MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in
This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

  10.5 கோட்புலி நாயனார் புராணம் (4134- 4146)


  திருச்சிற்றம்பலம்

  4134 நலம் பெருகும் சோணாட்டு நாட்டி யத்தான் குடி வேளாண்
  குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார்
  தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்றுப்
  புலம் பெருகத் துயர் விளைவிப்பப் போர் விளைத்துப் புகழ் விளைவிப்பார் 10.5.1
  4135 மன்னவன்பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும்
  பிஞ்ஞகர் தம் கோயில் தொறும் திரு அமுதின் படிபெருகச்
  செந்நெல் மலைக் குவடு ஆகச் செய்து வரும் திருப்பணியே
  பல் நெடும் நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள் 10.5.2
  4136 வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனைமேல் செல்கின்றார்
  பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக
  ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல்
  வாய்ந்த கூடவை கட்டி வழிக் கொள்வார் மொழிகின்றார் 10.5.3
  4137 தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே
  எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க
  சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையாக் கலி என்று
  வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனைமேல் 10.5.4
  4138 மற்றவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம்
  உற்றலும் அச் சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில்
  பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்துக்
  குற்றம் அறப் பின் கொடுப்போம் எனக் கூடு குலைத்து அழித்தார் 10.5.5
  4139 மன்னவன் தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்பால்
  நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர்
  அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே
  துன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய் 10.5.6
  4140 எதிர் கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து
  மதி தங்கு சுடர் மணி மாளிகையின் கண் வந்து அணைந்து
  பதி கொண்ட சுற்றத் தார்க்கு எல்லாம் பைந் துகில் நிதியம்
  அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழைமின்கள் என்று உரைத்து 10.5.7
  4141 எல்லாரும் புகுந்த அதன்பின் இருநியம் அளிப்பார் போல்
  நல்லார்தம் பேரோன் முன் கடை காக்க நாதன் தன்
  வல்லாணை மறுத்து அமுதுபடி அழைத்த மறக்கிளையைக்
  கொல்லாதே விடுவேனோ எனக் கனன்று கொலைபுரிவார் 10.5.8
  4142 தந்தையார் தாயார் மற்றுடன் பிறந்தார் தாரங்கள்
  பந்தமார் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும்
  எந்தையார் திருப்படி மற்று உண்ண இசைந்தார் களையும்
  சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினைப் பவம் துணிப்பார் 10.5.9
  4143 பின் அங்குப் பிழைத்த ஒரு பிள்ளையைத் தம் பெயரோன் அவ்
  வன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என
  இந்நெல் உண்டாள் முலைப்பால் உண்டது என எடுத்து எறிந்து
  மின்னல்ல வடிவாளால் இரு துணியாய் விழ ஏற்றார் 10.5.10
  4144 அந் நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்று
  உன்னுடைய கை வாளால் உறுபாசம் அறுத்த கிளை
  பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணையப் புகழோய் நீ
  இந்நிலை நம்முடன் அணைக என்றே எழுந்து அருளினார் 10.5.11
  4145 அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்தாகி
  முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த
  கொத்து அலர் தார்க் கோட்புலியார் அடிவணங்கிக் கூட்டத்தில்
  பத்தராய் பணிவார் தம் பரிசினையாம் பகருவாம் 10.5.12
  4146 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
  மேவரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ
  ஆவதும் ஓர்பொருள் அல்லா என் மனத்தும் அன்றியே
  நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த
  சேவடிப் போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தனவால் 10.5.13
  திருச்சிற்றம்பலம்
  கடல் சூழ்ந்த சருக்கம் முற்றிற்று.

Goto Main book