MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    1.4 திருக்கூட்டச் சிறப்பு


    திருச்சிற்றம்பலம்

    136 பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்
    ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலிற்
    சோதி மாமணி நீள் சுடர் முன்றில் சூழ்
    மூதெயில் திரு வாயில் முன்னாயது. 1.4.1
    137 பூவார் திசை முகன் இந்திரன் பூ மிசை
    மா வாழ் அகலத்து மால் முதல் வானவர்
    ஓவாது எவரும் நிறைந்து உள்ளது
    தேவா சிரியன் எனுந் திருக் காவணம். 1.4.2
    138 அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
    நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால்
    புரந்த அஞ்சு எழுத்து ஓசை பொலிதலால்
    பரந்த ஆயிரம் பாற் கடல் போல்வது. 1.4.3
    139 அகில காரணர் தாள பணிவார்கள் தாம்
    அகில லோகமும் ஆளற்கு உரியர் என்று
    அகில லோகத்து உளார்கள் அடைதலின்
    அகில லோகமும் போல்வத தனிடை. 1.4.4
    140 அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால்
    மெய்த் தழைந்து விதிர்ப்புறு சிந்தையார்
    கைத் திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்
    இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார். 1.4.5
    141 மாசிலாத மணி திகழ் மேனி மேல்
    பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்
    தேசினால் எத் திசையும் விளங்கினார்
    பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார். 1.4.6
    142 பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்
    மாதோர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
    ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்
    கோதிலாத குணப் பெருங் குன்றனார். 1.4.7
    143 கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
    ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
    கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
    வீடும் வேண்டா விறலின் விளங்கினார். 1.4.8
    144 ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
    பாரம் ஈசன் பணி அலாது ஒன்று இலார்
    ஈர அன்பினர் யாதுங் குறைவு இலார்
    வீரம் என்னால் விளம்பும் தகையதோ? 1.4.9
    145 வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
    தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள்
    நீண்ட தொல் புகழார் தம் நிலைமையை
    ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந்து ஏத்துகேன். 1.4.10
    146 இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
    அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன்
    சுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ்
    வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம். 1.4.11
    திருச்சிற்றம்பலம்


Goto Main book