MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    2.6. விறன்மிண்ட நாயனார் புராணம்


    திருச்சிற்றம்பலம்

    491 விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப்
    பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு
    திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும்
    வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு 2.6.1
    492 வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும்
    வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும்
    மூரல் எனச் சொல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும்
    சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர் 2.6.2
    493 என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான்
    அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை
    சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமைத் தலை நின்றார்
    மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபிற் பெரியோர் வாழ் பதியாம் 2.6.3
    494 அப் பொன் பதியின் இடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்
    செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி
    எப் பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார்
    மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர் 2.6.4
    495 நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த
    பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார்
    முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்து
    எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார் 2.6.5
    496 பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும்
    சென்று ஆள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி
    வன் தாள் மேருச் சிலை வளைத்துப் புரங்கள் செற்ற வைதிகத் தேர்
    நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார் 2.6.6
    497 திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடைப் பொலிந்து
    மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது
    ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று உரைப்பச் சிவன் அருளால்
    பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார் 2.6.7
    498 சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
    பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப்
    பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால்
    கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் 2.6.8
    499 ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின்
    சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள்
    ஓலம் இடவும் உணர்வு அரியார் உடனாம் உளது என்றால்
    ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார் 2.6.9
    500 ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெருந் தன்மை
    தொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர்
    தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல்ற்கீழ்
    மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார் 2.6.10
    501 வேறு பிரிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும்
    பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை
    கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டே
    ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம் 2.6.11

    திருச்சிற்றம்பலம்


Goto Main book