MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    2. 1 தில்லை வாழ் அந்தணர் புராணம்


    திருச்சிற்றம்பலம்

    350 ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச்
    சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
    பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்
    போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி 2.1.1
    351 கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
    அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம்
    சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று
    பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி போற்றி 2.1.2
    352 போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்
    நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
    போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும்
    ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார் 2.1.3
    353 பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி
    மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும்
    தங்களுக்கு ஏற்ற பண்பில் தரும் பணித் தலை நின்று உய்த்தே
    அங்கணர் கோயில் உள்ளா அகம் படித் தொண்டு செய்வார் 2.1.4
    354 வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க
    தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும்
    அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார்
    திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார் 2.1.5
    355 மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார்
    அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளார்
    உறுவது நீற்றின் செல்வம் எனக் கொளும் உள்ளம் மிக்கார்
    பெறுவது சிவன் பால் அன்பாம் பேறு எனப் பெருகி வாழ்வார் 2.1.6
    356 ஞானமே முதலாம் நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார்
    தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்
    ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும்
    மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார் 2.1.7
    357 செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார்
    மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை
    இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார்
    தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார் 2.1.8
    358 இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ
    தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட
    அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
    முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றால் 2.1.9
    359 அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம்
    புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ
    நிகழ் திரு நீல கண்டக் குயவனார் நீடு வாய்மை
    திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம் 2.1.10

    திருச்சிற்றம்பலம்


Goto Main book