியிணை போற்றி. (1)
வேறு.
செவியுற வாங்கி மோகத் திண்படை சிலையிற் பூட்டுங்
கவிகைவேண் மடியச் சற்றே கறுத்தியோ குறையும் பெம்மான்
குவிதழை நிறையப் பூத்த கோழிணர்ப் பதுமச் செங்கே
ழவிர்தரு விழித்தீக் கென்றன் வினையிலக் காகு மாலோ. (2)
வேறு.
திருமாலிந் திரன்பிரம னுபமனியன்
றபனனந்தி செவ்வேளாதி,
தருமமுது குரவருக்குந் தனதருளா
லாசிரியத் தலைமை நல்கி,
வருமெவர்க்கு முதற்குருவாய் மெய்ஞ்ஞான
முத்திரைக்கைம்மலரும் வாய்ந்த,
வுருவழகுங் குறுநகையுங் காட்டியரு
டருஞ்சிவனை யுளத்தில் வைப்பாம். (3)
வேறு.
எல்லை யில்கலை யென்னுங் கொடிபடர்
மல்லல் வான்கொழு கொம்பரின் வாய்ந்தருள்
கல்வி ஞானக் கடலமு தாயசீர்
பல்கு தேசிகர் பாத மிறைஞ்சுவாம். (4)
வேறு.
மறைமுடிவிற் பயில்கருத்து மன்னியமெய்ப் பொருள்விருப்புங்
கறைமிடற்றோன் றிருவடிக்கீழ் மெய்யன்புங் கடுந்துயர்நோய்
பறையவரு மிம்மூன்றும் பரிந்தியல்பாக் கிடைத்தமன
நிறையவுடையோ ரேவரவர் நீடுழி வாழியவே. (5)
பரசி வன்றன துயர்ச்சியே தெரிப்பதிற் பகரொருப் பாட்டிற்றா
யரிய காலாகதிர் வியாதனா தியர்மொழி யால்விளங் கிடுநீர்த்ரய்த்
திரிவு காட்சிய ருளத்துறு தறிநிகர் செம்பொருட் கோவைத்தாய்
விரியு நீருல கினுக்கிதந் தருமுதல் வித்தையோங் குகமாதோ. (6)
வேறு
எட்படுநெய் யெனவுயிருக் குயிரா யெங்கு
மேகமாம் பகவதிதாளேத்துஞ் செய்யுள்,
விட்பருமுண் ணிறைந்தபொருட் சுவையனாய்
மேலோர்தம் வழிச்செல்லு மறுபா னுக்கு,
முட்கருத்து வெளிப்படுப்ப விழிந்த மார்க்கத்
துழல்வோர்தம் பிதற்றுரைகட் கணுகொ ணாத,
நட்புடைய வுரையீண்டுச் செய்ய லுற்றே
னல்வழிச்சல் வறிவாளர் நயக்குமாறே. (7)
நூல்.
நின்பெருந் தன்மை வானவர் தமக்கு
நிகழ்த்தரி தாதலின் மனித,
னன்பொடும் வழுத்த விழைந்தடி
னகையே யடைவதற்கையமின் றேனு,
முன்பெயர் கருதும் பெருந்தவ வருவா
யொருவழி யாற்கிடைத் திடுக,
வென்பதோர் மதிவந் தென்னையீர்த்
தெழுமா லெங்கணு நிறைந்தபூ ரணனே. (1)
விச்சுவா திகனும் விசுவசே வியனும்
விமலநீ யேயென மறைக,
ணிச்சய மாக முழக்கவு மறியா
நீசர்தாம் பிணங்குவ ரந்தோ,
மச்சரத் துனக்கே தீங்கிழைத் தவர்தம்
வாழ்க்கையும் பயன்படா தாலத்,
துச்சர்சொற் கேட்டோர்க் கிறுதலே
தண்டஞ்சொற்றிடு நூலெலா மன்றே. (2)
ஏழைய ரிருகாற் பசுக்கண்மற் றிவரா
லியன்றிடத் தக்கதொன் றிலையே,
வாழிய நலந்தீங் கறிந்துயி ரியற்ற
வல்லதோ யாங்கணும் விரவிச்,
சூழுநீ யெவ்வா றசைந்தனை யவ்வா
றசைதலிற்சுதந்திர மிலதாற்,
பாழிமால் விடையா யவ்வுயி
ரந்தோ பழித்திடுந் தகையதொன் றன்றே. (3)
கீதநான் மறையு ளோரொரு விதிவாக்
கியங்களைப் பற்றிநல்வேள்வி,
யாதிகண் முயலத் துணிபவ ரெல்லா
வருமறை முடிவினு முழக்கு,
மேதகு முனது தலைமையைத்
துணியா தொழினரோ விளங்கிழை யொருபா,
னாதனே யவர்தாம் பரவசத் தினவும்
நணுகில ராயிடின் மன்னோ. (4)
உன்றனை யெதிரே கண்டுமம் புயத்தோ
னணர்ந்திலன் மால்சொல வுணர்ந்தான்,
வென்றிவெள் ளானைப் பாகனு முமையாள்
விளம்பிடத் தேர்ந்தன னிமலா,
மன்றலந் துளவோ னயனுடனுன்னான்
மயக்கறுத் துணர்ந்தன னென்றா,
லின்றுனை யேழை மானுட ரறியா
ரென்பது மாயவேண் டுவதோ. (5)
உன்றிரு வடிக்கி ழுறுதியா மன்பு
முன்றிரு வருளினாற் கிடைப்ப,
தன்றிநூல் பலவு மாய்ந்ததா லுரைசெ
யளப்பருந் திறனையான் மதியான்,
மன்றவே கிடைப்ப தன்றுமற் றதனை
மாதவஞ் செய்திலாக் கயமை,
துன்றிய புலையோர் யாங்ஙனம்
பெறுவார் சோதியே கருணைவா ரிதியே. (6)
உலகர்சே ருறுதிப் பயனெவற் றினுக்கு
முறைவிட மாய்த்துயர் முழுதும்,
விலகுறத் துமிக்குங் கணிச்சியா முன்றாள்
விரைமலர்க் கியற்றுமெய்ப் பத்தி,
யலகிலாப் பிறவி தொறும்புரி தவத்தா
லல்லதெள் வாற்றினு மரிதே,
நலமதொன் றடைதற் குறுமிடையூறு
நாதனே பலவுள வன்றே. (7)
பலவகைப் பவந்தோ றெய்திடுந் தவத்தோர்
படர்ந்தெழு மகத்திருள் கடிந்தோர்,
நலமுறு மியம நியமநற் செய்கை நயந்துளோ
ருனைப்பெற முயல்வார்,
கலியுறு நவைசே ருளத்தவ ரசுரக்
கடுமையர் ததீசியா திகளா,
லலமரச் சபிக்கப் பட்டுளோ ரெவ்வா
றறிவரோ வையநின் றனையே. (8)
அளவிலுன் பெருமை யறியவு முன்றாட்
கழிவிலா வன்புவைத் திடவுந்,
தளமல ரெடுத்துன் னருச்சனை யாற்றிச்
சாலநின்றிருவருள் பெறவும்,
வளமலி புலியூ ரம்பலத் தமுதே
மலர்தலையுலகனுட் சுரும்ப,
ருளர்துழாய்ப் படலை மார்புடை
யண்ண லொருவனே வல்லனா மன்றே. (9)
தணப்பிலா நிரதி சயமதாஞ் சச்சி தானந்த
வடிவமாய்த் துவிதப்,
பிணக்கிலி பரமான் மாவெனுந் தகைத்தாய்ப்
பிரதியக் காயுபநிடதத்,
திணக்குறு மகண்டப் பொருள்களா
லுணரு மியல்பதா யனந்தமா யோங்குங்,
குணிப்பருஞ் சோதி யாகிநிற் கின்றாய்
கோதிலாச் சிவபரம் பொருளே. (10)
குணங்களைக் கடந்தோ யெனினுமா
யையினைத் தோய்தலாற் குணமுடை யவன்போ,
லணங்கொரு பாலுங் கறைமிடற்
றழகுமம்பக மூன்றுமா முருக்கொண்,
டிணங்குறு நாமஞ் சிவன்பவன்முதலா
வியைந்தய னரியரன் முன்னா,
முணங்கிடா வுலகை நடாத்துவோ னாகி
யோங்கினை நீங்கரும் பொருளே. (11)
(அதர்வசிகை)
முளரியோன் முதலாஞ் சுரரெலாம் பூத
முதலவற் றோடுதித் துள்ளோ,
ரளவிடுந் தலைமை யாளரென் றவரை
யகற்றிமால்விடையவ நினையே,
வளமுறு மெல்லாத் தலைமையு
முடையோன்வருமுதற் காரண னல்லோ,
ருளமுறு தியானப் பொருளெனச்
சிகைதேர்ந் துரைப்பவு மயங்குவர் சிலரே. (12
மறையகத் தெல்லாத் தலைமையோ
ரொருபால் வகுத்திடுங்கேவல மதுதா,
ளிறைவனே யிவ்வா றம்புயன் முதலோ
ரினும்பிரித் துத்தியால் விளக்கா,
தறைதருமிதனான் முரணுழி
வேறோராற்றினாற் போக்கவற் றாமற்,
கறைமிடற் றடக்கி யேழைவா
னவரைக் காத்தருள் கருணைமா கடலே. (13)
கதித்தெழும் பொருளா லுனைவிளக்
கிடுங்கா ரணபத மனுவதிப் பென்னாப்,
பொதுக்குணம் பொதுச்சொற் பற்றியே
தொடக்கம் புகல்பொருண் மாயவன் றானே,
யிதற்கெனத் துணியா விறுதியும் வலியா
லிம்முறை யேற்றிமற் றொருவ,
னதிர்ப்புற மருளின் மருளூக பிறரு
மந்நெறிப் படருமா றெவனோ. (14)
(சுவேதாச்சுவதரம்.)
தற்பரா வுலகுக் காதிகா ரணந்தான்
றலைமையி லுயிருடன் சடத்தைச்,
சொற்றிடிற் பழுதாற் பிரமமா மெனவே
துணிந்துபின் பிரமமா ரென்றாய்,
வுற்றிடு மான்றோ ருமையரு ணோக்கா
லுணர்ந்தனர் நீயென வென்னா,
வற்புறச் சுவேதாச் சுவதர மென்னு
மறைமுடி வுரைத்திடு மன்றே. (15)
படைப்புறு முறைமை சொலற்கெழுஞ் சுருதிப்
பரப்பெலாம் பிறிதொன்றன் பொருட்டாய்க்,
கிடைத்தலா லவற்றுட் காரண பதத்தைக்
கிளத்தலாந் தன்பொருள் படாமை,
விடைக்கொடி யாயீண் டீசனென் றரனென்
றெடுத்து மெய்க் காரணந் துணிதற்,
கடுத்தெழு மொழியுந் தன்பொருள் படாதே
லாவினித்துணிவென்ப தெங்கே. (16)
இதனுளெப் போது தமமது பகலன்
றென்னுமந் திரமுனையுணர்த்தி,
யிதமுறு மேனைக் காரணமொழிகள்
யாவுநின் பாலுறச் செலுத்தி,
மதமுறு மருளோ ரவற்றினைப்
பிறர்மேல் வகுப்பதைப் பயன்படா தாக்கு,
மதனுடல் பொடிப்ப நுதல்கிழித்
தெழுந்த வாளெரி காட்டிய முதலே. (17)
மநுவிதிற் சிவச்சொல் வேறுள சுருதி
யாம்புரோ வாதத்திற்றெரிக்கும்,
புனிதமாம் பொருளே சாற்றிடு
மெனிலெப் போதினுமாதிகா லத்தை,
யனுவதித் துன்ற னுண்மையை
விதியா தாயின்மற் றென்செயப் புகுந்த,
தினியபே ரின்பத் தண்ணருள்
கொழிக்கு மெம்பிரா னிந்தமந் திரமே. (18)
பெரிதுமா னத்தா லுயர்ந்தவள் பிறரைப்
பேசிடா வரன்சிவன் முதலா,
மரியநின் னாமக் குருமணிக் கோவை
யாலுடன் முழுதலங் கரித்தாள்,
கரியவற் கரியாய் நின்னொடொப்
பவரே கருதினு மிலையெனத் துணிந்துன்,
றிருவடிக் கேதன் கருத்தெலா
மமைத்தாள் சீருப நிடதமா மிவளே. (19)
புருடசூத் தத்தின் மந்திர மிதனுட்
பொருந்தினு முனைக்குறித் திடும்பல்,
சுருதியா னியமித் ததனையெவ் வாறு
துரக்குமிம் மறைமுடி வதாஅன்று,
திருவுருத் திரத்து மந்திரம் பலவுஞ்
சிறப்பவீண் டுறுதலா லறியாக்,
குருடர்தா மதனாற் றுணிவது தகுமோ
கோமளக் குணப்பெருங் கடலே. (20)
உருத்திர மனுக்கண் முன்னரும் பின்னு
முரைக்குமீண் டாதலா லிவைதாந்,
தெரித்துற விளக்கு நின்றிருப் பெயராற்
சிறத்தலா லுருத்திர மோதல்,
கருத்தனா முனக்கே நிச்சயித் ததனாற்
கதம்பயி லெறுழ்விடைப் பாகா,
வருத்தியா லவற்றை யுரைத்ததே யீண்டைக்
களந்தறிந் திடச்செயு மெமக்கே. (2)
உரைக்குமீ சானச் சுருதியாற் றெரிக்கு
முன்னிடத் தெய்துமென் பதுவே,
பொருத்தமாம் புருட சூத்தத்தின் முடிவு
புனைமலர்க் கருங்குழல் பாகா,
விருப்புறு மேனோர் பூசனை விதியுள்
விளம்பினு மவ்விதிக் கேற்பக்,
கருத்துறும் பொருட்டுப் பொருள்விரித்தறவோர்
காட்டினு மிதுவழுப் படாதே. (22)
(அதர்வசிரசு.)
அனைத்துயிர் களுமாந் தன்மையும்
விண்ணோ ராற்றொழு தகைமையு மரனே,
யுனக்குரைத் தயன்மான் முதலியோ
ருனதுவிபூதியென் றோதியுன் பெயர்கட்,
கினப்பொரு ளுரைக்குங் கடமையாலுன்ற
னிறைமையே குறித்துநின் பெருமை,
சினத்தொகை யகலத்தேற்றுமா
லதர்வ சிரோபநிடதமுழுவதுமே. (23)
நின்றுழி நின்று முடிவுகொள் ளாது
நீயறைந் தமைசொலுங்கிளவி,
யுன்றனிக் கூற்று முடிவிடத் துய்த்துக்
கொண்டுகூட் டிடுந்தசைத் தாயுந்,
தன்றன திடத்தே முடியுமீண் டெனுமிச்
சழக்குரை தேர்ந்திடிற் றலைவா,
புன்றொழிற் கயவர் தமதறி யாமை
புலமையாய்ப் பரிணமித் ததுவே. (24)
ஈண்டுநீ யாரென் றுன்னுருக் கடாவு
மிமையவர்க் கேனையோருருவை,
யாண்டுநீ யிறுத்தாயெனில்வழு வாகா
தடுக்குமோ நீயுயிர்க் குயிராய்க்,
காண்டக நிறைந்து மவனென யாரைக்
கழறுளதோ பெரு கன்பு,
பூண்டவர்க் கெளியாய் கயவருக் கேனும்
பொருந்துமோ விச்சழக் குரையே. (25)
அனைத்தினும் பிரமந் தனக்கதிட் டான
மறையுமந் திரங்களினானு,
முனற்கரும் பரிதி மண்டலத் துறையு
மப்பொருட் குமைவிழிகளிப்ப,
மனக்கொரு வடிவஞ் செவியறி வுறுக்கு
மனுக்களி னானுமெய் யடியா,
ரினத்தனே நீயே யெங்ஙணு முறைவோ
னென்பதை யறியலா மன்றே. (26)
ஐம்பெரும் பூத மிருசுட ரான்மா
வன்றிவே றுலகிலை யவைதா,
முன்பெரு வடிவ மெனப்படு மன்றே
யோர்ந்துளோர்க் கிங்கது தன்நா,
லெம்பிரா னீயே நிறையதிட் டாதா
வென்பதற் கையமு முளதோ,
வம்பரா மூர்க்கப் பேய்கடா மயக்கான்
மாறுபா டுறப்பிதற் றுவரே. (27)
(கைவல்லியம்.)
மலைகம டுணைவன் முக்கண னீல
மணிமிடற் றவனென வானோர் திலகனே
யுன்னைத் தகரமாங் குகையுட் டியானஞ்செய்
திடுமுறை செப்பி,
யலரவன் முகுந்த னீசனோ டெனையு
மையநின்விபூதியென் றுரைக்கு,
மலவிரு டுமித்துச் சிவச்சுடர் விளக்க
வந்தகை வல்லிய மறையே. (28)
(தைத்திரியம்.)
மிருமது சுருதி கூறுமுன் றகர
வித்தையை வேறுள விசேடப்,
பருதிக ளானுந் தயித்திரி யந்தான்
பகர்ந்திடும் வள்ளலே மாயோ,
னாமுறு பொருளா முனைத்தியா னிப்பா
னவன்றனை நடுவணோ
திடுமவ் வகையறி யாத பேதைகண்
மயக்கான் மற்றொரு வாறுகொள் ளுவரே. (29)
(விருகதாரணியாதி.)
மறைகளிற் றலைமை யெய்திய விருக
தாரணி யகமுதன் மறைகள்,
பிறவுநல் விதயத் துறுபொரு ளாமுன்
பெருமையே பேசிடு மன்றே,
யறவனே யிவற்றின் கருத்தெலா
முன்பா லடைவதேநியமமென் றுரைப்பார்,
திறனறிந் துயர்ந்தோ ராதலாற்
கயவர் தீமொழி யாற்பய னென்னே. (30)
(மாண்டூக்கியம்.)
தன்பொருள் விரிக்கும் பிறசுரு தியினாற்
றன்கருத் தறிதருந்ததைத்தா,
நின்புடை யெல்லா முதன்மையு முண்மை
நிகழ்த்துமாண் டூக்கிய சுருதி,
யுன்கழ றருமீ சானமா மனுவோ
டுருத்திரோபநிடத மனுக்க,
ளென்பவு மேனை மனுக்களு மநேக
மிம்முறை விளங்கவோ திடுமே. (31)
அறப்பெருங் கடலே யளவிலா வணக்க
மறைந்திடு மெண்ணிலா மனுக்கள்,
பிறர்க்குரித் தாகார் சிறந்ததோர்
பெருமை பேசிடும் வெளிப்படை யுனக்கே,
கறைப்பெரு மிடற்றாய் சூத்திரர்
முதலோர் காலினும் விழுந்திடு மூர்க்கர்,
குறித்துனை வணங்கக் கூசுவ ரந்தோ
கொள்ளுவ ரோதெரிந் தவரே. (32)
மொழிந்திடு மெல்லா வணக்கமு மெல்லா
மொழிகளு முன்னையே சாரு,
மிழிந்திடாத் திருமா லாதிவிண் ணோரை
யீன்றவன் றானுநீ யெனவே,
பொழிந்தசீ ருனது தலைமையே யெடுத்துப்
புகழ்ந்துநின் பெருங்கணத் தலைமை,
விழைந்துளோர் தமது பெருமையுஞ்சால
விளக்கிடுஞ் சுருதிகள் பலவே. (33)
(புராணங்கள்.)
எண்ணிலாச் சாகைக் குவால்களாற் றெரித்திங்
கெம்மனோர் மாசறத் தெளிய,
நுண்ணிய நியாய வொழுங்குக ளானு
நுவன்றுறத் தேற்றுநின் பெருமை,
பண்ணவா விளங்கப் புராணங்க ளெல்லாம்
பன்முறை யுணர்த்திடு மன்றே,
கண்ணிலாச் சிறுவர் தமக்குமுள் ளங்கை
நெல்லியங் கனியெனும் படியே. (34)
(பாரதம்.)
நின்பதாம் புயத்தி னருச்சனை யாற்று
நெறியினன் மாயவ னெனவு,
மன்புறு மீசன் மாலயன் றனக்கு மாதியங்
கடவுணீ யெனவு,
மின்புறக் கிளக்கும் பாரதந் தானு
மெந்தைநின் றலைமையே விரிக்கும்,
புன்புலை யேற்குந் தண்ணருள்
புரிந்த பூரணா னந்தமா கடலே. (35)
(இராமாயணம்.)
அகந்தைநோ யறுக்கு மயனரி யரற்கு
மாதியாம் பகவனீ யெனவு,
மகஞ்செய விரும்பு மிராமனுன் னிடத்து
வைத்திடுங் குறிப்புரை யதனாற்,
றிகழ்ந்தவச் சுவமே தத்தினால்
வழுத்துந் தெய்வ நீ யென்நவும் விளக்கி,
யுகந்தவான் மீகி செய்தகாப் பியமு
முன்புக ழேவிரித் திடுமே. (36)
(மிருதியோக நூல்கள்.)
பெரும்பெயர் மனுயோ கீச்சுரன் முதலாம்
பெரியருஞ் சாத்திரந் தெரித்த,
விரும்பதஞ் சலியார் முதலியோர் தாமு
மேனையோர்க் குரியபல் பேதம்,
விரும்புபல் வழியுங் காட்டியா வர்க்கு
மேற்பட நினைப்புகழ்ந் துரைப்பார்,
கரும்பனைக் காய்ந்த கடவுளே யிதனைக்
கண்டுமந் தோமயங் குவரே. (37)
(வேதாந்தசூத்திரம்.)
பிறநய மாகும் புருடனங் குட்டப் பிரமிதி
தனைவிரும் பாம லறவனே யுனதீ சானநற்
சுருதி யாற்பர மென்றுநிச் சயித்தோன்
செறியும்வே தாந்தப்
பொருளினைத் தெரிக்குஞ் சூத்திரஞ்
செய்தவன் கருத்து,
மிறைவநின் பெருமை கண்டதே
யாகு மென்பராலாயவல் லவரே. (38)
(கீதைகள்.)
பெருவழக் காகக் கீதைக ளகத்துப்
பேசுமோந் தத்துசத் தென்னு,
முரைதரு பதமும் பிரமமென் பதமு
முணர்த்திடும் பொருளுநீ யென்றே,
தெரிதரக்காட்டுஞ் சாத்திரங்களினும்
வெளிப்படத் தெரிந்தன மையா,
விரிதரு நீயே யுலகினுக் கெல்லா
மேற்படுந் தெய்வமென் பதுவே. (39)
உனையலா லெல்லா விறைமையு முடையோ
னென்றுமற் றெவன்றனை யுரைப்பே,
முனிவிலீ சான முதலிய சுருதி
மொழிப்பொரு டானுநீ யன்றே,
யனையனா யிவைதாஞ் சமாக்கியை
சுருதி யலவெனு மயங்கிருட் குகையுள்,
வனைபுகழ் வேதத் துபயநூறேர்ந்த
மதியினோர் மதியகப் படாதே. (40)
பலபல விடத்துஞ் சுருதியி லுனையே
பகர்ந்திடு புராணமுமிவ்வா,
றிலகுறத் தெரிக்கும் விச்சுவா திகனென்
றிப்பெயர் சிற்பராவெல்லா,
வுலகினுக் கதிக னீயெனப் பகுத்து
வெளிப்படத் தெளியவற் புறுத்திக்,
கலகஞ்செய் பொல்லாக் கயவர்தஞ்
செவிக்குங் கடுங்கனற் சலாகையா மன்றே. (41)
இறைமையிவ் வாறு பகுத்திடத் தகாதே
லுனையொழிந் தியாண்டுமுற் றுறுமோ,
முறைபெரு மண்டந் தொருமய னரன்
மான்மூவரும் வேறுவே றாகிப்,
பிறழுறுங் கற்பந் தொறுநவ நவமாய்ப்
பிறந்துநின் னாணையி னடங்கி,
யுறைவரே யாதி யந்தமு மின்றி
யொழிவற நிறைந்தவான் பொருளே. (42)
வைப்பெனப் பெறுமுன் பெருமையே முழக்கு
மறைகளும் பலபல மறைதே,
ரப்பொருள் விரிக்கும் புராணமு மவ்வா
றாகுமிவ்வளவினாற் றானே,
செப்பிடத் தகுமா னின்பெருந் தகைமை
தேருநர்க் கிதுவன்றி வேறு,
மெய்ப்படு மளவை வேண்டுமோ
வேண்டா விளங்கிழைக் கிடங்கொடுத் தவனே. (43)
பிறர்க்குரித் தல்லாப் பெயர்களான் மறைகள்
பிஞ்ஞகா நாரணன் மேன்மை,
குறித்துரைத் திடுமா லேனைவிண் ணவர்க்குக்
கூறிடா திம்முறை யிதனான்,
மறைப்பொரு ளுண்மை தெரியலா
மென்னா மந்திரோ பநிடத முதலாந்,
திறப்படு மறைக ளோதிடாக் கயவர்
செப்பிடு முரைபயன் படாதே. (44)
தாணுமா லயற்குத் தம்முளே யுயர்ச்சி
தாழ்ச்சிகூ றிடும்புராணங்கட்,
கேணுறுங் கற்பப் பிரிவினாற் போக்கென்
றியம்பிடு மச்ச புராண,
மாணலா ரிதனைச் சிவபுரா ணத்திற்
கப்பிர மாணமோ துவதா,
நாணிலா துரைத்துத் தமதறி யாமை
நாட்டுவர் நாடரும் பொருளே. (45)
உன்னிறை மையினை முகுந்தன திடத்து
முவனவ தாரங்க ளிடத்துந்,
தன்னுடைக் கூறா மொற்றுமை
யதனாற் சாற்றிடு மாரண மொழிக,
ளின்னதிவ் வளவே யவற்றினுள்
ளுறையென் றியம் புவ ரருந்தவ முனிவர்,
மன்னனே யிதனைத் தேறிட மாட்டார்
மக்கமாங்# கடலழுந் துவரே.
#word cannot be made out/poor quality print (46)
மாயவ னின்பா லேகனாய் முன்னர்
வந்துதித் தனன்பின்னரவன்றான்,
பாயுல கொடுக்கும் புருடனை யயனைப்
படைத்தனன் முந்துகா லத்தென்,
றேயுறு மகோப நிடதமோ திடுவ
தியாதது நின்னிடத் துறாதா,
லோய்விலா துருகி யுள்ளவல்
லவாக ளுள்ளகத் துறைமணி விளக்கே. (47)
அறுக்குமோர் கற்பத் தயனொரு கற்பத்
தரியொரு கற்பத்திலரன்முன்,
பிறப்பனுன் பான்மற் றிருவரை முன்னோன்
பெற்றளித் திடுவன்மற் றிதனா,
லுறப்பெறு முயர்ச்சி தாழ்ச்சிக ளொருவர்க்
குள்ளதோ வில்லையென் றிவ்வா,
றிறப்புறா மறைகண் முழுவது
முணர்ந்தோ ரியம்புவ ரெம்பெரு மானே. (48)
ஆங்கொரு சாரா ரயனரி யிருவர்க்
குருத்திர னதிகனா மெனவு,
மீங்கிவர் தம்பா லவன்பிறந் தானென்
பதுமவன் கூற்றினுக்கெனவு,
மோங்குமால் விடையா யுன்னுரு
நாம மொப்புமை செய்கைமற் றெல்லா,
நீங்கிடா துடையோ னாதலான்
மேலாய் நிற்பவனெனவுமோ துவரே. (49)
தேவர் மூ வருக்குந் தலைமையொப்
புமைதான் செப்புக வன்றி மற் றிவருண்,
மேவரு மேலோ னுருத்திர னெனத்தான்
விளம்புக வெந்தவா றேனுங்,
காவல நீயே யாவர்க்கு மேலாய்
கடவுளென் பதுபெரு வழக்கே,
யோவுறா துலகெ லாம்பணி செய்யு
மொருவனீ யாகிநின் றனையே. (50)
உலகெலாம் பணிசெய் திடத்தகுந் தலைமை
யொருவனீ யேரிது வறியாக்,
கலதிகள் வறிதே போக்குவர் வாணாள்
கடையனேற் கருள்பசு பதியே,
சுலவுதே வருக்கு மானுடர் போலச்
சுராசுரர் மானுடர் முதலாம்,
பலவுயிர் களுமுன் பணிவழி நிற்றற்
பாலன பசுக்கள்போ லன்றே. (51)
மானிடர் தருமப் பெருமைதேர்ந் துரைக்கு
மாதவர் நின்னித்# தன்பு,
மானிடந் தரித்தோய் தரும்மார்க் கத்துட்
சிறந்தெடுத் ண்ணிய வாற்றான்,
மானிடப் பிறப்பைப் பெற்றுஞ்செய்
வினை.# வயத்தராய் நினக்கன்பு செய்யா,
மானிடப் பதர்கட் கெந்த றேனும்#
வருங்கதி கண்டிலன் யானே.
words cannot be made out/poor quality print (52)
இருபிறப் பாளர் நியதியாய் வழுத்தற்
கெடுத்தல்கா யத்திரி யன்றே,
வருமதற் குயர்ந்த தெய்வநீ யென்றே
வழுத்திடு மிதுபெருவழக்கே,
மருவரும் பொருளே யாதலி னுன்றாள்
வழிபடா விருபிறப் பாளர்,
புரியுநல் வினைக ளியாவையும்
புனையுந் தூசிலா வணியெனப் படுமே. (53)
விப்பிரர்க் கெல்லா மங்கியிற் றெய்வ
மேவுமென் றுந்தழற்கடவுட்,
கொப்பிலா நீயே யந்தரி யாமி யென்னவு
முயர்மறை மிருதி,
செப்பிடும் வசன மிவ்விரு வகையுந்
திரண்டுநீ யடியனே னரகிற்,
குப்புறா தருள்வோய் விப்பிரர் தமக்குக்
குலதெய்வ மென விளக் கிடுமே. (54)
வேதியர் குலத்திற் பிறந்தவர் தமக்கு
விசேடமா யிக்கலி யுகத்தில்,
வேதநீ தெய்வ மெனப்புரா ணங்கள்
விளம்பவு மன்பினாலுன்றன்,
பாததா மரையை வழிபடா தேனைப்
பண்ணவர் தமைவழிபடுவோர்,
பாதகமறையோர் மூடர்க ளவர்க்குப்
பயன்றரா பரதெய்வங் களுமே. (55)
எந்தைநீ பொறுமை யுடையவன் கருத்துக்
கெளியவ னுள்ளருள் கையில்,
வந்தது போலுன் னடியர்க்கு விரைவின்
வாய்த்திடுமவர்பெறும் பேறுஞ்,
சிந்தைவேட் டதற்கு மேற்படப் பெறுவர்
தேர்ந்திடின் முழுதுமுன் னுடைமை,
யிந்தவாய் மையினாற் பயன்குறித் தவர்க்கு
மீண்டுநீ சரணெனத் தகுமே. (56)
இம்மையிற் போக முனைவழி படுவோர்க்
கெண்ணரும் பெருமைய தென்ப,
ரம்மையி லேனை யுள்ளன நிற்க
வண்ணலே யுன்னனு சரர்க,
டம்முடைப் பதமு மரியயன் முதலோர்
தம்பதங் களுக்குமே லாகச்,
செம்மைதேர்ந் துரைப்ப ராகமத் துறையிற்
றிளைந்துமெய் யுணர்ந்தமா தவரே. (57)
நிகழ்பிர கிருதி கடந்தமெய் வாழ்வா
நிரதிச யானந்த மதுவுந்,
திகழுநின் னருளாற் பெறுவதாம்
பிறவித் தீயநோ யறுக்குநன்மருந்தே,
புகலுதற் கேது மெய்ப்பொரு ளுண்மை
போதிக்கு ஞானமா மதுவு,
மகலிடத் துனது திருவருள் கிடைத்தா
லல்லது கிட்டுறா தன்றே. (58)
வருந்திடா வகைவேட் டதனின்மேம்
பட்ட பயன்பெற வுதவிடவற்றாந்,
திருந்துநின் வழிபா டொருதலை யாகச்
செய்யவேண் டிடுந்தகைத் தாயும்,
பிரிந்துனை நீத்து வேறொரு தெய்வம்
வழிபட நாடுவர் பேயோ,
ரருந்தவப் பொருளே வெய்யவூழ்க்கொடுமை
விலக்குத லரிதரி தந்தோ (59)
மருளினா லவிச்சை யாலவாத் தன்னான்
மதாபிமா னங்களால் வறிதே,
யொருவுக வாணா ளுனைத்தொழா மூர்க்க
ரொருவனேயாங்களெல் லோமுந்,
திருமகன் மனைவி முதலியோ ரோடுஞ்
சேரநின் னடியராய்த் தொழுதேம்,
பெரிதுமிம் மதியே பெயர்ந்திடாதிருக்கும்
பேறளித் தருள்கமற் றெமக்கே (60)
வேறு
இவ்வா றுமுப்பா னிரட்டிப் படுசெய் யுளாலுன்
செவ்வா னடியிற் சிவதோத் திரமாலை சேர்த்தே
னவ்வாய் மையினித் தமொர்கா லிதனைப் படிப்போ
ருய்வா னுனதின் னருள்கூ டுகவும்பரானே. (61)
வேறு
விண்ணோர் தமக்குந் தெரிவருநின்
மேன்மை யெங்கே யானெங்கே,
தண்ணார் துதியென் றிதுவு மொரு
குற்றந் தானாய்ச் சமைந்ததா,
லண்ணா வன்புக் கெளியாயா
னவாவாற் செய்தே னாதலினா,
லெண்ணா தெல்லாம் பொறுத்தருள்வா
யென்னு மிதுவென்றுணிபரமே. (62)
வேறு
யானே யறிவே னிவனை யெனத்தன் றனாவா
லானா வரியே புகன்றா னெனிலந் தநின்சீர்
தேனா ரமுதே யினிமற் றெவர்தே றவல்லார்
கோனா யுயிர்தோ றுறையம் பலக்கூத் துளானே. (63)
(ஆகக் கூடி செய்யுள் - 70)
---------
சிவதத்துவவிவேக மூலமுடிந்தது.
மெய்கண்டதேவர் திருவடிவாழ்க.
சிவஞானயோகிகள் திருவடிவாழ்க.
உ
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்.
5.5 திருத்தொண்டர் திருநாமக்கோவை.
காப்பு.
மெய்யன்பர் நாமமெல்லாம் வெவ்வேறு போற்றிடவைங்கையன் றிருவடியே காப்பு.
நூல்.
தில்லைவா ழந்தணர்கள் சீர்நீல கண்டனார்
இல்லை யளித்த வியற்பகையார்- தொல்லை
இளையான் குடிமாறர் மெய்ப்பொருளா ரென்றும்
இளையா விறன்மிண்ட ரின்பம்-அளவுமமர்
நீதி யெறிபத்தர் நீண்டபுக ழேனாதி
நாதர்திருக் கண்ணப்பர் நற்கலயர்-மேதகுசீர்
மானக்கஞ் சாறரரி வாட்டாய ரானாயர்
ஞானத் திருமூர்த்தி நாயனார்-மேன்மை
முருகர் பசுபதியார் முன்னாளைப் போவார்
துரிசி றிருக்குறிப்புத் தொண்டர்-மருவுமறைச்
சண்டீசர் வாகீசர் தக்க குலச்சிறையார்
கொண்ட மிழலைக் குறும்பனார்-தொண்டுசெயும்
நீள்காரைக் காலம்மை யப்பூதி நீலநக்கர்
மூளு நமிநந்தி முத்தமிழை-ஆளுந்
திருஞான சம்பந்தர் செய்யகலிக் காமர்
அருண்மூலர் தண்டி யடிகள்-வருமூர்க்கர்
சோமாசி மாறனார் சாக்கியனார் சூழாக்கூர்
நாமார் சிறப்புலியார் நற்றொண்டின்-ஏமச்
சிறுத்தொண்டர் சேரமான் செய்யகண நாதர்
விறற்களந்தைக் கூற்றுவனார் விஞ்சைத்-திறத்துமிகும்
பொய்யடிமை யில்லாப் புலவர் புகழ்ச்சோழர்
மொய்கொ ணரசிங்க முனையரையர்-ஐயரதி
பத்தர்கலிக் கம்பர் கலியர்பகர் சத்தி
கைத்தபுல னையடிகள் காடவர்கோன்-மொய்த்தகணம்
புல்லனார் காரிநெடு மாறர்புகழ் வாயிலார்
நல்ல முனையடுவார் நாயனார்-மல்குகழற்
சிங்க ரிடங்கழியார் தஞ்சைச் செருத்துணையார்
கொங்கார் புகழ்த்துணையார் கோட்புலியார்-அங்கணர்க்கு
பத்தராய்த் தாழ்வார் பரமனையே பாடுவார்
சித்தஞ் சிவன்பாலே சேர்த்துள்ளார்-நித்தமும்
முத்திநெறி காட்டு முதல்வர் முழுதுணர்ந்தோர்
பித்தனுறை யாரூர்ப் பிறந்தார்கள்-அத்தனையே
முப்போதுந் தீண்டுவார் முழுநீறு பூசுவார்
அப்பாலு மீச னடிச்சார்ந்தார்-மெய்ப்பூசல்
மானியார் நேசனார் வாழ்செங்கட் சோழனார்
பான்மையார் நீலகண்டப் பாணனார்-மேன்மைச்
சடையரிசை ஞானியிவர் தம்மையெல்லாஞ் சேர்த்துத்
தொடையாகப் பாடியவன் றொண்டர்-அடியிணைகள்
சிந்தனைசெய் திந்தத் திருநாமக் கோவைதனை
மந்திரமாக் கொண்டு மயிர்சிலிர்த்து-நைந்துருகி
மெய்யன்பா லென்றும் விளம்பப் பெறுவார்கள்
கைதவமும் புல்லறிவுங் கற்பனையு-மையலுந்தீர்ந்
தத்துவிதா னந்த வகண்டபரி பூரணத்தின்
நித்தியமா வாழ்வார் நிசம்.
திருத்தொண்டர் திருநாமக்கோவை முடிந்தது.
மெய்கண்ட தேவர் திருவசி வாழ்க.
சிவஞான யோகிகள் திருவடிவாழ்க.
உ
கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
5.6 பஞ்சாக்கரதேசிகர் மாலை
கட்டளைக்கலித்துறை.
அறிவேயருட்செல்வமேநிறைவேயரசேயடியா
ருறவேயென்னாருயிரேமணியேயுருகாதநெஞ்சிற்
பிறிவேதுரியங்கடந்தசிவானந்தப்பேரமுதச்
செறிவேகருணைப்பிழம்பேபஞ்சாக்கரதேசிகனே. (1)
பொய்யுங்கவடுங்கொடுமையும்வஞ்சமும்பூண்டபொல்லாக்
கையன்கலதிமுழுமூடனேனுநின்கண்ணருளா
லுய்யும்படியென்றுகூடுமெந்தாயுண்மையாளரன்பு
செய்யுந்துறைசையுட்டேவேபஞ்சாக்கரதேசிகனே. (2)
பரிசறியேனருட்பண்பறியேனெனைப்பற்றும்வினைக்
கரிசறியேனதுமாற்றறியேன்கலரோடிணங்கித்
துரிசுகளேசெயும்பொல்லாவுலகத்தொழும்பனுக்குன்
றெரிசனங்கிட்டுவதென்றோபஞ்சாக்கரதேசிகனே. (2)
மருவேனுளதடியார்திருக்கூட்டமருவிவஞ்ச
மொருவேன்மகளிர்விழிக்கடைநோக்குக்குளம்பதைத்து
வெருவேனடிமையுமெந்நாளுனதருண்மேவுவனொ
திருவாவடுதுறைத்தேவேபஞ்சாக்கரதேசிகனே. (4)
ஆனந்தவாழ்விலடியாரெல்லாருமகங்களிப்ப
நானிந்தமாயத்தொடக்கினில்வீழ்ந்துநலிதனன்றோ
வானந்தநீண்டமதிலாவடுதுறைவாழ்முதலே
தேனுந்துபங்கயத்தாளாய்பஞ்சாக்கரதேசிகனே. (5)
வற்றாக்கருணைத்திருநோக்குநின்முகமண்டலமுஞ்
சற்றேமுகிழ்த்தகுறுமூரலுந்தடமார்பழகும்
பொற்றாளுஞ்சின்முத்திரையுநெஞ்சூடுபொறித்துவைப்பாய்
செற்றார்புரஞ்செற்றதேவேபஞ்சாக்கரதேசிகனே. (6)
தேறாதநெஞ்சுந்தெளியாதசிந்தையுந்தேங்கியின்ப
மூறாதகண்ணுமொழியாக்கவலையுமுன்புகழே
கூறாதநாவுமெனக்கேதகுமென்றுகூட்டினையே
சீறாதருள்செயுந்தேவேபஞ்சாக்கரதேசிகனே. (7)
நின்னருணோக்கினுக்கெவ்வளவேனுநெகிழ்ந்துருகா
தென்னுடைவன்மனமின்னார்விழிக்கடைக்கென்னிலந்தோ
வன்னியினேர்மெழுகாயுருகாநிற்குமாயமென்னே
செந்நெறியாய்நின்றதேவேபஞ்சாக்கரதேசிகனே. (8)
பிறவித்துயரினியாற்றேனடைக்கலம்பேயுலகின்
மறுகித்திரிந்தலைந்தெய்த்தேனடைக்கலமங்கைநல்லா
ருறவைத்தவிர்த்துய்யக்கொள்வாயடைக்கலமுண்மையன்பர்
செறிவுக்குள்வாழுமெய்த்தேவேபஞ்சாக்கரதேசிகனே. (9)
இருவினைதாமிவைமும்மலமீங்கிவையீதுசிவங்
கருவுறுமாருயிருண்மையிதுவென்றுகாட்டவல்ல
குருபரனீயன்றிவேறறியேனிக்குவலயத்திற்
றிருவெண்ணெய்மெய்கண்டதேவேபஞ்சாக்கரதேசிகனே. (10)
திருச்சிற்றம்பலம்.
மெய்கண்டதேவர்திருவடிவாழ்க.
சிவஞானயோகிகள்திருவடிவாழ்க.
5.7 அரதத்த சிவாசாரியர் சுலோகபஞ்சக மொழிபெயர்ப்பு
உயர்காயத்திரிக்குரிப்பொருளாகலிற்
றசரதன்மதலைதாபித்தேத்தலிற்
கண்ணன்கயிலையினண்ணிநின்றிரப்பப்
புகழ்ச்சியினமைந்தமகப்பேறுதவலிற்
றனதுவிழியுடனொராயிரங்கமலப்
ஆங்கவற்கிரங்கியாழியீந்தருடலின்
ஐங்கணைக்கிழவனைவிடமமுதுசெய்திடுதலிற்
றென்றிசைத்தலைவனைச்செகுத்துயிர்பருகலின்
அவுணர்முப்புரமழியவில்வாங்கலிற்
றக்கன்வேள்விதகர்த்தருள்செய்தலிற்
றனஞ்சயன்றனக்குத்தன்படைவழங்கலின்
மாநுடமடங்கலைவலிதபக்கோறலின்
மாயோன்மகடூஉவாகியகாலைத்
தடமுலைதிளைத்துச்சாத்தனைத்தருதலின்
ஆழ்கடல்வரைப்பினான்றோர்நேகர்
அன்புமீதூரவருச்சனையாற்றலின்
நான்கிருசெல்வமுமாங்கவர்க்கருடலின்
ஐயிருபிறப்பினுமரியருச்சித்தலின்
இருவருமன்னமுமேனமுமாகி
அடிமுடிதேடவழற்பிழம்பாகலிற்
பிறப்பிறப்பாதியுயிர்க்குணமின்மையிற்
கங்கைசூழ்கிடந்தகாசிமால்வரைப்பிற்
பொய்புகல்வியாதன்கைதம்பித்தலின்
முப்புரமிறுப்புழிமுகுந்தப்புத்தேள்
மால்விடையாகிஞாலமொடுதாங்கலின்
அயன்சிரமாலையளவிலவணிதலின்
ஞானமும்வீடும்பேணினர்க்குதவலிற்
பசுபதிப்பெயரியதனிமுதற்கடவுள்
உம்பர்களெவர்க்குமுயர்ந்தோன்
என்பதுதெளிகவியல்புணர்ந்தோரே.
அரதத்தசிவாசாரியர்சுலோகபஞ்சக
மொழிபெயர்ப்பு முடிந்தது.
மெய்கண்டதேவர் திருவடிவாழ்க.
சிவஞானயோகிகள் திருவடிவாழ்க.
உ
கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.
5.8 சிவபுரம் பெரியபிள்ளையவர்கள்
அருளிச் செய்த திருவெண்பா.
அந்தமலத்தத்துவிதமானபணியாலகற்றி
வந்தமலத்தத்துவிதம்வைத்தாயே - எந்தாய்
திருவாவடுதுறைவாழ்தேசிகாபொய்யில்
மருவாதவம்பலவாணா. (1)
உன்போகந்தந்தாயுனக்குவினையேனருந்தும்
என்போகந்தந்தேனென்னீசனே - இன்புருவா
கைம்மாறுண்டாமோகவினாவடுதுறையின்
அம்மானேயம்பலவாணா. (2)
ஆதிவருணத்தாலரியாலுனையிழந்த
பாதகருக்கேநிரயம்பாலிப்பாய் - நீதியுடன்
தானந்தமானவரைத்தற்பரமாய்விட்டகலா
ஆனந்தவம்பலவாணா. (3)
இருளிரவுதீபமிவைமூன்றடங்க
வருகதிர்போலேமுன்றுமாயத் - தருஞான
பானுவாய்வந்தவனேபண்பாவடுதுறைவாழ்
வானவனேயம்பலவாணா. (4)
முத்தியிலுன்செய்கையைப்போன்மூன்றுமலமுந்தவிராப்
பெத்தமுமுன்செய்கையெனப்பேசுவார் - சத்தியமே
காணாதமூடர்கண்டாய்காவாவடுதுறையில்
வாணாநம்மம்பலவாணா. (5)
அஞ்சாமத்தைதனிலாணவம்போமென்றுரைப்பார்
எஞ்சாச்சரியாதியெண்ணியான் - வஞ்சமலம்
முன்னகற்றுமாறறியார்மூடர்கண்டாய்தென்றுறைசை
மன்னவனேயம்பலவாணா. (6)
ஆதியேதென்றுறைசையம்பலவாணாவெனைநீ
பேதமறக்கூடிநின்றபெற்றிதனை -ஓதிலது
சாக்கிராதீதந்தமான்மலாபமின்பம்
ஆக்குசிவபோகமெனலாம். (7)
அத்தனேதென்றுறைசையம்பலவாணாவமைந்த
சித்தமுருவிரண்டுந்தீபமென்றாய் - சுத்தத்தில்
ஒன்றுபதார்த்தமாமொன்றுநின்னேதொன்றாம்
ஒன்றுமனவாதேயுரை. (8)
மருளிற்பிறந்துபயங்குமெனையுன்றன்
அருளிற்பிறப்பித்தாயையா - பொருளான
நானுனக்கென்செய்வேனவிலாவடுதுறைவாழ்
வானவனேயம்பலவாணா. (9)
அந்தந்தெரியாவசிந்திதநீசிந்திதனா
வந்துன்னோடென்னைவசமாக்கிப் - பந்தமுறும்
சித்தமுதற்கரணமெல்லாந்திருவருளாய்
வைத்தனையேயம்பலவாணா. (10)
திருவெண்பா முடிந்தது.
மெய்கண்ட தேவர் மெல்லடி வாழ்க.
சிவஞானயோகிகள்திருவடிகள்வாழ்க
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
5.9 திருக்கைலாச சந்தான குரவர்களின் தோத்திரங்கள்
திருநந்திதேவர், சநற்குமாரமுநிவர், சத்தியஞானதரிசனிகள்,
பரஞ்சோதிமுநிவர்.
அருட்குழகொழிற்கயிலைமுழுக்காவனந்தி-
பிரானடிகள்போற்றி
தெருட்பெறுமனக்கமலசநற்குமரமுநிவனிரு-
திருத்தாள்போற்றி
இருட்டுமலத்தகல்சத்யஞானதரிசனி-
சரணவிணைகள்போற்றி
மருட்சியறுபரஞ்சோதியருஞ்சீலகுருபரன்கான்-
மலர்கள் போற்றி. (1)
மெய்கண்ட தேவர்
திங்களொடுகங்கைபுனையங்கணனார்-
செப்புதிருவருளினோடு
தங்குருவாம்பரஞ்சோதிமுநிவனினிதறை
குறிப்புந்தகவாக்கொண்டு
துங்கமுறுசிவஞாநபோதமும்வார்த்திகப்-
பொழிப்புஞ்சுழிப்புநீர்சூழ்ந்
திங்கமருந்தமிழ்நாடுவீடுபெறப்-
புரிகுரவரிருதாள்போற்றி. (2)
அருணந்திசிவாசாரியர்.
முப்பொருளினீரியல்புமோரியல்-
பாநுவலாதுமுறைவெவ்வேறாய்ச்
செப்புசிவாகமங்களின்றன்பொருளொருமை-
பெறவுணர்ந்து திறமுன்
னூலை, ஒப்பலிரியாப்பதனாற்சித்தியெனும்-
வழிநூலாயொளிர்பிற்கா
லத், திப்புவியோர்தெளிந்துய்யமொழிந்த-
வருணந்திசிவனிணைத்தாள் போற்றி (3)
மறைஞானசம்பந்தசிவாசாரியர்
திருவளருஞ்சாமமறைதிகழ்பராசரன்மரபோன்
விரசுநர்பான்மறையுணர்வுவிரிந்தொளிரப்புணர்த்துவோன்
மருதமொடுகடந்தையையாண்மறைஞானசம்பந்த
குருமணிதன்மருமலர்த்தாள்குறித்துகிப்பரசிடுவாரும். (4)
உமாபதிசிவாசாரியர்
அடியார்க்கெளியனென்னத்தில்லையண்ணலருளிந்திருமுகத்தின்
படியேபெற்றான்சாம்பாற்குப்பரமமுத்தியப்பொழுதே
உடலுங்கரைவுற்றடைந்திடுவானுயர்தீக்கையினையருணோக்காற்
கடிதிற்புரிகொற்றங்குடியார்கமலமலரின்கழல்போற்றி. (5)
அருணமச்சிவாயதேசிகர்
பெற்றான்சாம்பான்மனைவியிறைமுதலோர்-
பேதுறவாற்பெற்றவையம்
இற்றோடத்தம்பூசையீசனுக்காட்டரு-
நீர்பாய்ந்தெளிதாய்ப்பாகம்
உற்றோங்குமுள்ளிக்குவீடீந்தவு-
மாபதியாருபதேசத்தின்
முற்றோன்றலாகியமாருணமச்-
சிவாயகுருமுதற்றாள்போற்றி. (6)
திருவளர்கொற்றங்குடியிடையமர்ந்தசீருமாபதிசிவாசிரியன்
அருளுபதேசத்தோடுதன்பூசையம்பலவாணர்பூசனையும்
புரிதருமதிகாரத்தையுமீந்துபொன்னடிசூட்டிடப்பெற்ற
குருவருணமச்சிவாயகோமான்றன்குலமலர்த்தாளிணைபோற்றி. (7)
சித்தர்சிவப்பிரகாசதேசிகர்
உத்தமக்கோமுத்திபெறுமொருபதியின்வதிந்தருளி
எத்திறத்தவுயிர்களுக்குமெளிதாகவொளிர்ஞானம்
பத்திகொளவறிவுறுத்திப்பரவீடுதரும்பெரிய
சித்தர்சிவப்பிரகாசதேசிகர்தாள்சிரத்தணிவாம். (8)
நமச்சிவாயதேசிகர்
இருதயநாப்பணஞ்செழுத்துருவினிறைவனை-
யுயிர்க்கொலைசெயாமை,
அருள்பொறியடக்கல்பொறைதவம்வாய்மை-
யன்பறிவென்னுமெண்மலர்கொண்,
டொருமையொடருச்சித்திடுகவென்றடியர்க்-
கொள்ளியதீக்கைசெய்துணர்த்தத்,
திருவமர்துறைசையுறையருட்குருவாந்-
திருநமச்சிவாயர்தாள்போற்றி. (9)
மறைஞானதேசிகர்
மறைகளெலாமுறையுணர்ந்துமறைஞானமுறப்பின்னும்
இறைஞானம்பெறும்விருப்போர்க்கெய்தருமந்நிட்டைநிலைத்
துறைகாட்டித்தன்பெயரினியல்காட்டுந்துறைசையினின்
மறைஞானதேசிகன்றன்மலர்க்கழல்கடலைக்கணிவாம். (10)
அம்பலவாணதேசிகர்
உரவுதசமார்க்கசித்திசிவாச்சிரம-
முபதேசமுபாயநிட்டை
தெருளுநிட்டைவிளக்கமேபஃறொடை-
சிகாமணியதிசயமாலை
திருநமச்சிவாயதுதியெனுஞானநூல்-
பத்துஞ்சிறப்பச்செய்தே
அருள்குருவாய்த்துறைசையமரம்பலவாணன்-
றிருத்தாளணுகிவாழ்வாம். (11)
உருத்திரகோடிதேசிகர்.
பெருகாநின்றிடுபருவம்பெயராதகாவிரிசூழ்
ஒருமாவாழ்துறைசையுறைந்துருத்திரகோடிகளாகப்
பரயோகமெய்ஞ்ஞானம்பரிபாகர்க்கருளுமுருத்
திரகோடிதேசிகன்றாள்சென்னியினின்மன்னுவிப்பாம். (12)
வேலப்பதேசிகர்.
நறுமலர்மஞ்சனமமுதுமுதலியன-
மன்மதனானாடிக்கொண்டு
மறுவில்சிந்தைதனிற்புரியந்தரியாக-
மாபூஜைமன்னுயிர்க்குப்
பெறுபுனிதமாகுமெனவடியவர்க்கு-
விளக்கியருள்பிறங்குந்தூய்மை
உறுதுறைசைவேலப்பதேசிகன்றன்-
விரைமலர்த்தாளுன்னிவாழ்வாம். (13)
குமாரசுவாமிதேசிகர்.
புத்தியேயபுத்திபூருவமிரண்டும்பொருந்-
துறுமுபாயமுண்மையினி
வைத்திடுஞ்சரியைகிரியைநல்யோக-
ஞானமாவகுத்திடுமெட்டும்
ஒத்திடிற்பத்தாம்புண்ணியமென்ன-
வுணர்த்துவான்கோமுத்திவாழுஞ்
சுத்தன்முற்குமாரசாமிதேசிகன்றன்றுணையடி-
தொழுதுவாழ்த்திடுவாம். (14)
குமாரசுவாமிதேசிகர்.
சொற்குவைமாறாக்கழனிபுறஞ்சூழ்ந்த-
துறைசைதனிற்றொல்லுயிர்க்கு
நற்பருவவரசவிளங்குமரரெனத்தம்-
முயர்வுநயப்பக்கூறிக்
குற்றமலப்புலவேடக்குறும்பகற்றிப்-
பதியாக்குங்குமாரசாமி
சற்குரவன்செங்கமலமலர்போலுந்-
தாளிணைகள்சார்ந்துவாழ்வாம். (15)
மாசிலாமணிதேசிகர்.
திருவெண்காடுறைமறையோருச்சிட்டஞ்சேர்கூவற்செறிகீடங்கள்
பெருகுமுவர்நீர்கண்டதஞ்சையிறைமகிழவன்பிற்பிறங்குமாகே
சுரருண்டபரிகலத்தாலுவர்க்கூபநறுநீராய்ச்சுரக்கமேலாம்
அருளுந்துகோமுத்திக்குருமாசிலாமணியாரடிகள்போற்றி. (16)
இராமலிங்கதேசிகர்.
படைத்தல்காத்தறுடைத்தலெனப்பகருமும்மைத்தொழிலுடற்கே
கிடைக்குமெனவுமறைப்பருளல்கெழுமவுயிருக்காமெனவுந்
தொடர்ச்சியகன்றதூயவர்க்குத்துறைசையுறைந்துசொலிநாளும்
நடத்துமிராமலிங்ககுருநற்றாள்பற்றியுய்ந்திடுவாம். (17)
வேலப்பதேசிகர்.
நிறைமதியாதித்தருபராகத்திராகு-
வொடுநிழலாங்கேது, மறை
வின்றிவிளங்குதல்போலிறைவனைத்-
தம்மனமலரின்வருணமைந்தின்,
முறைமையினிற்காண்டலுறிற்றோன்றிடுமம்-
முதல்வனெனமுதிர்பாக
ர்க்குத்,துறைசைதனிலறிவுறுத்துகுருமுதல்-
வேலப்பன்மலர்த்துணைத் தாள்போற்றி. (18)
வேலப்பதேசிகர்.
சுட்டியுணருலகசத்தென்றோரோவொன்றா-
வொழிந்துயிரிற்கட்டற்றோங்கும்,
அட்டகுணன்றனையாய்ந்துசோகமெனப்பா-
விக்கினதனாற்றோன்றும்,
எட்டுருவனாற்கருடதியானத்துவிடம்-
போலவியைந்தவூனம்,
விட்டொழியுமெனுந்துறைசைவேலப்பதே-
சிகன்றாள்விரும்பிவாழ்வாம். (19)
திருச்சிற்றம்பலதேசிகர்.
திருமுகவைக்கிறைவேண்டவவ்வணமேயுலகின்-
வெம்மைசிதையத்துன்னி,
வருதுழனிமுகில்சுரந்துநீர்பொழிந்து-
வளம்பெருகவாய்மலர்ந்த,
பெருவிரையாக்கலியுடையான்சிவாக-
மத்தினீரிலக்கம்பெரிதுமோர்ந்தோன்,
குருதிருச்சிற்றம்பலவன்றுறைசையமர்-
கோமான்றன்குலத்தாள்போற்றி. (20)
அம்பலவாணதேசிகர்.
ஐந்தொழிலிற்படைப்பாதிநாணம்கூனநடத்தினாலாருயிர்க்கு
நந்துபரிபாகமுறச்செய்தருளலெனுஞானநடத்தினாலே
பந்தமறுமுத்திநிலைகைகூட்டுவான்றுறைசைப்பதியின்வைகுஞ்
சுந்தரவம்பலவாணகுரவனிருதிருத்தாள்கடொழுதுவாழ்வாம். (21)
சுப்பிரமணியதேசிகர்.
சுத்தசித்தமுற்றுருகித்தொழும்பாயொழுகுகுழாங்கட்குப்
பெத்தமுத்தியிரண்டினிலும்பிறழாமும்மைப்பொருளியலென்
றுத்தியோடுந்தெளித்தருள்பாக்கொளிசாறுறைசைக்கண்வாழும்
அத்தன்குருசுப்பிரமணியவமலன்கமலவடிபோற்றி. (22)
அம்பலவாணதேசிகர்.
சரியைமுதலாந்தவங்கடமைச்சாதிப்பவர்கட்குணவாதி
உரிமையாகவுதவலின்மேலுயர்ந்தவறமின்றென்றுணர
அரியவன்னதானமடியவர்க்குப்பரிந்துபுரிதுறைசைப்
பெரியகுருவம்பலவாணபெருமானடியைமுடிவைப்பாம். (23)
சுப்பிரமணியதேசிகர்.
பத்திபுரியுமன்பர்மும்மைப்பாசவிருளைத்துரந்துபர
முத்திநெறியையறிவுறுத்திமூவாநிரதிசயவின்ப
அத்தியதனிலமிழ்விப்பானமருந்துறைசைப்பதிமுத்த
சித்தன்குருசுப்பிரமணியதேவன்கழல்கடொழுதுய்வாம். (24)
தோத்திரங்கள் முடிந்தன.
மெய்கண்டதேவர்திருவடிவாழ்க.
சிவஞானயோகிகள்திருவடிவாழ்க.
உ
கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்
5.10 சிவஞானயோகிகள்மீது கீர்த்தனை.
தொட்டிக்கலைச் சுப்பிரமணியசுவாமிகள் அருளிச்செய்தது.
பல்லவி.
நினைத்தாற் சகிக்கப் போமோ - என்சுவாமியை
நினைத்தாற் சகிக்கப் போமோ
அநுபல்லவி.
எனைத்தனிவிட்டகன்ற
எந்தைசிவ ஞானவழ்வை நினைத்தால்
சரணங்கள்.
கருணைமுகத்தைக்காட்டிக்
கனிந்தமொழியைக்காட்டித்
தருணவடிவைக்காட்டித்
தனித்துவிட்டகன்றாரை, நினைத்தால்
காவியுடையழகுங்
கவினார்வெண்ணீற்றொளியும்
பாவியேன்கண்ணிற்காட்டிப்
பரவீடுசேர்ந்தாரை, நினைத்தால்
சிவவேடச்சேவைதந்துந்
திருவடிநீழல்தந்தும்
அவமேகைவிட்டிங்கென்னை
அகன்றாரைநாடியந்தோ, நினைத்தால்
கலைஞானஞ்சிவஞானங்
கலந்தளித்தென்னையாளும்
நிலையாரையென்னுயிராய்
நிறைந்துநின்றகன்றாரை, நினைத்தால்
கருவிலென்னோடிருந்து
கருணையாய்க்கொண்டுவந்து
பெருவாழ்வில்வைத்தகன்ற
பேரருளாளரைநான், நினைத்தால்
கண்ணினுளகலாரைக்
கருத்தினுள்விலகாரை
எண்ணியெண்ணித்தவிக்க
இங்ககன்றாரையையோ, நினைத்தால்
என்னுயிர் கவர்ந்தாரை
எனதெழில் கவர்ந்தாரை
மன்னுதுயர் தந்தாரை
மறக்கவுங் கூடவில்லை, நினைத்தால்
கண்டார்நெய்பால்கனிதேன்
கடலமுதுங்கலந்து
கொண்டார்போல்நான்மகிழக்
கூடிப்பிரிந்தவரை, நினைத்தால்
துணைபிரியாவனமே
சுகமேமயில்குயிலே
இணைபிரியாவன்றிலே
எனைப்பிரிந்தாரைநாடி, நினைத்தால்
பாம்பின்வாய்தேரைபோலப்
பலபலதுயருற்றுத்
தேம்பினேன்றன்னையாளச்
சீக்கிரம்வருவாரை நினைத்தால்
ஆரேனும்பத்தியணு
வளவுசெய்தாலுமவர்
சீரேறுசெல்வமுறச்
செய்தாரைப்பிரிந்தத்தை, நினைத்தால்
ஆயிலியநாளாரை
ஆவடுதுறையாரை
நாயேனைப்பிரிசிவ
ஞானபூரணரைநான், நினைத்தால்
கீர்த்தனை முடிந்தது.
மெய்கண்டதேவர் திருவடிவாழ்க.
சிவஞானயோகிகள் திருவடிவாழ்க.
உ
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
5.11 சிவஞானயோகிகள் மீது தொட்டிக்கலைச்
சுப்பிரமணியசுவாமிகள் அருளிய செய்யுட்கள்
கருணைபொழிதிருமுகத்திற்றிருநீற்றுநுதலுங்
கண்டாரைவசப்படுத்தக்கனிந்தவாயழகும்
பெருமைதருதுறவோடுபொறையுளத்திற்பொறுத்தே
பிஞ்ஞகனார்மலர்த்தாள்கள்பிரியாதமனமும்
மருவினர்களகலாதஞானமேவடிவாம்
வளர்துறைசைச்சிவஞானமாமுனிவன்மலர்த்தாள்
ஒருபொழுதுநீங்காமலெமதுளத்திற்சிரத்தில்
ஓதிடுநாவினிலென்றுமுன்னிவைத்தேயுரைப்பாம். (1)
திண்ணவின்பச் சேவடியுந் திருவிழியுந்
திருமார்புஞ் செல்வக் கையும்
நண்ணுமன்பர்க் கருள்கருணைத் திருமுகமும்
பசுங்குழவி நடையே யாகிப்
புண்ணியத்தின் பொலிவாகி யற்புதக்கோ
லக்கொழுந்தாய்ப் புலைநா யேற்குக்
கண்ணைவிட்டு நீங்காத சிவஞான
சற்குருவே கருணை வாழ்வே. (2)
ஓதரிய வாய்மைச் சிவாகமங் கட்கெலா முற்றபேராக ரமதாய்
ஓங்குதிரு வாவடு துறைப்பதியி லற்புதத்தொருவடிவு கொண்ட ருளியே
பேதமுறு சமயவா திகளுள மயக்கைப் பெயர்க்கும்ரச குளிகையாகிப்
பிரியமுட னேவந் தடுத்தவர்க் கின்பப் பெருங்கருணை மேரு வாகி
ஆதரித் தடியேங்க ளுண்ணத் தெவிட்டாத வமிர்தசா கரமா கியே
அழகுபொலி கலைசைச் சிதம்பரே சுரரடிக் கதிமதுர கவிதை மாரி
மாதவர் வழுத்தப் பொழிந்தருளி யென்றுமவர் மன்னிவளர் சந்நி தியிலோர்
மணிவிளக் கென்னவளர் சிவஞான மாதவன் மலர்ப்பதம் வணங்கு வாமே (3)
திருச்சிற்றம்பலம்
மெய்கண்டதேவர் திருவடி வாழ்க
சிவஞானயோகிகள்திருவடிவாழ்க