11.2 பரமனையே பாடுவார் புராணம் (4155 - 4156 )
திருச்சிற்றம்பலம்
4155 புரம் மூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை
பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம் 11.2.1
4156 தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன
மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக
ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார் 11.2.2
திருச்சிற்றம்பலம்